Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேலை நேரமும் கல்வியும் 15

அதிரைநிருபர் | December 21, 2010 | ,

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அது போல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .

குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .

அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட ம(யீர்)யில் ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6 30 க்கு வீட்டில் இருந்து கிளம்பவேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.

குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக்கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிபழக்க வழக்கங்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

நமது ஊரின் முக்கியமான பேங்க்: 10 மணிக்கு பேங்க் திறப்பார்கள் அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வலிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.

நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான் .லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.

இதெல்லாத்தையும்விட காஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலங்கஸன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .

கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.

பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...

மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .

நாம் என்ன செய்ய வேண்டும்

  • நாம் நம் பிள்ளைகளுக்கு 5 வேலை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .

இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன்.

-- SHAHULHAMEED
    DAMMAM

15 Responses So Far:

அலாவுதீன்.S. said...

சகோ. சாகுல் ஹமீது : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) உண்மைகளை எடுத்து கூறியதற்கு வாழ்த்துக்கள்!
************************************************************************
///// இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அது போல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். /////
***********************************************************************
இதுதான் கல்வி கற்க ஆரம்பிக்கவும், வேலை தொடங்கவும் சரியான நேரம்


/////அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6 30 க்கு வீட்டில் இருந்து கிளம்பவேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும். /////
***********************************************************************

இப்படி தொழுது விட்டு ஆரம்பிக்கும் கல்வியும், வேலையும் மனதிற்கு இதமாக சுறுசுறுப்பாக இருக்கும்.

/////10 மணிக்கு பேங்க் திறப்பார்கள் அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வலிந்து கொண்டுதான் இருக்கும். /////
***********************************************************************

நீண்ட வருடங்களாக எனக்குள் இருக்கும் கேள்வி இந்தியாவின் அரசாங்க நேரம் மணி 10. காலேஜ் நேரம் மணி 10. பள்ளிக்கூட நேரம் 9 அல்லது 10. இந்த நேரங்களை கண்டுபிடித்து தந்தவர்களை நிச்சயம் தண்ணி இல்லா காட்டில் கொண்டு போய் விட்டு விட வேண்டும்.

பேங்கில் நானும் நிறைய சிரமங்களை (அதிரை கனரா வங்கி) அனுபவித்து இருக்கிறேன். நம் பணத்தை எடுப்பதற்கு அவர்கள் வீட்டு சொத்தை கொடுப்பது போல் பெரிய அலப்பறையாக இருக்கும்.

/////அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: பத்திர பதிவு ஆபிசர்/////
***********************************************************************

இருக்கும். இந்த இரண்டையும் சொல்லவே வேண்டாம் பணம் காய்க்கும் இடம் இதுதான். இவர்கள் லஞ்சத்திற்கு பெயர் என்ன தெரியுமா? அன்பளிப்பு????????????????
நாம் ஏன் இவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும் (கொடுக்காவிட்டால் பத்திரம் முடிக்க முடியாது) இந்தியாவில் எந்த இடத்திற்கு சென்றாலும் அன்பளிப்பு கொடுக்காவிட்டால் காரியம் நடக்காது.

//// நாம் என்ன செய்ய வேண்டும் ///
***********************************************************************

நிச்சயம் தூய மார்க்கத்தை நமது வீடுகளில் கடைபிடிக்க (கணவனும், மனைவியும்) ஆரம்பித்தால் நம்மை பார்த்து நம் பிள்ளைகளும் நல்லடியார்களாக வளர்ந்து வர வாய்ப்புகள் அதிகம். மார்க்கத்தின்படி நடக்க ஆரம்பித்தால் வாழ்வின் அனைத்து இடத்திற்கும் வழி காட்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் ஷாஹுல் காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும்.

பள்ளி கல்வி கற்பது ஒரு முக்கிய விசயமாக இருந்தாலும். அதைவிட மிக முக்கியமான நடைமுறை வாழ்க்கை கல்வி. இதற்கு இஸ்லாமிய வாழ்க்கை முறையே சரியான நடைமுறையான வாழ்க்கை என்பதை மிக எளிமையாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்.

சகோதரர் அலாவுதீன் சொல்வது போல் உண்மையை போட்டு உடைத்திருக்கிறீர்கள் காக்கா. படிப்பில் கவனம் இருக்கும் கல்வி பட்டம் படித்த சிலரிடம் சுத்தம் சுகாதாரம் குறைவு என்பது நடைமுறை உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வங்கி மற்றும் பத்திரபதிவு அலுவலகங்கள் பற்றிய விசயம் நகைச்சுவையாக இருந்தாலும் வேதனையும் கூட. உதாரணத்துக்கு லஞ்சம் தலைவிரிதாடுகிறது நம்மூர் அரசு சார்புடைய அலுவலகங்களில். குறிப்பாக பத்திரை பதிவு அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலங்களில் அதிகம் லஞ்சம் புரலுகிறது. வேதனை என்னவென்றால் நம்மாளுகளே இவர்களுக்கு தன் காரியங்கள் நடைப்பெறுவதற்காக ஊக்குவிக்கிறார்கள் என்பது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிகாலை எழுந்து கருத்தை எழுதலாம்னு இப்போதைக்கு ஜூட்(டு)ன்னு சொல்லிடலாம்னுதான் நினைத்தேன்... ! இருந்தாலும் நீங்கள் சென்ற அலுவலகங்கள் சந்தித்த ஆப்ப்ப்பீஸ்ஸ்ஸ்ஸருங்களை அதிகம் நேரிட எனக்கு சந்தர்ப்பம் மிகக் குறைவே இன்னும் சொல்லப் போனால் சிலரை இன்னும் சந்திக்க நேர்ந்ததே இல்லை... இருந்தாலும் சந்தித்த உணர்வை கொண்டு வந்த உங்களின் நொருக்கல் அருமை !

வித்தியாசமான, அதுவும் ஏதோ ஒரு முடிவோடு எழுதிருப்பீங்க போலிருக்கு ! அவனுங்களை இப்பூடீயா உத்துப்பார்த்தீங்க... ஒரு முறை எனது தம்பிகூட V Oவை(வெட்டி ஆப்பீச்ச்சர்) சென்று ஒரு கையெழுத்து வாங்கனும் என்று சென்றிருந்தேன் அந்த வெட்டி ஆப்பீச்ச்சர் பார்த்ததும் பொது இடங்களில் நுழைவாயிலின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் கைகால் விளங்காதவன் போல் கேவலப் படுத்தும் அளவுக்கும் கீழ்த்தரமாக மாடிப்படிகளில் உட்கார்ந்து கையெழுத்து போட்டுக் கொண்டே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்...

சரி அடுத்த சிந்தனை எதைப் பற்றியாக இருக்கும் ?

எனக்கும் என்னம்மோ சொல்லலாம்னு தோனுது சரி சரி அதுக்கு ஒரு பதிவு வராமலா போயிடும் !

sabeer.abushahruk said...

இந்த மாதிரி நல்ல அரசு துறைகளிலும் வங்கிகளிலும் வேலைக்கு வருபவர்கள் கோட்டாவிலே வந்த் ஆட்களாக இருக்கும். இவர்களூக்கு கோட்டாவில் இடம் கொடுக்கும்போதே வாழ்க்கையின் தாத்பரியத்தையும் சொல்லித் தரலாம்.

இன்னொரு காமெடி என்னென்னா, இவுக வாங்கிய லஞ்சத்தையெல்லாம் வெளிப்ப்டையா அனுபவிக்க முடியாது. பிடிபட்டுடுவாக.

அதனாலதான், குழி விழுந்த கித்தாச் செருப்பும், மஞ்சள்பூத்த வெள்ளை பனியனும், நூல் கட்டிய மூக்குக் கண்ணாடி ஃப்ரேமும், துருப்பிடித்த இரு சக்கர வாகனமும், நாலைந்து தையல் போட்ட கைப்பையுமாக உலா வருவார்கள்.

கலக்கலான கலகலப்பான அதே சமயம் அவசியம் சொல்லப்பட வேண்டிய ஆக்கம்.

வாழ்த்துக்கள் ஷாகுல்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இவய்ங்க என்னாடான்னா பத்து மணிக்குதான் ஆப்ப்பீச்சுக்கு வருவாய்ங்களாம் நமக்கு என்னான்னா பத்து மணிக்கெல்லாம் தூங்கிடனுமேன்னு இருக்கும் காலையில எழுந்திருக்கனுமே நாலு மணிக்கு :) இதெல்லாம் பழகிடுச்சுங்க.

பி.கு.: காலை / மாலை இடம் பொருள் அறிந்து போட்டுக்க் கொள்ளவும் ஏன்னா அதிகாரி இன்னும் வரலை !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அஹா! ரொம்ப ஹாஸ்யம் ஆனாலும் ஹாட் விசயம். சிலருக்குத்தான் பேசுவதையும் எழுத்தில் கொண்டுவரமுடியும்.( நமக்குத்தான் அது எட்டாகனியாக இருக்கு) ஆனால் சபிர்காக்கா, நீங்கள்,ஜாஹிர்காக்கா போன்றவர்கள் அதை கொண்டுவருவது சுலபமாக அமைந்திருக்கிறது.(இங்கே,சகோ,சாகுல்,சபீர்காக்காஆகியோரைப்பற்றி கேள்விபட்டதால் எழுதிவிட்டேன். அதே நண்பர் குழாம் என்பதால் ஜாஹிர் காக்காவும் நகைச்சுவை மன்னன் (பேச்சிலும்) என்பதாக நம்புவதால் குறிப்பிடுகிறேன்).ஆனந்தவிகடனில் கட்டுரை படித்ததுபோல் உள்ளது. தகவலும் அதனுடன் நகைச்சுவை நையாண்டி,கையாண்ட விதம் ஏ கிளாஸ் அப்ளாஸ் வாங்கிட்டே இருப்பிய. நல்ல ஒரு திரை கதை போல் கோர்வையாய் இருக்கு. சொன்ன விதம் விமானம் எழு(ம்பி)தியதைவிட மேலே..மேலே

Unknown said...

கலக்கல் ஷாகுல் காக்கா......தாமதமானாலும் அமர்களமாய்
ரெண்டு சரவெடி ......

ZAKIR HUSSAIN said...

நகைச்சுவையாக பேசுபவர்கள் நிச்சயம் எழுதிலும் நகைச்சுவை இருக்கும்
[ அவனுக்கு படிக்க தெரியலேனா?? பள்ளிக்கூடம் போவலேனா??என யாரும் கேட்டு என்னை வறுத்தெடுக்க வேண்டாம்]

நகைச்சுவையாக பேசவும் எழுதவும் ஒரே CPU தான்.

Yasir said...

அமைதியான ,அலப்பறை இல்லாத,சிறந்த அறிவுரை தரக்கூடிய,நகைச்சுவை உணர்வுள்ள ஆக்கம்...எழுத்தில் முதிர்ச்சி தெரிகிறது காக்கா வாழ்த்துக்கள்.....அப்துல் கலாம் (அறிவியல்) ரேன்சுக்கு எழுதிய நீங்கள்..இப்பொழுது சாலமன் பாப்பையா (நகைச்சுவை ) ரேன்சுக்கும் எழுதி இருக்கீறிர்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதான் நம்மவர் ஒருவர் மாற்று மதத்தவர் திருமணத்திற்கு சென்று விட்டு வரும்போது அங்கே ஒரு நண்பர் கேட்டார் எங்கங்க கல்யாணத்திற்கு வந்தீங்க ஆன மொய் ஒன்னும் எழுதாம போறீங்களேன்னு !

அதுக்கு நம்மவரின் பதில் "எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதே !"

அப்படியில இருக்கெ ஜாஹிர் காக்கா பொறி !

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
இங்கு வந்து கருத்து சொன்ன அணைத்து நல் உள்ளங்களுக்கும் என் துவா,
என் கருத்து என்னவென்றால்
இதே தலைப்பை சகோ ஜாகிர் சபீர் அல்லது இங்கு கட்டுரை கவிதைகள் எழுதும் நம் சகோதரர்கள் வேறுயாராவது எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும் என்பது என் கருத்து,

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
நகைச்சுவையாக பேசுபவர்கள் நிச்சயம் எழுதிலும் நகைச்சுவை இருக்கும்
[ அவனுக்கு படிக்க தெரியலேனா?? பள்ளிக்கூடம் போவலேனா??என யாரும் கேட்டு என்னை வறுத்தெடுக்க வேண்டாம்]

நகைச்சுவையாக பேசவும் எழுதவும் ஒரே CPU தான்.
---------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்..ஜாஹிர்காக்கா நான் என்ன பத்தி சொல்லவந்தேன்.வாய்கிழிய பேசுற எனக்கு லாவகமா,சொளகரியமா எழுதவராது. நீங்கள் உங்களைபோல் மேதைகளின் தனித்தன்மையை என்னுடன் ஒப்பிடாதீர்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//வாய்கிழிய பேசுற எனக்கு லாவகமா,சொளகரியமா எழுதவராது. நீங்கள் உங்களைபோல் மேதைகளின் தனித்தன்மையை என்னுடன் ஒப்பிடாதீர்கள்.//

கிரவ்ன்(னு):

சொல்லித் தெரிவதில்லை ய(டா)ப்பா !!

இதைப் போய் நீ சொல்வது எப்படித் தெரியுமா இருக்கு ! சிலேட்டுப் பலகைக்கும் கள்ளுக் குச்சிக்கும் இடைவெளி எவ்வ்ளோன்னு கேட்கிறமாதிரியில இருக்கு... எழுதுவதில் கிறுக்கல் வேறு கிறக்கம் வேறு உன் எழுத்திலும் நிறைய இருக்கு(டா)ப்பா ஒரு கிறக்கம் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நகைச்சுவையாக பேசவும் எழுதவும் ஒரே CPU தான்.//

ஜாஹிர் காக்கா நிறைய திறமையுள்ளவர்களிடம் தான் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது. அந்த நகைச்சுவை உணர்வை நிறைய பேர் வெளிக்காட்டுவதில்லை (சிலரை தவிர).

ஆனால் ஷாஹூல் காக்கா நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்கள் என்று சொல்லியிருந்தீர்கள் பல முறை நம் உரையாடல்களில். அதிரைநிருபரில் கட்டுரை எழுத ஆரம்பித்தவுடன் தான் தெரிகிறது ஷாகுல் காக்காவின் மற்ற திறமைகள். இக்கட்டுரையை போன்று இன்னும் பல நல்ல கருத்துக்கள் ஷாஹூல் காக்காவிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்.

சில நேரங்களில் ஷாஹூல் காக்காவின் பின்னூட்டங்களில் உள்ள நகைச்சுவையை மீண்டும் மீண்டும் படித்துப்பார்த்து ரசித்ததும் உண்டு, உடன் இருக்கும் உறவுகளுடன் அதை சொல்லி சிரித்ததும் அதிகம் உண்டு.

ஷாஹூல் காக்கா: இது ஊக்கம். என் தனிப்பட்ட விருப்பம். தொடருங்கள். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் போதுமானவன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு