Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மேலதிகாரி அவர்களுக்கு… ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | December 11, 2010 | , ,

ஐயா,

பொருள் : விருப்பு / வெறுப்பு நாடி எழுதும் மடல்.

எங்களின் முதல் மடல் இது, தங்களின் மேலான அதிகாரத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் நாங்கள் வேலை செய்வதை நினைத்து ஒரு புது விதமான பெருமை கொள்கிறோம். ஐயா! தங்களின் அருமை பெருமைகளை பட்டியலிட்டால் வாசித்து முடிக்க நீண்ட நாட்களாகும். ஆதலால் ஆங்காங்கே அவ்வப்போது தங்களின் மெய்சிலிர்க்க வைக்கும் திறமைகளை மட்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன்.

அசத்தும் அறியாமை!
இருட்டில் கூட கருப்பு நூலை எடுத்திடும் தங்களின் திறமைக்கு நிகர் தாங்கள் மட்டுமே!, எங்களில் ஒருவர் சில தகவல்கள் அடங்கிய கடிதத்தை தொலை நகல் facsimile அனுப்பும்போது தாங்கள் அருகில் இருந்து கொண்டு அதனை அப்படியே பிடுங்கி கூரைக்கும் தரைக்கும் இடைய குதித்து குதித்து கத்தினீர்களே அந்த உக்கிரம் உங்களால் மட்டுமே முடியும். அப்புறம் எங்களில் ஒருவரைத் தனியாக தங்களின் அறைக்குள் அழைத்து கைகளால் எழுதியதும் இதில் இருப்பதால் இந்த தகவல் எப்படி அவர்களுக்குப் போய் சேரும் இதனை தட்டச்சு செய்தல்லவா அவர் அனுப்பியிருக்கனும்னு கேட்டீங்களே ! அந்த நுன்னிய அறிவை நினைத்து புலகாங்கிதம் அடைந்தேன்.

தங்களின் இவ்வகையான போற்றத்தக்க அறியாமையைக் கொண்டு இந்த நிறுவனத்தை சீறும் சிறப்புமாக ஆளுமை செய்வதால் எங்களுக்கு வேலைப்பளு என்பதே என்னவென்று தெரியவில்லை அந்த அளவுக்கு எதைத் தூக்குவது எதை வைப்பது என்று தங்களால் மட்டுமே செய்ய முடியும்.

ஆங்கிலப் புலமை!

ஐயா! தங்களின் ஆங்கிலப் புலமையை கண்டு எங்கள் யாவருக்கு புல்லரிக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாங்கள் அனுப்பித் தரும் மின் அஞ்சல்களில் எங்களின் புராண காலத்து தாய்மொழிப் புத்தங்கங்களான தொல்காப்பியம், புரணாநூறு படிப்பதுபோல் கரடு முரடாக இருக்கும். தங்களின் ஆங்கில வார்த்தைகளுக்கு இன்னும் இவ்வுலகில் அதற்கான அகராதியே கண்டெடுக்கவில்லை அப்படி ஒரு புலமை உங்களிடம் இருக்கிறது.

இனிக்கும் புன்னகை!
வேலைகளில் மூழ்கியிருக்கும்போது தாங்கள் எங்களருகில் வரும்போது உங்களை நிமிர்ந்து பார்த்தால் அடா அடா அந்தச் சிரிப்பு இருக்கே எங்களூர் போலிச் சாமியார்களெல்லாம் தோற்று விடுவார்கள் அப்படியாக இனிக்கும் உங்கள் புன்னகை! அப்படியே பார்வையை வேறுபக்கம் திருப்பி எல்லாமே தெரியும் என்று கண் ஜாடை செய்வீர்களே ஆஹா !

தெரியாமலும் தெரிந்ததும்!
நாங்கள் செய்து கொண்டிருக்கும் அல்லது செய்து முடித்திருக்கும் வேலைகள் என்னவென்று தெரியாதிருந்தும் அப்படியே எல்லாம் தெரிந்த மாதிரி தாங்கள் வந்து கேட்கும் மேதாவித்தனமான கேள்விகளை இதுவரை எங்கள் வாழ்நாளில் கேட்டதில்லை பார்த்ததில்லை. அச்சயமத்தில் எங்கள் யாவருக்கும் வரும் கோபத்தை வெளிக் காட்டினால் தெரியாததெல்லாம் தெரியுமென்று கோமாளிபோல் அடுத்தடுத்து குழப்பும் உங்களின் திறமையை போற்ற இந்த நிறுவனத்தில் உங்களுக்கு நிகராக யாருமே இல்லை.

எங்களின் புன்னியம்!
உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றால் நாங்கள் செய்துமுடித்த வேலையை சரியில்லை என்று அப்படியே கவுத்திப் போட்டு வாதிடுவதில் உங்களின் நிலையைத் தொட யாராலும் முடியாது, அதனை எப்படிச் செய்தோம் என்று தெரிந்து கொள்ள தாங்கள் கேட்பீர்களே “எப்படி எப்படி அரம்பத்திலிருந்து சொல்லு பார்க்கலாம்னு எங்களால் முடிந்த வரை மீண்டும் ஆதிமுதல் எப்படிச் செய்தோம் என்று சொல்லி வரும்போது திரும்பத் திரும்ப கேட்டு உயிரை எடுப்பீங்களே ஐயா ! எங்களோடு உங்களை வேலைக்கு சேர்த்து வைத்தானுங்களே அவனுங்களத்தான் போற்றனும்.

இப்படியாக எங்களை ஒரு மடல் எழுதத் தூண்டிய தங்களின் மேதாவித் தனத்தை மெச்சியவர்களாக உங்களைப் போல் இன்னும் இந்த வளைகுடா நாட்டில் அதி மேல்அதிகாரிகளாக வளம் வருபவர்களுக்கும் (நம் சூழலிலிருந்து வந்தவர்கள் மேலதிகாரியாக இருக்கும் யாரும் இதில் அடங்க மாட்டார்கள், ஏனென்றால் நம்மவர்களின் திறமை மேற் சொன்னவைகளிலிருந்து விதிவிலக்கு) எங்களின் ஆழ்ந்த இறங்கல்கள் !

வேற என்னத்த சொல்லச் சொல்றீங்க மேலதிகாரி அவர்களே !
சொந்த நாட்டில் படிப்புக்கு ஏற்ற வேலைகள் கொட்டிக் கிடந்தும், அந்தப் பக்கம் வீசும் காற்றை ஒரு வாசனைக்கு கூட சுவாசிக்காமல் அப்படியே விமானம் ஏறி வந்து எங்களின் தனித் திறமைகளை எவ்வளவுதான் கொட்டி கொட்டி தீர்த்தாலும் பலன் என்னவோ முதுமை சீக்கிரம் முதுகைத் தடவுகிறது. இனிமேல் எங்களின் சந்ததிகள் இந்த சூழலுக்குள் சிக்காமல் இருக்க நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நடந்தேற இருக்கும் அதிரைப்பட்டினம் “கல்வி விழிப்புணர்ச்சி மற்றும் மேல் கல்வி மேம்பாடு மநாட்டுக்கு நமதூர் ஒவ்வொரு வீட்டு மாணவச் செல்வங்களையும் தயார் படுத்த வேண்டும் அதோடு மட்டுமல்ல வீட்டிலிருக்கும் ஆண்களும் பெண்களும் அவசியம் இதிலே கலந்து கொண்டு பயனயடைவது மட்டுமல்ல இனிவரும் இளையவர்களின் இளமை உறவுகளோடும் ஊரோடும் நலன் வேண்டி வாழ்ந்திட வேண்டும்.

- அபுஇபுறாஹீம்

23 Responses So Far:

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

இப்படி போட்டுப் படுத்துறாங்களேன்ற ஆதங்கத்தைவிட நகைச்சுவையான எழுத்து சிரிப்பை வரவழைக்கிறது.

The boss is always right என்கிற அட்டு சால்சாப்பை வேறு சொல்லித்தந்து நம்மல ஓச்சுப்புட்டாய்ங்க.

sabeer.abushahruk said...

HOW TO RECRUIT THE RIGHT PERSON FOR THE JOB?

Put about 100 bricks in some Particular order in a closed 
Room with an Open window. 

Then send 2 or 3 candidates in The room and close the door.

Leave them alone and come back After 6 hours and then analyze The situation. 

If they are counting the Bricks. 
Put them in the accounts Department. 

If they are recounting them...
Put them in auditing ..

If they have messed up the Whole place with the bricks. 
Put them in engineering . 

If they are arranging the Bricks in some strange order. 
Put them in planning. 

If they are throwing the Bricks at each other. 
Put them in operations ..

If they are sleeping.
Put them in security. 

If they have broken the bricks Into pieces. 
Put them in information Technology. 

If they are sitting idle. 
Put them in human resources. 

If they say they have tried Different combinations, yet 
Not a brick has Been moved.
Put them in sales.

If they have already left for The day. 
Put them in marketing. 

If they are staring out of the Window. 
Put them on strategic Planning. 

And then last but not least. 
If they are talking to each Other and not a single brick 
Has been Moved..

Congratulate them and put them
In top management.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//If they are sitting idle.
Put them in human resources.//

கவிக் காக்கா: இதுதான் காக்கா சரியான JOB !

இது என்னோட புலம்பலைவிட சூப்பரா இருக்கே ! ஓ இதத்தான் செய்றாய்ங்களோ இங்கே !

crown said...

If they are throwing the Bricks at each other.
Put them in operations ..
-----------------------------------------------------------------
Assalamualikum.yeah your are right put them in operation but before that send them to operation theater for treatment.because when they throwing the bricks each others all are them get injuries.

அபு ஆதில் said...

மேலதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னாபடுவதை ரொம்ப நகைச்சுயோடு
சொல்லி இருக்கிறீர்கள்.
"எங்களின் தனித் திறமைகளை எவ்வளவுதான் கொட்டி கொட்டி தீர்த்தாலும் பலன் என்னவோ முதுமை சீக்கிரம் முதுகைத் தடவுகிறது. இனிமேல் எங்களின் சந்ததிகள் இந்த சூழலுக்குள் சிக்காமல் இருக்க நாம் தான் விழித்துக் கொள்ள வேண்டும்,"
இனியாவது விழித்துக்கொள்வோம்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

காட்டுரை ஆரம்பம் தமாஷாக இருந்தாலும் முடிவு நம் சமுதாயத்திற்கு விழிப்பை ஏற்படுத்துவதாக அமைத்துள்ளது.

கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு தேதி எப்போது என்று அறிவிக்க வில்லையா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//எங்களருகில் வரும்போது உங்களை நிமிர்ந்து பார்த்தால் அடா அடா அந்தச் சிரிப்பு இருக்கே எங்களூர் போலிச் சாமியார்களெல்லாம் தோற்று விடுவார்கள் அப்படியாக இனிக்கும் உங்கள் புன்னகை!//

இது அன்றாடம் நடைப்பெறும் நிகழ்வு. போலிச் சாமியாருடன் ஒப்பிட்ட சொன்னவிதம் என் அலுவலகத்திற்கு பொருந்தும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றால் நாங்கள் செய்துமுடித்த வேலையை சரியில்லை என்று அப்படியே கவுத்திப் போட்டு வாதிடுவதில் உங்களின் நிலையைத் தொட யாராலும் முடியாது,//

செய்த வேலை 100 % சரியாக இருந்தாலும் அது தவறு என்று வாதிடும் நம் மேலதிகாரிகளைப் போன்ற குணநலன்கள் சில நம் சமுதாய இயக்க அன்பு சகோதரர்களிடம் உள்ளது.

இது போன்ற மேல் அதிகாரிகளிடம் கற்றதா?

அதிரைநிருபர் said...

//கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு தேதி எப்போது என்று அறிவிக்க வில்லையா?//

சகோதரர் ஷாஹுல், தங்களின் ஆர்வத்தை பாராட்டுகிறோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் முறையான அறிவிப்புகளுடன் வரும் நாட்களில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு செய்திகள் அதிக அளவில் வெளிவரும்.

து ஆ செய்யுங்கள், நம் வருங்கால மக்களின் நல் வாழ்வுக்கான இம்முயற்சி வெற்றியடைய.

sabeer.abushahruk said...

இருந்தாலும் இப்பவெல்லாம் கீழே வேலை பார்ப்பவர்களுக்கு புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறதே. எல்லோரும் அபு இபுறாகீம்/தாஜுதீன் மாதிரி ஸ்மார்ட் ஒர்க்கர்ஸா கிடைப்பதில்லையே!

அவங்க படுத்துகிற பாட்ல நான் எத்தனை தடவை "ஆணியே புடுங்க வேணா" என்று கத்தியிருக்கேன் தெரியும?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// மாதிரி ஸ்மார்ட் ஒர்க்கர்ஸா கிடைப்பதில்லையே! //

காக்கா இங்கே மட்டும் என்ன வாழுதாம், கீழே வேலை செய்றவங்களில் ஒருவரிடம் "call me - my etisalat number"ன்னு சொல்லிட்டு வெளியில சென்றேன் ஆனால் அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை வெறுப்படைந்து அவருக்கு வெளியிலிருந்து ஃபோன் செய்தேன்... அதற்கு சொன்ன பதில் என்ன தெரியுமா ?

"நான் எத்தனை தடவை etisalatக்கு கால் பன்றது அங்கே நீங்கள் இல்லவேயில்லைன்னு சொல்லிட்டாங்கன்னாரே" இப்போ சொல்லுங்க பார்க்கலாம்.

இதைவிட இன்னொன்று, customsக்கு தேவையான கோப்புகளை சரிசெய்து கொடுத்து அதனைக் கொண்டு make a customs export billன்னு சொல்லிவிட்டு நகர்ந்தேன், அவர் முட்டி முட்டி மோதிவிட்டு Microsoft ஆஃபிஸில் export import வசதிதான் இருக்கு customs export bill இல்லைன்னு வந்து வெறுப்பேத்தினா என்ன செய்றது... (இவர்தான் mirshal-IIன்னு கஸ்டம்ஸ் portal பயன்படுத்த டிரைனிங் போயிட்டு வந்தவர்)

PS : இந்த இருவரும் நமம்வர்கள் அல்ல.. !!

sabeer.abushahruk said...

//இது என்னோட புலம்பலைவிட சூப்பரா இருக்கே ! ஓ இதத்தான் செய்றாய்ங்களோ இங்கே !//

அபு இபுறாகீம், இது என் ஆக்கமல்ல. எங்கோ சுட்டது.

Unknown said...

கட்டுரை சூப்பர் .....பின்னூட்டங்கள் மிகவும் கலகலப்பா இருக்கு ......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer சொன்னது…

இது என் ஆக்கமல்ல. எங்கோ சுட்டது.//

காக்கா : நாமாவது எப்படியோ சுட்டோ புட்டோ ஒப்பேற்றி விடுவோம் ஆனால் நமக்கு மேலிருக்கும் கீழிருக்கும் (மேல்/கீழ் அதிகாரிங்க !!!!!) வதைப்பாளிங்க இருக்காங்களே சுட்டாலும் வராது சில விஷயங்கள் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சரியான நக்கல் , நையான்டி.குசும்பு இப்படி எப்படியெல்லாம் கேலி செய்து எழுத முடியுமோ அப்படியே எழுதியிருக்கிறார் அபு இபுறாகிம் காக்கா.அவருக்கு இது இயல் பானதுதான்.அவ்வமயம் அவர் சொன்னதும் உன்மையே!சில நேரத்தில் விசயம் தெரியாத வெள்ளாவிசுண்ணம் செய்யும் அளுச்சாட்டியமும்,மேலாதிக்கமும் மூஞ்சில குத்துனா என்ன என்பது போல் ஆத்திரம் வரும்.தகுதியில்லாமல் இருப்பதே தகுதியான வேலைக்குத்தகுதி என்பது போல ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர்(ராமசந்திரன்) கூட முதலமச்சரா இருந்த மா நிலத்திலிருந்து வந்தவங்க தானே நாம?

Yasir said...

காக்கா...இவ்வளவு நக்கலுடனும்,நகச்சுவையுடனும்,அறிவுரையுடனும் எழுத நிறைய திறமை வேண்டும்...சூப்பர் காக்கா.கண்டிப்பாக நீங்கள் மேலளாராக இருக்கமாட்டீர்கள்:)...உங்கள் எழுத்து என்னுடைய முன்னாள் பிரம்மிடுகள் நிறைந்த நாட்டில் இருந்த வந்த மேலாளரை கண் முன் நிறுத்தியது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பிரம்மிடுகள் நிறைந்த நாட்டில் இருந்த வந்த மேலாளரை கண் முன் நிறுத்தியது//

தம்பி யாசிர்: அதே நாட்டைச் சேர்ந்த இருவர் என்னிடம் மாட்டிக் கொண்டு ஆனா என்னை படுத்தும் பாடு இருக்கே...

அதிகாரின்னு எழுத தூண்டியதில் இந்த மேதாவிகளும் அடக்கமே...

யெமன் நாட்டைச் சேர்ந்தவர்தான் etisalatக்கு போன் போட்டவர் !

Yasir said...

//தம்பி யாசிர்: அதே நாட்டைச் சேர்ந்த இருவர் என்னிடம் மாட்டிக் கொண்டு ஆனா என்னை படுத்தும் பாடு இருக்கே..// பார்த்து காக்கா...நம்மிடம் உள்ளதும் போய்விடும் அவங்களை வைத்து மேய்த்தால்

Yasir said...

சபிர் காக்காவின்...”ஆள்” எடுப்பு அட்வஸ் சூப்பர்.....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜாஹிர் காக்கா : we are missing you !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர் : சொல்வதற்கு நிறைய இருக்கு ! சாம்பிளுக்கு, ஏன்னா இன்னைக்கு week ஆரம்பமுள்ள அதான் உங்களுக்காக !

இன்னும் கணினி விசைப் பலகையில் "W" எங்கே இருக்கிறது "Z" எங்கேயிருக்கிறதுன்னு ஃபோனில் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம் இந்த மே(ல்)தாவிகளுக்கு !

இப்படித்தான் "@" இதனை ஆங்கிலத்தில் தெளிவாக சொல்கிறேன் ஆனால் புரியவில்லை அதனை என்னோட கீபோர்டில் எங்கே இருக்கோ அந்த கீயை அப்படியே எண்ணிக்கையாக்கி second row third keyன்னு சொன்னா "no no there is only two"ம்பார் ஆமா அதேதான் "first press shift key at the same time press number two key" ன்னு சொன்னா how I press two keyம்பார்..

இதெல்லாம் பழகிடுச்சு பாஸ் !

sabeer.abushahruk said...

இப்படித்தான் மெஷினோட "ஆன்" "ஆஃப்" பொத்தான தெரியாத சவுதிக்கு, "கையை" செங்குத்தா வச்சி மேல் விரல் "ஆன்" கீழ் விரல் "ஆஃப்" நு சொல்லிக்கொடுத்தோம். ஆனா, அவன் ஒன்னும் மேலதிகாரியெல்லாம் கிடையாது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா's and தம்பி's : கருத்துக் குவியலாக்கிய யாவருக்கும் - நன்றி!

சரி சிறிய வினா !? புன்னகை முகம் காட்டிடும் (புகைப் படத்திலிருக்கும்) ஆதில் அவர்களின் தந்தையே !... இந்தக் கலர்ப் படம் காட்டும் முகச் சாயலோடு நானும் பழகியிருக்கேன்னு என் உள்மனசு சொல்லுது ஆனா நீங்கதான் சொல்லனும் என் நினைப்பு சரியான்னு !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு