Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

IAS, IPS - கனவை நினைவாக்க களம் இறங்குங்கள்! 9

அதிரைநிருபர் | March 02, 2011 | , ,

IAS, IPS படிக்க Civil Services தேர்வு:

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருடா வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்று இதை சொல்லலாம். முஸ்லிம்கள் ஒடுக்கப் படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப் படுவதற்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொறுப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லிம் மாணவர்களே! சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள்!.

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான கோரதாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்ச்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க, சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.

இந்த தேர்வை எழுதும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றிய விழிப்புணர்வு முஸ்லிம் சமுதாயத்திடம் இல்லாதிருப்பதே!. ஒரு சிலர் அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுங்கி விடுவதுமேயாகும். உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. இது போன்ற தேர்வுகளை எழுதி, உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள், இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS, IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகளை எழுத முடியாது என்று ஒரு வதந்தியை இந்த சமுதாயத்தில் பரவ விட்டிருப்பதுதான்.

எப்படி ஆடி மாதம் பீடை என்று சொல்லி, மற்றவர்களை திருமணம் செய்யவேண்டாம் என்று கூறும் இவர்கள், அதே மாதத்தில்தான் இவர்களின் வீட்டுத்திருமணத்தை நடத்துவார்கள். இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன்நம்பிக்கையை தகர்ப்பதும், பிறரை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள். எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அவனிடம் வலியுத்தி கேளுங்கள். கடினமாக உழைத்து படியுங்கள். நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

இந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது?

இந்த தேர்வுகள் மிக பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவனங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம், மிக எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனிதநேய அறகட்டளை நடத்தும் பயிற்சி மையம் இந்த தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதில் பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.

முஸ்லிம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ M.F.கான் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. கள்ளகுறிச்சியில் சகோ.ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக கள்ள குறிச்சி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


எப்போது நாம் இதில் தேர்ச்சி பெறுவது?

பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை. பணமும் ஒரு பிரச்சனை இல்லை (இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை? தகுதி உள்ள முஸ்லிம் மாணவர்கள்தான் குறை!. முஸ்லிம் மாணவர்களிடம் இதில் தேர்ச்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது. ஆனால் பொறுமையும் தன்னம்பிக்கைதான் இல்லை!. முஸ்லிம்களில் படிப்பவர்களே மிககுறைவு!. படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் அதிலும் மிகமிக குறைவு!!. ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லிம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும்.

முஸ்லிம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொறுமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற அதுவே வாழ்கை அல்ல!. முஸ்லிம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லிம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.


மேலும் விபரங்கள் அறியவும் தேர்விற்க்கு தயாரவாதற்க்கான வழிமுறைகள் பற்றி அறியவும் Sithiqu.mtech@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

Civil Services Examination - 2011 தேர்வை பற்றிய விபரம்:

இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதற்க்கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி: 21/03/11 இன்ஷா அல்லாஹ்

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: அனைத்து தபால் அழுவலகங்கள்

கட்டணம் : விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Secretary,
Union Public Service Commission,
Dholpur House, Shahjahan Road,
NewDelhi – 110069

தேர்வு நடைபெறும் தேதி: 12/06/11 இன்ஷா அல்லாஹ்

வயது வரம்பு: 33 வயது (முஸ்லிம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட வகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது

தேர்வு எழுத தகுதி: ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


நன்றி:சகோதரர் S. சித்தீக்.M.Tech

தகவல்: சகோதரர் அதிரை மீரா

நன்றி: முஜிப்.காம் http://adiraimujeeb.blogspot.com/2011/03/blog-post_02.html

9 Responses So Far:

Yasir said...

நல்ல தகவல்கள்...
சைதை துரைசாமியின் இலவச சிவில் சர்விஸ் தேர்வு பயிற்ச்சி பதிவிற்க்கு
கிழ்கண்ட தளத்தை வலம் வரவும்
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் ! நமது சமுதாயம் விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது... நம்மவர்களும் இச்சேவையை செய்கிறார்கள் அதோடு மின்னாடல் குழுமங்களிலும் தொடர்ந்து நம் சகோதரர்கள் பதிந்து வருகிறார்கள் அவரவர் பங்கிற்கு வெளிக் கொணர்ந்து பரவச் செய்கிறன்றனர் அல்ஹம்துலில்லாஹ் !

இதேபோல்தான் மாற்றுமதச் சகோதரர்களின் உயர் பிரிவினர் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தங்களுக்குள்ளாக உட்டங்களாலும் நேரடித் தொடர்புகளாலும் இதே மாதிரியான செய்ல்முறையயைச் செய்து இன்று அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் பத்து ஆண்டுகளில் நமது சமுதாயம் நிச்சயம் தலைநிமிர்ந்த ஆளுமைக்குரிய சமுதாயமாக விருச்சயமாகும் சாதித்தும் காட்டும் இன்ஷா அல்லாஹ்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// உட்டங்களாலும் // இதனை "ஊடகங்கள்னு" வாசிச்சுடுவீங்களாம் சரியா !

Yasir said...

// இதனை "ஊடகங்கள்னு" வாசிச்சுடுவீங்களாம் சரியா !// சரி காக்கா...உங்கள் பேச்சுக்கு மறுப்பேது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சரி காக்கா...உங்கள் பேச்சுக்கு மறுப்பேது// நல்ல புள்ளைங்களா இருக்கீங்களே தம்பி ! :)

Shameed said...

நல்ல தகவல் நன்றி சகோதரர் S. சித்தீக்..மீரா. முஜிப்.காம்

sabeer.abushahruk said...

நல்லதொரு இடுகை. நன்றி சகோதரர்களே!

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பர். அதுபோல படி படியென்று சொல்லியும்.குறிப்பாக இதைப் படி என்று தொடர்ந்து வழி காட்டியும் வந்தால் வெற்றி நிச்சயம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் மீரா...

நல்ல தகவலைப் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.

இது போன்ற கல்வி தகவல்களை தொடர்ந்து பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

என்னைப்போன்றவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுகள், ஆர்வமூட்டல்கள் கிடைக்காமல் போயிற்றே.....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைய செய்தில் திரும்பத் திரும்பக் கேட்டது... IAS தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி (கண்பார்வை தெரியாதவர்) தேர்ச்சி பெற்றிருப்பது !

எல்லா வகையிலும் எமக்குத் தகுதியைத் தந்துள்ள அல்லாஹ்வின் அருட் கொடையைக் கொண்டு நாமும் ஏன் இப்படிச் சாதிக்கக் கூடாது !?

தொடர்வோம் ஊக்கம் பெற்றிட ஊக்கம் ஊட்டிட பாடுபடுவோம் இன்ஷா அல்லாஹ்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு