Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேர்தல் விவாதக் களம் - 1 54

அதிரைநிருபர் | March 22, 2011 | ,


அன்பிற்கினிய வாசக நேசங்களே :

நாளுக்கு நாட்கள் சூடுபிடித்திருக்கும் தேர்தல் களம், ஆதலால் நாமும் சும்மாயிருந்தால் எப்படி !? வரிகளால் வருடும் வாசக நேசங்களுக்கு வாதிடவும் வாய்ப்புகள் கிடைத்தால் விட்டு வைப்பீர்களா என்ன ஆதாலால். இதோ உங்களின் பங்கிற்கு வாருங்கள் விவாதிக்கலாம்.

மிக முக்கியமாக விவாதிப்பவர்களோடு தனிமனித தாக்குதல் இன்றி நளினமாக கருத்துக்களை எடுத்து வையுங்கள் மறுப்புகளிருப்பினும் வாதிடுங்கள். - வாசகர்கள் மத்தியில் தனிமனித அல்லது தரக்குறைவான வாதங்களோ அல்லது சாடலோ இருந்தால் அந்தக் கருத்துக்களை நெறியாளர் உடணடியாக நீக்கம் செய்திடுவாங்க !

- அதிரைநிருபர்-குழு
___________________________________________


தேர்தல் விவாதக் களம் - 1

ம.ம.க வின்... பலம் / பலவீனம்... ?

முஸ்லீம் லீக்கின்... பலம் / பலவீனம்... ?

S D P I-யின்... பலம் / பலவீனம்... ?
 
நம் சமுதாய கட்சிகளின் தரத்தை அறிய இங்கு உங்கள் கருத்துக்களை பதியலாமே..

54 Responses So Far:

Yasir said...

யாரவது ஸ்டார்ட் பண்ணுங்களேன்....கவிக்காக்காதான் வாகன எக்ஸ்பர்ட்...பிச்சிகிச்சு படித்த மேதை - கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணி விடுங்களேன்

sabeer.abushahruk said...

மமகவின்
பலம்: ஜவாஹிருல்லா அவர்களின் அரசியல் ஞானம்! பலவீனம்: மமகவின் தாய் கழகமான தமுமுகவின் தொண்டர்களின் அவசரபுத்தியும் முதிர்ச்சியற்ற அனுகுமுறையும். கோவக்கார பயபுள்ளைகளாகவுல்ல இருக்காக!

முஸ்லிம் லீக்:
பலம்: பெரும்பாலான முஸ்லிம்களின் 'டிஃபால்ட்' கட்ச்சியாக மனதில் இருப்பது!
பலவீனம்:நிமிர்ந்த நெஞ்சும் நேரான பார்வையும் இல்லாமல் சொங்கி சோப்ளாங்கியாப்போன பெருசுகளால் நிர்வகிக்கப்படுவது!

இதுக்குமேலே எனக்கு அரசியல் தெரியாது! இதுக்கே முஜீப் செவிட்டில அறையலாம் யார் கண்டா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ம.ம.க வின்... பலம் / பலவீனம்... ?

பலம் : நல்ல வழிநடத்தும் தலைமை... பலதரப்பட்ட தொண்டர்கள்
பலவீனம் : பிரிந்தவர்களை மீட்டெடுக்காத மெத்தனம், மற்ற இஸ்லாமிய கட்சிகளை கூட்டுக்கு அழைக்காமை.

முஸ்லீம் லீக்கின்... பலம் / பலவீனம்... ?

பலம் : பாரம்பரியமிக்க கட்சி, தோழமைக் கட்சியுன் முழு ஆதரவு
பலவீனம் : தலைமை, தொண்டர்கள் பற்றாக் குறை, இன்னும் சங்கம் போல் செயல்படுவது.

S D P I-யின்... பலம் / பலவீனம்... ?

பலம் : இளைஞர்கள்
பலவீனம் : தன்னிச்சை

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ம ம க வின் பலம் முன் பிரிந்து சென்றவர்களை விட பன் மடங்கு அதிகம்...பலவீனம் அவசரப்பட்டு அ தி மு க வுடன் கூட்டணி வைத்தது அதுவும் வெறும் மூன்றை பெற்றுக்கொண்டு.
முஸ்லிம் லீக்கின் பலம் பல்லாண்டு பழைமை வாய்ந்த கட்சி என்று சொல்லிக்கொள்வது...பலவீனம் ரெண்டோ மூணோ பெற்றுக்கொண்டு தி மு க வுடனேயே பெரும்பாலும் இணைந்து அதே சின்னத்திலேயே இருப்பதும் ஏதொ ஒரு 4 உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்தால் போதும் என்ற குறுகிய எண்ணமும்
S D P I இன் பலம் சுதந்திரமும் பரந்த எண்ணமும்...பலவீனம் நம் சமுதாயத்துக்குள்ளேயே ஒரு சில இடங்களில் களம் இறங்குவது.

Abu Easa said...

//பலவீனம்: மமகவின் தாய் கழகமான தமுமுகவின் தொண்டர்களின் அவசரபுத்தியும் முதிர்ச்சியற்ற அனுகுமுறையும். கோவக்கார பயபுள்ளைகளாகவுல்ல இருக்காக!//

சபீர் காக்கா, நீங்க எதோ ஒரு சம்பவத்த மனசுல வச்சு சொல்லுற மாதிரி தெறியிது. பொதுவாவே தொண்டர்கிட்ட பக்குவம் குறைவாத்தான் இரிக்கிம். ஆனா செல சந்தர்ப்பத்துல கோவப்படாம இரிக்க முடியல காக்கா! தேர்தல் நிதி வசூலுக்குப் போயி 10 நிமிசம் நிலமய எடுத்து சொல்லி நிதி உதவி செய்யுங்கண்டு கேட்டோம்! அதுக்கு அங்கேந்து வந்த பதிலு "எலக்சன்ல நிக்கிறதுக்கு ஒன்னும் செலவு ஆகாதே!?!?!?" இப்புடி இருக்கிறப்ப எப்படி காக்கா கோவப்படாம இரிக்கிறது?

Abu Easa said...

//பலவீனம் : பிரிந்தவர்களை மீட்டெடுக்காத மெத்தனம், மற்ற இஸ்லாமிய கட்சிகளை கூட்டுக்கு அழைக்காமை.//

அபுஇபுறாகிம் காக்கா, ஒற்றுமைக்கான ஏற்பாடுகள் நடந்துகொன்டிப்பதாகக் கேள்வி. அதே சமயம் ஒற்றுமைக்குப் பின்னாலேயே நின்றுகொன்டிருந்தால் தேர்தல் முடிந்து போய்விடும், ஆனால் ஒற்றுமைக்கான முயற்சி மட்டும் முடியாது! நம்ம ஆளுக அவ்லோவு வெவரம்!

"இயக்கதுல இருக்கிற ஆளுகல ஒன்னா சேக்குறது ஒரு பிரச்சன. அதவல்லாம இயக்கத்துல இல்லாத ஆளுவொல நம்மொ ஒரு வழியா சரிக்கட்டிக்கிட்டுப் போனா பின்னாடியே நம்ம அண்ணம்மாரு கொலப்பிக்கிட்டே போராகண்டு நேத்து நாலு பேரு ரோட்டுல நின்டு பேசிக்கிட்டு இருந்தாக"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அபுஈஸா : சரியான வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அதோடு இன்றைய சூழலில் அண்ணன்(கள்) அமைதியாக இருந்தாலே பலமாக மாறிடவும் வாய்ப்புகள் அதிகமே !

ZAKIR HUSSAIN said...

இந்த டாக்டர் ராமதாசு [ அதான்யா...மரம் வெட்டுறதுக்கு ஸ்பெலிஸ்ட் படிச்சாப்லெயே...] அந்தாளு மக்கள் டி வி யிலே நிருபரிடம் பேட்டி கொடுக்கும்போது பார்க்க நேரிட்டது. " கலைஞரை 6 வது முறையாக முதல்வர் ஆக்க எங்கள் கட்சி முழுமூச்சாக செயல் படும்....!!!]

கொஞ்சம் நேரம் சென்று ஒரு 2 மாதத்துக்கு முன் உள்ள ஆனந்த விகடன் பார்த்தேன்..அட்டைப்படத்தில் இருந்த வாசகம் டாக்டர் ராமதாசு படத்துடன்..' நம்ப வைத்து கழுத்தறுப்பதில் கலைஞர் கெட்டிக்காரர்'

டபுல் ஆக்ஸன் ஹீரோக்களுக்கு தமிழகத்தில் பஞ்சமே இல்லை. [ சின்னதா ஒரு பரு மட்டும்[ராமதசுக்குத்தான்] கண்ணுக்கு கீழே வச்சிட்டா மொத்த மக்கள்தொகையும் 'உச்சு" கொட்டி பார்க்கும்] இதிலெ வேறே 'சூப்பர்..சூப்பர்' என்ற கமென்ட்வேறு

அதிரை முஜீப் said...

முஸ்லிம்களின் முதுகில் குத்திய பா.ம.க விற்கு கடும் கண்டனம்!.

விரிவான செய்தியை பார்க்க:

http://adiraimujeeb.blogspot.com/2011/03/blog-post_21.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதே ரமதாஸு அன்புச் சகோதரிக்கு பத்திரிக்கை வைக்க நேரம் கேட்டிருக்கிறார் (அங்கே கூடுதல் கிடைத்தால் சாய்ந்திட) ஆனால் செல்வி ஓய்வில் இருந்ததால் கோபாலபுரம் சென்று பத்திரிக்கை வைத்து மொய் வாங்கிக் கொண்டு வந்தும் விட்டார்....

இவரு சீஸனுக்கு இனிக்கிற பழத்தை வைத்துக் கொண்டு எப்போவுமே மாங்காய் மடையர்களாக்குவது வாடிக்கையே...

இவர் வெட்டிப்போட்ட மரங்களை வளர்க்கவே இவர் கட்சிக்காரனுவோ இருபது தடவை பிறந்து வரனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோ முஜீப் : உங்கள் சார்பாக - பலம் பலவீனம் காதிருக்கிறதே !

Abu Easa said...

//பலவீனம் : அவசரப்பட்டு அ தி மு க வுடன் கூட்டணி வைத்தது அதுவும் வெறும் மூன்றை பெற்றுக்கொண்டு.//

சகோ. M.H ஜஹபர் சாதிக், அ தி மு க கூட்டனி ஒன்னும் சுயவரத்துல போய் பொண்ணைத் தேர்ந்தெடுத்த மாதிரி தேர்ந்தெடுத்தது கிடையாது. கூட்டனி இல்லாமல் தேர்தல் கலம் காண பெரிய கட்சிகளே பேடிக்கும்போது நாம எம்மாத்திறம்! தமிழகத்தைப் பொறுத்தவரை 2 பெரும் கட்சிகள். ஒன்று தி மு க மற்றொன்று அ தி மு க.

முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரம் பெறுவதை ஒருபோதும் தி மு க விரும்பியதில்லை. அதிகப்பட்சமாக அவர்கள் முஸ்லிம்களுக்கு சீட்டு மட்டும்தான் கொடுப்பார்கள், அதுவும் அவர்களுடைய சின்னத்தில்!?.

அ தி மு க-விலிருந்து வந்த அழைப்பை ஏற்று பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தி, தனிச் சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொன்டதின் பேரில் கூட்டனி உடன்பாடு ஏற்பட்டது.

பல பேர் கேட்கிற கேள்வி, ஏன் மூன்று தொதிகளை மட்டும் பெற்றீர்கள்? (என்னமோ கூடவா தந்தத வானான்ட மாதிரி. மூனு தொகுதிகளுக்கு செலவு செய்வதற்கே நாக்குத் தல்லுது. இதுல கூடவா சீட்டு கெடச்சிருந்தா? வெலங்கிடும்!) பொலப்பத்த விட்டுட்டு செய்திக்கி வர்றேன். இந்த விசயத்தை நாம் எவ்வாறு அனுக வேண்டுமென்றால் 20 ஆண்டுகளாக இதுவரை முஸ்லிம்களுக்கென்று எந்த ஓர் கட்சியும் தனித்துக் கலம் கானாமல் இருந்ததற்கு இவர்களுக்காவது 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வாய்ப்புக் கிடைத்ததே என்று திருப்தி அடைந்துகொள்ள வேண்டும்.

இப்படி 3+1 என 4 தொகுதி மாத்திரம் நமக்குக் கிடைத்ததற்கு நான் கண்ட சில காரனங்கள்

1) இதுவரை இந்த சமுதாயம் தனித்து நின்று தன் பலத்தை நிரூபிக்கவில்லை.

2) நம்ம சகோதரர்கள் பொதுவான பிரச்சனையை முன் வைத்து கூட்டத்தைக் கூட்டி எங்களுக்குப் பின்னால் பெரிய கூட்டம் இருக்கிறது என்று காட்டிவிட்டு, பின் பொதுக் குழுவையும் கூட்டி எங்கே நின்றாலும் தோற்கடிப்போம் என்று தீர்மானமும் நிரைவேற்றினால் எப்படி அதிகமான சீட்டை நம்பிக் கொடுப்பார்கள்? போன தேர்தலில் வை கோ-வுக்கு 35 கொடுத்து 6 எடுத்தமாதிரி போய்விடும் என்ற அச்சம் அ தி மு க தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம்!

இப்படி நம்மைச் சுற்றி பல பிரச்சனைகள் உண்டு. அதானால் நடந்து முடிந்ததில் குறை கான்பதைத் தவிர்த்து கிடைத்ததை நமதாக்கிக்கொள்ள வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக!

sabeer.abushahruk said...

எல்லாம் இந்த யாசிரால வந்தது. எனக்கு அரசியல் தெரியாதுன்னு அப்பவே சொன்னேன். இவருதான் ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சொல்லி மாட்டி விட்டது. இப்ப ஆபு ஈஸா, இனி அடுத்தது முஜீபுக்கு வேற பதில் சொல்லனும்.

ஸாரி அபு ஈஸா, நம்மூரில் நடந்த கோபம், கோர்ட், கேஸ், சின்னவயதுப் பசங்களின் வாழ்க்கையில் காவல் நிலையம் கையெழுத்து...இன்னும் மறக்க முடியல. 

அதுசரி, நீங்கள் உதாரணம் காட்டும் விஷயத்தில் கோபப்பட்டுத்தான் தீரனுமா? I doubt.

அழகிய பொறுமையை கையாண்டிருக்கலாமோ?

பார்த்து அபு ஈஸா, கூட்டணி தலைவி ரொம்ப கோபம் வர வழைக்கிற பார்ட்டி. அப்படியே ஒரு சின்ன உதவி பண்ணுங்க. தமுமுக என்ற பெயரிலேயே தேர்தலில் நிற்காமல் மமக என்ற அரசியல் பிரிவு அத்தனை அவசியமானதா? Can you justify please?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமுமுக - தாய் கழகம், அங்கே அண்ணன் தம்பிகள் எல்லோரும் வருவார்கள் போவார்கள் ஆனால் மமக ஆட்சியும் அதிகாரமும் செய்திட - இதுதான் நான் விளங்கிக் கொண்டது.

இருப்பினும், இப்படியான பகுத்து இருப்பது நல்லதே, பிற்கால அரசியல் சூழ்ச்சிகளில் வீழ்ந்திடாமல் இருந்திட.

முக்கியமாக ஒன்றை அவதானிக்க வேண்டும், பலம் பொருந்திய மாணவர்கள் இயக்கம் இந்தியா முழுவதும் இருந்தது அதனை அப்படியே முடக்கிவிட்டனர் பல்வேறு சாயம் பூசி ! அதனையும் மறந்திடக் கூடாது !

அப்துல்மாலிக் said...

நம்மக்கள் நிறைய அலசிட்டாங்க (எப்பூடி எஸ்கேப்பூ...), மேலும் நம்ம தொகுதிலே ஏதாவது முஸ்லிம் வேட்பாளர் நின்னா அதுக்காக நிறைய மெனெக்கெடலாம், தமிழ்நாட்டுலே குத்துமதிப்பா அதிக மக்கள் தொகைக்கொண்ட நம் தொகுதியை முஸ்லிமல்லாதவர் ஆளனும்னு விதி இருந்தா நாம என்னா செய்யமுடியும்.

அதிரையை சார்ந்த நாம், இக்குழும வாயிலாக நம் தொகுதியின் நிலவரம் பற்றி அலசலாம் என்பது என் எண்ணம், நீங்க என்னா நெனெக்கிரீக

அப்துல்மாலிக் said...

இந்த தடவையும் காங்கிரஸ்தான் போட்டியிடுது, பாக்கபோனா நம்ம தொகுதிலே கடுமையான போட்டியில்லேனுதான் நினைக்கிறேன் எதிர்த்து போட்டியிடுவது தேமுதிக என்பதால்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரையை சார்ந்த நாம், இக்குழும வாயிலாக நம் தொகுதியின் நிலவரம் பற்றி அலசலாம் என்பது என் எண்ணம், நீங்க என்னா நெனெக்கிரீக //

ஏன் கூடாது அதனையும் செய்யலாமே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த தடவையும் காங்கிரஸ்தான் போட்டியிடுது, பாக்கபோனா நம்ம தொகுதிலே கடுமையான போட்டியில்லேனுதான் நினைக்கிறேன் எதிர்த்து போட்டியிடுவது தேமுதிக என்பதால்... //

காங்கிரஸ் எனும் பட்சத்தில் மிக நீண்டகாலமாக அந்தக் கட்சியிலேயே இருந்து வரும் MMS குடும்பத்திலிருந்து யாராவது போட்டியிட அன்னையிடம் கேட்கலாமே..., மர்ஹூம் MMS அப்துல் வஹாப் அவர்கள் இருந்திருந்தால் நடந்தேரியிருந்திருக்குமோ !?

sabeer.abushahruk said...

(remember, i support ma ma ka regardless to my comments) 
அட போங்கப்பா!
அரசியல் இல்லாத சமூகமா? இத்துனூன்டு கட்சிக்கு இரண்டு பிரிவுகள் ஏன்? எது தமுமுக சேவை எது மமக சேவை! இன்னும் எப்படியெல்லாம் பிரிப்பீர்கள்? சட்டசபைக்குள் மமக (இன்ஷா அல்லாஹ்) வெளியே தமுமுக. 

MLA ஹாஸ்டலில் டீ குடிக்கும் மமக தல, வெளியே வந்து மீல்ஸ் சாப்பிட்டா தமுமுக! 

பெரிய பெரிய கட்சிகள்லாம் தனித்தனி சேவைகளுக்கு குழுக்களோ பிரிவோதான் அமைக்கும்; தனிக்கட்சி காணும்?

ஒரு ஏழை முஸ்லிம் படிக்க வசதியில்லை; தமுமுக? மமக? ஏழைக்குமரு கரைசேரனும்; தமுமுக? மமக? 
எதுக்கும் ஒரு அகராதி போட்டு கொடுத்திடுங்க அப்பு !

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//அதுசரி, நீங்கள் உதாரணம் காட்டும் விஷயத்தில் கோபப்பட்டுத்தான் தீரனுமா? I doubt. அழகிய பொறுமையை கையாண்டிருக்கலாமோ?//

சபீர் காக்கா.. நீங்க கேக்குற கேள்வி சரி தான், ஆனால் எல்லாத்தயும் வெளக்கிச் சொல்லியும் வீம்புக்கு கேள்வி கேட்டா? இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் புறுமையைக் கடைபிடித்தோம்! அல்ஹம்துலில்லாஹ்.

//பார்த்து அபு ஈஸா, கூட்டணி தலைவி ரொம்ப கோபம் வர வழைக்கிற பார்ட்டி. அப்படியே ஒரு சின்ன உதவி பண்ணுங்க. தமுமுக என்ற பெயரிலேயே தேர்தலில் நிற்காமல் மமக என்ற அரசியல் பிரிவு அத்தனை அவசியமானதா? Can you justify please?//

கூட்டனித் தலைவி கோவப்பட்டா கூட்டனிய விட்டு வெளிய வந்துடலாம், நமக்கு ஒரு பாதிப்பும் வராது. நாம தனி சின்னத்துலயுல நிக்கிறோம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் முஸ்லிம் என்று வருவதால் அந்தப் பெயரை வைத்துக்கொன்டு தேர்தலில் போட்டியிட முடியாது. ஜாதி மத பெயர்களைக்கொன்ட எந்தக் அமைப்பிற்கும் அரசியல் கட்சி என்ற அங்கீகாரம் கிடையாது என்று நம் நாட்டில் சட்டம் உள்ளது.

அப்பொ எப்புடி முஸ்லிம் லீக் மட்டும் தேர்தல்ல போட்டி போடுது? (கேள்வி கேட்க தோணுமே)அவர்கள் இந்த சட்டம் வருவதற்கு முன்னாலேயே அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றுவிட்டார்கள்!.

நான் அறிந்த மட்டில் முஸ்லிம் லீக் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் சாதி அல்லது மதத்தின் பெயரை சுமந்திருக்கவில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரு ஏழை முஸ்லிம் படிக்க வசதியில்லை; தமுமுக? மமக? ஏழைக்குமரு கரைசேரனும்; தமுமுக? மமக?
எதுக்கும் ஒரு அகராதி போட்டு கொடுத்திடுங்க அப்பு !//

அதிகாரம் கையில் வந்ததும் ம.ம.க.செய்யும்... அதிகாரம் இல்லாவிடின் த.மு.மு.க. செய்திடும்... ரொம்ப சிம்பிள் காக்கா !

அதிருக்கட்டும், S D P I இந்தியா முழுவதும் பரந்திருக்கிறது என்று பரவலாக சொல்லப்படுகிறது.. அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் சொல்லுங்களேன் விளங்கிக் கொள்ளலாம்!

Mohamed Rafeeq said...

ம ம கவின்
பலம் :--
>>>தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை இவர்களால் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலான முஸ்லிம்களிடம் வளர்த்தது
>>> அனுபவம் வயிந்த தலைவர்கள் ,
>>>பொதுமக்களின் சட்ட சிக்கலுக்கு உதவி செய்வது ,
>>> ஆம்புலன்ஸ் ,
>>>சற்று என்று நியாபகத்துக்கு வராத சில சமுதாய நற்செயல்கள்

பலவீனம் :--
>>> என்னை போன்ற நடுநிலையான இளைங்கர்கள் வெளியிலிருந்து அதரவு தெரிவிப்பது (எதோ ஒரு காரனத்தால் அவர்கள் கட்சியில் இணையாமல்)
>>>த த ஜாவின் தேவியற்ற குற்றச்சாட்டுக்கு மெனக்கட்டு பதில் அழிப்பது
>>> காலம் காலமாக கருணாநிதிக்கு வாக்களிப்பதை தங்கள் கடமையாக நினைத்திருக்கும் இஸ்லாமியர்களை மாற்றுபாதையில் அழைத்து இஸ்லாமியர்களின் ஒட்டு சக்தியை ஆட்சியாளர்களுக்கு தெரிவிப்பதற்காக சரியான வியுகம் செயல்படுத்தாது

முஸ்லிம் லிக்
பலம் :--
>>> காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப்

பலவீனம் :--
>>> பேர காதர் முகைதின்

SDPI
பலம் :--
>>> இளைங்கர்கள்

பலவீனம் :--
>>> தேசிய கட்சி ( மாநிலத்துக்கு தேவையான அரசியல் முடிவை எடுக்க இயலாமை )

அதிரை நிருபர் ( இது ஒரு கட்சியும் அல்ல, தனிப்பட்ட இயக்கமும் அல்ல )
பலம் :--
>>> அதிரை நிருபர் ஆசிரியர்கள்
>>> நாகரிகம் அடைந்த வாசகர்கள்
>>> குறைகளை நிறைகளாக மாற்றி கொள்வது

பலவீனம் :--
Never and Ever

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மேல் குறிப்பிட்ட கட்சிகளின் பலம் பலவீனம் பற்றிய விவாதம் சூடுப்பிடுத்துள்ளது. பொதுவாக சகோதரர்கள் பலர் தங்களின் கருத்தை தெரிவித்திருந்தாலும் இங்கு என் தனிப்பட்ட கருத்தை பதிகிறேன்.

மமக

பலம்: தமுமுக மற்றும் தொண்டர்களின் கட்டுப்பாடு, களத்தின் நின்று போராடுவது.

பலவீனம்: இளம் தொண்டர் பட்டாலத்தை தக்கவைத்துக்கொள்ள தவறியது.

முஸ்லீம் லீக்:

பலம்: திமுக கூட்டாளி, தேசிய கட்சி.

பலவீனம்: மக்கள் பிரச்சினைகளில் முன்னின்று போராடாத நிலைப்பாடு. சமுதாயத்தை சீட்டுக்காக அடகு வைக்கும் நிலையை தொடர்வது.

SDP:

பலம்: இளையஞர் பட்டாலம்.

பலவீனம்: இது முஸ்லீம் கட்சியா இல்லையா என்பதில் இரட்டை நிலைப்பாடு.

இங்கு அநேக விவாதம் மமக & தமுமுக பற்றியே உள்ளதால். இவர்களின் அரசியல் பிரவேசம் அங்கீகரிப்பட்டுமா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.

அதிரைநிருபர் said...

//Mohamed Rafeeq சொன்னது…

அதிரை நிருபர் ( இது ஒரு கட்சியும் அல்ல, தனிப்பட்ட இயக்கமும் அல்ல )
பலம் :--
>>> அதிரை நிருபர் ஆசிரியர்கள்
>>> நாகரிகம் அடைந்த வாசகர்கள்
>>> குறைகளை நிறைகளாக மாற்றி கொள்வது

பலவீனம் :--
Never and Ever ///


அன்பு சகோதரர் முகம்மது ரஃபீக் இங்கு அதிரைநிருபரின் பலம் பலவீனம் பற்றி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. இது எதிர்ப்பாகாது தான் என்றாலும், இது தொடர்பாக வேறு ஒரு பதிவில் அலசலாம் என்று எண்ணுகிறோம்.

அதிரைநிருபர் மேல் வைத்திருக்கும் நன்மதிப்பிற்கு உங்களுக்கும் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வைத்திருக்கும் நன்மதிப்பிற்கு மிக்க நன்றி...

தொடர்ந்து இணைதிருங்கள்.

N.A.Shahul Hameed said...

Dear Brothers,
I am a regular reader of Adirai Nirubar. I enjoyed reading the tit bits, poems, articles, and issues of current affairs and almost every comment of each articles.
Actually I wanted to be a passive audience to Adirai Nirubar rather than an active participant.
But when I see the discussion forum regarding the strength and weakness of major Muslim Parties I wish to record a few lines. This may kindly be treated as a single mans view out of his very long apathy over the role of common muslims in Tamil Nadu.
May I ask a question? What is the purpose of our political parties going to contest in the elections? We are shear minorities. We all know the BJP a leading national level party could not set its foot in Tamil Nadu. And how come our parties are going to win and raise our voice in the assembly?
We all have to think an alternative way to raise our voice and show our solidarity. But when we form one party with the noble principle of assisting the muslims, then immediately another group erupts.
As you are all living abroad and expressing your views, there is no one here to bring all our brothers together.
Please think differently in order to set our mark in the state and national level.
I am really vexed with this short sighted muslim politicians and I can assure their ultimate aim is to improve their own self at the cost of our community.
UNITY IS STRENGTH
Affectionately
N.A.Shahul Hameed

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாருங்கள் எங்கள் ஆசான் NAS சார்,

ரொமபா நாளாச்சு உங்களைப் பார்த்து. தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி. உங்க மாணவர்களும் நண்பர்களும் இங்கு அதிகம் உள்ளர்கள் போல் தெரிகிறது.நானும் உங்கள் மாணவன் தான். 1994 - 1997 Bsc Computer science Batch.

//As you are all living abroad and expressing your views, there is no one here to bring all our brothers together.//


நீங்கள் சொல்லும் கருத்து சரியே. இங்கு நம் ஆதங்கங்களை சொல்லிவருகிறோம். நம்ம அரசியல் தலைகள் அனைவரும் என்று இறையச்சமுடையவர்களாக மாறுகிரார்களோ என்று தான் நம் சமூக இயக்கங்களை ஒன்றினைக்க முடியும். அதற்காக துஆ செய்துக்கொண்டே முயற்சி செய்யலாம்.

சார் இவ்வளவு நாளா சைலன்டா இருந்திட்டியலே...

ZAKIR HUSSAIN said...

To Bro.N.A.S

Since you have mentioned to think differently in bringing unity in Muslim Community...can you please share what are the plans/ideas you have toward this...I hope definitely you have.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

N.A.Shahul Hameed சொன்னது…

Dear Brothers,
I am a regular reader of Adirai Nirubar. I enjoyed reading the tit bits, poems, articles, and issues of current affairs and almost every comment of each articles.

UNITY IS STRENGTH
Affectionately
N.A.Shahul Hameed //

Most welcome on behalf of our Adirainirubar-Team and valuable brothers as known readers...

தாங்களே சொல்லிட்டீங்க அதிரைநிருபர் அனைத்து பதிவுகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன் என்று ஆதலால் தமிழிலே என் கருத்தை பதிகிறேன்.

நீங்கள் எடுத்து வைத்த கருத்துக்களை எடுத்தாண்டு விவாதிக்க நிறைய இருக்கிறார்கள். ஆதலால் தொடர்ந்து நீங்களும் பதியுங்கள் உங்களைப் பற்றி நிறைய நானும் கேள்வி பட்டிருக்கேன்.

sabeer.abushahruk said...

சார், என் பெயர் சபீர். உங்ககிட்ட படிக்கிற பாக்கியம் (ஒரு ஸ்பெஷல் க்லாஸ் தவிர) கிடைக்கவில்லையென்றாலும் உங்களைப் படிக்குமளவுக்கு நெருக்கமானவந்தான். நல்லாயிருக்கிறீங்களா? (நெருக்கமானங்கள் கூடவெல்லாம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்று ஏதும் தீர்மாணமா?)

உங்களை எதிர்த்து பேச பயப்படவோ தயங்க்கவோ இது ஒன்னும் ஃபிஸிக்ஸ் அல்ல. அரசியல் (நானே அறைகுறைதான்). உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை (செருப்பாலடிப்பேன்டா கேவலப்பயலேன்னெல்லாம் பப்ளிக்ல திட்டக்கூடாது)

காரணம், நாம் வாழும் மதச்சார்பற்ற(?) நாட்டில் நம் உரிமைகளை எடுத்துரைக்க சட்டசபையில் நம்மவர் அவசியம் வேண்டும் வாத்தியாரே. இது நல்லவிதமாக நடந்தால் நாம் நாடும் ஒற்றுமையும் இன்ஷா அல்லா நமக்கும் வாய்க்கும். அதுவரை உடம்ப பார்த்துக்குங்க சார்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

வாங்க சார் எப்படி இருக்க்கிங்க (செருப்பாலடிப்பேன்டா கேவலப்பயலே)இந்த வார்த்தையை கேட்டு ரொம்ப நாளாச்சு.

இந்த வார்த்தையை கேட்க்காமல் ஊரில் ஒருநாள் கூட நகர்ந்த்ததில்லை

எங்கே ஒரு முறை உங்கள் திருவாய் மலருன்களேன் !!

அதிரைநிருபர் said...

தேர்தல் களம் – விவாதம் தொடர்பாக சமுதாய சிந்தனையாளர் ஒருவரின் உருக்கமான கடிதம். அதிரைநிருபருக்கு அறிமுகமான நபர் என்றாலும் தன் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரைநிருபர் குழு 3 இஸ்லாமிய இயக்கங்களின் பலம் பல்வீனம் பற்றி விவாத களம் அமைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

மமக தமுமுக தொடர்பாக இங்கு நிறைய அலசப்பட்டது. என் மனதில் உள்ள சில விசயங்களை இங்கு சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கடிதம்.

மமக 3 தொகுதிகள் மட்டுமே பெற்றதாக அலசப்பட்டு இருகின்றது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ம ம க நான்கு இடங்களில் தனித்து போட்டியிட்டது. இந்த சமுதாய மக்களை மட்டுமே நம்பியதன் விளைவு எத்தனை ஓட்டுக்களை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றார்கள் என்பது மிக வருதத்துடன் நாம் அறிந்ததே. திமுக ஆதரவு முஸ்லீம்கள், அதிமுக ஆதரவு முஸ்லீம்கள் என்ற நம்மவர்களின் மனநிலை மாறவே மாறாது எனபதை கடந்த நாடாளுமன்ற தேர்தல் மமகவுக்கு மட்டும் பாடம் கற்பிக்கவில்லை அனைத்து முஸ்லீம் கட்சிகளுக்கும் பாடம் கற்பித்தது.
மமகவின் தாய் கழகம் தமுமுகவுக்கு நல்ல கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது உண்மைதான் என்றாலும், தேர்தல் என்று வந்துவிட்டால், திமுக முஸ்லீம், அதிமுக முஸ்லீம், காங்கிரஸ் முஸ்லீம் என்ற நிலை இன்னும் தொற்றுவியாதி போல் நம்மவர்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பதால், நடைமுறை அரசியல் சூழலை ஆராய வேண்டிய கட்டயத்தில் தமுமுக போன்ற முஸ்லீம் இயக்கங்கள் தள்ளப்படுள்ளது என்பது முழுக்க முழுக்க மறுக்க முடியாத உண்மை. எனவே தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாடம் கற்ற மமக இந்த முறை கூட்டனி சேர்ந்து 3 தொகுதிகளைப் பெற்றுள்ளது தமிழகத்தில். முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ம ம க வேட்பாளர் சகோதரர்கள் வெற்றிபெற அனைவரும் துஆ செய்ய வேண்டுகிறேன்.

சட்டம் இயற்றக்கூடிய அந்த அவையிலே, நம் உறுப்பினர்களாக வீதிக்கு வந்து போராடி சமுதாயப்பணியில் ஈடுப்பட்டுவரும் மமக சகோதரர்கள் சென்றால் நிச்சயம் இந்த சமுதாயத்துக்காக பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை பொதுவாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்திடமும் மற்றும் நடுநிலையான எல்லோரிடமும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் செயல்பாடுகளைப் பொருத்து அடுத்துவரும் தேர்தல்களில் இன்ஷா அல்லாஹ் அனைத்து முஸ்லீம் மக்களின் ஆதரவோடு இன்னும் நிறைய தொகுதிகளில் நின்று வெற்றிகளம் காணலாம்.

பலவீனத்தை பற்றி அலசும்போது மமக சகோதரர்கள் அவசரப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சில சகோதரர்கள் முன்வைத்தார்கள். தமுமுக தலைமை அவசரப்பட்டு செயல்பட்டிருந்தால் 1995 முன்பு முஸ்லீம்களுக்கு இருந்த நிலைமை தான் இன்றும் நிலைத்திருக்கும். தமுமுக போன்ற இயக்கங்களின் வளர்ச்சி செயல்பாடுகள், அறப்போராட்டங்கள், சட்டவிழிப்புணர்வு, சட்டஉதவி களப்பணிகளின் காரணமாக இன்று சங்பரிவார் இயக்கங்களின் அட்டூளியங்கள் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மனசாட்சியுள்ள ஒவ்வொரு முஸ்லீமும் மறுக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிரைப் போன்ற ஊர்களில் உள்ளூர் முஸ்லீம் அரசியல் தலைவர்களின் இரட்டை நிலைப்பாட்டுத்தன்மை இல்லாமல் இருக்குமானல் அதிரையில் காவிகளின் அட்டூளியங்கள் என்றோ அறவழி போராட்டங்களால் தடுக்கப்பட்டிருக்கும். அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினை என்றோ தீர்த்துவைக்கப்படிருக்கும். தமுமுக தலைவர்கள் பல கோணங்களில் சிந்தித்துப்பார்த்து தான் போட்டியிடும் கூட்டனி, தொகுதிகள் போன்றவைகளில் நிதாதனமாக முடிவெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது.

திமுக ஆதரவு முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் நினைவூட்ட எண்ணுகிறேன். சமுதாய காவலர் சஹீத் பழனி பாபா அவர்கள் திமுகவில் 30 ஆண்டுகாலம் இணைத்துக்கொண்டு, அக்கட்சியை அடிமட்ட இஸ்லாமியர்களிடம் கொண்டு சென்றார்கள் என்பது திமுகவின் வரலாறு. பழனிபாபாவின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி உச்சத்தில் இருப்பதை பொருத்துக்கொள்ளாத திமுக தலைமை அவரை தூக்கி எறிந்தது என்பது கடந்தகால கசப்பான வரலாறும் கூட. திமுக அபிமானி முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் முஸ்லீகள் என்ற முத்திரையிலிருந்து வெளியே வாருங்கள். வெறும் முஸ்லீம் என்ற முத்திரையிலேயே தேர்தல்களை அனுகுங்கள்.
யார் சமுதாயத்துக்காக உண்மையில் நன்மைகள் செய்கிறார்கள் என்பதை நடுநிலையோடு சிந்தித்து விமர்சனம் செய்து உங்கள் அரசியல் விவாதக் களம் அமையட்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் அதிரைநிருபர்க்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு கடிதம் வாயிலாக சந்திப்போம் ! சிந்திப்போம் !

சமுதாய சிந்தனையாளன்.

jahabar said...

//விவாதம் தொடர்பாக சமுதாய சிந்தனையாளர் ஒருவரின் உருக்கமான கடிதம். முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் ம ம க வேட்பாளர் சகோதரர்கள் வெற்றிபெற அனைவரும் துஆ செய்ய வேண்டுகிறேன்//.குறுகிய எண்ணமில்லாமல் அனைத்து இஸ்லாமிய வேட்பாளர்களின் வெற்றிக்கும் துஆ செய்வோமே!இறைவா அனைத்து நம் வேட்பாளருக்கும் வெற்றியை கொடு..

crown said...

அதிரைநிருபர் குழு சொன்னது…
தேர்தல் களம் – விவாதம் தொடர்பாக சமுதாய சிந்தனையாளர் ஒருவரின் உருக்கமான கடிதம். அதிரைநிருபருக்கு அறிமுகமான நபர் என்றாலும் தன் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

அஸ்ஸலாமு அலைக்கும்.
............................................
---------------------------------------------------------------
முகம் காட்டாவிட்டாலும் அந்த முகம் நானறிந்த முகமாகவே இருக்கும் எனக்கு அறிமுகம் ஆன முகமாகவே இருக்கும். எல்லாரின் கருத்துக்குப்பின் ஒர் கருத்து ஆக்கமே அதிரைனிருபரில் இறுதியில் எழுதலாம் என்றிருந்தேன். மேற்கண்டவர் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டார் என்பதால் என் கருத்தை சுருக்கமாக இவரின் கருத்துடன் பொருத்தி வழிமொழிகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அறப்போராட்டங்கள், சட்டவிழிப்புணர்வு, சட்டஉதவி களப்பணிகளின் காரணமாக இன்று சங்பரிவார் இயக்கங்களின் அட்டூளியங்கள் தமிழகத்தில் மூலைமுடுக்குகளில் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மனசாட்சியுள்ள ஒவ்வொரு முஸ்லீமும் மறுக்க மாட்டார்கள்///

மறுக்கமுடியாத நிஜம் !

Yasir said...

நல்ல பயனுள்ள விவாதம்....”சமுதாய சிந்தனையாளன்” கருத்துடன் நானும் 90% உடன்படுகிறேன்

NAS சார் நல்ல இருக்கீங்களா ? ஜமாலில் படித்தாலும் உங்களைபற்றி நன்கு அறிந்தவன் ....எங்கள் தெருவாசிகள் அனைவருக்கும் நெருக்கமானவர்கள் நீங்கள்....நேரம் கிடைத்தால் ஒரு ஆக்கம் பதியுங்கள் சார் அதிரை நிருபரில்

அப்துல்மாலிக் said...

//இன்றைய காலகட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் முஸ்லீகள் என்ற முத்திரையிலிருந்து வெளியே வாருங்கள். வெறும் முஸ்லீம் என்ற முத்திரையிலேயே தேர்தல்களை அனுகுங்கள்//

தமிழ்நாட்டை இவங்க பக்கா பத்திரத்தோடு கூறு போட்டு எடுத்துட்டுக்கிட்டாங்க, இரு வேறு தாயகக்கட்சிகளின் தயவு இல்லாமல் யாரும் தனித்து முன்னேறுவதின் சாத்தியம் குறைவே, அதுவும் கூட்டம் போட்டு ஸ்பெஷலாக அவங்களை தோற்கடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கிட்டு களமிறங்க தயாராக இருப்பவர்கள் தானாக முன்வந்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டார்க்ளேயானால் தாங்கள் கூற்று சாத்தியப்படும், அதுதான் எல்லோருடைய ஆசையும், நடக்குமா? பல்லாயிரம் கேள்விக்குறி

அப்துல்மாலிக் said...

மதிப்பிற்குரிய NAS அவர்களின் பங்களிப்பு அதிரை நிருபருக்கு புது உத்வேகம், தங்களின் ஆலோசனை மிக முக்கியம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் முஹம்மத் ரஃபீக் குறிப்பிட்டது போல் ம.ம.க.வின் //பலவீனம் :--
>>> என்னை போன்ற நடுநிலையான இளைஞர்கள் வெளியிலிருந்து அதரவு தெரிவிப்பது (எதோ ஒரு காரனத்தால் அவர்கள் கட்சியில் இணையாமல்)//

இதே நிலைபாடுடைய சிந்தனையோட்டத்தோடு ஏராளமனவர்களின் காரணமும் ஆதங்கமும் இதுவே !

அப்துல்மாலிக் said...

//அபுஇபுறாஹீம் சொன்னது…

சகோதரர் முஹம்மத் ரஃபீக் குறிப்பிட்டது போல் ம.ம.க.வின் //பலவீனம் :--
>>> என்னை போன்ற நடுநிலையான இளைஞர்கள் வெளியிலிருந்து அதரவு தெரிவிப்பது (எதோ ஒரு காரனத்தால் அவர்கள் கட்சியில் இணையாமல்)//

இதே நிலைபாடுடைய சிந்தனையோட்டத்தோடு ஏராளமனவர்களின் காரணமும் ஆதங்கமும் இதுவே !//

அதேதான், தமுமுக உதயமானபோது அனைத்து தமிழக முஸ்லிம்களிளுக்கு ஒரு பாதுகாப்பான, அட்டூழியத்தை தட்டிக்கேட்டும், காவல்துறையும், அரசியல்வாதிகளுக்கு ஒரு பீதியாகவும் இருந்தது (இப்பவும் இருந்துக்கொண்டிருக்கிறது). என்னைப்போலவர்கள் நிறைய பேர் தானாக முன்வந்து உறுப்பினராகி களப்பணியில் ஈடுபட்டனர். ஏனோ அனுகுண்டுபோல் பல்வேறு இயக்கமாக பிளவுபட்டவுடன் மனது எந்த இயக்கத்தோடும் ஒட்டவில்லை. அதையும்மீறி ஒருவ்ருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்வதையும் இணையத்திலும் இது தொடர்கிறது. இன்ஷா நல்ல விடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கு

அப்துல்மாலிக் said...

//பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா எனும் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்

ஜிஹாத் எனும் பெயரால் உணர்ச்சியூட்டி இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.
அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அடித்து உதைத்த பின்னர் இறந்துவிட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர். இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!/

இது மாதிரியெல்லாம் இணையத்தில் காணக்கிடக்கிறது, இதன் வெளிப்பாடுதான் என் முன் சொன்ன கமெண்ட்

Anonymous said...

ம.ம.க வின்... பலம் / பலவீனம்... ?
மின் அஞல் (வழி) கருத்து:
------------------------

பலம்:
ம.ம.க வின் பலம்தான் அவர்களின் பலவீனமே!. ஆம்!. தங்களின் அதீத நம்பிக்கை அவர்களிடம் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக பலத்தை நிருபிக்கின்றேன் என்று பலவீனமாகிப் போனார்கள். ஒரு சோர்வை தொண்டர்களின் மத்தியிலும், சமுதாயத்தின் மத்தியிலும் ஏற்படுத்தினார்கள். அந்த பலவீனமே, தற்போது 6 மாதத்திற்கு முன்பே அவர்களை அதிமுக கூட்டணியில் பெவிக்கால் வைத்து ஓட்ட வைத்தது!.
-தலைமையை மதிக்கும் தொண்டர்கள். தங்களின் சொந்த வேலையை விட கட்சி/இயக்க வேலைக்கு முன்னுரிமை என்று செல்லும் தன்னலமற்ற சேவைகள்.
-கூட்டு தலைமை பொறுப்புக்கள்.
-சமுதாய சேவை / அரசியல் சேவை என இரு இயக்கம் கண்டது.
-மற்ற அரசியல் / சமுதாய தலைவர்களுடன் நல்லுறவு பேணுவது

பலவீனம்: ஆறு ஆண்டுகளாகியும், கட்சியின் வளர்ச்சியை இன்னும் வீரியமாக்கி கொண்டு செல்லாமை.
-அரசியல் கட்சி தலைமையுடன் போற்றும் நல்லுரவுபோல் மற்ற இஸ்லாமிய இயக்கங்கள் தலைவர்களுடனும், தொண்டர்களுடனும் பேனாதது.
-கட்சிக்கென்று இன்னும் நிரந்தர நிதி ஆதாரங்களை வகுதுக்கொள்ளாதது.
-அரசாங்க ஆம்புசன்ஸ் சேவை வந்தபின்னும், வேறு சேவையின் பக்கம் கவனத்தை செலுத்தாமல் இன்னும் அந்த திட்டத்தையும், அதற்கு நிதியையும் செலவழிப்பது.
-சிறு சிறு இஸ்லாமிய கட்சிகளையும், இயக்கங்களையும் ஒன்றுபடுத்தி அவர்களையும் மமக வின் பக்கம் திருப்பி, மமகவை வலிமைமிக்க கட்சியாக மாற்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்லாதது.
-எல்லா இஸ்லாமிய இயக்கங்களையும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து இந்த தேர்தலில் மற்ற கட்சிகளுடன் தோழமை கொள்ளாதது.
-அரசியல் சூட்சுமத்தில் வெற்றியின்மை.
-ததஜ வின் கொடைச்சல்..

முஸ்லீம் லீக்கின்... பலம் / பலவீனம்... ?

பலம்: அதன் முந்தைய தலைவர்கள்!.
-தேசிய இயக்கம் என்ற பெருமை
-பெரும்பாலான ஜமாத்/முஹல்லா தலைமையின் ஆதரவு
-இவ்வளவு பலகீனமாகியும் இன்னும் கூட்டம் கூடுவது.
-பிறைக்கொடி

பலவீனம்:
-இதன் தற்போதைய தலைவர் தான் ஒட்டு மொத்த பலகீனமே!
-சமுதாய சிந்தனையை பின்னுக்குத்தள்ளியது
-வீரியமிக்க இயக்கமாக மாற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது.
-கட்சியை திமுக விடம் அடகு வைத்தது
-புதிதாக வந்தவர்களுக்கும் கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் உடனே எம்.பி/ எம் எல் ஏ பதவி கொடுத்தது
-போராட்ட குணம் சிறிதும் இல்லாதது.
-முஸ்லிம்லீக் ஒன்றும் அரசியல் கட்சியோ, ஆட்சியை பிடிக்கும் கட்சியோ அல்ல என்று திரும்ப திரும்ப காதர்முகைதீன் கூறி வருவது.
-முதியோர் ஆதரவற்ற இல்லம் போல் முஸ்லிம் லீக்கை நடத்துவது.
-இளைஞர்களுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்காதது.

S D P I-யின்... பலம் / பலவீனம்... ?

பலம்:
-தேசிய இயக்கம் என்ற பெருமை
-வீரியமிக்க துடிப்புடன் தொண்டாற்ற பட்டாளம்
-இந்துத்துவா கூட்டத்தினை போல் பல குழுக்களாகவும், பல பெயர்களிலும் இயக்கம் நடத்துவது.
-சும்மா பெயரை கேட்டாலே அதிருதுல்ல....! என்பதைப்போல் அரசாங்கமே இவர்களுக்கு தனிக்கவனம் கொடுத்து உற்று நோக்கும் அளவிற்கு ஒரு பயத்தினை ஆல்பவர்களுக்கு ஏற்படுத்தி வைத்திருப்பது.

பலவீனம்:
-முஸ்லிம்கள களத்தில் உள்ள தொகுதிகளிலும், இவர்கள் போட்டியிட எத்தனித்திருப்பது.
-மக்கள் மத்தியில் இன்னும் பிரபலம் தேவைப்படுதல்.

ஜாஃபர் சாதிக்
முஜீப்.காம்

அப்துல்மாலிக் said...

//முஸ்லிம்லீக் ஒன்றும் அரசியல் கட்சியோ, ஆட்சியை பிடிக்கும் கட்சியோ அல்ல என்று திரும்ப திரும்ப காதர்முகைதீன் கூறி வருவது.//

அப்போ ஏந்தான் தேர்தல்லே நிக்கிறாங்களாம், உப்புக்குசப்பானி இல்லேனு காமிக்கிறதுக்கா?

//இளைஞர்களுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்காதது.//

இதுதான் பெரிய ட்ராபேக்கே இந்த கட்சியின் வளர்ச்சிக்கு

அப்துல்மாலிக் said...

இங்கே விஸிட் பண்ணுங்க:


http://www.voteformuslims.blogspot.com/

முஸ்லிம் ஓட்டு வங்கி

N.A.Shahul Hameed said...

Hai brothers Thajudeed and others
Assalamu Alaikkum
Nice to meet u all.
Yasir I am ok.
Hope we meet often through Adirai Nirubar.
Wassalam.
N.A.Shahul Hameed

N.A.Shahul Hameed said...

Unity is the Need of the Hour


My Beloved Brother Thajudeen and other Adirai Nirubarians
Assalamu Alaikkum.
Happy to join you all again.
Actually I read Adirai Nirubar every day and I enjoy reading the views and comments from our brothers and at times I feel elated when I see the excellent Poems from my dearest brother Sabeer and the most loving and thought provoking articles by our brother Zakhir (his style of writing is indeed fantastic), the matured and meticulous ideals of brother Mujeeb and others. I really have a feeling when I go through Adirai Nirubar as though I am in the Banks of Vettiklam and chatting the issues of our world and the world hereafter in the evening hours before and after magrib. I sincerely thank those who endeavoured to bring our such an excellent blogspot.
Coming to the post by Bro.Zakhir I have the following ideas: (May be appearing impracticable)
In my earlier post I mentioned Unit is strength and the current Muslim Politicians are all really saying that they represent the muslim community and they propagate they are the saviours of the rights of Muslims. I am sorry to differ from this view. They all represent their factions not the entire Muslim community in our country or our state.
1. Therefore we have to join the mainstream of politics and render our service without confining ourselves to our community alone but at the same time we should have the feeling we are Mslims and we should not sacrifice our I’man at any cost.
2. We are not actually the minority community, we were the rulers of this nation and it was our forefathers who cultivated those inhabitants of this country. We should strive to include the sacrifices our forefathers for the cause of freedom (As you all know, the first person to donate the highest amount for the purchase of swadeshi ship was a muslim and the rest of the amount collected by the great poet Bharathiyar was around a few hundred only).
3. We have to educate our children and we must make our children to go for higher education. In this context I must appreciate the endeavours of Adirai Nirubar and other people in convening an Educational Awareness Conference recently. I happened to watch the livestreaming and I feel missing that golden opportunity. (Shabeer you are lucky) Really I miss our great educationist Basheer Kakka and I wish him serve the community in the coming years also.
4. The percentage of muslims’ representation in Judiciary, Military and paramilitary, Civil Services is really pathetic. In my years of service I was trying to motivate a lot of our students to appear for IAS, IPS or other civil services examinations but alas their response was nil.
5. Those muslims who are in the top posts really don’t want to show their identity. They scare to talk to a muslim when they are in their office, where as the other community people feel pride of helping their community.
6. We have to respect and honour our neighbours and their feeling. We are all living overseas and we know they never discriminate their neighbours for their cast, creed or color. We have to cultivate our children to teat others too as fellow human being.
7. We lag basically in leadership quality which is originally imbibed from our very nature of living. But we never pay attention to cultivate the leadership quality among our children. Particularly the school never pay attention in this area.
I came to understand that there are more than about 10 muslim candidates contesting from varies political parties, Can our community work together and make them all win in this election? If we all join together and make them win in this election definitely our representation in the forthcoming assembly is nominal. Let me Pray Allah to bring all the Muslims under one roof and offer dignity and prosperity in the coming years.
Wassalam.
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

sir, it is honestly a rocking comment and thoughts from the bottom of heart can,t be restrained when it tends to spurt out!

அபு இபுறாஹீம், அர்த்தமுள்ள இந்த கமென்ட்டை வாலி பால் விளையாடிட்டு வெட்டிக்குளத்து மேட்டில் இருந்து கதைத்தாக கருதாமல், இந்த வெளிநாட்டு தூதுவரின் கமென்ட்டை மொழி பெயர்க்கும் வாய்ப்புண்டா?

I am proud to be your friend but remember sir, my name is sabeer.(hameed/Zakir, ஆப்பு எப்புடீ. அநேகமா முதல் திட்டு (கேவலப்பய)நாந்தான் வாங்குவேன்னு நெனைக்கேன்! )

sabeer.abushahruk said...

ஹமீது,

(இந்த கருத்தை வலைபதிவாளர் நீக்குவதற்கு முன் வாசித்துவிடவும்)

சாருக்கு இவ்ளோவ் எழுத டைம் கிடைச்சிருக்கே, துணிமனி துவைச்சுத் தர்ர சாரும் சிங்கப்பூரு வந்தாச்சோ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// அபு இபுறாஹீம், அர்த்தமுள்ள இந்த கமென்ட்டை வாலி பால் விளையாடிட்டு வெட்டிக்குளத்து மேட்டில் இருந்து கதைத்தாக கருதாமல், இந்த வெளிநாட்டு தூதுவரின் கமென்ட்டை மொழி பெயர்க்கும் வாய்ப்புண்டா? ///

ஓ பேஷா செய்திடலாமே !

அதிரை முஜீப் said...

இங்கே கருத்துப் பகுதியில் எனக்கும் ஒரு சில தினங்கள் வகுப்பெடுத்த ஷாகுல் ஹமீது பேராசிரியர் அவர்களின் ஒரு ஆங்கில கட்டுரையே இன்னும் ஏன் ஓய்யாரமாக கருதுப்பகுதியில் ஒதுங்கி நிற்கின்றது?. நிருபர் குழு இதை இன்னுமா இதை கவனித்து கட்டுரையாக வெளியிடவில்லை?.

பண்பாளர்களுக்கு, குறிப்பாக ஆசான்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கல்வியில் நாம் சிறந்த ஒரு சமுதாயமாக மாற அவர்களின் கட்டுரைகளை இந்த இணையத்தில் அதிகம் இடம்பெற செய்து, தக்க ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

அதிரை நிருபர்கள் குழு இங்கு இடம் பெற்று இருக்கும் கருதுக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து, ஒரு பதிவாக வெளிக்கொண்டு வர ஆலோசனை அல்ல, கட்டளையே இடுகின்றேன்!.

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தொடர்ந்து அதிரைநிருபரின் பக்கம் இணைந்திருக்கும் பேராசிரியர் N A S அவர்களை வருக வருக வருக என்று வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

உங்களைப்போன்ற கல்வியாளர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள் என்றென்றும் நம் அதிரைநிருபருக்கு வேண்டும் என்பதில் மிக ஆவலாக உள்ளோம். அதிரைநிருபரை பாராட்டியமைக்கு மிக்க நன்றி. சார் நாங்கள் உங்கள் மாணவர்கள் உங்களிடம் பாராட்டுக்கள் வாங்காமல் இருக்க முடியாதே..

சகோதரர் சபீர், சகோதரர் முஜீப்..

பேராசிரியர் N A S அவர்களின் ஆங்கில பின்னூட்டம் கருத்துப்பகுதியில் இருக்கட்டும்.

இன்ஷா அல்லாஹ் பொழிபெயர்ப்பு அதிரைநிருபரில் தனிபதிவாக விரைவில் வெளிவரும்.

தொடர்ந்து இணைதிருங்கள்.

Mohamed Rafeeq said...

அன்பின் இனிய பேராசியர் அவர்களே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மிது உண்டாகட்டுமாக ஆமீன்... சிறு வயதில் இருந்து சென்னையிலேயே படித்த காரணத்தால் தங்களை பற்றியும் தாங்கள் அதிரை சமுதாயத்துக்கு செய்த நண்மைகளையும் என்னால் உணரமுடியவில்லை இருபினும் தங்களுடைய நேர்த்தியான ஆங்கிலபின்னுட்டம் (கட்டுரை ) கண்ட மறுகணமே தங்களிடம் கல்வி பயிலும் வாய்ப்பு எனக்கு கிடைக்காததை பெரும் இழப்பாகவே கருதுகிறேன் !

சமுதாய ஒற்றுமையின் அவசியத்தை தெள்ள தெளிவாக தங்களுடைய பின்னுட்டத்தில் சொல்லியுளிர்கள் ,ஆனால் இன்றைய சமுக மற்றும் அரசியல் காலச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் அனைவர்களையும் ஒரே தலைமையின் கில் கொண்டுவருவது சாத்தியம் அற்றது

அரசியலை பொறுத்தவரை ஒற்றை கருத்துடைய இஸ்லாமிய கட்சிகளை ( ம ம க , முஸ்லிம் லிக் , எஸ் டி பி ஐ )ஆதரித்து அவர்களை வளர்த்தெடுப்பதன் முலம் கல்வி ,அரசு இயந்திரம் , சமுக பாதுகாப்பு போன்றவற்றில் இஸ்லாமியர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன் , அதைவிடுத்து காலத்துக்கு ஒவ்வாத அல்லது சாத்தியம் இல்லாத ஒற்றுமையுடன் வாருங்கள் ஆதரிப்போம் என்றால் இருக்கும் உரிமைகளையும் அல்லது உடைமைகளை இழந்துவிடுவோம் என்பதே என்னுடைய கருத்து

மேலும் என்னுடைய இந்த கருத்து பேராசிரியர் அவர்களுடைய கருத்தை உள்வாங்கி பொதுவான கருத்தாக இந்த பின்னுட்டம் வாயிலாக தெரிவித்துள்ளேன் பேராசிரியர் அவர்களுடைய கருத்துக்கு எதிரானது அல்ல

ZAKIR HUSSAIN said...

To Bro N.A.S

Thank you so much for your most valuable ideas which can bring positive changes in our community. I know the efforts you have done to bring our students to go for I A S & I P S exams..as usual they never see the end results..they always compromise for short term profit and select some countries to work.

Thanx for your motivation about my writing...in fact even though i did not study science [ Physics] from you, you also [indirectly] contributed considerably in my writings.

N.A.Shahul Hameed said...

My Dearest brother Mohamed Rafeek,
Assalamu Alaikkum!
Thank you for your valuable compliments. All Praise be to Allah the Almighty. I do agree with you that it is impossible to bring together all our brothers under one roof by overnight. But it is high time for us to make the humble initiative to sow the seed of unity into the minds of our young children. Further in my post I too expressed my view that we have to support our Muslim brother whoever he may be from whatever party he hails from. Because our ultimate aim should be to bring forth our solidarity and to make a meaningful contribution to the forthcoming assembly. My sincere and earnest appeal to all our factions is to forget the difference and help our brother to win. It is not time to take revenge upon our own brother by contesting against him or to canvas against him. In this context I totally endorse the views of brother Mujeeb.
May Allah make all of us to remain united and set the new trend to or future generations.
Wassalam
N.A.Shahul Hameed

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு