Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2013 | ,

வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்கி வருவதை அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வார செய்தியில், இத்தாலி ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், 17 தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை, சிரியா புரட்சிப்படையினரின் முன்னேற்றம், வடகொரியா அணு குண்டு சோதனை, காரைக்கால் விநோதினி மரணம் மற்றும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை போன்ற செய்திகள் எமது பார்வையுடன் காணொளியாக உங்களனைவரின் பார்வைக்கும்.


இந்த வலைக்காட்சி பற்றிய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

அதிரைநிருபர் பதிப்பகம்

3 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"பாஜக ஆட்சியில் பாபர் மசூதி இடிக்கப்படவும் இல்லை; அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவும் இல்லை".

"விஸ்வரூபம்" படத்தை எதிர்ப்பவர்களெல்லாம் தேசதுரோகிகள்/தீவிரவாதிகள் என சமீபத்தில் சில அல்லக்கை முண்டங்களாலும், அவலங்கள் மட்டுமே அடைக்கலமாக உள்ள சில ஊடகங்களாலும் ஒரு வெக்கக்கேடான அளவு கோல் வைக்கப்பட்டது போல்

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்., சங்க்பரிவார கூட்டம் தான் நாட்டில் நடந்த‌ பெரும்பாண்மையான வெடிகுண்டுகளுக்கும், கலவரங்களுக்கும் காரணம் என உள்துறை அமைச்சர் ஷிண்டே பேசி சிண்டு முடிந்து (நான் திட்ற மாதிரி திட்றேன், நீ அதை எதுர்க்குற மாதிரி எதிர்த்துக்கோ) பிறகு ஆங்காங்கே போராட்டம் என வெகுண்டெழுந்த அக்கூட்டத்தை சாந்தி படுத்தவும், தன் உள்துறை அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவுமே நாடாளுமன்ற நேரடி தாக்குதலில் ஈடுபட்ட‌ 5 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு 11 வருடங்கள் ஆகியும் போடப்படாத தூக்கு அதில் சம்மந்தம் இருக்கலாம் என்ற‌ சந்தேகத்தின் பேரிலேயே அப்சல் குருவுக்கு தற்பொழுது (எங்கிருந்தோ வந்த திடீர்ப்பொது ஜ‌னங்களின் கூட்டு மனசாட்சி என்ற போர்வையில்) நிறைவேற்றப்பட்டுள்ளதாக நடுநிலையான அரசியல் பிரமுகர்களும், நாட்டில் மனசாட்சியுள்ளவர்களும் இதை கதருக்குள் புகுந்த காவியாகவே கருதுகின்றனர்.

அல்லாஹ் எதோ அரபு நாட்டுக்கடவுள் மட்டுமல்ல. அகிலத்திற்கே அவனே அதிபதி. அவனை பின்பற்றுவோர் உலகில் சில பகுதிகளில் சிறுபாண்மையானவர்களாக இருக்கலாம். அதனால் அவர்கள் வணங்கும் இறைவன் சக்தி குறைவானவனாக யாரும் எண்ணி விட வேண்டாம். அவன் நாடி விட்டால் ஒரு சிறு எரிகல் போதும் இவ்வுலகை சின்னாபிண்ணப்படுத்த.........இன்னும் அவன் பொறுமையுடன் இருப்பதாலேயே வானிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான எரிகற்கலை உலகை விட்டு எங்கோ திசை திருப்பி அனுப்பி நம்மை காத்துக்கொண்டிருக்கிறான். அதனால் அவனை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவனுக்கு நம்மிடமிருந்து ஒன்றும் தேவையில்லை. நமக்கே தெரியாத எதோ ஒரு காரணத்தாலேயே நம்மை இவ்வளவு அநியாய, அட்டூழியங்களுக்குப்பிறகும் பொறுமையுடன் காத்து வருகிறான்.

அல்லாஹூ அக்பர்.......(அமெரிக்காவை திருப்திபடுத்தி ஆஸ்கார் ஆசைக்காக‌ விஸ்வரூப படத்தில் முழங்கப்படும் அல்லாஹூ அக்பர் அல்ல இது) அல்லாஹ் மிகப்பெரியவன்........

sabeer.abushahruk said...

அமர்க்கலமான முயற்சி. அடுத்த வாசிப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

-குரலில் எலக்ட்ரானிக் கலவையும் ட்டெம்போ கூட்டல்களும் வேண்டாம்.

- தடுமாற்றத்தைக் குறைக்க வாசிப்பில் நிதானம் அவசியம்.

-செய்தியில் வாக்கியங்கள் ரிப்பீட் ஆவது கேட்பவரை அயற்சியிலாழ்த்தும்

- புது சுரபியின் ஆலோசனை கிடைக்காதா?

வாழ்த்துகள் அபு முஹம்மது

அலாவுதீன்.S. said...

நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!
சபீர் கருத்தை கவனித்தில் கொள்ளவும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு