Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ALM பள்ளிக்கூட ஆண்டுவிழா 2

அதிரைநிருபர் | March 09, 2011 |

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இஸ்லாத்தை பேணிய ஓர் அக்மார்க் ஆண்டுவிழா என நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வண்ணம் சீர்மிகு ஆண்டுவிழா EPS பள்ளி என்று மக்களின் நினைவில் நிற்கும் அதிரை ALM பள்ளியில் கடந்த 06.03.2011 அன்று நடந்தேறியது.

அதிரை கல்வியாளர்களான பன்னூலாசியர் அதிரை அகமது அவர்கள் தலைமையேற்க, தமிழ்மாமணி புலவர் பஷீர் அவர்கள் சிறப்புரையாற்ற சுமார் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் (பெண்கள் மட்டும்) கலந்து கொள்ள, மாணவ, மாணவிகள் தங்களின் மார்க்கம் மற்றும் கல்வி சார்ந்த அறிவுத்திறன்களை வெளிப்படுத்தினர்.

மாற்றார்களுடையது மட்டுமல்ல, முஸ்லீம் கல்வி நிறுவனங்களாக, மார்க்கத்தையும் போதிப்பதாக இனங்காட்டிக் கொண்டுள்ள பல்வேறு அதிரை கல்வி நிலையங்களில் எதுவும் விதிவிலக்கில்லை என்று சொல்லுமளவில் சினிமா மேடைகளாய் போய்விட்ட தற்கால பள்ளி ஆண்டுவிழாக்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய் மார்க்கத்துடன் கல்வியை கலந்து ஆண்டுவிழா நிகழ்வுகளை அமைத்திருந்த விதம் நாம் அதிரையில் தான் இருக்கின்றோமா?! என ஆச்சரியத்துடன் நம்மை நாமே ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொள்ளச்செய்தது. மாணவ, மாணவிகள் பள்ளியில் கற்ற மார்க்க அறிவை, எதிர்கால இலக்குகளை ஒருபுறம் வெளிப்படுத்த மறுபுறம் புலவர் பஷீர் அவர்கள் மார்க்கம் சார்ந்த கல்வியின் அவசியத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களை நடத்துவோர்களும் உணரும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

கிட்டதட்ட ஓர் தர்பியா நிகழ்வுக்கு ஈடாக நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து துணிவுடன் ஏற்பாடு செய்த பள்ளியின் தாளாளர் அப்துல் ரஜாக் அவர்களுக்காகவும் நிகழ்ச்சியின் இறுதிவரை உடனிருந்து இதுபோன்ற ஒரு வித்தியாசமான விழாவிற்கு வரவேற்பளித்த பெற்றோர்களுக்காகவும் ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
 

S. அப்துல் காதர்
அதிரையிலிருந்து

நன்றி: அதிரை அமீன்

இந்த ஆண்டுவிழாவின் புகைப்படம் இருந்தால் எங்களுக்கு அனுப்பிவையுங்கள், உடனே பதிந்துவிடுகிறோம்.

--அதிரைநிருபர் குழு

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள கானொளியேதும் எடுத்திருந்தால் அனுப்பித் தரவும்...

அபு இஸ்மாயில் said...

//இஸ்லாத்தை பேணிய ஓர் அக்மார்க் ஆண்டுவிழா என நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வண்ணம் சீர்மிகு ஆண்டுவிழா//
சகோ அப்துல் காதர் அவர்கள் அந்நிகழ்சிகளில் மிகவும் கவனமாக பார்த்திருப்பர் போலும் பாங்கிற்கு கூட இடைவெளி விடாமல் அவ்வளவு சிறப்பாக நடத்தினார்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு