Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் - தொடர்கிறது... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | February 18, 2013 | , , ,


அதிரைக்கு அருகிலிருக்கும் இராஜாமடம் பாலத்தை கடக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அதிரைக்கும் அந்த பாலத்திற்கும் அவ்வளவு தொப்புல் கொடி தொடர்பு போன்று நீண்டது....

அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் விடுமுறை நாட்களுக்கு இராஜாமடம் பாலம் ஒரு வடிகால் என்றால் மிகையில்லை. இங்கே அமீரக சாலைகள் கோடுபோட்டு வார்த்தெடுத்த சித்திரம் போன்று காட்சி தரும் இந்த சித்திரக் கவிதையை உற்று நோக்கிப் பாருங்கள் !

சிந்திக்க தூண்டில் போடுகிறதா என்று !?








ஷஃபி அஹ்மது

13 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

எல்லா போட்டோவிலும் இப்படி அதிரை நிருபரின் பெயர் எழுதியிருப்பது எனக்கு என்னவோ பள்ளிவாசல் / தர்கா போன்ற இடங்களில் ட்யூப்லைட் நன்கொடை கொடுத்தவர் தன்னுடைய குடும்பத்து இனிசியலுடன் பெயர் / ஊர் எழுதி வெளிச்சத்தை இருட்டடிப்பு செய்த மாதிரி இருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எல்லா போட்டோவிலும் இப்படி அதிரை நிருபரின் பெயர் எழுதியிருப்பது//

அந்தக் காலத்துல... டிவியை ஆஃப் செய்தாலும் ராஜீவ் காந்தி தெரியுறார்னு படித்த ஞாபகம்... அப்படி மேடையிலேயும், பத்திரிகையிலும் எழுதியவங்க... தனித் தனியா பத்திரிகையும், தொலைகாட்சியும் வைத்து கொண்டு அவங்கள மட்டுமே காட்டுறாங்களே !

ஏதோ பிரம்மையா இருக்குமோ !? :)

Ebrahim Ansari said...

சித்திரக் கவிதை - உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

ராஜாமடம் பாலம்:

என் ஏ எஸ் ஸார்
நாசர் ஸார்
முஹமது அலி
இர்ஃபான்
செய்யது
ஹமீது
ஜாகிர்
ஆரிஃப்
நிஜாம் அலி
ஷாவன்னாஸ்
சபீர்
க்வாலிஸ்
இளையராஜா
வெட்ட வெளி
சுட்ட கோழி
வட்ட நிலா
எட்ட உலா

அத்துணை அழகாக
வேறு
எத்தினங்களும் இரவுவதில்லை!

sabeer.abushahruk said...

Tunnel:

Dare
drive into darkness
where
spot of brightness
waiting for you

though 
the tunnel
is a piece of package
excluded from
the regular world
yet not
an exemption 
from the world

Live 
every moment of life
wherever you are!

sabeer.abushahruk said...

பாலம்:

சென்னையிலிருந்து
ஊருக்குப் போகும்போது
கம்பன் கடக்கும் பாலங்கள்
கனவுக் கோர்வையில்
கீறலிடும்

தொடர்ந்து பயணிப்பவரே
அடர்ந்த உறக்கத்தில்

அமீரகப் பாலங்களைக்
கட்டிமுடித்தோ
அதன்மீது
ஓட்டி உழைத்தோ
ஊருக்குச் செல்பவர்
உறங்குவரா

கம்பனைவிட
கடும் வேகத்தில்
ஊருக்கு முந்தும்
மனத்திற்கும் ரயிலுக்குமான
ரிலேட்டிவிட்டியை
எந்த
ஐன்ஸ்ட்டீனாலும் சொல்லமுடியாது!

அப்துல்மாலிக் said...

ராசாமடத்து பாலத்துலே மின் கம்பங்கள் இல்லாதது மட்டுமே மிச்சம்.....

sabeer.abushahruk said...

சாலை

பளிச்சென சாலை
வெறிச்சோடி - குறுக்கே
குதித்தோடி விளையாட
குழந்தைகளில்லை!


வெளிச்சச் சிதறல்கள்:

எத்தனை வெளிச்சப் பூச்சிகள்
கடித்துக் குதறுகின்றன
காரிருளை!

இருப்பினுன்
பெரும்புள்ளியால்கூட
பிய்த்தெடுத்துவிட முடியுமா
ராப்போதை?

Meerashah Rafia said...

Each photo contains 4 watermarks!!..
It looks too harsh [ I believe not my words :) ]

Unknown said...

Sabeer Kaka Rocks as always!
Thank you @Meerashah @Malik @Ebrahim
Thank @Naina Kaka for his reply to Mr.Zakir :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Each photo contains 4 watermarks!!..
It looks too harsh [ I believe not my words :) ]//

சரிதான் உற்றுப் பார்க்கச் சொன்னது சரியாத்தான் போச்சு ! :)

ஆனா ஒன்னுங்க ! இந்த சித்திரங்கள் தண்ணீரில் விழவேயில்லை ! :)

அதானே அதெப்படி வாட்டர் மார்க்ஸ் அங்கே !? :) :)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பல கிராமங்களுக்குள் புகுந்து கொண்டு வந்த தண்ணீரை கடலில் சேர்த்து சம்மந்தம் செய்து கொள்ளும் கடல் முகத்துவாரம் தான் ராஜாமடம்.

காற்றடி காலத்தில் பேய் போல் ஓலமிடும் ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் ஒரு புறமும், மூங்கில் மரங்கள் மறு புறமும் நம்மை எல்லாம் கட்சி பேதமின்றி வரவேற்று நிற்கும்.

சிறு மீன்கள் ஓடும் ஓடையில் கிச்சுகிச்சு விளையாண்டு தண்ணீர் மேல் துள்ளிக்குதிக்கும்.

தொழிற்சாலைகள் நம் சுற்று வட்டாரத்தில் இல்லாததால் தண்ணீர் அதன் சொந்த கலரிலேயே ஓடும்.

சாய்ங்காலத்தென்றல் அங்கு சாய்ந்திருப்போரை காசின்றி குசலம் விசாரித்துச்செல்லும்.

இடையிடையே பாலத்தின் கீழ் ஓடும் நீரின் அடிப்ப‌குதியிலிருந்து நீரின் மேற்ப‌குதிக்கு த‌வளையும், விரா மீனும் வ‌ந்து க‌ண்டு விளையாட்டு விளையாடிச்செல்லும்.

சுற்றுலாவிற்காக‌ காசு கொடுத்து எங்கெங்கோ இன்னோவாவில் சென்று வந்தாலும் என்ன‌வ்வோ இங்கிருக்கும் அமைதியில் க‌ல‌ப்ப‌ட‌ம் ஏதும் காண‌ இய‌லாது.

அங்கு தின‌ம், தின‌ம் மாலையில் சென்று வ‌ரும் ந‌ம் மூத்த‌வ‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இன்று மூர்ச்சையாகி சேர‌ வேண்டிய‌ இட‌ம் என்றோ சென்றுவிட்ட‌ன‌ர் ந‌ம‌க்கு முன்.

ராஜ‌ம‌ட‌ பால‌ம் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ப‌ல‌ ம‌னித‌ர்க‌ளை பார்த்திருக்கிற‌து ம‌த‌ங்க‌ளை பார்த்த‌தில்லை.

ஊர் செல்லும் பொழுதெல்லாம் அங்கு செல்லாம‌ல் இருப்ப‌தில்லை. கார‌ண‌ம் ந‌ம் சொந்த‌ப‌ந்த‌ங்க‌ள் போல் அதுவும் ஒரு எட்டு வ‌ந்து என்னை பார்க்க‌வில்லை என தனக்குள் வ‌ருத்த‌ப்ப‌ட்டுக்கொள்ள‌க்கூடாத‌ல்ல‌வா?

இன்னும் நிறைய‌ எழுத‌லாம் உள்ள‌க்கிட‌ங்கிலிருந்து......க‌ருத்து க‌ருத்தாக‌த்தான் இருக்க‌வேண்டுமேயொழிய‌ க‌ட்டுரையையே சாப்பிடும் அள‌வுக்கு இருந்து விட‌க்கூடாத‌ல்ல‌வா????

எம் ம‌ல‌ரும் நினைவுக‌ளைக்கிள‌றிய‌ த‌ம்பி ஷஃபி அஹ‌ம‌துக்கும் அதை அழ‌குற‌ வெளியிட்ட‌ அ.நி.க்கும் வாழ்த்துக்க‌ள்......

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு