எல்லையிலா அருளால் காக்கும்
.....இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
.....இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
...தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்
....இருப்பதைக் கண்டு கொள்வாய்!
அளவுக்கு மிஞ்சும் போதில்
...அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
....பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
...காண்பது பண்பின் எல்லை!
நாட்டிலுள்ள எல்லைக் கோடு
.....நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
...விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
....பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
...வறுமையின் எல்லைக் கோடு!
ஆட்டத்தில் எல்லைக் கோடு
.....ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
...நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
...கூச்சலைத் தடுத்து வைக்கும்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
.....இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
.....இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
...தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்
....இருப்பதைக் கண்டு கொள்வாய்!
அளவுக்கு மிஞ்சும் போதில்
...அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
....பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
...காண்பது பண்பின் எல்லை!
நாட்டிலுள்ள எல்லைக் கோடு
.....நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
...விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
....பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
...வறுமையின் எல்லைக் கோடு!
ஆட்டத்தில் எல்லைக் கோடு
.....ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
...நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
...கூச்சலைத் தடுத்து வைக்கும்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
9 Responses So Far:
Assalamu Alaikkum
Dear brother Mr. Kaviyanban Abul Kalam,
An excellent set of lines that stress the moderation in every aspect of life, which is followed by Prophet Mohammed (peace be upon him) recommended for his followers. Hence its a desirable quality to practice in our lives.
Thanks and best regards,
ஒரே கோடுதான் !
அதுதான் "எல்லைக்கோடு" !
கோடுகளை அடுக்கிய விதம் அருமை !
//கூட்டத்தில் எல்லைக் கோடு
...கூச்சலைத் தடுத்து வைக்கும்!//
ஆஹா !
நல்லதொரு கவி ..
கவிஞரின் பார்வயில் எல்லாம் நலமே
கவியன்பனின் எல்லைக் கோடுகள் எச்சரிக்கின்றன. கோடு தாண்டினால் கேடுதான் என்பதை மெளனமாய் உச்சரிக்கின்றன.
எல்லைக்கோட்டின் வரையரைகள் கவிஞரின் பார்வையைப் பறைசாற்றுகின்றன; அதில் நன்மையையே நாடுவதையும் அறிய முடிகிறது.
இந்த சமூக பிரக்ஞை கவியன்பனின் எல்லாக் கவிதைகளிலும் பிரதிபலிப்பதில் மிகுந்த சந்தோஷமே.
வாழ்த்துகள், கவியன்பன்.
பாகிஸ்தான்,எல்லைக் கோட்டை தாண்டினால் இந்தியா பதிலடி கொடுக்கும்.
அதப்போல, கவி அன்பர் கலாம் காக்கா எச்சரிக்கை கோடு போட்டு காட்டியிருக்கிறார் , எல்லை இறுக்கு எல்லாவற்றுக்கும் என்று , அது நன்று .
கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கே நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே !
கட்டுப்பாடுகள் - எல்லைக்கோடுகள் நலம் பயக்கவே. தனி மனித சுதந்திரத்தின் எல்லை அடுத்தவர் மூக்கின் நுனி வரைதான் என்று கூறுவார்கள்.
எதற்கும் ஓர் எல்லையுண்டு. கவியன்பனின் கவிதைச்சுவைக்கு மட்டும் எல்லை இல்லை.
”கோடு”களை தாண்டிவிட்டால் சாபக்”கேடு”தான் என்று கோடை வைத்தே ரோடுபோட்ட கவியன்பன் அவர்களின் கவிதை அமர்க்களம்
கோட்டை வைத்து கவிதை கோடு போட்டவிதம் அருமை
அன்புச் சகோதரர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்!
ஜஸாக்கல்லாஹ் கைரன்!
Wa alaikkum salam, Bro, Ameen,
Yes. You have exactly understood core of my poem and it proves your talent of grasping mind. Mashaa Allaah! Really, during our school days, we had been taught about character which is real "set of lines". Ultimately our religion stress for SHARIA which is true line that nobody can go beyond the line. Hence, it is easy for me to develop this poem by using all of these practices which had been taught to us in school and Madarasa. Moreover, my ambition to write 'MARABUKKAVITHAI" is due to follow the rules of YAAPPILAKKANAM which is the "set of lines" to make nice sound while reading those Tamil Poems. So, I have selected all of these tips to create this poem which is being appreciated all of you. JAZAKKALLAH KHAIRAN.
அன்பு நெறியாளர் ஓர் உண்மையை அழகாய்ச் சொல்லி விட்டார்கள்; ஆம்! அத்தனைக்கு ஒரே கோடு; அஃதே எல்லைக் கோடு; உங்களின் அறிவுக் கூர்மையைப் பாராட்டுகிறேன்.
அதிரைத் தமிழூற்று சித்திக் அவர்களின் பார்வையில் என் கவிதைகள் பட்டதும் என் கவிதைகள் வரவேற்கின்றன; என் வலைப்பூவின் நிர்ந்தர வருகையாளர்; உங்களின் வருகையும் வாழ்த்தும் என் கவிதைக்கு உரமூட்டும்!
ஆஸ்தானக் கவிவேந்தர் சபீர் அவர்களின் எண்ணங்களை என் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றனவா? அவர்களின் எழுத்துக்களின் வண்ணமே என்றன் எண்ணங்களும் உள்ளனவா? என்று ஆய்ந்து பார்க்கிறேன்; அதனாற்றான், என் கவிதைகள் அனைத்திலும் உள்ள சூட்சமத்தைச் சரியாக ஈண்டுப் பதிவு செய்திருக்கின்றார்கள்; கவிவேந்தரின் ஆதரவின்றி அடியேனும் இப்பல்கலைக் கழகத்தில் அனுமதியைப் பெற்றிருக்க மாட்டேன் என்று என் அடிமனத்தினில் என்றும் ஒலிக்கும் ஓர் உணர்வையும் ஒப்புக் கொள்கிறேன்.
அன்புத் தம்பி அர.அல அவர்களும் என் கவிதைகட்கான ஓர் எல்லைக் கோட்டை வகுத்தவர்கள் என்பதை அனைவரும் அறிவோம்; அவர்களின் சாட்டை மட்டும் இல்லாமலிருந்தால் கலாமின் கவிதைகளும் எல்லைக் கோட்டை மீறியிருக்கலாம்!
மூதறிஞர்- டாக்டர் இப்றாஹிம் காக்கா அவர்களின் புகழுரை எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டதாக உணர்கிறேன். அல்லாஹ் ஒருவனின் ஆற்றலின் சுவைக்கு மட்டும் தான் எல்லை இல்லை என்று கருதுகிறேன். தங்களின் உடல்நிலையை அறிய அவா. உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் என் ஆக்கத்தினைக் காண வருகை தந்தமைக்கு மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்!
கல்வியாளர் யாசிர் அவர்களே! எத்தலைப்பைக் கொடுத்து எழுதச் சொன்னாலும், அத்தலைப்பை ஒட்டி எழுதும் போதில், அவ்வெல்லைக் கோட்டைத் தாண்டாமல் எழுத இயலுமென்பதே ஓர் எழுத்தாளரான உங்கட்கே தெரியுமன்றோ? அடுத்தப் பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
சுட்டும் விழிச்சுடரே! ஷாவன்னா என்னும் அறிவியல் மேதையே!! உங்களின் காமிராவால் பிடிக்கப்படும் கவிதைகளை என்றும் மனத்திரையில் பதிய முடியும்; என்றன் கவிதைகள் காலத்தால் அழிக்கப்படுமோ என்ற அச்சமுண்டானதால், இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபர் பதிப்பகம் அவற்றை நூலுருவில் பாதுகாக்கும் என்று நம்புகிறேன்!
Post a Comment