Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நான் வேண்டுவது 29

அதிரைநிருபர் | November 07, 2010 | , ,

இதயக்கூட்டில் என்றும் கருனை வேண்டும்.

இறைவணக்கத்தின்னூடே இறக்க வேண்டும்.

ஏழ்மை வேண்டும் அப்பொழுதும் பொறுமை வேண்டும்.

பெரும் தனம் வேண்டும்.

அது இருக்கும்போதே தானம் செய்ய வேண்டும்.

எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும்.

போதும்மென்ற மனம் வேண்டும்

எளிமை வேண்டும்,ஏழையின் தோழனாய் வாழ வேண்டும்,

தீமை கொழுத்தும் எறித்தழலாக வேண்டும்.

மூடத்தீயை அணைக்கும் நீராய் இருத்தல் வேண்டும்.

இறுதி வரை மூஃமினா இருக்க வேண்டும்.

-crown

29 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாவற்றுடன் அதிரைப்படினத்தின் அனைத்து முஹல்லாவும் ஒன்றினைய வேண்டும்

இதற்கு எங்கள் நேசங்களும் முயன்றிட வேண்டும் இன்ஷா அல்லாஹ்..

sabeer.abushahruk said...

ஒரு முஸ்லிமின் உள்ளக்கிடக்கையை செம்மொழியில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள்.

தம்பி க்ரவுன், உங்களின் அத்தனை "வேண்டுதல்"களும் நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நிறைவேற்றித்தரட்டும்.

வரி வரியாக விமரிசிப்பது உங்களால் மட்டுமே சாத்தியப்படும் பாணி. எனக்குத் தெரிந்த ஒரே பாணியில் விமரிசித்தும் வாழ்த்தியும் விடுகிறேன். அந்த ஒரு வார்த்தை:

"ஆமீன்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : செம்மொழியா ? இதுவரை கிரவ்னிடம் கண்டது செய்கை மொழிதானே ! அதுக்குள்ள செம்மொழி அந்தஸ்த்தா ? காக்கா இலக்கணம் இல்லைன்னாதான் செம்மொழியோ !

"எண்ணங்களில் இருக்கும் நேர்மை" ரொம்பவே புடிச்சுருக்கு !

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

எல்லாவற்றுடன் அதிரைப்படினத்தின் அனைத்து முஹல்லாவும் ஒன்றினைய வேண்டும்

இதற்கு எங்கள் நேசங்களும் முயன்றிட வேண்டும் இன்ஷா அல்லாஹ்..
-----------------------------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.ஒற்றுமை எண்ணமும்,விட்டுகொடுக்கும் தன்மையும் வந்துவிட்டால் முஹல்லாக்கள் இணைவது சாத்தியமே.இதற்கு முதலில் முல்லாக்கள் முயலவேண்டும்.
-----------------------------------------------------------------
sabeer சொன்னது…

ஒரு முஸ்லிமின் உள்ளக்கிடக்கையை செம்மொழியில் அழகாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள்.

தம்பி க்ரவுன், உங்களின் அத்தனை "வேண்டுதல்"களும் நம் அனைவருக்கும் வல்ல இறைவன் நிறைவேற்றித்தரட்டும்.
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.எண்ணங்கள் ஈடேற அல்லாஹ் அருள் தரட்டும் ஆமீன்.
--------------------------------------------------------------------
sabeer சொன்னது....
வரி வரியாக விமரிசிப்பது உங்களால் மட்டுமே சாத்தியப்படும் பாணி. எனக்குத் தெரிந்த ஒரே பாணியில் விமரிசித்தும் வாழ்த்தியும் விடுகிறேன். அந்த ஒரு வார்த்தை:

"ஆமீன்"
---------------------------------------------------------------------
பெருந்தன்மையாக என்னால் மட்டுமே முடியும் என்று ஒது(க்)ங்கி கொண்டீர்கள்.அது என் பாணி என்று எனக்கு பட்டா எழுதிதந்துவிட்டு நமக்கு வராதுன்னு சொன்னா எப்படி?
------------------------------------------------------------------
அபுஇபுறாஹிம் சொன்னது…

கவிக் காக்கா : செம்மொழியா ? இதுவரை கிரவ்னிடம் கண்டது செய்கை மொழிதானே ! அதுக்குள்ள செம்மொழி அந்தஸ்த்தா ? காக்கா இலக்கணம் இல்லைன்னாதான் செம்மொழியோ !
-------------------------------------------------------------------
ஊமையாக(செய்கை மொழி)இருந்தவன் என்னை சபையில் பேச வைத்து....செம்மொழி என வழி(வாய்)மொழிந்ததற்கு நன்றி.
----------------------------------------------------------
"எண்ணங்களில் இருக்கும் நேர்மை" ரொம்பவே புடிச்சுருக்கு.
-----------------------------------------------------
நன்றி இதுபோல் என்றும் இருக்க தூஆ செய்யவும்.(என்னை நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காலம் தெரிந்தவர் நீங்கள் .இதுபோல் இன்றும் இருக்கிறேனா?)

Adirai khalid said...

சகோ. தஸ்தகீர்., நீ இளம் வயது முதலே சமூக பற்று உடையவன் என அறிந்தவன்

உன் காக்கா அப்துல் லத்திப் அருகில் இருந்து அருகருகே பள்ளியில் படித்தனால் அவனில் இலக்கியம், கட்டுரை,பேச்சு திறன் ஆகியவை தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வல்லமையுள்ளவன் என்று நன்கு உணர்ந்துதிருக்கின்றேன்

ஆனல் உன் தமிழ் ஆர்வத்தை சில காலங்களாக இனயத்தில் காணும்பொழுது என்னால் உன்னை மதிக்க முடியவில்லை அதுவும் அழகான ஹைகூ கவிதைகள் வடிக்கும் அலவிர்க்கு

உன்னிடம் எப்பொழுதும் பிடித்தது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று இஸ்லாமிய முகமன் கூறி ஆரம்பிக்கும் ஒவ்வொரு பின்னுட்டமும்

சிந்தனைகளை அவிழ்த்து விடு வாசிக்க நாங்கள் இருகிண்றோம்

crown said...

உன்னைப்போல் ஒருவன் சொன்னது…

சகோ. தஸ்தகீர்., நீ இளம் வயது முதலே சமூக பற்று உடையவன் என அறிந்தவன்

உன் காக்கா அப்துல் லத்திப் அருகில் இருந்து அருகருகே பள்ளியில் படித்தனால் அவனில் இலக்கியம், கட்டுரை,பேச்சு திறன் ஆகியவை தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வல்லமையுள்ளவன் என்று நன்கு உணர்ந்துதிருக்கின்றேன்

ஆனல் உன் தமிழ் ஆர்வத்தை சில காலங்களாக இனயத்தில் காணும்பொழுது என்னால் உன்னை மதிக்க முடியவில்லை அதுவும் அழகான ஹைகூ கவிதைகள் வடிக்கும் அலவிர்க்கு

உன்னிடம் எப்பொழுதும் பிடித்தது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று இஸ்லாமிய முகமன் கூறி ஆரம்பிக்கும் ஒவ்வொரு பின்னுட்டமும்

சிந்தனைகளை அவிழ்த்து விடு வாசிக்க நாங்கள் இருகிண்றோம்.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு பென் பூபெய்தலின் போது சந்தோசம் அடைவாள்.பின் திருமணத்தின் போது.பின் குழந்தை பிரசவத்தில் இப்படி ஒவ்வொருவரின் வாழ்த்தும் எனக்கு அந்த மன நிலையை சொல்லும்.காரணம் என் பேனா(பென்)வும் கற்பனையை பிரசவிக்கும் பெண்தான்(பெண்மை) அதில் "மை" ஊற்றும் போதே!.இன்றும் எனக்கு நிரம்ப சந்தோசம்.ஏன்டா இந்த மனுசன் மட்டும் கருத்து சொல்லமாட்டெங்கிறார்? என்னைப்போல் ஒருவனல்லவா? என் உடன் பிறவா சகோதரன் அல்லவா? கருத்து செறிவும், அறிவும் உள்ளவர்(ன்) அல்லவா? இன்று அக்குறை தீர்ந்து விட்டது.இன்சா அல்லாஹ் இனி பெய்யெனின் மழை பெய்யும். ஆமீன்.

Unknown said...

your intention is best..great thasthakeer

crown said...

harmys சொன்னது…

your intention is best..great thasthakeer.
-----------------------------------------------------------------------Assalamualikum I always appreciate your attention and nice comment thanks.

அன்புடன் மலிக்கா said...

இது அத்தனையும் நிறைவேற
எல்லாம் வல்ல
இறைவனின் அருள் வேண்டும்
ஏக இறைவனின் துணைவேண்டும்
அதற்கு நம்முடைய
ஆத்மார்த்தமான தொழுகை வேண்டும்
அதனோடு மனமுருகிக்கேட்கும் துஆக்கள் வேண்டும்
நிச்சயம் அனைத்தும் நடந்திடக்கூடும்
நாயன் நாடி நலம் பெறும் யாவும்...

ஆக்கம் மிகச்சிறப்பாக உள்ளது சகோதரர் கிரவ்ன் அவர்களே!

Yasir said...

இதைப்போல் ஆக்ககங்கள் நீங்கள் நிறைய எழுத வேண்டும்
அதற்க்கு உங்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீட்டி தரவேண்டும்

crown said...

அன்புடன் மலிக்கா சொன்னது…
ஆக்கம் மிகச்சிறப்பாக உள்ளது சகோதரர் கிரவ்ன் அவர்களே!
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி சகோதரி.
-----------------------------------------------------------------
Yasir சொன்னது…
இதைப்போல் ஆக்ககங்கள் நீங்கள் நிறைய எழுத வேண்டும்
அதற்க்கு உங்களுக்கு அல்லாஹ் ஆயுளை நீட்டி தரவேண்டும்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பிற்கும்.வாழ்த்துக்கும்,தூஆவிற்கும் நன்றி!.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!ஆமீன். எழுதுவதின் பயன் இன்று தான் அடைந்தேன்.மழிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு) உன்னையத் தான் எழுதச் சொல்றாங்க கருத்துச் சொல்றவங்களும் எழுதலாமே நல்ல ஆங்கங்களை... ஒரு வேளை தயக்கமோ, எழுத்தில் பிழையாகுமோ, (த)லக்கணத்தை மாற்று என்று நான்(கூட) கருத்திடுவேன்னு இருக்கலாம்... மெய்யாலேமே.. கவிதைன்னு சொல்லிட்டு எழுதுறவங்க கிட்டேதான் இதெல்லாம் கேட்பேன் !

ZAKIR HUSSAIN said...

Dear Bro.CROWN
Your thoughts are beautiful ..may Allah grant your Dhua

Zakir Hussain

Shameed said...

அட யாருப்பா இது நம்ம CROWN னா நம்ப முடியாத அளவுக்கு அசத்திடாரே

WE ARE WAITING FOR MORE

அலாவுதீன்.S. said...

சகோ.தஸ்தகீர்; அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// இதயக்கூட்டில் என்றும் கருனை வேண்டும். ///
அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நஷ்டமடைந்திருப்பீர்கள்! (அல்குர்ஆன் : 2:64)

வாழத்துக்கள் சகோதரரே!

அலாவுதீன்.S. said...

///இறைவணக்கத்தின்னூடே இறக்க வேண்டும். ///’’நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.’’ (அல்குர்ஆன் : 6: 162)

அலாவுதீன்.S. said...

/// பெரும் தனம் வேண்டும். ///செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 18: 46)

“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.” (அல்குர்ஆன் : 26: 88)

அலாவுதீன்.S. said...

/// அது இருக்கும்போதே தானம் செய்ய வேண்டும். /// தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2: 271)

அலாவுதீன்.S. said...

//// எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும். //// மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் : 2: 45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் : 2: 153)

அலாவுதீன்.S. said...

/// போதும்மென்ற மனம் வேண்டும் /// மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தை திருப்பி விட்டது. (அல்குர்ஆன் : 102: 1,2)

அலாவுதீன்.S. said...

/// எளிமை வேண்டும்,ஏழையின் தோழனாய் வாழ வேண்டும் /// (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3: 134)

அலாவுதீன்.S. said...

/// தீமை கொழுத்தும் ((((((எரிதனலாக ))))))வேண்டும்.///அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள். (அல்குர்ஆன் : 3: 114)

அலாவுதீன்.S. said...

///மூடத்தீயை அணைக்கும் நீராய் இருத்தல் வேண்டும்./// அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 2: 251)

அலாவுதீன்.S. said...

/// இறுதி வரை மூஃமினாக இருக்க வேண்டும். /// எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” . (அல்குர்ஆன் : 2: 128)

அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன். . (அல்குர்ஆன் : 2: 143)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல்குர்ஆன் : 2: 21)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அருமையான ஆக்கத்தின் மூலம் அமைதிக்கு ஒருசில வரிகளில் இலக்கணம் வகுத்துத்தந்த அருமை நண்பர் தஸ்தகீருக்கு வாழ்த்துக்களும், எம் வற்றாத உற்சாகம் என்றும்.

வெண் புறாவின் சிறகுகளை ஒடித்து அமைதிக்கு தூதனுப்ப முயற்சிக்கும்.

மனித நேயத்தை வேண்டுமென்றே கருகச்செய்து விட்டு மனித உரிமைக்கு குரல் கொடுக்க எங்கோ ஓடும்.

பாசத்தை குழி தோண்டி புதைத்து விட்டு வேசமிட்டு நேசத்திற்கு அலையும்.

அன்பை அடித்து விரட்டி விட்டு பண்புகளைப்பற்றி பட்டிமன்றமிட்டு பேசும்.

ஏழைகள் மேல் பாராமுகம் கொண்டு ஏழைகளைப்பற்றி மேடைஏறி வருந்தும்.

கோடிகோடி பணமிருந்தும் உள்ளம் பற்றாக்குறையில் பயணம் செய்யும்.

sabeer.abushahruk said...

ஒரு படைப்பு படித்தோம் முடித்தோம் என்று நின்றுவிடாமல், அலாவுதீனுக்கு மார்க்க சிந்தனையையும்,MSMக்கு வாழ்க்கைத் தத்துவத்தையும் தூண்டி விடுகிறது என்றால்.. க்ரவுன், உங்கள் படைப்பின் வெற்றிக்கு வேரென்னச் சான்று வேண்டும்?

crown said...

Shahulhameed சொன்னது…

அட யாருப்பா இது நம்ம CROWN னா நம்ப முடியாத அளவுக்கு அசத்திடாரே

WE ARE WAITING FOR MORE.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அதேனே இந்தப்பொடியானா இப்படி???!!! பரவாயில்லையேன்னு உங்களை யோசிக்க வைத்தது நினைத்து சந்தோசம்.
WE ARE WAITING FOR MORE.சொன்னது உச்சியில் மோர்ந்து(MOREந்து)(முத்தமிட்டு)சொன்னதாய் எடுத்துக்கொள்கிறேன். ந்ன்றி அன்பிற்கும்,ஆதரவிற்கும்,மேலும் எழுத தூண்டுவதற்கும்.

ZAKIR HUSSAIN சொன்னது…

Dear Bro.CROWN
Your thoughts are beautiful ..may Allah grant your Dhua

Zakir Hussain.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி சகோதரரே! நீங்கள் வாழ்தும் தன்மையும் ,அன்பும் அழகுதான்.
--------------------------------------------------------------------
அலாவுதீன்.S.அஸ்ஸலாமு அலைக்கும்.நீங்கள் கொண்டுவரும் அருள் மறை மருந்து தினம் என் மனப்பினிக்கும்,மார்க சிந்தைனைக்கும் நிவாரணமாகவும், நினைவூட்டக்கூடியதாகவும் இருக்கிறது.அல்ஹம்துலிலாஹ்.உங்கள் பணிதான் மிக மேலான அற்புதபணி.தொடருங்கள் ,தாருங்கள் அல்லாஹ். போதுமானவன்.

crown said...

Naina Mohamed சொன்னது…

அருமையான ஆக்கத்தின் மூலம் அமைதிக்கு ஒருசில வரிகளில் இலக்கணம் வகுத்துத்தந்த அருமை நண்பர் தஸ்தகீருக்கு வாழ்த்துக்களும், எம் வற்றாத உற்சாகம் என்றும்.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இயற்கையின் கவியே!இனிய நகைச்சுவை எழுத்தாளனே!சமூக அக்கறையாளனே, நண்பனே!,சகோதரனே! நலம், நலமறய அவா!
என்னை அறிந்தவனே! நன்றி.

crown said...

sabeer சொன்னது…

ஒரு படைப்பு படித்தோம் முடித்தோம் என்று நின்றுவிடாமல், அலாவுதீனுக்கு மார்க்க சிந்தனையையும்,MSMக்கு வாழ்க்கைத் தத்துவத்தையும் தூண்டி விடுகிறது என்றால்.. க்ரவுன், உங்கள் படைப்பின் வெற்றிக்கு வேரென்னச் சான்று வேண்டும்?
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தன் பிள்ளை எவ்வாறு நல்லபிள்ளை யென்றுப் பிறரால் பாரட்டப்படுகிறதோ. அதுதான் அந்த பெற்றோருக்கு மகிழ்சி.அதுவே எனக்கும்.அல்ஹம்துலிலாஹ்.எல்லா புகழும் அல்லாஹுக்கே!
சகோ.அலாவுதீன் நாம் அவர்களை தூண்டும்படி எழுதினாலும்,எழுதாவிட்டாலும் என்றுமே மார்கச் சிந்தனை மிக்கவராகவே இருக்கிறார்கள்.அல்ஹம்துலிலாஹ் ஆகவே, அவர்களை என்னெழுத்து மார்க்கத்தி நினைவூட்டுவதாக அமைந்து இருக்கிறது என்று நீங்கள் சொல்வது, என்மேல் கொண்ட அன்பின் காரணம் என்று எடுத்துக்கொள்வேன். ஆனால் என்னெழுத்துபுகழேன்.
நண்பன்,சகோதரன் நைனாவுக்கு எந்த ஒரு சிறு துறும்பும் போதும் எழுத. அது இந்த துரும்பு உதவியாக( நான்) இருந்தேன் என்பதும் மகிழ்வே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு