Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எரிகல் ரஷ்யாவை தாக்கியது – ஓர் பாடம். 2

அதிரைநிருபர் | February 23, 2013 | , , ,

ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கி ஆயிரம் பேர் காயமடைந்தனர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின. வானில் அடிக்கடி பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யாவில் கடந்த வாரம் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. மாஸ்கோவில் இருந்து 1,500 கிமீ தொலைவில் உள்ளது செல்யாபின்ஸ்க் நகரம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான இங்கு, நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீடுகளில் மக்கள் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது, காலை 9 மணியளவில் வானத்தில் இருந்து பூமியை நோக்கி நெருப்பு பந்துகள் பறந்து வந்தன. 200 கிமீ சுற்றளவுக்கு இது தெளிவாக தெரிந்தது. பூமிக்கு அருகே வந்ததும் இந்த எரிகற்கள் வெடித்து சிதறி, வெள்ளை புகை மண்டலமாக மாறின. இந்த வெடிச்சத்தம், அந்த பகுதி முழுவதும் பிரதிபலித்தது. பூகம்பம் ஏற்பட்டது போல் கட்டிடங்கள் ஆடின. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.




செர்பியாவில் கடந்த 1908ம் ஆண்டு இதுபோல் பெரிய எரிகல் ஒன்று வளிமண்டலத்தில் நுழைந்தபோது வெடித்த சிதறியது. இதனால் ஏற்பட்ட அதிர்வு, துங்கஸ்கா என்ற பகுதியை தாக்கியது. இதனால், 820 சதுர மைல் அளவுக்கு, 8 கோடி மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஆனால், எரிகல் விழுந்ததால் எந்த இடத்திலும் சிறிய பள்ளம் கூற ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் தினமும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. விண்கற்கள், எரிகற்கள், எரி நட்சத்திரங்கள் கீழே விழுந்து எரிந்து சாம்பலாகின்றன. சூரியனில் இருந்து வெளிப்படும் அதிக சக்தி கொண்ட நெருப்பு போன்ற பந்துகளும் விண்ணில் இருந்து கீழே விழுகின்றன. ஆனால், பூமிக்கு வருவதற்குள் அவை எரிந்து முடிந்து விடுகின்றன. விண்கற்கள், எரிகற்கள் மிக பெரிய அளவில் இருக்கும் போது அரிதாக பூமியில் விழுந்த சம்பவங்களும் உண்டு.
பின் வரும் இறைமறை வசனங்களில் மூலம் அல்லாஹ்வின் சக்தி என்னவென்பதை நாம் அறியலாம்.

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம். அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (குர்ஆன் 11:82, 11:83)

பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (குர்ஆன் 15:74)

மேலும் கஃபாவை உடைக்க வந்த கும்பலை எப்படி அல்லாஹ் அழித்தான் என்பதை பின் வரும் சூரத்தூல் ஃபீல் அத்தியாத்தின் மூலம் நாம் அறியலாம்.

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (குர்ஆன் 105:1 – 105:5)

ரஷ்யாவை தாக்கிய எரிகல் நிகழ்வின் மூலம் ஒன்று மட்டும் நமக்கு புலப்படுகிறது. இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதில் முன்னனியில் இருக்கும் ரஷ்யா, அமெரிக்காவிற்கு இது அல்லாஹ்வின் ஒரு எச்சரிக்கை என்று சொன்னால் மிகையில்லை.

-- அதிரைநிருபர் பதிப்பகம்

2 Responses So Far:

عبد الرحيم بن جميل said...

நிச்சையமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்!அல்லாஹ் அந்நியாயக்காரர்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவர்களோ தங்களது செயல்களை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அமெரிக்க ரஸ்யா மட்டுமல்ல, இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதிலும், அநியாயமாக குற்றம் சாட்டி கற்பனை இயக்கம் உருவாக்கி முன்னணியில் இருக்கும் காவி ஊடகங்களுக்கும் இது அல்லாஹ்வின் ஒரு எச்சரிக்கை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு