Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேண்டும் ஆட்சி மாற்றம்! 10

அதிரைநிருபர் | March 04, 2011 | , ,


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

சகோதரர்களே! நம் மாநிலத்தினுடைய சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிற இச்சூழ்நிலையில் பல விதமான கேள்விகளும், ஆதங்கமும், அதிருப்தியும், நம்மில் பலரை ஆட்கொண்டுடிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இவ்வேலையில் சில எதார்த்த நிலைகளை நாம் அறிந்த கொண்டாமேயானால் அல்லாஹ் நாடினால் அது நமக்கு பயனுல்லாதாக அமையும் என்று நம்புகிறேன்.

சகோதரர்களே! கடந்த பல வருடங்களாக நம் நாட்டில் எந்த ஒரு அரசும் சாமானிய மக்களின் நலம் நாடும் அரசாக இல்லை என்பதையும் அதிலும் முஸ்லிம்களின் நலனை அறவே விரும்பவில்லை என்பதையும் நாம் தெளிவாக புறிந்துகொள்ள வேண்டும். ஆளும் கட்சிகளின் இலட்சியம் மேலை நாடுகளுக்கு அடிமைப்படுவதும், அதன் மூலம் தன்னை வளப்படுத்திக்கொள்வதும், எதிர்க் கட்சிகளின் இலட்சியம் இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்குவது! (மேலை நாடுகளுக்கு நம் வளங்களை தாரைவாற்கிறார்களே என்பதற்காக அல்ல, இந்த பாக்கியம்(?) நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தின் காரணமாக!) என்று எண்ணும் அளவுக்குத்தான் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியலில் வெகு சிலரே நல்லுள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சொற்பமானவர்களாக இருப்பதால் அவர்களால் அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

இச்சூழ்நிலையில் எந்த அரசியல் கட்சியும் அவர்களுடைய கட்சியின் சார்பாக முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதின் மூலம் எந்தப் பலனும் பெரிதாக கிட்டிவிடப் போவதில்லை. வேண்டுமானால், முஸ்லிம்களின் நேர்மையின் காரணமாக தங்களின் தொகுதி மக்களுக்கு கிடைக்கிற நலத் திட்டங்களைக் குறைவின்றி அம்மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். தவிர சமூக அநீதிக்கு எதிராக நாம் சார்ந்திருக்கிற கட்சிகள் களமிறங்கும் போது அதிலே சிறிய அளவிலான எண்ணிக்கையில் இருக்கிற முஸ்லிம்களால் தங்களின் எதிர்ப்பைக் கூட பதிவு செய்ய முடியாமல் குரல்வலை நெறிக்கப்பட்டவர்களாக அங்கே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

காங்கிரஸின் M P அப்துல் ரஹ்மான் அந்துலே ஹேமந் கர்கரே-யின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. எனவே விசாரனை நடத்தப்பட வேண்டும்  என்றதற்காக தன்னுடைய பதவியையே இழக்க நேரிட்டது! இது தான் பிற கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவோருக்கான நிலை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். நம் சமுதாய உரிமையை கேட்பதற்கு, நம் உணர்வுகளை பிரதிபளிப்பதற்கு என்று அனைத்திற்கும் கட்சித் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நாம் வாய் திறந்து பேசமுடியா பொம்மைகளாக ஆக்கப்படுவோம். அதையும் மீறி வாய் திறந்தால், பின் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

"நீங்கள் ஒரு தீமையைக் கண்டால், அதை உங்களுடைய கரங்களால் தடுங்கள்! அதற்கு நீங்கள் சக்தி பெறாவிட்டால் உங்களின் நாவினால் அதைத் தடுங்கள்! அதற்கும் நீங்கள் சக்தி பெறாவிட்டால் உங்களின் மனதால் அதை வெறுத்து ஒதுங்கிவிடுங்கள்! இதுவே ஈமானின் தாழ்ந்த நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்க நாம் எவ்வாறு வாய் மூடியவர்களாக அங்கேயே இருக்க முடியும்.

அதே வேலையில் நாம் தனிக் கட்சியாக உருவாகி கூட்டனி என்ற ரீதியில் ஆதரவளித்தோம் என்றால், நம் குரல் வலை நெரிக்கப்படாது. மேலும் ஆட்சி அதிகாரங்களிலே பங்குபெற்றிருந்தாலும் தேவைப்பட்டால் ஆதரவை விலக்கிக் கொள்ளவும் முடியும். முக்கியமாக நம் உரிமைக் குரல் ஒலிக்க எவரிடத்திலும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. நம் உரிமைக் குரல் சட்டம் இயற்றும் அனைத்து அவைகளிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்குத் தானே அதிகாரத்திலே பங்கு கேட்கிறோம்! பின் அந்த உரிமையை இழந்து பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகித்து என்ன பிரயோசனம்? என்பதை நம் சமூக சகோதரர்கள் அனைவரும் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், முஸ்லிம்களால் மட்டுமே தன்னலமற்ற, மக்களின் நலம்நாடுகிற, சமூக நலம் பேனுகிற, சமய சார்பற்ற சரியான ஆட்சியை கொடுக்க முடியும் என்பதே சரியான வரலாறுகள் நமக்குச் சொல்லித் தறுகிற பாடம்.

அகன்ற பாரதத்தை உருவாக்கியது முஸ்லிம்கள்! வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டிருந்த நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்டு அதை வேரூன்றி விருட்சமாக படரவிட்டு அதற்காக தங்களின் உயிர், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என்று அனைத்தையும் தங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இழந்து விடுதலையை வென்றெடுத்தது முஸ்லிம்கள்.

நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளைக் கடந்தும், நாம் சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோமா? என்று சாமானிய மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளும் இழி நிலைக்குக் காரணம் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் நம் நாட்டின் எந்த ஒரு அதிகாரத்திலும் பங்கு பெறவே இல்லை!.

முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரங்களில் பங்கேற்றுவிடக் கூடாது என்று சூழ்ச்சி செய்து நாடு சுதந்திரம் அடைந்ததும் முதல் வேலையாக முஸ்லிம்கள் உருவாக்கிய அகன்ற பாரதத்தைக் கூறு போட்டு, முஸ்லிம்களை சிறுபான்மைகளாக்கி, வெள்ளையர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டையும் பிடிங்கிக்கொண்டு வெள்ளையனை நாட்டைவிட்டுத் துரத்தியதற்காக பழி தீர்த்துகொண்டார்கள் நம் நாட்டின் ஒட்டு மொத்த தேச பக்தியின் சொந்தக்காரர்கள்(?) வெள்ளையனின் கூட்டாளிகளான பாசிசவாதிகள்.

இன்று அரசியலில் அனாதைகளாகப்பட்டிருக்கிற முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்று நினைப்பது முஸ்லிம்களின் மேன்மைக்காக மட்டுமல்ல, நம் நாட்டு மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டும் என்பதற்காக. ஒரு முஸ்லிம் தான் மட்டும் அல்லது தான் சார்ந்திருக்கும் சமுதாயம் மட்டும் நலம் பெற வேண்டும் என்ற சிந்தனையுடையவனாக இல்லாமல் அனைத்து மக்களும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவனாக இருப்பான். ஏனென்றால் "தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை நீங்கள் இறை நம்பிக்கையாளராக முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் நம்மை எச்சரித்துள்ளார்கள். அதனால் தான் முஸ்லிம்களின் ஆட்சியை மிஞ்சிய ஒர் ஆட்சியை வேறெவரும் கொடுத்தாக வரலாறு இல்லை.

மேலும் "அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறாற உண்பவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது" என்றும் "ஆள் அரவமற்ற வனாந்திரத்திலே தான் குடித்தது போக மீதமுள்ள நீரை பிறருக்குக் குடிக்கக் கொடுக்காதவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்! அவனோடு பேச மாட்டான்!! அவனைத் தூய்மைப் படுத்தவு மாட்டான்!!!" என்றும் அல்லாஹ்வின் தூதர் எச்சரித்திருப்பதன் மூலம் பிறர் நலம் பேனாதவன் ஒரு முஸ்லிமாகவும் இருக்க முடியாது, மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியாது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதனால் தான் முஸ்லிம்களால் மட்டுமே மக்கள் விரும்புகிற நேர்மையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று சொல்கிறேன். இந்த இடத்தில் நான் ஒன்றைப் பதிவுசெய்ய ஆசைப் படுகிறேன் "முஸ்லிம்கள் நம் நாட்டில் அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு அதிகாரத்திலோ, அரசாங்க வேலைகளிலோ இல்லை என்பது ஒரு புறம் வேதனையளித்தாலும் குற்றவாளிகளாக இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற சமுதாயத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பதை எண்ணும்போது மனம் மகிழாமல் இருக்க முடியவில்லை".

ஒரு நாள் இரவு மதினத்து மக்களெல்லாம் குதிரையின் காலடிச் சத்தம் கேட்டு நம் மீது யாரும் போர் தொடுத்து வருகிறார்களோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அம் மக்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது ஒரு குதிரை. அதிலிருந்தது அன்றைய ஆட்சித் தலைவரும், ஆன்மீகத் தலைவருமான அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் "மக்களே! அஞ்ச வேண்டாம், மதீனத்தின் எல்லை வரை சென்று பார்த்து வந்துவிட்டேன் யாருமில்லை" என்று மக்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தந்தார்கள்.

நபி அவர்களின் ஆட்சி எவ்வாறு முழுமையான மக்கள் நலம்பேனும் ஆட்சியாக இருந்ததோ அதே போல் தான் கலிஃபாக்களின் ஆட்சியும் இருந்தது. அதனால் தான் மக்கள் நலம் நாடிய மகாத்மா காந்தி அவர்கள் மக்கள் உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்றால் கலிஃபா உமருடைய ஆட்சி வேண்டும் என்று ஆசைப்பட்டார்! அதனாலல்லவோ அவரைக் கொன்றொழித்தனர் மக்கள் நலம் நாடா பாசிச தீவிரவாதிகள்.

நிச்சயமாக நம் நாட்டு மக்கள் நலம்பெற வேண்டுமென்றால் நம் நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும். அதுவும் இது வரை இல்லாத புதிய அரசாக இருக்க வேண்டும். இச்சூழ்நிலையில் அரசியலில் முஸ்லிம்கள் அடி வைத்திருப்பது காலத்தின் கட்டாயம். முஸ்லிம்களால் மட்டுமே மக்கள் நலம் நாடுகிற ஆட்சியை அமைக்க முடியும் என்பது திண்ணம். எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புறிவானாக! ஆமீன்.

-- அபு ஈசா

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் அபுஈஸா : சிறிது நாட்கள் கழித்து வந்தாலும் ஒரு நச்சென்ற ஆழமான சிந்தனையோட்ட ஆக்கம் இது நம்மைப் போன்றோரின் உருக்கியெடுக்கும் எண்ணோட்டங்களின் கோர்வையே !

வாழ்த்துக்கள், இதேபோல் சிந்தனையோட்டம் இழையோடும் ஆக்கங்களை தொடர்ந்து எழுதவும்...

அலாவுதீன்.S. said...

சகோ. அபு ஈஸா : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் ஆக்கம் உண்மையையே கூறுகிறது.

 இஸ்லாமியர்களால்தான் உண்மையான ஆட்சியை தரமுடியும்.

 உலகத்தை ஈமான் கொண்ட முஸ்லிம்களால் ஒன்றும் செய்யமுடியாது.

 மாற்றங்கள் வரவேண்டும் ஜமாஅத்திலிருந்து. ஒரு தெருவுக்கு ஜமாஅத் பொறுப்பில்லையா? தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர்கள் வருவது கியாமத் நாளின் அடையாளமில்லையா?

 வார்டு மெம்பரிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும். எப்படி பிற மதத்தைச்சேர்நதவர்கள் வார்டு மெம்பராக இருக்கும் இடங்களில் தெருக்கள் அழகு படுத்தப்படுகிறது. தெரு லைட்கள் சீராக இருக்கிறது. மூடிய கழிவு நீர் செல்லும் சிமெண்ட் சாக்கடைகளாக மாறி வருகிறது. பூங்காக்கள் வருகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுகிறது.கொசுக்களுக்கு மருந்து அடிக்கப்படுகிறது. இவைகளை சரியாக செய்த வார்டு மெம்பர்களுக்கு முதல்வரின் கையால் 5லட்சம் பரிசும் கிடைத்தது. இதை வைத்து மேலும் என்னுடைய வார்டை மேம்படுத்துவேன் என்று வார்டு மெம்பரான பெண்மனி கூறினார்.

 அப்படியே வாருங்கள் நமது இஸ்லாமியர்கள் வார்டு மெம்பராக உள்ள பகுதிகளை பார்வையிடுங்கள். இறையச்சம் உள்ளவர்களாக இருந்தால் வல்ல அல்லாஹ்வுக்கு நாளை மறுமையில் பதில் சொல்ல நேரிடுமே என்று சேவை செய்வார்கள் அல்லவா?

 அரசாங்கம் ஒவ்வொரு தெருவுக்கும் சுகாதாரத்திற்கும் பணம் ஒதுக்குகிறதா? இல்லையா?

 வார்டு மெம்பராக இருந்தாலும் எம்எல்ஏ, எம்பியாக இருந்தாலும் சரியாக செயல்படாதவர்களை திருப்பி அழைத்துக்கொள்ளும் சட்டம் வரவேண்டும்.

 அடிப்படையில் இருந்து மாற்றங்கள் வரவேண்டும்: ஜமாஅத் பொறுப்பில் உள்ளவர்கள், வார்டு மெம்பர்கள் வல்ல அல்லாஹ்வின் மேல் உண்மையான இறையச்சம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஜமாஅத் பொறுப்பில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் கொண்டு வரலாம். பிற மத தெருக்களையும், முஸ்லிம் தெருக்களையும் வலம் வாருங்கள் உண்மை புலப்படும்.

 நகராட்சி செய்யவில்லை , ஆட்கள் குறைவு என்று சொல்கிறார்கள். ஊரே சேர்ந்து வரி கொடுக்க மாட்டோம் என்று போராடினால் இந்த நிகழ்ச்சியை மீடியாவுக்கு கொண்டு சென்று வெளிப்படுத்தினால் சரியான தீர்வு கிடைக்காதா?

முஸ்லிம்களிடம் மட்டும் அதிக வரி வாங்குவது எதற்காக? நகராட்சி சுகமாக தூங்குவா? ஒரு சேவையும் செய்யாமல் எதற்கு இவர்களுக்கு வரி?

 அதனால் நாம் செய்ய வேண்டியது ஆரம்ப நிலையில் உள்ள வைத்தியங்களை.

இறையச்சம், மறுமை அச்சம் உள்ள முஸ்லிம்களால் மட்டும்தான் சிறந்த நிர்வாகத்தை தரமுடியும்.

வாழ்த்துக்கள் சகோதரரே!

sabeer.abushahruk said...

நல்ல நோக்கமும் சமுதாய முன்னேற்றத்திற்கான அவசியமும் மிக அக்கறையுடன் சொல்லப்பட்டிருக்கிறது. நம் சமுதாயத்தால் மட்டுமே; ஓரிறைக் கொள்கையாளர்களால் மட்டுமே நல்லாட்சி தரமுடியும் என்பதும் ஆணித்தரமாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் "இறையச்சம் கொண்ட" ஓரிறைக்கொள்கையாளர்கள் என்கிற அலாவுதீனின் அபிப்ராயம் அபு ஈசாவின் கட்டுரைக்கு அணி சேர்க்கிறது.

தரமாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரை அதிரை நிருபரின் தரத்தை தக்க வைக்கிறது!

அபு ஈசா நிறைய எழுத வேண்டும்!

அபு ஈசா /அலாவுதீன்: முஸ்லீம்களால்தான் நல்லாட்சி தரமுடியும் என்றால் தற்காலத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் அரபு நாடுகளின் புரட்சியை எப்படி காண்பது? 

அதெல்லாம் அந்த காலம், சகாபாக்கள் காலம் இப்ப நாட்டை ஆளும் தகுதியில் எந்த முஸ்லிமும் இல்லை. சின்ன உதாரணத்திற்கு, தமிழக ஆட்சியை முஸ்லிமிடம் தருவதாகக் கொள்வோஅதெல்லாம் அந்த காலம், சகாபாக்கள் காலம் இப்ப நாட்டை ஆளும் தகுதியில் எந்த முஸ்லிமும் இல்லை. சின்ன உதாரணத்திற்கு, தமிழக ஆட்சியை முஸ்லிமிடம் தருவதாகக் கொள்வோம். யாரை முதல்வராக்குவது? இவரையா அவரையா உவரையா? என்று ஒரு மாற்று மத நண்பர் கேட்டார். என்ன சொல்ல? ஷரியத்தை அமல் படுத்த யார் சொல்வது சஹீ யார் சொல்வது தயீஃப்?

(கண்ணக் கட்டுதே யா அல்லாஹ்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே ஒரு விடயத்தை பதிந்தால் இச்சூழல் பொருத்தம் கருதி வாசிச்சுடுவீங்களாம் சரியா !

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் வார விடுமுறையாக வரும் அந்த ஞாயிற்றுக் கிழமை ஒவ்வொன்றும் திருநாளாகத்தான் தெரியும் ஆனால் எங்களை அச்சூழலுக்குள் உழலவிடாமல் காலையிலேயே எழுப்பி குழுவாக உட்காரவைத்து தர்பியத் வகுப்புகள் தொடர்ந்து நடத்துவார்கள் (யா அல்லாஹ் அந்த நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் அன்றைய செயல்கள் அனைத்தையும் அங்கீகரித்து அவர்களுக்கு நற்கூலி கொடுப்பாயாக).

ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்களை நீலாங்கரையில் இருந்த ஒரு பள்ளிவாசலுக்கு ஒரு நாள் தர்பியத் வகுப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம் அங்கே இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரர் அவர்கள் ஆற்றிய உரையில் இஸ்லாமிய அரசின் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை மற்றும் எளிமையின் ஆளுமை பற்றியும் எடுத்து வைத்து அருமையா உரையை நிகழ்த்தி உருக்கியெடுத்தார்கள் அங்கேயிருந்த அனைவரின் கண்களில் கண்ணீர் கொட்டியதை யாராலும் அதனை மறைக்க முடியவில்லை...

இந்த பயிற்சி முகாமில் அன்று கலந்து கொண்டவர்கள் இன்றைய நமது சமுதாயத்தின் பிரிந்து கிடக்கும் இயக்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், மற்ற நிரிவாகிகள் அனைவரும் வந்திருந்தனர், இன்னும் அவர்களின் அன்றைய செயல்கள் முறைகள் அப்படியே நிழலாடுகிறது !

Shameed said...

அபு ஈசா
//மகாத்மா காந்தி அவர்கள் மக்கள் உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்றால் கலிஃபா உமருடைய ஆட்சி வேண்டும் என்று ஆசைப்பட்டார்! அதனாலல்லவோ அவரைக் கொன்றொழித்தனர்//


அஸ்ஸலாமு அழைக்கும்

பழைய செய்தி என்றாலும் முதன் முதலாக கேள்விப்படும் செய்தியாக உள்ளது

இதுபோன்ற நாங்கள் அறியாதகவலுடன் அடிக்கடி வாருங்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபு ஈசா,

மிக அருமையான பதிவு. இஸ்லாமிய ஆட்சி பெயரலவிலேயே உள்ளது இன்றைய காலகட்டத்தில் பல இஸ்லாமிய நாடுகளில். இறைவன் நாடினால் இஸ்லாமிய ஆட்சி சாத்தியமே எங்கும். நாமும் முயற்சியில் இறங்க வேண்டும்.

தரமான ஆக்கத்தை தந்து, ஆட்சி அதிகாரத்திலும் நம் மார்க்கமே சரியானது என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளீர்கள் எங்கள் எல்லோருக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பழைய செய்தி என்றாலும் முதன் முதலாக கேள்விப்படும் செய்தியாக உள்ளது//

ஹமீது காக்கா இது போல் பழைய செய்தி நாம் கேள்வி படாதது நிறையா இருக்கு.. சகோதரர் அபு ஈசா போன்றவர்களின் பதிவுகளில் மூலம் நிச்சயம் நமக்கு இனிவரும் நாட்களில் காணமுடியும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// நாட்டு மக்கள் நலம்பெற வேண்டுமென்றால் நம் நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும். அதுவும் இது வரை இல்லாத புதிய அரசாக இருக்க வேண்டும்//
"இப்போதைக்கு வரும் தேர்தலில் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேயமக்கள் கட்சியின் கூட்டணி கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காமல் நமக்கு சாதகமாக, கண்டிப்பாக நிறைவேற்றக்கூடிய அதிக வாக்குறுதிகளை தருபவரையே ஆதரிக்கலாம்.அல்லது தேர்தலையே புறக்கணிப்போம் என்று ஊரே ஒன்றிணைந்து செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்".

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புச் சகோதரர்களே! பெரும்பாலும் இன்றைய சூழலில் முஸ்லிம்கள் வார்டு மெம்பர்களாக நமதூர் போன்ற முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் இருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலும் ஊழலில் ஊறிய கட்சிகளை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். மேலும் இவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கிறார்களே தவிர முஸ்லிம்களின் அடையாலமாக இருக்கிற தொழுகையை சரிவர நிரைவேற்றாதவர்களாக அலலது அரவே தொழாதவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம், இதே நிலையில் தான் பெரும்பாலான ஜமாஅத் தலைவர்கள் இருப்பதையும் பார்க்கிறோம். தயவு செய்து இவர்களை உதாரனமாகக் கொள்ள வேண்டாம்.

நான் இங்கே முஸ்லிம்கள் என்று பதிந்திருப்பது இறையச்ச முடையவர்களைத் தான். நேர்மையான மக்களெல்லாம் ஒதுங்கிவிடுவதன் காரனத்தால் தகுதியற்றவர்கள் இவ்விடத்தை நிறப்பி தவறான முன்னுதாரனஙகளாக ஆகிவிடுகிறார்கள். "பாதையில் கிடக்கிற மக்களுக்கு நோவினைத் தரும் பொருள்களை அகற்றுவது இறை நம்பிக்கையின் ஒரு கிளை" என்று சொல்கிற படைப்பாளன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு முஸ்லிமால் எவ்வாறு சமூக நலம் பேனாமல் இருக்க முடியும்.

கல்வி விழிப்புணர்வுக்குக் கலம் கண்டிருக்கிற இவ்வேலையில் அதிகார சபைகளிலும் நாம் இடம் பிடிக்க வேண்டும். இறையச்ச முடையவர்கள் அரசியல் ஹராம் என்று ஒதுங்கிவிடாமல் வார்டுப் பொறுப்புகளிருந்து அனைத்துப் பொறுப்புகளுக்கும் வர வேண்டும். மற்றவர்களும் இனம் கண்டு ஆதரவளிக்க வேண்டும் அதன் மூலமே சரியான சமூக அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அல்லாஹ் நாடுவானாக

ம அஸ்ஸலாம்
அபு ஈசா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கல்வி விழிப்புணர்வுக்குக் கலம் கண்டிருக்கிற இவ்வேலையில் அதிகார சபைகளிலும் நாம் இடம் பிடிக்க வேண்டும்.//

இன்ஷா அல்லாஹ்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு