Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கம்பன் விரைவு இரயில் மீண்டு வருமா? - வேண்டுகோள் ! 10

அதிரைநிருபர் | March 05, 2011 | , , ,

அன்பின் அதிரைச் சமுகமே !

விழித்தெழுவோம் ஒன்றுபடுவோம்... இது தனிமனிதனின் கோரிக்கையல்ல நம்மூர் உறவுகளின் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையை வென்றெடுக்கும் கோரிக்கை, கிடைத்திருக்கும் இந்த வலைப்பூக்களின் விரிவாக்கத்தினை கொண்டு திரண்டெழுவோம் ஒன்று திரளுவோம் கொட்டி கொட்டிக் கொடுக்கும் நமது அன்னியச் செலவாவனிக்கு நாம் தான் கேள்விகள் கேட்கவேண்டும்.

அதிரைச் சகோதரர் அப்துல் ரஜாக் (media CHASECOM Service P.Ltd.) இந்திய இறையான்மை வழங்கியிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள் நிச்சயம் இவர்களின் மனுக்கு பதில் தந்தே ஆகவேண்டும் இதற்கு தென்னக ரயில்வே தப்பிக்க முடியாது.
இம்முயற்சிக்கு ஏதும் கைவிட்டுப் போகவில்லை, வெளிநாடுகளில் வாழும் அதிரைச் சமூக சகோதரர்களே, உங்களில் ஒன்றினைந்து அவரவர் வசிக்கும் நாடுகளில் இருக்கும் இந்தியத் தூரகத்திற்கு சென்று முறையாக அவர்களின் மூலமாக இந்திய தென்னக ரயில்வேயிக்கும், மத்திய இரயில்வே மந்திரிக்கும், தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து மனுக்களை அனுப்ப முயற்சிக்கவும்.

இங்கே கீழ் வைக்கப் பாட்டிருக்கும் கோரிக்கையால் தனிமனிதனோ அல்லது தனிப்பட்ட வர்க்கமோ பயனடையப்போவதில்லை, ஒவ்வொரு அதிரைப்பட்டினத்தில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ்  மற்றும்  வெளியூர்களில் வாழ்ந்து வரும் அதிரை சகோதரர்களின் நலன் கருதியே என்று களம் காண்போமே.... இன்ஷா அல்லாஹ்!

---------------
அஸ்ஸலாமு அலைக்கும்,

திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2011 - 2012 வரவு செலவு திட்டத்திலும் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் அறிந்ததே... தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் அடுத்த 3 ஆண்டுகளிலும் இதற்க்கான வாய்ப்பு தெரியவில்லை.இருந்த போதிலும் முயற்ச்சியை கை விட கூடாது, மேலும் உண்மை நிலவரத்தை அறியவும், ," தகவல் அறியும் உரிமை" ( Right to Information Act ) சட்டத்தின் கீழ் , ரயில்வே நிர்வாகத்திற்கு மனு எழுதி நேற்றைய தினதன்று அனுப்பியுள்ளோம்.. இதற்க்கான பதில் 45 நாட்காளில் பதிலை ரயில்வே நிர்வாகம் கொடுத்தாக வேண்டும்.அதன் அடிப்படையில் மேற்கொண்டு நம் முயற்சியை தொடருவோம்.

வெளி நாடுகளில் வசிக்கும் சகோதர்களுக்கு , சிறிய வேண்டுகோள் :

அங்குள்ள பொது அமைப்பின் மூலமாக, Ministry of Foriegn Affairs, Ministry of Railways, & Chief Minister of Tamil nadu இவர்களுக்கு நமது அகல ரயில் பாதை கோரிகையை அங்குள்ள EMABSSAY மூலமாக தொடர்ந்து அனுப்பிவைக்க வேண்டுகிறோம்..

ஓன்றுபட்டு முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நம் நல்ல சிந்தனைகள் செயல் வடிவம் பெரும்.

தங்கள் அன்புள்ள

ABDUL RAZAK
Media CHASECOM Services P.Ltd.
0091 - 44 - 42052222

இணைப்பு: தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கான மனுவின் நகல்




தேர்தல் நேரம் என்பதால் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள அன்பு பாசமிகு உறவுகள் வந்து நம்மிடையே நம்பிக்கையூட்டும். மக்களே ஏமாறவேண்டாம். அன்னிய செலாவனியை அள்ளிகொடுக்கும் வெளிநாட்டு வாழ் அதிரைவாசிகளே இந்த கோரிக்கைக்கு வலு சேர்பதற்காக ஓர் இணையப் புரட்சியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம்.

கடந்த வருடம் அதிரையில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற ஏற்பாடுகள் அதிரைவாசிகளால் செய்யப்பட்டு சில அரசியல் சூழ்ச்சிகளால் முறியடிக்கப்பட்டது, இது தொடர்பான செய்தியை நம் அதிரைநிருபரி. வெளியிட்டோம், மீண்டும் இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.

சரி இனி பூனைக்கு யார் மணி கட்டுவது?

கட்டுவோம்.... இன்ஷா அல்லாஹ், இது  தொடர்பான பின்னூட்டங்களும், தொடர்ந்து வரும் ஆக்கங்களும் நிச்சயம் புனைக்கு மட்டுமல்ல புலிக்கும் மணிகட்டும்.

- அதிரைநிருபர் குழு

நன்றி; அதிரை போஸ்ட்

புகைப்படம்; சகோதரர் ஜாஹிர் ஹுசைன்

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க ! கம்பன் ஏமாந்தான்ன்னு ஒரு வரி எங்கேயோ வந்து இடிக்கிறது... இது எதற்குன்னு இப்போ வாதிக்கவில்லை ஆனால் நாம் ஏமாற்றப்பட்டிருக்கோம் எத்தனையோ பறிப்புகளில் இதுவும் ஒன்று என்றில்லாமல், இதற்குமேலும் இளிச்ச வாயர்கள் அல்ல என்று ஒன்று திரண்டு காட்ட வேண்டும்... நமது ஊர் பெருமையும் பழமையும் வாய்ந்த இரயிலடி வழியே இரயில் ஓட வேண்டும் அதறகாக நாமு போராட வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

துபாய் வாழ் அதிரைச் சகோதரர்களுக்கு கூப்பிடும் தூரத்திலிருக்கும் இந்திய தூதரகம் செல்வது இலகுவே...

கூட்டாக மனுக் கொடுக்க / அல்லது நெருங்க வேண்டிய இடத்தை அனுக எங்கள் ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும் இன்ஷா அல்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதன் முதலில் சகோதரர் அப்துல் ரஜாக் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்பட்டுள்ள கேள்விகளுக்கு இரயில்வே பதில் சொல்லியே ஆகவேண்டும்.

நாடுகடத்தப்பட்டுள்ள கம்பனை (விரைவு இரயில் வண்டியை) மீட்டுத்தருவதற்கான பொதுநலனில் அடிப்படையில் நல்ல முயற்சி. மேலே சொல்லப்படுள்ள கேரிக்கையின் அடிப்படையில் வெளிநாட்டுவாழ் சகோதரர்கள் தாங்கள் இருக்கும் நாட்டின் தூதரகத்தில் நிச்சயம் மனுவாக கொடுத்து முறையிட வேண்டும். இன்ஷா இதற்கான முயற்சியில் உடனே இறங்குவோம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களின் முயற்சி வெற்றி அடையட்டும்,முயற்சிப்போம்,துஆ செய்வோம். இது பற்றி வாக்கு வாங்க வரும் வேட்பாளரை நெருக்குதல் செய்யலாமே!இப்ப நடக்கும் தேர்தல் நம்மை விடுபட்டு போன ரெயிலை பிடிக்க அன்பாக வேண்ட, அல்லது நெருக்க இப்ப தான் சரியான தருணம்.

Ansari-Madras said...

கிடப்பில் போடப்பட்ட திருவாரூர்-காரைக்குடி அகலரயில் திட்டம் உடனடி செயலாக்கம் தேவையென்றால் "அய்டா" போன்ற வெளிநாட்டில் நீண்ட காலமாக இயங்கும் அமைப்புகள் உடன் களமிறங்கினால் பலன் உண்டு என்பதில் சந்தேகமேயில்லை! சரியான காரணத்துடன் இந்திய தூதரகத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதையே மற்ற வெளிநாட்டு அமைப்புகளும் பின்பற்றும். முயல்க.

sabeer.abushahruk said...

நல்லுள்ளம்கொண்ட நம்மூர் சகோதரர்கள் பலர் இதற்கான தீவிர மியற்சி செய்துவருவது எனக்குத் தெரியும்.

நாமும் இணைவோம்!
அத்துடன் கீழே ஒரு பழைய கனவு:(நன்றி:திண்ணை)

அகலப் பாதை!

நல்ல பிள்ளையென
நீண்டு 
பூமி துளைத்து
சிலதும்
'சவலைப்பிள்ளையென
சோனியாய்த் தொங்கிக்கொண்டு
சிலதும்
விழுதுகள்....
ஆலமர நிழலில்
ஆளமர முடியாமல்
சிமென்ட் பெஞ்சில்
பறவை எச்சங்கள்...
நினைவில் மிச்சங்கள்!

மேல்திசையின் ஒளிப்பொட்டும்
மெல்லிய இறைச்சலும்
கொஞ்சம் கொஞ்சமாக
விட்டம் வளர்த்தும்
சப்தம் கூட்டியும் 
நிலையம் வந்து...
பெட்டி படுக்கையோடு
வாப்பாவை ஏற்றிகொண்டு
கீழ்திசை நோக்கி
கருப்புச் சதுரம்
கடுகென குறைந்து
மறைந்த பொழுதுகள்...
மறையாது நினைவுகள்!

அதே 
கீழ்திசையிலிருந்து
அடைமழை காலத்து
பிறை நிலவென
மெல்லத் தோன்றி
கருப்பு தேவதை
மூச்சிறைக்க
நிலையம் வந்து
வெளிநாட்டுப் பொருட்களோடு 
வாப்பாவை இறக்கிச் சென்ற
அதிகாலை...
ஆனந்தத்தில்
அழுத பொழுதுகள்!

தனக்கான உணவு
தானிழுக்கும்
வண்டிக்கடியில்
வைத்திருப்பதறியாது
வாயசைத்துக் கொண்டிருந்த குதிரை.
மின் கம்பத்தின்
கட்டுப்பாட்டில் 
உணவை அசைபோட
மனதோ நினைவுகளை...!

க்ளைடாஸ்கோப்பும்
கித்தாச் செருப்பும்
செஸ் போர்டும்
சாக்லேட்டும் அடங்கிய
பெட்டியை சுமந்த
கூலியும்
தர்காமுன் ஃபாத்திஹாவும்
பகிர்ந்தளித்த இனாமும்
நினைவுச்சின்னங்களின்
சுவர் கிறுக்கல்களாக
நினைவில் மிஞ்ச

அத்தனை இருப்புப் பாதைகளும்
தொடர்பறுந்து போய்விட
அடுத்த பட்ஜட்டின்
அகலப் பாதை
திட்டத்திற்கான
நிதி ஒதுக்கீட்டுக்காக
கைம்பெண்ணாய் காத்திருக்கிறது
எங்கள் ஊர்
ரயில் நிலையம்!

-sabeer

sabeer.abushahruk@gmail.com

அலாவுதீன்.S. said...

நாமும் தூங்கிக்கொண்டு இருக்கிறோம். அரசாங்கமும் தூங்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி மனு கொடுத்தெல்லாம் ஒன்றும் நடக்காது போராட்டம் மட்டுமே சரியான வழி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோதரர்களே மனு கொடுங்கள்: மனு கொடுத்து சாதித்த காலம் மலையேறிவிட்டது. போராட்டம் இது ஒன்றுதான் மக்களின் அஸ்திரம். அடிக்கடி போராட்டம் மூலம் நம்முடைய கோரிக்கைகளை வென்று எடுக்க வேண்டும்.

மயிலே மயிலே என்றால் இறகு போடாது. பிற மத மக்களின் பகுதிகளை பாருங்கள் தண்ணீர் பிரச்சனையா? கரண்ட் பிரச்சனையா? வரி உயர்வா? உடனே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ரோட்டில் இறங்கி விடுகிறார்கள். இது உடனே மீடியாக்களில் காட்டப்படுகிறது. தொலைக்காட்சி, செய்திகள் என்று வெளிவந்தால்தான், அரசியல் வியாதிகள் வெட்கப்படுவார்கள். இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தெரியவரும்.

மனு கொடுத்தால் பத்தோடு பதினொன்றாக குப்பைக் கூடைக்கு செல்லத்தான் பயன்தரும். இந்தியன் எம்பஸி எந்தக்காலத்தில் இந்திய மக்களின் பிரச்சனைகளுக்கு ஆதரவாக எந்த நாட்டில் நடந்திருக்கிறது.

தண்ணீர், வரி, சுகாதாரம் போன்றவற்றிற்கு பிரச்சனையா? அறிவித்து விட்டு பேரூராட்சியை அந்த பிரச்சனை தீரும் வரை அதை தொடர்ந்து முற்றுகை இட வேண்டும்.

கரண்ட் பிரச்சனையா? மின்சார நிலையம் முற்றுகை இடப்பட வேண்டும்.

கேஸ் பிரச்சனையா? அலுவலகம் முற்றுகை இட வேண்டும்.

இரயில் பிரச்சனையா? அரசாங்கம் சரியான அறிவிப்பு செய்யும்வரை ரயில் நிலையம் ரயில்கள் மறியல் என்று முற்றுகை இட வேண்டும்.

பேச்சுவார்த்தை அது இது என்று எல்லாம் நடந்த பிறகு ஒரு அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டு இருந்தால் தட்டி எழுப்பும் ஒலி இந்திய நாட்டில் ஒன்றே ஒன்றுதான் முற்றுகை மறியல் ஒன்றுதான். (இதெல்லாம் நமக்கு அரசியல் வியாதிகள் கற்றுக்கொடுத்ததுதான். புதிது ஒன்றும் இல்லை).

இயக்கங்கள் தனித்தனியாகவும் மறியல் செய்யலாம். மக்கள் சேர்ந்தும் மறியல் போராட்டம் செய்யலாம்.

பூனைக்கு மணி கட்டுவது யார்? இது தனி நபர் பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த அதிரையில் வசிக்கும் அத்தனை இன மக்களின் பிரச்சனை சாதிமதம் பேதம் இல்லாமல் எல்லோரும் ஒன்று கூடி இந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி அடையவேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : இதனை ஒரு ஆக்கமாக இட்டிருக்க வேண்டியதை நம் யாவரின் ஏக்கத்தின் குமுறலை... அப்படியே வடித்து தந்திருக்கிறீர்கள் !

இதனை வாசிக்கும் நேசங்களும் கைகோர்ப்போமே... வாருங்கள், நம்மால் முடிந்தது இங்கிருந்து கொண்டு எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்திட !

அதிரை முஜீப் said...

முத்துப்பேட்டை,அதிரை,பட்டுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் காரைக்குடி ஆகிய மக்கள் ஒருங்கிணைந்து போராடவரைக்கும் இத்திட்டம் வெற்றி யடையப்போவது இல்லை!. குறை இங்கேதான் இருக்கின்றது. அதிரை மக்கள், பட்டுக்கோட்டை மக்கள் மட்டும் முயன்றால் இது சாத்தியமில்லை!. இந்த இரயில் தடம் செல்லும் அத்துணை ஊர்களும் ஒன்றிணைத்து ஒரே போராட்டத்தின் மூலம் வெளிபடுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

மேலும் காரைக்குடியை சேர்ந்த ப.சிதம்பரத்தினையும் சந்தித்து இது தொடர்பாக மிக மிக அழுத்தம் கொடுத்தால் சற்று சாத்தியமே! அதை தவிர்த்து தூதரகங்களில் மனு கொடுத்து பலன் ஒன்றும் இல்லை!. ஏற்கனவே இவர்கள் இங்கு வசித்து வரும் மக்களுக்கே ஒன்றும் செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டினையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

Unknown said...

திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்துவரும் சகோதரர் அப்துல் ரஜாக் காக்கா அவர்களுக்கு நன்றி!

Ministry of Foriegn Affairs, Ministry of Railways, & Chief Minister of Tamil nadu இவர்களுக்கு நமது அகல ரயில் பாதை கோரிகையை அங்குள்ள EMABSSAY மூலமாக தொடர்ந்து அனுப்பிவைக்க வேண்டும் என வெளிநாட்டுவாழ் அதிரை சகோதர்களை கோரியிருக்கிறார்கள். இது நல்ல முயற்சிதான் என்ற போதும் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதனை இன்னும் அரசியல் ரீதியாக அனுகினால் உடனடி பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
அரசியல் ரீதியாக என்பது, 'காரியம் நடக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கனிப்பு செய்வோம்' என்று தமிழக ஆளுனர் அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் மெயில் போட்டால் 24 மணிநேரத்தில் மாவட்ட ஆட்சியர் நமதூரில் இருப்பார்.

அப்போது, நமது கோரிக்கையை ஏற்கவைத்துவிட முடியும்!

நூறு பேர் தேர்தல் புறக்கனிப்பு முடிவு எடுத்து மீடியாக்களுக்கும் தகவல் சொன்னால் ஆங்கில சேனல்கள் செய்தியாக்கி ஆட்சியை'கை'யில் வைத்திருப்பவர்களின் பார்வைக்கும் சேர்த்துவிடும்.
_________________________________

இன்னொன்று, தூதரங்கள் மூலம் நமது புகாரை அனுப்பினால், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பார்வைக்கு போகும். ஆனால், எஸ்.எம்,கிருஷ்ணா 'துபையில் கம்பன் எக்ஸ்பிரஸ் இரயில் விடச் சொல்றாங்கப்பானு' மனுவை கடாசிடாம இருக்கனும்!

சாப்பிடும் போதோ, தண்ணீர் குடிக்கும் போதோ இந்த லிங்கை பார்க்கவோ, படிக்கவோ வேண்டாம். புறையேறும் வாய்ப்புள்ளது.

http://www.tamilulakam.com/news/view.php?id=23100

http://www.youtube.com/watch?v=-uxu6RAlnXM&feature=player_embedded

Unknown said...

)Thiru. Surjit Singh Barnala ,
Hon'ble Governor of Tamil Nadu ) http://www.tnrajbhavan.gov.in/

http://www.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,7,275

(Smt. Pratibha Devisingh Patil, President of India ) http://helpline.rb.nic.in/

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு