Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு 15

அதிரைநிருபர் | March 29, 2011 | , , ,

நீண்ட நாட்களுக்கு முன் நக்கீரனில் படித்த ஞாபகம். சர்க்கரை நோய்க்கு மருந்து கிடைப்பதாகவும் தற்பொழுது நமதூரில் பலபேர் சென்று மருத்து வாங்கி சாப்பிட்டு நலமாக இருப்பதாகவும் கேள்விபட்டேன். நமதூர் பைத்துல்மால் சார்பாகவும் சர்க்கரர மருத்து  கொடுக்கும்  அம்மருத்துவரை  அழைத்து வந்து ஐம்பது நபருக்கு மருந்து கொடுத்திருகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு எளிய இந்த இயற்கை மூலிகை மருந்து  சதீஸ்கர் மாநிலம் - துர்க் என்ற ஊரில் கிடைக்கிறது.

சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படும் அதிரை சகோதர, சகோதரிகளுக்கு ஒரு நல்ல செய்தி இங்கே போய் வைத்தியம் பார்த்தவர்கள் நலமாக இருப்பதாக சொன்னார்கள்.

சதீஸ்கர் மாநிலம் - துர்க் சென்று அடைத்தவுடன் மருந்து கொடுக்கும் ஜும்மா மசூதி சென்று முன் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும்.

காலை எழுந்த உடன் பல் துலக்கி, (பேஸ்ட் போட்டு பல் துலக்கக்கூடாது ) குளித்து முடித்து, வெறும் வயற்றில் தண்ணீர் கூட குடிக்காமல் காலை7 மணியளவில் மசூதிக்கு சென்று அமர்துவிட வேண்டும்.

முன்பதிவு நம்பர் படி அழைத்து உள்ளங்கை அளவிற்கு மருந்து தருவார்கள். அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டியபின் அதில் பாலை ஊற்றி மருந்து தீரும் வரை குடிக்கச் செய்கிறார்கள் குடித்த பின் ஒரு வாய் தண்ணீர் கொடுத்து உட்கார வைக்கிறார்கள்.

கூறும் அறிவுரைகள் : மருந்து சாப்பிட்டபின் தொடர்ந்து 4.00 மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு, புகைபிடித்தல் போன்றவை கண்டிப்பாக எடுத்துகொள்ளக்கூடாது. 4.00 மணி நேரம் கழித்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்த சாப்பாடு அனைத்தும் வயறு நிறைய சாப்பிடவேண்டும் .

பத்தியம்:

உணவில் புளி, கத்தரிக்காய், மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ள கூடாது.

மருந்து குடித்த பின் ஏற்படும் உமிழ்நீர் ஓமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக் கூடாது. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியை துப்பலாம்.

வீட்டிற்கு சென்ற பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரையை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

30 நாட்களுக்கு பிறகு சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ளவும் அதில் சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்திருப்பதை காண்பீர்கள்.

இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவேண்டும்

மருத்துவத்துக்காக சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் செல்பவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களுடன் சென்றால் மிகவும் நலம்.

இச்செய்தியின் நம்கத்தன்மையை உறுதி செய்யவேண்டியது அவசியம். இந்த மருத்துவம் பற்றி யாராவது கேள்வி பட்டால் இங்கு உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.

ஆங்கில மருத்துவத்தின் ராசாயன கலவை மருந்துக்களால் குணப்படுத்த முடியாத நோய்களை மூலிகை மருந்துக்கள் குணப்படுத்தியுள்ளதை செய்தி ஊடகங்களில் நாம் காணமுடிகிறது. சிலர் வியாபார நோக்கத்தின் பெயரில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வந்து முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், இயற்கை மூலிகை மருத்துவத்தை மக்கள் "போலி" என்ற மனநிலையிலேயே இன்னும் உள்ளார்கள்.

தீராத நோய்களுக்கு இவ்வுலகில் மருத்துக்கள் உள்ளது. மக்கள் மனது மாறவேண்டும். இயற்கை மருத்துவத்தில் இது அதிகம் சாத்தியம். சகோதரர் ஜாஹிர் அவர்கள் எழுதியது போல் மருத்துவ சேமிப்பு திட்டம் தீட்டி செயல்படுத்தி நோய்களுக்கு செலவழிக்க நினைத்தாலும் நம் வருமானம் போதாது இந்த நவீண மருத்துவ வியாபாரயுகத்தில்.

சர்க்கரை நோய் தொடர்பான மேலும் நல்ல பதிவுகளை அதிரைநிருபரில் பதியுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்.

--அபு இஸ்மாயில்

15 Responses So Far:

Yasir said...

ஒரு அவசரமான,அவசியமான விசயத்தை சகோ.அபு இஸ்மாயில் பகிர்ந்து இருக்கிறீர்கள்....இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்ற துவா உண்டு எத்தனை உயிர்களையும் அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்களை காப்பற்ற முடியும்....இந்த நோய் மிக வேகமாக இளம் வயதினரையும் பாதித்து வருவதாக தகவல்....சுகர் இல்லா பெப்சி/கோக்/சுவிங்கம் etc....போன்றவற்றை கம்பெனிகள் தயாரிக்கும் அளவிற்க்கு அதிக பேருக்கு இந்நோய் பரவி பலரின் வாழ்வை சீரழித்து கொண்டுள்ளது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிரின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்...

இனிமேல் அசத்தல் காக்காவிடம் விட்டு விடுகிறேன் ! விளக்கவுரை ப்ளீஸ் !

எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலையிருப்பதனால் இப்போதைக்கு ஜூட்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இது உண்மையாகும் பச்(சிலை)சத்தில் இனிய செய்தியாகும். எதற்கும் உபயோகிக்குமுன் டாக்டரிடம்
கேட்டுக்கொண்டால் அவர்கள் ஒருவேளை இனி நாம் சம்பாதிக்க முடியாதோ என்று நல்ல ஆலோசனைத்தாராமல் இருக்கலாம்.அதற்காக சந்தேகம் இருந்தால் சகோ.ஜாஹிரிடம் விபரம் கேட்டுக்கொள்ளவும். எனக்கு அவசரமாக ஒரு ஜோலி இருப்பதால் இத்துடன் விடுகிறேன் ஜூட்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி இது பற்றிய விவரமான தேர்தல் அறிக்கை மன்னிக்கவும் மருத்துவ அறிக்கையை சகோ ஜாகிர் அவர்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்

வீட்டிற்கு சர்க்கரை வாங்கி கொடுத்துட்டு வரேன் இத்துடன் ஜூட்

ZAKIR HUSSAIN said...

இன்னைக்கு என்ன சன் டி வி யின் " ஜூட் வாரமா?'

இந்த மருத்துவம் பற்றி நானும் கேள்விப்பட்டேன்.இயற்கையான மூலிகையை வைத்து செய்வதால் பக்க விளைவுகள் கிடையாது. இதை தாராளமாக முயற்சிக்களாம், இறைவன் உதவியால் இந்த ஒவ்வாமை [ நோய் அல்ல] சரியாகி விட்டால் பல பேரின் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்.

மருத்துவர்களுக்கான CODE OF ETHICSல் நோயாளி குணமாவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த டாக்டர் சரியில்லை என்று எந்த டாக்டரும் சொல்வதில்ல்லை...அப்படி சொன்னால் அவர் டாக்டரில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாக்கு வங்கியில் அக்கெவுண்ட் ஓபன் பன்னலாம்னு அப்ளிகேஷன் வாங்க போனேனே அங்கே தேர்தல் கமிஷன் பறக்கும்படை பாதுகாப்புக்கு நிக்கிறாங்க, ஏதோ வந்த ஓட்டு வங்கியில கொள்ளை நடக்குதாம் அதான் பாதுகாப்புன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாய்ங்க...

இன்று அதிகாலை கூத்தாநல்லூரைச் சார்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சக்கரை நோய்ப் பற்றிய இந்த பதிவைப் பற்றி சொல்லும் போது அவரும் சரிதான் என்றும் அவரது சகோதரி இந்தச் சிகிச்சையின் பலனைக் கண்டு வருவதாகவும் சொன்னார் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதான் "அசத்தல் மெடிக்கல் அஸோஷியேசன் தலைவர் அவர்களின் பரிந்துரையும் சேர்ந்திருப்பதால்... கசப்பான இனிப்புக்கே இனிப்பான செய்தியும் கூடியிருக்கிறதெ !

sabeer.abushahruk said...

நல்ல பகிர்வு. 

அபு இஸ்மாயிலுக்கு நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன் (அல்லது ஜூட் விடுகிறேன்) 

(சீக்கிரம் வேலையெல்லாம் முடிச்சிட்டு மொஹாலி போக வேனுமே)

அ.நி.யின் அரசவை மருத்துவரே, இந்த நோய் நோயல்ல என்பது சரி ஆனால் ஒவ்வாமையா அல்லது குறைபாடா ( deficiency?)
//
இனிமையானவளே!

நீ
வாங்கித் தந்த
விடிகாலையும்...
உனக்காக 
விற்றுத் தீர்த்த
அந்தி மாலையும்
மட்டு மல்லாது...
நடுநிசியும் நன்பகலும்
முன்னிரவும் முதிர்காலையும்
என-
எக்காலமும்
உன் நினைவுகள்!

உன்
கனிந்த
கன்னங்கள்
கவிதை பாடின,
அதில்
குவிந்த
எண்ணங்கள்
எதையோ நாடின!

நீயோ...
கிடைத்தும் கிடைக்காமல்
உண்டும் செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காத குளுக்கோஸாய்
என் சர்வமும்
வியாபிக்கிறாய்!

நானோ...
இனிப்பின்மேலான 
இச்சையோடு
நீரிழிவுக்காரனைப் போல...!
//
-Sabeer
(thinnai 10/01/11)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நீயோ...
கிடைத்தும் கிடைக்காமல்
உண்டும் செரிக்காமல்
இரத்ததோடு
கலக்காத குளுக்கோஸாய்
என் சர்வமும்
வியாபிக்கிறாய்!

நானோ...
இனிப்பின்மேலான
இச்சையோடு
நீரிழிவுக்காரனைப் போல...!//

இனிப்பு என்றாள் இனிப்பாகி விடுமோ !?

அப்துல்மாலிக் said...

நம்மாளுகளிடம் ஜீனி கிலோ கணக்கிலில்லாமல் மூட்டையா குடி கொண்டிருக்கு, இது இப்போ சாதாரணமா போச்சு, 5 பேரு டீ குடிக்க போனா அதுலே ஒன்னாவது வித்தவுட் (சுகர்) ஆர்டர் செய்கிறோம்.

2 மாததுக்கு முன் இது சம்பந்தமாக மெயில் வந்தது, சென்னையிலிருந்து எப்போ இரயில் கிளம்புகிறது என்ற டீடெயில் முதல்கொண்டு.

என் நண்பர் சென்று வந்திருக்கார், அவர் சொன்னது ஆரம்ப கட்டத்திலுள்ளவர்களுக்கு மட்டும்தான் சரியாக்கப்படுகிறது முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த வைத்தியம் சாத்தியமில்லை என்று சொன்னார். எந்தளவுக்கு உண்மை என்பது அதிகமக்கள் பயனடைந்தவுடந்தான் தெரியவரும்

அப்துல்மாலிக் said...

நம்மூர் சுற்றுவட்டாரத்திலுள்ள மருத்துவர்கள் பணக்காரர்களாக ஆனதற்கு இந்த நோய் ஒரு முக்கிய காரணம். கரண்ட்/மொபைல் பில் மாதிரி மாசம் இதுக்காக கண்டிப்பா ஒரு அமவுண்ட் செலவு செய்தாகனும். ஒரு காலத்துலே எந்த துறை படித்தாலும் ஐ.டி. படித்தால் நிறைய சம்பளம் என்பது போல் எல்லா மருத்துவர்களும் நீரிழிவு நோய் மருத்துவம் படித்தால் போது கைநிறைய காசு பார்க்கலாம் என்று இதை முக்கியமாக படிப்பதாக கேள்வி, அந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

இந்த மருத்துவம் சக்ஸஸ் ஆனா நமக்கு இறைவன் தந்த ஒரு வரபிரசாதம்தான், இன்ஷா அல்லாஹ்

ZAKIR HUSSAIN said...

இது ஒவ்வாமைதான்...எப்படினா ஒரு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னது...

சீனி சாப்பிட்டால் டயாபெடிக் வரும் என்பது சரியில்லை...ஆனால் டயாபெடிக் உள்ளவர்கள் சீனி சாப்பிடுவதை கட்டுப்படுத்திகொள்ளவேண்டும்

Yasir said...

டையாபட்டீஸை பற்றி வைக்கி (Wiki) தாத்தா சொல்வது

“ Diabetes mellitus, often simply referred to as diabetes—is a group of metabolic diseases in which a person has high blood sugar, either because the body does not produce enough insulin, or because cells do not respond to the insulin that is produced. This high blood sugar produces the classical symptoms of polyuria (frequent urination), polydipsia (increased thirst) and polyphagia (increased hunger).

The word diabetes is from the Greek diabanein which means to pass through, in reference to the excessive urine produced as a symptom of these diseases. The term diabetes, without qualification, usually refers to diabetes mellitus, which roughly translates to excessive sweet urine (known as "glycosuria"). Several rare conditions are also named diabetes. The most common of these is diabetes insipidus in which large amounts of urine are produced (polyuria), which is not sweet (insipidus meaning "without taste" in Latin).

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர் : இந்தியா V/s பாக்கிஸ்தான் ஆக்கப்பட்டது ஏன் என்று மேய்ந்து கொண்டு இருக்கேன்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அபு இஸ்மாயில், இயற்கை மருத்துவம் தொடர்பான இந்த செய்தியை எங்கள் எல்லோருடன் பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி.

இயற்கை மருத்துவமே பலங்கால மருத்துவம் அதுவே வருங்கால மருத்துவம்.

ஜாஹிர் காக்கா இந்த செய்திக்கு நம்பிக்கை தரும்விதமாக உங்கள் தகவலை பதிந்தமைக்கு மிக்க நன்றி.

மர்ஹும் அதிரை உமர்தம்பி அவர்கள் சர்க்கரை நோய் பற்றி எழுதியை நீண்ட ஆக்கதை 3 அல்லது 4 தொடராக இங்கு எல்லோரிடம் பகிர்ந்துகொடுக்கலாம் என்று உள்ளேன். நிச்சயம் அது நல்ல பயனுல்லதாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் விரைவில் அதிரைநிருபரில் வெளிவரும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு