தேர்தல் விவாதக் களம் - 3


அன்பிற்கினிய வாசக நேசங்களே :

இந்தத் தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்ல அரசியல் கட்சிகளுக்கே இல்லாத சுறுசுறுப்பு பறக்கும் படை படபடப்பு நமது தேர்தல் ஆணையத்திடம் காண முடிகிறது அவர்கள் முடுக்கிவிட்டிருக்கும் செயல்கள் இன்றையச் சூழலில் பெரும் விவாதமாக உருவெடுத்து கலக்குகிறது. இதோ உங்களின் பங்கிற்கு வாருங்கள் விவாதிக்கலாம்.

மிக முக்கியமாக விவாதிப்பவர்களோடு தனிமனித தாக்குதல் இன்றி நளினமாக கருத்துக்களை எடுத்து வையுங்கள் மறுப்புகளிருப்பினும் வாதிடுங்கள். வாசகர்கள் மத்தியில் தனிமனித அல்லது தரக்குறைவான வாதங்களோ அல்லது சாடலோ இருந்தால் அந்தக் கருத்துக்களை நெறியாளர் உடணடியாக நீக்கம் செய்திடுவாருங்க !

- அதிரைநிருபர்-குழு

தேர்தல் விவாதக் களம் - 3

இந்திய தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல் கெடுபிடிகள் - அவசியமானதா / அடாவடித்தனமா ?

தேர்தல் ஆணையத்தின் தேடுதல் வேட்டை (சோதனைகள்) பாதிப்புக்கு உள்ளாவது அரசியல்வாதிகளா / வணிகர்களா / மக்களா ?

35 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

தேர்தல் ஆணையம் ஆகயாத்தையும் தாண்டிய அதிகாரம் கொண்டுள்ளது என்று... திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சொல்லியிருக்கிறார்

sabeer.abushahruk சொன்னது…

ஓட்டு வங்கி என்று ஓர் கூட்டத்தை துட்டு கொடுத்து வாங்கி வச்சிருந்தாங்க! அந்த ஓட்டு வங்கிக்கும். ஓட்டு வாங்கிகளுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படுத்தியிருப்பது சரிதான்.

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
ஓட்டு வங்கி என்று ஓர் கூட்டத்தை துட்டு கொடுத்து வாங்கி வச்சிருந்தாங்க! அந்த ஓட்டு வங்கிக்கும். ஓட்டு வாங்கிகளுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படுத்தியிருப்பது சரிதான்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அப்படி வாங்குற பணத்தை வங்கில போட்டுவைப்பாங்களா?அல்லது வீட்டுக்குத்தெரிவிக்காம குடும்பதலைவர் அங்கில மறைச்சு வைச்சு டாஸ்மார்க் போவாரா? சும்ம கேட்க தோனுனிச்சு அதான் கேட்டேன் .இப்படிக்கு அப்பாவி தஸ்தகீர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

தேர்தல் ஆணையத்தின் ஒழுங்குமுறை சரிதான்.ஆனால் திருவாரூர் வேட்பாளருக்குக்கு தான் அதிக கெடுபிடியாகத் தெரிகிறது.ஸ்ரீரங்கம் வேட்பாளருக்கு அப்படித் தெரியவில்லை.அது ஒருபுறமிருக்க, அப்பொவெல்லாம் இருந்த விதிமுறைகளுக்கு சற்று அதிக மாற்றங்கள் தற்போது இருப்பதால் பலருக்கும் கெடுபிடி போலத்தெரிகிறது.எனினும் இந்தக் கெடுபிடிகள் அரசியல்வாதிகளுக்கு மட்டுந்தானிருக்கவேண்டும் இப்ப மட்டுமல்ல அரியணைக்கு அப்பறமும்! இது தவிர மற்ற வணிகர்களுக்கோ,இல்லெ பொதுமக்களுக்கொ அறவே இருக்கக்கூடாது.இப்போதைக்கோ அவங்க ஆட்சியைப்பெற நாம் பெற்ற சுதந்திரத்தை (ஆனால் இஸ்லாமியராகிய நாம் எதிலும் சுதந்திரம் பெற்றதாக தெரியலெ) ஒருமாத்திற்கு தேர்தல் முடியும் வரை தியானம் செய்ய வேன்டிய நிலைக்கு தள்ளி இருக்குது.அந்த அளவுக்கு பயணிகள் படும் சோதனைகள்,நம்ம சொந்த பணத்தை வங்கியிலே எடுக்க ஆயிரம் கேள்விகள்,கெடுபிடுகள்,பல்வேறு வர்த்தகங்கள் முடங்கிப் போய் இருக்கிறது பணப் பரிவர்த்தனையேதுமின்றி!இன்னும் பல பல தொடர்கிறது.... கெடுபிடி இருக்க வெண்டும் இருக்கவேண்டியவர்களுக்கு மட்டும், எல்லாருக்குமல்ல! என்பதை உணர்வுள்ள கமிசன் இனியாவது உணர வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சற்று முன்னர் வசித்தது இப்படியும் :-

வாகனம் மற்றும் வீடுகளைச் சோதனையிட்டு, தேர்தலில் வாக்குகளுக்காக பணப் பட்டுவாடா நடக்காமல் தடுக்க, அரசியலமைப்பின்படி தங்களுக்கு போதிய அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

"தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்றாலும் தடுக்கிறார்கள். வியாபாரிகள், பொதுமக்கள் பணம் எடுத்து சென்றால் அதை பறிமுதல் செய்கிறார்கள். எனவே தேர்தல் ஆணைய சோதனைக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் நம்பகமான தகவல் அடிப்படையில் மட்டுமே சோதனை மற்றும் வாகன சோதனைகளை நடத்த வேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சோதனைகள் அமைய வேண்டும் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணைய கெடுபிடிகள் முதல்வர் கருணாநிதியின் அறிக்கைக்கும் பதில் அளிக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வாகனம் மற்றும் வீடுகளைச் சோதனையிட்டுவதற்கு அரசியலமைப்பின்படி தங்களுக்கு போதிய அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பணப் பட்டுவாடா தொடர்பாக நிறைய தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க முடியாத காரணத்தால், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது.

வாகன சோதனைகளில் 23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், ஆனால் இதுவரை பணத்தைத் திருப்பித் தரக் கோரி ஒருவர் கூட தங்களை அணுகவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

டிஜிபி நியமனத்தில் பாரபட்சமில்லை...

மேலும், "சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் தேர்தல் நடத்த எந்த அதிகாரியையும் டிஜிபியாக நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. இதில், எந்தவித பாரபட்சமும் இல்லை.

இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்ப இயலாது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் தெரிவித்த கருத்துகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

தேர்தல் காலத்தில்,ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியையும் காவல்துறை அதிகாரிகளையும் முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு உண்டு," என்றும் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்மாலிக் சொன்னது…

தேர்தல் கமிஷன் இல்லையெனில் விடிய விடிய பிரச்சாரம் என்ற போர்வை அனாச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்படும், சிறுவயதில் பார்த்திருக்கிறோம் விடிய விடிய பிரச்சாரம் நடைபெறுவதை

வீட்டுச்சுவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது

கட்டவுட்டுகள், போஸ்டர்களின் ஆதிக்கம் குறைந்திருக்கிறது

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

தேர்தல் ஆனையத்தின் செயல்பாடு மக்கள் பார்வையில் அவசியமானது. அரசியல்வாதி பார்வையில் அடாவடித்தனமானது.

வாகன சேதனையில் மக்கள் பாதிப்பு என்பதேல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தேர்தல் நடைமுறையிருக்கும் சமையத்தில் மக்களும் வியாபாரிகளும் தங்களின் பயன திட்டங்களை மாற்றியமைப்பதே சரி. தேர்தல் 5 வருடத்துக்கு ஒரு முறை வருகிறது. இந்த கெடுபிடி 3 வாரங்களுக்கும் மட்டுமே. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு (கெடுபிடி) சரியே.

இப்பதான் சரியான ஆட்சி நடைப்பெறுகிறது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில்.. இது தான் ஜனநாயாகம்..

Yasir சொன்னது…

ஒட்டுக்காக பணம் செல்வதை தடுக்க வேண்டும்தான்...அதற்க்காக பணத்தை செலவழிக்க முடிவு செய்தவன் எப்பவோ அந்த பணத்தை அந்த அந்த லொலேஷனுக்கு எடுத்து சென்று இருப்பான் அவனுக்கு தெரியும் தேர்தல் கமிஷன் ஆப்பு வைக்கும் என்பது....இப்பொழுது மாட்டுவதெல்லாம் 90% வணிகர்கள் மற்றும் அப்பாவிகளின் பணம் தான்...ஒருவர் தனது குடும்பத்தில் ஒருவரின் ஆபரேஷனுக்கு கடன் வாங்கி எடுத்த சென்ற பணத்தையும் தேர்தல் கமிஷன் பரிமுதல் செய்ததாக பத்திரிக்கையில் படித்த ஞாபகம்...தேர்தல் கமிஷனுக்கு நெஞ்சுல மஞசா சோறு இருந்தா பணம் கொடுத்த வேட்பாளர்களின் வேட்புமனுவை ஆதாரம் இருந்தால் ரத்து செய்வோம் என்று அறிவிக்கட்டும்..அப்புறம் பாருங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

விவாதக் களத்திலுமா தேர்தல் கமிஷனோட கெடுபிடி !? யாரையுமே கானோமே !?

அதிரை முஜீப் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்!
எங்களுக்கு சமுதாய அக்கறை மட்டுமில்லை!. அதனூடே, எங்களுக்கு சமூக அக்கறையும் உள்ளது என்று, சரியான நேரத்தில் மிக சரியான ஒரு கருத்தை விவாதத்திற்கு வைத்தது பாராட்ட தக்கது.

தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு!. யாரின் கட்டளைக்கும் அடிபணிய வேண்டிய அவசியமில்லை!. ஆனால் ஒரு சில தேர்தல் கமிஷனர்களால் அது அசிங்கப்பட்டதும் உண்டு. சேஷன் காலத்தில்தான் அதன் அதிகாரத்தை நம்மால் அறியமுடிந்தது. அதே போல் தற்போதுள்ள குரைஷியும் அதை நிலைநாட்டுகின்றார். முதலில் இவருக்கு பாராட்டுக்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் பதற்றம் நிறைந்தது என்று அறிவிக்கும் அளவிற்கு நம் மாநிலம் கேவலப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. காஷ்மீரில் கூட இதுபோல் அறிவிக்கப்பட்டது கிடையாது.
தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கண்காணிக்கவும் 30 வெளிமாநில காவல்துறை ஐஜிக்களை தமிழகத்திற்கு அனுப்புகிறது தேர்தல் ஆணையம். 4200 வெளிமாநில அதிகாரிகள் தேர்தல் வேலைக்கு நியமிக்கப்பட்டதும் இதுவே முதல்முறை.

அந்த அளவிற்கு மிக மோசமாக வாக்காளருக்கு தேர்தல் இலவச அறிவிப்புக்களோடு, பணமும், மூக்குத்தி,புடவை, போன்ற இலஞ்சமும் கொடுக்கப்படுகின்றது. 108 ஆம்புலன்சிலும், காவல்துறை வாகனங்களிலும் கடத்தப்படுவதாக தகவல் கூறுகின்றன. ஆம்புலன்சின் பொணம் போகின்றதா அல்லது பணம் போகின்றதா என்றே தெரியவில்லை!.

அதிரை முஜீப் சொன்னது…

எனவே தேர்தல் ஆணையம் மட்டுமில்லை, அவர்களுக்கு துணையாக இலஞ்ச ஒழிப்பு போன்ற அணைத்து விஜிலன்ஸ் துறைகளும் தேர்தல் துறையுடன் பணியாற்ற கட்டளை பிறப்பிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரி குறைஷியே, வடமாநிலத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு பிரியாணி, மது கொடுத்து வாக்கை பெறும் இழிநிலை உள்ளதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றார்.

அழகிரி அமைச்சராக இருப்பதினால் அவரின் பயண செலவை கூட திருப்பி செலுத்த உத்தரவிட்டதும் குறிபிடத்தக்கது. மேலும் வாக்காளர் சீட்டை ஆணையமே நேரிடையாக கொடுப்பதால் அந்தவகையிலும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுப்பதில் பிரச்சனை. இரவிலும் சோதனை என்பதால் அதிலும் அரசியல் வாதிகளுக்கு பிரச்சனை. எனவே அவர்கள் கூக்குறலிடத்தான் செய்வார்கள்.

பறிமுதல் செய்யப்படுவது பணம், கோழிகளும் மட்டுமில்லை. அத்துடன் டெட்டனேட்டர்களும், சேர்ந்தே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே கலவரம் விளைவிக்க முற்படுவதும் சாத்தியம். எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமே.

சோதனை என்பது இங்கே மட்டும் நடைபெறவில்லை. கஸ்டம்ஸ், வருமான வரித்துறை, சிபிஐ, வரிஏய்ப்பு துறை என்று எல்லா துறைகளுமே வருடக்கணக்கில் செய்து கொண்டிருக்கின்றது. தேர்தல்துறை 5 வருடத்திற்கு ஒரு முறை செய்வதால் அது அதிகளவில் போகஸ் செய்யப்படுகின்றது. அவ்வளவே!.

ஒருசில பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் உண்மையே!. அவ்வாறு பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. இந்த அளவிற்கு நடவடிக்கையும் இல்லை என்றால், தேர்தல் நடைமுறை என்ற ஜனநாயகம் பகிரங்கமாகவே காசு கொடுத்து விபச்சாரம் செய்யப்படும்.

இதுபோல் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அரசியல் கட்சிகள் 5 வருடங்கள் முழுதும் வீடு தேடிவந்து கொடுக்கட்டும். அப்போது தேர்தல் துறையின் நடவடிக்கையை நாமே எதிர்த்து குரல் கொடுப்போம்!
அதிரை முஜீப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

108 ஆம்புலன்ஸில் செல்வது அடிபட்ட(வாக்காளனுக்கு) மருத்துவச் செலவுக்கான தொகைகள்... அவைகள் குறுந்தொகை, அருந்தொகை, என்று புறாநூற்றுக் காலத்து தொகைகள் தான்... வேறொன்றுமில்லை கனம் தேர்தல் அதிகாரி அவர்களே !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஸ்பெக்ட்ராம் ஊழலின் கணக்குப்படி அந்தப் பணத்தை ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக மாற்றினால் 3250 டன் எடை வருதாமே சரத்குமார் அளந்து பார்த்து நேற்று தேர்தல் பிரச்சரம் செய்திருக்கிறார் !

Yasir சொன்னது…

//இதுபோல் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை அரசியல் கட்சிகள் 5 வருடங்கள் முழுதும் வீடு தேடிவந்து கொடுக்கட்டும். அப்போது தேர்தல் துறையின் நடவடிக்கையை நாமே எதிர்த்து குரல் கொடுப்போம்!// ஆமா காக்கா குரல் என்ன உயிரையே :) கொடுப்போம்...இப்படி நடந்தால் பாஸ்போர்ட்டையும் கிழித்து போட்டுவிட்டு ஊரிலே உட்கார்ந்து விடலாம்

Mohamed Rafeeq சொன்னது…

தேர்தல் கமிசனின் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ..... அதே சமயம் அனைத்து தொகுதிகளும் பதற்றம் நிறைந்த தொகுதி என்று அறிவித்து இருப்பது வேதனை அளிக்கிறது ....இந்த அளவுக்கு தமிழகம் கேவலபட்டுல்லாத அல்லது கேவலபடுதபட்டுலாத என்று தெரியவில்லை

தினம் ஒரு திருக்குறள் போன்று தினம் ஒரு சட்டம் இயற்றுகிறது தேர்தல் கமிசன் ... ஆயிரம் சட்டம் போட்டு மக்களை காப்பதை விட ஒரே ஒரு சட்டம் போட்டு மக்களை மாக்களக்கும் ஆக்கும் அரசியல் வியதிகளிடம் இருந்து காப்பாற்றலாம் அதாவது

1(a) வேட்பாளர்கள் வாக்களர்களுக்கு அளிக்கபடும் வாக்குகள் தேர்தல் ஆணையம் முலம் அறிவிக்க வேண்டும்
(b) அடுத்த தேர்தலில் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது ,
அவர் நிறைவேற்றிய வாக்குகள் என்ன .....
நிறைவேற்றாத வாக்குகள் என்ன என்பதை வேட்பாளர் சமர்பிக்க வேண்டும் ...
அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை ஏற்ற்று கொள்ள வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும்

ZAKIR HUSSAIN சொன்னது…

தேர்தல் கமிசனின் நடவடிக்கையில் ஜனநாயகம் இருப்பதாக தெரியவில்லை. வியாபாரிகள் கொண்டு போகும் பணமும் பறிமுதல் செய்யப்படலாம். ஏன் டிராப்ட் / கேசியர் ஆர்டர் எடுத்து போககூடாது என கேட்கலாம். சில தொழில்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை.

மற்றவர்களின் பணத்தை ஆட்டை போடுவதில் வள்ளவர்களுக்கு வசதியை தேர்தல் கமிசன் செய்கிறது. பணத்தை கொண்டு போகாமலேயே " கொண்டு போகும்போது தேர்தல் கமிசன் ரெய்டுபா!!" என வாய்கூசாமல் பொய் சொல்லும் ஆட்கள் நிறைந்தது நமது "செந்தமிழ்நாடு"

தேர்தல் கமிசன் அதிகாரிகள் என்று ஆள் மாறாட்டம் செய்யும் கிரிமினல்களால் பிரச்சினை.

தேர்தல் கமிசனில் உள்ளவர்களுக்கு லஞ்சம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அசத்தல் காக்கா : தாங்கள் சொல்லியிருக்கும் யாவும் சாத்தியமே... !

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

பிடிபடும் பணத்தின் தொகையை சரியாக சொல்கின்றார்கள்? என்பதை எந்த கமிசன்(கமிசன் இல்லாமல்) சரி பார்க்கும்

அதிரை முஜீப் சொன்னது…

//தேர்தல் கமிசனின் நடவடிக்கையில் ஜனநாயகம் இருப்பதாக தெரியவில்லை. வியாபாரிகள் கொண்டு போகும் பணமும் பறிமுதல் செய்யப்படலாம். ஏன் டிராப்ட் / கேசியர் ஆர்டர் எடுத்து போககூடாது என கேட்கலாம். சில தொழில்களில் அது அவ்வளவு சாத்தியமில்லை.//

இதை மறுக்கின்றேன்!.
ஜனநாயகத்தை மீட்டெடுக்கவே, நிலை நிறுத்தவே தேர்தல் ஆணையம் இதுபோல் செய்கின்றது. இந்த சோதனை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே!. அந்த சட்டமும் இதே அரசியல்வாதிகளால் பாராளுமன்றங்களில் வகுத்து கொடுக்கப்பட்ட சட்டமே, இன்று அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.

மேலும் வியாபார பரிவர்த்தனையில் ஈடுபடுவோர்களிடம் ஆணையம் அத்துமீறுவதாக கூறவது அப்பட்டமான பொய்!. இதுவரை ஆணையம் 23 கோடிகள் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை யாரும் அந்த பணத்தை கேட்டு வழக்கு தொடரவில்லை என்று நேற்று நீதிமன்றத்திலும் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், முறையான ஆவணங்களை கையில் வைத்திருப்போரிடம் இவ்வாறு பறிமுதல் செய்யப்படவில்லை!. சோதனைக்குபின் அதே இடத்தில் கொடுத்தும் விடுகின்றார்கள். முறையான பணத்தையும் பறிமுதல் செய்தால் நாமும் அவ்வாறு குற்றம் சுமத்தலாம்.

ஒரு நல்ல செயல்பாடு நடக்கும்போது நாமும் ஒத்துழைப்போம். ஒரு படி அரிசி அளக்கும்போது ஒரு சில அரிசிகள் சிந்தலாம். அவ்வாறு சிந்தியாவற்றை மீட்டெடுப்பது சுலபம்.

அதிரை முஜீப் சொன்னது…

//பிடிபடும் பணத்தின் தொகையை சரியாக சொல்கின்றார்கள்? என்பதை எந்த கமிசன்(கமிசன் இல்லாமல்) சரி பார்க்கும் //

பணம் பிடிபட்டால் அதே இடத்தில் சரியாக பணத்தினை எண்ணி அதற்குண்டான ரசீதும் முறையாக வழங்கப்படுகின்றன!. ஒரு நபரோ இரு நபரோ மட்டும் இந்த சோதனையை செய்வதில்லை. இதை தேர்தல் கமிசனின் ஒரு டீமும், அதற்கு துணையாக மத்திய, மாநில காவல் படைகளும் செயல்படுகின்றாகள். ஆளும் கட்சியின் சார்புள்ள தொலைக்காட்சி, ஏடுகளில் இது மறைக்கப்படுகின்றது. இதை சாக்காக வைத்துகொண்டு சில விரோதிகள் தீங்கு செய்ய முற்படும். அதையும் கவனத்தில் கொண்டுதான் ஆணையம் செயல்படுகின்றது.

நீங்கள் சொல்வதுபோல் நாமும் இதை கண்டிப்பதாக வைத்துக்கொள்வோம்!. இதனால் பலனடையப்போவது யார்?. அரசியல் வாதிகளே!. ஊழலில் கொள்ளையடித்த பணத்தை கொட்டியிறைக்க வருகின்றார்கள். அளவுக்கு மீறி கையில் உள்ள பணத்தை கொட்டி இறைத்து வாக்காக மாற்றி அடுத்த ஆட்சியில் அறுவடை செய்ய வருகின்றார்கள்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் அதிக அளவில் மலம் உடலில் தங்கினால் அது எவ்வாறு தீங்கோ, அதேபோல் இந்த அரசியல் வாதிகளிடம் அதிகமாக தங்கிவிட்ட பணத்தைதான் கொட்டியிறைக்கவே வருகின்றார்கள்.

உழைத்ததை கொடுக்க வருவானேயானால், எந்த அரசியல்வாதியும் இரண்டு பொண்டாட்டியை வைத்திருக்க முடியாது!.

அதிரை முஜீப் சொன்னது…

குறிப்பு:

இவ்வளவு வக்காலத்து வாங்குரானே இவன் தேர்தல் கமிஷனிடம் கமிஷன் வாங்கியிருப்பானோ! என்று என்னத்தோண்டும். அதற்கு நான் பொறுப்பல்ல!. நான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரியும் அல்ல!. மாறாக உண்மையை உரக்க சொல்லும் உள்ளம படைத்தவன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அதிரை முஜீப் சொன்னது…
குறிப்பு:
இவ்வளவு வக்காலத்து வாங்குரானே இவன் தேர்தல் கமிஷனிடம் கமிஷன் வாங்கியிருப்பானோ! என்று என்னத்தோண்டும். அதற்கு நான் பொறுப்பல்ல!. நான் தேர்தல் ஆணையத்தின் அதிகாரியும் அல்ல!. மாறாக உண்மையை உரக்க சொல்லும் உள்ளம படைத்தவன்.///

அப்படிச் சொன்னா எப்புடி... தேர்தல் கமிஷன் சும்மா இருக்காதே... இன்னொரு வழக்குல எங்க மேல போடும் அந்தப் பழியெல்லாம் எங்களுக்கு வேனாம்... உரக்கச் சொல்லும் உங்களின் உறங்கும் சிந்தனைய தட்டி விடுகிறது...

இதுக்கெல்லாமா காசு வாங்கியிருக்கப் போறீங்க விடுங்க மூஜீப் ! :)) நான் பதுக்கச் சொல்ல்றேன்...

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்

இதுவரை பிடிபட்டவர்களிடம் விசாரித்தால் எந்த அரசியல் வாதி பணம் கொடுத்து அனுப்பினார் என்பது தெரிந்து இருக்குமே!

இதுவரை ஏன் எந்த அரசியல்வாதியும் தேர்தல் கமிஷனால் கைது அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுத்தமாதிரி தெரியவில்லையோ!

Abu Easa சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தேர்தல் கமிஷனின் சோதனையால் வனிகர்களும், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனென்றால், சிறிய வியாபாரிகளுடைய கொள்முதலும், விற்பனையும் குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடும். மேலும் அவர்கள் பரிவர்த்தனை செய்யும் தொகையும் குறைவே. எனவே சிறு வனிகர்கள் பதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே.

பெரும் வனிகர்களை எடுத்துக்கொண்டால் பன பரிவர்த்தனை என்பது மிகவும் குறைந்த தொகைக்கே செய்யப்படும். நம் நாட்டைப் பொருத்தவரை ஒரு ரொக்கப் பரிவர்த்தனை ரூ.20,000/-க்கு மேல் இருந்தால் அதற்காக வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட வேண்டும். ஆகையால் பெரும் வனிகர்களுடைய பரிவர்த்தனைப் பெரும்பாலும் செக் அல்லது டிடி மூலமாகத்தான் செய்யப்படுகிறது.

ஆகவே இந்த அடிப்படைகளை வைத்துப் பார்க்கும்போது வனிகர்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.

பொதுமக்களைப் பொருத்தவரை பெரும்பாலும் அதிகமான பனத்தை எடுத்துச் செல்வது மிக மிகக் குறைவே. ஏதேனும் அத்தியாவசியத் தேவைக்காக ஒருவர் பனம் எடுத்துச் சென்றால் நிச்சயமாக அவரிடத்தில் ஏதேனும் ஆவனம் இல்லாமல் இருக்காது.

தேர்தல் ஆனையத்தின் கெடுபிடி அறிந்த அரசியல்வாதிகள் வார்டுச் செயலாளர்கள் மூலமாக பன பட்டுவாடா செய்யப்போவதாக சொல்லப்பட்டது. அதற்கும் ஆப்பு வைத்தாற்போல் தேர்தல் ஆனையம் அடிமட்டம்வரை சோதைனை செய்வதால் அதிருப்தியில் அரசியல்வாதிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆனையத்தின் மீது வைப்பதாகவே நான் கருதுகிறேன்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்
ம'அஸ்ஸாலாம்

அதிரை முஜீப் சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

//இதுக்கெல்லாமா காசு வாங்கியிருக்கப் போறீங்க விடுங்க மூஜீப் ! :))

நான் பதுக்கச் சொல்ல்றேன்... //

நான் தான் முன்பே கூறினேனே!. கமிஷன் எதுவும் வாங்கலை என்று!. பின்ன எங்கே பதுக்குறது?. வாங்கினாதானே பதுக்குறதுக்கு!!

ஓ.......! நீங்க அந்த பதுக்க(மெதுவாக)வை சொன்ணீர்களோ!

அதிரை முஜீப் சொன்னது…

Shameed சொன்னது…

//இதுவரை பிடிபட்டவர்களிடம் விசாரித்தால் எந்த அரசியல் வாதி பணம் கொடுத்து அனுப்பினார் என்பது தெரிந்து இருக்குமே! இதுவரை ஏன் எந்த அரசியல்வாதியும் தேர்தல் கமிஷனால் கைது அல்லது வேறு எந்த நடவடிக்கையும் எடுத்தமாதிரி தெரியவில்லையோ! //

உண்மையில் இது ஒரு நல்ல கேள்வியே! இதே சந்தேகம் பலருக்கும் உண்டு!.

இதற்க்கு பதில்: அதுதான் ஜனநாயகம்!.

எதையும் எடுத்ததுமே கைது, என்று அதிகாரிகளால் செய்யமுடியாது!. வழக்குதான் பதிவு செய்யமுடியும்!. தேர்தல் ஆணையத்திற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது!. குற்றம் நீதி மன்றத்தில் நிருபிக்க படவேண்டும்!. நீதிமன்றம் தான் கைது செய்ய உத்தரவு இட முடியும்!.

அதே சமயம் ஒரு தகவலையும் இங்கு தருகின்றேன்!. இது வரையிலும் தேர்தல் நடைமுறை அத்துமீறல் தொடர்பாக சுமார் 50,000 வழக்குகள் (பண பறிமுதல் உட்பட) செய்யப்பட்டுள்ளது!. என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

இந்த வழக்குகளில் பெரும்பாலும், பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார்களின் அடிப்படையிலேயாகும். இதற்காக ஆணையம் பொதுமக்களை பெரிதும் பாராட்டியுள்ளது. இதற்காகவே தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டு, டோல் பிரி நம்பர் உட்பட வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஆதாரபூர்வமான வீடியோக்களையும் ஆணையத்தின் இனியதிலே புகாராக அப்லோட் செய்யவும் வசதிசெய்து தரப்பட்டுள்ளது!.

விழித்துடுங்கள் வாக்காளர்களே! விழித்துடுங்கள்!!. (எங்கேயோ கேட்டமாதிரி இருக்குல்ல!)

அதிரை முஜீப் சொன்னது…

இந்த 50,000 வழக்கும் நடைபெற்று முடிய சுமார் 5 வருடமாகிவிடும்!. அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் என்பது தனி விசயம்!.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

சற்று முன்னர் இப்படியும் வாசிக்க நேர்ந்தது !!

2ஜி ஸ்பெக்ட்ரம்...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து கேட்டதற்கு,

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.

இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை," என்றார்.

2ஜி விவகாரத்தால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, "சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்," என்றார் முதல்வர் கருணாநிதி.

Ahamed irshad சொன்னது…

கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. //

நான் அதிராம்ப‌ட்டின‌மே கிடையாது.. நீங்க‌ளெல்லாம் இவ‌ர் பேச்சை அப்ப‌டியே காப்பி பேஸ்ட் ப‌ண்ணால்.. க‌லிஞ்ச‌ர் சொன்னதை செய்வோம்,செய்வ‌தை சொல்வோம் என்ற‌ ர‌க‌ம்.. நாளைக்கே டி.எம்.கே வை அண்ணா கேட்டுக்கொண்ட‌தால் ந‌ட‌த்துகிறேன் என்று சொல்வாரோ..

Shameed சொன்னது…

//கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது//

அஸ்ஸலாமு அழைக்கும்

கனிமொழியும் என் மகள் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்!

Shameed சொன்னது…

உண்மையில் இது ஒரு நல்ல கேள்வியே! இதே சந்தேகம் பலருக்கும் உண்டு!.

இதற்க்கு பதில்: அதுதான் ஜனநாயகம்!.


அஸ்ஸலாமு அழைக்கும்

"பாம்பை பிடிக்கலாம்
ஆனால் பாம்பை அடிக்க கூடாது"

இதுவும் ஜனநாயகம் என்று சொல்லலாம்

sabeer.abushahruk சொன்னது…

அபு ஈஸாவும் முஜீபும் சொல்வதுபோல பொதுமக்களுக்கான் பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். ஓட்டு வங்கிகளில் பணம் போடப் போவது தடுக்கப்படுவதால் வங்கிகள் அதாவது ஓட்டு வங்கிகள் உடைக்கப்பட்டு வாக்காளர்கள் காசு வாங்காமல் மனசாட்சிக்கு பயந்து வாக்களிக்கும் வாய்ப்புகள் கூடும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ப்ரேக்கிக்கிங் நியூஸ் : இதுவரை எங்களுடைய வாக்காளர் வங்கியில் எங்களது பணத்தை டெபாசிட் செய்யத்தான் எடுத்துச் சென்றோம் இதனை தேர்தல் கமின் வழி மறித்து கொள்ளையடிக்கிறது - அப்பாவி வேட்பாளனுடைய புலம்பல்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இது வேற வாய்!

''தமிழக அரசிடம் கருத்து கேட்காமலேயே அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் மாற்றி இருக்கிறது. தேவையே இல்லாமல் வாகனங்களை சோதனை

இடுகிறார்​கள்.'' (கருணாநிதி அறிக்கை மார்ச் 22, 2011)

''கேள்வி கேட்பார் யாருமே நாட்டில் இல்லை என்று கவலைப்​படத் தேவை இல்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறது. யாரும் தில்லுமுல்லு செய்ய முடியாது. ஆகவே, பயப்படத் தேவை இல்லை.''

(2004, ஏப்ரல் 17-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் போது கருணாநிதி)

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இப்படித்தான் இன்றும் வாசித்தேன் :-

தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு முதலில் மூன்று கொடுத்து, ஒன்றைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அது தானாக வந்து சேரக் காரணம், பணமும் அண்ணனும்தானாம்!

'அத்தனை தொகுதிகளிலும் ஜெயிக்கவைப்பேன்’ என்று அதிரடியாக மார் தட்டினாலும், தெற்குப் பக்கம் இருவருக்கு மட்டும் சூனியம்வைக்கச் சொல்லிவிட்டாராம்!

திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பக்கபலமாக இருப்பது இரண்டு குழுக்கள். ஒன்று, உளவுப் பிரிவு போலீஸ். மற்றொன்று, 100 ஆசிரியர்கள் கொண்ட ஹை - டெக் குழு. ஐடியா உபயம், அமைச்சரின் உறவுக்கார உளவுப் புலியாம்!

ஜெ-வின் பிரசாரத்தை ப்ளான் போட்டு வழிநடத்துவது மூன்று ரா-க்கள் தான். எம்.நடராஜனின் தம்பி ராமசந்திரன், முன்னாள் பி.எஸ்.ஓ-க்களான ராமகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன்! ரா... ரா..!

முதல் இரண்டு நாட்கள் காரசாரமாகப் பின்னி எடுத்தார் அ.தி.மு.க-வின் ராதாரவி. வடிவேல் மீது தொடுக்கப்பட்ட வழக்குக்குப் பின்பு, மனிதர் அடக்கி வாசிக்கிறார்!

முதல்வர் கருணாநிதி பல வருடங்கள் பயன்படுத்திய தனது பிரசார வேனை மகள் கனிமொழிக்கு இம்முறை கொடுத்துவிட்டார்!

பிரசாரத்தில் குஷ்புவின் பக்கத்தில் நிற்கும் உடன்பிறப்புகளுக்கு ஒரு சந்தேகம். 'கையில் இந்தியில என்னமோ பச்சை குத்தி இருக்காங்களே... என்ன அது?’ என்பதுதான் அது. அதுக்குத்தான், இந்தியை எதிர்க்காமப் படிச்சு இருக்கணும்கிறது!