Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போடுங்கம்மா ஓட்டு ! 42

அதிரைநிருபர் | March 27, 2011 | , ,

ஊர்களுக்குள் ளெல்லாம்
கார்களின் ஊர்வலம்
வேட்பாளர் வாக்காளர்
திருவிழா ஆரம்பம்!

ஓட்டுக் கேட்கும்
கூட்டமொன்று
வீட்டு வாசல் வரும்
மாட்டு வாயில் தீணியாக
கேட்டதெல்லாம் தரும்!

கொசுத் தொல்லையையும்
மீறும்
வேட்பாளர்களின்
சொகுசுத் தொல்லைகள்!

முத்திரை குத்துமுன்
புத்தியை செலுத்தனும்
அத்தனை பேரையும்
ஆராய்ந்து பார்க்கனும்!

உடன்பிறப்பைத் தூக்கி
கடல்பரப்பில் போட்டாலும்
கட்டையிலே போகாமல்
கட்டுமரமா மிதப்பாராம்!

ரத்தத்தின் ரத்தமோ
பித்தத்தின் உச்சத்தில்
கொடநாடு போகுமுன் - இவர்பாதம்
தொடநாட வேண்டுமாம்!

தங்கபாலு ஒரு
தண்ட ஆளு!
எத்தனைக் காத்திருப்பாரோ
மத்தியிலிருந்து முடிவு வரவும்
மண்டையின்
மத்தியிலிருந்து முடி வளரவும்!

கேப்டனுக்கு எதிரா
யாரு நின்னா என்ன?
பாகிஸ்தான் தீவிரவாதின்னு
சொன்னா போதும் ஜெயிக்க!

மருத்துவர் காட்டில்
மாறி மாறி மாரி
தாவி தாவி ஐயா
தலை சுத்து தைய்யா!

வைகோவுடன் கைகோர்க்க
ஆருமில்லே அய்யகோ,
காவிக்குள்ளே ஐக்கியமானா
கருப்புக்குள்ளும் களங்கம்!

எத்தி வைக்க வேண்டிய
இயக்கங்க ளெல்லாம்
இளைஞர்களுக் கிடையே
வத்தி வைக்கின்றன!

புத்தி சொன்ன தேதி போய்
குத்திக் கொன்ன சேதிகள்
பத்தி பத்தியாய்
பத்திரிக்கையில்!

மத்தியிலும் மாநிலத்திலும்
அத்தி பூத்ததுபோல்
குத்தியிருக்கும் நம்மவர்
கத்திப் பேசினாலோ
லத்தி யடிதான்!

அதுவின் ஓட்டு அதுக்கு
இதுவின் ஓட்டு இதுக்கு
நம்ம ஓட்டு நமக்கா -இல்லை
நமக்கு நாமே ஆப்பா?

-- சபீர்
--Sabeer.abuShahruk

42 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆகவே ! எங்களின் ஆஸ்தான கவி அதிரைக் கவி அவர்களுக்கு உங்களின் பொன்னான வாக்குகளை அளித்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...

அதெப்படி காக்கா இந்த அரசியல் வியாதிங்க மட்டும் இப்புடி காமெடி பீஸா போயிடுறாய்ங்க தேர்தல் சமயத்தில் !?

//எத்தி வைக்க வேண்டிய
இயக்கங்க ளெல்லாம்
இளைஞர்களுக் கிடையே
வத்தி வைக்கின்றன!//

வேதனையான இச்சூழல் என்றுதான் மாறுமோ !?

அதிரை முஜீப் said...

//புத்தி சொன்ன தேதி போய்
குத்திக் கொன்ன சேதிகள்
பத்தி பத்தியாய்
பத்திரிக்கையில்!

மத்தியிலும் மாநிலத்திலும்
அத்தி பூத்ததுபோல்
குத்தியிருக்கும் நம்மவர்
கத்திப் பேசினாலோ
லத்தி யடிதான்!

அதுவின் ஓட்டு அதுக்கு
இதுவின் ஓட்டு இதுக்கு
நம்ம ஓட்டு நமக்கா -இல்லை
நமக்கு நாமே ஆப்பா?//

கவிதையிலும் சாட்டையடி!

சந்தி சிரிக்கும் சமுதாயத்திற்கு,
முந்திக்கொள்ள ஆசையில்லையா?

பதில் சொல்லுங்கள் என் சமுதாய கண்மணிகளே!

Unknown said...

அப்ப்பப்பா ................என்ன ஒரு வார்த்தை விளையாட்டு
எப்பப்பா ....................எப்படி ஓடுது துள்ளிக்கிட்டு
நாக்கு தடுமாறுது படித்திட்டு
அசத்தல் கவிகாக்கவின் ஓட்டு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//முத்திரை குத்துமுன்
புத்தியை செலுத்தனும்
அத்தனை பேரையும்
ஆராய்ந்து பார்க்கனும்!//

கவி காக்கா, மேல் சொன்னது போல் கட்டுரையில் சொல்லியும் புரியவைக்கமுடியவில்லை, நம் மக்களுக்கும்.

இப்படி கவிதையில் சொல்லும்போதாவது புரியுதா என்று பார்க்கலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒருத்தரையும் விட்டுவைக்கவில்லை, கவிதையால் இப்படியும் (ஓட்டுப்) போட்டுத் தாக்கலாமா?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அதிரை கவி சபீரின் கவியில்: அரசியில் கூத்தாடிகள் அத்தனைபேரும் காமெடியாகி வலம் வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் இல்லை எல்லா நேரத்திலும் கைதேர்ந்த நடிகர்கள்தான் இவர்கள்: சொன்னதைத்தான் செய்வார்கள், சொல்லாததையும் செய்வார்கள் (இரண்டுமே தனக்கு எவ்வளவு சொத்து சேர்க்கலாம் என்பதே).

அரசியல்வியாதிகள் தன் நலத்தை முதலில் பார்த்து விட்டு பிறகு நேரம் இருந்தால் மக்கள் நலத்தை பார்ப்பார்கள்????. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அரசியல்வியாதிகளை மட்டும் கொழுக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

எல்லாவற்றிற்கு ஒரு நேரம் இருக்கிறது. வல்ல அல்லாஹ்வின் அருளால் காலச்சக்கரம் ஒரு நாள் மாறும் நல்லாட்சி மலரும் மக்கள் நலனை மட்டுமே கொண்டு. அரசியல்வியாதிகள் தன்னை வெல்ல ஆள் இல்லை என்று இந்தியா முழுவதும் தன் நலமே பெரிதாக எண்ணி நாட்டை காலணியாதிக்கமாக அமெரிக்காவுக்கு தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வல்ல அல்லாஹ் நீதியாளன் அவனே அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறான். நிச்சயம் ஒருநாள் வல்ல அல்லாஹ்விடமிருந்து நீதி கிடைக்கும்.

சபீர் வாழ்த்துக்கள்!.

Yasir said...

யாரையும் விடவில்லை கவிக்காக்கா...நக்கல்,நையாண்டியுடன்,சிந்திக்க வைக்கும் அரசியல் கவிதை....சூப்பபபபபர் காக்கா...

//கொசுத் தொல்லையையும்
மீறும்
வேட்பாளர்களின்
சொகுசுத் தொல்லைகள்!// எந்த மருந்தே அடிச்சா தொலையும் இந்த தொல்லை

crown said...

தங்கபாலு ஒரு
தண்ட ஆளு!
எத்தனைக் காத்திருப்பாரோ
மத்தியிலிருந்து முடிவு வரவும்
மண்டையின்
மத்தியிலிருந்து முடி வளரவும்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சிரிச்சு,சிரிச்சு வயிரு வலிக்குது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிரிச்சு,சிரிச்சு வயிரு வலிக்குது. //

அதனால்தான் இவரின் உருவ மொம்மையை பிரிச்சு பிரிச்சு எரிக்கிறாய்ங்க !

sabeer.abushahruk said...

இதோ வந்துவிட்டார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கிரவுன் அவர்கள் மற்ற தொகுதிக்கான...சாரி...ஆக்கத்திற்கான தமது
உறையை...சாரி... கருத்தை முடித்துக்கொண்டு இதோ வந்துவிட்டார்கள்!

அவர்களுக்கு ஷார்ஜாஹ்விலுள்ள நமது அதிரை நிருபர் வாசகர் கழகம் சார்பாக இந்த வரவேற்பு பாவை மலர்மாலையாக அணிவிப்பதில் மகிழ்சியடைகிறேன், சந்தோஷப்படுகிறேன், குதூகலிக்கிறேன்!

"வருக
வருத்தெடுக்க வருக
லஜ்ஜையில்லாமல் ஓட்டு
பிச்சை கேட்கும்
பச்சோந்திகளின்
நிறத்தை வெளுத்துத்
தருக!"

அதிரை முஜீப் said...

வீதியெல்லாம் தேர்தல் ஊர்வலங்கள்!.
வீடே இல்லாமல் தெருவில் நம் சனங்கள்!
அரசுத் திட்டங்களில் எல்லாம், திட்டம் போட்டே
திருடப் படும் உன் உரிமைகள்!

கேட்டிடும் ஓட்டை எல்லாம், இனி
போட்டே நீ வீழ்வாயா?
ஓட்டை மட்டும் போட்டிட்டு, பின்
ஓட்டாண்டியா வாழ்வாயா?

உன் பங்கை நீ அடைந்தால், பின்
வீதிதோறும் ஊர்வலமாய் அலைவாயா?
ஓட்டிட்ட விரல் மையும் காயுமுன், அவன்
பொய்யும் உன் வாழ்வும் சேர்ந்தே காயும்!

இட ஒதுக்கீடு, ஒதுக்கீடு என்றார்கள்!
உன்னை ஒதுக்கியே இடத்தை வென்றார்கள்!
உன் இடத்தையும் அவர்களே வென்றார்கள்!.
உன் இனத்தையும் அடக்கியே வந்தார்கள்!.

கல்வியில்லே, காசுமில்லே நம்மிடத்தில்!
அரசுக்கும் அறிவுமில்லே, தெளிவுமில்லே நம்மிடத்தில்!.
சோறுமில்லே, காருமில்லே என்னினத்தில்!
அரசியல் அறிவுமில்லே, தெளிவுமில்லே நம்மிடத்தில்!.

கோட்டை விட்ட சமுதாயம், இனி
கோட்டையையும் நீ விடுவாயா?
ஓட்டிடும் சமுதாயமே, அங்கே உன்
இனத்தையும் அனுப்பப் பார்!

crown said...

ஊர்களுக்குள் ளெல்லாம்
கார்களின் ஊர்வலம்
வேட்பாளர் வாக்காளர்
திருவிழா ஆரம்பம்!
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.தேர்தல் திருவிழா!இப்படித்தான் ஆரம்பம்
பின் முடிவுக்குப்பின் நம் நிலையோ பரிதாபம்.இந்த அவலம் என்று தீருமோ?
நம் சமூகமும் முன்னேறக்கூடுமோ?ஆதங்கம் மேலிட ஆனாலும் மேலிடதில்
அவங்க மட்டும் வந்திட தொடரும் சோகத்தின் சொகுசு ஆரம்பத்திருவிழா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் முஜீப் கட்டுரையிலும் கவி வரிகளிலும் வீரியம் அப்படியே !

crown said...

ஓட்டுக் கேட்கும்
கூட்டமொன்று
வீட்டு வாசல் வரும்
மாட்டு வாயில் தீணியாக
கேட்டதெல்லாம் தரும்!

கொசுத் தொல்லையையும்
மீறும்
வேட்பாளர்களின்
சொகுசுத் தொல்லைகள்!
--------------------------------------------------------------------
கேட்டதெல்லாம் கிடைத்திடும்,சூரியனும் உதித்திடும் வாக்குறுதியெனும் ஈத்தரை சூரியனும் குடித்திடும் சூனியம் நம்மில் நிலைத்திடும்.இட ஒதுக்கீடு அவன் குடுபத்திற்கு எனும் திட்டம் புரிந்திடும்.

crown said...

முத்திரை குத்துமுன்
புத்தியை செலுத்தனும்
அத்தனை பேரையும்
ஆராய்ந்து பார்க்கனும்!
---------------------------------------------------------------------
சொல்றத கேட்டா உருப்படலாம், நம் இன மக்களுக்குள்ளே போட்டா போட்டி
இருந்தா எப்படி முன்னேறமுடியும்? நீ அவளுக்கு சப்போர்டா , நான் இவனுக்கு
சப்போர்ட் பிறகு தேர்தல் ரிப்போர்ட் முஸ்லிம் பேர் ரிப்பேர்.எப்படிபட்ட நற்பெயர
வாங்கி தர சமூதாயத்துக்கு. நாளை மறுமைக்கு பயந்து கொள் முஸ்லீமே!வாக்கு
வைத்து ஏதும் செய்யலாம் கையால் போடும் வாக்கிலும், நாவல் சொல்லும்வாக்கி
லும் ஒரு தீர்கமான முடிவெடுக்கனும்.உன் போக்கில் நேர்மையில்லை இல்லையெனில் ,
நாளை சாவின் தருவாயில் உன் வாயில் கலிமா நுழையாது.

அபு ஆதில் said...

எலெக்சன் கெடுபிடி அதிகமாக இருப்பதாலோ என்னவோ தேர்தல்களம் அதிரைநிருபரில் தான் அமர்களமாக நடக்கிறது.சிரிக்கவும்,சிந்திக்கவும் கவிதை தந்த அதிரை கவிக்கு வாழ்த்துக்கள்.

//எத்தி வைக்க வேண்டிய
இயக்கங்க ளெல்லாம்
இளைஞர்களுக் கிடையே
வத்தி வைக்கின்றன!//
சகோ.அபுஇபுறாஹிம் சொல்வதுபோல்
வேதனையான இச்சூழல் என்றுதான் மாறுமோ !?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எலெக்சன் கெடுபிடி//

அஸ்ரஃப் காக்கா : இதையும் ஒரு பிடி புடிக்கலாமே !

Yasir said...

//இட ஒதுக்கீடு, ஒதுக்கீடு என்றார்கள்!
உன்னை ஒதுக்கியே இடத்தை வென்றார்கள்!
உன் இடத்தையும் அவர்களே வென்றார்கள்!.
உன் இனத்தையும் அடக்கியே வந்தார்கள்!./// ஆஹா என்னே அர்த்தம் தோய்ந்த வரிகள்......நாம் கனவுகள் விரைவில் நனைவாகுமா ??

Yasir said...

கவிக்காக்கா என்ன இன்னைக்கு ஒரு முடிவு பண்ணிட்டுதான் இறங்கி இருக்காப்ல தெரியுது....

//"வருக
வருத்தெடுக்க வருக
லஜ்ஜையில்லாமல் ஓட்டு
பிச்சை கேட்கும்
பச்சோந்திகளின்
நிறத்தை வெளுத்துத்
தருக!///.............பச்சோந்திகளின் நிறத்தை வெளுக்க ஒரு சிறந்த வண்ணானை(ரை) தான் கூப்பிட்டு இருக்கீங்க..இப்ப வெளுப்பார் பாருங்க..தஹஜ்ஜத் தொழுகை முடித்துவிட்டு வந்ததும்

crown said...

உடன்பிறப்பைத் தூக்கி
கடல்பரப்பில் போட்டாலும்
கட்டையிலே போகாமல்
கட்டுமரமா மிதப்பாராம்!
---------------------------------------------------------------
அட மு.க.முக்காவாசி முஸ்லிம் உன்னை நம்பினான். நீ சொல்லும் வாக்கும்,
நாக்கும் வளைந்துதான் இருந்திருக்கிறது.மு.க.உன் கட்சியின் முகமாக இருந்தான்
முஸ்லிம் நீயோ இதயத்தில் இடமென்று காலவாக்கில் காலால் இடரிவிட்டாய்.
மருபடியும் ,மருபடியும் உன் வாக்கை நம்பிவாக்கிட்டோம். நீ கழுத்தை அருத்தாய்
மு.க,உனக்கு பிரட்சனை என்றவுடன் நாங்கள் தான் மூக்கை நுழைத்தோம்.
காலத்துக்கு தக்கவாறு ஜாலம் செய்யும் ஜாலக்காரன் நீ.ஒரு சமயம் இந்து துவேசம்
நாட்டிற்கு கேடு என்றாய்,உன் வீட்டில் உள்ளவர்களுக்கு பதவியென்றதும்
அந்த இந்து வெறியர்களிடம் கைகுலுக்கினாய்.கோயம்புதூரில் எங்கள் உயிர்
சகோதர சகோதரிகளை கொன்று குவித்தாய்.மாறனால் மாறினாய் நாங்கள் நீ மாறனும்
என என்னி ஏமாரினோம்.பின் அந்த இடம் புளிக்கும் என்று கைங்காரியம் செய்து
உன் வாக்கை பின் கைக்கு மாறி கை குழுக்கினாய்.இப்படி மாறி,மாறி எங்களை
ஏமாற்றினாய் இன்னும் சொல்கிறாய் நான் இசுலாமியர்களின் நண்பன் என்று
இதை நம்பவும் இன்னும் ஒரு கூட்டம் இருக்கும் வரை உன் காட்டில் மழை,முஸ்லிம்
இனத்திற்கோ இடு காடு கூட இனி கூடாது எல்லாம் உன் குடும்பத்தால் வளைக்கபட்டுவிடும்.

crown said...

ரத்தத்தின் ரத்தமோ
பித்தத்தின் உச்சத்தில்
கொடநாடு போகுமுன் - இவர்பாதம்
தொடநாட வேண்டுமாம்!
--------------------------------------------------------------------
இவளின் ரத்த நாளமெல்லாம் இஸ்லாமிய வெறுப்பு நிரைந்திருக்கும், நிரந்தரமாய் குடியிருக்கும்
கரசேவைக்கு ஆள் அனுப்பிய பச்சை பா(பா)வத்தீ!பகல் வேடம்போடும் பஞ்சோந்தி!
நீ போடும் இரண்டோ,மூன்றோ எச்சில் இலைக்கு இன்னும் பிச்சை எடுக்க
சிலர் இருப்பதால் உனக்கு துளிர்விட்டது என் இனதின் மேல் உள்ள துவேசம்!குளிர்
விட்டுபோச்சு பஞ்சை போர்வை போட்டு எம்மையும் கவிழ்துவிட்டாய்.
என்று எம் மக்கள் உணர்வார்களோ அன்றே உமது ஆட்சிக்கு மூச்சுமுட்டும் நாள்
அது வரை ஆளு, அடங்கி போகும் வரை ஆடு.

crown said...

தங்கபாலு ஒரு
தண்ட ஆளு!
எத்தனைக் காத்திருப்பாரோ
மத்தியிலிருந்து முடிவு வரவும்
மண்டையின்
மத்தியிலிருந்து முடி வளரவும்!
---------------------------------------------------------------
காமெடி பீஸ்.முன்னால் டிராவல் ஏஜென்ட் இப்ப மத்திக்கும் ,மானிலத்துக்கும்
மாமா வேலைப்பாக்கும் ஏஜென்ட். இவன் மண்டையில் ஒன்னும் கிடையாது.
தொண்டர்கள் இவன் தலையில் மிளாகாய் அரைத்தே வழுக்கையாகிபோன மர மண்டை.

crown said...

கேப்டனுக்கு எதிரா
யாரு நின்னா என்ன?
பாகிஸ்தான் தீவிரவாதின்னு
சொன்னா போதும் ஜெயிக்க!
-------------------------------------------------------------------
இப்பத்தான் இவன் அரசியல் கைக்குழந்தை,கையகால ஆட்டிக்குவான்,சும்மா சத்தம்
காட்டிக்குவான்,கண்னை சிவப்பாக்கிகுவான்.பாவம் இவன் இப்படியே விட்டுடலாம்
ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிடலாம்(குடிகாரனபத்தி இதுக்கு மேல எப்படி சொல்ல
முடியும்?)

crown said...

மருத்துவர் காட்டில்
மாறி மாறி மாரி
தாவி தாவி ஐயா
தலை சுத்து தைய்யா!
-----------------------------------------------------------------
நிரந்தர அரசியல் கோமாளி! மனனிலை நோயாளி! நம் முஸ்லிம்களின் ரத்த,
வேர்வையில் துளிர்விட்ட கட்சி. பிற்காலத்தில் நமக்கு துரோகியாய் மாறிபோன
கப்போதி. மரத்தமிழ் என்பான், மரமெல்லாம் வெட்டி வீழ்திடுவான்.மரம் இன்றி
மழை வராது ஆனால் அரசியலில் இவன் காட்டில்(மரமில்லா காடு)மழையோ மழை
அதைத்தான் கவிஞர் அவர்களும் இங்கே சொல்லியுள்ளார்கள்.மரத்தை வெட்டி
வீழ்திடுவான் ஆனால் வான் மழை கேட்டிடுவான்,தேர்தல் களத்தில் இனி தோத்திடுவான்,
பின் தெருவில் திருஓடு ஏந்தி நின்றிடுவான் இது என் போன்ற சகோதர்களின்
பதுவா!

crown said...

வைகோவுடன் கைகோர்க்க
ஆருமில்லே அய்யகோ,
காவிக்குள்ளே ஐக்கியமானா
கருப்புக்குள்ளும் களங்கம்!
----------------------------------------------------------------------
சபீர்காக்கா சின்ன திருத்தம் இவன் காவிக்குள்ளே அடைக்கலம் ஆகவேண்டாம்
கருப்பு ஆடை அணிந்த கருப்பு ஆடு இவன் .முன்பு சொன்ன எல்லாரையும் விட
கொடிய விசம்.இவன் பக்கா காவிக்காரன்.சல்மான் ருஸ்டி என்னும் சைத்தான்
எழுதிய துவேச புத்தகம் இங்கே இந்தியாவில் விற்க அன்று ராஜிவ் தடை போட
இவன் பாராளுமன்றத்தில் அந்த ருஸ்டிக்காக மன்றாடினான்,போராடினான்
இங்கே அந்த புத்தகம் கொண்டு வர முஸ்திபா இருந்தான் இந்த முசீபத் புடிச்சவன்.
புலிகளின் ரகசிய ஆலோசகன்.இவனின் ஆலோசனையே சிரீலங்காவில் நம் சகோதர,
சகோதரிகள் தாக்கப்பட்டு,அனாதையாகவும்,அகதிகளாகவும் காரணமான காரணகர்த்தா.
புலிகளின் அழிவும் ,இவன் அஸ்தமனமும் ஒருங்கே அமைந்திருக்கு பாத்தியலா?
இதுதான் காலத்தில் கிடைக்கும் தண்டனை இன்னும் கேவளப்படுவான் இந்த
வைகோ.

Mohamed Rafeeq said...

அதிரை நிருபரில் வெறும் கவிபாடும் கூட்டம் ,
துதிபாடி கொண்டு இருக்கும்
என்று சொல்லும் என் அருமை சகோதர்களே !

நீங்கள் நாற்பது வருடம் சமுதாயத்துக்கு சொல்லாததை
நான்கு வரிகளில் சிந்திக்க சொல்லுகிறார்
எங்கள் விகட கவி சகோதரர் முஜிப்

//கோட்டை விட்ட சமுதாயம், இனி
கோட்டையையும் நீ விடுவாயா?
ஓட்டிடும் சமுதாயமே, அங்கே உன்
இனத்தையும் அனுப்பப் பார்!//

************************************************
அதிரை வீரகவிராயர் சகோதரர் சபீர் மட்டும் சும்மாவா
சொந்த சின்னத்தில் நிற்க முயற்சி செய்யாமல் இருக்கும்
முஸ்லிம் வேட்பாளர்களின் நிலைமையை இவ்வாறு சொல்லுகிறார்

//மத்தியிலும் மாநிலத்திலும்
அத்தி பூத்ததுபோல்
குத்தியிருக்கும் நம்மவர்
கத்திப் பேசினாலோ
லத்தி யடிதான்!//

%%%சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் %%%

அபு ஆதில் said...

"வைகோவுடன் கைகோர்க்க
ஆருமில்லே அய்யகோ,
காவிக்குள்ளே ஐக்கியமானா
கருப்புக்குள்ளும் களங்கம்"

வைகோ .......அய்ய்ய்ய்யா..
குஜராத்தில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது கூட பாஜாக புகழ் பாடுறவரா இருந்தீங்க.எல்லோருக்கும் தேர்தலுக்குப்பிறகு தான் ரிஸல்ட்னா உங்களுக்கு மட்டும் முன்னாடியே வந்திடிச்சே அரசியல்ல அநாதையாய்ப் போக அத்தனை தகுதியும் இருக்கிறதுனு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// அதிரை நிருபரில் வெறும் கவிபாடும் கூட்டம் ,
துதிபாடி கொண்டு இருக்கும் என்று சொல்லும் என் அருமை சகோதர்களே !///

அன்பின் சகோதரர் முஹம்மத் ரஃபீக், இப்படியுமா சொல்லுறாங்க !? அவர்களையும் வரச் சொல்லுவோம் கவி எது துதி எது என்று எடுத்தும் வைப்போம் ! நல்லதை நளினமாகச் சொன்னால் நட்புகளின் நெருக்கமோ இறுக்கம் கூட்டும் ஒத்தக் கருத்துடைய யாராயினும் நேசிக்கத்தான் செய்வர்... ஆதலால் இவைகளை துதி என்றால் அதோ கதிதான் என்றுமே மனங்களை வென்றெடுக்க முடியாது.

Shameed said...

காளை வாரும்
அரசியல் வாதிகளை
கவிதையில் வாரிய
எங்கள் அதிரை
கவியாருக்கு எங்கள்
பென்னான ஓட்டை
அன்பாக அளிக்கின்றோம்

ZAKIR HUSSAIN said...

//அதிரை நிருபரில் வெறும் கவிபாடும் கூட்டம் ,
துதிபாடி கொண்டு இருக்கும்
என்று சொல்லும் என் அருமை சகோதர்களே !//

இது எப்ப...?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது எப்ப...? //

புதுசா இருந்ததனாலே அழைத்தும் பார்க்கிறேன்... வாருங்கள் என்றும் !

sabeer.abushahruk said...

தூத்திப் பேசுதலைவிட
துதி பாடுதலே நலம்!

புறமும்
பொறாமையும்
பனிக்கால தீ மூட்டம்போல
சுகமாயிருந்தாலும்
பசி கொண்ட தீ நாக்குபோல
சுயமெரித்துவிடும் சகோதரர்காள்!

பிள்ளையை பொன்னென்று
பெற்றவள் சொன்னால்
துதியா?

அன்னையை கண்ணென்று
பிறந்தவன் சொன்னால்
துதியா?

நட்பை உயிரென்று
நண்பன் சொன்னால்
துதியா?

ஊக்குவித்தலை
துதியென்றால்
முன்னேற்றம் முடங்கும் சோதரா?

sabeer.abushahruk said...

கிரவுன்,

உங்களின் விளக்கங்கள் ' இந்தியா டுடே' தரமானது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer.abushahruk சொன்னது…
கிரவுன்,
உங்களின் விளக்கங்கள் ' இந்தியா டுடே' தரமானது! //

As on today "அதிரைநிருபர்" தரமானதுன்னுல சொல்லியிருக்கனும்...

sabeer.abushahruk said...

நன்றியுரை:

இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தித்தந்த அதிரை நிருபர் வாசக கழகத்தின் (அ.நி.வா.க.) தலைவர் தாஜுதீன் அவர்களுக்கும், 

பொதுச்செயலாளர் அபு இபுராஹீம் அவர்களுக்கும், 

யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி அமர்ந்திருக்கும் அ.நி.வா.க.வின் கழகப் பேச்சாளர்கள் ,கொள்கைச் சிங்கங்கள், கழக கண்மனிகள் அலாவுதீன், யாசிர், அபு ஆதில், அப்துர்ரஹ்மான், ஹமீது, ஜாகிர் ஆகியோருக்கும்; 

தத்தமது கொள்கையாலும், கொண்ட மொழியாலும் நம் இதயங்களையெல்லாம் கொள்ளை கொண்ட சிறப்புப் பேச்சாளர் கிரவுன் மற்றும் கொள்கை பறப்புச் செயலாளர், கொதிக்கும் மொழிக்கலைஞர்,அரசியல் ஆத்துச்சூடி, தம்பியேயாயினும் அண்ணன் என்றழைக்கப்பெற தகுதியான முஜீப் அவர்களுக்கும், 

நமது சிறப்பு விருந்தினர் அரசியல் ஆலோசகர் சகோ முஹமது ரஃபீக் அவர்களுக்கும்; 

மேலும் இந்த கூட்டத்துக்கு வருகை தந்து சிறப்பித்த வாசக வட்டத்துக்கும் எங்களின் கட்சி சாரா அ.நி.வா.க. வின் சார்பில் மனம் கனிந்த, உள்ளம் நெகிழ்ந்த, இதயம் உருகிய, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதயம் உருகிய, ///

ஆகா உருக விடாதீங்க காக்கா... தேர்தல் முடியுற வரைக்கும் இறுகிய இதயமாக எதையும் தாங்கும் இதையமாக இருக்கனும் கவிக் காக்கா !!

அதிரை முஜீப் said...

sabeer.abushahruk சொன்னது…
நன்றியுரையையும் அரசியல் தனமாக வழங்கி ,அவர்களுக்கும்,அவர்களுக்கும்,அவர்களுக்கும், என்று அரசியல் வாதியை மிஞ்சிய அதிரை அரசியல்வாதி எங்கள் அன்னன் ஷபீர் அவர்கள் சில தினங்களுக்கு முன் எனக்கு அரசியலை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறி விட்டு, இப்போது என்னாமா கூவுராறு பாத்தியளா?.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போது என்னாமா கூவுராறு பாத்தியளா?.///

அரசியலின் அரிச்சுவடியே "ஒன்னுமே தெரியாது"

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதெப்புடி சபீர் காக்கா இவ்வளவு சீக்கரம் கட்சி ஆரம்பிச்சுட்டு பொருப்புகளும் கொடுத்திட்டீங்க..

இப்படித்தான் எல்லோரும் கட்சி ஆரம்பிக்றாங்கலா?

இதுவரை அதிரைநிருபரில் வாசித்த காமெடிகளில் இந்த பின்னூட்டமே மிகச் சிறந்த காமெடி. சிரிப்பை கண்ரோல் பண்ண முடியவில்லை... :) :)

sabeer.abushahruk said...

அதான் மீட்டிங் முடிஞ்சுபோச்சே இன்னும் இங்கே என்ன சலசலப்பு?

www.thinnai.comக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு இந்த பிட் நோட்டீஸையும் படிச்சிட்டு போய் புள்ளைகளுக்கு கதையைச் சொல்லுங்கப்பா!

//
'மம்மி' தாலாட்டு!

நல்ல டைனோஸர்
மிளகாச் சட்னி கேட்காமல்
இட்லி உண்டது
படுக்கச்செல்லுமுன் 
பால் குடித்தது
'மூச்சா' வந்தால்
டாடி டைனோஸரை எழுப்பியது

தொப்பி யணிந்து
பள்ளி சென்றது
பள்ளிக்கூட 
உணவு இடைவேளையில்
அம்மா தந்துவிட்ட
சிற்றுண்டி உண்டது

கருப்புக் காரை
விரட்டியது
கணக்கு சாரை
மிரட்டியது

சுலைமானுடனும் ஷாருக்குடனும்
விளையாடியது
பலூன் பாலுவிடம்
'கட்டி' விட்டது
சுஷ்மிதா திருடிய
ஷார்ப்பெனெரை
பிடுங்கித் தந்தது

மம்ஸார் பார்க்கில்
கிரிக்கெட்டில்
ஷாருக்குக்கு நாட் அவுட் சொன்னது

மேலும்
நல்ல டைனோஸர்
எழுந்ததும் பல் துலக்கியது
சுவரில் கிறுக்காமல்
காகிதத்தில் எழுதியது
உடை ஈரமானால்
உடனே மாற்றியது

...மகன் உறங்கியதும்
மேலும்
கேவலப் படுவதிலிருந்தும்
தப்பியது டைனோஸர்!

//

-sabeer abushahruk

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாயப்பிரச்சனை தீர்க்க நல்லோர் முடிவு செய்து
140 பேர் மனு செய்து
கமிசனே யோசித்தது
எப்படி தேர்தலை நடத்துறது!
கட்சி ரெண்டும் அடிபணிந்து
அந்த 140 பேரிடமும் வாக்கு கொடுத்து
அதை தீர்க்க உறுதி கொடுத்தது
நினைத்தது நடந்தது!
வாபஸ் பெற்றது
இம்மாதிரி நம்மூரும் முடிவு செய்து இருந்தால்
பலரும் வேட்பு மனு செய்தால்
கட்சி விழும் காலில்
வருமே கம்பன் ரயில்
அகலப் பாதையில்!

அப்துல்மாலிக் said...

//எத்தி வைக்க வேண்டிய
இயக்கங்க ளெல்லாம்
இளைஞர்களுக் கிடையே
வத்தி வைக்கின்றன!//

இதுக்கு பேருதான் உள்குத்தா?

அருமை ஒவ்வொருதரையும் கசக்கி பிழிந்துட்டீங்க

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு