தொடர் : ஏழு
மதங்களும் பொருளாதார இயலும் ( தொடர்ச்சி).
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தொடரைப் படித்த அன்பின் சகோதரர்கள் சில கேள்விகளைக் கேட்டு இருந்தார்கள். தொடரைத் தொடரும் முன்பாக எனக்குத்தெரிந்தவரை அவர்களுக்கு பதில் கூறிவிட நினைக்கிறேன்.
முதலாவதாக அபுதாபியிலிருந்து கவியன்பன் கலாம் அவர்கள்
முற்றிலுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்குத் துறவறத்தைப் போதிக்கும் சூஃபிஸம் மற்றும் தப்லீக் பயான்களிலும் இருப்பதால் நம்மிலும் இப்படிப் பொருளாதாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். – என்று கேட்டிருந்தார்கள். சூபிசம் பற்றிய அவர்களின் கேள்விக்கு நான் திருமறையின் கீழ்க்கண்ட வாசகத்தையே பதிலாகத் தர விரும்புகிறேன்.
''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.'' (அல்குர்ஆன் 57:27).
அரிப்பு எடுக்காமலேயே சிலர் சொரிந்து கொள்வார்கள் . இதுவும் அப்படித்தான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
அடுத்து தப்லீக் பற்றிய கேள்விக்கு பதிலாக நான் பட்ட உணர்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பதில் தர முடியும். இவை எனது சொந்தக் கருத்துக்கள். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை. என்னைப் பொருத்தவரை இளமையில், ஓதும் பள்ளிகளுக்கு அல்லது மதரசாக்களுக்குச் சென்று மார்க்கக் கல்வி என்று தனியாக பயில வாய்ப்பு அமையாத பலருக்கு அடிப்படையான மார்க்க அறிவைத் தந்தது தப்லீக் இயக்கம் என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இன்று பல்வேறு இயக்கங்களில் இருந்துகொண்டு பலவித விளக்கங்கள் சொல்லி வரும் பெரும்பான்மையான பலரும் இந்த தப்லீக்கில் ஆரம்ப காலத்தில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை மறுக்க முடியாது. தப்லீக் பற்றி பலவித ஆதரவு மற்றும் எதிர்ப்பான கருத்துக்களை பல மார்க்கம் பயின்ற அறிஞர்கள் சொல்லி வருவதால் நமது உணர்வுகளை மட்டும் சொல்லி இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறேன். சில இளைஞர்கள் தப்லீக்கின் காரணமாக பொருள் ஈட்டுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே நேரம் தப்லீக்கின் காரணமாக மட்டுமா இருக்கிறார்கள்? இன்று பல்கிப் பெருகி இருக்கிற பல்வேறு இயக்கங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தங்களின் வாழ்வை இப்படி வீணடித்துக் கொண்டு அரசியல் கலந்த வாடையுடன் அணிவகுத்தும் நிற்கிறார்களே –ஆர்வக் கோளாறு காரணமாக உடன் பிறந்த சகோதரனை, உற்றார் உறவினரை- உடன் பயின்றவனை - ஊர் மக்களை- உடனுறையும் தெருவாரை- பங்காளிகளைப் பகையாளிகளாகப் பார்த்து ஒற்றுமை இன்றி விலகிப்போகும் பழக்கம் மேலோங்கிவிட்டதே – வெட்டுப் பழி குத்துப் பழி விளைந்து வருகிறதே- என்கிற சமுதாயத்தின் சாக்கடை காட்சிகளுக்கு மத்தியில் அமைதியாக மார்க்கப் பணி ஆற்றும் தப்லீக் சிறந்ததே என்பது என் கருத்து. உழைப்பின் உன்னதத்தை உணராமல் தப்லீக் உட்பட எந்த ஒரு இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு வாழும் நாட்களை வீணடிப்பதை ஏற்க முடியாது. இப்படி பல குடும்பங்களின் உழைக்கும் வல்லமை பெற்ற இளைஞர்கள் திசை மாறிய பறவைகளாய் பறப்பதை ஏற்கவே முடியாது. உழைக்கிற நேரத்தில் உழைக்க வேண்டும்- தொழுகை நேரத்தில் தொழ வேண்டும்- சமூகப் பணி ஆற்றும் நேரத்தில் சமூகப் பணி ஆற்ற வேண்டும் என்று வகுத்துக் கொண்டால் யாருக்கும் பிரச்னை வராது.
“Work while you work
Play while you play
That is the way
To be Happy and Gay “ - என்று ஆறாம் வகுப்பிலேயே படித்து இருக்கிறோமே.
அடுத்து தம்பி அஹமது அமீன் அவர்கள்
///“ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உறுப்பெற்ற
பேருஞ்சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ்சதமல்ல, செல்வஞ்சதமல்ல, தேசத்திலே
யாருஞ்சதமல்ல நின் தாள் சதங்கச்சியே கம்பனே !" என்று பாடுகிறார்.//
The above poetry is reflecting the trust and dependence towards poet's God.
Most of the mumblings of poets are their personal views cannot be considered for internalizing as a country's or personal's code of ethics.
என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. ஒன்று, நான் மேற்கோளாகக் காட்டியுள்ள பட்டினத்தார் பாடலில் உள்ளவை பட்டினத்தார் தான் நம்பும் கடவுளின் மேல் பட்டினத்தாருக்குள்ள பக்தியை பறை சாற்றுவது. இரண்டு , இப்பாடலில் உள்ள கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்கள்; அவற்றை வைத்து ஒரு நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தை எடை போடக் கூடாது என்று தம்பி அமீன் அவர்கள் கூறுவதாக நான் புரிந்து கொள்கிறேன். இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே வகையில் பதில் சொல்ல விரும்புகிறேன்.
முதலில் பட்டினத்தார் உடைய வரலாறு சொல்வதைப் பகிர விரும்புகிறேன். கோவலன் பிறந்த காவிரிப் பூம்பட்டிணத்தில் பெரும் செல்வந்தராகவும் மிகப் பெரும் வணிகருள் ஒருவராகவும் வாழ்ந்தவர்தான் பட்டினத்தார். இவருக்கு குழந்தை இல்லை என்று மிகவும் கவலைப்பட்ட நிலையில் ஒரு கிணற்றங்கரையில் கிடந்த ஒரு ஆண் குழந்தையை எடுத்து வளர்த்தாராம். வணிகத்தின் முறைகளை அந்தக் குழந்தைக்குப் பயிற்றுவித்து அவனை ஒரு கப்பல் நிறைய சரக்குகளுடன் வெளி நாடுகளுக்கு அனுப்பினாராம். அவருடைய வளர்ப்பு மகனும் கொண்டு போன சரக்குகளை விற்றுவிட்டு மீண்டும் கப்பல் நிறைய சரக்குகளை ஏற்றிக் கொண்டு காவிரிப் பூம்பட்டினம் திரும்பியபோது , பெரும் செல்வந்தரான பட்டினத்தார் தனது வளர்ப்பு மகன் கொண்டு வந்திருந்த பெட்டிகளை இறக்கிப் பிரித்து முத்தும் பவளமு தங்கமும் இருக்குமென எதிர்பார்த்து ஆவலுடன் பார்த்த போது உள்ளே இருந்ததோ மாட்டுச் சாணத்தினால் செய்யப்பட்ட விராட்டியும் தவிட்டு மூட்டைகளும் மட்டுமே. அதிர்ச்சி அடைந்த பட்டினத்தாருக்கு “ காதற்ற ஊசியும் வராது காணும் கடை வழிக்கே” என்று மாயமாய் மறைந்துவிட்ட வளர்ப்பு மகன் எழுதி வைத்த ஓலை ஒன்று கிடைத்ததால் அன்றே அப்பொழுதே எல்லாவற்றையும் போட்டது போட்டாற்போல் விட்டு விட்டு துறவியானார் என்பது வழங்கப் படும் வரலாறு.
பட்டினத்தார் விரும்பும் கடவுள்களை அவர் வழிபட்டதில் நாம் குறுக்கிடவில்லை. இவ்வளவு செல்வம் படைத்தவர் ஒரே சொல்லில் அனைத்தையும் துறந்தது அந்த வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துத் தலைப்புச் செய்தி ஆயிற்று. அவர் சொன்னவைகளை மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். மிக எளிமையான பல பாடல்களை பாடி, மக்களை துறவு மனப்பான்மைக்குள் திணித்துத் தள்ளினார் என்பதே நாம் வைக்க விரும்பும் செய்தி.
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
இப்படியெல்லாம் பல இடங்களிலும் பட்டினத்தார் பாடி வரும்போது அவரைச்சுற்றி சோம்பேறி பக்த கோடிகள் – பஜனை கோஷ்டிகள் கூடியதால் மனித உழைப்பு விரயப் பட்டது என்பதை சுட்டவே பட்டினத்தாரை ஒரே ஒரு உதாரணமாக நான் சுட்டிக் காட்டினேன். அந்தக் கால கட்டத்தில் அவர் பாடிய பாடல்கள் மக்களிடையே ஹிட்டானவையாகும். இதே போல் பல பாடல்கள்- பற்பல சித்தர்கள் பாடி மக்களை உழைத்து முன்னேறவிடாமல் சோம்பேறிகளாக்கினர்.
தம்பி அஹமது அமீன் அவர்கள் கூறுவதுபோல் ஒரு தனி மனிதன் தான் விரும்பும் கடவுளை துதி செய்தான் என்றால் இந்தப் பாட்டுக்கள் வெளிவராமல் தோப்புக் கரணம் போட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு போதனையாக உழைக்காதே! செல்வம் தேடாதே! சுகம் தேடாதே! எல்லாம் வீண்! பிறவி ஒரு மாயை! உலகம் ஒரு சூன்யம்! தேடி என்ன புண்ணியம்! எதுவும் நிலைக்காது! என்கிற உழைப்புக்கு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பிய காரணத்தால் - இவைகளை பின்பற்ற ஒரு கூட்டம் அவர் பின்னால் சிங்கி அடித்துக் கொண்டு – பிச்சை எடுத்துக் கொண்டு – சுற்ற இத்தகைய பாடல்கள் பின் விளைவுகளை விதைத்ததால் இந்தக் கட்டுரையில் அதைக் கையாள வேண்டி வந்தது.
இப்படியெல்லாம் பற்பல சித்தர்களும் துறவிகளும் பாடி அந்தக் கருத்துக்கள் மக்கள் மனதில் புகுந்து உலக வாழ்வே ஒரு மாயை- பிறப்பதே ஒரு சுமை என்ற எதிர்மறை மனப்பான்மையை வளர்க்கும் கருத்துக்களுக்கு எதிராக அல்லாஹ் வழங்கிய அருள் மறை வேதம் மனிதப் பிறவிகளுக்கு நான் இருக்கிறேன்! கவலைப் படாதே! என்று நம்பிக்கை ஊட்டுகிறதே என்பதுதான் நமது ஒப்பீடு. இப்படிப் பட்ட ஒப்பீடுகளை பின்னர் சுட்டிக் காட்டவே பட்டினத்தார் பாடல்களை நாம் பயன்படுத்த வேண்டி வந்தது.
அல்லாஹ் தனது அருள் மறையிலே கூறுகிறான்
உன்னத உணவு வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன்: அறிவு மிக்கவன்; மன்னித்தருள் பவன். ( 22: 58-66)
அருள்பாலிப்பவன்: உணவும் பானமும் அளிப்பவன் ; துன்பங்களை அகற்றுபவன்; படைப்பினங்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவன் . ( 6: 12-18)
பேரண்டம் முழுவதற்கும் அதிபதி; உரிமையாளன்; எஜமானன்; பரிபாலித்து வளர்ப்பவன்; ஆட்சியாளன் ( 1:1) நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர் பட்டினத்தாரே? மற்றவர்களையும் கவலைப்பட வைக்கிறீர் ?
இவ்வுலக வசதிகளை தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி அளிக்கின்றான் (2:212)
அவன் அனைவருக்கும் உணவளிக்கின்றான் ( 6: 14) (பிச்சை எடுத்து சாப்பிடு என்று சொல்லவில்லை .)
உங்களுக்காகவும் நீங்கள் உணவளிக்காத படைப்பினங்களுக்காகவும் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தினான் ( 15: 19-22)
பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது ( 11: 6)
ஆகவே மீண்டும் சொல்கிறேன். அல்லாஹ்வின் அருள் மறையை ஒப்பிட்டு மனித வாழ்வும் பிறவியும் மகத்தானது . அல்லாஹ் மனிதனை சாதிக்கவே படைத்தான் ; எண்ணற்ற இன்பங்களை நேர்வழியில் இனிமையாக அனுபவிக்கவே படைத்தான். (mumblings of poets ) பாட்டெழுதிப் புலம்பப் படைக்கவில்லை. கையறு நிலையில் நின்று கதறப் படைக்க வில்லை. உண்ணவும் உடுத்தவும் மனைவி மக்களை வைத்து சுகிக்கவும் புசிக்கவும் படைத்து நன்மை தீமைகளை நபிமார்களை அனுப்பி வழியும் காட்டினான். இக்கருத்துக்களை இயன்ற அளவு எடுத்துரைப்பதே இந்த ஆக்கங்களின் நோக்கம்.
மிக அருமையான கருத்தை கேள்வியாக எழுப்பி சில சிந்தனைகளை இங்குப் பகிர உதவிய இள நெஞ்சினரான தம்பி அஹமது அமீன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவரது அருமையான சிந்தனைச் சிதறல்கள் சில உண்மைகளை வெளிக்கொணர காரணமாயின.
கவிஞர் தம்பி சபீர் அவர்கள் கேட்பது
குப்பன் பணக்காரனாயிருப்பதற்கும் சுப்பன் ஏழையா இருப்பதற்கும் குப்பனுஞ்சுப்பனுந்தானே காக்கா காரணம்? பொருளாதாரக் கொள்கை இதில் எங்கே வருது?
உண்மையில் தாங்கள் குறிப்பிட்டு இருப்பதைப் போல் தொடக்கத்தில் பார்த்தால் இது ஒரு கண்ணைக் கட்டும் கேள்விதான்.
ஒரே சமுதாயத்தில் ஒரே சூழ்நிலையில் பிறந்து வளரும் குப்பனும் சுப்பனும் வாழ்க்கை வசதிகளில் நேர் மாறான நிலைக்குப் போவதற்கு அவரவரின் சொந்தப் பழக்கங்கள் காரணங்களானாலும் – மனிதர்களை உருவாக்குவது அவர்களது எண்ணம். நான் ஒன்றும் குப்பனும் சுப்பனும் ஆடம் ஸ்மித்தையும் ஆல்பிரெட் மார்ஷேளையும் எங்கேல்சின் பொருளாதார விதிகளையும் மல்துசின் மக்கள்தொகை கோட்பாடுகளையும் படித்து தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று சொல்ல வரவில்லை. அவரவர் இயல்பும் எண்ணங்களும் அவரவரை உருவாக்கும் கருவிகள். பொருளாதாரக் கொள்கை என்று மட்டும் கணபதி அய்யர் போல் “ சிம்பிளாக” சொல்வதானால் வீணாகிற குடிப்பழக்கத் துக்காக குப்பன் செலவு செய்யாமல் சேமிக்கிறான். சேமிப்பு முதலீட்டை உருவாக்குகிறது என்று சொல்லிவிடலாம். அந்த அவனின் எண்ணமே வாழ்வு.
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய்வரலாம். அதே நேரம் எண்ணங்கள் தானாகவும் உண்டாகலாம் – உதிக்கலாம்- உலகைப் பார்த்தும் உண்டாகலாம். நல்ல செயல்களும் நல்ல ஒழுக்கங்களும் நன்மைகளைத்தரும் என்று அறிந்தவன் உயர்வான் அந்த எண்ணம இழந்தவன் தாழ்வான். இது தனிமனித ஒழுக்கத்தில் ஆரம்பிக்கும் சமூகப் பொருளாதாரம் . தனித் தனி மனிதன்தான் சமுதாயத்தை உருவாக்குகிறான். தனி மனித ஒழுக்கம் உயரும்போது குப்பன் போன்றவர்களின் பொருளாதாரமும் உயர்கிறது. குடிக்கும் சுப்பன் தனது பொருள்களை வீணான வழியில் செலவு செய்கிறான். குடிக்காத குப்பன் தனது பொருள்களை விரயம் செய்யாமல் சேமிக்கிறான் ; சிறக்கிறான். குப்பனின் குடிசையிலும் சுப்பனின் சேரியிலும் மனிதனின் இயல்பான பொருளாதார கவனம் இரத்த அணுக்களிலும் எண்ணங்களிலும் இருக்கவே செய்யும். அதுவே அவர்களை உயர்த்தும் அல்லது தாழ்த்தும். அத்துடன்
அல்லாஹ் தான் நாடுவோர்க்கு நேர்வழி காட்டுகிறான் ( 24: 45-46) என்பது திருமறை.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது என்பது நபி மொழி. ( அறிவிப்பாளர் : உமர் இப்னு ஹத்தாப் ஸஹீஹுள் புகாரி பாகம்:1 அத்.: 1).
“எவ்வினையோர்க்கும் இம்மையில் தம்மை இயக்குதற்க்கு இன்பம் பயக்குமோர் இலக்கு” என்று மனோன்மணீய காப்பியம் கூறுகிறது.
“ தீதும் நன்றும் பிற தர வாரா” – என்றார் கணியன் பூங்குன்றனார்.
கடந்த வாரம் தொடரின் நிறைவுப் பகுதியில் குறிப்பிட்டவை அப்படியே இன்னும் பேசப்படாமல் இருக்கின்றன. வரும் வாரம் இன்னும் நிறையப் பேச வேண்டி இருக்கிறது .
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
இபுராஹீம் அன்சாரி
36 Responses So Far:
மூவரின் கருத்துக்கு முறையான விளக்கம்.
அதில் தப்லீக்கினர் பற்றிய கருத்து மிகச் சரி.
நன்றி காக்கா.
-------------------------------------------------------------------------------------------
ரபியுள் அவ்வல் 27 ஹிஜ்ரி 1434
மூவரின் கருத்துக்கு முறையான விளக்கம்.
அதில் தப்லீக்கினர் பற்றிய கருத்து மிகச் சரி.
நன்றி காக்கா.
-----------------------------------
முஹம்மது பந்தரில் நடைபெறும் இஜ்திமா, இஹ்லாசோடு நடைபெறவும், அதன் பரக்கத்தைக்கொண்டு அங்கு கலந்து கொள்பவர்களுக்கும் ,அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ,அதிரையிலும் ,மற்றும் தமிழ் நாடு ,இந்தியா,மேலும் முழு உலகிலும் உள்ள அனைத்து முஸ்லிம் ஆன்,பெண் அனைவர்களுடய வாழ்விலும் நூற்றுக்கு நூறு ஷரீயத்துடைய வாழ்க்கை வருவதற்கும் ,நபி (ஸல்) அவர்களுடைய சுன்னத்தின் பிரகாரம் நடை,உடை மற்றும் வாழ்க்கை அமைவதற்கும் ,முழு உலகிலும் அல்லாஹ்வின் மார்க்கம் பிரகாசிக்கவும் நாம் அனைவரும் முயற்சிப்போமாக,துவா செய்வோமாக.அதற்க்காகத்தான் இது போன்ற இஜ்திமாக்கள் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது.அல்லாஹ் நமக்கு இதை விளங்க வைப்பானாகவும். அல்ஹம்துலில்லாஹ் கொழும்பில் இந்த உழைப்பின் மூலம் 90% முஸ்லிம்கள் தொழுகையாளிகளாகவும்,சுன்னத்தை பின்பற்றக்கூடியவர்களாகவும் மாறி வருவதன் மூலம் அங்குள்ள புத்த பிட்சுகளும் இஸ்லாத்தின் பக்கம் வந்துகொண்டுள்ளனர்.அவர்கள் ஜமா அத்தில் டெல்லிக்கும் செல்ல வருகிறார்கள். இது போன்ற இஜ்திமாக்களுக்கு அழைப்பதின் மூலம் பந்தலுக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ,நமது ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுகைக்கு கூட்டம் வந்தால் அதுவே இஜ்திமாவின் வெற்றி என்பதாக மார்க்க வல்லுநர்கள் விளக்கம் தருகிறார்கள். அல்லாஹ் நமக்கும், இந்த உழைப்பை விளங்கி ,அமல் செய்ய தவ்பீக் செய்வானாகவும், ஆமீன்,யா ரப்பல் ஆலமீன்.
தப்லீக் பற்றிய உங்களின் பார்வையும் எனது அனுபவமும் ஒன்றே...
பள்ளிப் பருவத்தில் அங்கே கிடைத்த பயிற்சியையும் யாரும் மறுக்க இயலாது...
அங்கே விமர்சனத்திற்குள்ளாகும் அனைத்தையும் மறைக்கவும் முடியாது.. உண்மையே !
துறவரம் என்பது உடல் சோர்வில் வரும் விரக்தியின் முடிவு. அல்லது எதிர்பார்த்த உறவுகள் சுயநலமிகளாக கதாபாத்திரத்தை மாற்றி நடிக்கும்போது ஏற்படும் நிலை.
ஏமாற்றம்...எதிர்பார்ப்பால் வந்தது. இதற்கு துறவரம் ஒரு வடிகாலாய் தோன்றினாலும் அதுவும் எளிதல்ல. பிச்சை ..எல்லோராலும் எடுக்க முடியாது.
தப்லீக் பற்றி நினைவில் நிற்கும் ஒரு சம்பவத்தை எனது அனுபவத்திலிருந்து சொல்லியே ஆக வேண்டும்...
"நான் - பத்தாம் வகுப்பு விடுமுறையில் தேரழந்தூரில் நடந்த இஸ்திமாவிலிருந்து கிளம்பிய 40 நாள் ஜமாத்தில் சென்றேன்... அந்த ஜமாத் ஈரோடு, சேலம் என்று ரூட் கொடுக்கப்பட்டிருந்தது...
ஏற்காட்டுக்கு அருகில் கிருஷ்னகிரி (என்று நினைக்கிறேன் சரியாக ஊர் பெயர் ஞாபகத்தில் இல்லை) என்றொரு மலைப்பகுதியில் பூட்டிக் கிடந்த பள்ளிவாசலை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த முஸ்லீம்கள் அதனை திறந்து பயன்படுத்தவோ பராமரிக்கவோ இல்லை.
அந்தப் பள்ளியினை திறக்க முத்தவல்லியின் வீட்டுக்கு சென்றால் அவர் வெளியூர் சென்றிருப்பதாக சொன்னார்கள், அதன் பின்னர் மற்றொரு நபரை காட்டினார்கள் அவரிடம் பள்ளியின் சாவி இருந்தது அவரை திறைந்து விடச் சொன்னால் திறக்க பயந்தார், சாவியை அமீரிடம் கொடுத்து நீங்கள் துஆ ஓதி திறந்துடுங்க என்று கொடுத்து விட்டு நகர்ந்து போய்விட்டார்.
பள்ளியைத் திறந்து கழுவி விட்டு தொடர்ந்து தொழுகை நடந்தது அதோடு மெழுகு வர்த்தி அரிக்கேன் அதோடு இனிமையான நிலவு வெளிச்சத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கிருந்து சேலம் மர்கஸுக்கு தகவல் சென்றதும் அடுத்த ஜமாத் அங்கே வந்தார்கள் அவர்கள் 10 நாட்கள் தங்கப் போவதாக சொன்னதும் நாங்க ஏற்காடு நோக்கி எங்களது பயணத்தை தொடர்ந்தோம்.
அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து மர்ஹூம் அமீன் ஹாஜியார் அவர்கள் அந்த பள்ளிக்கு ஜமாத்தில் சென்று விட்டு வந்து பள்ளி மிகவும் சிறப்புடன் இருப்பதாக சொன்னார்கள் - அல்ஹம்துலில்லாஹ்...
மறக்க முடியாத அனுபவம்....
(அங்கே தங்கியிருக்கும்போது குரங்குகளோடு போட்ட குஸ்தியெல்லம் மறக்கவே முடியாது... அங்கே எங்களை தங்க விடாமல் இருக்க என்னன்ன சேட்டைகள் செய்தன... நல்ல வேலை அந்த குரங்குகளின் குருவுடைய பக்த கோடிகள் வடக்கேயிருந்து தமிழகத்தில் காலூன்றாத நேரம் அது)
//பிச்சை ..எல்லோராலும் எடுக்க முடியாது.//
காக்கா... பிச்சை என்பதன் அகராதி தான் என்ன !?
பணம் வேண்டி கையேந்துவது மட்டுமா ? அல்லது இன்னும் பிற !?
Assalamu Alaikkum
MashaAllah, Excellent explanations.
I feel like we are studying in virtual class room.
Brother Mr. Ebrahim Ansari's interactive delivery of this course will make the attendants more involved. Hence it will be more encouraging and interesting.
Eagerly awaiting for forth coming thoughts from you InshaAllah.
Thanks and best regards,
தம்பி ஜாகிர்! அவர்கள் சொன்ன உண்மைத் துறவறம் ஒழிந்து போய்விட்டது.
இப்போது இருப்பது பெயரளவு துறவறம். துறக்க வேண்டியவைகளை துறக்காத துறவறம். பலருக்கு அது ஒரு போர்வை. விலாசம். கூடாரம்.
துறவிகளில் பலர் அபின் அல்லது கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகி விட்டனர். பல மதத் தீவிர வாதம் பேசுவோர் காவி உடுத்தி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.
மற்ற சில உலகறிந்த - ஆனால் பகிர முடியாத- பகிரக்கூட முடியாத விஷயங்கள் இருக்கின்றன. ஆகவே "பம்மாத்து" வேலையின் மறு உருவே துறவறம்.
டாக்டர்.அ.இ.காக்கா ;தப்லீக் பற்றீ கூறீய விளக்கம்
ரொம்பவும் அருமை.......ஜஸக்கல்லாஹ்........
அபு இபுறாகிம்......
தங்களை தங்க விடாமல் சேட்டை
செய்த குரங்கு கையில் ஏதும் கொடியிருந்ததா...?
தம்பி அஹமது அமீன்!
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
We, all the writers of AN are very happy and even proud to know that all our articles are being read and measured by intellectuals like you. We are satisfied that we are delivering our thoughts at the door steps of authentic & genuine individuals.
Thanking you once again. Jazak Allah.
//தங்களை தங்க விடாமல் சேட்டை
செய்த குரங்கு கையில் ஏதும் கொடியிருந்ததா...?//
காக்கா: கொடி(ய)யிடை தெரிய கொடியின்றி இருந்தது...
Dear Brother Zaeisa.
குரங்குகளின் கரங்களில் இருந்த கொடியின் நிறம் பற்றியும் கேளுங்களேன்.
அன்பினுக்கினிய மூதறிஞர்-டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். என் உள்ளத்தில் உள்ளவற்றை அப்படியே மறுமொழியாகப் படைத்துள்ளீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.
உண்மையில் பிஜே முதல் அடியேன் வரை தப்லீக் என்னும் திருத்தொண்டைப் பேச்சுத்திறமைக்கு அடித்தளமாக்கிக் கொண்டவர்கள் தான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை; அஃதே போல், அன்பு நெறியாளர் அவர்கள் சொன்னது போல் தப்லீக் என்னும் திருத்தொண்டால் பூட்டிய பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டன என்பதும் மறுக்கவோ-மறக்கவோ -மறைக்கவோ முடியாத பேருண்மை; மேலும், “இஃக்லாஸ்” என்னும் உளத்தூய்மையும் அங்குதான் கற்றோம்;இன்னமும் அந்த இஃக்லாஸ் என்னும் உளத்தூய்மையுடன் அப்பணி செய்வதனாற்றான், மற்ற இயக்கங்களில் உண்டான பிளவுகளைச் சந்திக்காமல் தொடர்ந்து பயணிக்கின்றப் பேரியக்கமாக உள்ளது. நான் குறிப்பிட்டது ஒன்று மட்டும் தான். அஃதாவது, அவர்களின் பயான்களில்- தஃலீம்களில் உச்சகட்டமாகத் துறவறம் இருப்பதைக் கண்டேன் என்பதை விட என் வாழ்விலும் அப்படியொரு நிலை உண்டானது. (நீங்கள் சொன்னது போன்று எல்லா இயக்கத்திலும் அப்படியொரு மூளைச் சலவை செய்தல் உண்டென்பதும் ஏற்கிறேன்) அன்றைய காலத்தில் வேறொர் இயக்கம் இல்லாத பொழுதில் இத்திருத்தொண்டில் பால் ஈர்க்கப்பட்டவனாய் “மாணவர்களின் ஜமா அத் தின் அமீராக” திருவாரூக் கல்லூரியில் வணிகவியல் பட்டம் படிக்கும் மூன்றாம் ஆண்டில் கல்வியில் நாட்டமின்றி-வாப்பாவின் வணிகத்திலும் நாட்டமின்றி ஊர் ஊராகச் சுற்றி இறைபணி ஆற்றினேன்; காரைக்கால் மர்கஸ் தான் கதி என்றிருந்தேன்;இறுதியில். மூன்றாமாண்டுப் பட்டப்படிப்பில் ஏற்பட்ட தொய்வு தான் என்னை விழிக்க வைத்தது! பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து- கல்லூரியில் இரண்டாமாண்டு வரை முதல் மாணவனாகவும் -கல்லூரியில் இரண்டாமாண்டில் தங்க விருதும். கலைஞரால் “கவியன்பன்” பட்டமும் பெற்றுக் கல்வியில் மிகச் சிறந்தவனாய் விளங்கிய அடியேன், இத்தப்லீகின் அமீராகச் செயல்பட்டதன் பின்னர் நாட்டமெல்லாம் துன்யாவின் படிப்புத் தேவையற்றது என்றே எண்ணும் ஒரு துறவற நிலையில் கொண்டு என்னைத் தள்ளியது. அதனால், என் எதிர்காலம் பாதிக்கப்பட்டது; என் கனவான “சி.ஏ” படிக்கும் அளவுக்கு முடியாமற் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் “அரியர்ஸ்” வைக்கும் அளவுக்கு “எப்படிப்பட்டவன் இப்படி ஆயிட்டேனே” என்று எண்ணி விழித்துக் கொண்டேன். இப்பொழுதெல்லாம், எந்த இயக்கத்திலும் இணையாமல்- அதே நேரம் எல்லாவற்றையும் உற்று நோக்கியவனாக மட்டும் இருக்கிறேன். ஏதோ அன்று விழித்துக் கொண்டதனால், இற்றைக்கு ஓரளவுக்குக் கண்ணியமான உயர்பதவியில் இருக்கிறேன். அபூஇப்றாஹிம் குறிப்பிட்ட மர்ஹூம் அமீன் ஹாஜியார் என் பள்ளித்தோழர்; அவர்களைப் போன்று பெரும் வணிகர்களும் இப்பணியில் தியாகம் செய்தவர்கள் தான்; இத்தியாகிகட்கு அல்லாஹ் மறுமையின் அன்பளிப்புகளை வழங்குவான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை; ஆனால், தங்களின் ஆக்கம்”பொருளாதாரம்” என்பதால் எழுதினேன்; ஊக்கமுடன் உழைப்பவர்கட்குத் துறவறத்தைத் தூண்டும் எந்த இயக்கமும் எனக்கு ஏற்பட்டதைப் போன்று உலகவியல் வாழ்வில் சரிவு ஏற்படுத்தும்.
அருளிலார்க்கு அவ்வுலகில்லை;
பொருளிலார்க்கு இவ்வுலகில்ல
”சமநிலைச் சமுதாயம்” என்பதே நம் குறிக்கோளாக இருக்கட்டும்; அங்குதான் தீவிரவாதம் மற்றும் துறவறம் போன்ற நச்சுக் கருத்துகள் இல்லாத - பொருளாதாரத்தில் மேம்பட்டச் சமுதாயமாக இருக்கும் என்பதும் என் உறுதியான நம்பிக்கை!
அன்பின் கவிஞர் பாசத்துக்குரிய சகோதரர் கவியன்பன் அவர்களுக்கு,
நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற சம்பவங்கள் உங்களுக்கு மட்டும் நடந்ததல்ல. பலருக்கு நடந்து இருக்கிறது. ஆர்வத்தின் கோளாறு காரணமாக அப்படி ஈடுபடுகிறார்கள் என்று நான் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். நம்மை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும். நமக்கென்று உலக வாழ்வில் ஒரு ஹலால் ஆன இலக்கு இருக்கும்போது மார்க்க கடைமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி நமது இலக்கை நோக்கிப் பயணிப்பது தவறாகாது.
நீங்கள் ஸி. ஏ. ஆவது இயலாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம். அதே நேரம் இந்தப் பணிகளில் ஈடுபடும் பல பெரிய படித்தவர்களை நானும் சந்தித்து இருக்கிறேன்.
மேலும் தப்லீக் ஒன்றும் முழு ஆயுளையும் அதன் பணியிலேயே செலவிடு என்று சொல்வதாக நான் கேள்விப்படவில்லை.
நானும் மாணவப் பருவத்தில் சென்று இருக்கிறேன்.
சென்ற இடங்களில் பெரும் வணிக அதிபர்களையும் , அயல் நாட்டில் இருந்து வந்த கல்வியாளர்களையும், உள் நாட்டில் உயர்ந்த பதவிகளில் இருந்தவர்களையும் சந்தித்து இருக்கிறேன். ஒரு மாதத்துக்கு மூன்று நாள் இதற்காக ஒதுக்கிவிட்டு மற்ற நாட்களை தங்களின் பணிகளைச் செய்பவர்களுக்கு பாதிப்பு வந்ததாகத் தெரியவில்லை. கோடை விடுமுறைகளில் நாற்பது நாள் மட்டும் சென்று வந்தோர் சிறப்பாகவே இருக்கிறார்கள். நான் சொல்ல வந்தது என்ன வென்றால் தப்லீக் அல்ல எந்த ஒரு செயலும் ஆர்வக் கோளாறால் அளவுக்கு மீறினால் - அது நீங்களே எழுதிய எல்லைக்கோட்டைத் தாண்டாத அளவு - இருந்தால் எல்லோருக்கும் நன்மையே.
நீங்கள் ஒரு ஆடிட்டராகி பால் பாயின்ட் பேனாவை அடிக்கடி தலையில் குத்திக் கொள்ளாமல் ஒரு கவிஞராகி எங்களை எல்லாம் மகிழ்விக்க வேண்டுமென்பது இறைவனின் ஆசையாக இருக்கலாம். ஆடிட்டர்கள் கிடைக்கலாம் கவியன்பன் கிடைப்பாரா? அல்லாஹு அக்பர்.
தம்பி அபூ இப்ராஹீம் !
//பிச்சை ..எல்லோராலும் எடுக்க முடியாது.//
காக்கா... பிச்சை என்பதன் அகராதி தான் என்ன !?
பணம் வேண்டி கையேந்துவது மட்டுமா ? அல்லது இன்னும் பிற !?
எனக்கு இதன் அகராதி தெரியாது. ஆனால் பிச்சை பற்றி பல பழமொழிகள் தெரியும்.
பிச்சை எடுத்ததாராம் பெருமாளு அதைப் பிடுங்கித் தின்னாராம் அனுமாரு என்பது அவற்றுள் ஒன்று.
தஞ்சாவூரில் ஒரு பள்ளி அருகில் நின்று பிச்சை எடுத்தவரிடம் சந்தேகப் பட்டு காவல்துறை சோதனை செய்த போது அவரிடம் எட்டு லட்ச ரூபாய் கேஷ் இருந்ததாம். விசாரணையில் பிளாட் வாங்குவதற்காக வைத்து இருந்தாராம். பல பிச்சைக்காரர்கள் டெபிட், கிரெடிட் கார்டு வைத்து இருக்கிறார்களாம்.
கீழே உள்ள செய்தியைப் படியுங்கள். மாலை மலர் தினசரியில் வந்தது. அப்படியே தருகிறேன்.
கண்ணால் காண்பதும் பொய், காதால்கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற முதுமொழியை உண்மையாக்கும் விதமாக இடைப்பாடியில் மிக வசதிபடைத்த பண்ணையார் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்.
அவரது பெயர் ஆனந்தன் (வயது 80) அந்தியூர் அருகே உள்ள வறட்டுபள்ளம், செல்லம்பாளையம் ராமகவுண்டன் தொட்டத்தில் சுமார் 7 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு கிணறுகளின் மூலம் தண்ணீர் பாய்ச்சி கரும்பு, மஞ்சள்,கடலை என பசுமையான விவசாயம் நடைபெறும் தோட்டத்தின் மையத்தில் வீடு அதன் அருகே மாட்டுக்கொட்டகை, வீட்டை சுற்றிலும் வாழை, தென்னை என்று செழிபான நிலத்திற்கு சொந்தகாரர்தான் இந்த ஆனந்தன்.
ஆனால் அவர் கடந்த 6 ஆண்டுகளாக இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரன் கோவில் வாசலில் நின்று பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். பகல் நேரத்தில் கோவில் பிரசாதங்களையும், பக்தர்களின் அன்னதான நிகழ்ச்சியிலும் வயிற்றை நிரப்பிக்கொள்ளும், ஆனந்தன் காலை முதல் மாலை வரை பக்தர்கள் தரும் காசுகளை சேகரித்து மாலையில் ஏதாவது ஓரு ஓட்டலில் சாப்பாடு, இரவில் உறங்க வசதியாக 2 கொசு வர்த்தி வாங்கி கொண்டு கோவில் எதிரில் உள்ள ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோ வாசலில் படுத்துக்கொள்வார்.
அவ்வப்போது கோவில் அலுவலர்கள் சொல்லும் சின்ன சின்ன வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்வார். இவ்வளவு வசதி இருந்தும் பிச்சை எடுத்து வாழ்வது பற்றி ஆனந்தனிடம் கேட்டப்போது “ நானும் மற்றவர்களை போல் நல்ல முறையில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தேன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சின்னமாள் வறட்டு பள்ளம் அணை பகுதியில் காட்டு யாணை தாக்கி இறந்து விட்டார் உயிருக்குயிராக நேசித்த எனது மனைவி சின்னமாள் இறந்ததில் இருந்து அவர் நினைவாகவே இருந்து வந்தேன். மேலும் அங்குள்ள வீடு, விவசாய நிலம் ஆகிவற்றை பார்க்கும்போது திரும்ப திரும்ப எனது மனைவி நினைவாகவே இருந்தது.
எனவே அங்கிருந்து மனம்வெறுத்த நான் பல ஊர்களுக்கு சென்றேன். முடிவில் இடைப்பாடி ஈஸ்வரன் கோவிலில் தஞ்சம் அடைந்தேன். இப்பகுதி மக்கள் காட்டும் அன்பும் அரவனைப்பும் எனக்கு பிடித்து போய்விட்டது. அதனால் இங்கேயே பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன்.
சமீபத்தில் என்னுடன் சேர்ந்து பிச்சை எடுக்கும் ஒருவருக்கு கால் உடைந்துவிட்டது. நான் எனது சேமிப்பிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை கோபி செட்டிபாளையம் அழைத்து சென்று வைத்தியம் பார்த்தேன். பிச்சை எடுப்பதை நான் ஒரு போதும் கேவலமாக நினைக்கவில்லை, எனது விவசாய நிலத்தை எனது மகன் பெரியண்ணும் மருமகள் விஜியாவும் பார்த்துக் கொள்கின்றனர். நான் வருடத்தில் ஒருமுறை ஆடி மாதம் மட்டும் சென்று பார்த்துவிட்டு கையில் உள்ள காசை கொடுத்துவருவேன்.
மனைவியை இழந்த துக்கத்தில் பிச்சை எடுத்து வாழும் எனக்கு இப்பகுதியை சேர்ந்த பலர் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக நான் இரவில் தங்க தனது கடையின் முன்பகுதியை ஒதுக்கி தந்த ஸ்டுடியோ உரிமையாளரை நான் என்றும் மறக்கமாட்டேன். என் வாழ்நாளின் இறுதி காலத்தை இங்கேயே சந்தோஷமாக கழிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
//கோவில் எதிரில் உள்ள ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோ வாசலில் படுத்துக்கொள்வார்//
சவுண்ட்ஸ் குட் !
\\அது நீங்களே எழுதிய எல்லைக்கோட்டைத் தாண்டாத அளவு - இருந்தால் எல்லோருக்கும் நன்மையே. \\
ஆம். “எல்லைக் கோடு” என்னும் தலைப்பிலான என் பாடலின் முழுமையும் என் வாழ்வின் அனுபவங்களே என்பதை மிகவும் துல்லியமாக அறிந்துக் கொண்டீர்கள்.
அதிலும் ஓர் அடியில்:
\\அளவுக்கு மிஞ்சும் போதில்
...அமுதமும் நஞ்சாய்ப் போகும்\\
என்பதிலும் தங்களின் கருத்தை ஒட்டியே இருப்பதைக் காணுங்கள். தாங்கள் குறிப்பிட்டது போல், என் ஆர்வக் கோளாறு காரணமாக ஆடிட்டராகாமல் ஆன்மீக ஈடுபாட்டால் அவ்வண்ணம் ஆனது என்பதையும் உளமாற ஒப்புக்கொள்கிறேன்,
மீண்டும் என்னைத் தப்லீக் திருப்பணியில் ஈடுபடுத்த தொடர்ந்து அழைத்தவர்களிடமெல்லாம் மேற்கூறிய என் விடயத்தில் நடந்துவிட்டதைத் தான் சொன்னேன்; அவர்கள் எல்லாரும் தாங்கள் குறிப்பிட்டதைப் போன்றே என்னிடமும் சொல்லியிருக்கின்றார்கள். ஒருவேளை, முதுமையின் இறுதியில், பொருளாதாரத் தேவைகளின் நெருக்கடிகள் ஓயும் வேளையில் மீண்டும் அத்திருப்பணியை என் மனம் நாடும்; அதற்குக் காரணீயமாகத் தங்களின் இவ்வறிவுரைகளும் அமையுமானால் அதன் நற்கூலியில் தங்கட்கும் பங்கு உண்டு., இன்ஷா அல்லாஹ்!சென்ற மாதம் அவசர- குறுவிடுப்பில் ஊர் வந்த பொழுது, ஜூம் ஆ வில் , என் மதிப்பிற்குரிய ஆசான் - என்னை வழி நடத்திய அமீர்- அப்துல்காதிர் ஆலிம் அவர்களின் பயானைக் கேட்கின்ற பொழுதே என் கண்கள் அழுதன; அவர்களைப் போன்ற சுன்னத்தானத் தோற்றமும், “தேஜஸ்” என்னும் ஒளிரும் முகமும் கொண்டிலங்க மீண்டும் தப்லீகில் நுழைவேன் என்று என் மனம் கொண்ட நாட்டத்தின் அடிப்படையில் தான், தங்களின் பொருளாதாரப்பாடத்தில் துறவறம் பற்றிய குறிப்புகளினூடே என் கருத்தைப் பதிவு செய்தேன்; மாஷா அல்லாஹ். பின்னூட்டமிட்டவர்களும் மிகவும் எச்சரிக்கையாகவும்- நியாயமாகவும் தப்லீக் என்னும் திருப்பணிக்கு ஆதரவளித்துள்ளனர்;தங்களின் ஆழமான- உறுதியான ஆதரவும் கண்டேன்.
//ஏமாற்றம்...எதிர்பார்ப்பால் வந்தது. இதற்கு துறவரம் ஒரு வடிகாலாய் தோன்றினாலும் அதுவும் எளிதல்ல. பிச்சை ..எல்லோராலும் எடுக்க முடியாது. //
//பிச்சை என்பதன் அகராதி தான் என்ன !?// - Abu Ibrahim.
இதெற்கெல்லாம் அகராதி போட்டால் கட்டுபடியாகாது.
துறவரத்தில் முதலில் கொள்கை பற்றி வாய்கிழிய பேசப்படும். பிறகு எல்லாம் தன்னால் கிடைக்கும் என்று வயிற்றை பழக்கப்படுத்தி கொள்ள பயிற்சி இருக்கும். பிறகு தன்னால் கிடைப்பது என்பது "பிச்சை எடுப்பதாகிவிடும்'
குளிப்பதற்கு வசதியாக குளம் , ஆறு பக்கத்தில் உள்ளபடி வழிபாட்டுத்தளங்கள் கிடைத்து , கொஞ்சம் ஆட்கள் நேத்திக்கடன் கொடுக்க பஸ், பஸ் ஆக வந்து இறங்கினால்...தன்னாலேயே அருள் வாக்கு சொல்வதும் , "எஜமான் கனவில் சொன்னாங்க" என வாய் கூசாமல் பொய் சொல்லத்தோன்றும்.
அப்புறம் டெய்லி குளித்து, முழுகி கொஞ்சம் ஃப்ரஸ்ஸா பிச்சையெடுப்பதால் மரியாதைக்குறிய பெரிய பிச்சைக்காரன் என்பது மாறி , மறியாதைக்குறிய ட்ரஸ்ட்டி பட்டம் கிடைக்கும். இடைப்பட்ட நாளில் பெண் / பணம் இரண்டுக்கும் ரொம்ப 'லோலாய்' படாமல் இருந்தால் ரிட்டயர்மென்ட் வரை வண்டி பிரச்சினை இல்லாமல் ஒடும்.
ஹெல்த் பிரச்சினை எதுவும் இருந்தால் அருள் வாக்கு வாங்கி சென்ற யாரும் ஆப்பிள் / ஆரஞ்சு வாங்கித்தருவார்கள் என்று எதிர்பார்த்தால் அரசு பதில் மாதிரி' ஹி ஹி ஹி" தான்
பிச்சை நாட்டுக்கு நாடு பாஸ்போர்ட் மாதிரி வேறு வேறு பரிணாமத்தில் இருக்கும்.
புத்த மதம் ஈகோவை ஒழிக்க பிச்சையெடுத்து பயிற்சி பெருகிறார்கள்.
ஈகோவை ஒழிக்கிறேன் என்று புறப்படுவதும் ..ஒரு ஈகோதான் [ மெட்டா பிசிக்ஸ்ஐ சரியாக புரிந்துகொண்டால் இது ஜூஜூபி]
பிக்ஷையைப் பற்றி நீண்டதொரு பாடம் எடுத்து விட்டிர்கள் உளவியல் மருத்துவர் ஜாஹிர் அவர்களே! இதிலும் உளவியல் ஊடுருவல் கண்டேன். நீங்கள் எனக்குத் தனிமடலில் எழுதியிருந்த அவ்வரிகளை என் அலுவலக மேசையில் எழுதி என் கண்முன்னால் படும்படி வைத்துள்ளேன்:
“எதிலும் ஒட்டாமலும் ஒரேடியாக ஓடி ஒளியாமலும், தாமரை இலைத் தண்ணீர் போல இருக்க வேண்டும்”
இவ்வரிகள் தான் அவைகள்
தற்பொழுது உங்கட்குத் தம்பி போல் ஓர் உளவியல் நண்பர் எனக்கு முகநூலில் கிட்டியுள்ளார்; அவரும் உங்கட்கு அண்மையில் உள்ளார்; சிங்கப்பூரில் இருக்கும் ஹிஃப்ஸுர்ரஹ்மான் என்பவர். அதுசரி, மலேசியா, சிங்கப்பூரில் தான் மனோதத்துவஞானிகள் உளரோ?
காக்கா - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
திருப்திகரமான விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
குப்பன் சுப்பன் மேட்டரில் நீங்கள் குறிப்பிடும் வல்லுநர்களின் கோட்பாடுகளைக் குப்பன் சுப்பன் பின்பற்ற வேண்டாம் என்றாலும்; பொருளாதாரக் கொள்கைகளை அவர்களுக்கு விளக்கும் முன்பதாக சரியான வாழ்வியலைப் பயிற்றுவிக்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது.
காட்டாக, நல்லாப் படி, நல்ல வேலை கிடைக்கும், நல்ல வருமானம் வரும், தீய பழக்கங்களை விடு, சேமி, முதலீடு செய், தொழிலதிபர் ஆகு என்று போதித்துப் பழக்க வேண்டும் இல்லையா. இல்லை, படிக்க மாட்டேன், படத்துக்குத்தான் போவேன், குடிப்பேன் கிடைத்ததை சேமிக்காமல் சூதுதான் விளையாடுவேன் என்று விட்டேத்தியாக வாழ்பவனுக்கு எந்தப் பொருளாதாரக் கொள்கையும் கைகொடுக்காது என்பது என் அபிப்ராயம்.
எனவே, சரியான வாழ்வியலே யாரையும் பொருளாதாரத்திலும் மேம்பட தயாராக்கும் என்பது என் துணிபு.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
கவிஞர் தம்பி சபீர் அவர்களுக்கு அலைக்குமுஸ்ஸலாம்.
தங்களின் கருத்து மெத்த சரி. இதையே அத்தியாயம் இரண்டில் // தாயின் வைத்தியத்தை அலட்சியம் செய்துவிட்டு சாராயக்கடைக்குப் போகிறவர்கள்// என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
ஒவ்வொருவருடைய கருத்துக்களும் அனுபவங்களும் பயனுள்ள விஷயமாக இருக்கிறது தரிகெட்டு திரிபவருக்கு தப்லீக் நல்ல இடம் சம்பாதித்து சேர்த்தபின் இளைப்பாரும் இடமாகவும் தப்லீக் சிலருக்கு பயன் படுகிறது நான் இருக்கும் ஏரியாவில் தப்லீக் நல்ல வேளைகளை செய்கிறது செய்யவேண்டிய ஏரியாவாகவும் இருக்கிறது
தப்லீக் இயக்கத்தை அனைவரு ஆதரித்து கருத்து இட்டது கண்டு மிகவும் சந்தோசப்படுகிறேண்
//அதுசரி, மலேசியா, சிங்கப்பூரில் தான் மனோதத்துவஞானிகள் உளரோ? //
முதலில் என்னை மனோதத்துவம் சொல்பவனாக
[ ஞானி எல்லாம் அப்புறம் ] நினைப்பதில்லை.
இருப்பது வெளிநாடாக இருந்தாலும் பிறந்ததும், படித்ததும், வளர்ந்ததும், எல்லாம் நம் அதிராம்பட்டினம் தானே.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இஸ்லாமிய பொருளாதார சிந்தனைகள் 1 முதல் 7வரை படித்தேன். நிறைய விபரங்கள், விளக்கங்களை தெரிந்து கொண்டேன். தொடர், தொடர்ந்து வந்து நாங்கள் இன்னும் தெளிவு பெற வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
அன்புச்சகோதரருக்கு! வாழ்த்துக்கள்!
தப்லீக் பற்றிய கவியன்பன் காக்கா கேள்விக்கு .
ஆக்கத்தின் ஆசிரியர் அன்சாரி காக்காவின் பதில் மிக சரி
நண்பன் சபீர் கூறிய கருத்து சிறந்த கருத்து ..
தப்லீக் பற்றிய கருத்து பலரிடம் தவறாக போய் சேர்ந்துள்ளது
தப்லீக் ..அடிப்படையான் கடமை தொழுகையை பின்பற்ற சொல்லும்
இயக்கம் ..பயணிகளாய் வருபவர்கள் பார்க்க பரதேசியாய் தெரியலாம்
அவர் வீடு திரும்பிய பின் அவரவர் உத்தியோக த்திற்கு தகுந்தாற்போல்
தன உடைகளுக்கு மாறி கொள்வார்கள் ...பெரும் கோடீஸ்வரர்கள் கூட
தப்லீகில் வருவார்கள் பொருளீட்டலை ஒருபோதும் தப்லீக் தடுத்ததில்லை
அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் இஸ்லாம் என்ற மார்க்கத்தை பேணி
காக்கா தப்லீகின் பங்கு இட்ரியமையாதது ...அனைவரும் மூன்று நாள் ஜமாஅத் செல்ல நிய்யத் வையுங்கள்
ஒவ்வொருவருடைய கருத்துக்களும் அனுபவங்களும் பயனுள்ள விஷயமாக இருக்கிறது தரிகெட்டு திரிபவருக்கு தப்லீக் நல்ல இடம் சம்பாதித்து சேர்த்தபின் இளைப்பாரும் இடமாகவும் தப்லீக் சிலருக்கு பயன் படுகிறது நான் இருக்கும் ஏரியாவில் தப்லீக் நல்ல வேளைகளை செய்கிறது செய்யவேண்டிய ஏரியாவாகவும் இருக்கிறது
தப்லீக் இயக்கத்தை அனைவரு ஆதரித்து கருத்து இட்டது கண்டு மிகவும் சந்தோசப்படுகிறேண்
I agree Ibrahim Kakka,sabeer Kakka and other Kakkas who support thabliq jamaath.there is some bith a,insha Allah I hope they will correct it soon.
Now a days they have changed in many thing like started to read Riyad al saliheen instead tha leem book.
முற்றிலுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்குத் துறவறத்தைப் போதிக்கும் சூஃபிஸம் மற்றும் தப்லீக் பயான்களிலும் இருப்பதால் நம்மிலும் இப்படிப் பொருளாதாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். – என்று கேட்டிருந்தார்கள். சூபிசம் பற்றிய அவர்களின் கேள்விக்கு நான் திருமறையின் கீழ்க்கண்ட வாசகத்தையே பதிலாகத் தர விரும்புகிறேன்.
Masha Allah
One ayah,explains much clear.
There is no Sufism in Islam.
Allahu Akbar
''அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.'' (அல்குர்ஆன் 57:27).
Allahu Akbar
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருத்துப் பதிந்த அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். JAZAK ALLAH ஹைர்.
தவிரவும் ஒவ்வொரு ஆக்கத்துக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துவிட்டு அலைபேசியில் அழைத்து பாராட்டும் ஆலோசனைகளும் வழங்கும் ஒரு அன்புத்தம்பிக்கு பெருமையுடன் நன்றி கூறுகிறேன். நம் அனைவரின் அன்புக்கும் நேசத்துக்குமுரிய கலைக்களஞ்சியம் என்று நம்மால் பெருமையுடன் கருதப்படும் நாவலர் நூர் முகமது அவர்களையே நான் குறிப்பிடுகிறேன்.
ஒரே ஒரு குறை உண்டு. பாராட்டு மணிகளை பலர் அடிக்கிறீர்கள். ஆனால் அந்த மணிகளுக்கு மகுடம் சூடும் மகுடத்தைக் காணாமல் ஏங்கி நிற்கிறேன் (றோம்).
வஸ்ஸலாம்.
நல்ல ஆரோக்கியமான ஆக்கம் இது..கேள்வி கேட்டவர்களுக்கும் அதன் விளக்கத்தை படித்தவர்களுக்கும்...தப்லீக் எனக்கு பிடித்தமான ஒன்று...என்னுடைய கடைசிக்காலங்களை இந்த “அழைப்பு” பணியிலயே வீட்டையயும் கவனித்துகொண்டு கழிக்கவிரும்புகின்றேன்.அல்லாஹ் அதனை நிறைவேற்றித்தரணும்..அல்லாஹூ அக்பர்..குர் ஆன் ஆயத்துக்களை மேற்க்கோள் காட்டியிருப்பது இந்தொடரின் தரத்தை ஊர்ஜிதம் செய்கின்றது..தொடருங்கள் மாமா
கவியன்பன் அவர்கள் டாக்டரை 'மூதறிஞர்' என விளிக்கும் அளவுக்கு அவர்களுக்கு கருணாநிதியின் வயதாகவில்லை!
'அறிஞர் அன்சாரி' என அழைக்கலாம்!
திருத்திக் கொள்கிறேன்;தவற்றைப் பொருந்திக் கொள்கிறேன்.
Post a Comment