Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வளைகுடா விடுப்பு - பயனம் 4 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 05, 2013 | , , ,


ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கையில் இடையில் சிக்னலில் நிறுத்தத்திற்கான விளக்கு எரிந்ததால் ஆட்டோ நின்றது .

அஹமது ஆட்டோ ஓட்டுனரிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தார் “என்னப்பா சென்னை வாழ்க்கையில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை சமாளிக்க முடிகின்றதா?”

“பேஜார்தான் சார் வண்டி சொந்த வண்டியில்ல சார் நமக்கு சம்பளத்துக்கே கட்ட மாட்டிக்கீது சார்”

“வேறு தொழில் ஏதாவது செய்ய வேண்டியது தானே !?”

“வேற ஒன்னுந் தெரியாது சார்!”

“என்ன படிச்சிருக்கே?”

“டென்த் பாஸாகிட்டு பாலிடெக்னிக் (ஆட்டோ மொபைல்) படிச்சேன் சார் ஏ அப்பன் கஸ்மாலம் நீ பாலிடெக்னிக் படிச்சிட்டு ஆட்டோதானே ஓட்டப்போறே அத இப்பவே ஓட்டுன்னு வாடக ஆட்டோவ கையாண்ட கொடுத்துட்டான் சார், அப்ப ஓட்ட ஆரம்பித்தது ஓட்டிகினே இருக்கேன்.”

“வேற பொழுது போக்கு என்ன?”

“நல்லா கவித எழுதுவேன் சார்”

“அப்டியா!?”

“எங்க கவிதை ஒன்னு சொல்லேன்”

“பொம்னாட்டிங்க இருக்காங்க சார்”

“நல்ல எழுச்சியான கவிதை ஒன்னுசொல்லு!”

கேட்டுக்கோ சார்
விழுந்தால் விதையாகிடு
எழுந்தால் மரமாகிடு
கிடைத்தால் சிறப்பாக்கிடு
உயர்ந்தால் உருவாக்கிடு
படி..........

“சார் சிக்னல் விழுந்துச்சு, சார் அப்பால ஒரு சமயம் கெடச்சா சொல்றேன் வண்டி ஓட்றப்ப கவிதை சொன்னா டிஸ்ட்ரப்பாயிடுவேன் சார் சும்மா பேசிகினு வரலாம் சார்”

“ஒகே... ஒகே...”

“கவித சொல்ரப்ப நல்லா தமிழ் பேசுறே மத்த நேரத்துல சென்னை தமிழ் பேசுரியே?”

அதற்குள்  T-nagar வந்தடைந்ததும் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு ஜவுளிக்கடை நோக்கி நடக்கலாயினர். அஹமதுவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி... 

ஆமினா பட்டென்று கண்ணில் பட்ட ஒரு ஜவுளிக்கடையில் ஏறினாள்.

“அது போத்தீசல்ல அங்கே இருக்கு” என்று அஹமது கையை படக்கென்று சுட்டிக்காட்ட

“தெரியுந் தெரியும்”

“அப்ப ஏன் இந்த கடைக்குப் போறே”

“இரண்டு மூனு கடை ஏறி வெலய விசாரித்தா தானே நல்லாருக்கும்”

‘பரவாயில்ல பொண்டாட்டி நமக்கு ஒத்துழைத்தால் உள்ளூர் வியாபாரத்திற்கு தோதா இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அஹமது. (சுத்தவிடப் போகிறாள் மனைவி என்பதை அறியாது) கடைக்குள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு.

“சார், மேடம்,,, என்ன பாக்குறீங்க?”

“பட்டு பொடவ”

“முதல் மாடிக்கு போங்க” என்று வழிகாட்டி விட்டார்.

லிப்டில் மேலே சென்று பட்டு செலக்ஷனை அடைந்து பல வகைகளை பார்வையிட்டார்கள் புடவையை கடை காரர் காட்டிக் கொண்டிருக்கையிலே ஆமினாவின் கண்கள் வேறு திசைக்கு சென்றது.

“ஏமா நா காட்டிக்கிட்டு இருக்கையிலே எங்கோ பாக்குரீங்களே?”  அங்கிருந்த சேல்ஸ்மேன் கேட்டார்.

“இந்தக் கடை சரி வராதுங்க” கோபமாக வெளியேறினாள் ஆமினா.


இப்படியே பல கடைகள் ஏறி இறங்க கடைசியில் போத்தீசுக்கே பெப்பே அங்கும் கலர் சரியில்லை என்று வாங்காமல் திரும்பிவிட்டாள். அந்தகடையில் பாவப்’பட்டு’ ஜட்டியும் பனியனும் தனக்காக வாங்கினான் விலை 285 ரூபாய். கடைசியாக ஒரு பிரபல்யமான கடையில் எடுத்தாகி விட்டது பட்டுப்புடவை! 9200 ரூபாய்க்கு.

“உன் பட்டுப் புடவையின் விலை 12,200/- ரூவா” என்றார்.

சட்டென திரும்பிய ஆமினா “என்னங்க சொல்ரிய!?”

“ஆமா பஸ்சு ஆட்டோ மற்ற செலவுகள் 3,000/- உன் புடவை 9,200 மொத்தம் 12,200 தானே?”

“வல்லா-நாளையில அத யான்ங் என் பொடவை யோட சேக்கிரிய வேனுன்னா உங்க ஜட்டி பனியன் செலவோட 3,285/- ன்னு வச்சிக்குங்க நல்லா இருக்கே சமத்துதான்.”

கடையிலிருந்து வெளியேறினார்கள் ஆமினாவிடம் அஹமது பொறுமையாக கேட்டார். “ஏம்மா 7-8 கடை ஏறி இறங்கி ஒரு பட்டுப்புடவை எடுத்தியே? ஆதிகாலத்து மனுசிங்க [கற்காலம்] தன் ஆடைகளுக்கு வெறும் இலை தழைகளை தான் உடுத்தினாங்க தெரியுமா?”

“தெரியுந் தெரியும்… அந்த இலைகளுக்கு எத்தன மரங்கள் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றதும் அஹ்மதுடைய நிலமையை நீங்களே யூகிச்சுக்கிடுங்க.
தொடரும்...
மு.செ.மு.சஃபீர் அஹமது

15 Responses So Far:

Unknown said...

//வல்லா-நாளையில அத யான்ங் என் பொடவை யோட சேக்கிரிய // :)

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா,ரொம்ப சூப்பரா கதைய நகத்துறீங்க.ஆனால் பெண்களை பேராசை உள்ளவங்களா காட்டுனா தாய்க்குலம் கொவிசிக்கபோறாங்க .

அப்புறம் அஹமது காக்காவை அவர் என்று சொல்லும்போது ,கொஞ்சம் வயசானவர் மாதிரி ஒரு பீலிங் ,அதினால் அவன் அவன் என்று கதையை கொண்டுபோனால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன் .

சகோதரி ஆமினாவின் லாஜிக் மிக சரி

அதிரை சித்திக் said...

தெரியுந் தெரியும்… அந்த இலைகளுக்கு எத்தன மரங்கள் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றதும் அஹ்மதுடைய நிலமையை நீங்களே யூகிச்சுக்கிடுங்க

Ebrahim Ansari said...

//கடையிலிருந்து வெளியேறினார்கள் ஆமினாவிடம் அஹமது பொறுமையாக கேட்டார். “ஏம்மா 7-8 கடை ஏறி இறங்கி ஒரு பட்டுப்புடவை எடுத்தியே? ஆதிகாலத்து மனுசிங்க [கற்காலம்] தன் ஆடைகளுக்கு வெறும் இலை தழைகளை தான் உடுத்தினாங்க தெரியுமா?”

“தெரியுந் தெரியும்… அந்த இலைகளுக்கு எத்தன மரங்கள் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றதும் அஹ்மதுடைய நிலமையை நீங்களே யூகிச்சுக்கிடுங்க.//

தர்க்க சாஸ்திரங்களின் பல பரிமாணங்களை நமது பெண்களிடம் நாம் கற்றுக் கொள்ளலாம்.

அண்மையில் நான் கேட்டது.

மகன்: ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்தானே உம்மா.

உம்மா: தனிமரம் தோப்பாகாதே வாப்பா.

தொழிலதிபர் எழுதுவது போலவா இருக்கிறது? ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சாயல் தெரிகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஒன்றரை மாத அஹமதுவின் பயணத்தில் தீனுடைய கேள்வியில் ஆரம்பித்து ஆமினாடெ அலம்பலில் மாட்டிக் கொண்டிருக்காரே! சீக்கினம் அஹமது போய்விடுவதே நல்லது. ஆனால் அஹமது கடந்த பாதையை தொடர்ந்து எழுதுங்கள்! நல்லாயிருக்கு.
-------------------------------------------------

ரபியுள் அவ்வல் பிறை 23
ஹிஜ்ரி 1434

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

என் கதையை ஆழமாக படித்து இருக்கிண்றீர் ஆலாலுக்கு பிடித்த வரிகளை எடுத்துக்காட்டி ரசனையை தெரியப்படுத்துகிண்றீர்கள் எழுத்தாலனை ஊக்கப்படுத்தும் செயல் ஜசக்கல்லஹ் ஹைர் இபுறாஹீம் காக்கா அவர்களுக்கு எழுத்தாளனும் தெழிளதிபராகளாம்,தொ,, வும் எழுத்தாளனாகளாம்
T நகர் முந்தய ஸ்டாப்பில் ஒரு பைத்தியம் T நகர் போகாதீங்க T நகர் போகாதிங்க என்று சப்தமிட்ட வன்னம் இருக்கிறாராம் யாராக இருக்கும்

Unknown said...

அதிரையர்களின் பேருந்து!
http://adiraipost.blogspot.in/2013/02/blog-post_738.html

sabeer.abushahruk said...

சுவாரஸ்யமான உரையாடல்கள்.

ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் காட்சியமைப்பு.

கலக்குங்க சஃபீர் பாய்.

KALAM SHAICK ABDUL KADER said...

அதிரை டூ சென்னைக்கு அழகிய பேருந்தும் வந்தாச்சு; இனிமேல் அடிக்கடி சென்னை போத்தீஸ்க்குப் போகும் சேலைச் சோலைகள்!

தொழிலதிபரிடம் கதை வாங்கிப் படம் எடுத்தால் “விஸவரூபமாகி” விடுமோ? தாய்க்குலத்தோர் இக்கதையை விரும்புவார்களா? கதாசிரியரைத் திட்டுவார்களா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் காட்சியமைப்பு.

அஹ்மது போன்று பொருமையானவர்கள் நம்மில் எத்தனை பேர்?

Ebrahim Ansari said...

//அஹ்மது போன்று பொருமையானவர்கள் நம்மில் எத்தனை பேர்?//
தம்பி தாஜுதீன்!

பெரும்பாலானோர் நம்மில் பொறுமையாளர்கள்.( ஆண்களைச் சொல்கிறேன். )

ஒரு நன்கு ஒதிப் படித்த ஆலிம்சா இருந்தாராம். அவர் வீட்டில் பெண் மாப்பிள்ளை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போது சம்பந்தி இடம் ஆலிம்சாவின் மனைவி சொன்னார்களாம்

" எங்க ஊட்டு ஆலிம்சாவுக்கு ஒன்னும் தெரியாது. நீங்க அவர் பேச்சைக் கேட்டு சீர் சீராட்டை குறைச்சுடாதீங்க" ஆலிம்சா நினைத்தாராம் ஊரே என் பேச்சைக் கேட்குது ஊட்டுலே நம்ம நிலை இப்படி. இதே நிலைமை ஒரு தெருவின் பஞ்சாயத்து- நாட்டாமைக்கும் ஏற்பட்டதாம்.

அண்ட மா முனிவரெல்லாம் அடங்கினார் அம்மையார்களிடம்.


அப்துல்மாலிக் said...

//தெரியுந் தெரியும்… அந்த இலைகளுக்கு எத்தன மரங்கள் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?”//

படிச்சாலும் படிக்காவிட்டாலும் இது நம்மூர் பொம்பளைங்களுக்கே உரிய குசும்புத்தனம்

நல்ல் தைரியம்தான் காக்கா இதை உங்க மனைவி படிக்க மாட்டாங்க என்று :)

Yasir said...

படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் தொடர் அதிலும் நம்மூர் பாஷையில் இருப்பது கூடுதல் சிறப்பு....தொடருங்க காக்கா

Unknown said...

Marriege is a relationship in which one person is always right and the other is the Husband!!!

Adirai pasanga😎 said...

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர் நோக்கும் வண்ண,ம் ஊர் ரசனையுடன் விருவிருப்பாக உள்ளது கதை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.