எங்கே செல்கிறது இந்த பாதை - பகுதி 6

கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 1


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்பான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

கல்வி விழிப்புணர்வு மாநாடு முடிவடைந்து நமக்கு நல்ல சிந்தனைகளை தூண்டும் கருத்துக்கள் பரிமாறப்பாட்டு நம் மனதில் அன்றாடம் கவலையுணர்வை அதிகரித்துள்ளது என்பதை எல்லோராலும் உணரப்பட்டு வருகிறது என்றால் மிகையில்லை. இந்த சூழ்நிலையில் சகோதரர் CMN சலீம் அவர்கள் கல்வி விழிப்புணர்வு மாநாட்டு உரையில் நான்கு விசயங்களில் நாம் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் முதலாவதாக சொல்லப்பட்டது உடல் ஆரோக்கியம். குறிப்பாக நம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பற்றி நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

கடந்த சில வருடங்களில் நம் குழந்தைச் செல்வங்களின் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்தியதை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், நம்மால் அதிகம் அறியமுடிகிறது கண் பார்வை குறைப்பாடு. அதிக பவர் உள்ள கண்ணாடிகளை அனிந்துச் செல்லும் குழந்தைகளை அன்றாடம் காணமுடிகிறது நம் ஊரில்.

அன்மையில் அதிரையில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தை ஒன்றுக்கு கண்பார்வை குறைப்பாடு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. அக்குழந்தைக்கு ஏற்பட்ட பார்வை குறைப்பாட்டை சரிவர பெற்றோர்கள் சிறுவதிலிருந்தே கண்டுக்கொள்ளாமல் போனதே அக்குழந்தைக்கு கண் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண் நோய்கள் மற்றும் மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வுகள் நம் ஊர் மக்களிடம் அறவே இல்லை என்பது தான் இதற்கு காரணம்.

குழந்தைகளின் கண் பார்வை குறைப்பாடுகளுக்கு நம் சிந்தனையில் கிடைத்த சில காரணங்கள்:

- உணவு முறைகள், ஒரு காலத்தில் நல்ல சத்தாண உணவுகள் அன்றாடம் சமைக்கப்பட்டது, ஆனால் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி என்ற மாயையில் கடமைக்காக மட்டுமே உணவுகள் சமைக்கப்படுகிறது பெரும்பாலும். ஊட்டச்சத்து ஆரோக்கியம் என்பதெல்லாம் மலையெறிவிட்டது. டிவி சீரியல் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவதில் இருக்கும் அக்கறை இன்று சமையல் செய்வதில் இருப்பதாக தெரிவதில்லை, சிலர் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.

- பிள்ளையும் தாயும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பழக்கம் இன்று குறைவே. பெற்றவளே கண் பார்வையை பலப்படுத்தும் காய்கறி வகை உணவுகளை திண்பதில்லை எங்கே பிள்ளைகள் சாப்பிடும் என்ற புலம்பல் எல்லா தகப்பன்மார்களிடம் உள்ளது என்னவோ உண்மை.

- டிவியுள்ள வீடுகளில் குழந்தைகளை அறவே டிவி பார்க்கக்கூடாது என்று இக்காலத்தில் சொல்லுவது பெரும் தோல்வியிலேயே முடியும். டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு வெறும் பேச்சுக்காக சொல்லப்பட்டாலும், இந்த கட்டுப்பாடுகள் உண்மையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது கேள்வியே. வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடம் பிள்ளை அதிகம் டிவி பார்க்கிறான் என்ற புகாரும், சில நேரங்களில் பிள்ளை டிவியே பார்ப்பது குறைவு என்ற செய்தியும் அன்றாடம் தாய்மார்கள் சொல்லுவார்கள் . ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. கொடுமையிலும் கொடுமை பெற்றோரும் பிள்ளைகளும் வேண்டிவிரும்பி பார்க்கும் சீரழிக்கும் சீரியல்கள் இன்றையை காலத்து சேனல்களில் ஏராளம் ஏராளம். பெற்றோர்களே நீங்கள் பெருசுகள் உங்களின் கண்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் டிவி சீரியல் மட்டுமே பார்க்க முடியாமல் போகும் என்ற வருத்தம் மட்டுமே, ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு கண் குறைப்பாடு என்று வந்தால் அது உங்கள் தலைமுறையை வருத்தப்பட வைக்குமே. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காகவாவது கேடு கெட்ட டிவி நிகழ்ச்சிகளின் பக்கம் உள்ள அடிமைத்தனத்தை  குறைத்துக்கொண்டு
சிறிய  தியாகம் செய்யலாமே..

- பள்ளிக்கூடங்களில் உள்ள சூழ்நிலைகளும் குழந்தைகளின் கண்பார்வை கோளாறுகளுக்கு மிக முக்கிய காரணம். எத்தனைப் பேர் தான் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள வகுப்புகளில் உள்ள வசதிகளை குறிப்பாக வகுப்புகளில் உள்ள லைட்டிங் எப்படி உள்ளது என்று சென்று பார்த்திருக்கிறீர்கள், அதில் உள்ள குறைப்பாடுகளை பள்ளிகளுக்கு எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்? பள்ளிகளில் உள்ள சுகாதார சீர்கேடுகள்  பற்றியும் எத்தனை பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம்  முறையிட்டிருக்கிறோம்?

- பிள்ளைகள் படிப்பதற்கு என்று அறைகள் எத்தனை வீடுகளில் உள்ளது? அப்படியே இருந்தாலும் அதை எத்தனை தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அவ்வறையில் படிக்க சொல்லி ஊக்கப்படுத்துகிறார்கள். படிக்கும் அறைகளில் உள்ள வெளிச்சம் தன் பிள்ளைகள் படிப்பதற்கு ஏதுவானதா என்பதை எத்தனை பெற்றோர் யோசித்துப்பார்த்திருக்கிறோம்?

- நம் பிள்ளைகள் குர்ஆன் ஓதுவதற்காக செல்லும் மதர்சாக்களில் (காலை, மாலை) உள்ள வெளிச்சம் மற்றும் சுகாதார சூழல்களிலும் நாம் அறவே கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

மேல் சொன்னவைகள் அல்லாமல் நிறைய மற்ற காரணங்கள் உண்டு. இதைப் படிப்பவர்கள் மேலும் உள்ள தகவல்களை எல்லோருக்கும் பகிர்ந்துக்கொள்ளலாமே. குழந்தைகளின் கண் பார்வை தொடர்பான பதிவுகள் வரும் நாட்களில் நம் அதிரைநிருபரில் பதியப்படும். இன்ஷா அல்லாஹ்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில்  அக்கரை செலுத்துவதிலிருந்து சற்றே விளகி இருக்கிறார்கள் என்பதே அன்றாடம்  நாம்  கண்டுவரும்  காட்சி.  குழந்தைகளின்  எதிர்க்காலத்தை பற்றிய குறிக்கோள் இல்லாமல் செல்லும் இவர்களின் வாழ்க்கை பாதை எங்கே செல்கிறது என்று சிந்திக்க வேண்டாமா!
-- தாஜுதீன்

11 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நல்ல பலனுள்ள கட்டுரை,ஆரம்பத்திலிலிருந்தே பிள்ளைகளுக்கு கீரை,காய்கறிகளை கட்டாய உணவாக்க வேண்டும்

Unknown சொன்னது…

தாஜூதீன் காக்காவின் நல்ல பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரை.

அதிரை முஜீப் சொன்னது…

நல்ல சிந்தனையுள்ள கட்டுரை!. பெரும்பாலான பெண்கள் இடுப்பு வலி எடுத்து பிரசவம் நடப்பதை விரும்பவில்லை!. அந்த வேதனையை அனுபவிக்காமல் அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பெற நினைக்கின்றனர். பிரச்சனை இங்கே இருந்தே ஆரம்பம் ஆகின்றது. குழந்தை வெளி வரும்போது அது தன்னால் ஆனா அளவு எவ்வாளவு முயற்சி செய்து வெளிருகின்றதோ, அந்த அளவு அந்தக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பின் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறப்பதால், தாயினால் சீம்பால் என்று கூறப்படும் முதல் முதல் சுரக்கும் தாய்பாலை பெரும்பாலான குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால், தாய்க்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்து (குளோரோபாம்) தெளிந்து அவர் சுயநினைவு திரும்பும வரை குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதில் பால் பவுடர் பாலே முதல் தாய்பாலாகின்றது. அதில் எத்தனை அளவு கெமிக்கல் கலந்துள்ளது என்று யாரும் நினைப்பதில்லை!.

மேலும் பெரும்பாலான தாய்மார்கள், இறைவனின் கட்டளையான முழுமையான இரண்டு வருடம் தாய்ப்பாலை கொடுப்பதில்லை!. உடனே அடுத்த குழந்தைக்கு தாயாகிவிடுவது, அல்லது தாய்பால் கொடுத்தால் இளமை குறைந்து தன் அழகு குறைந்துவிடும் என்ற போலி காரனங்களை கூறி அந்த குழந்தையின் ஹக்கான உணவாகிய தாய்ப்பாலை நிருத்திவிடுகின்றார்கள். சில தாய்மார்கள் தங்களுக்கு பால் சரிவர சுரக்கவில்லை என்று கூறியும் அதை நிறுத்தி விடுகின்றார்கள். ஆனால் பாவம், யாருமே பால் சுரப்பதை அதிகரிக்க செய்வதற்கான சத்தான உணவுகளையும் உட்கொல்வதில்லை என்பதும் கவலையளிக்கும் விசயமே!.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாத காலத்திற்கு தாய் பாலை தவிர தண்ணீர் உட்பட வேறு எந்த வகையான உணவும் தேவை இல்லை என்பது மருத்துவ உண்மை!.

பின் எப்படி எல்லாம் வளர்ந்து வரும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவானதாகவே இருக்கும். எனவே தாய்ப்பாலை அதிகம் அதிகம் கொடுப்பதற்கான விழிப்புணர்வில் இருந்தே நம் பிரச்சாரம் இருக்கவேண்டும்.

sabeer.abushahruk சொன்னது…

விழிப்புணர்வு மாநாட்டின் போதனைகளைப் படிப்படியாய் செயல்படுத்தும் முனைப்பில் சகோதரர் தாஜுதீனின் பார்வை "கண் பார்வை" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

கண் பராமரிப்பு டிப்ஸுக்காக அதிரைப் போஸ்ட்டை எதிர்பார்க்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நல்ல "விழி"பேனும் உணர்வின் ஆக்கம்... கிடைத்திருக்கும் அருட்கொடையை நாம்தான் பாதுப்புடன் பேனிக் கொள்ளவேண்டும்...

குழந்தைகளை கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்கும் பெற்றோம் அந்தக் கண்மனிகளின் விழி மொழியையும் ஊன்றி நோக்குங்கள் !

Yasir சொன்னது…

நல்ல விழிப்புணர்வு கட்டுரை சகோதரரே....குழந்தைகளின் விசயத்தில் அக்கறை செலுத்துவது...வருங்கால சமுதாயத்திற்க்கு வலு ஊட்டுவது போன்றது...இக்காலத்தில் தாய் தகப்பன் படித்து இருந்தாலும் எப்படி இந்த விசயத்தில் கோட்டைவிடுகிறார்கள் என்று விளங்கவில்லை..விழிப்புணர்வு அவசியம் விழி தன் ஒளியை இழக்கும்முன்

Yasir சொன்னது…

//உடனே அடுத்த குழந்தைக்கு தாயாகிவிடுவது, அல்லது தாய்பால் கொடுத்தால் இளமை குறைந்து தன் அழகு குறைந்துவிடும் என்ற போலி காரனங்களை கூறி அந்த குழந்தையின் ஹக்கான உணவாகிய தாய்ப்பாலை //// தாய்ப்பால் கொடுக்காத தாய்க்கு “ மார்பு புற்றுநோய்”க்கான வாய்ப்பு அதிகம் என்று பல் ஆராய்ச்சிகள் சொல்லி நிருபித்து இருக்கின்றன

Yasir சொன்னது…

பல் = பல

அலாவுதீன்.S. சொன்னது…

சகோதரர் தாஜுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// அன்மையில் அதிரையில் உள்ள ஒரு குடும்பத்தில் உள்ள 5 வயது குழந்தை ஒன்றுக்கு கண்பார்வை குறைப்பாடு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.

பிள்ளையும் தாயும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பழக்கம் இன்று குறைவே.

ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு கண் குறைப்பாடு என்று வந்தால் அது உங்கள் தலைமுறையை வருத்தப்பட வைக்குமே.

எத்தனைப் பேர் தான் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் உள்ள வகுப்புகளில் உள்ள வசதிகளை குறிப்பாக வகுப்புகளில் உள்ள லைட்டிங் எப்படி உள்ளது என்று சென்று பார்த்திருக்கிறீர்கள், அதில் உள்ள குறைப்பாடுகளை பள்ளிகளுக்கு எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்? பள்ளிகளில் உள்ள சுகாதார சீர்கேடுகள் பற்றியும் எத்தனை பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கிறோம்?///


தாங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மையே.

பிள்ளைகள் விஷயத்தில் தாய்மார்களின் அக்கரை குறைவே. வீட்டில் இருக்கும் நேரங்களைவிட பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரம்தான் அதிகம். கண் விஷயத்தில் பிள்ளைகளும் கவனக்குறைவாக இருக்கிறார்கள். தாய்மார்களும் கவனக்குறைவாக இருக்கிறார்கள்.

இப்பொழுது உள்ள பிள்ளைகள் சத்தான உணவை கொடுத்தால் முகத்தை சுளித்து கொள்கிறது. சிப்ஸ், பள்ளியில் வெளியில் விற்கும் சுகாதாரமற்ற பொருட்களை வாங்கித் தின்னும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பிள்ளைகள் வளர்ந்து இதற்கு திருமணமாகி குழந்தை பிறக்கும்பொழுது சிப்ஸில் என்ன சத்து இருக்கிறதோ அதுதான் பிள்ளைக்கும் கிடைக்கும்

என்னுடைய மகள்களுக்கும் சத்தான உணவான கீரைகள், காய்கறிகள் , ஈரல்கள், முட்டை கொடுத்தால் மிக மிக போராடி திட்டி பிறகுதான் கொஞ்சம் கொடுக்க முடிகிறது. என்ன செய்ய வல்ல அல்லாஹ் பிள்ளைகளுக்கும், தாய்மார்களுக்கும் விழிப்புணர்வையும் நல்ல புத்தியையும் தரட்டும்.

சமுதாயதக்கண்மனிகளின் கண் விஷயத்தில் அக்கரை எடுத்து எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே!

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

கண்கள் பற்றிய நல்ல விழிப்புணர்வு கட்டுரை

T.V. பார்க்கும்போது விளக்கை அனைத்து விட்டு பார்காதீர்கள்

புஸ்தகம் படிக்கும்போது வீட்டு ஜன்னல் நம் முதுகுபுறம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

///புஸ்தகம் படிக்கும்போது வீட்டு ஜன்னல் நம் முதுகுபுறம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் ///

அட அதான் அன்றே ஜன்னல் வைத்த ஜாக்கெட் தைத்து போட்டுகிட்டங்களோ... அதிக(மா)படிச்சவங்க... :))