ஸ்ஸ் யப்பாப்பா என்னாமா கடுப்பேத்துறாங்க என்ற புலம்பல் அடிக்கடி காதில் விழுந்தவண்ணம் உள்ளது அலுவலக வேலை செல்பவர்களிடமிருந்து. ஒரு பக்கம் கஸ்டப்படுத்திக்கிட்டே இருக்கும் கஸ்டமர், முரைத்துக்கொண்டே இருக்கும் மேனேஜர், எப்போதும் சூடாவே இருக்கும் சூப்பர்வைசர் என்று மாட்டிக் கொண்டிருக்கொண்டு தவிக்கும் சிலரின் நிலையை உதாரணமாக இங்கு உங்கள் பார்வைக்காக. இது முழுக்க முழுக்க மனசாட்சியற்ற மேலாளர்கள், வாடிக்கையாளர்களை குறித்தே பதியப்பட்டுள்ளது.
அடுத்தது யாரு?
உலகில் எத்தனையோ நல்ல மேலாளர்களும் வாடிக்கையாளர்களும் உள்ளார்கள், இந்த பதிவு அவர்களை எந்த வகையிலும் குறிப்பிடவில்லை. தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களை தன் வீட்டில் உள்ளவர்கள் போல் நடத்துகிறார்கள் சில நல்லவர்கள்.
இதை படிக்கும் உங்களின் அலுவலக சூழ்நிலை மேலே பதியப்பட்டுள்ள உள்ள புகைப்படங்கள் போல் இல்லை என்றால் அது ஆச்சரியமே இன்றைய காலகட்டத்தில் !
இதை படிக்கும் உங்களின் அலுவலக சூழ்நிலை மேலே பதியப்பட்டுள்ள உள்ள புகைப்படங்கள் போல் இல்லை என்றால் அது ஆச்சரியமே இன்றைய காலகட்டத்தில் !
அதிரைநிருபர் குழு
நன்றி: அப்துல் மாலிக் (புகைப்படத்துக்காக)
14 Responses So Far:
பிடுங்கில எடுப்பாய்ங்க ! ஒன்னு ஒன்னா யோசிச்சு சொல்லனும் ஏன்னா ஏன்யா யோசிக்கிறேன்னு பின்னாடி வந்தும் நிப்பாய்ங்க (ஆஃபீஸில்)
தாங்கள் செய்துள்ள அந்த கற்பனையை அப்படியே தேர்தல் வேட்டை என்று உல்டாவாக்கி, Client என்பதை அதிமுக எனவும், Supervisor என்பதை காங்கிரஸ் எனவும், Manager என்பதை திமுக எனவும் Employee என்பதை முஸ்லிம்கள்/இஸ்லாமிய இயக்கங்கள் எனவும் சிறிது கற்பனை செய்து பாருங்கள்.
என் சிந்தனையும், மூளையும் அவ்வாறுதான் செயல்படுகின்றது. எனக்கு மாற்றியோசிக்க வரமாட்டேங்குதே!.........
சேல்ஸ் இல்லை என்றால் மேனேஜர் துரத்துறான்,
பிஸினஸ் கொடுத்துவிட்டு கஸ்டமர் துரத்துறான்,
கஸ்டமரிடம் காசோலை வசூலிச்சுட்டுவர சொல்லி சூப்பர்வைசர் விரட்டுறான்,
வசூலிக்க நாம் போனால் புலி கொழியை விரட்டுறது போல் விரட்டுறான் நம் கஸ்டமர் சர்விஸ் சரியில்லை என்று,
சரியான அக்கப்போர்....... புலிவாளை பிடித்த கதை தான் வெளிநாட்டு வாழ்க்கை... சிலருக்கு மட்டுமே சொகுசு வாழ்க்கை....
சகோதரர் முஜீப்,
மேல் உள்ள புகைப்படங்கள் நீங்கள் சொன்ன உதாரணத்து முழுமையாக பொருந்தும், மேலும் முஸ்லீம் இயக்கங்களையும் மேனேஜர் சூப்பர்வைசர் லிஸ்ல சேர்த்துவிட்டு, Employee என்பதை முஸ்லிம்கள் என கற்பனை செய்து பாருங்கள்
தாஜுதீன் சொன்னது…
//முஸ்லீம் இயக்கங்களையும் மேனேஜர் சூப்பர்வைசர் லிஸ்ல சேர்த்துவிட்டு, Employee என்பதை முஸ்லிம்கள் என கற்பனை செய்து பாருங்கள்//
அப்படி ஒரு விபரீத கற்பனையை செஞ்சும் பார்த்தேன்!... ஆனால் எங்கேயோ இடிக்குது!.... அவர்களுக்கு அந்த அளவிற்கு மூளை இருந்தால், நாம் தப்பிச்சு ஓடுவதிலாவது ஒரு அனுபவத்தை பெற்று இருப்போமே!. எங்கேயோ சென்றிருப்போமே!....
ஆனால் அங்கே புளிகளுக்குள்ளே (Client/Supervisor/Manager) அல்லவா சண்டையே நடக்கின்றது!. பின்னே அடுத்தவங்களை எங்கே துரத்திப்பிடித்து நம் வீரத்தே காட்டுறது!.....
அதிரை முஜுப் சொன்னார்கள்...//Client என்பதை அதிமுக எனவும், Supervisor என்பதை காங்கிரஸ் எனவும், Manager என்பதை திமுக எனவும் Employee என்பதை முஸ்லிம்கள்/இஸ்லாமிய இயக்கங்கள் எனவும் சிறிது கற்பனை செய்து பாருங்கள்.//
எல்லாவற்றையும் சேர்த்து, ஹிந்து ஃபாசிசம் என்று பார்த்தால் இன்னும் பொருத்தமாக இருக்கு...
//என் சிந்தனையும், மூளையும் அவ்வாறுதான் செயல்படுகின்றது. எனக்கு மாற்றியோசிக்க வரமாட்டேங்குதே!//
சகோதரா இந்த யோசனை சரியாதே!
நமது புரட்சித் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்கள் சொன்னார்கள்.
"இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுச்சிக்காவும் உங்களால் யோசிக்க முடியுமென்றால் யோசியுங்கள், எழுதமுடியுமென்றால் எழுதுங்கள், பேசமுடியும் மென்றால் பேசுங்கள்"
இப்போது சொல்லுங்கள்... உங்களின் யோசனையும் எழுத்தும் சரித்தானே...
சிந்தனை சிற்ப்பிகள் அருமையாக / அவசியமானதை உரையாடுவதை அமைதிய கிரகித்து கொண்டு இருக்கிறோம்..மாலிக்காக்கா..இருந்தாலும் மேனஜரை இந்த அளவிற்க்கு கொடுமையாக காட்டி இருக்க கூடாது :))
ஆமா யாசிர்,
பட்டான்களையும் பங்காலிககையும் அரபிகளையும் வேலைக்கு வைத்துக்கொண்டு, ஒப்பனை மட்டுமே தகுதியெனக்கொண்ட காரியதரிசினிகளையும் சகித்துக்கொண்டு அவதிப்படுகிற மேனேஜர்களும் இருக்காங்க மாலிக்.
வேலைநேரத்தில் எங்களைப்பார்த்தால் அசல் கொறளிவித்தைக்காரன் மாதிரியே இருப்போம். ரொம்ப குஷ்டமப்...சாரி...கஷ்டமப்பா!
ஐயா நல்ல மேலாளர்களே,
உங்களை அவஸ்தைக்குள்ளாக்குபவர்களை பற்றிய பதிவு விரைவில் வெளிவரும் புகைப்படத்துடன்.
சகோதரர் மாலிக் கொஞ்ச தேடுங்க நல்ல புகைப்படத்தை.
தம்பி யாசிர் : அதிகப்படித்த வாக ஓட்டுநர்கள், உலகமே உள்ளங்கையில் என்றிருக்கும் கொஞ்சமா படிச்சவங்க, இருக்கையே இரும்புக் கோட்டை என்றிருக்கும் இவய்ங்களையும் வச்சுண்டு தினமும் பொழுது கழியனுமே அதன் அவஸ்தை புரிய வாய்ப்பில்லைதானே...
இது ஒருபக்கம், ஆனா பொது மேளாலர்னு ஒருவர் இருப்பாரே அவருக்கு கணினியின் விசைப்பலகையில் "A" அடுத்து "N" எங்கே இருக்கிறதுன்னு சொல்லித்தர கொடுமையிருகே... கீழிருந்து மேல் இரண்டாவது வரிசையில் மூன்றாவது பொத்தான்னு சொல்லுறது இருக்கே...
//Yasir சொன்னது…
சிந்தனை சிற்ப்பிகள் அருமையாக / அவசியமானதை உரையாடுவதை அமைதிய கிரகித்து கொண்டு இருக்கிறோம்..மாலிக்காக்கா..இருந்தாலும் மேனஜரை இந்த அளவிற்க்கு கொடுமையாக காட்டி இருக்க கூடாது :)) /
யாஸிர் காக்கா ஒரு 6 மாதம் புது மேனேஜர் என்னைய டேமேஜ் பண்ணிட்டான் அந்த கடுப்புளே இந்த படங்களை தேடி எடுத்தேன்
//தாஜுதீன் சொன்னது…
ஐயா நல்ல மேலாளர்களே,
உங்களை அவஸ்தைக்குள்ளாக்குபவர்களை பற்றிய பதிவு விரைவில் வெளிவரும் புகைப்படத்துடன்.
சகோதரர் மாலிக் கொஞ்ச தேடுங்க நல்ல புகைப்படத்தை/
தாஜுகாக்கா இதுவே போதும்னு நினைக்கிறேன், இதுக்கு மேலே என்னை விமர்சித்து எவனாவது இதவிட மோசமான புகைப்படத்தை அனுப்பிட போறானுவோ, தாம் பெற்ற துன்பம் வேண்டாம் எம் குழுவுக்கு..)))
எண்டர் கீ என்றால் என்னவெண்று சொல்லிதரனும் அபுஇபுறாகீம் காக்கா, அப்போ வரும் பாருங்க ஒரு கடுடுடுடுடுடுடுப்ப்ப்ப்பூ...
// எண்டர் கீ என்றால் என்னவெண்று சொல்லிதரனும் அபுஇபுறாகீம் காக்கா, அப்போ வரும் பாருங்க ஒரு கடுடுடுடுடுடுடுப்ப்ப்ப்பூ...///
தம்பி அப்துல்மாலிக்: பொது(வான)மேலாளர்(னு) வர்ரவய்ங்களெல்லாம் இப்படித்தானோ ? துறைசார்ந்தவங்களா இருந்தா ஒருவேலை அவய்ங்களுக்கு தெரிந்திருக்கும் போல்... இதையேன் கேட்கிறீங்க ! அவர் சேர்ந்த ஆரம்ப நேரத்தில் இண்டர்காமில் சொல்லிக் கொண்டிருக்கும்போது வெறுப்பில் கிபோர்டு தெரியுமான்னு கேட்டேன் அவரிடம் அதற்கு அதே மேலாளர் சொன்னார் "I know keyboard"ன்னு..
மீண்டும் நான் கேட்டேன் எந்தக் கீபோர்டுன்னு அதற்கு அவர் காட்டிய சாவிக் கொலுவி வைக்கும் கீபோர்டை காட்டினார் கோபத்தில் அவரின் செய்கையை வெளிர் கண்ணாடி வழியே கண்ட காட்சியிது... இவர் பேசினால் பெரும்பாலும் காத்துதான் வரும் உச்சரிப்பு வராது !
Post a Comment