Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இளம் தூறல்கள்! 35

அதிரைநிருபர் | March 24, 2011 | , ,

என்
அன்புக் கணவா
உன்
அன்பு கனவா?

உனை யெனக்கு
மணம் பேசிய
தினம் வீசிய
வசிய மணம்
நினை விருக்கா?

அந்நாள் முதல்
என் வீட்டுப்
பின் முற்றத்தில்
முருங்கைப் பூவில்
முல்லை மலர் வாசம்
வேப்பமரக் காற்றும்
தேனினிக்க வீசும்!

முற்றத்து தோட்டத்தில்
என்னையே
உற்றுப்பார்த்த
ஒற்றை ரோஜாவுக்கு
உன் பெயர் வைத்தேன்!
குட்டிச்சுவர் அணிலும்
சிட்டுக் குருவிகளும்
கரையாத காகமும்
கருந்திரள் மேகமும்
சித்தெறும்பு சாரையும்
சிறியதொரு தேரையும்
என
எல்லாமும் நீயாகி
என்னையேப் பார்க்க
வெட்கி முகம் சிவந்தேன்!

தோழிகள் தவிர்த்து
கோழிகள் வளர்த்தேன்
தென்னையின் நிழலிலும்
உன்னையே உணர்ந்தேன்!

உன்னையே உண்டு
உன்னையே அருந்தி
உனக்காக உடுத்தி
உன் நினைவில் உழன்று
உன்
நினைவென்ற வட்டத்துள்
என்
உலகம் சுருங்கியது!

கொல்லைப்புறக் காற்றில்
கனத்த உன்
நினைவுகளைச் சுமந்தேன்!

வெயிலும் தூறலும்
கலந்த ஒரு
வானவில் தோரண நாளில்
திருகாணித் தோடணிந்த -என்
மருதாணிக் கை பிடித்தாய்!

என்
பெயர் முதல்
உயிர் வரை
அத்தனையிலும்
உனை இணைத்தாய்...
என்
சொல் முதல்
பொருள் வரை
அர்த்தம் மற்றிப்போட்டாய்!

காலையும் மாலையும்
கனவும் நினைவும்
இருத்தலும் இறத்தலும்
இரவும் உறவுகளும்
எல்லாம்
மங்கலாய்த் தெரிய
நீமட்டும் நிலைத்தாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்தாய்!

உன்னுயிரை
எனக்குள் விதைத்து
என்னுயிரை
உன்னோடு கொய்து
எங்கோ போனதும்...

கொல்லைப்புறம் எனக்கு
தொல்லை தரலானது
அணில் முதல் ஆடு வரை
இணையோடு நின்றது!

திரைகடலோடி நீ
திரவியம் தேட
அலைபேசி எனக்கு
ஆறாம் விரலானது!

கணினித் திரையில்
இனி நீ தெரிவாய்
கற்கண்டு மொழியில்
காதினில் இனிப்பாய்!

மற்றுமொரு
வானவில்தினம்
வரும்வரை
உயிரிலும்
வயிற்றிலும் உனையே சுமந்து
காத்திருக்கிறேன்!

காத்திருப்பதுதான்...
கவுரவமான காதல்!

-- சபீர்
-Sabeer.abuShahruk

35 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

இது தினசரி கனவு வெளிநாட்டு வாழ் கணவன்மார்களின் மனைவிமார்களுக்கு..

இது போன்ற புலம்பல்களை நம் வருங்கால சமுதாயத்தில் இருக்கது என்பது நம் நம்பிக்கை.

//திரைகடலோடி நீ
திரவியம் தேட

அலைபேசி எனக்கு
ஆறாம் விரலானது!//

100% உண்மை.

இங்கு ஒரு செய்தி.. மிஸ்ட் கால் டாக்கிங் என்று ஒன்று உள்ளது. காலை பகல் மாலை இரவு என்று.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அருமை கணவனே!என் மேல் நீ கொண்டிருக்கும் அன்பு கனவா? நிசமா? எனத்தோன்ற என்னை விட்டு பொருள் தேடி போனயே!எனைவிட பொருள் சிறந்ததா?உனை யெனக்கு
மணம் பேசிய
தினம் வீசிய
வசிய மணம்
நினை விருக்கா?
அந்நாள் முதல்
என் வீட்டுப்
பின் முற்றத்தில்
முருங்கைப் பூவில்
முல்லை மலர் வாசம்
வேப்பமரக் காற்றும்
தேனினிக்க வீசும்!வேப்ப மரமும் அப்ப இனிய காற்று வீசும்,இப்ப வெப்ப காற்று வீசுதே!

crown said...

இதய ராஜாவே!முற்றத்து தோட்டத்தில் என்னை உற்றுபார்த்த ரோஜாவிற்க்கு உன் பெயர் வைத்து உன் பெயரை அதன் காதில் தென்றலாய் மெல்ல பேசினேன். ஓடுவன, நடப்பன,பறப்பன எல்லாவறையும் உன்னை உருவகப்படுத்தி பார்த்து ரசித்தேன். காணும் திசையில் உள்ள பொருளெல்லாம் எனை காண்பதுபோல் ஒரு குறுகுறுப்பில் மிதந்துவந்தேன்.இன்று இவையாவும் கானல் நீர்போல் உணர்ந்து கண்ணீர் பெருகுதே என் கனவா.

crown said...

தோழிகள் தவிர்த்து
கோழிகள் வளர்த்தேன்

தென்னையின் நிழலிலும்
உன்னையே உணர்ந்தேன்!
---------------------------------------------------------------------
தோழிகள் இருந்தால் அவளைத்தேடி போகும் சமயம் உன்னை பிரிய நேருமே பிரியமானவனே என்பதால் வீட்டைச்சுற்றும் கோழிகளை வளர்த்தேன். எனை விட்டு வெளியே செல்லும் போதில் உன்னிடம் சொல்லவந்ததை,கோழிகளிடம் சொல்லி ஒத்திகைப்பார்த்து நீ வரும் வரையும் நேரம் கழித்தேன். பின் நிழலுக்கு தென்னையின் கீழே ஒதுங்கிய நேரம் உந்தன் நிழல் என்மேல் விழுவதாய் கர்பனை செய்துமகிழ்ந்தேன்.இன்று கோழிகளுமில்லை,தென்னை நிழல் சுகம் தரவில்லை. நீஅருகில் இல்லாத பொழுதுகள் வெற்று பொழுதாய் மனது சுடுகிறது.

crown said...

உன்னையே உண்டு
உன்னையே அருந்தி
உனக்காக உடுத்தி
உன் நினைவில் உழன்று
உன்
நினைவென்ற வட்டத்துள்
என்
உலகம் சுருங்கியது!
---------------------------------------------------------------------
நான் முன்பு எழுதியதை இங்கே பதிகிறேன் கவிஞரே! இது எப்படி உள்ளது என சொல்லுங்கள்.
(உன் நினைவுகளை உணவாக உண்டு செறித்து வரும் ஏப்பமெல்லாம் உன் பெயராகவே வருகிறது).
------------------------------------------
உனக்காய் உடுத்தி,உண்டு ,உறங்கி என் உலகமே நீ எனச்சுருக்கி வாழ்ந்தேன். உலகின் ஏதோ ஒருகோடியில் நீயும், மறுகோடியில் நானும் ,காலம் செய்த கோலத்தில் இந்த ஞாலம் எனக்கு சிறையா? இல்லை நான் தனியே தங்கும் அறையா?குழம்பி புலம்புகின்றேன்.

crown said...

என்
பெயர் முதல்
உயிர் வரை
அத்தனையிலும்

உனை இணைத்தாய்...
என்
சொல் முதல்
பொருள் வரை
அர்த்தம் மற்றிப்போட்டாய்!
---------------
என் ரசனையும்,விருப்பமும்,உன்னைச்சார்ந்தே அமைந்தது.என் பெயரின் விலாசமும்.என் சுவாசமும் உன்னை சுமந்தது.

crown said...

காலையும் மாலையும்
கனவும் நினைவும்
இருத்தலும் இறத்தலும்
இரவும் உறவுகளும்
எல்லாம்
மங்கலாய்த் தெரிய
நீமட்டும் நிலைத்தாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்தாய்!
------------------------------------------------
கால நேரம் தெரியாமல் ,உன் நினைவின் அவஸ்தையில் விவரம்கெட்டவள் என்ற பெயர் தாங்கி.மற்றவர் வாழ்கின்றனரா?சொந்த பந்தத்தில் ஏதும் இறப்பா? எதும் தெரியாமல் உன்னிவைவில் மட்டுமே வாழ்வதால் ,மனப்பிரழ்வோ?பேய்,கீ பிடித்திருக்குமோ சுற்றமும்.சொந்தமும் கேலியும்,கவலையுமாய் பேசிக்கொளவதை காதில் போடும் நிலையில் நான் இல்லை என் காதல் கணவனே!

crown said...

திரைகடலோடி நீ
திரவியம் தேட

அலைபேசி எனக்கு
ஆறாம் விரலானது!


கணினித் திரையில்
இனி நீ தெரிவாய்
கற்கண்டு மொழியில்
காதினில் இனிப்பாய்!
---------------------------------------------------------------------
இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் கவிஞரே! எல்லாமும் சொல்லிவிட்டு ,கிரவுன் ஏதாவது சொல்லட்டும் என்று என்னை இக்கட்டில் மாட்டிவிடும் நீங்கள் இவ்வளவையும் எழுதிவிட்டு ஏசி ரூமில் ஈசிச்சேரில் சாய்ந்து கிரிக்கெட் பார்க்க தாயரா இருப்பீர்கள் என்பாடு ஏதாவது கிருக்கிவைக்க திண்டாட்டம்தான் போங்க. எளிய நடையில் அழகாய் எழுதியதை கடினமாக நான் ஆக்கிவிடுகிறேன் ஆனாலும் பெரும்தன்மையாய் ஆஹா,ஓஹோன்னு எனக்கு பாரட்டு சிரிப்புதான் வருகிறது.

crown said...

உன் உயிரையும் என் உயிருரையும் கயிருத்திரித்து தொப்புள் கொடி உறவு தந்துவிட்டு என் உயிரை கொண்டு சென்றாயே! உன் உயிரையும் ,உயிரின் உயிரையும் தாங்கிக்கொண்டு உன் வருகைக்காய் ஏங்கிகொண்டும் உயிரை விட்டு உயிர் வளர்கிறது அந்த உயிருக்காகவும், என் உயிர் உயிருடன் சேர்ந்து வாழவும் நாட்களை கடக்கிறேன். அன்பு காதலால், ஆதலால் நீ வரும் நாள் வரை காத்திருக்கிறேன் .காத்திருப்பது கவுரவமான காதல்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இளம் தூறல்கள் என்பதால் குடையேதுமின்றி நனைந்தே விட்டேன்....

- துளிகள் சொட்டச் சொட்ட கேட்கப்பட்டது அந்த இளம் தூறளிடம் இதனை நியா எழுதினாய் என்று !?

- இப்புடியெல்லாம் ரசித்திடுவாய் என்று அன்றே தெரிந்திருந்தால் உம்முசாருக் ராத்தா மாப்பிளையை வைத்து இதனை எழுதச் சொல்லியிருக்க மாட்டேனே என்று...

என்ன சொல்வது கவிக் காக்கா !?

வருடும் வரிகள் அப்படியே வாசிக்கிறது அற்புதமான இளம் தூறல்களை....

Unknown said...

என்
அன்புக் கணவா
உன்
அன்பு கனவா?
-----------------------------
முதல் வரியே டாப் கியரில் ஜிவ்வென்ன்று .................
----------------------------------------------------------------------
--மற்றுமொரு
வானவில்தினம்
வரும்வரை
உயிரிலும்
வயிற்றிலும் உனையே சுமந்து
காத்திருக்கிறேன்!
-----------------------------
விடியல் தெரியாமல் நகர்ந்திடும்
நாட்கள் யாவும் நரகமே .............

sabeer.abushahruk said...

crown:
உன் நினைவுகளை 
உணவாக உண்டு 
செறித்து வரும் ஏப்பமெல்லாம் 
உன் பெயராகவே வருகிறது).

...என்று முடித்தால் காதல்!

உன் நினைவுகளை 
உணவாக உண்டு 
செறித்து வரும் ஏப்பமெல்லாம் 
உன் பெயராகவே வருகிறது).
எனில்
நீ
என்னுள் வியாபித்தது
மூச்சு முட்டலா
வாயுத் தொல்லையா?
...என்று முடித்தால் அது டாவு!

Yasir said...

கவிக்காக்காவின் மற்றுமொரு மயிலிறகு வருடல்...கவிதையை படிக்கும் போது என்னே சுகம் அப்பப்பா...அருமை காக்கா...ரொம்பவும் நனைந்து விட்டேன் இந்த இளம் தூறலில்

//காலையும் மாலையும்
கனவும் நினைவும்
இருத்தலும் இறத்தலும்
இரவும் உறவுகளும்
எல்லாம்
மங்கலாய்த் தெரிய
நீமட்டும் நிலைத்தாய்
நெஞ்சமெல்லாம் நிறைந்தாய்!// நான் ரசித்த வரிகள்....

அப்துல்மாலிக் said...

பல விவாதங்கள், பிரச்சினை, தேர்தல் ஜுரம் இவற்றிற்கு மத்தியில் அருமையான காதல் ரசம் சொட்டும் ஒரு பிரிவுக்கவிதை. படித்தேன், லயித்தேன், ரசித்தேன், தவிக்கிறேன் (உயிரின் தவிப்பை உணர்த்தியதால்)

அருமை சபீர் காக்கா, இது உங்களுக்கு வந்த கடிதம் என்று சொல்லவில்லை, இருக்கலாம் யாருக்கு தெரியும்

Yasir said...

///நீ
என்னுள் வியாபித்தது
மூச்சு முட்டலா
வாயுத் தொல்லையா?
...என்று முடித்தால் அது டாவு!/// ரொம்பவும் குசும்பு தான் காக்கா

அப்துல்மாலிக் said...

//தோழிகள் தவிர்த்து
கோழிகள் வளர்த்தேன்
தென்னையின் நிழலிலும்
உன்னையே உணர்ந்தேன்!

/

தோழிகள் இருந்தாலாவது ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம், கோழியிடம் ஆறுதலும், தென்னையில் நிழலும் கிடைக்காது.. ஆஹா பிரிவின் துயரத்தை இதைவிட தத்ரூபமாக சொல்லமுடியாது

N.A.Shahul Hameed said...

«Õ¨Á ¾õÀ¢ „À£÷,
¯ñ¨Á¢§Ä§Â «ºò¾¢ðËí¸. ¯í¸Ù¨¼Â ¬ì¸í¸¨Ç ±øÄ¡õ ¦¾¡ÌòÐ ´Õ áÄ¡¸ô §À¡ð¼¡ø ±ýÉ?
®ýÈ ¦À¡Ø¾¢ø ¦ÀâÐÅìÌõ ¾¡ö §À¡ø ±ÉìÌô ¦ÀÕ¨Á¡ö þÕ츢ýÈÐ.
º¢Ä Åâ¸û ±ý ¸ñ½¢ø ¿£÷ ÅèÅòÐÅ¢ð¼É. «ÑÀÅ¢òÐ ±Ø¾¢ þÕ츢ȡö.
Å¡úòÐì¸û
±ý.².„¡Ìø †Á£Ð

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

NAS ஐயா இப்படித்தானே எழுதி இருப்பீர்கள் ? (தாங்கள் எழுதிய எழுத்துக்கள் அப்படியே சிங்கை மொழிபோல் பளபளத்தன ஆகவே உருவு மாற்றம் செய்தி இங்கே இட்டிருக்கிறேன்)

அருமைத் தம்பி ஷபீர்,

உண்மையிலேயே அசத்தீட்டிங்க. உங்களுடைய ஆக்கங்களை எல்லாம் தொகுத்து ஒரு நூலாகப் போட்டால் என்ன ?

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய் போல் எனக்குப் பெருமையாய் இருக்கின்றது.

சில வரிகள் என் கண்ணில் நீர் வரவைத்துவிட்டன். அனுபவித்து எழுதி இருக்கிறாய்.

வாழ்த்துக்கள்
என்.ஏ. ஷாகுல் ஹமீது.

Yasir said...

encode -ஜயெல்லாம் decode செய்யும் ஆற்றல் படைத்த எங்கள் அபு இபுராஹிம் காக்காவிற்க்கு வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர் : அது ஒன்னுமில்லை அங்கே நிறைய குச்சிகளா இருந்துச்சா அப்புடியே அடுக்கி வைத்து பார்த்தேன் சூப்பரான கமெண்ட் இருக்கு ! அதான்...

Shameed said...

//குட்டிச்சுவர் அணிலும்
சிட்டுக் குருவிகளும்
கரையாத காகமும்
கருந்திரள் மேகமும்

சித்தெறும்பு சாரையும்
சிறியதொரு தேரையும்
என
எல்லாமும் நீயாகி
என்னையேப் பார்க்க
வெட்கி முகம் சிவந்தேன்!//

அஸ்ஸலாமு அழைக்கும்

மனதை
கவர்ந்த
கவிதை
வரிகள்

N.A.Shahul Hameed said...

Dear Bro Abu Ibrahim,
You are absolutely correct. I typed it in Ekalappai and tried to send it. When it was posted in my blog it was ok. When I uploaded it in Adirai Nirubar it changed. Really I feel ashamed of it.
I thought Mr.Thajudeen would have deleted it.
Thanks for your timely translation
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

N.A.Shahul Hameed சொன்னது…
Dear Bro Abu Ibrahim,
You are absolutely correct. I typed it in Ekalappai and tried to send it. When it was posted in my blog it was ok. When I uploaded it in Adirai Nirubar it changed. Really I feel ashamed of it.
I thought Mr.Thajudeen would have deleted it.
Thanks for your timely translation
N.A.Shahul Hameed ///

NAS ஐயா : (பழகிடுச்சு இப்புடி தமிழிலே அடிச்சு)

e-KALAPPAI பயண்படுத்தினீர்கள் என்றால்... உங்களின் நோட் பேடிலிருந்து டைப் செய்யபலாம்... அங்கே ARIAL-MS Unocide font அல்லது theeni or TSC Avarangal இவைகளைப் பயண்டுத்தலாம்.

ஒருவேலை சிக்கல் எங்கு ஏற்பட்டிருக்கும் என்றால்... தாங்கள் அங்கே phoneince keyஐ பயன்படுத்தாமல் tamil99 keyஐ பயன்படுத்தியிருந்திருக்கலாம் இது ஒரு காரனம் கூறைபிரித்த குச்சியாக தெரியக் காரணம்.

அப்படியில்லையின்ல் microsoftன் தமிழ் நாயகி "லதா" என்ற fontம் unicodeக்குள் வருபையே அதனை select செய்து அடிக்கலாம்.

எல்லா வற்றையும் விட அதிரை நிருபரிலேயே இறுதியில் தங்ளீஸில் அடித்ததல் தமிழில் மாற்றித் தரும் வசதியும் இருக்கிறது அதனனக் கூட பயண்படுத்தலாம் (உங்களின் முன்னாள் மாணவர்களைப் போல)...

sabeer.abushahruk said...

நன்றி கிரவுன்,
வாழ்வியல் தத்துவத்தில் மனித உணர்வுகள் குறித்து எனக்கு தெரிந்ததை, நான் உணர்ந்ததை சொல்லி வருகையில் நீங்கள் ஒத்த கருத்தோடு ஊக்கிவிப்பதற்கும் உங்களின் விளக்கங்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டவன்.

பின்னூட்டங்களையும் ரசிக்க வைக்கும் வித்தைக்காரர் நீங்கள். இதோ சாம்ப்பிள்ஸ்:

//வேப்ப மரமும் 
அப்ப...
இப்ப
 வெப்ப காற்று வீசுதே!//

//உன் பெயரை 
அதன் காதில் 
தென்றலாய் 
மெல்ல பேசினேன்//

//உன் நினைவுகளை 
உணவாக உண்டு
 செறித்து வரும் ஏப்பமெல்லாம் 
உன் பெயராகவே வருகிறது//

//காலம் செய்த 
கோலத்தில் இந்த 
ஞாலம் எனக்கு சிறையா? 
இல்லை 
நான் தனியே தங்கும் அறையா?//

//என்
 பெயரின் விலாசமும்.
என் சுவாசமும் 
உன்னை சுமந்தது.//

sabeer.abushahruk said...

சார்,

'ங்க','ங்க' என்று பாராட்டவும் யாரையோன்னு நினைத்துவிட்டேன். என்னைத்தானா? மிக்க நன்றி சார். 

இது 'எழுதிய கவிதை' எனில் உங்களோடு சேர்ந்து சுத்திய தினங்களும் இடங்களும் 'வாழ்ந்த கவிதை' இல்லையா?

கற்ற அறிவுடையோருடன் பழகக்கிடைத்தல் பாக்கியம் சார். அதிலும் அப்படிக்கிடைத்தோரிடம் அன்பையும் பணிவையையும் காணக்கிடைத்ட்காலோ அது வாழ்க்கையின் வசந்தம் சார். 

எனக்கு ஜாகிருக்கு ஹமீதுக்கு நிஜாமுக்கு அலிக்கு ஆரிஃபுக்கு எல்லாம் நீங்கள் குருட்டாம்ப்போக்கில் கிடைத்த வசந்தம் சார், விடுவோம?

sabeer.abushahruk said...

தம்பி தாஜுதீனின் ரசிப்புக்கு நன்றி.

அநாமத்தேய கருத்துக்கள் நேர விரயம் செய்ய முற்பட்டால் அவற்றை நீக்குவோம் என்கிற அதிரை நிருபரின் வெற்றிக்கான தாரக மந்திரம் சென்ற பதிவின் பின்னூட்டங்களில் அமல்படுத்தப் படவில்லையே?

அபு இபுறாஹீம், உங்களின் ரசனைமிக்கக் கருத்துக்கு நன்றி!

அப்துல் மாலிக், அப்துர்ரஹ்மான்: ரொம்ப நன்றி!

யாசிர்: உங்களைப்போன்ற உயர்ந்த ரசனையும், உயர்தர சிந்தனையும், நாகரிகமான வாழ்க்கைமுறையும், நல்லொழுக்கமும் கொண்டவர்களால் என் எழுத்து ரசிக்கப்படுவதை ஒரு அங்கீகாரமாகவே காண்க்கிறேன்!

அப்துல்மாலிக் said...

இநத தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துக்கொண்டால்

http://software.nhm.in/products/writer

எங்கேயும் தமிழ் தட்டச்சு செய்யலாம், காப்பி பேஸ்டிட தேவையில்லை, Alt+2 for Tamil, again Alt+2 will change english type

Yasir said...

//யாசிர்: உங்களைப்போன்ற உயர்ந்த ரசனையும், உயர்தர சிந்தனையும், நாகரிகமான வாழ்க்கைமுறையும், நல்லொழுக்கமும் கொண்டவர்களால் என் எழுத்து ரசிக்கப்படுவதை ஒரு அங்கீகாரமாகவே காண்க்கிறேன்// நெகிழ்ந்து விட்டேன் காக்கா...உங்களை போலதான் தான் காக்கா நானும் அதானால் அல்லாஹ் நம்மை ஒரு அக்சிடெண்டாக சந்திக்க வைத்து நெருக்கமாக்கிவிட்டான்...... இந்த பண்போடு வாழ்வின் கடைசிவரையிலும் வாழ இறைவனிடம் இறையஞ்சுவோம்

ZAKIR HUSSAIN said...

கவிதை வரிகளில் அதிகமான விசயங்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இத்தனை வரிகளில் அவ்வளவும் சொல்ல கொஞ்சம் தமிழ்ஞானம் அதிகம் வேண்டும்.

கிரவுன் எழுதும் விமர்சனங்களும் கவிதையாய் இருப்பதால் "இலவச இணைப்பு" கிடைத்த மகிழ்ச்சி.

இந்த கவிதைக்கு படம் செலக்ட் செய்தவருக்கு தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனத்தில் ஒன்றாம் வகுப்பு பாடத்துக்கு லே அவுட் எடிட்டர் வேலை காத்திருக்கிறது.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
கவிதை வரிகளில் அதிகமான விசயங்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இத்தனை வரிகளில் அவ்வளவும் சொல்ல கொஞ்சம் தமிழ்ஞானம் அதிகம் வேண்டும்.

கிரவுன் எழுதும் விமர்சனங்களும் கவிதையாய் இருப்பதால் "இலவச இணைப்பு" கிடைத்த மகிழ்ச்சி.

இந்த கவிதைக்கு படம் செலக்ட் செய்தவருக்கு தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனத்தில் ஒன்றாம் வகுப்பு பாடத்துக்கு லே அவுட் எடிட்டர் வேலை காத்திருக்கிறது.
--------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும். ஆ!லேசா நடுமண்டைல இன்பவலி! மோதிர கை குட்டி இருக்கு.ஆமா,மோதிர கைல குட்டுவாங்குறதுன்ன என்ன? யாராவது பதில் சொல்வாங்களா? குறிப்பா யாசிர் காரணம் அவர்தானே மாங்கா மடையனுக்கு பதில் கேட்டவர். அதான் பதிலுக்கு பதில்.யார் முந்த போறாங்களோ!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// இந்த கவிதைக்கு படம் செலக்ட் செய்தவருக்கு தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனத்தில் ஒன்றாம் வகுப்பு பாடத்துக்கு லே அவுட் எடிட்டர் வேலை காத்திருக்கிறது. //

காக்கா இப்போதிருக்கும் இளம் மனைவிகள் கல்லூரி முதலாம் ஆண்டு வரை தாண்டுகிறார்களே... அங்கே பாடநூல் லே அவுட் எடிட்டர் வேலை ஏதுமிருக்குமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மோதிர கைல குட்டுவாங்குறதுன்ன என்ன?//

அதே இளம் மனைவிக்கு வாங்கி கொடுக்கிறதைப் பொறுத்தது ! அதுவும் பவுன் அடர்த்தியைப் பொறுத்தது... :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று (என்) தம்பிகள் வாயடியில் உரையாடிக் கொண்டிருக்கும்போது சின்னக் கீரீடம் சொன்னான் "அதிரைநிருபர் படித்தால் கைகள் குறு குறுன்னு இருக்கு" அந்த ஆக்கத்திற்கு கருத்துக்களை தட்டிக் கொடுக்க !

அவனிடம் நலம் தான் விசாரித்தோம், இப்படி நனைய வைத்துவிட்டான் :)

sabeer.abushahruk said...

கிரவுனின் பொழிப்புரைகளை 'இலவச இணைப்பு' என்பதற்கு நான் கடும் கண்டனத்தை இந்த நேரத்தில் பதிவு செய்ய விளைகிறேன், ஆசைப்படுகிறேன் விருப்பப்படுகிறேன் பிரியப்படுகிறேன் (அங்கேயும் மேடையெல்லாம் அதிருதாம், அதான் அந்த நெடி இங்கும்)

ஏனெனில், இலவச இணைப்பைகூட கிரவுன் எழுதியது எனில் காசு கொடுத்தே வாங்குவோம்.

அபு இபுறாஹீம் சொல்லும் கை குட்டுமெனில் நம்மவர்கள் எத்தனை மோதிரங்கள் வேண்டுமானாலும் வாங்கித்தர தயார். ஏனெனில், அடர்த்தி கூட கூட அன்பும் கூடி, குட்டின் வேகம் குறைந்து கொஞ்சலாக முடியும். (யாசிர் ஜுவெல்ரி போயாச்சாம்)

மற்றபடி, வாத்தியார் கேட்கிற கேள்விக்கே எங்களுக்கு பதில் தெரியாது, ஹெட் மாஸ்டரே கேட்டா? (மோதிரமணிந்த பாலச்சந்தரிடம் ராசிக்குட்டு வாங்குற மேட்டர் இல்லதானே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மூத்தோர் அவைதனில் முந்திக் கொண்டு வருவதற்கு அதே மோதிரக் கையால் குட்டொன்று வைத்திடுங்கள் (பாக்கியமாகட்டும்)...

தம்பி கிரவ்ன்(னு)க்கு என்று ஓர் தலைப்பிட்டு ஓர் சிறப்பிதழ் வடிவில் ஒரு பதிவும் காத்திருக்கிறது...

அப்பதிவு சொல்லும் இனிமேல் கிரவுனின் கருத்துக்களுக்கு என்ன பெயரை வைக்கலாம் என்று !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு