குறுந்தொடர் : 5
எத்தியோப்பியா
எத்தியோப்பியாவைப் பற்றி நிறைய எழுதலாம், காலனி ஆதிக்கதிற்கு ஆட்படாத, கண்ணியத்திற்குரிய பிலால் அல் ஹபஸி (ரலி) அவர்கள் பிறந்த ஊர். முழு ஆஃப்ரிக்க நாடுகளும் ஒன்று கூடும் ஆஃப்ரிக்க யூனியன் நிறுவப்பட்ட நாடு. இயற்கையைக் கட்டுப்படுத்துபவன் தன் ரஹ்மத்தைப் பச்சையாகப் படரச்செய்து ஏசி/ஃபேன் இன்றி வருடம் முழுதும் குளு குளுவென்று இருக்கும் நாடு.
அரபிகள் அந்த நாட்டை”அல் ஹபஸி” (இக்பால் காக்காவின் கன்ஃபர்மேஷன் அவசியம்) என்று அழைக்கின்றார்கள், ”எத்தியோ” என்ற லத்தீன் வார்த்தைக்கு ”கருப்புகளின் வசிப்பிடம்” (Land of Blacks) என்று பொருள். ஆனால், மற்ற ஆஃப்ரிக்க நாடுகளின் கருப்பு போலல்லாமல் பெரும்பான்மையான மக்கள் மாநிறமாகவே இருந்தார்கள் (கலரில் என்ன இருக்கின்றது வார்த்தைகளிலும் செயல்களிலும் எண்ணங்களிலும் கண்ணியம் காப்பதில் இருக்கின்றது வேறுபாடு).
ஆஃப்ரிக்க நாடுகளில் பாதுகாப்பு அதிகமாக உணரப்பட்ட நாடு இதுதான், இஸ்லாம் எங்கெல்லாம் பெரும்பான்மையாக பின்பற்ற படுகின்றதோ அங்கெல்லாம் அந்த அளவிற்குக் குற்றச் செயல்கள் நடைபெறுவதில்லை என்பது என் அனுபவ உண்மை. அரசுக்குப் பயப்படாவிட்டாலும் படைத்து, பரிபாலிக்கும், எந்த நேரமும் நம்மை கண்காணிக்கும் அல்லாஹ்வுக்கு பயந்த மக்களாக பெரும்பான்மைiயோர் வாழ்வதே காரணம் என்று நினைக்கின்றேன். நம்ம ஆட்களிலும் பிக்கிலி பசங்க நிறையவுண்டு, பாவிங்க இவ்வளவு விழிப்புணர்வு ஏற்பட்டும் தர்ஹா கட்டுரானுங்களே !!!
இப்ப விசயத்துக்கு வருவோம், நைஜீரியா போலல்லாமல் எத்தியோப்பியா விசா, பொருட்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களை அன்புடன் அணுகியதால் எளிதாக விசா கிடைத்தது.
விசாவைப் பார்த்தால் பரிதாபமாக இருக்குதுல்ல !? அந்த நாட்டிலிருந்து வீட்டுவேலைக்கு வரும் அபலைப் பெண்களைப்போல் கலர் பிரிண்டரும் இல்லை போலும்.
அப்புறமென்ன மீண்டும் தொடர்ந்து பயணம் நம்ம ஆஸ்தான விமானம் எமிரேட்ஸில்தான். எத்தியோப்பியா போலே (Bole) சர்வதேச விமான நிலையத்தில் விடியற்காலையில் விமானம் தரை இறங்கியது. வானிலையும் விமான நிலைய அமைப்பும் சந்தோஷத்தைத் தந்தது அவங்க நாட்டு கஸ்டம்ஸை நெருங்கும் வரை. அதற்கு பிறகு ஆரம்பித்தது சச்சரவுகள், ஆமாம்! நாங்க மாதிரிக்காக (sample) எடுத்துச் சென்ற சில பொருட்களை அங்கிருந்த கஸ்டம்ஸ் அலுவலர்கள் திறந்து சோதனை செய்யவேண்டும் என்றார்கள்.
ஆஹா! நம்ம “தல”யே பத்த வச்சுட்டானுங்க என்று நினைத்தவனாக “தல”யிடம் சொன்னேன். “இது அவங்க நாடு நாம சட்டம் போட முடியாது நீங்க வேணும்டா கொஞ்சம் வெளியே போய் தம்மடித்துக் கொண்டு இருங்க நான் முடித்து விட்டு வருகின்றேன்” என்றேன்.
அப்பாடா 4 மணிநேரம் ஆகியும் “தல” யின் சிக்ரெட் பாக்கெட்டைத் தவிர மற்ற காரியங்கள் இன்னும் முடிந்த பாடில்லை. உச்சகட்டமாக அரையும் குறையுமாக ஆங்கிலத்தில் பேசிய கஸ்டம் பெண் ஆபிசர் சிவிங்கத்தை ஒரு மாதிரியாக மென்று கொண்டே ஒரு மவுஸைப் பார்த்து கேட்டார் “இது கம்யூட்டரா?” !!! என்று.
அவ்வளவுதான் உக்கிரத்தில் இருந்த ‘தல’ “உன்னையெல்லாம் யார் இந்த போஸ்டல போட்டது குறைந்தபட்ச அறிவே உனக்கில்லை” என்று தன்னைச் சுற்றியிருந்த பொருட்களையும் தூக்கி எறிந்து விட்டு “நான் மேலதிகாரியைப் பார்க்கவேண்டும்” என்று உரும ஆரம்பித்து விட்டார்.
அந்த களேபரத்தைக் யாரை அவர் காண வேண்டும் என்று சொன்னாரோ அந்த மேலதிகாரியே அருகில் வந்து நிற்பதைக் கூட அறியாதவராக சூடாக இருந்தார். ஆனால் அந்த கஸ்டம்ஸ் மேலதிகாரியோ “நீங்கள் செய்ததை நான் பார்த்தேன், இட்டிஸ் அன் அக்செட்டபிள்” என்றார் ‘தல’ மீண்டும் எகிற ஆரம்பித்தார்.
நானும் சூழலை அறிந்து கொண்டு “நீங்கள் ஹோட்டலுக்கு போங்கள் நான் இவைகளை முடித்து விட்டு வருகிறேன்” என்றேன். பின்னர் எல்லாம் முடிந்து 1000$ டேக்ஸ் (TAX) கட்டி ஒருவழியாக ஹோட்டல் வந்தடைந்தோம். எத்தியோப்பியா கஸ்டம்ஸல ஜட்டி போட்டிருப்பதையும் டிக்ளேர் செய்யனும் இல்லாட்டி பிடிப்பானுங்க என்று சொல்லாமல் சொன்னது அவர்களின் கெடுபிடி. பிறகு விசாரித்த போதுதான் விபரம் தெரிந்தது இந்த நாட்டின் முக்கியமாக மட்டும் அல்ல அதையும் தாண்டிய ஒரே வருமானம் இந்த டேக்ஸ்தான் (சுங்கவரியையும் சேர்த்து). வார்த்தைகளைக் கொஞ்சம் கூட பேசிட்டாக்கூட டேக்ஸ் போடுவானுங்க என்ற பிரம்மையை ஏற்படுத்தியது அந்தச் சூழல். பேசாம எத்தியோப்பியா என்ற பெயரைத் தூக்கிவிட்டு ”டேக்ஸோபியா” என்று வைக்கலாம்.
எழில்மிகு எத்தியோப்பியாவின் ஏர்போட்டின் வெளிப்புற முகப்பு தோற்றம்.
ஏர்போர்ட்தான், திரும்பி வரும்போது கிளிக்கியது.
ஹார்மோனி ஹோட்டல் பெயருக்கு ஏற்றவாரே அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. எத்தியோப்பியர்களின் உதவும் மனப்பான்மையும், உயர்ந்த மனநிலையும் இந்நாட்டில் டேக்ஸ் பயத்தைத் தவிர வியாபாரம் செய்ய முடியும் என்ற ஒரு இணக்கமான சீதோஷன நிலையை மனதில் உண்டாக்கியது “First Impression Is The Best Impression” என்று சொல்வது மிகையல்ல.
விடியலை நோக்கி உழைக்கும் வர்க்கம் விடியற்காலையில் ஹோட்டலில் இருந்து எடுத்தது.
எத்தியோப்பிய பணத்தை பிர் என்று அழைக்கின்றார்கள். அங்கே ஒரு கூத்து என்னவென்றால் வாப்பா, உம்மா, பொண்டாட்டி (ச்ச்சும்மா விளையாட்டுக்குதான்) என்று எல்லாத்தையும் கூட வாங்கிவிடலாம் ஆனால் அமெரிக்கன் “டாலரை” மட்டும் வாங்க முடியாது. அப்படியொரு பற்றாக்குறை. டாலருக்குப் பேயாக அழையும் அங்குள்ளவர்களைக் கண்ட அவலம் அமெரிக்கனின் ”வ(ல்)லு(றவு)” இன்னும் குறையவில்லை என்பதை பறைச்சாற்றுவது போல் இருந்தது. பேங்கில் கூட அவங்க நாட்டுப் பணத்தை வாங்க மறுக்கின்றனர்.
யாரும் அந்த பக்கம் போனா தேவைக்கு மட்டும் டாலரை மாத்துங்க, அப்படி செய்யாமல் அங்கே நான் டாலரைக் கணக்கில்லாமல் பிர்ராக மாற்றி மீதம் இருந்த 3,000 பிர்ரை (158$) இங்கே கொண்டு வந்து துபாயில் உள்ள அனைத்து எக்சேஞ்சுக்கும் மாற்ற எடுத்துச் செல்ல, மாற்றப்போன இடத்திலெல்லாம் என்னை பார்த்து விட்டு ”சாரி சார் வி டோண்ட் அக்செப்ட் பிர்” இப்பொழுது அது என் வீட்டு குழந்தைகளின் சிட்டுக்குடி சாமன் விளையாட்டில் கரென்சியாக பயன்படுத்தபட்டுக் கொண்டிருக்கின்றது.
எத்தியோப்பியா 100 பிர்,பிர் மதிப்பு எப்பவும் டர் தான்
முகமது யாசிர்
24 Responses So Far:
நம்ம ரேசன் கார்டுல வட்ட வழங்கல் துறை அதிகாரி ஸ்டாம்பு அடிச்ச மாதிரியில இருக்குது 'எத்தியோப்பியா' விசா. சகோ. யாசிர், நல்லார்க்கு உங்களின் இந்த நய்யாண்டி கலந்த பயண அனுபவம்.
//ஹார்மோனி ஹோட்டல் பெயருக்கு ஏற்றவாரே அமைதியாகவும் அழகாகவும் இருந்தது. எத்தியோப்பியர்களின் உதவும் மனப்பான்மையும், உயர்ந்த மனநிலையும் இந்நாட்டில் டேக்ஸ் பயத்தைத் தவிர வியாபாரம் செய்ய முடியும் என்ற ஒரு இணக்கமான சீதோஷன நிலையை மனதில் உண்டாக்கியது “First Impression Is The Best Impression” என்று சொல்வது மிகையல்ல.//
நீங்கள் சொல்லியிருப்பது போன்றே உணர்வுகள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது... அது சரி, இவர்களின் மறுபக்கம் என்று ஒன்று இருகிறதா ?
தொடராக வர வேண்டியதை குமுதத்தனமாக ஒரு பக்கத்தில் சுருக்கியாச்சா?
சரி, அடுத்த பயணக் கட்டுரையில் அந்நாட்டின் உணவுப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரத்தில் வித்தியாசமாகப் படுபவை, கலை, ஒரு சாமான்யனிடம் ச்சின்னதா ஒரு பேட்டி, ஒரு ஷாப்பிங் அனுபவம் என்று சேர்த்து விரிவுபடுத்தவும்.
எழுத்தில் சுவாரஸ்யம் இருப்பதால் நீங்கள் என்ன சொன்னாலும் நம்பத்தான் போறோம், நிறைய சொல்லுங்களேன்.
பயண அனுபவம் ..பயண தரும் பாடமாக உள்ளது
Nice bro Yasi, I suppose to expect more about their culture, etc...
அபுசாஜித் குறிப்பிட்டுள்ளதுபோல், எத்தியோப்பியாவின் பழம்பெயர் 'அபிசீனியா' (அரபியில் 'அல்-ஹபஷா') என்பர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் 'நஜ்ஜாஷி' என்ற நெறிநீதி மன்னர் இந்நாட்டை ஆண்டதால், ஜஃபர் (ரலி) போன்ற சஹாபாக்கள் அங்கு ஹிஜ்ரத் செய்து அவர் ஆட்சியில் அமைதியுடன் வாழ்ந்தனர்.
சபீர் சொல்லியிருப்பதுபோல் 'சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டீர்கள்' மிக்க மகிழ்ச்சி!
அது சரி! 'பிக்கிலி' என்றால் என்ன யாசிர்?
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நல்லதொரு பயண அனுபவத் தொடர்!
தாங்கள் சென்ற ஊருக்கு
நேரில் அழைத்து சென்ற உணர்வு!
வாழ்த்துக்கள்!
பிக்கிலி:
கெக்கே பிக்கேன்னு இளிச்சிக்கிட்டு கோக்கு மாக்கா பேசிக்கிட்டு கச்சா முச்சான்னு வேலை செய்து இன்க்கி பின்க்கி பாங்க்கிக்கெல்லாம் ரெஃபெரென்ஸ் கேட்பவய்ங்களே தமிழ்கூறும் நல்லுலகம் பிக்கிலி என்று அழைக்கும்.
(சபீரு, இன்னா அறிவுடா உனக்கு. எப்பிடிடா இப்பிடிலாம். என்னமோ போடா)
மருமகனார் யாசிர்! உங்களைப் போலவே உங்கள் எழுத்தும் இனிமை. அருமை.
ஹபஷி என்ற வார்த்தையைப் படிக்கும் போது இறையருட்கவிமணி ( மர்ஹூம்) கா. அப்துல் கபூர் அவர்களை எழுதிய மும்மணி மாலையில் வரும்
கரு நிறத்து ஹபஷியரை
காதல் மிகு பார்சியரை
பெருஞ்சினத்தின் அரபியரைப்
பிணைத்தெடுத்த நாயகமே!
என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
" சிறந்த எழுத்துக்கு சொந்தக்காரர்" என்ற கருத்துக்கு தம்பிகள் சபீர், இக்பாலுக்கு அடுத்து மூன்றாவது ஓட்டு என்னுடையதாக்கும்.
//கோக்கு மாக்கா பேசிக்கிட்டு //= Gog and Magog என்று ஹீப்ருவில் OLD TESTAMENT -ல் குறிப்பிடப்படும் கூட்டம் யஜூஜ் மஜூஜ் கூட்டமாமே. இவைகள் இப்போது சில இயக்கங்களில் தலைகாட்டத்தொடங்கி இருக்கிறார்களா அதுதான் கோக்கு மாக்கா பேசுராங்க்களா?
Gog and Magog (Hebrew: גּוֹג וּמָגוֹג Gog u-Magog; Arabic: يَأْجُوج وَمَأْجُوج Yaʾjūj wa-Maʾjūj) are names that appear in the Old Testament, and in numerous subsequent references in other works, notably the Book of Revelation, as well as in the scripture of Islam, the Qur'an. They are sometimes individuals, sometimes peoples, and sometimes geographic regions. Their context can be either genealogical (as Magog in Genesis 10:2) and apocalyptic, as in the Book of Ezekiel and Revelation. The passages from Ezekiel and Revelation in particular have attracted attention due to their prophetic descriptions of conflicts said to occur near the "end times".
thanks for your rescue Kavikakka....will be back soon : )
///ஆஃப்ரிக்க நாடுகளில் பாதுகாப்பு அதிகமாக உணரப்பட்ட நாடு இதுதான், இஸ்லாம் எங்கெல்லாம் பெரும்பான்மையாக பின்பற்ற படுகின்றதோ அங்கெல்லாம் அந்த அளவிற்குக் குற்றச் செயல்கள் நடைபெறுவதில்லை என்பது என் அனுபவ உண்மை. அரசுக்குப் பயப்படாவிட்டாலும் படைத்து, பரிபாலிக்கும், எந்த நேரமும் நம்மை கண்காணிக்கும் அல்லாஹ்வுக்கு பயந்த மக்களாக பெரும்பான்மைiயோர் வாழ்வதே காரணம் என்று நினைக்கின்றேன்///
இஸ்லாத்திற்கெதிராக உலகெங்கிலுமுள்ள சதிகார ஊடகங்களால் மறைக்கப்ட்ட, மறைக்கப்படுகின்ற உண்மை இதுதான்.
Short Visit adicha mathiri oru feeling... nice
கதை நல்லாருக்கு
இன்னும் வரும்........ தானே!
To யாசிர்....
போட்டோவில் ஏர்போர்ட் எங்கு இருக்கிறது என்று கண்டு பிடித்து சரியாக வட்டமிடுபவர்களுக்கு 100 பிர் பரிசாக தரலாம்.
இதுதான் கம்ப்யூட்டரா என்று கேட்ட ஆபிசரை நீங்கள் ஏன் போட்டோ எடுக்கவில்லை.
உங்கள் தலை Hypertension Tablets ஏதும் சாப்பிடுகிறாரா?
...இல்லை என்றால் "தூரம் அதிகமில்லை' என்று நான் சொன்னதாக செப்பவும்.
// சிறந்த எழுத்துக்கு சொந்தக்காரர்" என்ற கருத்துக்கு தம்பிகள் சபீர், இக்பாலுக்கு அடுத்து மூன்றாவது ஓட்டு என்னுடையதாக்கும்.//
எனது வாக்கையும் பதிவு செய்கிறேன்.
Assalamu Alaikkum,
Dear brother Yasir,
Exploring Ethiopia is interesting. Today's article seems to be finished shortly. Pictures are superb which are well complementing the Ethiopia travel story.
Thanks and regards,
B. Ahamed Ameen
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நல்லதொரு பயண அனுபவத் தொடர்!
தாங்கள் சென்ற ஊருக்கு
நேரில் அழைத்து சென்ற உணர்வு!
வாழ்த்துக்கள்!
எத்தியோப்பியர்களின் உதவும் மனப்பான்மையும், உயர்ந்த மனநிலையும் இந்நாட்டில் டேக்ஸ் பயத்தைத் தவிர வியாபாரம் செய்ய முடியும் என்ற ஒரு இணக்கமான சீதோஷன நிலையை மனதில் உண்டாக்கியது “First Impression Is The Best Impression” என்று சொல்வது மிகையல்ல.
---------------------------------------------------------------
I had same view.(Tax I don't Know).
முதலாவதாக குறைவாக எழுதியதற்க்கு பொறுத்துக்குகொள்ளுங்கள்..அடுத்த தொடரில் நிறைவாக எழுதுகின்றேன்....குறுந்தொடர் என்று போட்டுவிட்டு ”கன்னீத்தீவு” அளவிற்க்குபோய்விடுமோ என்று அஞ்சுகின்றேன்....இப்ப நன்றியுரை
மு.செ.மு. நெய்னா முஹம்மது நன்றி சகோ.ஆமாம் இன்னும் தார் வச்சு அடிக்கும் ரம்பர் ஸ்டாம்ப்தான் யூஸ் பண்றாங்கண்டு நினைக்கேன்
என் உற்சாக பானம் அபூஇப்ராஹீம் காக்கா அவர்களே..ஆமாம் காக்கா இருக்கலாம்,இன்னும் கொஞ்சம்”பழகி”னாதான் தெரியும்,பழகுவதற்க்குதான் நேற்றுபோய் மீண்டும் விசா அடித்துவந்தேன்
கவிக்காக்காவின் வாழ்த்து என்னை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…எழுதுவேன் காக்கா…நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறில்லை
நன்றி அப்துல்மாலிக் for sure will write about it if not full at least what I have seen
என்னை என் மகன் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர் தாங்கள்தான் காக்கா (அது சரி என் மகன் பெயர் எப்படித்தெரியும் உங்களுக்கு ) நன்றி தங்களின் வாழ்த்துக்கும் விளக்கத்திற்க்கும் இக்பால் காக்கா
மாமருந்து தரும் அலாவுதீன். காக்கா நன்றி தங்களின் வருகைக்கும் வாழ்துக்கும்
அன்சாரி மாமா உங்களைப்போன்றவர்களின் வாழ்த்துக்கள் என்னை வளர வைக்கும்,,,,நன்றி தங்களின் அன்புக்கும் ”கோக்கு மாக்கா” ஆராய்ச்சி விளக்கதிற்க்கும்
ஆமாம் Ibn Abdulwahid நாமும் ஊடகத்துறையில் ஊடுறுவினாலன்றி இதனை நிறுத்தமுடியாது
Thanks Shafi Ahamed , hope you got a placement ??
நன்றி நண்பர் M.H. ஜஹபர் சாதிக் …வரும் ஆனா வரும்ம்ம்ம்ம்
நன்றி ஜாஹிர் காக்கா யாரும் கண்டுபிடிச்சாங்களா ?? இல்லை 100பிர் நமக்குதானா ?? அந்த மூடுக்கும் அவரை(ளை)போட்டா எடுக்க மனம்வரவில்லை ஒரு போடு மண்டையில போடனும் போல இருந்து….ஆமாம் காக்கா “தூரத்தை” தொட்டுவிட்டார் என்றே நினைக்கின்றேன் காக்கா….ஆனா ரொம்ப நல்லவரு காக்கா…மனதில் ஒன்றும் வைக்கதெரியதவர்
நன்றி கவியன்பன் காக்கா தங்களின் வருகைக்கும் ஓட்டுக்கும்
Thanks Bro.Ahamed Ameen,,,next episode I’ll write little longer
நன்றி அர அல…கிரவுனிடன் என் சலாத்தை தெரிவித்துவிடவும்
நன்றி Abdul Rahman,,Tax is killing, it is the main source of income for Ethiopia government
And many thanks for readers who haven’t find time to post their comments
//நன்றி அர அல…கிரவுனிடன் என் சலாத்தை தெரிவித்துவிடவும்//
'காணவில்லை' என்ற தலைப்பில் கிரவுன் உடைய போட்டோவுடன் எழுதலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் தலைய காட்ட சொல்லவும். இல்லாவிடில் ஆர்டிக்கிள் வெளியாவதை சுப்ரீம் கோர்ட் கூட நிறுத்த முடியாது.
Bro.Yasir, No not yet. Still on Search Mode.
Post a Comment