இந்த வார செய்தியில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு, வைகோ ஜெயலலிதா சந்திப்பு, பி எஸ் எல் வி சி 20 ராக்கெட் பயண ஆயத்தம், வீரப்பன் கூட்டாளிகளின் துக்குக்குக்கு தடை, பிரபாகரன் மகன் சாவு போன்ற செய்திகள் எமது பார்வையுடன் காணொளியாக உங்களனைவரின் பார்வைக்கும்.
இந்த வலைக்காட்சி பற்றிய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!
இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...
அதிரைநிருபர் பதிப்பகம்
அதிரைநிருபர் பதிப்பகம்
11 Responses So Far:
வீரப்பன் நல்லவனா? கெட்டவனா? என விவாதிப்பதற்கு முன்னர் இவ்வளவு காலம் மூன்று மாநில காவல்துறையினருக்கும், மத்திய அதிரடிப்படையினருக்கும் தண்ணிக்காட்டி கொண்டு காட்டில் பல வருடங்கள் தர்பார் நடத்தி தாக்குப்பிடிக்க முடிந்தது என்றால் அவன் ஒரு முஸ்லிமாக பிறக்காமல் போனதே அவனுக்கு அன்றிருந்த ஒரு ப்லஸ் பாயிண்ட். அவன் மட்டும் முஸ்லிமாக இருந்திருந்தால் என்றோ அவன் சோலியை மத்திய, மாநில அரசுகள் முடித்து மண்ணள்ளிப்போட்டிருக்கும்.
இவ்வளவு பெரிய பயங்கரவாதியாக இருந்து காட்டில் பல போலீஸாரை கொன்ற அந்த வீரப்பனை கடைசியில் எண்கவுண்டரில் போட்டுத்தள்ளிய பின் அவன் உடலை அவன் குடும்பத்திற்கு ஒப்படைத்தால் அவன் சமாதியிலிருந்து அவனைப்போல் இன்னும் பல பயங்கரவாதிகள் உருவாகலாம் என்றோ அல்லது சட்டம் ஒழுங்கு கெடும் என்றோ எண்ணி அவன் உடலை அவனு குடும்பத்திற்கு அன்றைய அரசு ஒப்படைக்காமல் இருக்கவில்லை.
அப்புறம், இன்றைய செய்தி என்னவெனில் இந்தியன் முஜாஹிதீன் என்கிற லஸ்கர் இ தொய்பா அமைப்பிடமிருந்து ஆந்திர மாநில பாஜாக தலைவருக்கு தவால் (தபால்) வந்திருக்காம் தில்சுக் நகரில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்று......
சுசில் குமார் ஷிண்டேயும் சொல்லிட்டாரு "இது அஜ்மல் கசாப், அப்சல் குருவுக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டணையின் பிரதிபலிப்பு".
இன்னுமா இந்த சமுதாயம் இவங்கள நம்பிக்கிட்டு ஈக்கிது????
அமைதியாய் இருந்த இந்தியாவே நீ எங்கு தான் ஓடி ஒளிந்து கொண்டாயோ???
சிங்கள இனவெறியன் ராஜபக்ஷே நம் நாட்டின் மையப்பகுதியில் பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்திற்கு விருந்தாளியாக வந்தால் ஒரு பேச்சும், அதே ராஜபக்ஷே காங்கிரஸ் ஆளும் ஆந்திராவிற்கு திருப்பதி வெங்கிடாஜலபதியை சாமி கும்பிட வந்தால் மற்றொரு பேச்சும் பேசி வரும் இந்த காங்கிரஸ் அரசை என்னாண்டு சொல்லலாம்ண்டு நீங்களே முடிவு செஞ்சிக்கிடுங்க........
சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோடிகள் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதே அரசின் தலையாய கடமை என்று சொல்லிக்கொண்டே பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகி செட்லாகிட்டாப்ளெ.....
சகோதரர்களே நமக்கான வலுவான மீடியா, ஊடக தேவையை உணரும் தருணம் இது.எல்லா ஊடகத்தைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம் உலக மார்க்க விஷயங்களில் கற்றுக் கொண்டு கூர்மையடைவோம். கண்டிப்பாக .. நாம்தான் நம் சமூகத்தை வளப்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்.-..!
ஊடகத்தை ஆள்பவரே உலகத்தை ஆள்பவர்!...வாருங்கள் அவதூறுகளைக் களைவோம்
\\இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...//
இம்முயற்சி வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ஆமீன்
அம்மா திட்டத்துக்கும் நம்ம தீ அதிரை நியூஸ்க்கும் என்னங்க சம்மந்தம்? மேலும் தெருஞ்சுக்க நம்ம தளத்துக்கு வாங்க http://theeadirainews.blogspot.in/2013/02/blog-post_2034.html
செய்தி வாசிப்பில் மெருகேறியிருக்கிறது. கீப் இட் அப், அபு மஹ்மூது.
சகோதரர்களே நமக்கான வலுவான மீடியா, ஊடக தேவையை உணரும் தருணம் இது.எல்லா ஊடகத்தைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம் உலக மார்க்க விஷயங்களில் கற்றுக் கொண்டு கூர்மையடைவோம். கண்டிப்பாக .. நாம்தான் நம் சமூகத்தை வளப்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்.-..!
ஊடகத்தை ஆள்பவரே உலகத்தை ஆள்பவர்!...வாருங்கள் அவதூறுகளைக் களைவோம்
\\இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...//
இம்முயற்சி வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ஆமீன்
மெருகேறிவரும் செய்திவாசிப்பு. கீப் இட் அப் அபு- மஹ்மூத்.
ஹைலைட்:
ஒரே நாடு, ஒரே வாரத்தில் இரு வேறு நீதி. என்ன நீதி. அது அநீதியல்லவா!
அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாக்கி அவர்கள் மட்டும் மூடு வந்தால் இணைந்து கொள்வார்களாம். என்ன கொள்கை. இதுவும் கொள்கையில் கொலையல்லவா!
----------------------------------------------------------------------------------------------------
ரபியுள் ஆகிர் 15
1434
Thanks lord for the edition ......expecting more recent information in weekly is much better????????
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த நிகழ்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்தோங்கி வருகிறது. மேலும் உரமிடுங்கள்.
பாலச்சந்திரன் கொலை - ஜெயலலிதா கண்டனம் சரிதான். பாலச்சந்திரனும் ஒரு தீவிரவாதியே அவன் கொல்லப்படவேண்டியவன்தான் என்று நரகல் நடையில் பேசிய சுப்பிரமணியம் சாமிக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. அரசியல் ஆலோசகர் சோ ராஜபக்சேயை வரவேற்கிறார். அவரது ஆலோசனை பெற்று அரசியல் நடத்துபவர் எதிர்த்து கருத்து வெளியிடுகிறார். இதற்குப் பெயர் பார்ப்பனக் குசும்பா?
சமுதாயத்தில் நடைபெறும் சில ஒழுங்கற்ற அத்துமீரல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். -உதாரணமாக முதல்வர் பிறந்த நாளுக்கு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை செய்த ஜால்றாகளைப் பற்றி.
அருமை தொடருங்கள்
Post a Comment