படிக்கட்டுகள்.. ஏற்றம் - 17வாழ்வியல் முன்னேற்றத்தைப் பற்றி எழுதும்போது உறவுகளின் முக்கியத்துவம்  ஏன் என சிலர் நினைக்கலாம். காரணம் இருக்கிறது, நம் வட்டாரம் சார்ந்த ஆண்கள் முன்னேர நினைத்து ஏறக்குறைய ஒரு ஓட்டப்பந்தய ட்ராக்கில் நிற்பதுபோல் வாழ்க்கையை தொடங்க நினைக்கும்போது அந்த ஆண்மகனின் எண்ணம் எல்லாம் தான் அடையப்போகும் அல்லது தொடப்போகும் வெற்றியில்தான் இருக்கும், அதற்கிடையில் தனது பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும் அந்த சம்பாதிக்கும் ஆண்மகனை ஓட விடாமல் ஆளுக்கு ஒரு தாம்புக் கயிற்றை அவன் இடுப்பில் கட்டி தன் வசம் இழுத்தால் எப்படித்தான் அந்த பாவப்பட்ட ஜென்மம் ஓடி ஜெயிக்க முடியும். இதை நான் எழுதக் காரணம் நம் சமுதாயங்களில் புரையோடிப் போயிருக்கும் ' ஆண்மகன் தான் தன் சகோதரியின் பொருளாதாரத்துக்கு பொறுப்பு, ஆண்மகன் தான் தன் சகோதரியின் பிள்ளைகளின் கல்யாணம் முடிந்தால் தனது பேரப் பிள்ளைகளின் தேவைக்கும் பொறுப்பு என்ற எழுதப்படாத சட்டம் நம் பகுதி ஆண்களின் தலையில் எழுதப்பட்டிருப்பதுதான். பெண்களை படிக்க வைத்து தனது சொந்த படிப்பையும் திறமையும் நம்ப விடாமல் அவர்களை தொடர்ந்து ஆண்களை சார்ந்து இருக்க வைக்கும் பழக்கம். தொடர்ந்து ஆண்களை சம்பாதிக்கும் எந்திரமாக்கியிருக்கிறது.

பெண்கள் அதிகம் படித்தால் எங்கு நம்மை அதிகம் கேள்வி கேட்டுவிடுவார்களோ என்று நினைக்கும் " ஆப்கானிஸ்தான் தனமான புத்தி" நம் பகுதியில் பல ஆண்களிடம் இருக்கிறது.

ஆக ஆண்களின் முன்னேற்றத்தில் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை முன்னால் அத்தியாயத்தில் பார்த்தாலும் அடுத்த வெகு அருகில் இருக்கும் உறவான பிள்ளைகளின் பங்கு இதில் மிக முக்கியம். இன்றைய தேதியில் நம் ஊர் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் மாற்றம் ஏதோ மேஜிக் ஷோவில் நடந்தது மாதிரி வந்ததல்ல.நம் ஊர் பகுதிகளில் முன்பு இருக்கும் வீடுகள் இன்றைய பிள்ளைகள் மறந்து இருக்கலாம் அல்லது அவர்களுக்கு தெரியாமலேயே போயிருக்கலாம்.  இரண்டு ரூம்கள் குனிந்து நுழைந்து படுத்து குனிந்து வெளியே வருகிற மாதிரி ஒன்னுக்கும் உதவாத டிசைனில் , ஒரு குழந்தை பிறந்தால் தாய் / குழந்தை /தகப்பன் மூன்று பேரும் படுக்க முடியாத அளவுக்கு ' நாயர் ஸ்டைல்" வீடுகள் கட்டியிருப்பார்கள். இதில் நான் சொன்ன 2 வது ரூம் பெரும்பாலும் ஸ்டோர் ரூமாகவும் , மழைக்காலங்களில் சமையல் கட்டாகவும் பயன்படும். [சமையல் அறை எனும் 'பெரிய்ய்ய்ய வார்த்தை ' இதற்கு பொருந்தாது]. இப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்றி அமைத்து ஒரு நல்ல வீடு கட்டி வாழவே நம் இனம் குறைந்தது 30 வருட உழைப்பை கொட்டி உருவாக்கியிருக்கிறது. கடந்து போன 30 வருடமும் திருப்பி வரலாம். வாழ்க்கை திரும்பி கிடைக்குமா?

இன்றைக்கு 35 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் வெளிநாடு போய் இந்த அடிப்படை வாழ்க்கையை குறைந்த பட்சம் அடையத்தான் தனது இளமையை, தனது கனவுகளை, தனது சுதந்திரத்தை எல்லாவற்றையும் பணயம் வைத்துதனது பிள்ளைகள் நன்றாக படித்து பொறுப்புள்ளவர்களாக ஆகிவிட்டால் என் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் . அவர்களை பிள்ளைகள் காதல் என்ற பெயரிலும், வசதியான வாழ்க்கை வாழ வேண்டி அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதிலும் பெற்றோர்களை நோகடிப்பது எந்த வகையில் ஞாயம்?. இந்த பாவப்பட்ட பெற்றோர்கள் செய்த குற்றம்தான் என்ன...? பிள்ளைகளை நம்பியது தவறா?. பிள்ளைகளை நம்பாமல் வேறு யாரைத்தான் நம்புவது?.

இன்றைக்கு துபாயிலும், சவூதியிலும், அமெரிக்கா, யூ,கே, ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று பிழைக்க போன யாருக்கும் விசாவும், ஏர்லைன்ஸ் டிக்கட்டும் ஏதோ ஒரு காலை நேரத்தில்  நரசுஸ் காப்பி குடித்துக் கொண்டுகாலை பேப்பரை புரட்டிக் கொண்டிருக்கும்போது வாசல் வந்து கதவைத் தட்டி யாரும் கொடுத்து விட்டு போனதல்ல. முதன் முதலில் ஸ்டேம்ப் ஆகும் விசாவையும், முதன் முதலில் கிடைத்த ஏர்டிக்கட்டையும் பார்க்க இன்றைய தகப்பன்கள் எத்தனை நாள் பட்டினியாக இருந்திருப்பார்கள். எத்தனை நாள் பம்பாயில் கழிவறைக்கு கூட க்யூவில் வெகுநேரம் நின்றிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எத்தனை இன்டர்வியூ, எத்தனை ஏமாற்றங்கள்.. அத்தனையும் சுமந்துதான் நிமிர்ந்திருக்கிறார்கள்.


இத்தனை வருடத்து தியாகத்தையும் சில சமயங்களில் பிள்ளைகள் எப்படி ஒரே வார்த்தையில் பெற்றோர்களின் முதுகெழும்பை உடைக்க பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் விளங்காத வித்தை.

எதுவும் வாழ்க்கையில் அந்தந்த வயதும் பொறுப்பும் வந்தவுடன் நிகழ்ந்தால் அதற்கு மரியாதை.. அதை மீறி செயல் படும்போது... வாழ்க்கையின் சவால்கள் மீறியவர்களுக்கு எதிர்ப்பாகவே போய்விடுகிறது.

30 வயது தம்பதியினர் பிள்ளை பெறாதபோது 'இன்னுமா பிள்ளை இல்லை...என்று கேட்கும் சமுதாயம் , 60 வயது தம்பதியினர் பெற்றுக்கொண்டால் "இப்போது ஏன்" என்று கேட்க தவறுவதில்லை என்பதிலேயே... அது அது சரியான வயதில் நிகழ வேண்டும் என்ற உண்மை இளைய சமுதாயத்திற்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதை சொல்கிறது.
 

எப்போதும் புத்திசாலிகள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை தனது நிலையை உயர்த்திக் கொள்ளாமல் எடுப்பதில்லை. திருமணப்பந்தலில் நிற்கும் ஒரு மணமகனின் கால் குறைந்த பட்சம் அடுத்த நாளே உழைத்து சம்பாதிக்கும் உறுதியை தன்னை நம்பி வந்தவளுக்கு தர வேண்டும். கல்யாணத்திற்கு பிறகு மனைவிக்கு தைக்கும் ஜாக்கெட்தையல் கூலியை கூட பெற்றோர்களிடம் கேட்கும் சூழ்நிலையை வைத்துக் கொண்டு ‘'சுதந்திரம்" 'யூத்' என்று பேத்திக் கொண்டிருப்பது தவிர்க்க.

இன்றைய இளைய சமுதாயம் தனது நண்பர்களை தெரிவு செய்வதிலும் கவனம் தேவை  Talking Companion க்கும் Friends  வித்தியாசம் தெரியவேண்டும்.

உங்களோடு ஊர்சுத்த , படம் பார்க்க, ப்ரவுசிங் சென்டருக்கு கூட வர, ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட, மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கதைத்து கொண்டுவர வருபவர்கள் எல்லாம் தனது குடும்பம், தனது தேவை என்று வந்தவுடன் கூட வருவார்கள் என்று ஒரு மாயையில் சுற்றும்போது நிதானித்து யோசிக்கவும்.

உங்களின் நட்பு உண்மையாக இருந்தால் அது காலத்தை வென்று தொடரும். அது உங்களின் வார்த்தைகளுக்குள் வசப்படாது. உங்களின் விளக்கத்தை விளங்காது. விதியின் துரத்தலிலும் விலகாத விதியை தன் வசப்படுத்தியிருக்கும்.

நல்ல நட்பு கிடைக்காதவன் வறுமைக்குள் தள்ளப்பட்டவனுக்கு சமம். ஆனால் இளமையின் துள்ளலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நட்பு உங்களுக்கு நஞ்சாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் திறமை உங்களுக்குள் இருக்க வேண்டும்.

சரி இதை இந்த அத்தியாயத்தில் சொல்ல காரணம் ஏன்? .. ஒரு சம்பாதிக்கும் குடும்ப தலைவனின் மொத்த எதிர்பார்ப்பே தனது பிள்ளைகள் நல்லபடியாக வர வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் இருக்கும். எந்த தகப்பனும் தன் பிள்ளை கெட்டுப்போக வேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டான். பிறந்த நிமிடத்திலிருந்து தனது பிள்ளைக்கு எது தேவைப்படும் என்று தேட ஆரம்பித்து தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாய் செய்த தகப்பன் தன் பிள்ளைகளுக்கு வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுக்க தெரியாது என்று பிள்ளைகள் சொல்லும்போது குடும்பத்தை காக்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தியாகத்தையும் பூஜ்யமாக்கும் சூழ்நிலையை , வார்த்தையை எப்படி தாங்க முடியும்.?

பிள்ளைகள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளின் சிசி, பயன்படுத்தும் ஐ போனின் ஸ்பெக்ஸ் (specification) தெரியாத தகப்பன் இருக்கலாம் ஆனால் அதை வாங்கித் தந்தது அந்த தகப்பன் தான் என்று பிள்ளைகள் உணர்ந்தால் சரி.

பிள்ளைகளை வளர்ப்பதில் தகப்பனின் கடமையும் முக்கியம், பிள்ளைகளுக்கு   “ YES, YES” என்று  எல்லாம் கொடுத்து வளர்க்கும்போது  “NO”  என்பதின் அர்த்ததை புரிய வைக்க தெரிந்திருக்க வேண்டும். சில விசயங்களில் நமக்கு வாங்கி கொடுக்க வசதியிருந்தும் “NO’ என்று சொல்ல தெரிய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிள்ளைகள் தன் வாழ்க்கையில் ஏற்படும் Rejectionஐ சமாளிக்க தெரியாமல் பாதிக்கப்பட்டு விடக்கூடும்.

பிள்ளையை வளர்க்கும் தாய்மார்களும் [அது எந்த வயது பிள்ளைகளாக இருந்தாலும்  சரி] சில விசயஙகளில் கவனம் தேவை. அன்பாக வளர்க்கிரேன் என்று பிள்ளைகளை அருகதையற்றவர்களாக்கி விடவேண்டாம்.

நாம் வாங்கித்தரும் ஐ போன் , கேட்ஜெட்டுகளால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பள்ளம் விழுந்துவிடாது. ஆனால் அதை பிள்ளைகள் தனது தகுதிக்கு மீறி கேட்டு நச்சரிக்கும் அட்டிட்யூடில் இது கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப பொருளாதாரத்தில் குழி தோண்டும்.

பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதற்கும் பரிவு காட்டுவதற்கும் யாரும் தடை சொல்ல மாட்டார்கள். அதே போல் பிள்ளைகளும் நான் என் பெற்றோரை மதிக்கிறேன் என்று வார்த்தை அளவில் மட்டும் சொல்லக்கூடாது. அது 'ஆக்சன்' எனும் செயல்பாட்டு வடிவிலும் இருக்க வேண்டும்.

இது இளைய சமுதாயத்துக்கு மட்டும். 


உங்கள் குடும்ப கெளரவம், பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் சரியாக ஒடி வந்து உங்களிடம் அந்த ரிலே பட்டனை தர வருகிறார்.. நீங்கள் இன்னும் தயாராகாமல் நீங்கள் ஒட வேண்டிய தூரத்தையும் அவரையே ஒட சொல்வது எந்த வகையில் ஞாயம்.?

இன்றைய இரவு உணவுக்காக நீங்கள் அமர்ந்திருக்க பசியுடன் தான் நீங்கள் தூங்கப்போக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்காமல் உங்கள் சாப்பாட்டு தட்டையில் உணவை பரிமார ஒருநாளும் தவராமல் உழைக்கும் ஜீவனை நீங்கள் எப்படி மதிக்க வேண்டும்.?

ZAKIR HUSSAIN

27 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

//நம் சமுதாயங்களில் புரையோடிப்போயிருக்கும் ' ஆண்மகன் தான் தன் சகோதரியின் பொருளாதாரத்துக்கு பொறுப்பு, ஆண்மகன் தான் தன் சகோதரியின் பிள்ளைகளின் கல்யாணம் முடிந்தால் தனது பேரப்பிள்ளைகளின் தேவைக்கும் பொறுப்பு என்ற எழுதப்படாத சட்டம் நம் பகுதி ஆண்களின் தலையில் எழுதப்பட்டிருப்பதுதான். பெண்களை படிக்க வைத்து தனது சொந்த படிப்பையும் திறமையும் நம்ப விடாமல் அவர்களை தொடர்ந்து ஆண்களை சார்ந்து இருக்க வைக்கும் பழக்கம். தொடர்ந்து ஆண்களை சம்பாதிக்கும் எந்திரமாக்கியிருக்கிறது.//

தம்பி ஜாகிர். மேற்கண்ட வரிகளை படிக்கும் ஒவ்வொருவரும் இவை அவர்களுக்காக எழுதப்பட்டவை என்று உணர்வர்ர்கள் என்பது என் உணர்வு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

மாஷா அல்லாஹ்...கடும் வெப்பம் காரணமாக‌ நாவறட்சியுடன் இருக்கும் இந்த புனித நோன்பு நேரத்தில் குளுகுளுண்டு பிசின் போட்ட‌ ரூஹ்ஹப்ஜா சர்பத் குடிச்ச மாதிரி இருக்கிறது ஜாஹிர் காக்கா உங்களின் இவ்வாக்கத்தின் தாக்கம் உண்மையில் உழைத்து ஓடாய் திரியும் அந்த அப்பாவி ஆண் (சகோதரன்/தகப்பன்) மக்களுக்கு.

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நெசம் காக்கா. முப்பத்தஞ்சி வயசாகியும் இன்னுமா புள்ளெபெறலெ? என்று நேருக்கு நேர் ஒரே வார்த்தையில் அணுகுண்டை முகத்தில் வீசும் சில மனித ஜென்மங்கள் அம்பத்தஞ்சி வயசில் இறைவன் நாட்டத்தில் பிள்ளை பெற ஏதேனும் தம்பதிக்கு வாய்ப்பு வந்துவிட்டால் 'ஊட்லெ கொமரிப்புள்ளையல்வொலெ வச்சிக்கிட்டு பேரன்பேத்தி எடுத்த இந்த வயசிலெயுமா இப்படி கொஞ்சம் கூட கூச்சம்/வெட்கம் இல்லாமெ" என்று தான் கொடுத்த பல லட்சம் கடனை மறந்தாலும் மறக்கலாம் ஆனால் இந்த‌ கேள்வியை உரிய தம்பதியிடம் கேட்க மறப்பதில்லை கேட்க வெட்கப்படுவதும் இல்லை. (உனக்கு இந்த வயசில் முடியலெ என்றால் பாவம் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற அந்த தம்பதிகள் என்ன செய்வார்கள்?)

வெட்கப்பட வேண்டிய விசயத்திற்கு வெட்கப்படுவதில்லை. ஹலாலான விசயத்தில் வெட்கப்படச்சொல்வது எந்த ஒஸ்தாரு/ஹஜரத்து இவ்வொளுக்கு ஹதீஸு சொன்னாஹண்டு தெரியலெ.........

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நடைமுறையில் இருக்கும்/இருந்த நிகழ்வை அப்படியே ஆதங்கமாக மண்டெயிலே உரைக்கும் வகையில் தெளிவாக எழுதப்பட்ட ஆக்கம். படித்து பக்குவப் பட்டால் உயர்வு நிச்சயம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

/// உங்கள் குடும்ப கெளரவம், பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் சரியாக ஒடி வந்து உங்களிடம் அந்த ரிலே பட்டனை தர வருகிறார்.. நீங்கள் இன்னும் தயாராகாமல் நீங்கள் ஒட வேண்டிய தூரத்தையும் அவரையே ஒட சொல்வது எந்த வகையில் ஞாயம்.?

இன்றைய இரவு உணவுக்காக நீங்கள் அமர்ந்திருக்க பசியுடன் தான் நீங்கள் தூங்கப்போக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்காமல் உங்கள் சாப்பாட்டு தட்டையில் உணவை பரிமார ஒருநாளும் தவராமல் உழைக்கும் ஜீவனை நீங்கள் எப்படி மதிக்க வேண்டும்.?///

உசுரோடு உறவாடியது அனைத்த்து வரிகளும் !

உங்களுக்கு ஒரு கட் அவுட் ரெடி துபாயில் ! :)

Yasir சொன்னது…

ஆண்களை “ரம்ப” இலைபோல தன் குடும்ப நலத்திற்க்காக பயன்படுத்திவிட்டு ஒதுக்கித்தள்ளும் ஒரு சில குடும்பங்களின் வண்டவாளத்தை வலுவாக எடுத்துசொல்லி இருக்கின்றீகள் காக்கா..

//எதுவும் வாழ்க்கையில் அந்தந்த வயதும் பொறுப்பும் வந்தவுடன் நிகழ்ந்தால் அதற்கு மரியாதை.. // நிறைய பேருக்கு இது புரிய மாட்டேன்கிது...சில பேர் முந்திரிக்கொட்டையாக இருக்கின்றார்கள்..சிலர் புளியங்கொட்டையாக இருகின்றார்கள்


//ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் // வாவ்...அருமையான உதாரணம்...அப்பன்களும் சில சமயம் அந்த ரிலே பட்டனை மகனிடம் கொடுத்துவிட்டு சிறிது விலகிவிட வேண்டும்...அவன் பின்னாலேயே தொடர்ந்து சென்றால் மகனுக்கு தன்னம்பிக்கை என்பது உசேன் போல்ட் ரேஞ்சில் ஒடி ஒழிந்துவிடும்

Yasir சொன்னது…

//உங்களுக்கு ஒரு கட் அவுட் ரெடி துபாயில் ! :)/// அண்ணாச்சி கல்லி (அப்பா கடை ஏரியாவை மல்லூஸ் இப்படித்தான் சொல்றாங்க) கிட்ட வச்ச நாங்க எதிர்ப்பு தெரிவிப்போம்....புர்ஜ் கலிஃபா பக்கத்தல வச்ச ஒகே

sabeer.abushahruk சொன்னது…

//கடந்து போன 30 வருடமும் திருப்பி வரலாம். வாழ்க்கை திரும்பி கிடைக்குமா?//

நோன்பு திறந்துட்டு வேணும்னா இன்னொரு முறை படிச்சுப் பார்க்கிறேன் அப்பவும் வெளங்கலேன்னா மாமே இருக்கு உனக்கு.

கடந்த காலம் எப்படி ங்கானும் திரும்பி வரும், ஓய்! அப்படியே திரும்பி வந்தாலும்...அது வெளுத்த மீசையை அரும்பு மீசையாகவோ; 40 இன்ச் ப்பேன்ட்டை 33 ஆகவோ; ப்ளஸ் 2 ப்பவர் க்ளாஸை(லாங்க் சைட்ட்) மைனஸ் 1.25 (ஷார்ட் சைட்ட்) ஆகவோ; எம்மட ட்ரம் கேளை ட்ரீம் கேளாகவோ எப்படி மாத்தித் தரும்ன்றேன்?

sabeer.abushahruk சொன்னது…

//திருமணப்பந்தலில் நிற்கும்
ஒரு
மணமகனின் கால்
குறைந்த பட்சம்
அடுத்த நாளே
உழைத்து சம்பாதிக்கும் உறுதியை
தன்னை நம்பி வந்தவளுக்கு
தர வேண்டும். //

கவிதை மச்சி கவிதை! இன்னாமா எழுதறேப்பா? சொந்தமாத்தான் இப்டிலாம் எழுதறியா இல்லை மண்டபத்திலே யாரும் எழுதித் தந்ததை வாங்கி இங்கு வந்து படிச்சி காட்டி பொற்காசுகளை கேட்கிறியா?

sabeer.abushahruk சொன்னது…

//உங்கள் குடும்ப கெளரவம், பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் சரியாக ஒடி வந்து உங்களிடம் அந்த ரிலே பட்டனை தர வருகிறார்.. நீங்கள் இன்னும் தயாராகாமல் நீங்கள் ஒட வேண்டிய தூரத்தையும் அவரையே ஒட சொல்வது எந்த வகையில் ஞாயம்.?//

ஒரே நேரத்தில மூணு தடவ கேட்கவேண்டிய கேள்வி ஜாகிர். வர வர நீ விசு மாதிரி நெஞ்ச நக்க ஆரம்பிச்சிட்டே. குடும்பத்தோடு சேர்ந்து வாசிக்க வேண்டிய ஆக்கம்னு டைட்டில் கார்ட் போடலாம்ப்பா.

ZAKIR HUSSAIN சொன்னது…

//மண்டபத்திலே யாரும் எழுதித் தந்ததை வாங்கி//

மண்டபமா...ரொம்ப தூரம்லடா....ராமேஸ்வரம் பக்கம் நான் போனதில்லையே ------
கருத்து உபயம்: முஹம்மது இக்பால் [Camp: California]

crown சொன்னது…

ஆண்மகன் தான் தன் சகோதரியின் பொருளாதாரத்துக்கு பொறுப்பு, ஆண்மகன் தான் தன் சகோதரியின் பிள்ளைகளின் கல்யாணம் முடிந்தால் தனது பேரப் பிள்ளைகளின் தேவைக்கும் பொறுப்பு என்ற எழுதப்படாத சட்டம் நம் பகுதி ஆண்களின் தலையில் எழுதப்பட்டிருப்பதுதான். பெண்களை படிக்க வைத்து தனது சொந்த படிப்பையும் திறமையும் நம்ப விடாமல் அவர்களை தொடர்ந்து ஆண்களை சார்ந்து இருக்க வைக்கும் பழக்கம். தொடர்ந்து ஆண்களை சம்பாதிக்கும் எந்திரமாக்கியிருக்கிறது.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஏங்க ஒரு கேள்வி! ஆண்களுக்கு மட்டும் ஏன் வழுக்கை விழுகிறது?
எல்லாரும்(குடும்பத்தில்) ஆண்களின் தலையில் மிளகா அரைக்கிறதுனாலதான். சரிதான் ஜாஹிர் காக்கா இப்ப விடை கிடைச்சிடுச்சா நான் ஜூட். இலக்கை அடையனும் அல்லாவா?

crown சொன்னது…

முதன் முதலில் ஸ்டேம்ப் ஆகும் விசாவையும், முதன் முதலில் கிடைத்த ஏர்டிக்கட்டையும் பார்க்க இன்றைய தகப்பன்கள் எத்தனை நாள் பட்டினியாக இருந்திருப்பார்கள்.
----------------------------------------------------------------
பல தகப்பன்கள் வெறும் "பன்"னைமட்டும் மூன்று வேளைக்கும் டீயுடனோ,ஜாம் தடவியோ திண்று மிச்சம் பிடித்த அந்த உழைப்பு பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை! தெரிய வரும் போதும் அதை மறைத்து எளிமையாய் வாழும் தகப்பன்கள் தான் அதிகம்.

crown சொன்னது…

இத்தனை வருடத்து தியாகத்தையும் சில சமயங்களில் பிள்ளைகள் எப்படி ஒரே வார்த்தையில் பெற்றோர்களின் முதுகெழும்பை உடைக்க பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் விளங்காத வித்தை.
----------------------------------------------
ஆம் இன்னும் விளங்காத விசம் இந்த நடப்பு!

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

//தனது இளமையை, தனது கனவுகளை, தனது சுதந்திரத்தை எல்லாவற்றையும் பணயம் வைத்து, தனது பிள்ளைகள் நன்றாக படித்து பொறுப்புள்ளவர்களாக ஆகிவிட்டால் என் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் பணயம். அவர்களை பிள்ளைகள் காதல் என்ற பெயரிலும், வசதியான வாழ்க்கை வாழ வேண்டி அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதிலும் பெற்றோர்களை நோகடிப்பது எந்த வகையில் ஞாயம்?. இந்த பாவப்பட்ட பெற்றோர்கள் செய்த குற்றம்தான் என்ன...? பிள்ளைகளை நம்பியது தவறா?. பிள்ளைகளை நம்பாமல் வேறு யாரைத்தான் நம்புவது?.//

//முதன் முதலில் ஸ்டேம்ப் ஆகும் விசாவையும், முதன் முதலில் கிடைத்த ஏர்டிக்கட்டையும் பார்க்க இன்றைய தகப்பன்கள் எத்தனை நாள் பட்டினியாக இருந்திருப்பார்கள். எத்தனை நாள் பம்பாயில் கழிவறைக்கு கூட க்யூவில் வெகுநேரம் நின்றிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எத்தனை இன்டர்வியூ, எத்தனை ஏமாற்றங்கள்.. அத்தனையும் சுமந்துதான் நிமிர்ந்திருக்கிறார்கள்.//

அழவைத்தாய் அன்புச் சகோதரா!
பிழையெது என்று புரியவைத்தாய்!!

உற்றநண்பர் சொல்லிவிட்டார் //விசு மாதிரி நெஞ்ச நக்க ஆரம்பிச்சிட்டே. குடும்பத்தோடு சேர்ந்து வாசிக்க வேண்டிய ஆக்கம்னு டைட்டில் கார்ட் போடலாம்ப்பா. //ஆயினும் விட்டு விடாமல் தொடருங்கள்; மேலும் படிக்கட்டுகளில் ஏற நாங்கள் இருக்கின்றோம்

crown சொன்னது…

"நல்ல நட்பு கிடைக்காதவன் வறுமைக்குள் தள்ளப்பட்டவனுக்குசமம்."
ஆனால் இளமையின் துள்ளலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நட்பு உங்களுக்கு நஞ்சாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் திறமை உங்களுக்குள் இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------
மிகச்சரியாக சொன்னீர்கள் நல்ல நட்பு இல்லாதன் வ(வெ)றுமைக்கு(ள்) தள்ள(ளாட)பட்டவர்கள்தான். உயிர்காப்பான் தோழன் ஒரு சிலருக்குமட்டுமே! வளந்துவிட்ட நாகரீகம்?????? பணம் மோகம் கொண்டிருப்பதால் இப்ப வெல்லாம் உயிர் கேட்பான் தோழன் தான் அதிகம்.

crown சொன்னது…

இன்றைய இரவு உணவுக்காக நீங்கள் அமர்ந்திருக்க பசியுடன் தான் நீங்கள் தூங்கப்போக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்காமல் உங்கள் சாப்பாட்டு தட்டையில் உணவை பரிமார ஒருநாளும் தவராமல் உழைக்கும் ஜீவனை நீங்கள் எப்படி மதிக்க வேண்டும்.?

----------------------------------------------------------------
எல்லா பிள்ளைகளின் வாழ்கையும் தகப்பன்களின் முதுகே படிக்கட்டாக அமைந்து இருக்கு என்பது திண்ணம். ஒவ்வொரு வரிகளும் பூஸ்ட். இதை உணர்ந்து டேஸ்ட் செய்பவர்கள் வாழ்கை வேஸ்ட் ஆகாது.( சும்மா டி.ஆர் மாதிரி விட்டு பார்த்தேன்). ரமதான் எப்படி போகுது?

crown சொன்னது…

//திருமணப்பந்தலில் நிற்கும்
ஒரு
மணமகனின் கால்
குறைந்த பட்சம்
அடுத்த நாளே
உழைத்து சம்பாதிக்கும் உறுதியை
தன்னை நம்பி வந்தவளுக்கு
தர வேண்டும். //

கவிதை மச்சி கவிதை! இன்னாமா எழுதறேப்பா? சொந்தமாத்தான் இப்டிலாம் எழுதறியா இல்லை மண்டபத்திலே யாரும் எழுதித் தந்ததை வாங்கி இங்கு வந்து படிச்சி காட்டி பொற்காசுகளை கேட்கிறியா?
---------------------------------------------------------
திருமண பந்தலில்
நிற்கும் மணமகன்
சொந்த காலில் நின்று
நாளையை எதிர்னோக்கணும்
வந்த புது பந்தகால்(மனைவி)
கால் கட்டில் கிடைக்கும்
(வரதட்சனையெனும் பிச்சை)
வரவு என்பது நம் கால்கள் இருந்தும்
ஊனம் என்பதற்கு சாட்சியாகிவிடக்கூடாது
( ஜாகிர்காக்கா இப்படி கொஞ்ஜம் மாற்றி எழுதுனாலே நம்மூர்ல கவிஞர்னு பட்டம் தந்துடுவாங்க மயங்கிடாதியோ)!

Unknown சொன்னது…

நல்ல ஆக்கம் இன்றைய தலைமுறைக்கு தேவையான மருத்துவம். இந்த மருத்துவத்தால் பெற்றோருக்கு கொஞ்சம் இதமாக (ஏற்புறையாக) இருக்கும்.


உங்கள் குடும்ப கெளரவம், பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் சரியாக ஒடி வந்து உங்களிடம் அந்த ரிலே பட்டனை தர வருகிறார்.. நீங்கள் இன்னும் தயாராகாமல் நீங்கள் ஒட வேண்டிய தூரத்தையும் அவரையே ஒட சொல்வது எந்த வகையில் ஞாயம்.?


ரிலே பட்டனை கன்டிப்பாக குரிப்பிட்ட தூரதில் மற்றியே ஆகவேன்டும் இல்லா விட்டால் அது ஃபவுல் என்பதை தெரிவிக்க வேன்டும். நீன் முதலிடம் வராவிட்டாலும் அதற்கு அடுத்த இடத்தை பெற்றாலும் பரவாயில்லை என்று சொல்லி ஊக்கபடுத்த வேன்டும்.

குறைந்த பலனை தந்தாலும் பறவாயில்லை மகனே உன் திறனை வெளிபடுத்து என்றும் சொல்ல வேன்டும்
அதே வேலையில் குறைவில்லா மதிப்பிற்குரிய பெற்றோர் தன் பிள்ளையிடம் தான் பட்ட கஸ்டங்களையும் அதற்குரிய தருனதில் தன் பிளையிடம் நளினமாக சொல்ல தவருவதும் இந்நிலைக்கு காரனம் என்பதயும் உனரவேன்டும்.

ஆனால் அவர்களோ தன்பிள்ளையிடம் நம் கஸ்டத்தையெல்லாம் சொல்லக்கூடாது என்று நினைபதும் இந்நிலை ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
எனவே அதற்குரிய வயது வந்தவுடன் சில கஷ்டங்களையும் சொல்லி வளர்ப்பது பிள்ளைகளை கஸ்டப்படுத்துவதற்கு அல்ல நம் நிலைக்கு இஸ்டப் படுத்துவதற்குத்தான் என்பதை கவனத்தில் கொள்வோம்.

பெரும்பாலும் தாய் தந்தைகளில் இரு வகை
1.கண்டிக்காமல் (அறிவுரை சொல்லத்தெரியாமல்) பிள்ளைகளை நினைத்து கவலைக்கொல்வது
2.அதிகம் எதிர்பார்த்து, அதிகம் கன்டிப்பது, அவர்களை மட்டுருத்துவது.

போன்றவகையில் இருபதயும் மாற்றி கொள்ள பெற்றோர் முயல்வது மற்றத்தை தரும்.

ZAKIR HUSSAIN சொன்னது…

இந்த ஆக்கத்தில் நான் எழுதியிருக்கும் நம் இனமக்களின் கஸ்டங்களை ஒன்று கூட நான் அனுபவித்ததில்லை. எல்லோரும் வெளிநாட்டுக்கு வந்து இறங்கி நண்பர்களின் இடத்திலோ / கம்பெனி தரும் இடத்திலோதான் தங்குவார்கள். நான் வந்து இறங்கி சொந்த காரில் அழைத்து வரப்பட்டு, சொந்த வீட்டில் தங்கிய பாக்கியம் பெற்றவன் [ இறைவன் கருணையால் என் வாப்பா எல்லா வசதியும் பெற்று இருந்ததால்.]

இருப்பினும் என் சொந்தங்கள் / நண்பர்கள் பட்ட கஸ்டங்களை உண்மையாய் உணர்ந்தவன்.

ஆனால் கஸ்டங்களை பிள்ளைகளிடம் சொல்லாமல் வளர்ப்பது ஏற்புடையது அல்ல எனும் கருத்து சகோதரர் கிரவுன் / முஹம்மது புஹாரி சொல்வது சரி.கடுப்பில் சொல்லிக்காட்டாமல் நல்ல சமயங்களில் சொல்லிக்காட்டுவதே நல்லது.


சகோதரர் யாசிர் சொன்னமாதிரி ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் தானே தூக்கி சுமக்கும் தந்தைகளும் பிரச்சினைதான். இந்த வயதில் உள்ள பெரியவர்களின் "பிடிவாதம்" எனும் Firewall அவர்களை Re-Format செய்ய விடாமல் தடுக்கிறது.

Bro Kaviyanban

//ஆயினும் விட்டு விடாமல் தொடருங்கள்// will do that Insha Allah

Bro MHJ....Thanx for your comments

To AbuIbrahim
//உசுரோடு உறவாடியது அனைத்த்து வரிகளும் !//
உண்மைக்கு கிடைத்த பரிசு....[ கட் அவுட் வேண்டாம்]

to Bro MSM

//வெட்கப்பட வேண்டிய விசயத்திற்கு வெட்கப்படுவதில்லை. ஹலாலான விசயத்தில் வெட்கப்படச்சொல்வது எந்த ஒஸ்தாரு/ஹஜரத்து இவ்வொளுக்கு ஹதீஸு சொன்னாஹண்டு தெரியலெ......... //

நம் ஊரில் முல்லாக்களுக்கா பஞ்சம்?

to Sabeer

//கவிதை மச்சி கவிதை! இன்னாமா எழுதறேப்பா? //


விடுங்க பாஸ் ...இத்தினி நாளே நான் சுகுரா இல்லாம ஈந்துக்கிறேன்...

அப்துல்மாலிக் சொன்னது…

ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களுக்கே ஒவ்வொரு அத்தியாயத்தையும் செதுக்குறீங்க ஜாகிர் காக்கா, தகப்பனுக்கு ஒன்னும், தாய்க்கு ஒன்னும், மகளுக்கு ஒன்னும், மகனுக்கு இது..

// தொடர்ந்து ஆண்களை சம்பாதிக்கும் எந்திரமாக்கியிருக்கிறது.// பெண்பிள்ளைக்கு வீடு கொடுப்பதால் ஆண் எந்திரமாகிறான், இதைவிட்டால்தால் மனுஷனா இருப்பான் தனக்கும் தன் பிள்ளைக்கும் சந்தோஷமாக உழைப்பான்

அப்துல்மாலிக் சொன்னது…

// கல்யாணத்திற்கு பிறகு மனைவிக்கு தைக்கும் ஜாக்கெட்தையல் கூலியை கூட பெற்றோர்களிடம் கேட்கும// 20 ரூபாய்க்கு ஆசையாய் வாங்கும் மல்லியப்பூவையும் சொல்லுங்க... இதுக்கு கூட பெற்றோரிடம் கேட்கும் நிலமையில் ஆண்பிள்ளைகளுக்கு கல்லானம் செய்துவெச்சிடுறாங்க

அப்துல்மாலிக் சொன்னது…

// குடும்பத்தை காக்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தியாகத்தையும் பூஜ்யமாக்கும் சூழ்நிலையை , வார்த்தையை எப்படி தாங்க முடியும்.?// தன் ஆசை நிறைவேறி வீடு கட்டி, சொத்து வாங்கி ஒரு காலத்தில் சோர்ந்துபோய் ஊரிலே செட்டில் ஆக வரும்போது பிள்ளைகள் என்ற சொத்து நாசமா போய் தன் அனைத்து உழைப்பையும் வீணடித்து நிற்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்

அப்துல்மாலிக் சொன்னது…

// குடும்ப கெளரவம், பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி,// மற்றவரையும் ஓட்டக்களத்திலே தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓட தயாராக வைத்திருக்க வேண்டியது குடும்ப தலைவி/தலைவன் கடமை

பாராட்ட வார்த்தைகள் இல்லை...

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் சொன்னது…

SUPER ARTICLE BHAI. HATS OFF.

திருச்சி சையத் இப்ராஹீம் Trichy Syed Ibrahim திருச்சிக்காரன் திருச்சி்காரன் சொன்னது…

SUPER ARTICLE BHAI. HATS OFF.
Syed ibrahim.A
Dubai.

Shameed சொன்னது…

படிக்கட்டில் இப்போதான் வந்து ஏறினேன் நோன்பு பிடித்திருந்தாலும் களைப்பே தெரியவில்லை காரணம் நேர்த்தியான கட்டுரை

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

அன்புச் சகோ. ஜாஹிர், அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களின் இவ்வாக்கத்தை நகலெடுத்து என் மகன் மற்றும் அவரின் நண்பர்கட்கு அனுப்பினேன்; என் வீட்டிலும் என் மனைவி மற்றும் மகளாரும் படித்துப் பார்த்து விட்டு உங்களின் அபாரத் திறமையைப் புகழ்ந்து உங்கட்காக துஆ செய்வதாகச் சொன்னார்கள். உங்களின் இவ்வாக்கத்தால் ஊரில் ஒரு பையன் திருந்தினால் கூட நன்மைகள் யாவும உங்கட்கு அல்லாஹ் தாராளமாக வழங்குவான் அதிலும் ரமலானில் அதிக பட்சமான விகிதத்தில்!