Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட வினோதினி மரணம்! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2013 | , , ,


சென்னை : காதலை ஏற்க மறுத்ததால் மென்பொருள் பொறியாளரான வினோதினி மீது கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று சுரேஷ் ஆசிட் ஊற்றினார். ஆசிட் வீச்சில் பார்வை இழந்த வினோதினி சிகிச்சைக்காக சென்னை கீழ்ப் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாகச் வினோதினி சிரமப்பட்டு வந்தார். மூச்சுத் திணறல் கடுமையாக இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வினோதினி மரணம் அடைந்தார்.

நன்றி : www.inneram.com


ஆசிட் வீச்சில் பலியான வினோதினி அப்பா கதறல் பேட்டி

வினோதினி அப்பா ஜெயபால் கூறியதாவது: காரைக்காலில் தனியார் நிறுவன வாட்ச்மேனாக இருக்கிறேன். எனக்கு ஒரே மகள் வினோதினி. மகளை படிக்க வைத்து பெரிய பதவிக்கு கொண்டு வரவேண்டும், நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மகள் சாவதற்கு முன், ‘அப்பா.. நான் எவ்வளவு துடிதுடித்து கஷ்டப்படுகிறேனோ அதுபோல் என் மீது ஆசிட் வீசிய கொடூரனும் அனுபவிக்க வேண்டும்.

அவனை தூக்கில் போட கூடாது. தூக்கில் போட்டு விட்டால் ஒரு நிமிடத்தில் உயிர் போய் விடும். அவன் முகத்திலும் ஆசிட் வீச வேண்டும். அப்போதுதான் அந்த வேதனை என்னவென்று அவனுக்கும் புரியும். அதேபோல் உலகம் முழுவதும் அந்த சுரேஷ் போல் உள்ள மற்றவர்களுக்கும் நான் பட்ட கஷ்டம் புரியும்' என்றாள். மகள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் என் மகள் வாழ்க்கையை அழித்த கொடூரனை சித்ரவதை செய்து கொல்ல வேண்டும்.இவ்வாறு ஜெயபால் கதறி அழுதபடி கூறினார்.  திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய்மாமன் ரமேஷ் கூறுகையில், ‘மருமகள் வினோதினி சாவு போல் நாட்டில் எந்த பெண்ணுக்கும் ஏற்பட கூடாது. அவள் எப்படியாவது பிழைத்து விடுவாள் என்று நினைத்தோம். எங்களை விட்டு பிரிந்து விட்டாள். கடந்த ஒரு மாதமாக பேச முடியாமல் தவித்தார் வினோதினி. ஆசிட் வீசப்பட்டதால் முகம் வெந்துவிட்டது. தினமும் கொடுமையை அனுபவித்தாள். சுரேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

நன்றி : தினகரன்

அதிரைநிருபரில் சென்றவார செய்தியில் வினோதினி பற்றி வெளியான செய்தித் தொகுப்பு.



பரிந்துரை : அதிரைநிருபர் பதிப்பகம்

19 Responses So Far:

U.ABOOBACKER (MK) said...

கொடூர கொலை செய்த கொலைகாரன் சுரேஷுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை அளித்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் ஒழியும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பாவம் அந்தப்பொண்ணு. நாட்டு பொதுஜனங்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நீதிமன்றமும், மத்திய‌ அரசும் இந்த அப்பாவி பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதி/கொடுமைக்காக மக்களின் ஏகோபித்த முடிவுக்காக (ரேட்டிங்ஸ்) காத்துக்கொண்டிருக்காமல் உரியதை உடனே செய்யுமா?

த‌ன் ஒரே ம‌க‌ளை இழ‌ந்து வாடும் அந்த‌ வ‌ய‌தான‌ பெற்றோர்க‌ளுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ அக‌ராதியில் வார்த்தைக‌ள் இல்லை. ப‌டைத்த‌வ‌னே அமைதிப்ப‌டுத்த‌ட்டும்.

டெல்லி ச‌ம்ப‌வ‌ம் போல் நாட்டு ம‌க்க‌ள் வெகுண்டெழ இதிலும் விழிப்புணர்வு உண்டாக்க இந்த‌ பெண்ணின் சாதி, ம‌த‌ம் த‌டையாக‌ இருக்குமோ????


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காதலர் தினம் என்ற கலாச்சார சீர்கேட்டுக்கு தயார் படுத்தும் கேடுகெட்ட மிடியாக்கள் இந்த கதறலை புறைந்தள்ளிவிட்டு விடும்....

பாதிக்கப்பட்டவனின் வேதனையை புரிந்து கொள்ளாத ஆட்சியாளனும் நீதி மன்றமும் பெரும்பபலான மனசாட்சியின் அடிப்படியில் வழங்கும் தீர்ப்பு இந்த அபலைக்கும் கிடைக்குமா ?

பெரும்பாலான மக்களின் தீர்வு ஆசிட் வீசியவனுக்கு மரணதண்டனை !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பெரும்பாண்மை சமூகம் செய்யும் சிறு,பெரு தவறுகளும், சிறுபாண்மை சமூகம் செய்யும் சிறு,பெரு தவறுகளும் சட்டத்தின் முன் சமமாக்கப்பட வேண்டும்.

சிறுபாண்மை சமூகத்தைச்சார்ந்தவர் செய்வதால் சிறு தவறுகளும் பூதாகரமாக்கப்பட வேண்டாம். அதே வேளை, பெரும்பாண்மை சமூகத்தினரால் செய்யப்படும் பொழுது அது வெறும் புஸ்வானமாக்கப்பட்டு விட வேண்டாம்.

நாட்டு பொதுஜனங்களின் ஏகோபித்த ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு என்னவெனில் குற்றம்புரியும் அரசியல்வாதிகள் எவ்வித பாரபட்சமுமின்றி தூக்கிலிடப்பட வேண்டும் என்பதே இதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

நம் நாட்டு அரசு கண்டதையும் செய்து கண்டவரின் நாடிப்பிடித்து பார்ப்பதை விட நல்லதைச்செய்து எல்லோருக்கும் உற்ற நண்பனாக இருந்து விட்டு போகட்டும்.

Unknown said...

Her last wish is to punish her tormentor severely.
So What now???
Can anyone have the answer?
if yes, who will execute and when?

மனித உரிமை பேசும் புத்திரர்கள் எங்கே?
இதோ இந்த சகோதரியின் கடைசி ஆசை, பழிக்கு பழி.
இவளின் ஆழ்மன ஓலம் எவருக்கேனும் கேட்டதா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

டீ சர்ட், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு ஏதேனும் ஏற்பட்டால் தான் நாங்கள் களத்தில் குதிக்க முடியும். சுடிதார், பாவாடை, தாவணி போடும் கிராமத்து பெண்களுக்காக மன்னிக்கவும் எங்களால் ஒன்றும் செய்வதற்கில்லை என்று மகளிர் அமைப்புகளும், மனுஷ்ய புத்திரர்களும் தயவு செய்து இந்த விசயத்தில் ஒதுங்கிக்கொள்ளாதீர்கள்.

இது போன்ற சம்பவங்கள் எப்படா நடக்காது இரண்டு, மூணு பேரை சமூக ஆர்வலர்கள் என்று சொல்லி தமிழக தனியார் தொலைக்காட்சி சேனல்கள் புடித்துப்போட்டு மணிக்கணக்கில் உக்காந்து பேசி அங்கு வேலைசெய்பவர்கள் ஓவர் டைம் பார்த்து விடுவது என்னவ்வோ நிதர்சனமான உண்மை. அவர்களுக்கு செய்தி சேர்ந்து விடுகிறது ஆனால் மக்களின் அவலங்கள் ஓயவில்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

த‌ன் ஒரே ம‌க‌ளை இழ‌ந்து வாடும் அந்த‌ பெற்றோர்க‌ளை ப‌டைத்த‌வ‌னே அமைதிப்ப‌டுத்த‌ட்டும்.

டெல்லி ச‌ம்ப‌வ‌ம் போல் ஊடகங்கள் வெகுண்டெழ இதிலும் விழிப்புணர்வு உண்டாக்க இந்த‌ பெண்ணின் சாதி, ம‌த‌ம் த‌டையாக‌ இருக்குமோ!

அதிரை சித்திக் said...

கொடூர குணம் கொண்ட பாதகனுக்கு ..
பொது இடத்தில மரண தண்டனை வழங்க வேண்டும்

Unknown said...

Assalamu Alaikkum

My heartfelt condolences for the family who lost the sister Miss. Vinothini.

There are thousands of similar to this incidents happening every minute in India, only few are get published through media.

Instead of law and order is just reactive to the situations which is what happening nowadays, there must be proactive actions to be taken, such as severe punishment based on already established laws for abusing fellow human(children, women, and elders).

There must be campaign on educating on valuing the humanity regardless of religions and doctrines, in the secular country.

Islamic teachings which are universally applicable in this regard can be studied and implemented.

"Prevention is better than cure."



sabeer.abushahruk said...

ஷரீஅத் சட்டங்களை எதிர்த்து விமரிசிக்கும் மனிதநேயத்தோல் போர்த்திய மிருகங்கள் அறியட்டும், இந்த இந்துப் பெண்ணின் கடைசி ஆசை இஸ்லாத்தின் ஷரீயத்தை மட்டுமே ஒத்திருக்கின்றது என்று.

பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே வலியின் வீரியம் தெரியும்; பார்வையாளனுக்கு அல்ல என்பதை உணர்ந்து வகுப்பட்டவைதான் இறைச் சட்டங்கள்.

அமிலம் வீசியவன் தப்பித்தால்
இந்தச் சமுதாயத்தைக்
காரி
உமில வேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு சமயம் அந்தக்கொடும்பாவி துரதிஸ்டவசமாக ஏதேனும் ஒரு சிறுபாண்மையினத்தை சார்ந்தவனாக‌ இருந்திருந்தால் சட்டம் அதன் தீவிரத்தைக்காட்டி இருக்குமோ???

KALAM SHAICK ABDUL KADER said...

சினிமா என்னும் சீரழிக்கும் சாதனம் தான் அக்கொடியோனுக்குத் துணையாக இருந்திருக்க வேண்டும்; அதில் தான் இளம் பெண்களைத் தன் தகுதிக்கும் மேலாகக் காதலிப்பதும், அக்காதல் ஒருதலைக் காதலாய் இருந்தால் முகத்தில் அமிலத் திராவகத்தை ஊற்றிக் காதலை மறுத்த பெண்ணுக்குத் துன்பம் கொடுப்பதும் கற்றுக் கொடுக்கின்றனர் இயக்குநர்களும்/ கதாசிரியர்களும். எனவே, விபச்சாரத்தையும், காதல் என்ற போர்வையில் காமத்தையும் வளர்க்கும் சினிமாவைத் தடைச் செய்யுமா அரசு? வழியை அடைப்பதே சிறந்த வழி! இல்லையெனில் அரசின் மீதே பழி!!

Unknown said...

கொடூர கொலை செய்த கொலைகாரன் சுரேஷுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை அளித்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் ஒழியும்.

அலாவுதீன்.S. said...

பாதிக்கப்பட்ட பெண்னும், இவர் தந்தையும் விரும்புவது அந்த கொடியக் கயவனின் முகத்தில் ஆசிட்டை ஊற்ற வேண்டும். பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பதே. (மக்கள் வரிப்பணத்தில் சோறு போட சொல்ல வில்லை) பாதிக்கப்பட்டவர்களின் உள்ளம் நிம்மதி அடையச் செய்யும்படியான தண்டனையே சரியானதாக இருக்கும். மேலும் குற்றங்கள் குறையச் செய்யும். இந்த தண்டனை மக்கள் அனைவரும் பார்க்கும்படி இருக்க வேண்டும்.

இந்த உலகையும் உலக மாந்தர்களையும் படைத்த அடக்கியாளும் வல்லமை பொருந்திய சர்வ சக்தியாளன் அல்லாஹூ சுபுஹானத்தஆலா கூறுவதை: அரசாங்கம் நிறைவேற்றும் போது கொடுமையான குற்றங்கள் மறைந்தே போகும்.

மேலும் மருத்துவம் பணமுதலைகளின் கைகளில் போவதையும் மக்களின் மேல் அக்கரை உள்ள அரசாங்கம் கட்டுபடுத்த வேண்டும். ஏழை மருத்துவ செலவை அரசாங்கமே ஏற்று உதவி புரிய வேண்டும்.
மறைந்த இந்தப் பெண்ணுக்கும் சரியான மருத்துவம் உடனடியாகத் தரப்படவில்லை. ஏழை என்ற காரணத்தால் உயர்தர மருத்துவமும் தரப்படவில்லை. இறந்த பிறகு அரசாங்கம் தரும் பண உதவியால் என்ன பலன்.

இரவிலும் பகலிலும் கருப்பு கண்ணாடி மாட்டி அலைந்து கொண்டு இருக்கும் அறிவாளி மனிதர்களின் சிந்தனைக்கு : வல்ல அல்லாஹ்வின் அறிவிப்பு குர்ஆனில் வரும் வசனங்கள்:
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன் : 2:179)

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் : 5:45)

இப்னு அப்துல் ரஜாக் said...

ஷரீஅத் சட்டங்களை எதிர்த்து விமரிசிக்கும் மனிதநேயத்தோல் போர்த்திய மிருகங்கள் அறியட்டும், இந்த இந்துப் பெண்ணின் கடைசி ஆசை இஸ்லாத்தின் ஷரீயத்தை மட்டுமே ஒத்திருக்கின்றது என்று.

அலாவுதீன்.S. said...

இங்கு எல்லோரும் மரண தண்டனை தரும்படி கருத்தை சொல்லி வருகிறீர்கள். பெண்ணின் தந்தை என்ன கூறுகிறார். என் விருப்பமும் என்னுடைய மகளின் விருப்பமும் அந்த கயவன் செய்தது போல் அவனுடைய முகத்தில் ஆசிட்டை ஊற்ற வேண்டும். அவனும் 3, 4மாதம் என் மகள் துடிதுடித்து இறக்க வேண்டும் என்பதே. அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது. பழிக்குப் பழிதான் சரி என்று சொன்னார்.

இறந்த பெண்ணின் பேட்டியைப் பார்த்தேன். இந்த பெண்ணும் அந்த கொடியவனுக்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை கொடுக்கக் கூடாது. அவன் முகத்தில் ஆசிட்டைத்தான் ஊற்ற வேண்டும் -- இனி எந்தப் பெண்ணுக்கும் என் நிலை வரக்கூடாது என்று சொல்கிறது.

வல்ல அல்லாஹ்வும் என்ன கூறுகிறான்:
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன் : 2:179)
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் : 5:45)

Shameed said...

அர அல சொன்னது…

//ஷரீஅத் சட்டங்களை எதிர்த்து விமரிசிக்கும் மனிதநேயத்தோல் போர்த்திய மிருகங்கள் அறியட்டும், இந்த இந்துப் பெண்ணின் கடைசி ஆசை இஸ்லாத்தின் ஷரீயத்தை மட்டுமே ஒத்திருக்கின்றது என்று.//

எனது கருத்தும் இதுதான்

KALAM SHAICK ABDUL KADER said...

என் அன்பு நண்பர் / கவிஞர் பரங்கிப்பேட்டை இப்னு ஹம்தூன் அவர்களின் கவிதையை “இந்நேரம்.டாட். காம்” என்னும் வலைத்தளத்தில் படித்தேன்.; சகோதரி வினோதினியின் மரணம் கேட்பவர்கெல்லாம் வருத்தம்; அதனால் இந்நேரம் இங்கு இக்கவிதையைப் பதிவதும் பொருத்தம்:


வீசப்பட்ட திராவகத்தில்
உருகிச் சிதைந்தது
நீ மட்டுமில்லை
இதயமுள்ள எல்லோரும் தான்!
அது அமிலமல்ல
ஆணாதிக்கம்!

அமிலமே குருதியான ஒருவனால்
அன்றலர்ந்த மலர் நீ
அழிந்துபோனாய்
ஆயினும்...
அறநெறிச் சமூகத்தின்
ஆழ்மனசாட்சியில்
உன்னைப் பாதுகாக்காத துயரம்
உறுத்திக் கொண்டேயிருக்கும்

பெற்றோரின் நலம் விழையும்
பொறுப்புணர்வில்
பாடமானாய் எம் இளையோருக்கு.

உருக்குலைக்கப்பட்டாலும்
உனது உதடுகள் உரைத்த
இறுதிச் சொற்களில்
நெருப்பு இருந்தது
நியாயத்தின் நெருப்பு!

கயமைத்தனம் செய்வோரை
கடுமையாகத் தண்டிக்காவிட்டால்
வழமையாகி விடலாம்
வக்கிரங்கள்.
பழமையாகி விடலாம்
பண்பாடுகள்.

மானுடப் பூந்தோட்டத்தில்
இனியேனும் நடவாதிருக்கட்டும்
மிருக விநோதங்கள்!


Read more about விநோதினி! - நெருப்பில் கருகிய நறுமலர் : இப்னு ஹம்துன் [8945] | கவிதை | கலை at www.inneram.com

Adirai pasanga😎 said...

ஒரு புறம் வினோதினிகள்
மறு புறம் காதல்ர் தினம்
அதற்க்கு வரவேற்பு- வாழ்த்துக்கள்
கேவலம் இந்த சமுதாயம்
say no to drugs-also
say no to valentine's day

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு