Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அறுக்கிறாங்க பாஸ் ! - அதிரையில் மாடுகள்... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2012 | , ,


அன்பார்ந்த அதிரை பெருமக்களே ! வாக்குரிமை பெற்ற அனைத்து வாக்காளர்களே ! எங்களை பாசத்தோடு / மிரட்சியோடு பார்க்கும் பச்சிளம் குழந்தைகளே ! இன்னும் எங்களால் பயன்களடையும் பயனாளிகளே !

உங்கள் அனைவருக்கும் முதற்கண் வரவேற்று (உங்களது சத்தங்களுக்கு இடையே) எங்களது குரலையும் செவி சாய்க்க உளமார கேட்டுக் கொள்கிறேன்.

நம்மள மாதிரி ஆளுங்களை, ஸாரி உங்கள மாதிரி மனுசங்களை எங்களோடு ஒப்பிட்டுப் பேசிய காலமெல்லாம் மலையேறிச் சென்று விட்டது. எங்களை மனுசனுங்களுக்கு நிகராக அவர்களின் சபை முன்வைத்து பேசப்படும், எடுக்கப்படும், விமர்சிக்கப்படும், நிலமையை நினைத்து வியப்பில் ஆழ்ந்திருக்கிறோம். அதோடு இதென்ன புது வாழ்வு என்று மற்றவர்கள் எங்களைப் பார்த்து பொறாமைப் படும் அளவுக்கு எங்களை வைத்து அரசியல் செய்கிறீர்கள் !

அந்தக் காலங்களில் (இப்போ மட்டும் என்னாவம்னு கேள்வியெல்லாம் ஊடலா கேட்கப்டாது, தனி வீடியோ / பதிவாகத்தான் கேட்கனும்) இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எங்களைக் கண்டாலே, ஏனோ பிடிக்காது அதனால்தான் எங்களை மேய்க்க மனுசங்களைதான் துணைக்கு போகச் சொன்னார்கள். காரணம், அன்று நன்றாக நீங்களெல்லாம் படித்திருந்தால் அப்படியொரு அவமான நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்காது.


ஆனால் இன்றோ வேறுவிதமாக இருக்கிறது ! எங்களை வச்சு தேர்தல் சின்னம் தான் செய்றாய்ங்கன்னு பார்த்தா! உள்ளூர் அரசியலல்லவா செய்றாங்க ! ஏனுங்க இப்படி !!?

முட்டி மோதிக் கொள்ள வேறு இன பிரானிகளே இல்லையா.. ! அப்படி என்னதாங்க நாங்கள் உங்களை செய்தோம், சும்மா போனவங்களை முட்டி வம்புக்கு இழுத்தோமா ? நாங்க பாட்டுக்கு எங்க வேலையுண்டு எங்களுக்கும் சாலைகள்(!!) உண்டு என்றிருந்தோம். நம்ம தலைங்க சிறப்பு அந்தஸ்து கொடுத்து சிறப்பிக்கிறாங்களா ? சிதைக்கிறாங்களா ? ன்னு ஒரே கொழப்பமா இருக்குங்க...


எங்களை வைத்து உங்களுக்குள் ஏய்த்துக்கொண்டிருக்காமல் மேய்த்துக்கொள்வதே மேல் அல்லவா.  இப்போவெல்லாம் தமிழ்நாட்டில் அரசியலில் ‘அம்மா’ என்றாலே விடிவு பிறக்குதாம்.  நாங்களும் ஒரு நாளைக்கு எத்தனை தடவைத்தான் “ம்மா” என்று கத்துவது? எங்களை விட்டுவிடுங்களேன்.  நாங்கள் வந்தமா வாழ்ந்தமா, ரயில்ல அடிபடுமுன் அறுபட்டமா, இறைச்சியானோமா செறித்தோமா என்று எங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறோமே ப்ளீஸ்.

போய் வேலையைப் பாருங்களய்யாமார்களே. !

அவசியம் இத நோட் செய்துக்குங்க : எப்படி வேனும்னாலும் எங்களை வச்சு சமையல் நல்லா செய்துகிடுங்க ஆனா எங்கள வச்சு நீங்க முட்டி மோதிக்கதீங்க பாஸ்(ஸு)ங்களா !!!

எங்க ஆளுங்க புலம்புறதை இங்கே கொஞ்சம் கேளுங்க பாஸ் !

"ப்ளீஸ் - எங்களுக்கு ஓட்டுரிமை வாங்கி கொடுத்தீங்கன்னா, எல்லோரையும் முட்டியே சாய்ச்சுடலாம் பாஸ் !"

"அட சொன்னேனே கேட்டியா அந்த கேட்ட தாண்டாதே ரயில் வந்துடப்போவுது"

"இவண பாருடா மனுச மாதிரி ஓரம நடந்து போறான்"

"இவய்ங்க வேற நம்மல நிம்மதியா ரோட்டுல போவ உடுறாய்ங்களா!"

"போஸ்டர் தின்ன காலமெல்லாம் கப்பலேறிடுச்சுங்க, வேற என்னங்க எங்கள வச்சு அடிச்ச போஸ்டரை நாங்க எப்படிங்க சாப்பிடுவோம்"

"ஊர் சுத்தமா இருக்கட்டுமே, அதனால் எங்களை சுற்றாமல் இருங்க மக்களே"

ரமளானுக்கு முன்னாடி வாலை சுருட்டிகிட்டு இருந்திடுங்களேன் ப்ளீஸ் !

m.nainathambi-அபுஇபுறாஹிம்
புகைப்படம் : Sஹமீத்

8 Responses So Far:

sabeer.abushahruk said...

இன்னுமா அசை போடப்படுகிறது?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ரெயிலு மேட்டரு சூப்பரு!

அதிரையில் மாடும்
அதெ வச்சு நடத்துற சாக்கடெ அரசியலும்
அதுலெ நீங்க பண்ணுற நாடகமும்.........


மறுபடி அந்த மாடு உள்ளே வருதா...
அதெ கொஞ்ச விரட்டுங்க...
போதும் இந்த மாட்டு அரசியல்....
வடிவேலு இனிமே ரெயிலெ மாட்டு கண்ணுலெ காட்டாதியோ..
அப்பறம் அது சீரியசாகி....
மறு பேட்டின்னு உருவெடுத்து வீடியோ நிருபர் கிட்டே நீங்க பிரபலமாகிடுவீங்க!
கடைசிலெ நாங்க மண்டையெ பிச்சுக்கிடனும்....

U.ABOOBACKER (MK) said...

தம்பி, ரொம்பதான் லொள்ளு பண்றீங்க.!உங்க லொள்ளு தாங்க முடியாம அதிரை அரசியல்வாதிகள் அரசியலை விட்டே ஓடி போய்விடுவங்க! அப்புறம் உங்களுக்கு அறுக்க மேட்டரு கிடைக்காது.பாவம் விட்டுருங்க.. அரசியல்வாதியை.. சாரி மாட்டை!

Ebrahim Ansari said...

சொந்த வீட்டுக்கு சூனியம் வைப்பவர்களுக்கு இது முட்டுமா சாரி எட்டுமா?

Aboobakkar, Can. said...

ஆடு,மாடு,கோழி யெல்லாம் மனுசன்களிடம் மாட்டிகிட்டு பாவப்பட்டஜென்மங்கல்.

அப்துல்மாலிக் said...

எப்படிவேணும்னாலும் அரசியல் செய்யலாம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று...!

அபூ சுஹைமா said...

சரியான அறுவை! :-)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு