Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மிருகங்களாகும் மனிதர்கள் (மிருகங்கள் மன்னிக்கவும்) 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 17, 2013 | , , , , ,


மனிதம் மருவி மிருகமாய் மாறிக்கொன்டிருக்கிறதோ என்று ஐயம் மேலிட ஆரம்பித்திருக்கிறது!

எங்கு பார்த்தாலும் தொடர் கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், குண்டு வெடிப்பு, ஆள் கடத்தல் என மனிதம் அழிவை நோக்கி வேகமாய் நகர்ந்து கொன்டிருக்க இயல்பான நடைமுறைச் சம்பவங்களெல்லாம் இயற்கைக்கு முரனாய், நேருக்கு மாறாய் நிகழ்ந்து கொன்டிருக்கிறது.

குறிப்பாக பெண்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்துக் கொன்டிருக்கிறது.

‘ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி’

"குழந்தையை மருத்துவனையில் அனுமதித்த தாய் துப்புறவு தொழிலாளர்களால் கழிவறையில் கத்தி முனையில் வன்புணர்வு"

"கணவனை அடித்து உதைத்துக் கட்டிவைத்து அவன் கண் முன்னே மனைவியை கற்பழித்து அந்த மருத்துவமனை வெளியே நின்றுகொன்டிருந்த கும்பல்"

"பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி மாணவியை ஒரு கும்பலால் கடத்தி வன்புணர்வு. அதே மாணவி முன்னொறு முறையும் இதே போலவே கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டாள்"

"எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையும், தாய் மாமனும், சகோதரனும் தன்னைச் சீரழித்ததால் தற்கொலைச் செய்து கொன்ட இளம் பெண். நம் ஈனச் செயலால் ஓர் உயிர் போய்விட்டதே என்ற குற்ற உணர்வே இல்லாமல் அவளின் தங்கையோடும் தொடர்ந்தது அரக்கர்களின் அட்டூழியம்!?"

"மகளைச் சீரழித்த தந்தை!? தன் கள்ளக் காதனோடு உறவுகொள்ள வற்புறுத்திய தாய்!? தற்கொலைக்காக இளம் பெண் ஆற்றில் குதித்த அவலம்..."

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மேலை நாட்டுத் தந்தை தன் மகளை பல ஆண்டுகள் அடைத்து வைத்து வன்புணர்ந்து, குழந்தைகளும் பெற்றததாகவும் தப்பி வந்த பெண் காவல் நிலையத்தில் புகார் செய்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. எங்கோ நடந்தாக கேள்விப்பட சம்பவங்கள் நம் நாட்டிலும் நடந்திருப்பது வேதனையே.

எங்கே போய்க் கொண்டிருக்கிறது கலாச்சாரத்திற்கும், பன்பாட்டிற்கும் பெயர் பெற்ற நம் தாய்த்திரு நாடு!

பாதுகாப்பு வேண்டி காவல் நிலையம் சென்றால் அங்கே களவாடப்படுகிறது கற்பு.

கல்வி கற்க பள்ளிக்கூடம் சென்றால் அங்கே காமத்துப்பால் கற்பிக்கும் ஆசிரியர்கள்.

இப்படியாக தொடர்ந்துகொன்டே போகும் குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைத்தபாடில்லை.

நம் காவல் துறையும் நீதி மன்றங்களும் உட்சகட்டமாய் சாதித்தது, அப்பாவி இளைஞர்களை குறிப்பாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தளம் முழுதும் பரபரப்புச் செய்தியோடு கைது செய்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் நிரபராதிகள் என இரகசியமாய் விடுதலை செய்ததே.

அரச பயங்கரவாதத்திற்கும், ஊடக விபச்சாரத்திற்கும் தீர்வில்லை. பாதிக்கப்பட்டு சிறைக் கம்பிக்கிடையே சீரழிந்த இளமைக்கும் இலவசமாய்ப் பெற்ற தீவிரவாதப் பட்டத்திற்கும் பரிகரம் ஏதுமில்லை.

"இந்தியாவில் 40 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதில் பெரும்பாலான சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்படுவதே இல்லை" என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி புரோமிளா சங்கர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை வசிப்பவர்கள் அனைவரும் அதிர்ந்தே போவார்கள் நம் நாட்டின் நிலையை எண்ணி.

ஆள்வோரும், அரசு அதிகாரிகளும் முக்கியக் குற்வாளிகள் பட்டியலில் முதலிடம் இடம்பிடித்திருக்க பின் யார்தான் இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கொண்டு வருவது. கடும் தண்டனைச் சட்டங்கள் கொன்டுவரப்பட்டால் முதலில் நம் தலைதான் உருளும் என்ற நிலையில் ஆட்சியாளர்கள் அரசியல் வாதிகள் அரசு அலுவர்களும் இருக்க உரிய சட்டத் திருத்தங்கள் ஏற்படுவது குதிரைக் கொம்பே!

என்னதான் இவற்றுக்குத் தீர்வு?

அபு ஈசா

9 Responses So Far:

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
தற்போது நாட்டில் அனைவரின் கவனத்திற்கும் கவலைக்கும் ஆளாக்கக்கூடிய விசயங்கள் தான் மேலே பட்டியலிட்டவைகள் -

1) மிருகங்கள் செய்யும் காரியங்கள் போல் வெட்கமின்றி ,சற்றும் கூச்சமின்|றி பப்ளிக்கில் ஈனச்செயல்கள் தங்குதடையின்றி செய்வதால் மிருகங்களைவிட கேவலமானவர்கள் அவர்கள். ஏனெனில் மிருகங்களுக்காகவாவது 5 அறிவு தான்.

2) எக்கேடு கெட்டாலும் காசு வந்தால் போதும் எனும் தரங்கெட்ட எண்ணம் வந்ததும் இக்குணங்கள் பெருக ஒரு காரணம்.

3)கலை என்ற பெயரில் ஆபாசம், வக்கிரம், பொய்யை வரலாறு என்றும் உண்மை வரலாற்றை கற்பனை என்றும் பரப்பி படமெடுக்கும் தரங்கெட்ட கும்பலும் ஒரு காரணம்

3) நியாயம், தர்மம் என்று நீதி என்று முதல் பக்கத்தில் தலைப்பில் மட்டும் போட்டுவிட்டு அதற்கு எதிர்மறையாய் பரபரப்புக்காக ஆபாசங்களயும், வக்கிரங்களையும் பரப்பும் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களும் ஒரு காரணம்.

4) அரசுத்துறை நியாயமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடு இன்றி செயல்படாமல் இருப்பதும் ஒரு காரணம்

5) எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய ஒழுக்க மான்புகள், சட்டங்கள் தான் மனித சமுதாயதம் அனைத்திற்க்கும் சிறந்தது, பலனளிப்பது என்று அனைத்து அரசியல் வாதிகள் சட்டவல்லுனர்கள் உட்பட அனைவர்க்கும் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வால் அதனைச் சட்டமாக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

The above and all stories are telling that we need sharia law.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

The above article reflects merely a surface level chaos in the society. It shows that evils of the mind is dominating and no morale in the human life.

What is necessary now is to nurture good characters, understanding and considering fellow human's feelings(empathy) and honest mutural respect.

God consciousness is prime important to supress the evils. Actually the above mentioned necessary things are to be followed both in private(alone) and in public.

May God Almighty show all of us straight path.

Thanks and best regards,

B. Ahamed Ameen

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தீர்வு இஸ்லாமிய வழி மட்டுமே!

நாமும் முழுமையான இஸ்லாமியத்தை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------

ரபியுள் ஆகிர் 7
ஹிஜ்ரி 1434

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த ஒட்டு மொத்த கயவர்களை உடனே போட்டுத்தள்ள மத்திய,மாநில அரசுகளும், உயர், உச்ச நீதிமன்றங்களும் முன்வருமா? இல்லை நாட்டில் என்ன நடந்தாலும், மக்கள் எக்கேடுகெட்டு போனாலும் எங்களுக்கு என்ன? என்று பின்வாங்கி காலம் தாழ்த்திக்கொண்டே போகுமா? அல்லாஹ்வுக்குத்தான் எல்லாம் விளங்கும்...

நல்ல ஆக்கம் சகோ. அபுஈசா.

sabeer.abushahruk said...

இறையச்சம் ஒன்றே தீர்வு.

ZAKIR HUSSAIN said...

சினிமாவை வாழ்க்கையை விட முக்கியத்துவம் தரும் சமுதாயம். பத்திரிக்கை / டெலிவிசன் / இன்டர்னெட் எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சி மட்டும் வியாபாரமாகும் கொள்கை....தண்டனை பயம் இல்லாத லஞ்சம்...குற்றங்கள் பெருகி மனித உரிமைகள் மீறப்பட காரணமாகிறது.

1500 வருடத்துக்கு முன் ஒரு படிக்காத மனிதர் [ முஹம்மது நபி ] இதற்கெல்லாம் தீர்வு சொல்லிட்டாருப்பா..என்றால் 'மதம்' என்று முத்திரை குத்துபவர்கள் இதுவரை உருப்படியான தீர்வு சொன்னபாடில்லை.

நாம் சொன்னால் மட்டும் ஆயிரெத்தெட்டு நொட்டச்சொல்/ மனித உரிமை மீறல் என்ற கோசம்.


சரி நீங்க சொல்லுங்கடா என்றால் செலக்டிவ் அம்னீசியா வந்த மாதிரி கொதித்து எழும் குற்றங்களை கண்டுவிட்டால் 'இதற்கெல்லாம் இஸ்லாமிய முறை தண்டனை'தான் சரி என்பது.

அடுத்த நாளே இதுவெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்று அறிக்கை விடுவது...என்னதான் சொல்லவர்ரானுக என்று இதுவரை யாருக்கும் புரியாமலே காலத்தை ஒட்டிட்டானுக.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

I had written my previous comment in a generic terms(without mentioning Islam, Sharia, etc.) because some non muslim brothers and sisters have allergytic or phobia whenever they hear the concepts in the name of Islam, Sharia, etc.

I suggest to the non muslim brothers and sisters to approach The Quran and Islamic principles like a reference for any kind of problem in the personal and society level lives.(Similar to medicine, any person can get cured for illness by following ayurvedic, accupuncture, siddha, allopathy, homeopathy, etc.).

I suggest even selectively find solution for any particular issue you face in worldly life by studying those principles. If we don't have effective solutions to problems, better we need to approch alternative which is promising.

We have proverb in Tamil which means that jasmine in neighbour's garden too has nice smell.

An amazing example accepting the above proverb: A respected Hindu religious personality has an appeal to women by refering an Islamic principle. But there are tens of thousands of principles and effective solutions are there to refer from Islam, and The Quran.

"The pontiff of Madurai mutt, Arunagirinatha Sri Gnanasambanda Desika Paramacharya Swamigal, popularly known as Ma­du­­rai Adheenam, has ap­pe­­aled to women to imp­ose self-discipline and we­ar purdah, like Muslim wo­men, while going out to avoid becoming victims of rape."

Full news here.
Wear purdah, avoid rape: Adheenam


May God Almighty show all of us straight path.

Thanks and best regards,

B. Ahamed Ameen

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு