Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதையே தெரியுமா !? 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2012 | , ,

மலையளவு சக்தி ...!
மடுவுக்குள் கவிதை

நீண்ட இன்பம் ....!
நொடிபொழுதில் கவிதை

அணுவின் சக்தி ...!
அசுரனின் கவிதை

கண் இழந்தவனுக்கு ..?
நாவின் சுவை
செவியின் ஓசை கவிதை

காது கேளாதோருக்கு ..?
வண்ண ஓவியங்கள் கவிதை

உறங்கியவனுக்கு...?
நல்ல கனவு கவிதை

விழித்தவனுக்கு...?
விரும்பியதெல்லாம் கவிதை

எதிர் பார்ப்பது.. கவிதை ..!
ஏன்..! என்பதும் கவிதை ..!
ஆம் ! என்பதும் கவிதை ..!

பொருளின் மூலம் கவிதை
விருச்சதின் விதை போல...
மழலையின் சிரிப்பு கவிதை

தாயின் அணைப்பு...
பிள்ளைக்கு கவிதை

குடல் தாகம்
தீர்ந்த குழந்தை...
தூளியில் துயில
சிறு உள்ளம் கேட்கும்
அங்கே
தாலாட்டும் கவிதை

கவிதையை நேசித்தால்
காலமெல்லாம் சுகம்
கவிஞனின் மூளை
ஆற்றின் நதி மூலம்

நீர் சுரந்து அதன் குமுறல்
ஆறாக சேர்ந்தபின்
அசுர பலம் கவிதை..

பலம்...
வாசகன் கையில்
வாசகமோ
கவிஞனின் கையில்...
வாசகனே
நல்ல கவிதை படி...

கவிஞனே. நல்ல கவி கொடு.
புவியை வாழ விடு
கவிதை எனும்
தேன் கூட்டில்
கவிஞனே ராணி தேனீ
விஷ தேனை அண்ட விடாது
கொட்டி விரட்டும் ராணி தேனீ போல
விஷ கரு கொண்ட கவியை
அடித்து விரட்டு...

கவிதையே தெரியுமா ?
நீயொரு !
வியப்பா...
வேண்டலா...
அச்சமா...
துச்சமா
அழுகையா...
சிரிப்பா...
வருடலா...
வசந்தமா

எந்த வகை கவிதை
நீங்களே சொல்லுங்கள்...

-அதிரை சித்தீக்

18 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பரு! கவிதைக்கு வரைவிலக்கணம்!

சித்தீக் காக்கா வின் கவிதை
சிந்தைக்கு சீர்தூக்கும் விதை
சில சமயம் இவ்வுலகுக்கு
சில சமயம் ஈருலகுக்கு

Adirai pasanga😎 said...

///எந்த வகை கவிதை
நீங்களே சொல்லுங்கள்...///

படிப்போரை ரசிக்கத் தூண்டும்
மாய ஜால க வி (த்) தை

Unknown said...

கவிஞனின் மூலை
ஆற்றின் நதி மூலம்

இந்த வரிகள் நல்ல வரிகள் சகோ சித்திக், இதுவரை கேட்டிராத உவமை. பாராட்டுகள்!

அன்புடன் புகாரி

crown said...

அஸ்ஸலாமுஅலைகும்.
1).மடுவுக்குள் கவிதை!
மலையளவு சக்தி ...!
2).நொடிபொழுதில் கவிதை,
நீண்ட இன்பம் ....!
3).அசுரனின் கவிதை,
அணுவின் சக்தி ...!
4).நாவின் சுவை கவிதை,
செவியின் ஓசை கவிதை-கண் இழந்தவனுக்கு!
5).வண்ண ஓவியங்கள் கவிதை-
காது கேளாதோருக்கு!
6).நல்ல கனவு ஒரு கவிதை!!!-
உறங்கியவனுக்கு!
7).விரும்பியதெல்லாம் கவிதை!-
விழிப்புடனிருப்பவனுக்கு.
(இன்னும் பகிர்ந்துகொள்ளவருவேன் பிறகு)

KALAM SHAICK ABDUL KADER said...

சித்திக்கின் கவிதை
சிந்தனைகளின் விதை
அத்தி பூத்தாற்போல்
அற்புதமான நடை

முரண்பாடே கவியழகு
உடன்படும் உன் வரியழு
குழந்தைக்குத் தாலாட்டும் கவிதை
குழந்தை பாடும் தாலாட்டும் கவிதை

தமிழூற்றுப் பீறிட்டதால்
தாகித்த நெஞ்சுக்கு
அமிழ்தான பானம்
அஃதே உங்கள் கானம்

குறிப்பு:
என் வலைத்தளத் தோட்டத்தில் உங்களின் வருகைப் பதிவின்றி என் கவிமலர்கள் வாடுகின்றன; உங்களின் தொடர்பு விவரம்/ மின்மடல் முகவரியுடன் வருக; அங்கே சென்று அன்பைச் சொல்லுக!

அதிரை என்.ஷஃபாத் said...

உள்ளப் பூங்காவில்
உதிர்ந்த விதைகளெல்லாம்
மெல்ல வெளிவந்து
மரமாகி
காயாகி
கனியாகி
வெடித்து மீண்டும்
விதையாகும்..

விதையில் தொடங்கி
விதையாய் தொடர்வதால்
க'விதை' என்றானதோ?

உங்கள் கவிதையும்
அங்ஙணமே
விதை தூவிச் செல்கின்றது.

/*கவிஞனின் மூலை
ஆற்றின் நதி மூலம்*/

ளகரம் லகரம்
ஆனது விகாரம்.

sabeer.abushahruk said...

//நீண்ட இன்பம் ....!
நொடிபொழுதில் கவிதை//

புள்ளி வைத்தாலும்
அதில்
ஒல்லியாகவாவதொரு செய்தி
சொல்லி வைப்பதே கவிதை!

வாழ்த்துகள் சகோ சித்திக்.

சொந்த அபிப்ராயம்: இன்னும் சற்றே எளிமையாக எழுதினால் சிந்தனை சிறப்பாக சென்றடையும்.

Ebrahim Ansari said...

அன்பு சகோதரர் சித்தீக் அவர்களே!

கவிதை என்பது பேசும் ஓவியம் ; ஓவியம் என்பது பேசாக்கவிதை.

ஆப்ரிக்காவின் அங்க்கோலாவிலிருந்து கஷடப்பட்டு கனெக்க்ஷன் வாங்கி

இப்ராஹீம் அன்சாரி.

KALAM SHAICK ABDUL KADER said...

//ஆப்ரிக்காவின் அங்க்கோலாவிலிருந்து கஷடப்பட்டு கனெக்க்ஷன் வாங்கி

இப்ராஹீம் அன்சாரி. //

ஒவ்வொரு கவிதையும் கவிஞனுக்கு ஒரு கஷ்டமான “சுகப்பிரசவம்”; அக்கவிதைக் குழந்தைகளக் காண வேண்டி “கஷ்டப்பட்டுக் கனெக்‌ஷன் வாங்கி” பிரசவம் பார்க்கும் மருத்துவர்க்கு கோடி கோடி நன்றி!

மூளையின் மூலையில் உதிக்கும் வார்த்தைகளைக் கோர்த்து வழங்கும் கவிஞர்கட்கு, உங்களைப் போன்ற இரசிகர் இல்லையெனில் மூலையில் கிடக்கும் அக்கவிமணிகள்!

இப்னு அப்துல் ரஜாக் said...

//தாயின் அணைப்பு...
பிள்ளைக்கு கவிதை//

நூத்துல ஒன்னு very nice

அதிரை சித்திக் said...

உள்ளத்தில் உள்ளதை அப்படியே .

கொட்டினேன் கவிதையாக ..சில மோதிர குட்டுகளும்

கைதட்டுகளும் கிடைத்தன ..வரும் பதிவுகளில்

நான் கவனமாக இருக்கிறேன் ..நெறியாளர்கள்

இன்னும் கவனமாக இருப்பார்கள் ...ஜாபரின் கவி தேட்டம் .

இன்னும் எழுத எனக்கு நாட்டம் ..என் நண்பன் சபீர் நான் எது

செய்தாலும் நன்று என்பான் என் மீது அவ்வளவு நம்பிக்கை

அருமை சகோ அகமது தாஹா ..தங்களின் பாராட்டு ,,எனக்கு

தாலாட்டு ...அன்பு கவி புகாரி அவர்களின் பாராட்டு ..என் கவிக்கு

மகுடம் ..தஸ்தகீரின் மடல் இன்னும் வரும் ..கரும்பு தின்ன கூலியா

வாருங்கள் ..வந்து கருத்தை தாருங்கள் ...கவியன்பன் கலாம் காக்கா ..

தங்கள் தளத்தை கண்டு வருகிறேன் ..எனனக்கு கவி பாடம் தரும் பள்ளி கூடம்

உங்களிடம் கவியும் அதிகம் அன்பும் அதிகம் ...அன்பு தம்பி ஷபாதின் எழுத்து

எனக்கு முன்பே பரிச்சயம் தமிலூற்றுக்கு அதிகமான கவிதை படைப்பு அனுப்பியுள்ளார்

எழுத்து பிழை ..என் தப்பில்லை ..தட்டச்சு ..கலையில் நான் இப்போதுதான் அரிச்சுவடி ..

அன்பு சகோ ..கவி சபீர் அவர்களின் அபிப்ராயப்படி என் கவியை சீர் படுத்தி கொள்கிறேன் ..

மூத்த சகோ ..அறிஞர் ..இபுராகிம் அன்சாரி காக்கா ..தங்களின் தேட்டம் ..உண்மையிலேயே

தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று ..நெறியாளர் அர ,அல.ஒரு சொல் என்றாலும் நச் ..

உண்மையிலேயே ,,நான் எழுத நினைத்தது ..கடைசி நான்கு வரிக்காக தான்

வாசகனே ..நல்ல கவிதையை ..படி

கவிஞனே நல்ல கவி கொடு ..புவியை வாழ விடு ..என்பதும்

அதற்கு உதாரணம் தேன் கூடு கவிதையாகவும் ..கவிஞன் ராணி தேனீ யாகவும்

வர்ணித்தேன் ..நல்ல கவி நல்ல த்தேன் ..துற்கவி ..தேனில் விஷம் ..

அவ்வளவு தான் ..நன்றி மீண்டும் பின்னூட்டங்களில் ...

Shameed said...

கவிதைக்கு மகுடம் சூட்டும் கவிதை

Yasir said...

கவிதைகளை விளக்கும் “ கோனார் கவிதை “ உங்களின் கவிதை....இவ்விதை இன்னும் வளர்ந்து மரமாக தளர்த்தொங்க வாழ்துக்கள் உண்மையாளரே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

N கவிதையே தெரியுமா !
A கவிதையே உன்னையே !
I கவிதையே வென்று !
N கவிதையே தெரியுமா !
A கவிதையே கவிதையே !

என்ன சொன்னேன்னு புரியலைன்னா... கவிதையே தெரியுமா !? :)))))

நல்ல கவிதைக்கும் குட்டுக்கள் விழும் எழுத்துக்களை தட்டும்போது சிதறியதால் !

சேக்கனா M. நிஜாம் said...

இக்கவிதை என்னையும் எழுத தூண்டும் ஒரு "கவிதை"யை !

crown said...

கவிதையே தெரியுமா ?
நீயொரு !
வியப்பாக...
வேண்டலாக...
அச்சமாக...
அழுகையாக...
சிரிப்பாக...
வருடலாக...
வசந்தமாக
இருக்கிறாய்.!!!!!
( கடன் வாங்கிய அபிப்ராயம்: இன்னும் சற்றே எளிமையாக எழுதினால் சிந்தனை சிறப்பாக சென்றடையும்).
வரிகளை குறைத்தால் இன்னும் நளினமாக இருக்கும் என்பது என் சொந்த கருத்து.

KALAM SHAICK ABDUL KADER said...

செந்தமிழும் நாப்பழக்கம் சித்திக்கின் சொற்பழக்கம்
தந்துவிழும் பாக்களாய்த் தான்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு