கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2
வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்...
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!
எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?
கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
'சேடை' பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!
ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?
சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.
நேரம் தவறிய தூக்கம்
நிதானமற்ற நோக்கும்
வர்ண வண்ண உலகை
மங்கலாய் மற்றிக் காட்டும்.
உறக்கமும் இறத்தலும்
உக்கிர இருட்டு
பார்வை பழுதானால்
பகல்கூட இரவே!
கண்களை உருட்டி
களைப்பை விரட்டு
காலையும் மாலையும்
கண்களைக் கழுவு!
காய்கறி கீரையும்
காரட்டுச் சாரையும்
கலந்த சாப்பாடு
கண் பார்வைக்கு காப்பீடு!
முகத்திற்கு நேரே
விளக்கொளி தவிர்த்து
வாசிக்கும் வரிகளில்
வெளிச்சம் பாய்ச்சு!
இறைவன் இமைகள்
தந்திராவிடில்
கண்களைக் காத்தல்
கடினமா யிருந்திருக்கும்!
கண்களைப் பேண்
களங்களைக் காண்!
-- சபீர்
Sabeer.abuShahruk
Sabeer.abuShahruk
19 Responses So Far:
அன்பு சகோதரர்களே,
குழந்தைகளின் கண்பார்வை தொடர்பான விழிப்புணர்வு பதிவு முதன் முதலில் சகோதரர் தாஜுதீன் எழுதிய "எங்கே செல்கிறது இந்த பாதை -6" என்ற முதல் பதிவை கண்பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 1 என்றும் சகோதரர் சபீர் அவர்களின் "கண்மணியே கவனி" என்ற இந்த பதிவை கண்பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2 என்றும் தொடராக பதியப்பட்டுள்ளது. இனிவரும் கண்பார்வை தொடர்பான பதிவுகள் தொடர்களாக வெளிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கண்பார்வை தொடர்பான தகவல்கள் உங்களிடம் இருந்தால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் நிச்சயம் உடனே பதிந்துவிடுகிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
கவி காக்கா, மிகத் தெளிவாக கிட்டப்பார்வை, தூரப்பார்வையுள்ளவர்களுக்கும் எளிதில் புரியும்படி சொல்லியுள்ளீர்கள். தங்க்ஸ்..
//சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.//
எவ்வளவோ சொல்லியும் சின்னத்திரைக்கு இன்னும் நம் மக்கள் அடிமை, இந்த கவிதையை படித்தாவது போகட்டும் அவர்களின் மடமை.
வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்...
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல தொரு சமூக பார்வையுடன் துவக்கம். வழிமேல் விழி வைத்து வரவேற்க வேண்டியதே! கவிஞரே ஆரம்பமே அசத்தல்.
எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?
கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
'சேடை' பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!
ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?
--------------------------------------------------------------------
அக்கரையுடன் கூடிய அனுதாபமும்,ஆலோசனையும்.இந்த சமூகத்தில் உள்ள அவலம் பெண்பிள்ளைக்கு பார்வையில் கோளாறு என்றால் பழித்து பேசும் உலகம். உலகின் வித்தியாசமான பார்வை கோளாறு. அந்த கண்ணில்லாதவர்களின் அவல பார்வை இவையெல்லாம் தவிர்பது அவசியம், எவ்வளவு கவனித்து எழுதப்பட்ட வரிகள். சோடாமுட்டி,முட்டை கண்ணா இப்படி ஏச்சும்,ஏளனமும் பார்க்கத்தானே செய்கிறோம்.இங்கே சமுதாயத்தின் அவல பார்வை அலசிய விதம். நல்ல பார்வை பார்திருக்கிறார் அன்பு கவிஞர்.
சோடா புட்டின்னு திருத்தி படிக்கவும். தாமதமாகத்தான் கவனிததேன் என் கண்ணில் என்ன கோளாறோ????தெரியவில்லை.
சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.
--------------------------------------------------------------------
அருமை கவிஞரே! கால நேரத்தை விழுங்கும் இவையாவும் கண்ணொளியை திண்றுவிடும் என்ற உவமானம் அப்பப்பா, எப்படி கவனித்து எழுதிவீர்களோ!!!! வியக்கிறேன். சரியா பார்கலைன்னா என்ன கண்ண தூக்கி தின்னுட்டியான்னு சிலர் ஏச பார்த்திருக்கேன்,ஏன் நானே என்னை சொல்ல கேட்டிருக்கேன்.
நேரம் தவறிய தூக்கம்
நிதானமற்ற நோக்கும்
வர்ண வண்ண உலகை
மங்கலாய் மற்றிக் காட்டும்.
உறக்கமும் இறத்தலும்
உக்கிர இருட்டு
பார்வை பழுதானால்
பகல்கூட இரவே!
---செய்யும் தவறினால் விளையும் வினையினை விழிக்கு மொழி வழியாய் விளக்கியவிதம் பளீர் என்ற பார்வையாய் மனதில் பதிகிறது.---------------------------------------------------------------
கண்களை உருட்டி
களைப்பை விரட்டு
காலையும் மாலையும்
கண்களைக் கழுவு!
காய்கறி கீரையும்
காரட்டுச் சாரையும்
கலந்த சாப்பாடு
கண் பார்வைக்கு காப்பீடு.
---------------------- -------------------------------------------
நடைமுறை படுத்தவேண்டியதை மிக அழகாய் சிலவரிகளிலேயே சொல்லிய சொல்லின் செல்வர். இங்கே கண் மருத்துவராய் மாறியது விந்தை அல்ல. வரும் முன் காப்போம் என்பதை இவ்வளவு எளிதாய் எழுத முடியும்>??? வாழ்துக்கள் கவிகன்னலே!------------------------------
முகத்திற்கு நேரே
விளக்கொளி தவிர்த்து
வாசிக்கும் வரிகளில்
வெளிச்சம் பாய்ச்சு.
---------------------------------------------------------------------
இங்கே கவனிப்பதை ஊன்ற கவனி என்பதையும். தீர்க்க பார்வை பார் அது அறிவின் பார்வையாகட்டும் என்பதையும் கவியாய் புனைந்த அர்தம்.... அல்ஹம்துலில்லாஹ்.. அறிவில் வெளிச்சம் பாய்ந்து அந்த உணர்வு இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது... மற்றவர்களுக்கும் ஓடும்.
இறைவன் இமைகள்
தந்திராவிடில்
கண்களைக் காத்தல்
கடினமா யிருந்திருக்கும்!
கண்களைப் பேண்
களங்களைக் காண்!
---------------------------------------------------------------------
இங்கேயும் சமூக பார்வை பார்க சொல்லியவிதம் அருமையோ,அருமை!.கண்ணை இமை காப்பது போல் நம் சமூகம் காப்பது நம் கடமை. அதுபோல் சமூகத்தின் மேல் விழிம் பழி தீர்க சமூகத்தை அக்கரை கண்ணுடன் பார்வையுடன் பார். களம் காண்! களம் என்பது இடத்தையல்ல . நம் இனத்தை பார் இது விழியிலிருந்து மட்டுமல்ல. உன் சிந்தனையிலிருந்தும். கவிஞர் சொல்ல வந்ததை என்னால் முடிந்த அளவு சொல்லிவிட்டேன் கவிஞரே ! சரியா? நீங்கத்தான் சொல்லனும்.
குறிப்பு: கவிஞரே! பார்வை அவசியம் என்பதை சொல்லும் போதே சமூக பார்வையும் அவசியம் என்பதை விளக்கியவிதம் மிக அருமை. பாட புத்தகத்தில் லட்சியம் என்ற தலைப்பில் வைக்க தக்க தகுதி பெற்ற கவிதை. வாழ்துக்கள். வாழ்க பல்லாண்டு, வளம் பல கண்டு. உங்கள் சமூக அக்கரை அல்லாஹ்வால் ஏற்று கொள்ளப்படும் இன்ஷா அல்லாஹ்.
முதலில்,
கிரவ்ன்(னு) : பிரித்தாளும் சூழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்தேறும் தேர்தல் தருமனிது, இத்தருனத்தில் பிரித்து ஆயுந்து அதிரைநிருபரின் விழிக் கவிக்கோர் உரை எழுதியிருக்கும் கிரவுனின் அடுக்கடுக்கான விரிவுரை உறங்கிய என்னை சீக்கிரமே விழி திறக்க வைத்தும் விட்டது(டா)ப்பா !
இரண்டாவதாக,
கவிக் காக்கா : ஏற்கனவே உங்களை (நாங்கள்) கவிக் காக்கா, அதிரைக் கவி, அதிரைநிருபரின் ஆஸ்தானக் கவி இப்படி அழைத்தும் மற்றும் மொரு பெயரைச் சொல்லி அழைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை இனிமேலும் இப்படியும் அழைப்பேன் "மொழியின் விழி" - யே என்று(ம்).
அடுத்து..
//ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?//
ஆஹா.. இதே ஒரப் பார்வையை சினிமாக் கவிகளோ அல்லது இலக்கிய கவிகளோ விரசம் கொட்டி சொட்டச் சொட்டச் சொல்வார்கள் ஆனால் உங்களின் "துயரம்" விலகும் பார்வையே அருமை !
ஒரு சொடுக்கு : முன்பு (நான்)எழுதியது(தான்) இப்படி:
அட நட்பே..
இமையே சுமையானது
மூக்குக்குமேல் கண்ணாடி
மூன்றாவது இமையாக !
சலாம்
ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?
எப்படி பெரியண்ணா துயர...துள்ளள்ளல்லவா?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) : சகோதரர் : தஸ்தகீர் அவர்களின் கருத்துக்களை வழிமொழிகிறேன். கண்ணில் கவனம் வேண்டுமென்பதை அழகான கவியில் சொன்ன அதிரை கவி சபீருக்கு வாழ்த்துக்கள்!
விழி திறந்தேன் - வெளிச்சம் கண்டேன்
விழித்திருந்தேன் - உறக்கம் இமைக்கச் சொல்கிறது...
ரியாஸ்,
தூரப் பார்வை துள்ளல்களா? வீட்டுக்குத் தெரியும?
நீ பார்த்த தூரப் பார்வை துள்ளல்களாயிருக்கலாம். நான் சொல்வது தூர உள்ளவை மட்டுமே தெரியும் குறைபாடு. (இப்பிடி பார்த்துப் பார்த்தே எல்லாம் கோட்டிப்பொச்சு. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு கிரவுன்ட் பத்தலயாம் போய்டாதேட அந்தப்பக்கம்)
(இப்பிடி பார்த்துப் பார்த்தே எல்லாம் கோட்டிப்பொச்சு. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு "கிரவுன்"ட் பத்தலயாம் போய்டாதேட அந்தப்பக்கம்).
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.கிரவுன்" போட்டுகிட்டா மறச்சிடலாம்.
இருட்(ளை)டை போக்கும் வரிகள்
கருத்திட்ட கண்மணிகளுக்கு நன்றி!
இறைவனுக்கு நன்றி
கிரவுன்
வலைப்பூவில்
மீண்டும் வந்ததற்கும்
வலியிலிருந்து
மீண்டு வந்ததற்கும்!
(அவருக்கு மட்டும்தான் வார்த்தைகள் வரிசையில் நிற்குமா என்ன?)
கவிக்காக்காவின் இந்த கவிதை...சகோ.கிரவுன் சொன்னதுபோல் குழந்தைகள் பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஒன்று...மீண்டும் உங்கள் சமுக அக்கறையை அற்புதமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ஆஸ்தான கவியே...கண் இறைவனின் மிகப்பெரிய பரிசு...அதை பாதுகாப்பது தலையாய கடமை
Post a Comment