Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுட்டெரிக்கும் சூடே - சுகமான குளிர் என்னிடமும் இருக்கிறதே ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2011 | , ,

வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்கத் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

''நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!'' என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். பாரம்பரிய சித்த மருத்துவரான கே.பி.சுப்ரமணியன் இயற்கையான முறையில் தண்ணீரை உடலுக்குள் இயக்கும் 'ஏ.சி’-யாக மாற்றும் பக்குவத்தைச் சொல்லித் தருகிறார். ''வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்கையிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது.

தண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், விளாமிச்சை வேரைப் போட்டுவைத்தால்நல்ல குளிர்ச்சியும் வாசமும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம்அடையும். 'நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனின்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர்போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டுவைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டுவைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது.

வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்¬னகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் அஞ்சு ரூபாயாக இருக்கும். உள்ளங்கையில் ஊட்டியும் கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம்!'' என்கிறார் உற்சாகமாக!

டயட்டீஷியன் ஷைனி சந்திரன் உடலின் புறத் தோற்றப் பராமரிப்பு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

''வேலை செய்யும் சூழல், வெளியேறும் வியர்வையின் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு தண்ணீர் அருந்தினால், வெயில் காலத் தொந்தரவுகளைத் தவிர்க்க முடியும். ரசாயனக் குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற்றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். ஒரே மூச்சில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல், கொஞ்சங் கொஞ்சமாக அதிக முறை தண்ணீர் குடிப்பது நல்லது. விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம். சிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகப்படுத்துவதாகச் சொல்லி, சிலர் காபி, டீ ஆகியவற்றை அதிகமாகப் பருகுவார்கள். அது தவறு. தண்ணீர் மட்டுமே நமக்கான நீர் சமநிலையையும் சக்தியையும் கொடுக்கும். காபி, டீ, ஆல்கஹால் போன்ற மற்ற திரவங்கள் வேறு பல பிரச்னைகளை உருவாக்கவே செய்யும்.

வெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இரு முறை விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவாத காலம் என்பதால், தண்ணீர் உபயோகத்தை அதிகப் படுத்தி, உடலை எப்போதும் குளிர்ச்சி யாக வைத்திருங்கள். கை, கால், முகத்தை அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவினாலே, தோல் பாதிப்புகளை வருமுன் காக்க முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு!'' என்கிறார் எளிய மருத்துவமாக!

சரிங்க ! இதெல்லாம் எங்கையையோ படித்ததாக நான் சொல்லவேயில்லையே, அதுக்குள்ளாட்டியுமா தாகம் எடுக்கிறது ? வழக்கமாக தொடர்ந்து வாசித்து வரும் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வழமையான வலை மேய்ச்சலில் வாசித்தது ஆதலால் "நன்றி - ஆனந்த விகடன்"னு சொல்லாமல் இருந்தால் எப்படியாம் ! சொல்லிட்டேன்.

என் முதல் ஆக்கத்தை கவிதையை அன்றே 1984ல் முதலில் ஆ.வி.யில் பார்த்து அப்படியே அசந்தவன், 1986ல் ஜூ.வி.யில் விஷுவல் டேஸ்ட் பகுதியில் நான் எடுத்து அனுப்பிய இரண்டு படங்களை பதிந்து அதனை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்த நேரத்தில் அதனைக் கண்டு கொண்டிருக்கும்போது அதற்காக கிடைத்த சன்மானம் எனக்குத் தெரிந்த உறவிடம் கிடைத்தது "ஏச்சு" ஏன்னா அவரைத்தான் அப்படியொரு விஷுவலாக நான் விரும்பிய விதத்தில் எடுத்து அனுப்பினேன்.

ஆகவே.. சூடென்றால் சுருண்டுவிடாமல் அதனை வெல்வதற்கான சூச்சுமத்தை தெரிந்தும் வைத்திருபோமே.

- அபு இபுறாஹீம்

17 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூடான வெயிலுக்கு நல்ல குளிர்ச்சி நிறைந்த செய்திகள்.மேலும் எங்கேயாகிலும் மேய்ந்து தணியுங்கள் நல்ல பல துணுக்குகளைக் கொண்டு!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . சுட,சுட இப்படி கூலான தகவலைத்தர உங்களால் மட்டுமே முடியும்.இங்கே குளிர் வாட்டுது. பெரும்பாலும் சுவெட்டர் போட்டுகிட்டுத்தான் போவங்க.ஆனா நான் அதெல்லாம் போட எரிச்சல் பட்டுக்குவேன்.அப்படித்தான் என் மனைவி கேட்டா ஏங்க இப்படி குளுருது(குலுவுது)சுவெட்டர் போட்ட என்ன? நான் சொன்னேன் எனக்கு கலிபோர்னியா வந்து ரொம்ப குளிர்விட்டுபோச்சுன்னு. அந்த ஜம்பம் இப்பத்தான் வேர்விட்டு கொடையுது.காதுவலி,முதுகு பிடிப்பு இப்படி போட்டு தாக்கிடுச்சு.இப்பவெல்லாம் அய்யா முழுக்க சுவெட்டர் போட்டுகிட்டு காதையேல்லாம் தொப்பிவச்சி மறைச்சிகிட்டுத்தான் வெளிய போறேன்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். விரைவில் 'இவர்கள்' படியுங்கள் டொட்டடோய்ன்.டொட்டடோய்ன்....

sabeer.abushahruk said...

ஆகாஷவானி. செய்திகள் வாசித்தது அபு இபுறாஹீம்..."வெயில் காலம் நெருங்குவதுபற்றிய ஒரு சிறப்புக் கண்ணோட்டம்"என்று துவங்கி அதெஇச்ட் தொடர்ந்து கலிஃபோர்னியாவிலிருந்து நமது நிருபர் கிரவுன் என்ன சொல்கிறார் என்றவுடன் "இங்கே குளிருதுங்கோ..." என்று சொல்லிக்கொண்டு போவதுபோலும் தோனுதே... அதிகம் நியூஸ் சேனல்ஸ் பார்க்கிறேனோ?
(அ.ஈ.: உங்கள் முதல் கவிதையை இங்கு பதிந்தே தீரவேண்டும். நான் வேண்டுமானால் நன்றி ஆ.வி. போட்டுக்கொள்கிறேன்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// (அ.ஈ.: உங்கள் முதல் கவிதையை இங்கு பதிந்தே தீரவேண்டும். நான் வேண்டுமானால் நன்றி ஆ.வி. போட்டுக்கொள்கிறேன்) ///

அன்றைய ஆ.வி. இன்றைய அ.நி. தரத்திலிருந்தால் அதனைப் பதிந்திருக்க மாட்டார்களோ என்னவோ !?

ZAKIR HUSSAIN said...

to; Abu Ibrahim

//அன்றைய ஆ.வி. இன்றைய அ.நி. தரத்திலிருந்தால் அதனைப் பதிந்திருக்க மாட்டார்களோ என்னவோ !? //

என்னப்பு இப்புடி சுலுவா சொல்லிப்புட்டிய....அ.நி என்ன அப்படி தரத்திலெ கொரஞ்சிடுச்சி?...எல்லாம் நல்லாத்தானே இருக்கு...

அப்துல்மாலிக் said...

வெயில் வந்துடுச்சில்லே!
இதையெல்லாம் ஃபாலோ பண்ண முயற்சிக்கனும்
நன்றி பகிர்வுக்கு

டிஸ்கி: அந்த முதல் கவிதை மீள் பிரசரித்தால் படிக்கலாம் அப்படியே அந்த ஏச்சு வாங்கிய விஷுவலும்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்னப்பு இப்புடி சுலுவா சொல்லிப்புட்டிய....அ.நி என்ன அப்படி தரத்திலெ கொரஞ்சிடுச்சி?...எல்லாம் நல்லாத்தானே இருக்கு... //

காக்கா : தூக்கித்தான் வைத்துச் சொன்னேன்... அதெப்படி சுலுவா சொல்லிடுவோமா அதையும் நீங்களெல்லாம் சும்மா விட்டுடுவீங்களா என்னை ! :)

Yasir said...

அப்பியன் கடைக்கு பக்கத்தில் உள்ள நாட்டு மருந்து கடைக்கு சென்று வந்த உணர்வு....கண்டதுப்பிலி/அரிசிதுப்பிலி/கடுக்காய்...எல்லாத்தையும் ஞாபகத்திற்க்கு கொண்டுவந்து விட்டீங்க .....ரொம்ப நன்றி காக்கா உங்கள் தொகுப்புக்கு....ஆனால் ஒன்ன மட்டும் மறந்துட்டீங்க சொல்றதுக்கு ? என்ன அது ???

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//டிஸ்கி: அந்த முதல் கவிதை மீள் பிரசரித்தால் படிக்கலாம் அப்படியே அந்த ஏச்சு வாங்கிய விஷுவலும்...//

ஆஹா... இன்றுபோல் அன்று ஒரு மேசைக் கணினியோ அல்லது மடிக் கணினியோ இல்லையே (இப்போ புலம்பி என்ன செய்வது).. முயற்சிக்கலாம் தேடியெடுத்து !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//....ஆனால் ஒன்ன மட்டும் மறந்துட்டீங்க சொல்றதுக்கு ? என்ன அது ??? ///

அதற்குத் தானே உங்களை சப்போர்ட்டுக்கு சேர்த்துக்கிறது ! சொல்லிடுங்களேன் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா : இன்று அ.நி. தரம் அன்றைய ஆ.வி.க்கு இருந்திருந்தால் பதிந்திருக்க மாட்டாங்களோன்னு சொல்லியது அங்கே ! இப்போ சரிதானே ! :)

Yasir said...

நீங்கள் சொன்னவற்றுடன் + எக்காலத்திலும் கூலாக இருக்கின்ற அதிரை நிருபரையும் தொடர்ந்து படித்து கொண்டு இருந்தால்...மன வெப்பமும் முழுவதுமாக அடங்கி அமைதி பெறும்..

sabeer.abushahruk said...

//இன்றுபோல் அன்று ஒரு மேசைக் கணினியோ அல்லது மடிக் கணினியோ//

ஏன்? மறந்து போச்சா? முதற் கவிதைதானே! நினைவு வைத்துக்கொள்ள அதென்ன முதற் கா...த...(சரி சரி சொல்லல)

பலகீனமான மீசையும்
பழகினமீதெல்லாம் ஆசையும்

என்று திரிந்த புதுக்கல்லூரி ஆளாச்சே அதான் கவிதை எதைப்பற்றி என்று தெரிந்துகொள்ள ஆசை!
(ஜாகிரு, அந்த டைப்பிங் இன்ஸ்டிடூட்டா இருக்குமோ?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா... காலம் நோக்குங்கள் 1984 எங்கே! புதுக் புதுக் கல்லூரி எங்கே ! காக்கா உங்களோட நினைவுகளை இப்புடியும் அசைபோடலமா !? (நல்ல யுக்திதான் சுழிபோட்டேன்).

நிச்சயம் மீள்பதிவு செய்கிறேன் அது "தாய்" பற்றிய "கன்னிக்" கவிதையாச்சே அதான் வெட்கப்படுகிறது... :))

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வூட்டுக்கரவோ எல்லாரும் டையடீசியன் படிப்பு கொஞ்சமாவது படிக்கனும்,. இது போன்ற ஆலோசனைகளின் படி காலமாற்றத்திற்கு ஏற்ப நம் உடல் நலனை பேணிக்கொள்வதற்காக.

Yasir said...

//வூட்டுக்கரவோ எல்லாரும் டையடீசியன் படிப்பு கொஞ்சமாவது படிக்கனும///யான் தாஜீதீன்..வாரத்தில் ஒரு தடையாவது மட்டன்/சிக்கன் பிரியாணி ..பூமார்க் நெய் கமகமக்க சாப்பிடறது உங்களுக்கு பிடிக்கலையா ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு