Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இதயம் இடிந்ததே ! 15

அதிரைநிருபர் | March 06, 2011 | , ,

என் இதயமே இடிந்தது
என் தம்பி அந்த சோக
செய்தியை சொல்லி அழும்போது!

உங்களை எதிர்த்த நபர்களிடம் கூட
நீங்கள் அன்பு செலுத்த தயங்கியதில்லை!
சில நேரங்களில் என்னையும் சேர்த்து தான்!

06.03.2011 அன்று காலை
நான் துபாயில் வேலைக்காக என்
அலுவலகம் செல்லும் போது!
உங்களின் இறந்த கோலம்
எப்படி இருக்குமே! என்ற எண்ணோட்டம்!

மாற்று மதத்தார் கூட போற்றும்
அளவிற்கு! உங்களது ஜனநாயக போக்கு
இருந்தது.

இதற்காக தான் தமிழ்நாடு அரசு
உங்களை " கோட்டை அமீர்" என்று
அழைத்தது.

சில நேரம்களில் உள்ளூர்வாசிகள்
உங்களை எதிர்த்து இருக்கலாம்!
ஆனால்
அந்த மக்களை பக்குவப்படுத்திய
அதிரையின் தாய் தந்தை நீ!
இதை யாராலும் மறுக்க முடியுமா!

எனக்கு என்ன பொறாமை தெரியுமா!
இந்த தேசத்தில்! ஏன் இந்த உலகில்!
ஐந்து அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக
இல்லை இல்லை..

ஒரு குடும்பத்தையே ஒற்றுமையாக்கி!
ஒரு பல்கலை கழகமாக மாற்றி!
இந்த அதிரை பட்டினத்தையே!
உன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாயே!
உன் நாடி நரம்பு அடங்கும் வரை!
இதை எவராலும் மறுக்க முடியுமா?
இந்த குணம் உலகில் எவருக்கும் உண்டா?
அது கேள்வி குறிதான்!

என்ன செய்வது? இறைவன்
இப்படி ஒரு தீர்ப்பை எழுதிவிட்டானே!
இதை மாற்ற முடியுமா?
இதை ஏற்க மட்டும் தான் முடியும்!

உங்கள் மறுவாழ்வில்! இறைவனிடத்தில்
சிறப்பான இடத்தை பெற!
அவனிடமே இரு கரம் ஏந்துகிறோம்!
நானும் என் குடும்பத்தவரும்
இடிந்த இதயங்களுடன்....

-அதிரை அஸ்ரப்

அண்ணாவியார் இல்லம்
மேலத்தெரு
அதிரை

15 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

சாச்சாவின் இறப்பு ஒட்டு மொத்த சுற்று வட்டாரத்தத்திற்கு பெரும் இழப்பு

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரையின் மூத்த தலைவர் ஹாஜி MMS அப்துல் வகாப் அவர்களின் மரண செய்தியால் அதிரை மக்களின் இதயங்கள் இடிந்தது உண்மையே.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் மாற்று மதத்தவர்களுக்கு ஒரு சவாலாக தமிழக அரசியல் வட்டாரத்தில் இருந்த முஸ்லீம் தலைவர்களில் குறிப்பிட்டு சொல்லபடுபவர்களில் MMS அப்துல் வஹாப் அவர்களும் ஒருவர் என்பதில் யாருக்கும் மற்றுக்கருத்து இருந்திடாது.

அன்னாரை இழந்துள்ள சொந்தங்கள், நண்பர்கள் எல்லோருக்கும் இறைவன் மன நிம்மதியை தருவானாக.

அன்னாரின் ஈருலக நல்வாழ்வுக்காக இறைவனிடம் துஆ செய்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
--------------------------------------------------

எதிரியையும் என்னவன் என்று இறுக்கி அனைத்திடும் பாங்கினை கொண்ட மர்ஹூம் எம்.எம்.எஸ்.அப்துல் வஹாப் அவர்களின் மறைவு அதிரைப்படினத்தின் மூத்த அனுபவமிக்க ஆளுமைத் திறன் கொண்ட அரசியில் இழப்பு...

அன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் மற்றும் அதிரை நேசங்கள் யாவருக்கும் இவ்விழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக..

நினைவலைகள் : சமீபத்தில் ஊரில் இருக்கும்போது நட்புகளோடு MMS அவர்களை பஞ்சாயத்து அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது... அன்றைய தினம் கரையூர் தெருவாசிகளின் பிரச்சினை அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர், அன்றைய தினம் அவர்களின் ஆளுமையும் அவர்களை அடக்கியாண்ட விவேகமும் வியக்க வைத்தது...

Yasir said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

அன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் மற்றும் அதிரை நேசங்கள் யாவருக்கும் இவ்விழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

அன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் மற்றும் அதிரை நேசங்கள் யாவருக்கும் இவ்விழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக.

அலாவுதீன்.S. said...

abufahadhnaan said...

அஸ்ஸலாமு அழைக்கும், எதிரியையும் என்னவன் என்று இறுக்கி அனைத்திடும் பாங்கினை கொண்ட மர்ஹூம் எம்.எம்.எஸ்.அப்துல் வஹாப் அவர்களின்
மறைவு அதிரைப்படினத்தின் மூத்த அனுபவமிக்க ஆளுமைத் திறன் கொண்ட அரசியில் இழப்பு...
சாச்சா மீது சில பல விஷயங்களில் கோபம் தாபம் இருந்தாலும் அரசியலில் முஸ்லிம்களின் வெற்றிடத்தை நிரப்பி வந்தவர் என்ற வகையில் நம் மதிப்பிற்குரியவர்.அன்னாரின் இடத்தை நிரப்புவதில் நம் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல அனுபவ மிக்க நபரை தேர்ந்து எடுக்கும் இக்கட்டன சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக ஆமின்................................

mohamedali jinnah said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
மறுவாழ்வில்! இறைவனிடத்தில்
சிறப்பான இடத்தை பெற அவர்களுக்காக துவா செய்வோம்.ஆமீன் .

அன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் மற்றும் அதிரை நேசங்கள் யாவருக்கும் இவ்விழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக.

Unknown said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

அன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் யாவருக்கும் அவர் இழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக.

அதிரை ஆலிம் said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

அன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் யாவருக்கும் இவ்விழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக ஆமீன்.

sabeer.abushahruk said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

££Plus££ said...

نَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

அதிரை அபூபக்கர் said...

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து.. மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்கிறேன்..

அப்துல்மாலிக் said...

நிச்சயம் சாச்சாவின் இழப்பு நம் ஊருக்கு ஒரு பெரும் இழப்பே, அவரது குடும்பத்தார்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை கொடுப்பானாகவும், ஆமீன்

நிஸார் அஹமது said...

சாச்சா என எல்லாராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, "சாச்சா" அவர்களின் மறைவு நிச்சயம் அதிராம்பட்டினத்திர்க்கு ஒரு பேரிழப்புதான்..
அவர்களின் மறுமை நல்வாழ்விற்க்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு