வங்கக் கடலில் காற்றழுத்த மண்டலம் உருவாகியிருக்குமோ என்று ஊர் ஞாபகத்தை ஏற்படுத்தியது நேற்று முன்தினம் இங்கே துபாயில் இருந்த வானிலை !
ஊர்ப் பக்கம் ஒரு சினிமா கூத்தாடி எடுத்த விஸ்வரூபம் அப்படியே யு.எ.இ. வானிலை போல் மாறிக் கொண்டிருப்பதாக வேறு ஆங்காங்கே தூ(ற்)றிக் கொண்டிருந்தது இந்திய ஊடகங்கள் !
அந்த நடிகன் விஸ்வரூபத்தில் வாழ்ந்தானாம் அதற்காக மக்களிடம் நடித்துக் கொண்டிருந்தான் இந்திய ஊடகங்களில்!
சரி அது எதற்கு இப்போன்னு கேட்கிறீங்களா ? அதுதான் பலருடைய சுயரூபத்தை திரை விளக்கி காட்டியது !
நேற்றைய முன்தினம் வாநிலை இப்படித்தானுங்க இருந்துச்சு இங்கே !
மேகங்கள் ஒன்று கூடி இருட்டோடு இங்கு வந்து கண்ணீர் வடித்தாலும் எங்களுக்கு விடுமுறையில்லைன்னு சொல்லிட்டாங்க பாஸ் !
அஜ்மான் கட்டிடங்களில் அடுக்கிய கற்களும் அழகான கட்டிடக் கலை என்றே சித்திரம் சித்தரிக்கிறது.
ஷஃபி அஹமது
16 Responses So Far:
அனைத்துப்படங்களும் அருமை...அஜ்மானின் மொரோக்கோ பள்ளி அருமையிலும் அருமை...அந்த கடைசிப்படம் நிஜமான கட்டிடமா இல்லை கட்டித்தொங்கவிட்டிருக்கும் போஸ்டரா ?? ஆச்சிரியப்படவகைக்கும் புகைப்படக்கலை.. சூப்பரப்பூ கலக்கீட்டீங்க சகோ.ஷஃபி
Thank You @Yasir
Assalamu Alaikkum,
Nice pictures with magical touch.
The last picture would play magical vibration in our eyes if brothers/sisters try to scroll down or up with mouse wheel. Just try yourselves.
No other pictures in the collection has such effect.
Thanks brother Shafi Ahamed and AdiraiNirubar.
சிறந்த காமிரா கைவண்ணம். பிரம்மிக்கத் தகுந்த படங்கள். பாராட்டுக்கள்.
Thank you Mr.Ameen., I've realized the same while I saw this page first time. :) And Thank you Mr.Ebrahim Ansari.
Awesome pictures
கட்டிடக் கலையை
”காமிரா” கலையால்
சுட்டிடும் கலையில்
சுந்தர நிலையோ?
உன்றன் கலையால்
உலகம் முழுதும்
குன்றாப் புகழும்
குவியும் இனியும், (இன்ஷா அல்லாஹ்)
அனைத்து போட்டோக்களும் வாணம் தொட்டு நிற்குது
மாறுபட்டக் கோணங்களில்
வேறுபட்டக் கட்டிடங்கள்
கட்டியிருப்பதைவிட
காட்டியிருப்பது
அழகாயிருக்கிறது!
புகைப்படத்தின்
ஒவ்வொரு
சதுர மில்லிமீட்டருக்கும்
அசலின்
சதுர அடி கணக்கிட்டு
காசு தரலாம்.
கட்டி எழுப்பியவனுக்குத்
தெரியுமா
மொட்டைமாடியில்
கார்மேகம் பந்தலிடும்
கனமழைக் காலமொன்றைப்
பொழியுமுன்
புகைப்படமாக்குவர் என்றும்
பொதிவிலதைப் பதிவரென்றும் ?
கட்டிடங்களில்
வசிப்பதற்குத்தான் வாடகை
ரசிப்பதற்கு...
ஷஃபியின் காமிரா போதும்!
வாழ்த்துகள் தம்பி.
(பி.கு.: நானும்தான் அஜ்மான்ல இருக்கேன்...நோ யூஸ்! "நானும் அஜ்மாந்தான் நானும் அஜ்மாந்தான்"ன்னு வேண்ணா சொல்லிக்கலாம்.)
அஜ்மானை
அந்தமானாய்
நிஜமாய்
நிழற்படத்தில்!
கவிவேந்தரும்
“காமிரா” சுந்தரரும்
அஜ்மானில் இருப்பதும்
அஜ்மானுக்கு அழகே!
வானுயர்ந்தக் கட்டிடங்களை
வானும் தொடவில்லை;
தானுணர்ந்த “காமிராவின்”
தன்னகத்தே அடக்கிவிட்டீர்!
Very nice
Masha Allah
அழகாயிருக்கு!
(பி.கு.: நானும்தான் அஜ்மான்ல இருக்கேன்....) Nijamava? :)
And thank you for all your comments and appreciations!!!
Nice shoot out, last picture is an excellent and I think the sky is clear...
hats off bro shafi
நிறைய செய்திகளை சொல்ல்லமல் சொல்கிறது கட்டிடங்கள்
அனைத்துப்படங்களும் அருமை...சிந்திக்க தூண்டும் சித்திரம்...பாராட்டுக்கள்
Post a Comment