அது 1923 ஆம் ஆண்டு. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாடு, மவ்லானா முஹம்மதலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அந்த நேரத்தில், ஆங்கில எதிர்ப்பலை முழு வலிமையுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது. (இந்திய) சுதேசிப் பொருள்களையே மக்கள் பயன்படுத்தவேண்டும் என்ற பிரச்சாரம் நாடு முழுவதிலும் நாட்டு விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களால் பரப்பப்பட்டு வந்தது. இதையொட்டியே, அந்தக் காக்கிநாடா மாநாட்டில் மவ்லானா முஹம்மதலி ஒரு பிரகடனம் செய்தார்.
"மக்கள் தத்தம் வீடுகளில் பஞ்சிலிருந்து நூற்கும் நூல்களில் மிகச் சன்னமான நூலுக்குப் பரிசளிக்கப்படும்!" என்பதுவே அந்தப் பிரகடனம்.
நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், பட்டிதொட்டியெல்லாம், வீட்டுக்கு வீடு, 'ராட்டை' என்ற மரச் சுழல் கருவி மூலம் பஞ்சை நூலாகத் திரிக்கும் தொழில் ஒரு அன்றாடக் கடமை போன்று நடைபெற்று வந்தது. (மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்கும் வரைபடத்தைப் பார்த்த நினைவுண்டா?)
நம் அதிரைப்பட்டினத்திலும் அன்றையக் காலத்தில் நூல் நூற்கும் பணி வீட்டுப் பெண்களால் செய்யப்பட்டு வந்தது. மவ்லானா முஹம்மதலியின் காக்கிநாடா மாநாட்டு அறிவிப்பு, அதிரை மூதாட்டி ஒருவரின் காதுகளிலும் விழுந்தது. அவர் பெயர் அஹ்மது நாச்சியார். இவர் கடற்கரைத் தெருவைச் சேர்ந்தவர். தற்போதைய சென்னை 'மஜ்ஃபா லாட்ஜ்' முதல்வர் மஹ்மூது மரைக்காயரின் தாயார் அவர்.
அந்தக் காலத்தில் சுதேசி இயக்கத்தவரால் 'பஞ்சுக் கம்பெனி'கள் நாட்டின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டு, அங்கிருந்து மக்கள் பஞ்சை வாங்கிச் சென்று நூலாகத் திரித்து, அதை முறுக்கிக் 'கலி'யாக்கி, எடை போட்டு, நூல் கம்பெனிகளில் கொடுத்துக் காசையும் பஞ்சையும் பெற்றுச் செல்வார்கள். அனைவரும் இதில் ஏழை-பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல், ஈடுபட்டு உழைப்பார்கள்.
ஆண்கள் சிலோன், பர்மா, மலேயா போன்ற நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து வந்து, வீட்டைக் கட்டுவார்கள்; பெண்கள் தம் நேரத்தை வீணாக்காமல், நூல் நூற்றல், ஓலையில் 'குட்டான்' முடைதல் போன்ற பகுதி நேரப் பணிகளில் ஈடுபட்டுச் சேர்க்கும் தொகையிலிருந்து நகைகள் வாங்கிச் சேர்ப்பார்கள்.
அஹ்மது நாச்சியாருக்கு, 'எப்படியும் நாம் இப்போட்டியில் கலந்து பரிசு பெறவேண்டும்' என்ற ஆவல்! கண்ணும் கருத்துமாக நூல் நூற்றுப் போட்டித் தேர்வாளர்களுக்கு அனுப்பிவைத்தார். நூல் நூற்கப்பட்ட 'சன்னம்' எனும் தரத்தைப் பார்த்து, அதன் விற்பன்னர்கள் அதைத் தரம் பிரித்து, 50,60,70,80,90,100 என்று மதிப்பெண் போட்டு, அதற்குரிய தொகையைக் கொடுத்தனுப்புவார்கள்.
இவ்வடிப்படையில் போட்டித் தேர்வு மையத்தைச் சென்றடைந்த அஹ்மது நாச்சியாரின் நூலைத் தரம் பார்த்து, 'நூறாம் நம்பர்' என்று முடிவு செய்து, முதல் பரிசளித்துச் சிறப்பித்தார்கள், இந்தியச் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள்.
* மேற்காணும் தகவலை, நம் 'அதிரை அறிஞர்', 'தமிழ்மாமணி', புலவர், அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் நமதூர் ALM பள்ளி ஆண்டுவிழாவின் போது தமது தலைமையுரையில் தெரிவித்தார்கள்.
-- அதிரை அஹ்மது
21 Responses So Far:
பெண்மைக்கு பேர் சொல்லும் அருமையான ஆக்கம்.... இதுதாங்க ! பெண்கள் தின ஆக்காமாக வந்திருக்கனும்... இந்திய சுந்தந்திர போரட்டத்தில் ஆணிவேர்கள் முஸ்லீம்கள் எனபதிலும் பெருமை அதோடு அதிரைபட்டினத்தின் மைந்தர்களும் முன்னின்றார்கள் என்பதை நினைத்து பெருமை படுகிறோம்...
நல்ல பகிர்வை தேடித் தரும் மாமா இன்னும் கேட்டுத் தாருங்களேன்...
"@ அபு இபுறாகீம் :
பெண்மைக்கு பேர் சொல்லும் அருமையான ஆக்கம்.... இதுதாங்க ! பெண்கள் தின ஆக்காமாக வந்திருக்கனும்... "
நூலிற்கு நூறு போட்டு குடுத்தமாதிரி நூற்றிக்கு நூறு உங்கள் இந்த வார்த்தைக்கு.
msm(mr)
அஸ்ஸலாமு அலைக்கும்,
அஹ்மது மாமா இந்த புதிய வரலாற்றுத் தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
அன்று அதிரையின் சாதனை பெண்மணி அஹமது நாச்சியார் அவர்கள் இந்திய அளவில் பரிசு பெற்றது பாரத ரத்னா விருதுக்கு சமம்.
60 ஆண்டுகளுக்கு முன்பு நம்மூர் பெண்கள் கல்வி விழிப்புணர்வு நடத்தாமல் விட்டிருந்தால், இன்று நம்மில் பலர் படித்த பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியாது என்பது என் கருத்து.
பழம்பெறும் செய்தி. மிகவும் சுவாரஸ்யமான செய்தி. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தவிர, எனக்கும்கூட ஒரு பழக்கவழக்கம் நினைவுக்கு வருகிறது. அது வானொளிகூட பரவலாக பிரயோகிக்கப்படாத காலம். நம் ஊர் பெண்கள் வேலைவெட்டியெல்லாம் முடிந்த பிறகு மறைவான வீதிகளில் திண்ணைகளில் ( தடக்கல) அமர்ந்து மால் முடிவார்கள். மொத்தமாக நூல் வாங்கி மால் முடிந்து மீட்டருக்கு இவ்வளவு என்று சம்பாதித்தார்கள். பொழுது போக்குக்கு பொழுது போக்கு வருமானத்துக்கு வருமானம்.
sabeer.abushahruk சொன்னது…
பழம்பெறும் செய்தி. மிகவும் சுவாரஸ்யமான செய்தி. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தவிர, எனக்கும்கூட ஒரு பழக்கவழக்கம் நினைவுக்கு வருகிறது. அது வானொளிகூட பரவலாக பிரயோகிக்கப்படாத காலம். நம் ஊர் பெண்கள் வேலைவெட்டியெல்லாம் முடிந்த பிறகு மறைவான வீதிகளில் திண்ணைகளில் ( தடக்கல) அமர்ந்து மால் முடிவார்கள். மொத்தமாக நூல் வாங்கி மால் முடிந்து மீட்டருக்கு இவ்வளவு என்று சம்பாதித்தார்கள். பொழுது போக்குக்கு பொழுது போக்கு வருமானத்துக்கு வருமானம்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நம்மால் முடிந்தவரை மால் முடிவோம் என்று மால் முடிந்து மால் பார்த்திருக்கிறார்கள் மூத்தோர். இப்பொழுதோ,'அம்மா'க்கள் பொழுதுகளை மாலில் கழித்து ஆண்களின் மாலுக்கு வேட்டு வைப்பவர்களாக பார்கிறோம்.
நேற்று நான் எழுதிய சின்ன கமென்ட் வரவில்லை". அழுத்த வேண்டிய பொத்தானையெல்லாம் சரியாத்தானே அழுத்தினேன்...
கமென்ட்? 'எழுதுக்கும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளவும்...மலேசியாவிலிருந்து துபாய் சில ஆயிரம் கிலோமீட்டர் அல்லவா?' என யாரும் [சபீர் / சாகுல் / ரியாஸ்] மொக்கையாக உதாரணம் கொடுத்திடாதீங்க.
//நேற்று நான் எழுதிய சின்ன கமென்ட் வரவில்லை". அழுத்த வேண்டிய பொத்தானையெல்லாம் சரியாத்தானே அழுத்தினேன்...//
காக்கா : வந்திடும் வந்திடு சீக்கிரமே (என்ன உம்மாபோர்டு வெளிய விட்டிருக்க மாட்டாங்க நினைக்கிறோம்)...
இதே மாதிரிதான் காக்கா, 1995ல் நானும் கணினியின் விசைப் பலகையிலிருந்த (உள்ளே செல் என்ற) ஒரு பொத்தானை அழுத்தினேன் இதுவரை அது எழுந்திருக்கவே இல்லை... (இன்னும் இருக்கான்னா கேட்கிறீங்க - ஆம் !)
கிரவுன்(னு): சூப்பரு(டா)ப்பா ! மால் செய்து மால் பார்த்த காலம்போய்... இன்று மால் சுற்றி மால் இழக்க்கும் சூழலே !
நம்மாள் வந்துட்டாரே...ஏதோ நம்மால் முடிந்தது... இந்த பின்னூட்டத்தின் பின்புலத்தை நிறம் மாற்றி 'சிவப்புக் கம்பளம்' ஆக்க வேண்டும் என்று அ. நி. ஐ வம்புடன் சாரி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
(பதிவு தொடர்பாக: மால் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, it is a segment of fishing net)
மால் = மீன் பிடிக்கும் வலைபற்றியும் பேசிக் கொண்டிருக்கோம் அப்புறம் எதற்கு "சாரி" எந்த ராட்டையில் நூர்த்தது !?
அஸ்ஸலாமு அழைக்கும்
பழமையான செய்தி படிக்க சந்தோசமாக இருந்தது
அறிஞர் தமிழ்மாமணி புலவர், அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இனி எங்கு மீட்டிங் பேசினாலும் அதன் வீடியோ தொகுப்பை நம் அதிரை நிருபரில் வெளி இட்டால் இன்னும் நன்றக இருக்கும் அவர்களின் குரலிலே பலம் பெரும் செய்திகளை கேட்பது மிக இனிமையாக இருக்கும்
அதிரையின் வீர,விவேகப்பெண்மனி என்றுதான் அவர்களை அழைக்கவேண்டும்...நல்ல பகிர்வு....சாகுல் காக்காவின் கருத்தை ஆதரிக்கிறேன்
sabeer.abushahruk சொன்னது…
//it is a segment of fishing net//
அஸ்ஸலாமு அழைக்கும்
ஆமா நாமா மல்லிபட்டினத்தில் தூண்டில் போட்டல்லவா மீன் பிடிக்க முயற்சி செய்தோம்!
fishing net இருந்து இருந்தால் நிச்சயம் மீன் பிடித்திருப்போம் அல்லவா !!!
sabeer.abushahruk சொன்னது…
நம்மாள் வந்துட்டாரே...ஏதோ நம்மால் முடிந்தது... இந்த பின்னூட்டத்தின் பின்புலத்தை நிறம் மாற்றி 'சிவப்புக் கம்பளம்' ஆக்க வேண்டும் என்று அ. நி. ஐ வம்புடன் சாரி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
(பதிவு தொடர்பாக: மால் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, it is a segment of fishing net)
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா. நன்றி. எல்லாம் மொத்தத்தில் net profit வரும்படிதான்(வரும்படி-இன்கம்)மூத்தோர் செயல் பட்டுள்ளனர். ஆனால் தற்போதய பெண்மணிகள். அலாவுதீன் காக்கா சொல்வது போல் ஆனாவாசிய செலவாளிகளே! மிகச் சிலரே விதி விலக்கு.
// நிறம் மாற்றி 'சிவப்புக் கம்பளம்' ஆக்க வேண்டும் என்று /// இதை நான் வழிமொழிகிறேன்....பல்மொழி சித்தர் கீரிடம் சூட்டிய ராஜாவு வாரார் வாரார்...பாராக் பாராக்
//sabeer.abushahruk சொன்னது… நம்மாள் வந்துட்டாரே...ஏதோ நம்மால் முடிந்தது... இந்த பின்னூட்டத்தின் பின்புலத்தை நிறம் மாற்றி 'சிவப்புக் கம்பளம்' ஆக்க வேண்டும் என்று அ. நி. ஐ வம்புடன் சாரி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//
105 கமென்ட்ஸ் கொண்ட பதிவு இன்னும் சிகப்பு கம்பளம் விரித்துக் காத்துக்கிட்டிருக்கு பல்மொழி சித்தர் கீரிடம் சூட்டிய ராஜா வருவார் வருவார் என்று. இன்னும் அந்த பதிவில் கிரவுன் முத்திரையில்லையே.....
கூட்டமாக சேர்ந்து கேரோ செய்யுமுன் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவும் ப்ளீஸ் (காசா பணமா சார்? கலர் மாற்றம்தானே? எங்க, ஐ மீன், நம்ம கிரவுனுக்காக?! அதோடு, இது ஒரு புதுமையும் அல்லவா? எனக்கு தெரிந்து எங்கே என்று கிரவுனைப்போல வேறு யாருக்கும் ஏங்கியதில்லைப்பா. மிஸ்ட் ஹிம் எ லாட் யார்!
//கலர் மாற்றம்தானே? //
அப்புறம் மாறிட்டாய்ங்க ன்னு யாராவது குட்டு வச்சா !? அதெல்லாம் இருக்கட்டும் அங்கே வந்து ஒரு சொட்டு போடச் சொல்லுங்க தலைக்கு மேல இருந்தாலும் பரவாயில்லை வா(டா)ப்பா!
//sabeer.abushahruk சொன்னது… மிஸ்ட் ஹிம் எ லாட் யார்!//
நீங்க லிஸ்ட் போட்ட அனைத்து அதிரைநிருபர்களும் மிஸ்ட் Crown எ லாட்
அஸ்ஸலாமு அலைக்கும். கருனை பொருந்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும். என்மேல் இத்தனை கரிசனம் அன்பு ,இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே நன்றி செலுத்துகிறேன். என் மேல் அன்பு கொண்டு எனக்காக பிராத்தித அனைவருக்கும் அல்லாஹ் எல்லா நலனும் தர வேண்டுகிறேன். திக்குமுக்காடி போய் இருக்கிறேன்.குணம் அடைந்துவிட்டாலும் இன்னும் எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் என் முதுகு பிடித்திருக்கு(சுளுக்கு).இன்சா அல்லாஹ் அந்த் பிடி விலகியதும் மருபடியும் ,இவர்களும் அதிரை நிருபர்களேக்கு என் சிறு கருதை எப்படியும் எழுதுவேன் இன்சாஅல்லாஹ். என் முதுகு பிடிவிலகும் பின் நான் அதிரை நிருபரை விலகி இருக்க மாட்டேன் காரணம் எல்லாம் அன்பு பிடி அதிகமாய் என்னை கட்டி போட்டுள்ளது.
கிரவுன்(னு) : அப்படின்னா முதுகுக்குப் பின்னால் ஏதோ இருக்கு !
குட்டான் முடைந்து அடுத்தவர் காசை எதிர்ப்பார்க்காமல் வாழ்ந்த சமுதாயம் நம் முன்னோர்கள். தெரியாத தகவல் பகிர்வுக்கு நன்றி
Post a Comment