Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

LIVE - இணையவழி ஆலோசனைக்கூட்டம், அதிரை ஷிஃபா மருத்துவமனையில் 16

அதிரைநிருபர் | March 07, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் , நாளை March , 07, 2011 திங்கள் மாலை இந்திய நேரப்படி 4 .30 PM IST ஷிஃபா மருத்துவமனை சம்பந்தமாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு வார்த்தை நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர். நம் சகோதர்களின் நேரம் கருதி இந்த நிகழ்வினை, நேரடி ஒளிபரப்பாக " LIVE WEBCASTING ' மூலமாக உங்களை சந்திக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அவரவர்கள் இருந்த இடங்களிலேயே Computer மூலமாக பார்க்கலாம் . இதன் நோக்கம் வெளி நாடுகளில் வசிக்கும் சகோதர்களும் பேச்சு வார்தைகைகளை காணலாம் , கேட்கலாம் மேலும் கருத்துகளையும் பறிமாறிகொள்ளலாம்.



தயவு செய்து, நமதூர்க்கு, மருத்துவமனை குறிப்பாக, அவசரகால மருத்துவ உதவி தேவை என்பதை அறிந்து ஷிஃபா மருத்துவமனை உயிர்ப்பித்து எழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வதோடு, உங்கள் நேரத்தை செலவிடுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட சில குறைபாடுகளை மறந்து உங்களை ஈடுபடுதிகொள்ளவும்.

முக்கிய குறிப்பு : நேரடி ஒளிபரப்பை பார்க்கும்போதே உங்களின் கருத்துகள் வரவேற்கபடுகின்றன. You can participate via google chat . KIindly mention your name and country while chating. e mail aiabdulrazak@gmail.com

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு Froward செய்யும்படி கேட்டுகொள்கிறோம்.

நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் :

A.J.அப்துல் ரசாக்
S.A.M பாரூக்
M.,A.H முஹிதீன்
M.S.தாஜுதீன்
மற்றும் அழைப்பாளர்கள்.

தங்கள் அன்புள்ள

ABDUL RAZAK

Media CHASECOM Services P.Ltd.
044 - 42052222



நம் அதிரைநிருபர் வலைப்பூவில் சில மாதங்களுக்கு முன்பு ஷிஃபா மருத்துவமனை தொடர்பான ஒரு பதிவு http://adirainirubar.blogspot.com/2010/11/blog-post_19.html வெளிவந்து நிறைய கருத்துக்கள் பரிமாறப்பட்டது, ஆனால் இதுவரை ஒரு பதில் கூட ஷிஃபா மருத்துவமனையிடமிருந்து வரவில்லை. இன்ஷா அல்லாஹ் இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகாவது, ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு


16 Responses So Far:

Shafi MI said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

80 களிலேயே ஆரம்பிக்கப்பட்ட அதிரையின் சுகாதார, பிரசவ மற்றும் பிணி நீக்கும் மையமாக - ஷிஃபா பல்நோக்கு பிரத்தியோக மருத்துவமனை(multi speciality hospital) ஆக உயர்ந்து இருந்திருக்க வேண்டியது இன்றுவரை சவலைப் பிள்ளையாகவே இருக்கும் எங்கள் 'ஷிஃபா'!

ஊரிலுள்ள மக்களின் அவசியத் தேவையான மகப்பேறு பெண் மருத்துவர் இன்றுவரை நிலையாக 'ஷிஃபா' உட்பட எங்குமே இல்லாத நிலை. கெஞ்சிக் கூத்தாடி எங்கிருந்தெல்லாமோ ஒரு பெண் மருத்துவரை அழைத்து வந்தாலும் அற்ப ஆயுளில் அவர் தமது வந்த வேலை முடிந்ததும் ந(க)டையைக் கட்டிவிடுவதால், நம்வீட்டுப் பெண்கள் கருவுற்ற ஏழெட்டு மாதம் வரை நம்மூரிலுள்ள அந்த மருத்துவரிடம் காட்டிவிட்டு பின்னர் வேறு வழியில்லாமல் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்காக பட்டில்லாத கோட்டைக்கோ நஞ்சாவூருக்கோ அலைக்கழிக்கப்படும் அவலம்.

அவ்வளவு சிரமத்திற்குப் பின்னர் சேமிப்பைத் துடைத்தும் கடன் வாங்கியும் மகப்பேறு சுகப்பேறு ஆவதற்கு பதிலாக கத்தரிப்பேறு! "சொந்த செலவில் சூனியம்" என வேடிக்கையாகச் சொல்வார்களே அது இதற்க்கு மிகப் பொருத்தம்.

மிக ஆபத்தான நிவாரணம் - மணவிலக்கும் கத்தரிப்பேறும்.
தலைமுறைக்கு ஒன்று என காதில் விழ வேண்டியது (முடிந்தால் அது கூட இல்லாமல்) இன்று இவை மட்டுமே நம் சமுதாயத்தில் குறிப்பாக நம் ஊரில் நித்தம் நாராசமாய்...

Shafi MI said...

இனியும் அடுத்தவரை நம்பிப் பயன்?

ஷிஃபாவில் பிறந்த முதல் குழந்தை என் பெயருடைய என் மாமா மகன்; அவர் இன்று இருபதைத் தாண்டிய இளைஞர். ஷிஃபாவின் அந்த ஆரம்ப நாட்களில் பிறந்த குழந்தையை தொலைநோக்கில் சமுதாய நலன் கருதி மருத்துவம் படிக்க வைத்திருந்தால் கூட இன்று நமக்கென ஒரு மருத்துவர்.

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்றாலும், கடந்த கால நிராசைகளை சொல்வதன் மூலம் இனியாவது அப்படி ஒருவாய்ப்பு நமது எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்கட்டுமே என்ற ஆசையே தவிர வேறில்லை.

"தன் கையே தனக்கு உதவி" என தொலைநோக்குப் பார்வையில் நாமே களத்தில் இறங்கினால்தான் வ(ள)ரும் தலைமுறையாவது பயனுறும், இன்ஷா அல்லாஹ்.

"ஷிஃபா மருத்துவக் கல்வி அறக்கட்டளை" என்ற ஒன்றின் மூலம் இஸ்லாமியப் பற்றுள்ள, சேவை எண்ணமுள்ள, மேற்படிப்பு படிக்க விரும்பும் நற்குணமுள்ள மாணவியைத் தேர்வு செய்து மருத்துவம் படிக்கச் செய்தால் இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆறேழு ஆண்டுகளில் நமக்கே நமக்கென ஒரு பெண் மருத்துவர் தயார்! இவ்வாறு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒருவரைத் தேர்வு செய்து அவர் தம் படிப்பு முடித்து ஷிபாஃவுக்காக குறைந்தது ஐந்து வருடங்கள் இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப் பட்ட அடிப்படை ஊதியத்தில் பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இக்கல்வியாண்டின் பள்ளி இறுதியாண்டில் தேர்வெழுதும் மாணவிகளில் இருந்தே இதனைத் தொடங்க வேண்டும்.

வசதியுள்ள பொதுநலம் நாடும் கணவான்கள் தம் வீட்டுப் பெண்டிரை மருத்துவராக்க தயாராயில்லாத போது, நம்மூருக்கென சேவை எண்ணத்துடன் பெண் மருத்துவர் கிடைக்க எளிய வழி இதைத் தவிர வேறெதுவும் புலப்படவில்லை.

அன்றாட வாழ்வுக்கே அல்லல்ப்படும் அதிரைச் சாமானியனுக்கு ஐம்பது+ லட்சங்கள் கொடுத்து மருத்துவப் படிப்பெல்லாம் கானல் நீர்.

ஷிஃபா ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அயலகத்தில் பணியாற்றிய நம்மூர் நல்லுள்ளங்கள் பலர் தம் தகுதியையும் மீறி ஷிஃபாவுக்காக பங்களிப்புச் செய்ததாகக் கேட்டதுண்டு. அப்படியிருக்க இப்போதுள்ள நம் ஊரைச் சேர்ந்த சமுதாய நலன் நாடும் வசதியுள்ள நல்லோர் சிலர் நமது ஷிஃபாவுக்காக பெண் மருத்துவரை உருவாக்க ஐம்பது+ லட்சங்கள் இயலக்கூடியதே.

காத்திருக்காமல் களத்தில் இறங்க வேண்டிய தருணம். தவறவிட வேண்டாம்.

மேற்கண்டவை சில வருடங்களுக்கு மட்டும் நமது ஊரின் பெண் மருத்துவர் இல்லாமையைப் போக்க ஒரு தற்காலிக தீர்வு. கடைசி பத்தியில் உள்ள நமது ஊரின் 'கனவுத்திட்டம்' செயலுருப் பெற்ற பின் இன்ஷா அல்லாஹ் மருத்துவக் கூட்டம் நமதூருக்கு சேவை செய்ய போட்டியிடும், இன்ஷா அல்லாஹ்.

தமிழக முஸ்லிம் பகுதிகளுக்கு முன்மாதிரியாய் இருந்திருக்க வேண்டிய நமதூர் சுகாதார, மருத்துவ வசதிகளில் வெட்கித் தலைகுனியக் கூடிய வகையில் மிக, மிகப் பின்தங்கியிருக்கிறோம். அக்கம் பக்கத்து ஊர்களிலெல்லாம் பயனற்று உள்ள வளங்களைப் பயன்படுத்தி மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்குமளவுக்கு திட்டமிடல்!

சில வருடங்களுக்கு முன் நம் ஊரில் சமுதாய நலன் நாடும் சிலர் 'மகளிர் மட்டும்' (கலை, அறிவியல்) கல்லூரிக்கு முன்முயற்சி எடுத்தனர். அந்த முயற்சி இன்னமும் நிலுவையில் இருந்தால் அதனைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு பத்தோடு பதினொன்றாக கலை, அறிவியல் கல்லூரியாக அல்லாமல் குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நன்கு திட்டமிட்டு "மகளிர் மட்டும் மருத்துவக் கல்லூரி" க்கு நாட்டிலேயே (அனேகமாக) முதலாவதாக விதையிட முயற்சி செய்யலாம். அந்த விதையை நலன் தரும் விருட்சமாக வளரச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வான், இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஷிஃபாவில் பிறந்த முதல் குழந்தை என் பெயருடைய என் மாமா மகன்; அவர் இன்று இருபதைத் தாண்டிய இளைஞர். ஷிஃபாவின் அந்த ஆரம்ப நாட்களில் பிறந்த குழந்தையை தொலைநோக்கில் சமுதாய நலன் கருதி மருத்துவம் படிக்க வைத்திருந்தால் கூட இன்று நமக்கென ஒரு மருத்துவர். //

காலம் கடந்தாலும், இனியாவது பொது நோக்குடன் மருத்துவமனை நிர்வாகமே அதிரையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து, ஷிஃபா மருத்துவமனைக்கு என்றே மருத்துவர்களை உருவாக்கலாமே.

இன்றைய இளைய தலைமுறையில் சேவை அடிப்படையில் செயல்படக்கூடியவர்களை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை.

தொலை நோக்கு சிந்தனை எல்லோருக்கும் அவசியம்

சகோதரர் ஷாபி அவர்களின் அலசல் மிக அருமை, ஷிஃபா நிர்வாகம் மேல் சொன்னவைகளை கவனத்தில் கொள்ளுமா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஷிஃபா மருத்துவமனைத் தொடர்பான பதிவுகள் அதிரைநிருபர் வலைப்பூவில் வெளிவந்து அறிய பல கருத்துக்களும் பரிமாறபட்டது. இதே உங்கள் பார்வைக்காக அதன் சுட்டிகள்.

http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_31.html

http://adirainirubar.blogspot.com/2010/11/blog-post_16.html

http://adirainirubar.blogspot.com/2010/11/shifa-hopital-survey-result.html

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இதற்கு முன்னர் நடந்த ஆலோசனை கூட்டங்களுக்கும் இன்று நடைப்பெறு ஆலோசனைக்கூட்டத்திற்கு நிச்சயம் வித்யாசம் இருக்கும் என்று நம்புகிறோம்.

தொலைநோக்கு சிந்தனையில் நல்ல அறுவிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

பங்குதாரர்களை முறையான செயல்திட்டங்களை முன்னிறுத்தி அதிகம் சேர்கலாம்,ஊர்நலன் கருதி முதலீடு செய்ய நிறைய மக்கள் தயார்.

அபூ சுஹைமா said...

ஷாஃபி காக்காவின் ஆலோசனை மிகச் சிறந்த ஒன்று.

குறைகளைக் கூறுதல் எளிது. குறைகளைக் களைய வழிமுறைகளைக் கூறுதலும் அதற்கு உறுதுணையாய் இருத்தலும் கடினம்.

மருத்துவமனையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத் திட்டங்கள் மட்டுமின்றி நீண்டகாலத் திட்டங்களையும் வகுக்க வேண்டும். இத்தகைய திட்டங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளேன்.

Yasir said...

there is a saying " don't come with problems always bring solutions for it "...i completely agree with what bro.shafi saying...this is a kind of investment for our society..one of the best solution

அதிரைநிருபர் said...

//அபூ சுஹைமா சொன்னது…
மருத்துவமனையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத் திட்டங்கள் மட்டுமின்றி நீண்டகாலத் திட்டங்களையும் வகுக்க வேண்டும். இத்தகைய திட்டங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளேன்//

சகோதரர் அப்துல் கறீம் அவர்கள் சொன்னது போல், நீண்டகால மற்றும் குறிகிய காலத்திட்டங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்யத்தயாராக உள்ளோம். அதிரைநிருபர் வலைப்பூவின் மூலமும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகள் செய்ய தயாராக உள்ளோம். மருத்துவமனை நிர்வாகம் தொடர்ப்பு கொள்ளலாம்.

Adirainirubar Team

adirainirubar@gmail.com
+97150 8858480

அதிரை முஜீப் said...

ஷிபா மருத்துவமனை சார்பாக அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய சில ஆலோசனைகள்:
•அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்களுக்கு சராசரியாக தினம் பத்து பெண்களுக்காவது குழந்தைபேறு நடைபெறுவதால் முதலில் அந்த துறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும்.

•இதயம் தொடர்பான (ஹார்ட் அட்டாக்) துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, 24 மணிநேரமும் அவசர உதவிக்கு அழைத்தால் வரும்படி அவசரகால ஊர்தியுடன் வசதி செய்து தரப்படவேண்டும்.

•நீரழிவு நேய்கள் தொடர்பானவர்கள் நம்மூரில் அதிகம் இருப்பதால் மகப்பேறுக்கு அடுத்தகட்டமாக இந்ததுறைக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும்.

•அடுத்து வருவது, ENT எனப்படும் காது,மூக்கு தொண்டை தொடர்பான துறை.

•மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்துவித மருந்துகளும், மருத்துவ உபகரனங்களும், தேவையான பரிசோதனை கருவிகளும் (ஸ்கேன்,எக்ஸ்ரே) அவசியம் கிடைக்கவேண்டும்.

•பொதுமக்களிடம் இருந்து தக்க ஆலோசனைகளை பெற்று குறைகள் உடனடி தீர்த்துவைக்கப்படவேண்டும். ஏனெனில் ஷிபா மருத்துவமனை தற்போது இழந்துள்ளது மக்களின் நம்பிக்கையைத்தான்.

•எல்லாவற்றிக்கும் மேலாக தங்களினால் இந்த நோயை குணப்படுத்த தேவையான மருத்துவரோ, மருந்தோ,அல்லது உபகரணமோ இல்லை எனில் அதை சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்திற்கு உடனே தெரிவித்து அவர்களை மாற்று மருத்துவமனைக்கு எந்தவித தயக்கமும் இன்றி அனுப்பிவிடவேண்டும். ஏனெனில் இதுபோல் அதிக ரிஸ்க் எடுக்கும்போதுதான், உயிரிழப்பு ஏற்பட்டு பின் நிர்வாகதிற்கே கெட்டபெயர் ஏற்படுத்தி, மீதம் உள்ள மக்களின் நம்பிக்கையையும் இழக்க நேரிடுகின்றது.

•எல்லாவற்றிக்கும் மேலாக இதுக்கெல்லாம் அதிக பணம் தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே!. அதனால் அதிரை மக்களிடம் மட்டும் பங்குத்தொகை பெற்று, இந்த வசதிகளை அதிகரிக்கவேண்டும். அவ்வாறு பங்குத்தொகை அளித்தவர்களுக்கு கட்டண தொகையில் 10% மற்றும் அவரின் ரத்த உறவுகள் (தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும்) 5% மும் மருத்துவ கட்டணத்திலும், லேப் வசதியிலும் சலுகை அளிக்க முன்வரவேண்டும்

sabeer.abushahruk said...

மூன்று முக்கியமானவற்றை முதலில் முடிவு செய்ய வேண்டும்!
01)நல்ல நம்பிக்கைக்குரிய நிர்வாகம் (சமீபத்தில் வெற்றிகரமாக அமைக்கப் பட்டுவிட்டதென நினைக்கிறேன்)

02) சகோ. ஷாஃபி சொல்வதுபோன்றதொரு நீண்டகாலத் திட்டம்.

03) சகோ. முஜீப் சொல்வது போன்ற உடனடி ஏற்பாடுகள்.

04) திருப்திகரமாக இயங்கத் தலைப்பட்டால் கைகோற்கத் தயார்தான்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த live எங்கேயிருந்து நடக்குதுங்க !?

பேசுவதற்கு gmail ஐடி கொடுத்து சேர்க்கச் சொன்னார்கள் சேர்த்திருக்கோம் இதுவரை யாரையும் காணவில்லை ? ஒருவேலை என்னை அதில் (googletalk) சேர்க்க வில்லையா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வேலைப் பளுவால் நேரலையை சரியாக காணமுடியவில்லை... என்னதான் விவாதம் நிகழ்ந்தது !? இருநூறுக்கு மேற்பட்டவர்களால் ஆன்லைனில் நேரலை காணொளி காணப்பாட்டதாக கடைசியாக காதில் விழுந்தது ஆக நிச்சயம் யாராவது முழுமையாக கண்டவர்கள் கொஞ்சம் சொல்லித் தாருங்களேன்...

தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிமானத்தை நல்வழிகளில் எப்படியெல்லாம் பயனுக்குள்ளாக்கலாம் என்பதற்கு இந்நேரலை நல்ல காட்டு !

Yasir said...

///ஆன்லைனில் நேரலை காணொளி காணப்பாட்டதாக கடைசியாக காதில் விழுந்தது /// என்ன காக்கா நானும் காலையில் இருந்து காத்து கொண்டு இருக்கிறேன்..ஒன்றுமே வரல....”வாம்மா மின்னல் “ போன்று வந்து போய்விட்டதா...ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியை தெளிவாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்க வேண்டாமா ??

ZAKIR HUSSAIN said...

//•இதயம் தொடர்பான (ஹார்ட் அட்டாக்) துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, 24 மணிநேரமும் அவசர உதவிக்கு அழைத்தால் வரும்படி அவசரகால ஊர்தியுடன் வசதி செய்து தரப்படவேண்டும்.//

To Bro Mujeeb,

For cardiac ward, we need CCU , ICU , Triage area, apart from this we need Cardiologist, if we go little higher with OT and cardio thoracic surgeons and don't forget we need nurses who are trained in Emergency [ ICU & CCU]

All this are not easy & economically possible for town like Adirampattinam.

What we can do is we should have "LINK HOSPITAL" for reference & transfer of patients in related specialty. And the "LINK HOSPITAL" must be ready to provide the services when situation rises.

ZAKIR HUSSAIN

ZAKIR HUSSAIN said...

To Bro Mujeeb.

//அடுத்து வருவது, ENT எனப்படும் காது,மூக்கு தொண்டை தொடர்பான துறை//

This is really possible for Shifa hospital and i do agree that our senior citizens are suffering some ENT related problem.

Those who are age in the age range of 60 & above if they have hearing problem un attended [Less than 80db] they can develop deafness in very short time.

And people are with Sub Mucus Rhinitis [SMR ] can develop so many complications. I do seen lot of people simply says 'dust allergy' and they least bother about treating it.

அதிரை முஜீப் said...

Dear Bro.ZAKIR HUSSAIN,

I do agree with all your suggestions. But on the other hand, while our people are ready to spend money by force for such treatments in outside of Adirai, like Tanjore,Trichy and some time to Chennai. why we should not think about it. Shifa hospital is like Imam shafi school. Both not ready to upgrade their facilities according to the modern and technological world. Most of Adirai peoples are spending their earnings out side Adirai like education and medical treatment. This is what i am saying that, these moneys to be en routed to Adirai.

I feel that, you are the best choice to give such guidance to the Shifa hospital management, because you know many of medical related and technical words.

please keep continue to comments. May Allah guide us in a good way.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு