Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேர்தலும் ! மோதலும் ! 12

அதிரைநிருபர் | March 19, 2011 | ,

அரசியல் களம்

பரப்பரப்பான அரசியல் சூழலில் தமிழக தேர்தலில் பேட்டியிடும் முஸ்லீம் கட்சிகளின் தொகுதிகள் பற்றிய ஓர் அளசல்.

மனிதநேய மக்கள் கட்சி:

1) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

2) ஆம்பூர்

3) இராமநாதபுரம்

இ.யூ.முஸ்லிம் லீக்:

1) வாணியம்பாடி

2) நாகப்பட்டினம்

3) துறைமுகம்

எஸ்.டி.பி.ஐ:

(எஸ்.டி.பி.ஐ.1௦ தொகுதிகளில் போட்டியிடுகிறது முதல்கட்டமாக 6 தொகுதிகளை அறிவித்துள்ளனர்.)

1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)

2.இராமநாதபுரம்

3.பூம்புகார் (நாகை மாவட்டம்)

4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)

5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்

6.நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்)

நேருக்கு நேர்...

மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் நின்று முஸ்லிம்களின் வாக்கை சிதறடித்து மூன்றாம் நபரை தேர்வு செய்ய வழி அமைத்திருக்கின்றன.

இதில், மனிதநேய மக்கள் கட்சியும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் முறையே எதிர் கட்சி ஆளுங்கட்சியில் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இந்த தொகுதிகளை பெற்றுள்ளார்கள்.

ஆனால், எஸ்.டி.பி.ஐக்கு அப்படியோரு நிர்பந்தம் இல்லை. சுயமாகவே அறிவித்தது. எனவே முஸ்லிம்களின் ஒற்றுமை,பிரதிநித்துவம் கருதி முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடாத வேறு தொகுதியை தேர்வு செய்து களம் காணவேண்டும்.

தமிழகத்தில் 60 தொகுதிகள் முஸ்லிம்களுக்கு சாதகமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த 60 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐயும் அதன் சார்ப்பு அமைப்புகளும் பலமாகவே இருக்கிறது என்பது நாடறிந்த உண்மைதான்.

எஸ்.டி.பி.ஐ சமுதாய ஒற்றுமை, பிரதிநித்துவம் கருதி வேறு தொகுதியை தேர்வு செய்யுமானால், அந்த தொகுதியில் இருக்கும் மமகவினரும் லீக்கர்களும் கூட எஸ்.டி.பி.ஐக்கு வாக்களிப்பார்கள் சமுதாயமும் முழு ஆதரவை தந்து சட்டமன்றத்திற்கு வாழ்த்தி அனுப்பும். இன்னும் சொன்னால், இதுவே சமுதாய அரசியல் கட்சிகளின் ஒற்றிமைக்கும் அடித்தளமாகவும் முன்மாதிரியாகவும் அமையும். இன்ஷாஅல்லாஹ்!

--ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இளைய பட்டாளம் ஏராளம் வைத்திருக்கும் இயக்கம் தனித்து சுயமாக முடிவெடுத்து போட்டியிடுவதால் துறைமுகத் தொகுதியை தவிர்த்து விட்டு ஆதி துறைமுக பட்டினமான அதிரைப்பட்டினத்தை உள்ளடக்கிய பட்டுக்கோட்டைத் தொகுதியும் காத்திருக்கிறது வாருங்கள் வெற்றியை எடுத்துச் செல்ல !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லீம் கட்சிகளின் கூட்டனி என்று ஏற்படுமோ அன்று தான் நம் பலத்தை நிரூபித்துக்காட்ட முடியும். அதைவிடுத்து ஒவ்வொரு முஸ்லீம் கட்சிகளும் தனித்துப்போட்டியிட்டு பெறும் ஓட்டுக்கள் ஒட்டுமொத்த முஸ்லீகளின் பலமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இரண்டு மிகப்பெரிய கூட்டனியில், இரண்டு வளர்ந்த முஸ்லீம் கட்சிகள் ஆளுக்கு ஒரு திசையில் இருந்து கூட்டனி தர்மத்தை காப்பாற்றுவதில் தான் இருப்பார்கள். SDP போட்டியிடும் தொகுதிகளில் SDP வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்ப்பார்பது வெறும் எதிர்ப்பாகவே இருக்கும்.

இன்று நாம் இங்கு பேசும் ஒற்றுமை, முஸ்லீம் வாக்குகள் ஒன்றிணைப்பது என்று சொல்லிக்கொள்வதில் நம் விருப்பதை தெரிவிக்கலாம், ஆனால் தேர்தல் களம் என்று வந்துவிட்டால் அங்கு முஸ்லீம் ஓட்டுக்கள் என்று பார்க்கும் பக்குவம் நம் மக்களிடம் இன்னும் வரவில்லை. அந்த உணர்வை SDP போன்ற புதிய முஸ்லீம் அரசியல் கட்சி முஸ்லீம்களிடம் உணர்த்தவேண்டும்.

மற்றபடி நல்லெண்ணத்தில் முஸ்லீம் ஒற்றுமை என்ற அடிப்படையில் நடுநிலையுடன் எழுதிய சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இளம் மாணவர் கூட்டத்தின் பலத்தில் வளர்த்து வரும் SDP இந்த தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது நல்ல செய்தியே. இருந்தாலும் பள்ளி கல்லூரி தேர்வு நாட்களில் இந்த தேர்தல் நடைப்பெறுவதால், மாணவர் கூட்டத்தின் பலத்தில் இருக்கும் SDPயின் தேர்தல் பிரவேசம் நம் மாணவர்களின் தேர்வுகளுக்கு தடையாக இருந்துவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க வாய்ப்பில்லை.

ஒரு காலத்தில் dmkவுக்காக போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனை பாத்து என்று கோசம் போட்டு தங்களின் படிப்பை கைவிட்ட தியாகிகளை நாம் நினைவுபடுத்திப்பார்க்கலாம்.

பரிச்சை நேரமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை எக்காரணம் கொண்டு தேர்தல் வேலைகளில் எந்த முஸ்லீம் கட்சிகளும் கண்டிப்பாக வரவழைக்கூடாது.

5 ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது அதற்கு முன்னறோ தேர்தல் வரும். ஆனால் ஓர் ஆண்டு படிப்பு போனால், தேர்தலால் வீண்போன வருடம் திரும்ப கிடைக்காது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்றைய சூழலில் தற்போதய MLA வை எதிர்த்து போட்டியிட சரியான பிரதான எதிர்தரப்பு இல்லாத நிலையில் SDP தாராளமாக போட்டியிடலாம்.இன்சா அல்லாஹ் நமது ஓற்றுமையை பொறுத்து வெல்ல முடியும்.ஒருவேளை அந்த வாய்ப்பு இன்று இல்லாவிட்டாலும் நாளை நமது சக்தியை பிரதான கட்சிகள் புரிந்து கொண்டு அடுத்த முறையாவது அந்த கட்சிகள் நமது சமுதாயத்துக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுக்க ஏதுவாக இருக்குமல்லவா!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். தேர்தலால் தேர்வை(பரிட்சையில்)தள்ளிபோடாதீர்கள். தேர்தலில் தோற்றவர் தேரிடுவர். தேர்வில் தோற்றவர் பின் மீளுவது அவ்வளவு எளிதல்ல.சகோரர் தாஜுதீனின் ஆதாங்கம் காலத்தில் சிந்திக்க வேண்டியது அவசியம். அது போல் தம்பியின் கட்டுரை மிக மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். சம்பந்த பட்டவர்கள் புரிந்து நடந்தால் காலம் 'பொன்' செய்யும்(Time is Gold).

sabeer.abushahruk said...

இந்த ஆக்கத்தைப் படைத்த சிறுசுக்கு இருக்கிற விபரங்கூட நம்மை வழிநடத்த வேண்டிய பெருசுகளிடம் இல்லையேப்பா!

அப்துல்மாலிக் said...

இதையே நிறைய பேரு சொல்லிட்டாங்க, எந்தக்கட்சியா இருந்தாலும் முஸ்லிம்கள் முடிந்தளவுக்கு சட்டசபையை நிறைக்கனும் என்ற கொள்கையோடு அனைவரும் ஒத்துழைத்தால் நலம். இப்போ சொல்லப்பட்ட இரண்டு தொகுதிகளும் நிச்சயமாக கிடைக்காது இவர்கள் வாபஸ் வாங்காவிடில். இதை யாராவது எடுத்து சொன்னால் நலம்.

அப்துல்மாலிக் said...

முஸ்லீம் வேட்பாளர்கள்

1) ஆயிரம் விளக்கு - அசன் முகமது ஜின்(திமுக)
2) தஞ்சாவூர் - உபயதுல்லா(திமுக)
3) மதுரை மத்தி - கவுஸ் பாஷா(திமுக)
4) பாளையங்கோட்டை - மைதீன்கான்(திமுக)
5) ஆவடி - அப்துல் ரகீம்(அதிமுக)
6) ராணிப்பேட்டை - அ.முகமத்(அதிமுக)
7) திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை(அதிமுக)
8) துறைமுகம் - அல்தாப் ஹுசைன் (திமுக+முஸ்லீம் லீக்)
9) வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்(திமுக+முஸ்லீம் லீக்)
10) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது(திமுக+முஸ்லீம் லீக்)
11) கடையநல்லுர் நெல்லை முபாரக்.(எஸ்டிபிஇ)
12) இராமநாதபுரம் - அப்துல் ஹமீது.(எஸ்டிபிஇ)
13) தொண்டமுத்தூர்-உமர்.(எஸ்டிபிஇ)
14) பூம்புகார் நாகை மாவட்டம் -முஹம்மது தாரிக்.(எஸ்டிபிஇ)
15) பாண்டிச்சேரியில் நிரவி திருப்பட்டினம்-பத்ருதீன்.(எஸ்டிபிஇ)
16) தமுமுக+மமக
17) தமுமுக+மமக
18) தமுமுக+மமக

அப்துல்மாலிக் said...

எஸ்டிபி இ வாபஸ் வாங்காட்டி நிச்சயம் ரெண்டு காலி

Saleem said...

நிச்சயம் 2 தொகுதியிலும் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிக்கப்படும் என்பது நிதர்சனமானது.

Yasir said...

நல்ல அலசல்....

Anonymous said...

மின் அஞ்சல் கருத்து !
------------------

அல்ஹம்துலில்லஹ்....

அருமையான யோசனை என்று இதனை கருதுபவர்கள் அரசியல் மற்றும் பழையகால நிகழ்வுகள் தெரியாதவர்களாக இருக்குமோ என்று கருத வேண்டியிருக்கிறது.

இதில் எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பது போல முஸ்லீம் லீக்கிற்கும், மமக விற்கும் விட்டு கொடுத்துவிட்டு SDPI தமிழகத்தில் 60 தொகுதிகளில் ஏதேனும் தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிடலாமே என்கிறார். அவ்வாறு செயல்படுவதற்கு SDPI சிந்த்திக்காமல் செயல்படும் கட்சி அல்ல என்பது என்னுடைய கருத்து.

அது மட்டும் அல்ல இக்கட்சியை பற்றி நான் கேள்விபட்டவகையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுக்க 18 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பலமான கட்டமைப்புடன் பல்லாயிரக்கனக்கான செயல்வீரர்களைக் கொண்ட தேசிய அரசியல் கட்சி என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது மறக்கவும் கூடாது. இதற்கு சான்றாக ராஜஸ்தான், கர்நாடகா(64 சீட்), கேரளா (13 சீட்) வெற்றி பெற்றதை நினைவு கூற வேண்டும்.

இவ்வாறு தேசிய அரசியலில் கால் பதித்த கட்சியாக இருந்த போதிலும் தனது நிலமையை தனது அறிவிப்பை வெளியிடும் முன்பு அனைத்து தரப்பு தலைவர்களுடனும், ஜமாத்துகளுடனும், சமூக அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடி தமிழக அரசியலை கையில் எடுக்க வேண்டுமா எடுத்தால் நம்மால் சமூகத்தின் உரிமைகளை பெற பின்வாங்காமல், யாருக்கும் அடிபணியாமல் (படைத்தவனை தவிர) முன்னேர முடியுமா என்பன போன்று பல கேள்விகளை தங்களுக்குள் வைத்து அலசி ஆராய்ந்து தீர்க்கமாக எடுத்த முடிவு தான் இந்த முடிவு. தனித்து போட்டியிடும் நிலைபாட்டிற்கு முன்னால் SDPI தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு அறிவிப்பை முன்வைத்தது.

இது தான் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வித்திட்டிருக்க வேண்டும். அந்த அறிவிப்பு இந்த தேர்தலில் முஸ்லிம்களின் சதவிகித அடிப்படையில் 10% இட ஒதுக்கிடு தரும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என்பதாகும் அதாவது 234 தொகுதிகளில் 23 - 24 தொகுதிகளை முஸ்லிகளுக்கு ஒதுக்கும் கட்சிக்கு நம் ஆதரவு என்று அறிவித்தார்கள். இது SDPI க்கு மட்டும் அறிவித்தது அல்ல அனைத்து முஸ்லிம் கட்சிகளுக்கும் பொதுவாக கேட்கப்பட்டது. உதாரணமாக 6 தொகுதி மமகா விற்கு, 12 தொகுதி முஸ்லீம் லீக்கிற்கு , 4 தொகுதி தேசிய லீக்கிற்கு, யாரேனும் ஒதுக்குவார்களானால் நம் முழு ஆதரவும் அவர்களுக்கே என்று சமூக நலனில் அதீத அக்கறை கொண்டதால் இவ்வாறு அறிவித்தார்கள்.

உண்மை முஸ்லீமாக அல்லது சமூக அக்கறை கொண்ட கட்சியாக இருப்பின் இந்த அறிவிப்பின் பின்னால் முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்திருக்க வெண்டும் அதற்கு யாரும் தயாராகவில்லை SDPI யை தவிர. இதனால் SDPI தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நீருபிக்க களம் காண விரும்பியிருக்கிறது. இதிலும் கூட முதலில் தொகுதியை அறிவிப்பு செய்தது SDPI, வேட்பாளர்களை அறிவித்தது SDPI , வேட்பு மனு தாக்கள் செய்தது SDPI இந்த நிலைமையில் முஸ்லீம் லீக் ஒரு பக்கமும், மமக ஒரு பக்கமும் சீட்டுக்காக தொங்கிகொண்டிருந்தது. இவை அனைத்தையும் SDPI சமூகத்துடன் கலந்து கொண்டு தீர்மானித்து அறிவித்து இருக்கிறார்கள் ஆனால் இதர கட்சிகளோ எந்த ஒரு கலந்துரையாடலோ, கருத்தோ கேட்டிருக்கிரார்களா என்றால் அதில் மிகப்பெரிய கேள்விக்குறியே பதிலாகும்.

ஆனால் SDPI விட்டு கொடுக்க சொல்வதை நினைக்கும் போது இது போன்ற மக்கள் நம் சமூகத்தில் இருந்தால் நம் சமூகம் அடிமை சமுகமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தான் ஏற்படுகின்றது என்னை போன்றவர்களுக்கு அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்... அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு கேட்டு வாழவதை விட்டு சற்று சிந்திந்து பாருங்களேன்...

Best Regards
N M F

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு