Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலக பெண்கள் தினமா பெண்கள் தினம்? 26

அதிரைநிருபர் | March 08, 2011 | , ,

பெண்கள் தினம் உருவான கதை:

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பலவகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நன்றி: நக்கீரன்

உலக பெண்கள் தினமா பெண்கள் தினம்?

என்னாடா தலைப்பை இன்ரஸ்டிங்கா போட்டுவிட்டு பெண்கள் தினம் எப்படி உருவானது என்ற செய்தியை மட்டும் முதலில் சொல்லியிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா… இதோ முக்கிய பகுதி.

பெண்கள் தினம் என்று ஒரு நாளை உண்டாக்கி பெண்களுக்கு அதிமுக்கியத்துவம் தந்துவிட்டதாக மேதாவி(?) மேற்கத்தியவாதிகளும், பெண்ணுரிமை பாதுகாவலர்கள் (?) என்று சொல்லிக்கொள்ளும் சில இந்திய அறிவுஜீவிகள்(?) நாடகமாடுகிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

முழுக்க முழுக்க ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரத்திற்குக் கூட பெண்களின் கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் போலி நாகரீக பெண்களை நினைத்து அழுவதா? சிரிப்பதா?

பெண் டென்னிஸ் விராங்கனையின் ஆடைக்கு வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் சொல்லும் வசனம் “ஆடையைப் பார்க்காதே; ஆட்டத்தை (விளையாட்டை) பார்” என்பது. பெண்கள் பெண்களாக வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும்.

நான் எப்படியும் இருப்பேன் என்று கலாச்சார  சீர்க்கேட்டால் அறைகுறை அடையுடன்  வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே ஆகமுடியும். அப்படியே கிடைக்கும் போலி உரிமை தான் கிழவியானாலும் தன் இளம் வயது அறைகுறை ஆடை புகைப்படங்கள் வளர்ச்சியடைந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தன் பேரன் மற்றும் கொள்ளுப்பேரன்மார்களின் காம உணர்ச்சி தூண்டுதலுக்கு அப்புகைப்படங்கள் காரணமாகிவிடப்போவது என்பது தான் பெண்ணுரிமையா?

இன்றைய நிலை, பெண்களை பாலியல் கொடுமை செய்து அதை மொபைல் போனில் படங்கள் எடுத்து ஆயிரக்கணக்கில் இணையத்தில் காணொளியை இலவசமாகவும், காசுக்காவும் வெளியிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் வக்கிரபுத்தி கொண்ட பொறம்போக்கு நாகரீக மிருகங்கள். இதை பற்றி எழுதவோ, குரல் எழுப்பவோ,  தடுக்கவோ முடியவில்லையே பெண் சுதந்திரம் என்று பேசும் அறிஜீவிகளாலே. கூகுல் குதிரை போன்ற தேடல் தளங்களும் தட்டியவுடன் உடனே வாரி வழங்குகிறது.

உலகிலேயே பெண் பாலியல் கொடுமைகளுக்கு பதிக்கப்படும் சமுதாயங்களில் முஸ்லீம் சமுதாயம் மிக மிக மிக குறைவே. ஏதாவது ஒரு நாள் இந்தியாவில் பல பகுதிகளின் பாலியல் கொடுமைகள்  நடைப்பெறவில்லை என்ற செய்தி வந்தால் அது அன்றைய தினத்தின் மிக ஆச்சரியமான செய்தியாகவே இருக்கும். அன்மையில் உத்தரபிரதேசத்தில் MLA ஒருவன் ஒரு ஏழைப் பெண்ணை கற்பழித்துவிட்டு திருட்டுப் பட்டம்கட்டி சிறையில் அடைத்த சம்பவம் நம் நாட்டில் பெண்ணுரிமை எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்துக்கொள்ளாத புள்ளுருவிகள் இஸ்லாத்தை பற்றி படுமோசமாக விமர்சனம் செய்துவருகிறார்கள். இந்த லட்சனத்தில் பெண்கள் சாதனை பட்டியல் என்று ஒரே ஒரே நாளில் மட்டும் தங்களின் செய்தி ஊடகங்களின் புகழ்பாடி செய்திகள் வெளியிட்டு
பெண்களிடம் நாடகமாடி காலாச்சார சீரழிவை தினிக்கிறார்கள் மேற்கத்திய போலி நாகரீக மேதாவிகளின் புரோகிதர்கள் உலகெங்கும் ஏன் அதிகம் நம் நாட்டிலும்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, இஸ்லாம் பெண்ணடிமையை தூண்டுகிறது என்றேல்லாம் இன்று புலம்பி பிழைப்பு நடத்திவரும் மேதாவிகளுக்கு பதில் தரும் விதமாக, உலக புகழ் பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் சகோதரர் காலித் யாஸீன் அவர்கள் ஆற்றிய செற்பொழிவுகளிலிருந்து ஒரு சில பகுதியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். (இந்த காணொளி நம் அதிரைநிருபரில் ஏற்கனவே பதிந்திருந்தாலும், மீண்டும் உங்கள் பார்வைக்கு சமையம் கருதி மீள்பதிவு செய்கிறோம்.)




இச்சொற்பொழிவு ஆங்கிலத்தில் இருந்தாலும், குறைந்த ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கும் புரியும்படி உள்ளது. உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவை அனைவரும் நிச்சயம் கேட்க வேண்டும். இறைவனின் மார்க்கமான இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மார்க்கம் என்பதை மேற்கத்திய கலாச்சார மேதாவிகள் புரிந்துக்கொள்ளட்டும்.

போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு, இஸ்லாமியச் சட்டபுத்தகமான திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

இஸ்லாத்தினைக் குறை கூற முற்படுமுன் தங்களது வழிபாட்டிற்குரிய மதங்கள் பெண்ணுரிமை பற்றி என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் தாங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விடுவர்.

பிறப்பதில் உள்ள உரிமை, அறிவைப் பெருக்குவதில் உரிமை, கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப், திருணத்தில் உரிமை, திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை, வாரிசு உரிமை என்று எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "மனிதர்களிலேயே நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?" என்று மூன்று முறை திரும்பத்திரும்ப கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் "உனது தாய்தான்!" என்றும் நான்காவது முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் எனும் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் தங்கள் வீட்டை ஆட்சிசெய்து ஒவ்வொரு நாளையும் கொண்டாடி சந்தோசமாக இருந்துவருகிறார்கள். இஸ்லாத்தில் பெண்ணுரிமை பற்றி அறிய வேண்டுமா? நடிகை குஸ்பு, எழுத்தாளர்(?) தஸ்லீமா நஸ்ரின், சல்மான் ருஸ்டி (பல வருடங்களாக இவர்களை பற்றியே பேசுறானுக, வேற ஆளுங்க இன்னும் கிடைக்கல போல) போன்ற பெயர் தாங்கிகளிடம் போய் இன்னும் கேட்க வேண்டாம். இனியாவது இஸ்லாமிய மார்க்க நெறிகளை முறையாக கடைப்பிடித்துவரும் பெண்களிடம் முதலில் கேளுங்கள் இஸ்லாம் கொடுத்திருக்குக்கும் உரிமைகளை, பிறகு வாருங்கள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும்.

(தகவல்கள் சேகரிக்கும்போது உதவிய இஸ்லாம்கல்வி மற்றும் சத்தியமார்க்கம்  என்ற இரண்டு இணையதளங்களுக்கும் மிக்க நன்றி)
 

-- அதிரைநிருபர் குழு.

26 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தப் பகிர்வில் இடம் பெற்றுள்ள காணொளியை மூவரிடம் காட்டினேன் அதில் முதலாமவர் சொன்னார் இம்மாதிரியான பேச்சுக்களை இதுவரை யாரும் அவருக்கு காட்டித் தரவில்லை... இரண்டாமவர் சொன்னது இதேபோல் எத்தனையோ பார்த்தாகிவிட்டது... மூன்றாமவர் "sorry brother"ன்னு சொல்லிட்டு சென்றுவிட்டார்...

இது இன்று நான் வேரொரு வேலையாக சென்றிருந்த மற்ற அலுவலகத்தில் நடந்தது நிகழ்வு அந்த மூவரும் சலாம் கூறிய பின்னர் "பெண்கள் தின வாழ்த்துக்கள் சொல்ல வந்தவர்கள்"

sabeer.abushahruk said...

//இஸ்லாமிய பெண்கள் தங்கள் வீட்டை ஆட்சிசெய்து ஒவ்வொரு நாளையும் கொண்டாடி சந்தோசமாக இருந்துவருகிறார்கள்//

ஒப்புத்துக்கறோம் ஐயா, நெசத்ததேன் சொல்றீக!
அதுவும் "ஆட்சிசெய்து"வில் எல்லோரோட பசங்களோட உம்மாவயும் ரொம்பத்தான் கூல் பண்றீய. இப்ப இங்கே "பார்த்தியலா, பார்த்தியலா"வில் மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்.

//கொண்டாடி சந்தோசமாக இருந்துவருகிறார்கள்// இப்ப ஆரு இல்லேன்னா? (ஹமீது, ஆண்கள் தினம் ஏதும் இல்லையாப்பா?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிதியமைச்சகத்தின் கவனம் திசை திரும்பிடாமல் இருந்திடத்தான் எப்போதுமே "இதப் பார்த்தியலா" "அதப் பார்த்தியலா" அள்ளோலம் தான் இருப்பினும், வீட்டில் என்றுமே மகளிர் தினம்தான் !

"உம்மா"ன்னா "சும்மா"வா !?

sabeer.abushahruk said...

//"உம்மா"ன்னா "சும்மா"வா !//
யம்மா!!! "பம்மா"திய

எது எப்படியோ, இத்தினம் எனக்கு நல்ல நாளே... என் இரண்டாவது மகள் பிறந்த தினம் என்பதாலே ( no 'happy birthdays' or stuff like that) சோனி ஸைபர் ஷாட்டாமே... எவ்ளோவ்பா?

Yasir said...

நல்ல சிந்தனை ....இந்தியன் ஏர்லைன்ஸ் டொரோண்டாவிற்க்கு பெண்கள் முழுவதுமாக இயக்கும் விமானத்தை இன்று விடுகிறது...பயணிகள் இருக்கும் விமானமா ? என்பது எல்லாருடைய கேள்வி...ஆம் என்றால் ”கலிமா” சொல்லிவிட்டுதான் அமரனும்.....போலித்தனமான பெண்ணுரிமை கொடுத்து...பெண்களை கெடுத்து கொண்டு இருக்கும்...வளர்ந்த முட்டாள் நாடுகள் இஸ்லாதில் பெண்கள் எப்படி மதிக்கபடுகிறார்கள் என்பதை பார்க்க மறுக்கின்றன...வாழ்த்துக்கள் அதிரை நிருபர்

Yasir said...

/சோனி ஸைபர் ஷாட்டாமே... எவ்ளோவ்பா?/...ஒரு ஆப்பிள் ஜபெட் வாங்கி கொடுத்துடுங்க காக்கா....நல்ல யூஸ்ஃபுல்....ஒன்லி 630$ 32ஜிபி...they can use as e-book reader as well

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஒப்புத்துக்கறோம் ஐயா, நெசத்ததேன் சொல்றீக!
அதுவும் "ஆட்சிசெய்து"வில் எல்லோரோட பசங்களோட உம்மாவயும் ரொம்பத்தான் கூல் பண்றீய.//

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா..

நம்மவூட்டுல உள்ள பெண்களுக்கு ஐஸ் வைக்கிறதுல தப்பே இல்லை காக்கா. ஐஸ் வச்சாதான் சூடா சாப்பாடு கிடைக்கும். ஆட்சி செய்றவங்கலாச்சே.

கட்டுரை பொதுவாக அலசப்பட்டுள்ளது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கொண்டாடி சந்தோசமாக இருந்துவருகிறார்கள்// இப்ப ஆரு இல்லேன்னா? (ஹமீது, ஆண்கள் தினம் ஏதும் இல்லையாப்பா?) ///

ஹமீது காக்கா, உலக ஆண்கள் தினம் எப்போது என்று இன்னுமா தேடுறீங்க?

sabeer.abushahruk said...

அலாவுதீன்

//ஒரு ஆப்பிள் ஜபெட் வாங்கி கொடுத்துடுங்க காக்கா....நல்ல யூஸ்ஃபுல்....ஒன்லி 630$ 32ஜிபி...they can use as e-book reader as well//

இந்த பின்னூட்டம் என்னுதில்லை. (வேறு யாராவது ஏழைங்க ஐடியா கொடுங்கப்பா.)
யாசிர்: ":)"

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Yasir சொன்னது… ஒரு ஆப்பிள் ஜபெட் வாங்கி கொடுத்துடுங்க காக்கா....நல்ல யூஸ்ஃபுல்....ஒன்லி 630$ 32ஜிபி...they can use as e-book reader as well //

சகோதரர் யாசிர் காஸ்ட்லி வாப்பா

Yasir said...

கவிகாக்கா....இந்த பின்னூட்டம் உங்கள் பார்வைக்கு அல்ல....நீங்க ஏன் படித்தீங்க...இது மகளுக்கு....உங்களுக்கு கட்டுபடி ஆக கூடிய எள்ளுருண்டைதான் காக்கா இது

அலாவுதீன் காக்கா...எதிர்காலத்தில் எல்லாமே இ-புக் மயம்தான் (ஜாஹிர் காக்கா ஆதரவு குடுங்க பிலீஸ் )..இப்பவே நாம் குழந்தைகள் விழிப்புணர்வு பெறட்டுமே என்ற நோக்கில் சொன்னேன்

Yasir said...

தாஜுதீன் சொன்னது…

//சகோதரர் யாசிர் காஸ்ட்லி வாப் //// இல்ல தாஜிதீன் ....மடிக்கணியை விட பெட்டர்தான் இது படிக்கு குழந்தைகளுக்கு...சைபர் ஷாட்டுக்கு..இந்த இ-நோட்டு எவ்வளவோமேல்....

sabeer.abushahruk said...

//(ஜாஹிர் காக்கா ஆதரவு குடுங்க பிலீஸ்// கொடுத்திட கிடுத்திடப் போறான்!

எல்லாரோட கம்ப்யூட்டர்லயும் 'மதர் போர்ட்' இருக்கும்னா அவனோடதிலே 'கிரேன்ட் மதர் போர்ட்' இருக்கிற அளவுக்கு பழசுங்கோ!

(உசுப்பேத்னாத்தானே வர்ராய்ங்க

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர்: iPADஐ குழந்தைகள் குத்தி குத்தியெடுக்க ஒருவிரல் போதும்தான் அதுவே இன்றைய சூழலில் குழைந்தைந்த அதே விரலைதான் காட்டுகின்ற எல்லாவற்றிற்குமே ! "நீ"ங்கள் எனபத்ற்கும் சேர்த்தே !

இதில் பாதுகாப்பான வலைமேய்ச்சல் என்று சொன்னால் iPADஐ பரிந்துரைக்கலாம்... இதற்கு காரணங்கள் நிறைய இருந்தாலும்...

Yasir said...

யெஸ் அபு இபுராஹிம் காக்கா ....பள்ளி செல்லும் பெரிய குழந்தைகளுக்கு 7+ இது உகந்தது....பெரும்பாலான புத்தகங்கள் இப்பொழுது e-book ஆகி கொண்டு இருக்கிறது.. அதை படிக்க e-reader வேண்டும்.கால்குலேட்டர் எவ்வாறு தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதோ...அதேபோல் இதுவும் இன்னும் 5 வருடங்களில்.....”வாப்பா எனக்கு வரும்போது இ-ரீடர் வாங்கி வாங்க “ என்று நம் பிள்ளை சொல்லும் காலம் வெகு விரைவில் இல்லை......வலை மேய்ச்சலுக்கும் உகந்தது ( எப்படியோ ஒரு பீஸை கவிகாக்காவிடம் தள்ளி விட்டு இம்மாத டார்கெட்டில் சேர்த்து விடலாம் என்றால் விட மாட்டீரிங்களே )

sabeer.abushahruk said...

//எப்படியோ ஒரு பீஸை கவிகாக்காவிடம் தள்ளி விட்டு இம்மாத டார்கெட்டில் சேர்த்து விடலாம் என்றால் விட மாட்டீரிங்களே )//

உங்களுக்காகன்னா வாங்கிடலாம்தான். இன்ஸ்டால்மென்ட் ப்ளான் ஏதும் உண்டா? அதிரை நிருபருக்கு ஏதும் கமிஷன் உண்டா? (அலாவுதீன் எங்கே போனான்னு தெரியலயே.)

sabeer.abushahruk said...

அலாவுதீனுக்கு ஃபோன் பண்ணி அபுதாபி தூக்கத்தையும், ஜாகிருக்கு எஸ் எம் எஸ் அணுப்பி மலேசிய மவுனத்தையும் களைச்சாச்சு.

யாசிரும் அபு இபுறாகீமும் ஜூட் விடாமல் அதிரை நிருபர் எல்லைக்குள்ளேயே இருக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பெண்களைப் பற்றியல்லவா பேசிகிட்டு இருந்தோம் அதுக்குள்ள செத்த வாங்களேன்னு கூப்பிட்ட மாதிரி எங்க்யோ போற மாதிரி இருக்கே !?

ஆகவே.. பெண்களைப் பற்றி பேசுவதால், கணினியின் மவுசு கொஞ்சம் மக்கர் பன்னா இந்த மவ்சுக்கு வந்த மவுசாப் பாறேன்னு சொல்ற மாதிரியில இருக்கு இங்கே !

கணினியை இயக்குவதற்கு சமையல் குறிப்பு ஸ்டைலில் சில..

- முதலில ஹோல்டரில் பிளக்கை சொருவவும்..

- சில வினாடிகள் கழித்து கம்புயூட்டரின் பொத்தானை அழுத்தி ஆன் செய்யவும்.. (எந்த பொத்தான்னு கேட்டா உங்களுக்கு சமையல் தெரியலை சாரி கணினிபற்றி தெரியலை).

- சிறிது நேரம் காத்திருங்கள் அவசரப்பட்டு வேற எதனை அழுத்தி விடாதீர்கள்... (இந்த இடைப்பட்ட நேரத்தில் சீரியல் பார்த்துக்கலாம் அது அவரவரின் கம்புயூட்டரின் வேகத்தைப் பொருத்தது)...

- சில நேரங்களில் நேரடியாக வெந்திடும் சாரி வந்திடும் அதற்கு பாஸ்வோர் ஏதும் போடத் தேவையில்லை...

இப்படித்தான் கணினி சொல்லிக் கொடுக்கனுமா ? மீதமுள்ளதை யாராவது தொடர்ந்தால்தான் என்னவாம் !? ....

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இவங்க உண்மையா பெண்களை மதிப்பதாய் இருந்தால் மூன்று முறை தேதி மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது, ஆண்கள் தினம் ஏதும் இல்லையாப்பா?) //



அஸ்ஸலாமு அழைக்கும்

கேள்வியை பார்த்தால் மத்தவங்களுக்குன்னு ஒரு நாலு இருக்கா என்ன ?

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//ஹமீது காக்கா, உலக ஆண்கள் தினம் எப்போது என்று இன்னுமா தேடுறீங்க? //


அஸ்ஸலாமு அழைக்கும்

பெண்கள் எல்லாம் ஒன்னுகூடி அவங்க தினத்தை கொண்டாடும் அதே தினத்தில் நாமளும் ஆண்கள் தினத்தை கொண்டாடிட வேண்டியதுதான் ஏன்னா அவங்க பிசியா இருக்கிற அந்த கேப்பில் நமக்கு கொஞ்சம் ப்ரீடம் கிடைக்கும் அல்லவா ?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மகளிர் தினம் என்பது வியாபார தினமாக மாறிக்கொண்டு இருக்கிறது. எல்லோருக்கும் தினம் கண்டுபிடித்தது. பணமுதலைகளின் வியாபாரம் பெருகத்தான். இஸ்லாத்தில் மட்டும்தான் மகளிர்க்கு பூரண சுதந்திரம் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியதற்கு வாழ்த்துக்கள்!.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன்:33:59)

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் : சபீர், யாசிர், அபுஇபுறாஹீம் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
*****************************************************************************************
sabeer.abushahruk சொன்னது…
அலாவுதீன்//ஒரு ஆப்பிள் ஜபெட் வாங்கி கொடுத்துடுங்க காக்கா....நல்ல யூஸ்ஃபுல்....ஒன்லி 630$ 32ஜிபி...they can use as e-book reader as well//இந்த பின்னூட்டம் என்னுதில்லை. (வேறு யாராவது ஏழைங்க ஐடியா கொடுங்கப்பா.)
யாசிர்: ":)"
Yasir சொன்னது…
அலாவுதீன் காக்கா...எதிர்காலத்தில் எல்லாமே இ-புக் மயம்தான் (ஜாஹிர் காக்கா ஆதரவு குடுங்க பிலீஸ் )..இப்பவே நாம் குழந்தைகள் விழிப்புணர்வு பெறட்டுமே என்ற நோக்கில் சொன்னேன்
அபுஇபுறாஹீம் சொன்னது…
இதில் பாதுகாப்பான வலைமேய்ச்சல் என்று சொன்னால் iPADஐ பரிந்துரைக்கலாம்... இதற்கு காரணங்கள் நிறைய இருந்தாலும்...
Yasir சொன்னது…
யெஸ் அபு இபுராஹிம் காக்கா ....பள்ளி செல்லும் பெரிய குழந்தைகளுக்கு 7+ இது உகந்தது.... ( எப்படியோ ஒரு பீஸை கவிகாக்காவிடம் தள்ளி விட்டு இம்மாத டார்கெட்டில் சேர்த்து விடலாம் என்றால் விட மாட்டீரிங்களே )
sabeer.abushahruk சொன்னது…
அலாவுதீனுக்கு ஃபோன் பண்ணி அபுதாபி தூக்கத்தையும், ஜாகிருக்கு எஸ் எம் எஸ் அணுப்பி மலேசிய மவுனத்தையும் களைச்சாச்சு. யாசிரும் அபு இபுறாகீமும் ஜூட் விடாமல் அதிரை நிருபர் எல்லைக்குள்ளேயே இருக்கவும்.
********************************************************************************

சகோ. அபுஇபுறாஹீம் மகளிர்தினம் திசை மாறுகிறது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் என்னையும் அழைத்துவிட்டீர்கள். நானும் வந்துவிட்டேன். இந்த இழைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் என்னுடைய கருத்தை தெரியப்படுத்தி விடுகிறேன்.

சகோ. யாசிர் எப்படியாவது ///( எப்படியோ ஒரு பீஸை கவிகாக்காவிடம் தள்ளி விட்டு இம்மாத டார்கெட்டில் சேர்த்து விடலாம் என்றால் விட மாட்டீரிங்களே)/// விற்றுவிடலாம் என்று பார்க்கிறீர்கள்.

உங்கள் அனைவரின் பின்னூட்ட விவாதத்தையும் படித்தேன். ஏற்கனவே நான் சிக்கனம் கடைபிடிப்பதில் நிறைய கூறியிருந்தேன். ஒரு பொருள் வீட்டிற்கு வாங்கும்பொழுது எந்தப்பொருளாக இருந்தாலும் நமக்கு அவசியமா அவசியமில்லையா என்று ஆய்வு செய்யப்பட வேண்டும். அந்தப்பொருளினால் நமக்கு பலன் கிடைக்குமா? அல்லது எல்லோரிடமும் இருக்கிறது என்று வாங்கி ஒரு துணியால் சுற்றப்பட்டு பெட்டியில் தூங்குமா என்று பலவகையிலும் ஆராயப்பட்டுத்தான் வாங்க வேண்டும்.

பிள்ளைகள் மேல் பாசம் வைத்திருக்கிறோம் என்பதற்காக வயதிற்கு மீறியோ அல்லது பயன்படுத்த தெரியாமலோ பொருள்கள் வாங்கிக்கொடுக்கக்கூடாது. மேலும் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த வாக்குறுதியும் கொடுக்கக்கூடாது. குறைவான பட்ஜெட்டில் வாக்குறுதி கொடுத்து அத்தியாவசியமான செலவுகள் செய்யப்பட வேண்டும்.

சகோ. யாசிர் ஏற்கனவே தங்கள் செல்ல மகனுக்கு 700திர்ஹத்திற்கு பொருள் வாங்கிக்கொடுத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நாம்தாம் வெளிநாடுகளில் இருக்கிறோம் என்று நமது பிள்ளைகளுக்கு நிறைய செல்லம் கொடுத்து வீணாக்குகிறோம் என்று நினைக்கிறேன். சிக்கனம் சிக்கனம் சிக்கனம் சுகம்தரும். ஒரு பொருள் இல்லையென்றால் வாழ்க்கை நடக்காது என்றால் அதற்காக செலவழிப்பது நலம்தரும்.

என் பிள்ளைகளுக்கு கம்யூட்டர் இருக்கும்பொழுது லாப்டாப் வேண்டும் என்றார்கள். என் அருகில் இருந்த சகோதரரிடம் இதுபற்றி சிஸ்டம் இன்ஜினியரிடம் ஆலோசிக்கும்பொழுது (தேவையா? தேவையில்லையா? என்று) வேண்டாம் பிள்ளைகள் எல்லோரும் சண்டையிட்டு லாப்டாப்பை ஒரு வழி பண்ணிவிடுவார்கள். நன்றாக விபரம் வரும் நேரத்தில் வாங்கி கொடுங்கள் என்று எனக்கு ஆலோசனை கூறினார்.

/// அலாவுதீன் காக்கா...எதிர்காலத்தில் எல்லாமே இ-புக் மயம்தான்.///

எதிர்காலத்திற்காக இப்பொழுதே வாங்க வேண்டும் என்றால் கம்யூட்டர் வந்து எத்தனை காலம் ஆகிவிட்டது. உதாரணத்திற்கு அதிரையில் டிவி இல்லாத வீடு கிடையாது. கம்யூட்டர் விரல் விட்டும் எண்ணும் வீடுகளில்தான் இருக்கிறது. கம்யூட்டர் வாங்காமல் இருப்பது சிக்கனத்திற்காக இல்லை. கம்யூட்டர் பயன்பாடு என்ன என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை, அதனால்தான்.

அவசியம், அத்தியாவசியம் என்று வரும்பொழுது நாம் பிளைட்டை கூட விலை கொடுத்து வாங்கலாம். (ஒரு காலம் வரும் எல்லோருக்கும் ஒரு குட்டி பிளைட் சொந்தமாகிவிடும் - கார் இருப்பது போல்).

sabeer.abushahruk said...

தீர்ப்பு சொல்லியாச்சு சங்கத்தை களைங்க கைப்புள்ளைகளா (கடைசி வரை ஸைபர் ஷாட் எம்புட்டுனு ஆருமே சொல்லலையப்பா)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என்னமோ ஆன்(ண்)லைனை அதிகம் உபயோகிப்பது
பெண்களாகத்தான் இருக்கிறார்கள். கவணம் அவசியம்.அதிலும் வசியம் உள்ளது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா கடிக்கிறேன்னு நினைக்க கூடாது... சைபர் ஷாட்(டுன்னா) பூஜ்ஜியத்தின் நிழல்தானே ! ஆதலால் பயப்படும் விலை ஒன்றுமில்லை, சோனியில் நல்லவைகள் இருக்கிறதே... விலையை இங்கே சொன்னால் அட இவ்வ்ளோவான்னு கேட்பாங்களா ? அட இவ்வ்ளோதானா ?ன்னு சொல்லுவங்களான்னு யோசிச்சுடேன் அதான் லேட்டு !

கிரவுன்(னு) : கடைசிவரைக்கு இவர்களும் அதிரைநிருபர்கள் ங்கிற பக்கம் வரவேயில்லையே... ஏன்(டா)ப்பா ? பேச வேண்டியவங்ககிட்ட பேசவா ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு