யா அல்லாஹ் எங்களை ஹலாலை கொண்டு ஹராமை விட்டு பாதுகாப்பாயாக !
அஸ்ஸலாமு அழைக்கும்
இதன் விலை ரூ1
குழந்தைகளுக்கு கவர்ச்சியாகவும் விலை குறைவாகவும் நமது ஊரில் சில கடைகளில் பாரின் சாக்லேட் விற்கிறார்கள். அவற்றில் என்ன ingredients மூலப்பொருள் சேர்கிறார்கள் என்று யாரும் பார்ப்பது கிடையாது gelatin என்கிற (ஊண்பசை) இவை பெரும்பாலும் பன்றியின் கொழுப்பிலிருந்து எடுக்கிறார்கள் இதை ஐரோப்பாவில் இருந்தவர்கள் அறிந்திருப்பார்கள் ஏன் என்றால் அங்கே ஹலாலை விட ஹராமான பொருட்கள் அதிகம்.
தற்பொழுது உலகம் முழுவதும் இதுபோல் நிறைய பொருட்கள் வந்துவிட்டன சென்றவருடம் அமீரகத்திற்கு வந்தபொழுது நிறைய சாக்லேட் பார்த்தேன். இதை போன்று ஸ்ரீலங்கா சென்றபொழுது அங்கும் பார்த்தேன், மாஷா அல்லாஹ்.. அங்கே இஸ்லாமிய மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் எந்த அளவுக்கு என்றால் உங்களுக்கு எந்த ஒரு பொருள் ஹலாலா? ஹராமா? என்று தெரிந்து கொள்ள அந்த (product) பொருளின் பெயரை டைப் செய்து sms செய்தால் உடனே அந்த பொருளை பற்றி அனைத்து விபரங்களும் கிடைத்துவிடும் இது இலவச sms அல்லாமல் அணைத்து பல்பொருள் அங்காடிகளிலும் இந்த நம்பர் இருக்கிறது.
அன்புச் சகோதரர்களே இனிமேலாவது அனைவரும் கவனத்தில் கொண்டு அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவோம், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவோம்.
குறிப்பு: Malasiya வில் இருந்து சில பொருள்கள் வருகிறது அதில் gelatine ஹலால் என்று அடித்து வருகிறது கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.
இன்டர்நேஷனல் சட்டபடி vegetariyan பச்சை கலரும் மற்றவைகளுக்கு சிகப்பு கலர் டாட்ஸ் வைத்துவரும் சிகப்பு கலர் டாட்ஸ் உள்ளவைகளை தவிர்த்து கொள்ளவேண்டும்
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (2:172)
எங்கள் ரப்பே குழப்பத்தை உண்டாக்கும் இத்தீயோர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக !
-- அபு இஸ்மாயில்
13 Responses So Far:
it is very important to know what is halal / haram in foodstuff and it's contains....many of our people not aware of this .....good article....
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் அபு இஸ்மாயில்,
எனக்கு தெரிந்து இதில் சிலர் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள், நிறைய தகவல்கள் இது தொடர்பாக தேவை, விழிப்புணர்வுகளும் தேவை.
நல்ல பயனுல்ல தகவல்.
//இன்டர்நேஷனல் சட்டபடி வெகெடரியன் பச்சை கலரும் மற்றவைகளுக்கு சிகப்பு கலர் டாட்ஸ் //
இது தொடர்பாக இன்னும் விளக்கம் கிடைக்குமா? ஜாஹிர் காக்கா உங்களிடம் தான் இந்த கேள்வி
மலேசியாவில் உள்ள Department for Islamic Affairs [ Jabatan Agama Islam] இதுபோன்ற விசயங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இதனுடைய ஹலால் சர்டிபிகேட் கடையில் கஸ்டமர் பார்வைக்கு இல்லாவிடில் அபராதம் உண்டு.
மருந்து தயாரிப்பில் ஜெல்லாட்டின் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஜெல்லாட்டின் இல்லாவிடில் கேப்ஸ்யூல் மருந்தை உட்கொள்ள நீங்கள் அநியாயத்துக்கு அடம்பிடிக்ககூடும்.
ஜெல்லாட்டின் பன்றியின் குடலில் மட்டும்தான் கிடைக்கும் என்பது சரியான தகவல் அல்ல. மற்ற மிருகங்களிலும் கிடைக்கும். பன்றி ஜெல்லாட்டினுக்கு எப்போதும் ஆடி தள்ளுபடி.
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல ஒரு விழிப்புணர்வு கட்டுரை
நாம் இது நாள் வரை வட்டியும் பன்றி கறியும் தான் ஹராம் என்று நினைத்து இருந்தோம்.
ஆனால் இபோதுல்லாம் பன்றி கொளுப்புக்களை பல உண்ணும் பொருட்களில் கலந்து விடுகின்றார்கள்
மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் தற்போது
இங்கு சவூதியை பொறுத்தவரை எங்கும் எதையும் தைரியமாக சாப்பிடலாம்!
//இங்கு சவூதியை பொறுத்தவரை எங்கும் எதையும் தைரியமாக சாப்பிடலாம்!//
இங்கே (அமீரகம்) அப்படியே உல்ட்டா
சகோதரர்களே!. இங்கே பன்றியின் கறியை/கொழுப்பை (ஹராம்) விவாதிப்பதனால் ஒரு கேள்வியை வைக்கின்றேன். சில தினங்களுக்கு முன் பி.ஜெ ஆன்லைனில் பன்றியின் தோலை சகோதரர் பி.ஜெ அவர்கள் ஹலால் என்று கூறியுள்ளார். எனவே அது தொடர்பான விளக்கங்கள் யாரிடமாவது இருந்தால் இங்கே கருத்தில் இடுங்களேன். அல்லாஹ் திருமறையில் பன்றியை ஹராமாக்கி இருக்கும்போது அதன் தோல் ஹலால் என்று கூறுவது கூடுமா?.
விரிவான விளக்கத்திற்கு கீழ்கண்ட லிங்கை காணுங்கள்:
http://www.onlinepj.com/kelvi_pathil/viyabaram_kelvi/panri_thol_viyabaram/
// சில தினங்களுக்கு முன் பி.ஜெ ஆன்லைனில் பன்றியின் தோலை சகோதரர் பி.ஜெ அவர்கள் ஹலால் என்று கூறியுள்ளார். //
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஜீப்,
மவ்லவி பி.ஜெய்னுலாபிதீன் அவர்கள் பன்றி தோல் வியாபாரம் செய்வது கூடும் என்று தன் வாதத்தை வைத்துள்ளார்.
தானாக செத்துமடிந்த பிராணிகளின் மாமிசத்தை உண்பதற்கு தடை செய்த இஸ்லாம், அதன் தோல்கள் பதனிடப்பட்டால் கூடும் என்ற ஹதீஸ் அடிப்படையில் தானாக செத்துமடிந்த பிராணிகளின் தோல்களும் (பதனிடப்பட்டால்) பயன்படுத்தலாம் என்று விளக்கியுள்ளார். பன்றி தோல்களை பயன்படுத்தக்கூடாது என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை என்று மறைமுகமான வாதத்தையும் வைத்துள்ளார். இது முழுக்க முழுக்க தோல் பயன்படுத்துவது மற்றும் வியாபாரம் தொடர்பான தகவலுக்கான மார்க்க விளக்கம். இதை மறுப்பதற்கான தெளிவான வாதங்கள் இருக்குமானால் சகோதரர்கள் விளக்கலாம். எல்லோருக்கும் தெளிவுபெரும்.
என்னைப் பொருத்தவரையில் முஸ்லீம்கள் பதனிடப்பட்ட பன்றி தோல் வியாபாரம் செய்துதான் வியாபாரம் செய்யும் அளவுக்கு இந்த உலகம் மிகச்சிறியது அல்ல.இது போன்ற வியாபாரங்களைவிட எவ்வளவோ தலைச்சிறந்த மிகத் தெளிவான ஹலாலான வியாபாரங்கள் இவ்வுலகில் செய்ய மனிதனுக்கு அல்லாஹ் பகுத்தறிவையும் வழிகாட்டுதளையும் கொடுத்திருக்கிறான்.
இதை பெரிது படுத்த வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
யா அல்லாஹ் எங்களுக்கு தெளிவான அறிவு ஞானத்தை தந்தருவாயாக.
அசத்தல் காக்கா : ஆடித் தள்ளுபடின்னா ! ஆடதவங்களை ஆட வைத்திடுமோ !?
சமீபத்திய ஆக்கங்கள் எல்லாமே "விழி"யை முன்வைத்தும் "விழி"கண்டதை அப்படியே "விழி"ப்புணர்வு கொள்ள வைக்கின்றன !
விழியால் எழுதிய
மொழியின் வரிகளை
சுழிபோட எத்தனித்தேன்
பழித்திடுவீங்களான்னு பயந்தே விட்டேன்...
நான் ஒன்னும் குழப்பலையே ? (நீங்க குழம்பலையான்னு கேட்டா நல்லாவா இருக்கும் ?)
மாத்தி யோசிச்சு யோசிச்சு இப்புடியாச்சு !
அபுஇபுறாஹீம் சொன்னது…
//விழியால் எழுதிய
மொழியின் வரிகளை
சுழிபோட எத்தனித்தேன்
பழித்திடுவீங்களான்னு பயந்தே விட்டேன்...
//
அஸ்ஸலாமு அழைக்கும்
கண்ணு படாது பயப்பட வேண்டாம் !
அபு இப்ராஹிம்.......ஏ.......ன்?
ZAKIR HUSSAIN சொன்னது…
அபு இப்ராஹிம்.......ஏ.......ன்? ///
காக்கா : என் சொந்தங்களில் ஒருவர் - ஆடித் தள்ளுபடியில் வாங்கிய வாஷிங் மெஷின் ஆடி ஆடி, ஆடி(மாதம்) முடிவதற்குள் அப்படியே அடங்கிடுச்சாம்... அவ்வ்ளோ (உளுர்ந்த)தரம்
அபுஇபுறாஹீம் சொன்னது…
ZAKIR HUSSAIN சொன்னது…
அபு இப்ராஹிம்.......ஏ.......ன்? ///
காக்கா : என் சொந்தங்களில் ஒருவர் - ஆடித் தள்ளுபடியில் வாங்கிய வாஷிங் மெஷின் ஆடி ஆடி, ஆடி(மாதம்) முடிவதற்குள் அப்படியே அடங்கிடுச்சாம்... அவ்வ்ளோ (உளுர்ந்த)தரம்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .ஆடித்தள்ளுபடியெல்லாம் ஐவாஸ்(eyewash). சொந்தகாரரை பிரைன்வாஸ்(brain wash) பன்னித்தான் அந்த வாசிங்மெசினை விற்று இருப்பார்கள்.இப்ப வாஸ்(washout) அவுட் ஆச்சு அதனாலதான்.
கிரவ்ன்(னு): அலைக்குமுஸ்ஸலாம்... வந்திட்டியா(டா)ப்பா அல்ஹம்துலில்லாஹ், நலம் எப்படி அங்கே வாயாடியில கூட பார்க்க முடியவில்லை...
அதனால்தான் ஆடி முடிந்ததும் wash செய்திடுறாங்களா ?
Post a Comment