ஜப்பானில் பயங்கர பூகம்பம்: அடுத்தடுத்து தாக்கிய சுனாமி அலைகள்
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் வட கிழக்குப் பகுதியை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதையடுத்து உருவான சுனாமி பேரலைகள் ஊர்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.

ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து

மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடரோலப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன.

தப்பியோடக் கூட முடியாத அளவுக்கு கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் அடுத்தடுத்துத் தாக்கி ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. வீடுகளின் இடிபாடுகளையும் லட்சக்கணக்கான வாகனங்களையும் அந்த அலைகள் அடித்துக் கொண்டு சென்றன.

தொடர்ந்து பயங்கர அலைகள் அடுத்தடுத்து வந்து தாக்கிக் கொண்டுள்ளன. இதில் கடலிலிருந்து ஏராளமான கப்பல்கள், படகுகளும் நிலப் பகுதிகளுக்குள் அடித்து வரப்பட்டன.

முன்னதாக இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதையடுத்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி வருகின்றன.

மேலும் அலைகள் ஊருகளுக்குள் புகுந்தபோது பல எரிவாயு குழாய்கள் உடைந்து தீப் பிடித்துக் கொண்டு ஆங்காங்கே பயங்கர வெடி விபத்துகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் கூட எரிவாயுக் குழாய்கள் சேதமடைந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

சென்டெய் நகர் உள்பட வடக்கு ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்டாய் நகர விமான நிலையம் அழிந்தே போய்விட்டது.

இந்த பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் இதுவரை 88 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பெருமளவில் உயிரிழப்புகளும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிவாரணப் பணியில் முப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். டோக்கியோவில் நாடாளுமன்றமும் பயங்கரமாக குலுங்கியதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஹவாய் தீவுகள், தைவான், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கடரோலப் பகுதிகளை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இயற்கை சீற்றத்தை தொலைக்காட்சியில் காணும் போது இறைவனின் சக்தி என்னவென்று நம்மால் உணரமுடிகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.

நமக்கு மரணம் எப்போதும் உள்ளது என்பதை இது போன்ற சில வினாடி நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது. பாவங்களிலிருந்து நம்மை விளக்கி நன்மையின் பக்கம் அதிகம் தொடர்ந்து கவனம் செலுத்த இதுவே சரியான தருணம்.

பிரார்த்தனைகளுடன்...

-- அதிரைநிருபர் குழு

12 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அல்லாஹ் பாதுகாப்பானாக யாவரையும் !

Unknown சொன்னது…

அல்லாஹ் பாதுகாப்பானாக யாவரையும் !

Tsunami Alert பாவத்தின் சம்பளம் சுனாமி... http://adiraipost.blogspot.com/2011/03/tsunami-alert.html

ZAKIR HUSSAIN சொன்னது…

8.9 மேக்னிட்யூட் இல் இவ்வளவு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுத்தி இருக்கும் சுனாமியின் தாக்கம் நமது கண்களை கண்ணீரில் நனைக்கிறது. அப்பாவி மக்களின் உயிரும் உடமையும் இப்படி பறிக்கப்படும்போது இறைவனின் உதவியைத்தவிர எதுவும் பெரிதாக இருக்காது. நாம் எல்லோரும் இறைவனிடம் கையேந்துவோம்.

sabeer.abushahruk சொன்னது…

அல்லாஹ் பாதுகாப்பானாக யாவரையும்

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். கிருபை பொருந்திய அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்.

Saleem சொன்னது…

அல்லாஹ் எம்மவர்களை பாதுகாப்பானாக ஆமீன்!!

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ::: வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
சுனாமி, நிலநடுக்கம் என்ற சோதனைகளை வல்ல அல்லாஹ் அனுப்பி கொண்டு இருக்கிறான். நாமும், நம் சமுதாயமும் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதின் மூலம் படிப்பினைகள் பெற வேண்டும்.
*********************************************************************
எந்த ஊரையும் அவ்வூரார் அநீதி இழைக்காத நிலையில் நாம் அழித்ததில்லை.(அல்குர்ஆன் : 28:59)

அவர்கள் நமது சான்றுகளைப் பொய்னெக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் : 7:136)

வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்ட எத்தனையோ ஊர்களை அழித்துள்ளோம். இதோ அவர்களின் குடியிருப்புகள்! அவர்களுக்குப் பின் குறைவாகவே தவிர அங்கே குடியிருக்கப்படவில்லை. நாமே(அதற்கு) வாரிசுகளாகி விட்டோம்.(அல்குர்ஆன்: 28:58)

உங்கள் தெய்வங்களை அழையுங்கள்! என்று கூறப்படும். அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். வேதனையையும் காண்பார்கள். இவர்கள் நேர்வழி சென்றிருக்கக் கூடாதா? (அல்குர்ஆன் : 28:64)

என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம். (அல்குர்ஆன் : 40 : 39)

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.(அல்குர்ஆன் : 28:67)

அலாவுதீன்.S. சொன்னது…

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன் : 2:214)


நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். (அல்குர்ஆன் : 66: 6)

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள் அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. அதை, தான் நாடியோருக்கு அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.(அல்குர்ஆன் : 57:21)


யாஅல்லாஹ் உன்னை நினைவு கூறும் விஷயத்திலும், உனக்கு நன்றி செலுத்தும் விஷயத்திலும், நல்ல வணக்கத்தின் விஷயத்திலும் எங்களுக்கு உதவி செய்வாயாக!

*********************************************************************
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

Ahamed irshad சொன்னது…

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

அப்துல்மாலிக் சொன்னது…

இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாப்பு தேடுவோம், அல்லாஹ் நன்கறிந்தவன்

அகமது அஸ்லம் சொன்னது…

ஜப்பான் 8 அடி நகர்ந்துவிட்டது. பூமி சுழலும் அச்சிலும் 10cm அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. El nino, la nina போன்ற பருவநிலை தோற்றப்பாடுகளில்(pattern) என்ன என்ன மாற்றங்கள் வரக்கூடும் என்ற ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.

ahamed சொன்னது…

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்