Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோயாளியை தீர்க்கும் மெடிக்கல் பில். 23

ZAKIR HUSSAIN | March 12, 2011 | , ,


கடந்த 20 வருடங்களை ஒப்பிடும்போது மருத்துவத்துறையின் வளர்ச்சி சிறந்தமுறையிலேயே பதிவாகியிருக்கிறது. அதே சமயம் தொடர்ந்து ஏறிவரும் விலைவாசி மருந்து மாத்திரைகளின் விலையை ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் எட்டாத நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. [ இப்படியெல்லாம் எழுதினால் தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனத்தில் எழுதும் ஸ்டைலில் இருக்கும்..ரி நமது வழக்கத்துக்கு வருவோம்]

இப்போதெல்லாம் -மெயில் பார்வேர்டு செய்வதற்கென்றே பிறப்பெடுத்து வந்ததுபோல் சில ஆட்கள் தினம் -மெயில் அனுப்புகிறார்கள். சில விசயங்கள் பிரயோஜனமானது..பெரும்பாலான மருத்துவ விசயங்கள் Not Clinically proven.

இதில் செயின் இமெயில் வேறு...பள்ளிவாசலில் தூங்கினார் / கனவு வந்தது / -மெயிலை மற்ற 10 பேருக்கு அனுப்பாவிட்டால் உனக்கு கல்யாணம் ஆகாது [ ஆகா எவ்வளவு நல்ல விசயம்!!!] உனக்கு நிறைய லாபம் விளைச்சலில் கிடைக்கும்..[ இருப்பதோ ஹவுசிங் ஏரியா..இங்கே போய் நாத்து எப்டிபா நட முடியும்?] சரி மறுபடியும் விசயத்துக்கு வருவோம்...இப்பொது உள்ள சூழலில் டாக்டரிடம் டிஸ்கவுன்ட் கேட்கலாம் ஆனால் மருந்து மத்திரைகள் 300- 400% விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது. நம் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள் , அவர்களுக்கும் வயதான காலத்தில் மருத்துவ செலவு தவிர்க்க முடியாதது.

நமக்கும் வயதாகும், நமக்கும் ஏற்படும் செலவுகளை எப்படி செலவு செய்ய போகிறோம்??. இது இப்போது உள்ள எல்லாருக்கமான கேள்வி. இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கான கேள்வி.

நமது குடும்ப முறைகளின் [அல்லது முறைகேடுகளின்] அவலம் என்ன தெரியுமா? யார் அந்த குடும்பத்தில் அதிகம் சம்பாதிக்கிறானோ அல்லது சம்பாதிப்பது மாதிரி வெளியில் தெரிகிறதோ அவன் ஒரு நிறந்தர பலிகடா.

நீந்தானே செய்யனும்...னு உசுப்பேத்தவே சில ஆட்கள் எப்போதும் கோரஸ் பாடிக்கொண்டே இருக்கும். அவனுக்கு பிரச்சினை என்று வந்து விட்டால் மாயஜால படங்களில் வருகிறமாதிரி [ புகை மிஸ்ஸிங்] காணாமல் போய்விடுவார்கள். இல்லாவிட்டால் அவன் சம்பாதிக்கிறான்ல கொடுக்கட்டுமே என்று வெளியிலும், உன் மனசுக்கு கொடிகட்டி வாழ்வாய் என டயலாக் ரெடியாக ப்ராம்ப்ட் செய்வார்கள். அவன் கொஞ்சம் சிரமப்பட்டாலும் " அவன் முந்தி மாதிரி இல்லே...இப்போ அப்டியெல்லாம் இருக்க முடியுமா" என அதே ஆட்கள் சொல்வது நான் பல முறை கேட்டு இருக்கிறேன்.

இப்போது உள்ள சூழலில் டெலிவிசனிலேயே மருத்துவ செலவு எவ்வளவு வரும் என்பதை ஒரு டேக் லைன் விளம்பரமாக செய்து விடுகிறார்கள். சில எமர்ஜென்ஸி நேரங்களில் தொடர்ந்து செய்யப்படும் மருத்துவம் பயனளிக்கும் என தெரிந்தும் நோயாளியை கொண்டு வந்து சேர்த்த உறவினர்களால் அந்த பணத்தை கொடுக்க முடியாது என தெரிந்து எத்தனையோ ஆக்ஸிஜன் சிலின்டர்களின் மருத்துவ மனைகளால் வாய் மூடப்பட்டிருக்கிறது. நல்ல படியாக வாழ்ந்தவர்கள் பணம் இல்லை என்ற காரணத்தால மருத்துவம் மறுக்கப்பட்டு வெளியில் மெடிக்கல் பில்லுக்கு கையேந்த வெட்கப்பட்டு உயிரை விட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு நோயாளி இறப்பது இயற்கை, ஆனால் அவன் அவனுடைய கனவுகளையும் கடமைகளையும் சேர்த்து சாகடிப்பது எந்த விதத்தில் ஞாயம்.

சரி இதற்கு தீர்வுதான் என்ன? உங்கள் குடும்பங்களில் எத்தனை பேர் சம்பாதிக்கிறீர்கள், இப்போது கணக்கெடுத்தால் கூட ஒரு 10 பேராவது தேறுமா? எல்லோருக்கும் தெரிவித்து மாதா மாதம் ஒரு சேமிப்பு மாதிரி ஆரம்பியுங்கள், சிலர் மாதம் 5000 சம்பாதிக்களாம் சிலர் மாதம் 100,000 சம்பாதிக்களாம் இதில் மனம் உவந்து எவ்வளவு அவர்களுடைய பணம் தந்தாலும் முறைப்படி கணக்கு வைத்துக்கொண்டு குடும்ப உறுப்பைனர்கள் யாரும் மருத்துவ மனையில் அட்மிட் ஆகும்போது மட்டும் இதை பயன் படுத்தினால் 'ஒரு காலத்திலே நல்லா இருந்த குடும்பம்' எனும் வசனம் தவிர்க்கலாம். இனிமேலாவது இனிசியலை வைத்து, குடும்ப பெரியவர்களின் பெயரை உங்கள் குடும்பத்துக்கு வைத்து பெருமைப்படும் நீங்கள் உங்கள் ஒற்றுமையை மற்றவர்களுக்கு உதாரணமாக காட்டுங்கள்.
ஒரு சின்ன அஷைன்மென்ட் இன்று தூங்குமுன் ஒரு சின்ன கணக்கு எடுங்கள் "இப்படி ஒரு எமர்ஜென்ஸி மெடிக்கல் ஃபன்ட்' உங்கள் குடும்பத்தில் போன வருடம் ஆரம்பித்து இருந்தால் இதுவரை அதன் இருப்பு குறைந்த பட்சம் Rs 200,000/= த்தை தாண்டி இருக்கும்.

இதை நிர்வகிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் , "அந்த பணத்திலே ஒரு ஐம்பதாயிரம் கொடு [ என் மவனும் அனுப்புரான்ல!!] இன்னும் 5 நால்ல பணம் வந்தவுடனே தந்துடுறேன்''னு காக்கையின் குறல் ஸ்ரேயா கோசல் குரல் மாதிரி என சொன்ன நரி மாதிரி குடும்பத்திலேயே ஆட்கள் இருக்கும், பணத்தை கொடுத்த பிறகு ' வடெ போச்சே' என வருத்தப்பட்டு புண்ணியம் இல்லை.

பொறுப்பை ஊட்ட தாமதிக்கும் ஒவ்வொரு நிமிசமும் மற்றொருவனின் முதுகில் அந்த பொறுப்பு ஏற்றப்படுகிறது.

பணம்............ உலகம் ஏற்படுத்திய பல நோய்களுக்கான ஒரே நிவாரணி.

ZAKIR HUSSAIN


23 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

for young family members you can consider having medical insurance. of course insurance company won't underwrite medical insurance for old people who have already crossed entry age.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பொறுப்பை ஊட்ட தாமதிக்கும் ஒவ்வொரு நிமிசமும் மற்றொருவனின் முதுகில் அந்த பொறுப்பு ஏற்றப்படுகிறது.

பணம்............ உலகம் ஏற்படுத்திய பல நோய்களுக்கான ஒரே நிவாரணி.//

காக்கா : அற்புதமான விழிதெழு வைத்திருக்கும் பதிவு... அதுவும் கடைசி வரிகள் எவ்வித மாற்று கருத்துகள் இல்லாத நிதர்சன உண்மையே !

பி.கு. : தாய்லாந்து மஸாஜ் செய்வதற்கு அந்த மருத்துவரை அனுப்பிவைத்து விட்டார்கள் மீண்டும் மற்றொருவரிடமும் அவரின் செயல்கள் இருந்தததினால்... இது லேட்டஸ்ட்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அசத்தல் காக்கா,

வழக்கம்போல் உங்கள் ஸ்டைலில் சூவரஸ்யமான பதிவு.

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு மட்டும் தான் மருத்துவ செலவு என்று இருந்தது, ஆனால் இன்று 30 தாண்டாதவர்களுக்கும் பெரியவர்களின் மருத்துவ செலவைவிட அதிகம் என்பது தான் எதார்த்த உண்மை.

//இனிமேலாவது இனிசியலை வைத்து, குடும்ப பெரியவர்களின் பெயரை உங்கள் குடும்பத்துக்கு வைத்து பெருமைப்படும் நீங்கள், உங்கள் ஒற்றுமையை மற்றவர்களுக்கு உதாரணமாக காட்டுங்கள்.//

முத்தாய்பான இந்த வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள்.

நோய்கள் வந்துவிட்டால் மெடிக்கல்காரானுக்கு அது நல்லா வாழ்ந்த குடும்பமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. மருத்துவரையோ, மருத்துக்கடைகாரரையோ குற்றம் சொல்லும் நிலைக்கு இன்னும் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையே காரணம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கலைஞர் காப்பீடு திட்டம் பற்றி ஒரு நக்கல் குறுஞ்செய்தி வெளிவந்து தமிழ் நாட்டை ஒரு கலக்கு கலக்குதாமே, மக்கள் கலைஞரை வாழ்த்துவதைவிட, மீன்கள் கலைஞரை வாழ்த்துகிறதாமே... யாருக்காவது தெரியுமா?

அப்துல்மாலிக் said...

அழகு ஐடியா, ஆனால் அந்த பணத்தின் இருப்பை இருக்க விடுவாங்கனு நினைக்கிறீங்களா. யாரின் பேரில் வைத்துக்கொள்வது என்ற பிரச்சினையும் இருக்குமே, எனவே இதுலே நிறைய சட்ட சிக்கல் இருக்கு. இதையும் தாண்டி செய்லபடுத்தினால் பாராட்டப்படவேண்டியதுதான், நிச்சயம் செய்யவேண்டும் இன்ஷா அல்லாஹ்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) : சகோ. ஜாகிர் தங்களின் மருத்துவ சேமிப்பு ஆலோசனை வரவேற்க கூடியதே.

இந்தியாவில் அனைத்து மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகளையும் வெளிநாட்டு நிறுவனங்கள் அடவாடித்தனமாக அபகரித்து வந்து கொண்டு இருக்கிறது.

உலக ரவுடி வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, நம்முடைய நாட்டின் அரசியல் வியாதிகள் அனைத்து அரசு சார்ந்த துறைகளையும் தனியார் முதலைகளுக்கு தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து மருத்துவத்துறையில் சேவை மனப்பான்மை என்பது அடிபட்டு போய் விடும்.

இந்தியாவின் பாவப்பட்ட மக்கள் (அப்பாவி மக்கள்) தங்களின் சொத்துக்களை விற்றுத்தான் மருத்துவ செலவுக்கு கொடுக்க வேண்டி இருக்கும். (பணமில்லை என்றால் செத்து விடுங்கள் என்று பணமுதலைகள் சொல்வார்கள்).வானை முட்டும் அளவுக்கு மருந்தின் விலைகளை ஏற்றுவதற்கு பன்னாட்டு பண(பிண)ம் தின்னும் மனித மிருகங்கள் இந்தியாவின் மனித மிருகங்களுடன் சேர்ந்து எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என்பது மக்களின் பணத்தை பறிப்பதற்கு ஒரு முன்னோட்டம். காரணம் விரைவில் உலக ரவுடி வங்கி : இந்தியாவில் உள்ள அரசாங்கங்கள் எதுவும் இலவச காப்பீடு வழங்கக் கூடாது என்று சட்டம் போட்டு விடும். அந்த நேரத்தில் காப்பீடு இருந்தால்தான் மருத்துவம் என்ற சட்டங்கள் அமலுக்கு வரும். மக்கள் பாடு திண்டாட்டம்தான்.

இந்தியா மற்றும் உலக அநியாயக்காரர்களின் அநியாயங்களிலிருந்து உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்க வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் துஆச் செய்யுங்கள். இந்த பணப்பேராசைக்காரர்களின் பிடியிலிருந்து மக்களை பாதுகாக்க வல்ல அல்லாஹ்வால் மட்டும்தான் முடியும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(பணமில்லை என்றால் செத்து விடுங்கள் என்று பணமுதலைகள் சொல்வார்கள்).வானை முட்டும் அளவுக்கு மருந்தின் விலைகளை ஏற்றுவதற்கு பன்னாட்டு பண(பிண)ம் தின்னும் மனித மிருகங்கள் இந்தியாவின் மனித மிருகங்களுடன் சேர்ந்து எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.//

அன்பின் அலாவுதீன் காக்கா : முதலில் இவ்வகை வேதனைகளை காட்டமாகத்தான் எடுத்து வைக்கனுமா... ? தாங்களின் நளினம் எப்போதும் எங்களை வென்றெடுக்குமே ! அவர்களும் மருத்துவர்களே... அவர்களும் மருந்துக் கடை வியாபாரிகளே ! புரிந்திருப்பீர்கள் காக்கா Please !

வரும் காப்போம் இன்ஷா அல்லாஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ் நோய்கள் இல்லா வாழ்வை வசந்தமாக்கித் தர எந்நேரமும் அவனிடமே கையேந்துவோம்.

நிற்க.. இன்றைய சூழலில் அதிரைப்பட்டினத்தை பொறுத்தமட்டில் என்றில்லாமல் பெரும்பாலான ஊர்களில் இதே அவலநிலைதான், ஒரு சிலர் மட்டுமே வாய்விட்டு அழுது விடுகிறார்கள் பெரும்பாலானவர்களின் ஈனக்க் குரல்களின் ஒலி வெளித்தெரிவதில்லை.

உலக நடப்போட்டு ஒத்துபோக, விலையேற்றம் என்பது வளர்ந்து வரும் நாடுகளில் தவிர்க்க முடியாதது என்று எல்லா அறிவுஜீவிகளும் சொல்கிறார்கள் அதில் மருந்த்க்கு மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? ஆகவே சூழலோடு சுழன்று எழுந்திட ஆலோசனைனகளை சற்றும் (எனது) சிந்தனைக்கு வராததை அசத்தல் காக்கா எடுத்து வைத்திருப்பதை செய்திருந்திக்கலாமோ என்று சில மணித்துளிகள் ஏங்க வைத்தது இக்கட்டுரையை முதலில் வாசித்ததும்.

சேமிப்பு மருத்துவத்திற்குதான் என்றில்லாம் எல்லாமே வரவேற்க வேண்டியதுதான், இலவச மருத்துவம் என்பது குதிரைக் கொம்பாக இருக்கும் பட்சத்தில் எதிர்பாராத இழப்புகளுக்கு ஈடு கொடுக்க இத்தகைய ஆலோசனகளை நிஜப்படுதினால் நிச்சயம் கை கொடுக்கும்.

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// அன்பின் அலாவுதீன் காக்கா : முதலில் இவ்வகை வேதனைகளை காட்டமாகத்தான் எடுத்து வைக்கனுமா... ? தாங்களின் நளினம் எப்போதும் எங்களை வென்றெடுக்குமே ! அவர்களும் மருத்துவர்களே... அவர்களும் மருந்துக் கடை வியாபாரிகளே ! புரிந்திருப்பீர்கள் காக்கா Please ! ///

தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. மருத்துவர்களும், மருந்துக்கடைக் காரர்களும் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை விரைவில் வர இருக்கிறது. மேற்கண்ட வார்த்தைகளை நானாக எடுத்து வைக்கவில்லை. நானும் சில ஆய்வுக் கட்டுரைகளில் படித்ததையே எடுத்து வைத்தேன்.

மருந்தையும், மருத்துவ சாதனங்களையும் பணமுதலைகளே தயார் செய்கிறார்கள். இந்த இரண்டையும் பன்னாட்டு நிறுவனங்கள் பாதியளவு தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டன. மருத்துவர்களும், மருந்துக்கடைகாரர்களையும்; எந்தக்குறையும் சொல்வதற்கில்லை. அவர்களை குறை சொல்ல முடியாது. ஒரு சில பேராசை பிடித்த மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களையும் குறைசொல்வதற்கில்லை

மருத்துவர்களும், மருந்துக்கடைகளும் ஒன்றும் செய்யமுடியாது. இவர்களால் மக்களுக்கு ஒரு சிறு துளி அளவுதான் உதவி செய்யமுடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எல்லாம் சென்ற பிறகு அவர்கள் வைப்பதுதான் விலை. வாங்கி விற்பவர்களை எப்படி குறைசொல்ல முடியும். உலக வங்கிக்கு அடிமையாகிப்போன மக்களைப்பற்றி கவலைப்படாத அரசாங்கத்தைத்தான் குறைசொல்ல வேண்டும்.

///உலக நடப்போட்டு ஒத்துபோக, விலையேற்றம் என்பது வளர்ந்து வரும் நாடுகளில் தவிர்க்க முடியாதது என்று எல்லா அறிவுஜீவிகளும் சொல்கிறார்கள்.///

உலக நடப்போடு ஒத்துப்போக,விலையேற்றம் என்பதெல்லாம் கண்துடைப்பு. உலக ரவுடி வங்கி என்ன சொல்கிறதோ அதைத்தான் எல்லா நாட்டு அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி வருகிறது. குளோபலிசம் என்று சொல்லி எல்லா நாடுகளையும் தன் கைக்குள் உலக வங்கி(அமெரிக்கா) தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது.

மற்றபடி நளினம் குறைந்து எழுத வேண்டும் என்று இல்லை.; இந்த அக்கிரமக்காரர்களின் கையிலிருந்து உலகம் விடுபட நாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்.

நான் மருத்துவர்களையும், மருந்துக்கடைக்காரர்களையும் குறை சொல்லவில்லை என்பதை தாங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

எல்லா நேரங்களிலும் நம் குணம் மென்மையாக இருக்க வல்லஅல்லாஹ்விடம் துஆச் செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் அலாவுதீன் காக்கா : அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)..

நாம் எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பது நலன் நாடியே !

//மற்றபடி நளினம் குறைந்து எழுத வேண்டும் என்று இல்லை.; இந்த அக்கிரமக்காரர்களின் கையிலிருந்து உலகம் விடுபட நாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்.//

உங்களின் நியாயமான கருத்துக்கள் யாவும் விளங்கியதால்தான் அப்படி ஒரு கருத்தையும் வைத்தேன், உங்களை நன்றாக அறிந்தவன் என்பதாலே.

மற்றொன்றை இங்கே பதிய விரும்புகிறேன், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது இணைய பிணைப்புகள் வருவதற்கு முன்னால் வந்த யாவரும் அறிந்த பழமொழி - ஆனால் இன்றைய சூழலில் இணையம் வாயிலாக கருத்துக்களை பதிபவர்களின் அகம் என்னவென்று அவர்களின் எழுத்தை வைத்துதான் முடிவுக்கு வருகின்றனர் காரணம் அவரவர்களை நேரடியாக அறிந்திராத பட்சத்தில் முகம் தெரிந்திராத நிலையில். இதில் நன்மையும் உண்டு கொடும் தீமையும் உண்டு (ஆண் பெண்ணாக எழுத்தில் மாறுவதும் பெண் ஆணாக மாறுவதும்).

எறும்பை யானையாகவும், யானையை எறும்பாகவும் காட்டிட இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும் இணைய பரப்பும் இதற்கு உடந்தையே... இதில் என்ன வேடிக்கை என்றால் இணையத்தில் சொல்வது எல்லாமே உண்மையில்லை என்று சொல்லிக் கொண்டே அதனை உண்மையாக்கவும் முயற்சிப்பார்கள் இதுவும் வளர்ந்த தொழில் நுட்பத்தின் கொதரத்துதான்னு வச்சுக்குங்களேன்..

உதாரனத்திற்கு இந்தக் கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருக்கும் விழ்ப்புணர்வுக்காக அவர்களுக்கு உரிய நக்கலுடன் அசத்தல் காக்கா பதிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள் மின்னாடல் குழுமங்களில் படுத்தும் பாடுகள் இப்படித்தான்.

//இதில் செயின் இமெயில் வேறு...பள்ளிவாசலில் தூங்கினார் / கனவு வந்தது / இ-மெயிலை மற்ற 10 பேருக்கு அனுப்பாவிட்டால் உனக்கு கல்யாணம் ஆகாது [ ஆகா எவ்வளவு நல்ல விசயம்!!!] உனக்கு நிறைய லாபம் விளைச்சலில் கிடைக்கும்..[ இருப்பதோ ஹவுசிங் ஏரியா..இங்கே போய் நாத்து எப்டிபா நட முடியும்?]//

ஆக இவைகளையும் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மைக்ரோசாஃப்ட் 2010 அவுட்லுக்கில் ஜங்க் மெயிலுக்கு அனுப்பும்படி செய்திருக்கிறார்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின் அஞ்சல்கள் இருக்குமேயானால் இன்னும் நீங்கள் தொடர்புகள் வைத்திராத குழுமங்களிலிருந்து (நேரடியாக) ஏதும் வருமேயானால் அங்கே தள்ளி விடுகிறது தானாகவே.

அனால் வெப்மெயில் என்று சொல்லக் கூடிய கூகிலாண்டவர்,யாஹுமாண்டவர் இவர்கள் மூலமாக வந்து கொண்டுதான் இருக்கிறது.

//எல்லா நேரங்களிலும் நம் குணம் மென்மையாக இருக்க வல்லஅல்லாஹ்விடம் துஆச் செய்வோம்.//

இன்ஷா அலலஹ் !

-----------------
கவிக் காக்கா : தடம் மாறியிருந்தால் குட்டும் வைத்திடலாம்
-----------------

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹீம வஅலைக்கும் ஸலாம்(வரஹ்):
பணமில்லாமல், மருத்துவ உதவியும் இல்லாமல் என் தந்தையை இழக்க நேர்ந்தது. (வல்ல அல்லாஹ்வின் நாட்டம் இதுதான்).

என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை சொன்னால் மருத்துவத்திற்கு நம் சமுதாயம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புரியும்.

1978ல் நான் கும்பகோணத்தில் வசித்து வரும் காலத்தில் என் தந்தை விரை வீக்கம், குடல் இறக்கம் என்ற நோயால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தார்.இதோடு தினக்கூலிக்கும் சென்று வந்தார். அடிக்கடி வலி வரும் சமாளித்து கொள்வார். ஒருநாள் இரவு நேரத்தில் வந்த வலி அவரை விட்டு விலகவில்லை.

நான் பள்ளி மாணவன் - எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை. ரிக்க்ஷாவில் அவரை உட்கார வைக்கமுடியவில்லை. படுத்த நிலையில் வைத்துக்கொண்டு என் தாயையும் ரிக்க்ஷாவில் அழைத்துக்கொண்டு நான் ரிக்க்ஷா பின்னால் ஒட்டமாக ஒடுகிறேன். ஒவ்வொரு தனியார் மருத்துவமனையாக போய் கதவை தட்டுகிறோம், நேரம் இரவு 12 மணியாகிவிட்டது பார்க்க முடியாது, அரசாங்க மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்ற பதிலை தவிர எந்த மருத்துவமனையும் முதலுதவி செய்யக்கூட முன்வரவில்லை.

கடைசியாக அரசாங்க மருத்துவமனைக்கு போய் சேர்ந்தோம். அங்குள்ள கம்பவுண்டர் 5ரூபாய் (லஞ்சம்) உடனடியாக கொடு அவருக்கு இனிமா கொடுக்க வேண்டும் மேலும் ஓடிப்போய் ஐஸ் வாங்கி வா அவரின் வீக்கத்திற்கு வைக்க வேண்டும் என்று சொன்னான். ஐஸ் வாங்க அந்த நேரத்தில் அலைந்து (அதே ரிக்க்ஷாவில்) வாங்கி வந்தேன்.

இந்த நேரத்தில் என் பக்கத்து வீட்டுக்கு அருகில் இருந்த பிற மதத்தைச் சேர்ந்த தாத்தா ஒருவர் என் நிலையை பார்த்து 25ரூபாய் (என்று நினைக்கிறேன்) என் கையில் கொடுத்து மருத்துவ செலவுக்கு தேவைப்படும் வைத்துக்கொள் என்று சொன்னார்.

ரிக்க்ஷகாரரும் என் நிலையை பார்த்துவிட்டு (கையில் பணம் இல்லா நிலையை பார்த்து : இவரும் பிறமதக்காரர்தான்) தம்பி எனக்கு ரிக்க்ஷா வாடகை வேண்டாம். உன்னிடம் பணம் இல்லை. உன் தந்தையை நல்லபடியாக கவனித்துக்கொள் என்று போய் விட்டார். (இந்த இரண்டு பேர் உதவியும் வல்ல அல்லாஹ் நாடியது).

10தினங்கள் அரசாங்க மருத்துவமனையில் இருந்தோம். ஆப்ரேஷன் நடக்கும் முன்னரே 11வது தினம் என் தந்தை இறந்து விட்டார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்)

பணமுமின்றி, உதவி செய்ய ஆளுமின்றி, மருத்துவ உதவியுமின்றி இறப்பு நிகழ்ந்து விட்டது.(பணமில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை).


//// இன்றைய சூழலில் இணையம் வாயிலாக கருத்துக்களை பதிபவர்களின் அகம் என்னவென்று அவர்களின் எழுத்தை வைத்துதான் முடிவுக்கு வருகின்றனர் எறும்பை யானையாகவும், யானையை எறும்பாகவும் காட்டிட இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியும் இணைய பரப்பும் இதற்கு உடந்தையே... இதில் என்ன வேடிக்கை என்றால் இணையத்தில் சொல்வது எல்லாமே உண்மையில்லை என்று சொல்லிக் கொண்டே அதனை உண்மையாக்கவும் முயற்சிப்பார்கள் இதுவும் வளர்ந்த தொழில் நுட்பத்தின் கொதரத்துதான்னு வச்சுக்குங்களேன்.. ///

தங்களின் கருத்துக்கள் உண்மையே நம்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கேட்டும், நேரில் பார்த்தும் வருவதால் மனிதாபிமானம் குறைந்து வருவதையே காட்டுகிறது.

நாம் மருத்துவ சேமிப்பு அவசியம் செய்ய வேண்டும். மருத்துவ உதவியில்லாமல் கஷ்டப்படும் நம் சமுதாய மக்களுக்கு உதவி செய்ய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் அலாவுதீன் காக்கா: உங்கள் வாழ்வில் நடந்தே விட்ட நிஜத்தினை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள் கலங்க வைத்துவிட்டதும் மெய்யே அன்றைய உங்களின் நிலையும் உங்கள் தந்தையின் இழப்பும் இவைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டமே அல்லாஹ்வுக்காக பொறுந்திக் கொள்ளுங்கள். உங்களின் உணர்வுகளோடு நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

நிச்சயமாக நமது முன்னிருந்தங்களில் கல்வி சுகாதராரம் என்றிருக்கும் பட்சத்தில் மருத்துவமும் உள்ளடக்கமாக கொண்டு வரத்தான் வேண்டும், இலவச மருத்தும் என்பது கானல் நீரல்ல அதுவும் சிறு துளிகள்தான் பெரும் வெள்ளமாகும் இன்ஷா அல்லாஹ்...

Riyaz Ahamed said...

சலாம்
பணம்............ உலகம் ஏற்படுத்திய பல நோய்களுக்கான ஒரே நிவாரணி- அருமையான பொன் மொழி.பணம் சேமிக்கும் வழியும் அருமை, நம்மவர்கள் வீன்விரையம் செய்வார்களே தவிர சேமிக்க எங்கே காக்கா பணம் இருக்கு? என கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்

ZAKIR HUSSAIN said...

//உலக நடப்போடு ஒத்துப்போக,விலையேற்றம் என்பதெல்லாம் கண்துடைப்பு. உலக ரவுடி வங்கி என்ன சொல்கிறதோ அதைத்தான் எல்லா நாட்டு அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி வருகிறது. குளோபலிசம் என்று சொல்லி எல்லா நாடுகளையும் தன் கைக்குள் உலக வங்கி(அமெரிக்கா) தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது.//

இந்த கருத்துடன் எல்லா நாடும் ஒத்துப்போக காரணம் பொருளாதார அறிவு இல்லாமல் நாட்டை நடத்தும் தலைவர்கள்தான் காரணம்.

இதில் மலேசியாவை பாராட்ட வேண்டும். 1996 ல் பொருளாதார வீழ்ச்சி தென் கிழக்காசியாவை தாக்கியபோது பிரதமராக இருந்தவர் டாக்டர் மஹாதீர் முஹம்மது. அடிப்படையில் ஒரு மெடிக்கல் டாக்டரான அவர் பொருளாதாரத்திலும் தனித்திறமை வாய்ந்தவர். அதனால்தான் இன்றும் மலேசியாவின் தேசிய கார் தயாரிப்பு நிறுவனத்துக்கும், பெட்ரோலிய நிறுவனத்துக்கும் ஆலோசகராக இருக்கிறார்.

பொருளாதார வீழ்ச்சியில் அவர் எடுத்த முடிவு மேக்ரோ எக்கனாமியை பாதிக்காமல் அமைந்தது. மக்கள் ஒரே நாளில் கடனாளியானது எல்லாம் பக்கத்து நாட்டில் நடந்தது. மலேசியாவில் நடக்கவில்லை. IMF & World Bank இரண்டிடமும் கடன் வாங்காமல் மலேசியாவை அழகாக வழி நடத்தியதை Time / Newsweek பத்திரிக்கை எல்லாம் பாராட்டியது. கடன் வாங்காததால் யூத Financial Analyst எல்லாம் கரித்து கொட்டினார்கள்

sabeer.abushahruk said...

நல்ல பதிவு. அறுமையான பின்னூட்ட அலசல்கள்.
கேஜி, ஏழாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் ஒன் முழுப்பரீட்சைகளில் பிசியாயிருப்பதால் பெரிய பின்னூட்டங்கள் சாத்தியல்ல.

அசத்தல் மன்னனின் தலைமையில் கலக்குங்கப்பா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// கேஜி, ஏழாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் ஒன் முழுப்பரீட்சைகளில் பிசியாயிருப்பதால் பெரிய பின்னூட்டங்கள் சாத்தியல்ல. ///

எல்லாத்தையும் புள்ளைங்கள்ள எழுதப் போறாங்க !... காலையில எழுந்திருச்சு வெருந் தேத்தண்ணியா போட்டுக் குடுக்கிறிய ! :)) குடிச்சிருக்கோம்ல !

இப்படியெல்லாம் ஜூட் உட்டா விடுறதா இல்லே... இப்பொ வந்தது... கிரிக்கெட் பிரேக் டைம் அதான் தலைய காட்டிட்டு ஓடீட்டிங்க ! இருக்க டீச்சர் கிட்டே சொல்றோம் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மருத்துவமும் மருந்துகளும்...
-----------------------------
இப்படித்தான் சமீபத்தில் கடந்து ஜனவரியில் ஊருக்குச் செல்லும்போது எனது கம்பெனியில் பணிபுரியும் யெமன் நாட்டைச் சேர்ந்தவர் இங்கிருக்கும் டாக்டர்களின் பரிந்துரைப்படி சென்னைக்கு மருத்துவம் செய்ய வந்தார் நானும் அவருக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து நான் சென்றடைந்த இரண்டு நாட்கள் கழித்து அவரும் அவருடைய சகோதரரும் சென்னை வந்தார் அவருக்குரிய எல்லா உதவிகளும் செய்தோம்.

முதலில் அவர் சென்ற இடம் அப்போலோ (பல்மடங்கு சிறப்பு வசதிகள் - multispeciality) அங்கே சென்றார் முதல் நாள் முழுவதும் பரிசோதனைகள் இரண்டாவது நாள் பரிசோதனை முடிவுகள் மூன்றாம் நாள் அவருக்கான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவம் செய்வதற்கான தோராய விலைப் புள்ளி (estimation / quotation) கையில் கொடுத்தார்கள் வாங்கிப் பார்த்தவர் அசந்தே விட்டார் அதில் நான்கு இலட்சத்து நாற்பத்தி ஐயாயிரம் என்றிருந்தது எனக்கும் தகவல் தந்தார் இதற்கு பந்துதானே அங்கே இதனைச் செய்யாமல் இங்கே வந்தேன் ஆனால் இதென்னெ இப்படி என்றார்.

சரி எனது உறவுகளிடம் கலந்து பேசி வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம் என்று யோசனை சொல்லப்பட்டது, அவர் ஏற்கனவே அப்போலோ என்ற preloaded memory (வர்த்தையை) சொருவிக் கொண்டுதான் வந்திருக்கிறார் அதிலும் அவருக்கு இங்கே (துபாயில்) முவாயிரம் டாலருக்கு மேல் செல்வுகள் வராது என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார் இங்கிருக்கும் மருத்துவர் அதனால்தான் சற்று தயங்கினார்.

பிறகு அவரைச் சமாதானம் செய்து விஜயா ஹாஸ்பிடல் மற்றும் இரமச் சந்திரா ஹாஸ்பிடல் இரண்டிற்க்கும் முறையே மூன்று மூன்று நாட்கள் என்று சென்று அவற்றிலும் தோரய விலைப் புள்ளி (estimation) பெற்று மூன்றில் எது குறைவு என்று அவரே பார்த்துவிட்டு கடைசியாக எங்களின் மற்ற விசாரிப்பில் இரமச்சந்திராவில் இருக்கும் மருத்துவர் இதற்கு பிரசித்து பெற்றவரும் அங்கே செலவுகள் குறவு என்றும் அறிவுறுத்தியதால் அங்கே சென்று சிகிச்சை பெறுவதற்கும் உதவினோம்.

அங்கே முறையே.. விஜயா மருத்துவமனையில் இரண்டே முக்கால் இலட்சம் மருத்துவத்திற்கு மட்டும் அப்புறம் மருந்துச் செலவு தனியாம், அடுத்து இரமச்சந்திராவில் ஒன்னேமுக்கால் இலட்சம் என்றும் இருந்தது.

மொத்தம் என்பத்தி இரண்டு நாட்கள் சென்னையில் இருந்து சிகிச்சை பெற்று இம்மாதம் முதல் வாரத்தில் திரும்பி வந்தார் அவரிடம் எவ்வளவு செலவு ஆனது என்று கேட்டேன் எட்டாயிரத்து எண்ணூறு டாலர் என்றார்... இவரின் மாத வருமானம் ஆயிரத்து நூற்றி ஐம்பது டாலர்கள்.

இவருக்கான சிகிச்சையை இங்கே ஷார்ஜாவில் கடந்த ஒன்றரை வருடமாக தொடர்ந்தார்கள் அதில் ஐந்து முறை அறுவை சிகிச்சையும் செய்தார்கள் !!!!

இவைகள் தகவலுக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவம் எப்படி பணம் ஊற்றி கொடிகட்டிப் பறக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளத்தான்.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

உஷ்ஷ்ஷ்ஷ்....
இந்த ஆக்க நாயகனுக்க் கிரிக்கெட் பிடிக்காது. தெரிஞ்சா ஒரு ஆர்ட்டிக்கில் அளவுக்கு கோபப்படுவான்.

ப்ரேக் வேற முடியப்போவுது. இவனுகவேற கடைசில ஏமாத்திட்டாய்ங்க வர்ட்டா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யூசுஃப் பத்தானும் - கிரவுனும் இப்புடி இருக்காய்ங்களே !!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வழக்கம் போல் அவரின் ராஜ நடை நடந்திருக்கிறார். இவரிடம் நல்ல கூர்ந்து கவனிக்கும் தன்மை ஒளிந்து இருக்கு. நல்ல நகைச்சுவையுடன் கசக்கும் மருந்தை அவ்வப்போது கொடுக்கும் லாவகம் அப்பப்பா! நிரைய எழுதுங்கள் எங்கள் மனது நிறைய எழுதுங்கள். நல்ல யோசனை. மருந்து மாதிரி எடுத்துக்காம உணவு மாதிரி எடுத்து செய்வது நம் கையில் தான் உள்ளது.

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
யூசுஃப் பத்தானும் - கிரவுனும் இப்புடி இருக்காய்ங்களே !!
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். கேப்டன் நீங்க தவறா முடிவு எடுத்து என்னை பலிகாடா ஆக்கினா? நான் என்ன பன்னுறது? ஏற்கனவே ஆட்டை கழுதையாக்கினவங்களாச்சே! ஆட்டத்தை கழுதையாக்கி இப்படி உதை கொடுக்காம உதையா வாங்குறது???? எல்லாம் கேப்டன் தவறு.உடனே இங்கே உள்ள கேப்டன் மாதிரி கண் சிவக்க வேண்டாம்.

ZAKIR HUSSAIN said...

Thanx Alaudeen[ for wonderful sharing of your thoughts ] Thanx abdul Malik, Thajudeen , Abu Ibrahim & our literary talented Crown for the admiration.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி கிரவ்ன்(னு): அப்பைக்கு அப்ப அந்தக் கேப்டனும் சுழற்றத்தான் செய்கிறார் என்ன செய்ய எதிர்பார்ப்பை உண்டாக்கிறவய்ங்க இப்புடியிருக்கிறது மழை வந்து பாதியிலேயே நின்றாலும் பராவயில்லைய(டா)ப்பா !

சரி (நீர் சொன்ன) கேப்டனை மாதிட்டா போச்சு அதனாலென்ன... வந்து ஒழுங்க (வார்த்தைகளில்)விளையாடிட்டுபோ(டா)பா !

Yasir said...

ஒரு மிக முக்கியமான ஒன்றை..அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவை கலந்து எழுதி இருக்கும் உங்கள் லாவகமே தனிதான் காக்கா....கூட்டுறவு மெடிக்கல் சேமிப்பு ஒரு அவசியமான /அவசரமான ஒன்று...அனைவரும் யோசிக்க வேண்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு