Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம்! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2013 | , ,


இறைவன் அருளால் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ள மைக்ரோகாயல் அமைப்பை பற்றி அதிரை சகோதரர்களிடம் அறிமுக படுத்துவதில் ஆனந்தமடைகின்றோம். 

வசதி படைத்தவர்களையே விழிப் பிதுங்க வைக்கும் இன்றைய மருத்துவ செலவுகளினால், முறையான மருத்துவ உதவி உதவிகள் ஆரம்ப சிகிச்சையிலேயே தங்களுக்கு கிட்டாததினால் முற்றிவரும் பிணியுடன் குடும்பம் நடத்தி வரும்  ஏழை எளியவர்களின் நிலை நாமறிந்ததே.

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற காரணியை மூலதரமாக வைத்து பொருளாதாரத்தில் அல்லல்படும் நலிவுற்றவர்களின் துயர் துடைப்பதற்க்காக, இணைய தளம் (Online Fundraising) மூலம் மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்குவதற்காக தன்னார்வமிக்க சில சகோதரர்களால் கடந்த வருடம் மைக்ரோகாயல் அமைப்பு தொடங்கப்பட்டது, 

உதவி கோருபவர்களின் நோய் மற்றும் ஏழ்மை நிலை உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்களுடைய விண்ணப்பங்கள் (சுய விபரங்கள் மறைக்கப்பட்டு) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்க படுகின்றது. பின்னர், அனைவருக்கும் ஈமெயில் அலெர்ட்-ம் அனுப்ப படுகின்றது. அவ்விண்ணப்பங்களுக்கு உறுப்பினர்கள் இணைய தளம் வாயிலாகவே (PayPal / Bank Transfer) உதவி செய்யும் வசதியும் ஏற்படுத்த பட்டுள்ளது.  

எலும்பு முறிவு, கான்செர் நோய், கிட்னி பாதிப்பு என பலதரப்பட்ட நோய்களின் சிகிச்சைகளுக்காக இவ்வமைப்பின் இணையதளம் வாயிலாக ரூபாய் 5,05,120 திரட்டப்பட்டு, பாலகர் முதல் முதியவர் வரை என இருபதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பலனடைந்துள்ளனர். அது மட்டுமன்றி எமர்ஜென்சி மற்றும் குழந்தை / பள்ளி மாணாக்கர்களுக்கென தனி நலநிதிகள் (fund) உருவாக்கப்பட்டு அதன் மூலம் ரூபாய் 99,900 திரட்டபட்டு அவ்வகை காரணங்களுக்கு பயன்படுத்தபட்டு வருகின்றது. 


நம் சகோதரர்களை  ஊக்குவிப்பதற்காக  கீழே உள்ள  இரு திட்டங் களையும்  மைக்ரோகாயல் இணையதளம் இரண்டாம் வருடத்தில் அறிமுக படுத்தியுள்ளது.    


மைக்ரோகாயலில் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 இலவசமாக  மைக்ரோகாயல் இணையதளம் வழங்குகின்றது . இப்பணம் புதிய உறுப்பினர்களின் மைக்ரோகாயல் அக்கௌன்டில் வரவு (Credit ) வைக்கப்பட்டு, அதனை அவ்உறுப்பினர்கள்  தேவையுடைய விண்ணபங்களுக்கு முதலில் பயன்படுத்திக் கொள்ளலாம். மைக்ரோகாயலில்  உள்ள இரண்டு நிதிகளுக்கு (அதாவது EMERGENCY  அல்லது  CHILD CARE FUND) உதவும் நபர்களின் பங்கிற்கு ஏற்ப, அதே மடங்கு தொகையை (Matching Funds)  மைக்ரோகாயல் இணையதளமும் அந்த FUND  களுக்கு வழங்குகின்றது. உதாரணத்திற்கு ஒருவர்  இதன் மூலம் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்தால் அதே தொகை (ஆயிரம் ரூபாய்) மைக்ரோகாயல் இணையதளம் அன்பளிப்பு செய்யும். இதன் மூலம் ஒருவர் வழங்கும் அன்பளிப்பு / உதவி இரட்டிப்படைகின்றது.


மறுமைக்கு பயன்தரும் மூன்று விடயங்களில் முதன்மையானது, பிறருக்கு செய்யும் நிலையான தர்மம். இந்த நற்சேவையில் நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள்  உறுப்பினராக இணைந்து, தன்னால் இயன்ற உதவியை (அது இருநூறோ அல்லது ஐநூறோ) ஏழை எளியவர்களுக்கு  உதவி வருகின்றார்கள். அது மற்றுமன்றி  மாதந்தோரும் சந்தாக்களை மைக்ரோகாயல் அமைப்பிற்கு கொடுத்தும் வருகின்றார்கள். இது போன்ற தொடர்   ஆதரவு & உதவிகளை  என்றும் வாரி வழங்கிட நம் சகோதரர்களை மைக்ரோ காயல் இணையதளம் அன்புடன் அழைக்கின்றது

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் மைக்ரோகாயல் அமைப் பை ஈமெயில் மூலமாக அணுகலாம்.

தகவல் : சாளை முஹம்மத் முஹியத்தீன், ஒருகினைப்பாளர் மைக்ரோ காயல் அமைப்பு - www.microkayal.com 

பரிந்துரை : A.R.அப்துல் லத்தீஃப்

5 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

A great initiative by KayalPattinam brothers world wide focusing on financial assistance for medical purpose. Its a model using internet technologies that can be emulated to enhance 'Adirai Baithulmal' one of the pioneer non-profit organizations in Adirampattinam.

Hope brothers in 'Adirai Baithulmal' observe this news.

Thanks and best regards,

B. Ahamed Ameen
Dubai.

Unknown said...

அதிரைக்கு அல்லாஹ்வின் ரஹ்மத்

இன்ஷாஅல்லாஹ்...

விரைவில்...

http://adiraipost.blogspot.in/2013/02/blog-post_4.html

Ebrahim Ansari said...

ஐக்கிய நல சங்கம் என்ற அமைப்பில் கூத்தா நல்லூரில் ஒரு அமைப்பு இப்படி சில மருத்துவம் தொடர்புடைய நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். பலர் பயனடைந்து இருக்கிறார்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\Assalamu Alaikkum

A great initiative by KayalPattinam brothers world wide focusing on financial assistance for medical purpose. Its a model using internet technologies that can be emulated to enhance 'Adirai Baithulmal' one of the pioneer non-profit organizations in Adirampattinam.

Hope brothers in 'Adirai Baithulmal' observe this news.

Thanks and best regards,//

Well said Bro. Ameen. No need to commence new organization again and again as we have ABM which can serve to our community in this medical facility.

இப்னு அப்துல் ரஜாக் said...

Thanks to Adirai nirubar chief editor for posting this article.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு