Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அடக் காதிதமே! 12

அதிரைநிருபர் | December 06, 2010 | , ,

உன்னால் மனிதன் படும் அவதி
உன்னை உருவாக்கியவனேயே
உருட்டி விளையாடும் உன்தந்திரம்
காகிதமான உனக்கு மனிதனின்
கதறல் கேட்குமா?

காதல் மனைவியை பிரிந்து
அருமைக் குழந்தைகளை பிரிந்து
பெற்றோர் நண்பர்களை பிரிந்து
காகிதமே உனை சேகரிக்க
கடல்கடந்து கானகம் செல்லும் கஷ்டம்

ஓ இப்படி
பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ!

இறைவன் உன்னை படைத்திருந்தால்
கொஞ்சமேனும்
இரக்கத்தை வைத்திருப்பான்
மனிதனல்லவா உன்னை படைத்தான்
அதனால்தான்
மனது வைக்க தவறிவிட்டான்

அடுக்கு மாடிகளிலேயே
அழகாய் அடங்கி இருப்பதும்
அவதிபடும் ஏழைக்கு
அரைவயிற்றுக்கு கஞ்சிக்கும்
அவதியில் அலையவிட்டு
ஆட்டம் போடுகிறாயே!

அவன் வாங்கிவந்த வரம் ஆடம்பரம்
இவன் வாங்கி வந்த வரம் வறுமை வரமா?

பணமே!
உன் ஒற்றை ரூபாயால்
ஒருவன் மனம் நிறைவடைந்து
பசியாறினானேயானால்
நீ படைக்கப்பட்டதற்கான பலன்
புண்ணியமே!

புலங்கபடா இடத்திலே
பதுங்கியிருக்க நினைத்து
பல கோடிகளிடமே
நீ புரழ்வாய் என்றால்
உன் பிறப்புக்கான பலன்
ஆணவமே!

-- அன்புடன் மலிக்கா

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// ஓ இப்படி
பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ! //

இதுதான் பணத்தின் - குணம் !

Yasir said...

பணத்தை பற்றியும் இந்த அளவிற்க்கு கவிதை எழுத முடியுமா...படித்து,ரசித்து வாய் பிளந்து விட்டேன்...நீங்கள் கவியரசி தான் என்பதை இன்னொரு தடவை ஆணித்தரமாக நிருபித்து இருக்கிறீர்கள்.. வாழ்துக்கள் சகோதரி.நான் ரசித்த வரிகள் ///இறைவன் உன்னை படைத்திருந்தால்
கொஞ்சமேனும்
இரக்கத்தை வைத்திருப்பான்
மனிதனல்லவா உன்னை படைத்தான்
அதனால்தான்
மனது வைக்க தவறிவிட்டான் //

sabeer.abushahruk said...

பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பதினொன்றும் செய்திருக்கிறது - கவிதை புணைய வைத்திருக்கிறது.

நல்ல மூலப்பொருள், திறமையான கைகளில்... வேறென்ன சொல்ல?

பிடித்த வரிகள்:

மொத்த கவிதையையும் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்க.

எனினும்,
//பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ!// இந்த காரணப்பெயரை சற்று விளக்குங்களேன்.

அன்புடன் மலிக்கா said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
// ஓ இப்படி
பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ! //

இதுதான் பணத்தின் - குணம் !//

மிக்க நன்றி சகோதரர் அவர்களே!

குணத்தையறிந்து பணம் நடந்துகொள்வதில்லை ஆனால்
பணத்தின் குணமயறிந்த மனிதன் குணமாய் நடக்கத்தவறிவிடுகிறான்
[சில விதிவிலக்குகளைதவிர..

crown said...

உன்னால் மனிதன் படும் அவதி
உன்னை உருவாக்கியவனேயே
உருட்டி விளையாடும் உன்தந்திரம்
காகிதமான உனக்கு மனிதனின்
கதறல் கேட்குமா?
----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
கேட்கவே கேட்காது எந்த கதறலும்,
காரணம் இருகாது இல்லை இந்த பாலாய் போன (பி)பணத்திற்கு.
----------------------------------------------------------
காதல் மனைவியை பிரிந்து
அருமைக் குழந்தைகளை பிரிந்து
பெற்றோர் நண்பர்களை பிரிந்து
காகிதமே உனை சேகரிக்க
கடல்கடந்து கானகம் செல்லும் கஷ்டம்

ஓ இப்படி
பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ
------------------------------------------------------------------
பணம் ஒரு இடுகாடு சொந்தம், நட்பு ,பாசம், நேசத்தை இதற்(காக)குள்
தொலைத்துவிடுவதால்.
---------------------------------------------------------------------
இன்சாஅல்லாஹ் மீதி நாளை(இல்லாள் ஏச்சு தாங்கமுடியல மணி இப்ப 1 நிசி)

crown said...

பணம் ஒரு இடுகாடு சொந்தம், நட்பு ,பாசம், நேசத்தை இதற்(காக)குள்
(தொலைத்துவிடுவதால்).புதைத்துவிடுவதால்.

அன்புடன் மலிக்கா said...

Yasir சொன்னது…
பணத்தை பற்றியும் இந்த அளவிற்க்கு கவிதை எழுத முடியுமா...படித்து,ரசித்து வாய் பிளந்து விட்டேன்...நீங்கள் கவியரசி தான் என்பதை இன்னொரு தடவை ஆணித்தரமாக நிருபித்து இருக்கிறீர்கள்.. வாழ்துக்கள் சகோதரி.நான் ரசித்த வரிகள் ///இறைவன் உன்னை படைத்திருந்தால்
கொஞ்சமேனும்
இரக்கத்தை வைத்திருப்பான்
மனிதனல்லவா உன்னை படைத்தான்
அதனால்தான்
மனது வைக்க தவறிவிட்டான் //

யாசிர்க்காக்கா. தாங்களின் பாசமான கருதுக்களுக்கு மனமார்ந்த மகிழ்ச்சி.

நிச்சயம் இறைவன் அதனை உருவாக்கியிருந்தால். ஜீவராசிகளைபோல் மனிதர்களைபோல் அதற்கு இரக்கமிருந்திருக்கும். இது நம்மைபோன்ற மனிதந்தானே படைத்தான் பண்டமாற்றுமுறையை மாற்ற. அதான் மறக்காமல் மனதுவைக்க தவறிவிட்டான். இருந்தால் இவனுக்கல்லவா மோசம் அதனால்தான்காக்கா இப்படி..

தோன்றுவை எழுதுகிறேன் கிறுக்கள்களாய் அது கவிதையா என தெரியாது..
நன்றி காக்கா

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்


//மனிதனல்லவா உன்னை படைத்தான்
அதனால்தான்
மனது வைக்க தவறிவிட்டான்//


மனித படைப்புக்களில் சிறந்த கண்டு பிடிப்பு எது என்றால் இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பது தான்
அமெரிக்கவை கொலம்பஸ் கண்டு பிடித்தார் அவர் கண்டுபிடிக்காவிட்டால் வேறு யாரவது கண்டு பிடித்து இருப்பார்கள் காரணம் அப்படி ஒரு இடம் இருந்தது
காகிதம் கரண்ட் இன்னும் பல. இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பது தான் சிறந்த கண்டு பிடிப்புக்கள் ஆகும் .

அன்புடன் மலிக்கா said...

sabeer சொன்னது…
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பதினொன்றும் செய்திருக்கிறது - கவிதை புணைய வைத்திருக்கிறது.

நல்ல மூலப்பொருள், திறமையான கைகளில்... வேறென்ன சொல்ல?

பிடித்த வரிகள்:

மொத்த கவிதையையும் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்க.

எனினும்,
//பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு
பணம் என்று பெயர் வந்ததோ!// இந்த காரணப்பெயரை சற்று விளக்குங்களேன்
.//

மிக்க நன்றி சகோதரர் அவர்களே!
இந்த பணத்தினைபற்றி விளக்க நான் ஒரு கட்டுரையே எழுத வேண்டும்.
அதன் காரணபெயர் அதெல்லாம் நமக்குதெரியாது சகோ. நம்ம பக்கம் எல்லாரும் பணம் என்கிறார்கள் நானும் பணமென்கிறேன் அதற்கு பன்முகங்கள் அதாவது பலபெயர்கள் உண்டாம். நமக்கு தெரிந்தது பணம். காசு. ரூபாய். இப்படிதான் பழக்கப்பட்ட பெயரிலேயே ஓர் படைப்பை உருவாக்கினேன் அவ்வளவுதான்.[தெரியாதுன்னு சொல்ல எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியுள்ளது அல்லாவே]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தெரியாதுன்னு சொல்ல எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியுள்ளது அல்லாவே//

ரொம்ப சிம்பிள் - அந்தக் காகிதம் என்னிடம் இல்லைன்னு சொல்லிட்டா இந்த பாசப் போராட்டம் வராதுல ! :)

அன்புடன் மலிக்கா said...

------------------------------------------------------------------
பணம் ஒரு இடுகாடு சொந்தம், நட்பு ,பாசம், நேசத்தை இதற்(காக)குள்
தொலைத்துவிடுவதால்.
//

நிஜம்தான் நம்மை அதனுள் தொலைத்து நம்மைநாமே தேடும் விதித்திரம்

---------------------------------------------------------------------
இன்சாஅல்லாஹ் மீதி நாளை(இல்லாள் ஏச்சு தாங்கமுடியல மணி இப்ப 1 நிசி)//

இத அவங்கபடிக்கலையா //இல்லாள் ஏச்சு தாங்கமுடியல//
ஏதோ நம்மாள முடிஞ்சது..

அன்புடன் மலிக்கா said...

மனித படைப்புக்களில் சிறந்த கண்டு பிடிப்பு எது என்றால் இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பது தான்
அமெரிக்கவை கொலம்பஸ் கண்டு பிடித்தார் அவர் கண்டுபிடிக்காவிட்டால் வேறு யாரவது கண்டு பிடித்து இருப்பார்கள் காரணம் அப்படி ஒரு இடம் இருந்தது
காகிதம் கரண்ட் இன்னும் பல. இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பது தான் சிறந்த கண்டு பிடிப்புக்கள் ஆகும் //

அவன் கண்டுபிடித்த அறிய கண்டுபிடிப்புகள் சிலபல சமயம் அவனுக்கே விணையாகிறது.என்ன செய்ய!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.