திருச்சிக்கு போகவேண்டி இருந்தது ஒரு வேலை நிமித்தமாக.. நண்பனுடன் தஞ்சாவூரிலிருந்து பகல் சாப்பாட்டுக்குப்பின் பேருந்து ஏறினோம் ஓரளவு கூட்டம் ஜன்னலோர கம்பிகள் துருப்பிடித்து கையோடு வந்துவிடும் விபரீதம் இருப்பதால் நண்பனை அந்தப் பக்கம் உட்காரசொல்லிவிட்டு இருக்க ஆறேழு நிமிஷத்தில் லேசான உறுமலோடு வண்டி புறப்பட்டது.. தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையத்திலிருந்து வல்லம் வரை சுமாரான வேகத்தோடு போன பேருந்து அதற்கப்புறம் எடுத்த வேகம் குறுக்கே எது வந்தாலும் எலும்பு கூட மிஞ்சாத அளவுக்கு அளவுகடந்த வேகம் பளிச்சென்று சொன்னால் 'மரணவேகம்.. என்னாச்சு'ன்னு யோசிக்க கூட நேரமில்லாத அளவுக்கு எல்லோரும் டிரைவரைப் பார்த்து சத்தம் போட எதையுமே கண்டுகொள்ளாத மாதிரி அதே வேகத்தை மெயின்டெய்ன் பண்ணிக்கொண்டிருந்தார். டிக்கெட்டுக்கு மட்டும் திருவாய் மலர்ந்த கண்டக்டர் டோட்டலாக ஷட்டவுனில் இருக்க, ஒருவழியாய் துவாக்குடி வரவும் வண்டியின் வேகம் சற்று குறைந்தது. மத்திய பேருந்து நிலையம் வரவும்தான் விஷயமே தெரிந்தது..டிரைவர் சாப்பிடலையாம். அதுக்காக இப்படியா!! பசிவந்தால் பத்தும் பறக்கும்'னு கேள்விப்பட்டிருக்கிறேன் இப்படி ஒரு பஸ்ஸே பறக்கும்'னு தெரியாமப் போச்சே..
இதனால் அறியப்படும் நீதி : டிரைவர் சாப்பிட்டாரா என்று விசாரித்துவிட்டு ஏறுவது நலம்.. அதுலகூட அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்பவரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்தமாக 'வழியனுப்பிவிடும் 'அபாயமும் இருக்கிறது..
______________________________________
ரேஷன் கார்டு சம்பந்தமாக தாலுக்கா அலுவலகத்திற்கு போனபோது லேசான தூறல் போட்டது.பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற எழுத்தை விட போர்டு அநியாயத்திற்கு மங்கி போயிருந்தது எழுத்திலுள்ள வாசகத்தை மங்க விடாம பார்த்து கொண்டாலே போதும்.வெளியே தூறல் போட்ட விஷயம் உள்ளே போனதும்தான் தெரிந்தது பத்து மணிக்கெல்லாம் முடிந்தளவு எல்லா அலுவலர்களும் வந்திருந்தார்கள் வழக்கமான இழுத்தடிப்புகள் இல்லாமல் சீக்கிரமாகவே எனக்கு வேலை முடிந்தது..உஜாலாவுக்கு மாறின மாதிரி ஏன் இப்படி இங்கு திடீர் மாற்றம்'னு நான் சொல்லமாட்டேன்.. தேர்தல் வருதல் அதனால் வந்த மாறுதல்..
___________________________________
அரசுடையாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை காலை பத்தரை மணிக்கு போனேன் வாசலில் உள்ள செக்யூரிட்டி பேங்க் உள் கேட்டில் நின்றுகொண்டு எவரையும் உள்ளே விட மறுத்தார் ஏன்'னு கேட்டால் வங்கியில் ஒரே ஒரு அலுவலர் மட்டும் இருக்கிறார் மற்ற நாலு பேர் ஒரு கல்யாணத்திற்க்கு?? போயிருக்கிறார்கள் என்றார்..அப்படியே அசந்து போயிட்டேன் அதெப்படி வேலை நேரத்தில் அவர்கள் போவார்கள் என்று ஒருவர் ஏகத்துக்கும் கொந்தளித்துக் கொண்டிருக்க தேய்ந்த ரெக்கார்ட் போல் அதையே திரும்ப அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தார் செக்யூரிட்டி. மணியும் 12 ஆக பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள்..கொந்தளித்த மனிதர் பக்கத்தில் இருந்த சர்பத் கடையில் நன்னாரியை வாங்கி குடித்து தன்னைதானே சாந்தப்படத்தி கொண்டார்..கிழமை வேற சனி'யாகி இருந்தது எவ்ளோதான் திங் பண்ணாலும் திங்கள்கிழமைதான் வேலை முடிந்தது..
15 Responses So Far:
வாங்க தம்பி இர்ஷாத் சொல்லி வச்ச மாதிரி ஒரு வழியாக்கிட்டீங்களே !!
இவய்ங்கள ஏர்இந்தியா விமானம் ஓட்ட அனுப்பினா என்னா !? நிக்காமே வேகமா ஒட்டுறாய்ங்களே !
தேர்தலென்று வந்தே விட்டா தேறாதவங்களையும் தேடிப் புடிப்பாய்ங்க... ஆச்சர்யமா இருக்கே இவ்வ்ளோ சீக்கிரமா வேலை முடிஞ்சுச்சு !?
நல்ல திங்(கள்)கிங் !
இன்னும் நிறைய எழுதிட்டு மொத்தமா அ.நிருபருக்கு அனுப்பலாம் என்றிருந்தேன்.. தாஜீதீன் காக்கா மெயில் பண்ணியிருந்தார்கள்.. சரி பதியலாம் என்று எண்ணினேன்.. இன்னும் வரலாம் ஸ்பெஷல் அதிரை ஆர்ட்டிக்கிள் :))
//இன்னும் வரலாம் ஸ்பெஷல் அதிரை ஆர்ட்டிக்கிள் :))//
இதற்காகத்தானே காத்திருக்கோம்...
அருமையான துணுக்ஸ்? ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளரின் எழுத்து நடையை மிகவும் ரசித்தேன்.
இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம்தான்!
அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல தொரு துணுக்குத்தோரணம் காரணம் நம் மண்ணை பற்றி சொன்னவிதம்.அதிகாலை பணி நிமித்தமாக 5:50 காலை நேரத்தில் சேர்மன் வாடியிலிருந்து சாமியப்பா பஸ்ஸில் ஏறி திருச்சி போகும் போது அந்த அதிகாலை நேரத்தில் சுள்லென்ற சூரிய ஒளியில் தஞ்சை புஞ்சையை கடக்கையில் நெஞ்சை அள்ளும் பசுமை காட்சி இன்னும் பசுமையாய் இனிக்கிறது. வயல் வெளியில் வெண்னிற கொக்கும் அங்கும் இங்குமாய் பரந்து. போகும் வழியெல்லாம் உள்ள பஸ் நிருத்தத்தில் எண்ணெய் தேய்து அழுத்த சீவி பின்னலிட்டு பள்ளிக்கூடம் போக ஏறும் கிராமத்து இளம் மாணவியர்களும்,காளைகளும்,வேலைக்குச்செல்லும் பெரியவர்களும்.இப்படி ஆஸ்பத்திருக்கு செல்லும் நம்மவர்களும் அப்பப்பா அந்த சன்னல் ஓரம் சில்லென்ற காற்றும் சில துற்னாற்றங்களும்,சில நாற்றங்களும்(மணம்)என்றும் நினைவில் தங்கிவாழும். நல்ல ஆக்கம் இன்னும் வேண்டும் என ஏங்க வைத்த தம்பி இர்ஸாத்தின் எழுத்து நடை அருமை.
இன்று காலை இந்த ஆக்கத்தை படித்தவுடன் "ஊருக்கு போகும் ஆசை' யை அதிகப்படுத்திய அஹமது இர்ஷாத் வாழ்க வளமுடன்.
வயல் வெளிகளின் சேற்று நாற்றமும் , தூசி பறக்கும் ஊரின் தோற்றமும், பஸ் கடக்கும்போது காதில் விழும் கல்யாணப்பந்தலின் பாட்டும் உங்கள் எழுத்தில் அப்படியே அச்சாக இருந்தது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த ஆக்கம் நேற்று படித்தவுடன் ஊருக்கு போகும் ஆசை அதிகரித்துள்ளது. தம்பி இர்ஷாத் அவர்களின் எழுத்துநடை என்றுமே மிக அருமை, எல்லோரையும் ரசிக்க வைக்கிறது.
தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு அடிக்கடி பஸ் பயனம் செய்த அதிரைவாசிகளின் நானும் ஒருவன். இந்த படித்தவுடன் 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது என் சிந்தனைகள்.
தம்பி இர்ஷாத் வாழ்த்துக்கள்..
மனதோடு ஒன்றிய ஊரு நம்ம ஊரு (ஊரு ஞாபகம் வந்தா இந்த பதிவை படிச்சிக்க வேண்டியதுதான்) அருமை
படித்தவுடன் ஊருக்கு போய் வந்தது போல் இருந்தது.
"ஆஸ்பத்திருக்கு செல்லும் நம்மவர்களும் அப்பப்பா "
வாவ்!!! இர்ஷாத்தின் எழுத்துக்கு நான் அடிக்ட்,அவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவன்...எழுத்தில் முதிர்ச்சி/ அளவில்லா / அலவு வலிக்கும் வரை சிரிக்க வைக்கும் நகைச்சுவை...அவர் பார்த்ததை செய்தை ஏதோ நாம் பார்த்ததுபோல் செய்ததுபோல் படிபவர்களின் மத்தியில் கொண்டுவரும் திறமை...வாழ்த்துக்கள் இர்ஷாத்..நீங்கள் நிறைய எழுத வேண்டும்
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற எழுத்தை விட போர்டு அநியாயத்திற்கு மங்கி போயிருந்தது எழுத்திலுள்ள வாசகத்தை மங்க விடாம பார்த்து கொண்டாலே போதும்//
கலக்கிட்டிங்க .. அருமை இர்ஷாத்..
உங்களது எழுத்துநடை அழகு... அல்ஹம்துலில்லாஹ்.
சகோ. அஹமது இர்ஷாத் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// குறுக்கே எது வந்தாலும் எலும்பு கூட மிஞ்சாத அளவுக்கு அளவுகடந்த வேகம் பளிச்சென்று சொன்னால் 'மரணவேகம்.. ///
சகோ. அபுஇபுறாஹீம் கூறியதுபோல் இந்த ட்ரைவர் ஏர்இந்தியா விமானம் ஓட்டுவதற்கு அப்ளை செய்ய சொல்லாம்.
///ரேஷன் கார்டு : வழக்கமான இழுத்தடிப்புகள் இல்லாமல் சீக்கிரமாகவே எனக்கு வேலை
முடிந்தது.///
அதிசயம் ஆனால் உண்மை என்று சொல்ல தோன்றுகிறது.
///செக்யூரிட்டி. மணியும் 12 ஆக பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள்.///
அரசு பேங்கில் வேலை செய்பவர்களுக்கு இந்தியாவின் மன்னர்கள் என்ற நினைப்பு வாடிக்கையாளரை மதித்து எதுவும் செய்வது கிடையாது. நம் பணத்தை எடுக்க பேங்கிற்கு சென்றால் அவரின் சொத்தில் எடுத்து நமக்கு பணம் கொடுப்பது போல் ஒரு அலட்சிய பார்வை. தற்பொழுதைய செய்தி: அகவிலைப்படி 6 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது பற்றி மத்திய அரசாங்கம் ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறது. வேலை மட்டும் பார்க்க மாட்டார்கள் வருடா வருடம் உயர்வுக்கு மட்டும் போராட்டம் செய்வார்கள். என்று திருந்துவார்கள்???.
ஆயிரம் வசதிகள் வளைகுடாவில் இருந்தாலும் நமது ஊருக்கு ஈடாக எந்த நாடும் கிடையாது. வாழ்த்துக்கள் சகோதரரே!.
அபூஇபுறாகிம் காக்கா தேங்க்ஸ் உங்க புத்துணர்ச்சியான கமெண்ட்டு'க்கு :))
சபீர் காக்கா உங்களுக்கும் தேங்க்ஸ் :)
க்ரவுன் தஸ்தகீர் காக்கா ரொம்ப தேங்க்ஸ் :)
ஜாஹிர் காக்கா பசுமையான கமெண்ட்டுக்கு தேங்க்ஸ் :))
தாஜீதீன் காக்கா உங்களுக்கு ரொம்ப்ப தேங்க்ஸ் சொல்லனும்.. சொல்லிட்டேன் :))
அப்துல்மாலிக் தேங்க்ஸ் உங்க கமெண்ட்டுக்கு :))
அபூ ஆதில் தேங்கஸ் உங்க கமெண்ட்ஸ்'க்கு :))
சகோ.யாசிர் ரொம்ப்ப்ப்ப்ப்ப் ஜிவ்விட்டீங்க :)) தம்ஸ் அப் மூடியை ஓப்பன் பண்ண மாதிரி என்ன ஒரு ரீப்ளே!! ரொம்ப்ப்ப தேங்கஸ்..உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் துனையிருப்பானாக ஆமீன்..
சகோ.அபூபக்கர் உங்க கமெண்ட்ஸ்'க்கு தேங்க்ஸ் :)
வஸ்ஸலாமு அலைக்கும் அலாவுதீன் காக்கா உங்க கமெண்ட்ஸ்'க்கு ரொம்ப தேங்கஸ்..
அ.நிருபர்க்கு,
அப்புறம் நான் குறிப்பிட்ட பேங்க் 'க'வில் ஆரம்பித்து 'ரா'வில் முடிந்து இடையில் ஒரு? பெரிய பேரைக்கொண்டது.. அதனால் புகைப்படத்தை மாற்றி அமைத்தால் நல்லது..
வழக்கமாக நன்றியுரைக்கு பின்னர் எழுந்து செல்லாமல் காத்திருக்கவும் உங்கள் வீட்டுப் பிள்ளை நல்லவர் வல்லவர் தம்பி இர்ஷாத் இதோ வருகிறார் உங்களிடம் வாக்கு சேகரிக்க ஆகவே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கிறது !:) (இழுத்துட்டேன் வா தம்பி ஓட்டைப் பிரிப்போம்)
Post a Comment