நீர்க்குளத்தின் கறையில் அமர்ந்து
நீரை நோக்கினேன்...
அந்த கணம் முழுவதும்
பனிகளின் ஆக்கிரமிப்பில்
ஆனந்த ஆர்ப்பாட்டம்...
பனிகளின் பயணம் நீரில்
சங்கமித்து...
பயணம் முடிந்தது என நினைத்தேன்
ஆனால்..
சங்கமித்துத் திளைத்த பனிகள்
நீரின் மேல் அழகிய ஊர்வலம் நடத்தியது...
அந்த அழகிய ஊர்வலத்தை
என் விழிகளால் தொடர்ந்தேன்...
அழகிய ஊர்வலத்தின் வழியில்
முதலில் தென்பட்டது நிலா...
விண்ணை நோக்கினேன்..
தெளிவில்லை.. பனிகளின் ராஜ்ஜியம் .
அனால் நீரில்
ஸ்பஷ்ட பூர்ணமாய் நிலா...
பயணம் தொடர்ந்தது ..
ஊர்வலம் தொடர்கிறது ...
மறு கறையின் ஓரத்தில்
இருந்த மரங்களின் பிம்பங்கள்..
ஆச்சர்யம்.. பச்சையில் உள்ள இலைகள்
நீரில் வெள்ளி வெள்ளியாய் மின்னின...
மரங்களைப் பார்த்தேன்.. பச்சையாக...
நீர்குளத்தின் ஓரங்களை
வெள்ளி ஆபரணங்களில்
அலங்கரிக்கபட்டதுபோல் இலைகளின் பிம்பங்கள்
மின்னியதை பனியின்
ஊர்வலம் நெருங்கிகொண்டிருந்தது..
மிக ஆவலாக எதிர் நோக்கினேன்....
சற்றும் எதிர்பார்க்காத வகையில்
தவளை மறு கறையிலிருந்து
நீரை நோக்கி பாயிந்தது...
காட்சிகள் கலைந்தது....
கி .பி.2000 இக்கு திரும்பினேன்..
சுகமும் தொலைந்தது
இந்த அற்ப உலக வாழ்வைப் போல....
--அப்துல் ரஹ்மான்
36 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். ரஹ்மான்.பிறகு வருகிறேன் ,முழுதும் வாங்கி.முதலில் பதிகிறேன் படித்த மட்டும். காமசூத்திரம் கையாண்டிருக்கிறாய்.கவணம்!இது இப்போதைக்கு(போதைக்கு).
தம்பி A.R.: கனவுகளின் கசமுச.. அருமை ! ஜல்(லுக்கு) அடுத்து வருடிய ஒரு ஜில் !
முன்னால் ஜனாதிபதி சொன்னது அப்துல் கலாம் கனவு கானச் சொன்னது 2020க்கு, ஆனால் உங்களின் கனவு ... அப்படின்னா என்னோட பாட்டனுக்கு பூட்டன்(ஸ்)களையெல்லாம் பார்த்தீங்களா ? இன்னொரு தடவைப் பார்த்தீங்கன்னா ஏசியில்லாம எப்படி இருந்தாங்கன்னு கேட்டுச் சொல்லுங்க :)
நல்ல ரசனையான வர்ணனை. க்ரவுன் திரும்பி வந்து பிரித்து மேய்வதற்குள் ஒன்று சொல்லிவிடுகிறேன்.
எனக்குத் தெரிந்து கவிதை என்பது நல்ல நண்பனின் சகவாசம்போல. சொல்வதற்கும் கேட்பதற்கும் கட்டுப்பாடுகள் தேவையில்லை. அந்த விதத்தில், கட்டவிழ்த்தக் கன்றுகுட்டியாய் துள்ளிதிரிகிறது இந்தக் கவிதை. எழுத எழுத கன்று வளர்ந்து கட்டுக்குள் வரும். எனவே தொடர்ந்து எழுதுங்கள்.
(க்ரவுன் பொடி வைத்த மேட்டருக்கு என் பின்னூட்டம் கடிவாலம் அல்ல)
// கட்டவிழ்த்தக் கன்றுகுட்டியாய் துள்ளிதிரிகிறது இந்தக் கவிதை // இந்த வலைக்குள்(ளே) மேய்ச்சலுக்கு விட்டுடலாம் "ஈரமான" புல்வெளியில் !
sabeer சொன்னது…
நல்ல ரசனையான வர்ணனை. க்ரவுன் திரும்பி வந்து பிரித்து மேய்வதற்குள் ஒன்று சொல்லிவிடுகிறேன்.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா!இதுக்குள்ளும் அந்த சூத்திரம் வந்திருக்கு கவனித்தீர்களா? தெரிந்தே புனைந்தீர்களா?அதுதானஆ இயல்பா வந்துச்சா?ஹஹ்ஹஹ்ஹ மருமடியும் படித்துப்பாருங்கள்.
நீர்க்குளத்தின் கறையில் அமர்ந்து
நீரை நோக்கினேன்...
அந்த கணம் முழுவதும்
பனிகளின் ஆக்கிரமிப்பில்
ஆனந்த ஆர்ப்பாட்டம்...
பனிகளின் பயணம் நீரில்
சங்கமித்து...
பயணம் முடிந்அஸ்ஸலாமு அலைக்கும்.அந்த அழகிய ஊர்வலத்தை உன் விழிகளால் அல்ல,கவிமொழிகளால் தொடர்ந்திருக்கிறாய்.காட்சியை கண் முன்னே ஓடவிட்டேன் அகா! கொள்ளை அழகு அந்த வெள்ளைப் பனியின் ஊர்வலம்.தது என நினைத்தேன்
ஆனால்..
சங்கமித்துத் திளைத்த பனிகள்
நீரின் மேல் அழகிய ஊர்வலம் நடத்தியது...
அந்த அழகிய ஊர்வலத்தை
என் விழிகளால் தொடர்ந்தேன்..
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அந்த அழகிய ஊர்வலத்தை உன் விழிகளால் அல்ல,கவிமொழிகளால் தொடர்ந்திருக்கிறாய்.காட்சியை கண் முன்னே ஓடவிட்டேன் அகா! கொள்ளை அழகு அந்த வெள்ளைப் பனியின் ஊர்வலம்.
அழகிய ஊர்வலத்தின் வழியில்
முதலில் தென்பட்டது நிலா...
விண்ணை நோக்கினேன்..
தெளிவில்லை.. பனிகளின் ராஜ்ஜியம் .
அனால் நீரில்
பூர்ணஸ்பஷ்ட மாய் நிலா...
பயணம் தொடர்ந்தது ..அடுத்தது
தாமரை.. நிலவோடு
சல்லாபத்தின் உச்சத்தில் திமிறியது...
சாட்சியாய் இதழ்களின் ஓரத்தில் பனித்துளி...
நிலவும் பனியின் மூலம்
தாமரையுடன் உணர்வுகளை பரிமாறியது....
(தவளையின் சத்தமும் கேட்கிறது
--------------------------------------------------------------------
பூர்ணஸ்பஷ்ட மாய் நிலா...(அம்.....மாய் முழு நிலவு(பரிபூரனமாய்))
பயணம் தொடர்ந்தது ..அடுத்தது
தாமரை.. நிலவோடு
சல்லாபத்தின் உச்சத்தில் திமிறியது...
சாட்சியாய் இதழ்களின் ஓரத்தில் பனித்துளி...
--------------------------------------------------------------------
என்னப்பா கவிஞரே! வாலியின் பாடலைப்போல் ...?எங்கே அதிரை நிருபர் குழு! கத்திரி போடுங்கப்பா! வெட்கத்தால் சிவந்தது என் எழுது கோலும்.பனி இங்கே ,வேடிக்கை பார்த்துவிட்டு ஒரு தூதுவனாகவும் இருந்திருக்கிறது அந்த தாமரைக்கும் நிலவுக்கும் அத்துடன் முடிந்ததா பனியின் பணி????
(தவளையின் சத்தமும் கேட்கிறது )
---------------------------------------
சேவல் கூவும் மானிடனுக்கு அலாரமாய்.இங்கோ தவளை!!!!
ஆங்காங்கே சிறு சிறு பிழைகள்
அதனோடு வர்ணனையின் இடையே சில சில
முற்றுப் புள்ளிகள்
முந்திக்கொண்டு நிற்கிறதுபோல் ஓர் உணர்தல்
அதனை திருத்தினால்
செழுமையாகும் கவிக்குளம்.
வாழ்த்துக்கள்...
ஊர்வலம் தொடர்கிறது ...
***************
இந்த அற்ப உலக வாழ்வைப் போல....
_______________________________________________________________________
பசுமைகளையும்.இயற்கையின் இயல்பான அழகையும் கணவில் மட்டுமே கான முடிகிறது... அதுவும் கணவைப்போலவே எளிதில் முடிந்துவிடும் வாழ்வில் ...இதற்குள் எந்தனை கணவுகளுடன் வாழ்கை!!!. மிகச்சரியாக சொன்னாய் நண்பா!வாழ்துக்கள்.
தம்பி கிரவ்னு செக்கடி மோட்டுல இருந்துகிட்டு அந்தக் குளத்து மேட்டின் ஒர்ரத்தில் இரவில் கண்டிருப்பாயே அதே நிலவுதான், குளிக்கும்போது காலைச் சுற்றுமே அந்த தாமரைதான்... இதெல்லாம் திறந்தவெளி பல்கலைக் கழகப் பாடம், ஆகவே அங்கே உறவுகளும் நோக்கும் ஊராரும் நோக்குவர்.. பார்க்கும் கண்களுக்கு பரவசாமாக இருக்கு அயர்ந்த கண்களுக்கு பரிதாபகமாக இருக்கும் வெறுக்கும் கண்களுக்கு விரசமாக இருக்கும்....
செக்கடிக் குளத்தில் ஏன் வாலி(யை) போட்டு இழுக்கிறாய் அதத வாலி(யை)விட வல்லார்கள் நம்மோடு இருக்கும் போது..
வாலியில் இருக்கும் தண்ணீரிலும் அதே நிலவு தெரியும் தன்னந்தனியாக.. அதான் நீ துணைக்கு இருப்பியே அந்த நினைப்பில்... !
அஸ்ஸலாமு அலைக்கும்.அந்த அழகிய ஊர்வலத்தை உன் விழிகளால் அல்ல,கவிமொழிகளால் தொடர்ந்திருக்கிறாய்.காட்சியை கண் முன்னே ஓடவிட்டேன் அகா! கொள்ளை அழகு அந்த வெள்ளைப் பனியின் ஊர்வலம்.
(கணினி செய்த கோளாறினால் பதிவில் சில குழப்பம்.மன்னிக்கவும்).
//(கணினி செய்த கோளாறினால் பதிவில் சில குழப்பம்.மன்னிக்கவும்).//
இது ஒரு ஃபேஷனப்பா ! கணினியை கையாளுவதில் தடைகள்னு சொல்லேன்.. வாயில்லா ஜீவன் அந்த கணினியை ஏன் குத்தம் சொல்றே !?
அபுஇபுறாஹிம் சொன்னது…
தம்பி கிரவ்னு செக்கடி மோட்டுல இருந்துகிட்டு அந்தக் குளத்து மேட்டின் ஒர்ரத்தில் இரவில் கண்டிருப்பாயே அதே நிலவுதான், குளிக்கும்போது காலைச் சுற்றுமே அந்த தாமரைதான்...
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காலைச்சுற்றும் அந்த தாமரைகொடியைவிட,கொடியத்தாமரை(B.J.P) நம்மை சுற்றியுள்ளது.அதை ஒற்றுமை கொண்டு அறுத்து எரிந்திட ஒன்று கூடுவது நலம்.
அபுஇபுறாஹிம் சொன்னது…
இது ஒரு ஃபேஷனப்பா ! கணினியை கையாளுவதில் தடைகள்னு சொல்லேன்.. வாயில்லா ஜீவன் அந்த கணினியை ஏன் குத்தம் சொல்றே !?
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சரியா க(வ)னி(ணினி)ச்சிட்டியலே!கணினி வாயில்லா ஜீவனா?எந்த நூற்றாண்டில் இருக்கீக? அப்துற்றஹ்மான் மாதிரி கணவு கண்டீர்களா என்ன?
கிரவுனு.. அந்தக் கணினி தானாக பேச ஆரம்பித்தால் என்னவெல்லாம் நடக்கும்னு அந்தக் என்/உன் "பள்ளிகூட ஸ்டைலில் கட்டுரை" எழுதி தாமஸ் சார்கிட்டே கொடுத்தா அவர் எப்படியெல்லாம் திருத்தி திருத்தி திட்டுவார்னு போடலாம்னு ஐடியா இருக்கப்பா !
1993 ஆம் வருடம் என நினைகிறேன் ..பட்டுக்கோட்டையிலிருந்து நம்மூருக்கு வரும் வழியில் உள்ள ஏரி (செண்டகோட்டைக்கும் உள்ளூர் புதுக்கோட்டைக்கும் நடுவில் உள்ள ஏரி )யில் இரவு 10.00 மணி இருக்கும் இந்த வழியாக பைக்கில் வரும்போது நான் கண்ட இந்த அழகிய காட்சி
இன்றும் எனக்கு பசுமையாக இருக்கிறது . அதில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியதுதான் இது .இந்த வர்ணனையில் நிச்சியமாக சிறு பிழைகள்
உள்ளதை அறிய்வேன் ....சபீர் காக்கா,சகோதரி மலிக்க ஆகியோரின் கருத்து களை நான் ஏற்றுகொள்கிறேன் ...
உண்மையில் தஸ்தகீர் வெள்ளை பனியின் ஊர்வலத்தை ரசித்ததை நான் ரொம்ப ரொம்ப ரசித்தேன் ....அதேபோல் நெய்னாதம்பி காக்காவின் ரசிப்பும்
எனக்கு பிடிச்சிருக்கு
பிழைகளை பற்றிக் கவலை வேண்டாம் அப்துர்ரஹ்மான்.
பிழைகள் உங்கள் ஆக்கங்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதற்கான ஊக்க மருந்து அ.நி.யிடம் கொடுத்து வைத்திருக்கிறேன்.
வாநிலை ஈரப்பதமாக இருப்பதாலும், ஆங்காங்கே (நீர்) தேக்கமிருப்பதாலும் எழுத்து(க்களி) ஆரோக்கியத்தைச் செம்மை படுத்திடவும், நம் பிழை(ப்பு)கள் எப்படியிருக்கனும் என்று மருத்துவர்கள் குழுவின் பரிந்துரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் விரைவில்..
கவிதையை படித்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது எந்த வார்த்தைக்கும்
அர்த்தம் தேடிட அவசியம் இல்லாமல் எளிய தமிழில் அழகாக இருந்தது.
கவிதைக்கு மேலும் மெருகு ஏற்றியது புகை படம்.
எழுத்துக்கள் பிழையாக (தவறுதலாக)இருந்தும் சொல்லவந்த விஷயம் புரிந்து கொள்ளும் படி இருந்தால் பிழைகளை பற்றி பெரிதாக அலட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை
அன்பானவர்களே, மேல் உள்ள பதிவில் சில காரணங்களால் சில வரிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்..
இங்கே சொல்லபடும் கருத்துகள் சிலவற்றிலிருந்து,
ஒருவரின் படைப்பில் மற்றவர்கள் கருத்துச்சொல்வதே அவர்படைக்கும் படைப்பின்
நல்ல கெட்டதுகளை பிரித்தரிவதற்கும் இன்னும் இன்னும் பல படைப்புகளை உருவாக்க காரணமாகயிருக்குமென்றுதான் என நினைக்கிறேன்.
ஆனால் இங்கு பிழைகளை ஒன்றும் தவறுகளில்லை என்பதைபோல் கருதுக்கள் உள்ளனவே இது சரியா? புரியாமல்தான் கேட்கிறேன்..
நம்முடைய ஆக்கத்தில் சிறு பிழைகளையும் சரிசெய்யும் பட்சத்தில் நம் எண்ணத்திலும் எழுத்தின் வளர்ச்சியிலும் இன்னும் நல்ல முன்னேற்றம் வரும் என்பது என்கருத்து.
படமும், ஒரு பனியின் பயணமும் அருமை.,
பிழைகள் ஒரு பொருட்டே அல்ல என்று தம்பி அப்துல் ரஹ்மான் நினைத்து இருக்கலாம் அது அவரின் துனிச்சலை காட்டுகிறது.
ஆனால் அதை சுட்டிக் காட்டாமல் நலுவி விடல் கவலை கொள்ள செய்யும்.
சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளும் மனபக்குவம் படைத்தவர் அவர் என நான் அறிவேன்
சகோதரி மலிக்கா அவர்களின் கருத்தில் உடன்படுகின்றேன்
கவிதை என்பது கருத்தல்ல, அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது. - [கலில் ஜிப்ரான்]
அ.ர.காக்கா, உங்கள் கவிதை புன்னகை புரியும் உதட்டிலிருந்து வந்தது...அழகிய குடில் இதயத்திலிருந்து வந்தது.
//அழகிய ஊர்வலத்தின் வழியில்
முதலில் தென்பட்டது நிலா...
விண்ணை நோக்கினேன்..
தெளிவில்லை.. பனிகளின் ராஜ்ஜியம் .
அனால் நீரில்
ஸ்பஷ்ட பூர்ணமாய் நிலா...//
அருமையான வரிகள்...
Dear Bro.Harmy,
If you can let me know your email address, i can send the photo of "சேன்டாகோட்டை ஏரி" photo ..taken few years ago. ஏதோ சுமாராக இருக்கும் பார்ப்பதற்க்கு.
My email ; zakirhussain.ge@gmail.com
என் பிழை(ப்பை) பொருத்தருள்க !
கண் வலிக்கிறது என்று என்னை ஒருவர் எழுதச் சொன்னார் - நானும்
கண் வலிகிறது என்று எழுதி மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன் என் கண்ணுக்கு சரியாகத் தெரிந்தது...
இதைப் வாசித்த மற்றொரு நண்பன் அடேய் அது "வலிகிறது" அல்ல "வழிகிறது"ன்னு திருத்தினான் ஆனால் முதலாமவன் சொன்னது இவனுக்குத் தெரியாது.
நான் சொல்வதை அப்படியே எழுது என்று என்னை அதே நன்பன் சொன்னான் நானும் சரி என்று அவன் சொல்லச் சொல்ல எழுதினேன் இப்படியாக :-
கற்று தெரிவதில்லை
பெருமை கொள்வதில்லை
சேற்றில் விளையாடாதே
தளம் தேடாதே
செல்லடி பெண்ணே...
இப்படியாக எழுதியதும் அவனே சொன்னான் முதல் எழுத்துக்கு பக்கத்தில் ஒரு "துணைக்கால்" போடு(ம்) அப்புறம் அர்த்தம் பார் என்றான்..
காற்று தெரிவதில்லை
பொருமை கொள்வதில்லை
சோற்றில் விளையாடாதே
தாளம் தேடாதே
சொல்லடி பெண்ணே..
இப்போ சொல்லுங்கள் பார்க்கலாம்....
sabeer சொன்னது…
பிழைகளை பற்றிக் கவலை வேண்டாம் அப்துர்ரஹ்மான்.
பிழைகள் உங்கள் ஆக்கங்களுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதற்கான ஊக்க மருந்து அ.நி.யிடம் கொடுத்து வைத்திருக்கிறேன்.
எங்களுக்கும் கொஞ்சம் ஊக்க மருந்து தாருங்கள்
நாங்களும் ஆக்கங்கள் தருகின்றோம்
ஊக்க மருந்து சாபிட்டா/போட்டா தடை போடுவாங்களே !? என்ன சோதனையப்பா... இப்படின்னா அப்படி / அப்படின்னா இப்படி !?
அஸ்ஸலாமுஅலைகும்.மூத்தோர் சபைதனில் குறிக்கீடு செய்வதற்கு மன்னிக்கவும்.இங்கு சகோதரி சொன்னக்கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.அதனாலேயே அவ்வப்போது அதுபோல் பதிந்து சுட்டிகாட்டியிருக்கிறேன்.முன்புகூட அப்துற்றஹ்மான் கவிதையின் சிறு தவறை சுட்டிகாட்டி அவன் புரிந்து கொண்டான். அந்த வரியும் திருத்த பட்டது.அவனுக்கு ஈகோ கிடையாது.கற்றுக்கொள்ளும் ஆர்வம்தான் அதிகம். நிற்க.இங்கு சபிர் காக்க சொன்னது காரணம் மூத்த சகோதர வாஞ்சை. அதாவது , நம் குழந்தை வேகமா ஓடி தவறி கீழே விழுந்து விட்டதும் அது அழும் வாப்பா,உம்மா ஏதும் சொல்லிவிடுவாங்களோ?? அதன் குற்ற உணர்சி.உடனே நாம சொல்வோம் ஒன்னும் இல்லடா,ஒன்னும் இல்லை. இங்கெ பாருன்னு அவன் அழுகையை மாற்றி எங்கேமா அடிபட்டிருக்குன்னு கேட்டுட்டு., மறுபடியும் விளையாடை அவனைத்தூண்டுவோம். அதுபோல்தான் என்பதும் எனக்கு விளங்கியது சரியா பெரியவங்களே?த வறா சொல்லிருந்தா மன்னியுங்களே.
எழுத்துப் பிழை, இலக்கணப்பிழை என்று இளைஞர்களை, அவர்கள்தம் எண்ணங்களைக் கட்டிப்போடக்கூடாது என்பது என் கருத்து.
அப்துர்ரஹ்மானின் வளமான கற்பனை வருத்தத்தோடு முடங்கிவிடக்கூடாது என்ற நோக்கில்தான் பிழை இருப்பதையும் சுட்டிக்காட்டி அதே சமயம் அதை அவர் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கொண்ட பின் கவலை வேண்டாம் என்றும் சொல்லி வருகிறோம்.
மற்றபடி சுட்டிக்காட்டுவதே தவறு என்று சொல்வதை நான் மேலே உள்ள பின்னூட்டங்களில் எங்குமே காணவில்லை.
வலைப்பூவில் பதிவர்களுக்கு இலக்கணம் ஒரு கட்டாய்த்தேவையா? அல்லது புதிதாக பதிவிலக்கணம்(?) ஒன்று காண்போமா?
கற்றது கரடு முரடு
பெற்றது இளகிய இதயம்
எழுத்தில் திருடவில்லை
மறந்தது பிழையானது
அலைகள் அடித்தால்தான்
அதனழகை ரசிக்கமுடியும்
உயிரோட்டமுள்ள பளீரென்ற கருத்துக்கள் யாவையும் ஊட்டச் சத்தே !
தெளிந்த நீரில்
விட்டெரிந்த கல்
எழுப்பிய அதிர்வுகள்
அசைந்து அசைந்து
அடங்கும் வரையிலாவது
காத்திருக்கிறேன் என் ஆசான்களில் யாரவது ஒரு சொட்டோ (Good) அல்லது குட்டோ (Hit) வைக்கட்டுமென்று...
ஏற்கனவே நான் சொன்னதுபோல் நானும் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை.
என் படைப்புகளில் நிறைய திருத்தங்கள் பலரால் திருத்தப்பட்டு
அதன் வாயிலாகதான் நான் இன்று பலருக்கு திருத்தங்கள் சொல்லிக்கொடுக்குமளவுக்கு கொஞ்சம் கற்றுள்ளேன்.
ஆயினும் என் எழுதுக்களில் இன்றளவும் சிறு பிழைகள் வருவதுண்டு.
சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன்..
எந்த ஒரு படைப்பாளிக்கும் தன் எழுதுப்பிழைகளை சுட்டிக்காட்டுவது தவறாகப்படாது. இதனால் இதை நாம் இனி சரியாக செய்யவேண்டுமென்ற எண்ணம்தான் மேலோங்கும். இதை பலரின் மூலம் அறிந்ததால் இக்கருத்து.
ஒரு சிலருக்கு பிடிக்காதெனில் அதை பின்பற்றவேண்டியத்தில்லை
தன் படைப்புக்கு நல்ல கருத்துக்கள் மட்டும் வரவேண்டுமென ஒரு படைப்பாளி விரும்புவதை விட, அதிலிருக்கும் குறை நிறைகளை சுட்டிக்காட்டப்படுவதை விரும்பினால்தான் நம் இயற்றும் ஆக்கங்களுக்கு நமக்கே ஓர் திருப்தியேற்படுமென்று ஒரு கவிஞர் எனக்கு கற்றுக்கொடுத்தது. படித்ததும் சூப்பர், அருமை, நல்லாயிருக்கு என்பதோடு பிழைகளிருக்கும் பட்சத்தில் சுட்டிக்காட்டுவதும் சிறந்ததே என்ற கருத்து எனக்கும் சரியெனபட்டதால் இவ்விடத்தில் சொல்லிவிட்டேன்.
சொல்லியதில் தவறுகளிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..
சகோதரி மலிக்கா: இப்படியான உங்களின் வெளிப்படையான விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும்தான் வளர்த்தெடுக்கும், தவறொன்றுமில்லையே நீங்கள் சொன்னதில்.. தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்..
அன்புடன் மலிக்கா சொன்னது…
சொல்லியதில் தவறுகளிருப்பின் பொருந்திக்கொள்ளவும்.
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி,சக எழுத்தாளினியாய்,சக ரசிகையாய் இருந்து நீங்கள் சொன்னவைகளை நான் மனமாற ஏற்றுகொண்டேன்.வைரம் பட்டைதீட்டப்பட,பட மேலும் மெருகேறும்.தங்கம் சுடச்சுட,மேலும் சுட பொலிவுறும் என்பதை அறிந்தவர்கள்தான் இங்கே இருப்பவர்கள். தவறென தெரிந்தவைகளை சுட்டிக்காடுவது வரவேற்கதகுந்ததே!
Post a Comment