உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..!

அரசியல் களம்
சமீபத்தல் தேர்தல் சூடுச் செய்திகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கான இடையிடையே ஊடகங்களின் மூலம் நம் யவருக்கும் எட்டிக் கொண்டிருக்கிறது, இவைகளில்தான் ஒன்றோடு மன்றொன்றாக முன்னால் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வர இருக்கும் தேர்தல் சூட்ட்டிற்கு பக்குவம் சொல்கிறார் இந்தப் பக்குவ உரையாடல் பிரபல வார இதழ் ஆனந்த விகடனில் சமீபத்தில் நான் வாசித்தது ஆகவே (நன்றி ஆனந்தவிகடன்), இதனை கொஞ்சம் வாசிச்சுடுங்களேன்... அரசியல் களம் சூடாக இருக்கும் என்பதால் இடையிடையே குளிரவைக்கும் குதுகலமும் பதிவுக்குள் கொண்டு வந்திடுவோமே !

ஏப்ரல் 13... தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் என்றதுமே, திருமங்கலம் பக்கம் நம் நினைவுகள் திரும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் இந்த முறையும், அள்ளி வழங்கும் வைபோகங்களும் அராஜக அத்துமீறல்களும் தமிழகத் தேர்தலில் கரை புரண்டு ஓடும் வாய்ப்பு இருக்கிறது. ஐந்து வருட ஆட்சியை மனதுக்குள் அசைபோட்டு, நியாயத் தராசை நெஞ்சுக்குள் ஆடவிட்டுக்கொண்டு இருக்கும் வாக்காளன், இந்தத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமை என்ன?

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா பக்குவம் சொல்கிறார்...

''ஒவ்வொரு வாக்காளரின் முதல் கடமை, வாக்காளர் பட்டியலில் தங்க ளின் பெயர் இருக்கிறதா என்பதைஉறுதி செய்வதுதான். வாக்களிக்கும் ஆர்வமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. முறைப்படி வாக்காளர் அடையாள அட்டை பெற்று, நமக்கான வாக்கு உரிமையை நாம் பெற்றிருக்க வேண்டும். நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், இப்போதும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேருங்கள்.

வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில், அதிகாரிகள் அந்தவேலை யில் தீவிரமாவதற்குள், வாக்காளர் பட்டியலில் நமது பெயரைச் சேர்ப்பது அவசியம். காரணம், நம் ஒவ்வொருவரின் வாக்கும் அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது. 'வாக்களிப்பது புனிதமான கடமை’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1920-லேயே 'யங் இந்தியா’ புத்தகத்தில் வாக்களிக்கும் அவசியம் குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சமீப காலமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பதிவாகும் வாக்குகள் குறைவாகி வருகின்றன. 'க்யூவில் நிற்க வேண்டுமே’ என்கிற சலிப்பிலும், 'இன்றைய விடுமுறையை வேறு வேலைக்காகப் பயன்படுத்தலாமே’ என்கிற அக்கறையற்ற ஆசையிலுமே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வது இல்லை. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம். பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு காட்டுபவர்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.

இன்னும் சிலரோ, 'போட்டியிடுபவர்களில் ஒருவரும் சரி இல்லை’ என்கிற ஆதங்கத்தில் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைய நிலையில், ஒரு சட்டமன்ற தொகுதியில் 15 பேருக்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒருவர் சரி இல்லை என்றாலும், இன்னொருவர் சரியா னவராக இருப்பார் என நம்பலாம். அப்படி யாருமே நம் மனதுக்கு ஒவ்வாதவர்களாக இருந்தாலும், நமது புறக்கணிப்பைப் பதிவு செய்யும் விதமாக 49 ஓ படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்!

'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா?’ என்கிற தயக்கமும் பல ருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா? இன்றைய நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அமைகிறது. 'நம் வாக் குதான், நாட்டின் போக்கு’ என்பதை இத் தகைய நிகழ்வுகள் நமக்கு அப்பட்டம் ஆக்குகின்றன. அப்படி இருந்தும் வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் பெரு காதது ஏனோ?!

தேர்தல் களத்தைச் சுற்றி வந்தவனாகச் சொல்கிறேன்... இன்றைய அரசியலில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக எதையும் செய்கிற அளவுக்குத் துணிந்து விட்டார்கள். அதற்காகத் தேர்தல் விதி களை மீறி பணத்தை இறைக்கிறார்கள். வாக்காளர்கள் இதற்கு ஒருபோதும் மயங்கக் கூடாது. பணத்துக்கும், பிரி யாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொட ரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.

முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, 'எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், குடிநீர்க் குழாய் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த வாக்காளர்கள் இப்போது, 'பணம் வேண்டும்’ எனப் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். பல இடங்களில், 'அந்தக் கட்சி வேட்பாளர் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார். நீங்கள் குறைவாகக் கொடுக்கிறீர்களே?’ என வற்புறுத்திப் பணம் கேட்கும் நிலையும் நீடிக்கிறது. வாக்காளர்களின் மனப்போக்கு ஏன் இந்த அளவுக்குப் புரையோடிப் போனது என்று எனக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது!

இந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை... 'இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும்’ என்பதைத்தான்!

ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு. வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், வழக்கு நிலுவை விவரம் என அனைத்தையும் அஃபிடவிட்டில் சொல்கிறார்கள். அதுபற்றி எல்லாம் வாக்காளர்கள் அறிந்து, தெளிந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்றைய நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சியையும், தலைவரையுமே மனதில் வைத்து வாக்கு செலுத்துகிறார்கள். 'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்?’ என்பதை ஆராய்ந்து, அதன்படி வாக்களிப்பதுதான் அரசியல் நலத்துக்கு வழிவகுக்கும். தரமான ஆட்களைத் தேர்வு செய்யும் பக்குவமும் அக்கறையும் நமக்கு உண்டாகும் நாளில், நிச்சயமாக இந்த தேசமே புத்துணர்ச்சிகொள்ளும்!

அக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதேபோல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்!''

1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு உறுப்பினர்கள் தேர்வுக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சிகளின் விவரம்:-

வரிசை
வருடம்
ஆளுங்கட்சி
1
1952
காங்கிரஸ்
2
1957
காங்கிரஸ்
3
1962
காங்கிரஸ்
4
1967
தி.மு.க.
5
1971
தி.மு.க.
6
1977
அ.இ.அ.தி.மு.க.
7
1980
அ.இ.அ.தி.மு.க.
8
1985
அ.இ.அ.தி.மு.க.
9
1989
தி.மு.க.
10
1991
அ.இ.அ.தி.மு.க.
11
1996
தி.மு.க.
12
2001
அ.இ.அ.தி.மு.க.
13
2006
தி.மு.க.
52 -லிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்
வரிசை
பதவிக்காலம்
வருடம்
பெயர்
முதலமைச்சர்களின்கட்சி
1
1952 - 54
திரு.சி.இராஜகோபாலாச்சாரியார்
காங்கிரஸ்
2
1954 - 63
திரு.கு.காமராஜ்
காங்கிரஸ்
3
1963 - 67
திரு.எம்.பக்தவச்சலம்
காங்கிரஸ்
4
1967 - 69
திரு.சி.என்.அண்ணாதுரை
தி.மு.க.
5
1969 - 76
திரு.மு.கருணாநிதி
தி.மு.க.
6
1977 - 87
திரு.எம்.ஜி.ராமச்சந்திரன்
அ.இ.அ.தி.மு.க.
7
ஜன-88
திருமதி. ஜானகி இராமச்சந்திரன்
அ.இ.அ.தி.மு.க.
8
1989 - 91
திரு.மு.கருணாநிதி
தி.மு.க.
9
1991 - 96
செல்வி.ஜெ.ஜெயலலிதா
அ.இ.அ.தி.மு.க.
10
1996 - 2001
திரு.மு.கருணாநிதி
தி.மு.க.
11
2001 - 2002
திரு.ஓ.பன்னீர்செல்வம்
அ.இ.அ.தி.மு.க.
12
2002 - 2006
செல்வி.ஜெ.ஜெயலலிதா
அ.இ.அ.தி.மு.க.
13
2006 - இதுவரை
திரு.மு.கருணாநிதி
தி.மு.க.

வலைமேய்ச்சலில் சிக்கியதை கோர்வையக்கி வாசிக்க தந்தவன்: அபுஇபுறாஹிம்

22 கருத்துகள்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

நல்ல பொறுப்போடு தன் அனுபவத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கார் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றநரேஷ் குப்தா.

இவர் தேர்தல் அதிர்காரியாக இருந்த காலத்தில் தான் ஓட்டுக்கு Rate ஸ்டாக் மார்க்கெட் எண்கள் உயர்ந்தது போல் உயர்ந்தது, இதற்கு அன்மை காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களே சாட்சி.

ஆமாம் நம் ஓட்டு என்ன விலை?

adirai சொன்னது…

சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ

சென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார்.

வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா நடத்திய விதம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நல்ல பாடமாக அமைந்துள்ளது. இதன் விளைவு, வைகோ சட்டசபைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டார்.

கடந்த தேர்தலின்போது திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக தலைமை தயக்கம் காட்டியதால், அங்கிருந்து விலகி யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் சேர்ந்தார் வைகோ. அவருக்கு 35 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இந்த நிலையில் தற்போதயை தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவம் விஜயகாந்த்துக்குப் போய் விட்டதால் முதல் ஆளாக அவரை அழைத்து 41 தொகுதிகளை தூக்கிக் கொடுத்தார். வைகோ கிடப்பில் போட்டு விட்டார்.

ஆரம்பத்தில் 35 தொகுதிகளைக் கேட்டு வந்தார் வைகோ. ஆனால் ஜெயலலிதா முடியாது என்று கூறி விட்டார். பின்னர் வைகோ சற்று இறங்கி வந்து 25, 23, கடைசியில் 21 என்ற அளவுக்கு வந்தார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9 என்று அடிமாட்டு ரேஞ்சுக்கு போனார்.

இதை மதிமுக ஏற்க முடியாது என்று கூறி விட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சில அதிரடி நடவடிக்கைகளால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக கொந்தளித்து விட்டன. இந்தப் பெரும் குழப்பத்தை எதிர்பாராத ஜெயலலிதா, தனது பிரசாரத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கூட்டணிக் கட்சியினர் மதிமுகவுக்கும் கெளரவமான இடங்களைத் தர வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் வேறு வழியில்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், செங்கோட்டையனையும் மதிமுக அலுவலகம் சென்று வைகோவிடம் பேசச் செய்தார் ஜெயலலிதா. அவர்களும் நேற்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது தங்களுக்கு 21 தொகுதிகள் கண்டிப்பாக தேவை என்று வைகோ கூறி விட்டார். இதைக் கேட்டுக் கொண்ட அதிமுக குழுவினர், ஜெயலலிதாவிடம் போய் இதைச் சொன்னார்கள்.

இந்த நிலையில், நேற்று மதிமுக உயர் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. பின்னர் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக தாங்கள் கேட்டபடி சீட்களை ஒதுக்க மறுத்து வருவதால் தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நேற்று மாலை தொடங்கிய இந்தக் கூட்டம் விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியில்தான் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவுக்கு மதிமுக வந்தது. தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பாக ஒரு தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், அதிமுக தலைமை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மதிமுகவை நடத்திய விதத்தால் மதிமுகவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாக புலப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போவே புதுச்சேரி சட்டசபைத் தேர்தலையும் மதிமுக புறக்கணிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பின்னர் பேசிய மதிமுக நிர்வாகி மல்லை சத்யா கூறுகையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கிய நிலையில் இறுதிவரை மதிமுக கேட்ட 21தொகுதிக்கு பதிலாக 12 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறியதால் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறோம்.

தொகுதி பங்கீட்டில் அதிமுக நடந்து கொண்ட விதம் பிடிக்க வில்லை. மூன்றாவது அணி அமைக்க விருப்பம் இல்லை என்றார்.

மதிமுகவை கரிவேப்பிலை போல பயன்படுத்திக் கொண்டு கடைசியில் அவரை விரட்டி விட்டுள்ள ஜெயலலிதாவின் செயலால் ஒட்டுமொத்த தமிழர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக ஈழத் தமிழ் ஆதரவு அமைப்புகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளன.

sabeer.abushahruk சொன்னது…

தொடர்ந்து வகுப்பெடுத்து அரசியல் பாடம் நடத்துறியலே கடைசியிலே பரீட்சை ஏதும் வைப்பீகளோ? அப்படி வைத்தால் விடைத்தாளை முஜீப் திருத்துவாரோ? என் வகுப்புக்கு சூப்பர்வைசரா கிரவுனைப் போடுவியலோ (காக்காதானேன்னு காப்பியடிச்சா கண்டுக்கமாட்டார்)

இன்டெர்வெல்லுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி அப்துர்ரஹ்மான்ட கவிதை ஏதும் இருந்தா போடப்படாதா?

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அப்துல் ரஹ்மானையும் ரொம்ப நாளா காணொம்.

அமெரிக்காவில் தற்போது தேர்தல் இல்லையே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிக் காக்கா : இருக்கே... அருமையான அழகான உணர்வுகள் ! விரைவிலே !

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் . ஆமா ஓட்ட பிரிக்கிறானுவோ,ஒட்ட பிரிக்கிறானுவோன்னு சொல்றாங்களே .அபு இபுறாகிம் காக்கா என்ன ஓடு? நாட்டு ஓடா?கொலிக்கிஓடா? விபரம் தெரிந்தவர் நீங்கள் சொன்னால்தான் புரியும். மேலும் வைகோவை எப்படி வைப்பார் இந்த ஜெ என்பது தெரிந்ததுதான். முதலில் தூக்கிவை பின் கை கழுவி கோ(go) என்பார்.(ஜெ அதிகம் உபயோகிப்பது ஆங்கிலம் தானே அதனால்தான்
இங்கே( நம் நாட்டு) இங்கிதம் தெரியல.ஆனாலும் வைகோ வின் செல்வாக்கு(செல்லாவாக்கு)12 இடம் அதிகம் தான்.என்பது அரசியல் தெரிந்தவர்களின் கூற்று.

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

தொடர்ந்து வகுப்பெடுத்து அரசியல் பாடம் நடத்துறியலே கடைசியிலே பரீட்சை ஏதும் வைப்பீகளோ? அப்படி வைத்தால் விடைத்தாளை முஜீப் திருத்துவாரோ? என் வகுப்புக்கு சூப்பர்வைசரா கிரவுனைப் போடுவியலோ (காக்காதானேன்னு காப்பியடிச்சா கண்டுக்கமாட்டார்)

இன்டெர்வெல்லுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி அப்துர்ரஹ்மான்ட கவிதை ஏதும் இருந்தா போடப்படாதா?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . நான் சூப்பர்வைஸரா வந்தா உங்களுக்கு நானே
விடைத்தாளை எழுதி தந்துவிடுவேன். என் வாக்கு என்றும் தவராது. நான் வாக்கு
கொடுக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

/// ஆமா ஓட்ட பிரிக்கிறானுவோ,ஒட்ட பிரிக்கிறானுவோன்னு சொல்றாங்களே .அபு இபுறாகிம் காக்கா என்ன ஓடு? நாட்டு ஓடா?கொலிக்கிஓடா? ///

அது வேறன்றுமில்லை ஓடாமலிருக்கும் ஆனால் அவர்களை நம் பின்னால் ஓடவைக்கும், ஓய்ந்தபின்னார் அவர்களை ஒடவைக்கும் நம்மிடமிருந்தே !

பிரிப்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...

வை-GO வை நச்சென்று குட்டியது அரசியில் நெடியப்பா !

Mohamed Rafeeq சொன்னது…

வைகோவின் இந்த முடிவால் பட்டுகோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் ... நீண்ட காலமாக அதிமுகவில் இருக்கும் நமது ஊரை சார்ந்த தமிம் காக்க (ஆஸ்பத்திரி தெரு ) அவர்களை வேட்பாளராக அறிவிப்பதற்கு வாய்புகள் உள்ளதா அல்லது அவர் இதற்கு முயற்சி செய்ய முடியுமா ? தகவல் அறிந்த வட்டாரம் இங்கு பின்னுட்டம் இடலாமே

மேலும்
சரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள் !!!
வைகோவின் இந்த முடிவால் பட்டுகோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் ... நீண்ட காலமாக அதிமுகவில் இருக்கும் நமது ஊரை சார்ந்த தமிம் காக்க (ஆஸ்பத்திரி தெரு ) அவர்களை வேட்பாளராக அறிவிப்பதற்கு வாய்புகள் உள்ளதா அல்லது அவர் இதற்கு முயற்சி செய்ய முடியுமா ? தகவல் அறிந்த வட்டாரம் இங்கு பின்னுட்டம் இடலாமே

மேலும்
சரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள் !!!

Yasir சொன்னது…

அதிரை நிருபரா அல்லது அரசியல் நிருபரா...தேர்தல் சமயத்தில் நல்ல பயனுள்ள விழிப்புணர்வு பதிவுகளை போட்டு அசத்தி வருகிறீர்கள்...வாழ்க !!! வளர்க !!!

Yasir சொன்னது…

கவிக்காக்கா ஏன் இன்னும் உங்க கவிக்குதிரை கட்டி போட்டு வச்சி இருக்கீங்க...தேர்தல் சமயம் அதுவுமா...ஒரு நக்கலான,நையாண்டியான, வழக்கம்போல சிந்திக்க வைக்ககூடிய தேர்தல் தொடர்பான கவிதை அள்ளி விசுங்களேன்......தலைப்பை அபு இபுராஹிம் காக்காவிடம் கேட்டு கொள்ளுங்கள்..

adirai சொன்னது…

சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மதிமுகவின் முடிவும், வைகோவின் அறிவிப்பும் எனக்கு பெரும் மன வேதனை தருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுகவின் அலட்சியப் போக்கு மற்றும் இழுபறி காரணமாக அதிர்ச்சி அடைந்த மதிமுக, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்து அறிவித்துள்ளது.

இதையடுத்து இன்று ஜெயலலிதா, வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அதிமுக தலைமையிலான கூட்டணியில் 2006ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது மதிமுக. நடைபெறவுள்ள 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதை முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்கள்.

வருகிற தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி, 21 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்ற சூழல் உள்ளது. எனவே 12 தொகுதிகளை ஒதுக்குவதாக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மூலம் தகவல் சொல்லி அனுப்பியிருந்தேன்.

அவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தார்கள். இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

மதிமுகவின் நிலைப்பாட்டை எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது.

எப்படி இருந்தாலும், உங்கள் அன்புச் சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

adirai சொன்னது…

சென்னை : "இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்த உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே, எல்லாமே இலவசம் எனும் வகையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த தேர்தலில் இலவச, "கலர் டிவி' கொடுத்த போதே, அடுத்த தேர்தலில் இலவச," கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின்' போன்றவை வழங்குவர் என, பலரும் கிண்டல் செய்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, தி.மு.க., அரசு, ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறது.இந்நிலையில், அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம் தோறும், 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
தாய்மார்களின் சிரமங்களை குறைக்க கிரைண்டர் அல்லது மிக்சி இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கான திருமண நிதி உதவி தொகை, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், உதவி மானியம், 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி, 6,000 ரூபாயிலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும்
பள்ளி மாணவர்களுக்கு இரண்டு, "செட்' சீருடைகளுக்கு பதில், மூன்று, "செட்' சீருடைகள். மூத்த குடிமக்களுக்கு, அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் உதவி, நான்கு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு அதில், இரண்டு லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும்.பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு மாதங்கள், மூன்றிலிருந்து நான்காக உயர்த்தப்படும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம், நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த வாடகையில், குடியிருப்பு திட்டம், உழவர்களுக்கு தேவையான இடு பொருட்களை, "உழவர் நண்பன் ஊர்திகள்' மூலம், கிராமங்களுக்கே கொண்டு சென்று மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அத்துடன், வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக்கான வட்டி படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும். இலவச மின்சாரம், தென்னை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். முதியோருக்கான மாதந்திர உதவித் தொகை, 500லிருந்து, 750 ரூபாயாக உயர்த்தப்படும்.பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க வட்ட, கோட்ட அளவில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும். நெசவாளர்கள் கச்சாப் பொருட்களும், முதலீட்டு பொருட்களும் பெற, கூட்டுறவு கடன்கள் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
என்னென்ன கிடைக்கும்? * ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருட்கள்.
* கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை
*வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை
* அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, "லேப்டாப்'
*அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள்
*பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்
*கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்
*சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே, "புல்லட்' ரயில்*முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு
*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க பாஸ்
*2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.
* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு லட்ச ரூபாய் மானியம்
*கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.
*மீனவர்களுக்கு நிதி தர புதிய காப்பீட்டுத் திட்டம்
* குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு பணியில் முன்னுரிமை
* கலைஞர் வீட்டு வசதி திட்ட மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்வு
*"ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசம்
*கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்வு
*தாய்மார்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் வழங்கப்படும். அதனை விரும்பாதவர்களுக்கு மிக்சி

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சகோதரர் அமீன் : தேர்தல் அறிக்கையில் தடங்களில்லா மின்சாரம் அதிரைக்கு எதோ அறிவிச்சு இருக்காங்களாமே... எழுந்த சூரியன் அங்கே மறையாமல் இருக்க ! - இது மெய்யா !?

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

சகோதரர் அமீன் : தேர்தல் அறிக்கையில் தடங்களில்லா மின்சாரம் அதிரைக்கு எதோ அறிவிச்சு இருக்காங்களாமே... எழுந்த சூரியன் அங்கே மறையாமல் இருக்க ! - இது மெய்யா !?
--------------------------------------------------
(அஸ்ஸலாமு அலைக்கும் முன்பு நான் எழுதியதை இங்கே மறுபடியும் பதிகிறேன்).
தீர்புகள் திருத்தப்படுங்கோ!
--------------------------
பவர்ல உள்ளவங்க -
பவர தவறா பயன்படுத்தி!
பவரு வராம தடை செய்ராங்க!
அந்த பவர கொடுத்த மக்கள் இருட்ல தவிகிறாங்க!
ஒரு நா பவர தவறா பயன்படுத்துறவங்களுக்கு -
மக்கள் கொடுப்பாங்க 'ஸாக்'
(எல்லாம் பவர் படுத்துற பாடு வருவதும், போவதும்).

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

பவர்ஃபுல்லா(தான்) இருக்கு(டா)ப்பா !

ஆட்சியிலிருப் பவர்(கள்) அறிக்கையிது...
போட்டி போடு பவர்(கள்) அறிக்கை என்னவாக இருக்கும் !?

சின்ன முதல்வருக்கு ஆயிரம் விளக்கு (பகுதியில்) பவர் குறைவாமே !?

Saleem சொன்னது…

பட்டுக்கோட்டை தொகுதியை தே.மு.தி.க.கட்சிக்கு ஒதுக்குவதாக தகவல்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்...

1. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி : எம்.தமிமுன் அன்சாரி (துணை பொதுச் செயலாளர்).

2. ஆம்பூர் : அஸ்லம் பாட்ஷா (வேலூர் மேற்கு மாவட்ட தலைவர்).

3. ராமநாதபுரம்-பேராசிரியர் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர்)

Yasir சொன்னது…

அதிமுக அறிவித்த 160 வேட்பாளர்களின் ..ஆவடி அப்துற் ரஹீம் மட்டுமே முஸ்லிம்....

Saleem சொன்னது…

நான் முன்னர் கூரியதுபோல் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்-செந்தில்குமார் போட்டியிடுகிறார், கடந்த தேர்தலில் இவர் 10,688 வாக்குகள் பெற்றார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

///Saleem சொன்னது…
நான் முன்னர் கூரியதுபோல் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்-செந்தில்குமார் போட்டியிடுகிறார், கடந்த தேர்தலில் இவர் 10,688 வாக்குகள் பெற்றார்.//

இன்னும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை(தான்) முயற்சிக்கலாம் நாம் சுட்டிக் காட்டும் இயக்கங்கள் களம் கண்டிட இத்தொகுதி தகுதியானதே !

அப்துல்மாலிக் சொன்னது…

அருமையான தொகுப்பு, நன்றி தகவல் பகிர்வுக்கு