Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாலியலுக்கு பலியாகாதே! - தொடர் - 3 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 08, 2013 | ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..

நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!

கன்னியமற்ற ஆடை தவிர்ப்போம்!

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைப் பற்றி பேசும்போது நவ(அ)நாகரீக ஆடைகளைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. காரணம் இவ்விசயத்தில் (அ)நாகரீக ஆடைகளின் பங்கு முக்கியமானது. குழந்தைகள், பருவவயதினர், முதியவர் என்று ஏற்றத் தாழ்வில்லாமல் அனைவரையும் ஆட்கொண்டிருக்கிறது இந்த நவ(அ)நாகரீக மோகம் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வகைத் தாக்கத்தின் விளைவு. இருப்பினும் (அ)நாகரீக மோகம், சைத்தானின் சூழ்ச்சி தங்களுடைய ஆடைகளே தங்களுக்கு முக்கிய விரோதிகள் என்பதை உணரவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

பண்பாடு மறந்து, பழக்க வழக்கம் தொலைத்து, பட்டி தொட்டியெல்லாம் மேலைநாட்டு மோகம் மெல்லத்திணித்து, பெண்களின் முன்னேற்றத்தின் அடையாளமாக இந்த (அ)நாகரிக ஆடைகளை வெளிக்காட்டிய ஊடகங்கள், ஒரு பெண் எந்த அளவுக்கு குறைவான ஆடை அணித்திருக்கிறாளோ அந்த அளவுக்கு அவள் சுதந்திரமானவள் என்கிற மாயத் தோற்றத்தையும் இன்று சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன.

"பெண்ணின் ஆடையின் உடல் மூடிய பகுதியின் அளவு (=) அவளின் அடிமைத்தனத்தின் அளவிற்கு சமம்"

"பெண்ணின் உடலில் வெளிக் காட்டப்படும் உடல் பகுதியின் அளவு (=) அவளின் சுதந்திரத்தின் அளவிற்கு சமம்" என்பது (அ)நாகரீக உலகில் புதிய மந்திரமாக புகுத்தப்பட்டிருக்கிறது.

வேலைக்குச் செல்லும் பெண்களும், படிக்கும் பெண்களும் அரைகுறை ஆடையோடு செல்வதே உயர்தர நாகரீகம் என்கிற எண்ணம் சமூகத்தில் ஆழமாய் பரவி இருப்பதோடு, அரைகுறை ஆடை வசதி படைத்தவர்களின் அடையாளமாகவும் சமூகத்தில் அடையாளம் காட்டப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழ்மைப் பெண்களும் (அ)நாகரீக ஆடையில் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

இயற்கையாகவே பெண்களுக்கு ஏற்படுகிற பருவரீதியான உடற்கூறு மாறுபாட்டிற்கு ஏற்ப அவர்களின் நடை உடைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் அவர்களின் அங்க அவயங்களை மறைத்து அவர்களின் மானம் காக்க வேண்டும். ஆனால் இன்று நடைமுறையில் என்ன நடக்கிறது. பெண்களின் பருவத்திற்கேற்ப நடை உடை மாறுபடுகிறது. ஆனால் அது கன்னியமானதாகவோ, அவர்களின் மானம் காப்பதாகவோ இல்லை. மேலும் அந்தப் பெண்களைப் பார்ப்பவர்களால் காமம் கொள்ளவும், மோகம் கொள்ளவுமே வழிவகை செய்கிறது. இதனால் ஆண்களின் கவனம் அப்பெண்களால் ஈர்க்கப்பட்டு, நாங்களெல்லாம் நல்லவன்டா என்று காட்டிக்கொள்பவர்கள் பலரும் காதல் வலை விரித்து கற்பை சூரையாட நீண்ட நாள் திட்டம் போடவும், இன்னும் நாங்களெல்லாம் பிறப்பிலேயே பொறுக்கிகள் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள், கடத்தல் கற்பழிப்பு போன்ற காரியங்களில் உடனே இறங்கி விடுகின்றனர்.

(அ)நாகரீக ஆடைகளில் மூலம் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்கிறோம் என்பதைக் கூட அறியாத பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதே! ஆண்/பெண் உள்ளங்களை கெடுத்து வக்கிர எண்ணம் கொள்ளவும், வஞ்சக வலை விரிக்கவும் ஊடகங்கள் கற்றுக் கொடுக்கின்றன. அரைகுறை ஆபாச (அ)நாகரீக ஆடைகள் ஆபத்தைக் கைகாட்டி வரவழைக்க காரணமாகின்றன.

சினிமாக்காரர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் பின்பற்றும் கலாச்சாரம், ஒரு நடிகை முக்கால் கை வைத்து இடுப்பையும் மறைத்து ஆடையணிந்தபொழுதும், வேறு ஒரு நடிகை அரைக்கால் கையும், மார்பிலிருந்து சற்றும் இறக்கமில்லாத ஆடையணிந்தபொழுதும், ஜன்னல் வைத்த போதும், அநேக பெண்களும் அதே போல உடையணிந்தது அனைவரும் அறிந்தே.

நடிகைகள் அரைகுறை ஆடையணிந்து பொது இடங்களில் பிரவேசிப்பதைப் போல காட்சிகள் சினிமாவில் அமைந்தாலும் அது பொது இடமல்ல என்பதை புரியாத பெண்கள் அவர்களைப் போல அரைகுறை ஆடையணிந்து பொது இடங்களுக்கு வந்து தனக்குத் தானே தீங்கைத் தேடிக் கொள்கின்றனர்.

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சூழல், ஆடை சம்பந்தமாக மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் "எப்படி ஆடை அணிவது என்று எங்களுக்குப் போதிக்க வேண்டாம், கற்பழிக்காமலிருக்க ஆண்களுக்குக் கற்றுக்கொடுங்கள்" என்றும் "எங்களுடைய ஆடை கற்பழிப்புக்கான அழைப்பிதழில்லை" என்றும் பொருள்தரும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததைக் காணமுடிந்தது.

எல்லாப் பெண்களும் முஸ்லிம் பெண்களைப் போல முழுமையாக உடல் மூடிய ஆடைகளை அணிந்து கொண்டால் ஆண்களின் வக்கிரப் பார்வைகளிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று மதுரை ஆதீனம் சொன்ன கருத்துக்கு பெண்களின் முன்னேற்றத்திற்காகப்(!) போராடும் மாதர் சங்கங்களும், தங்களைப் பெண் விடுதைப் போராளிகளாக(!) இணங்காட்டிக் கொள்பவர்களும் பொங்கி எழுந்ததும், மதுரை ஆதீனம் மன்னிப்புக் கேட்க வேன்டுமென்று போர்க்கொடி பிடித்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது.

ஆடையணிவதில் எங்கிருந்துதான் வந்ததோ இந்த அடிமைத்தனமும், சுதந்திரமும். இடுப்பு வரையே இறக்கமுள்ள மேலடையை இழுத்து இழுத்து பின்புறங்களை மூட பெண்கள் செய்யும் முயற்சி உண்மையிலேயே நகைப்புக்குரியது. சுமார் 6 அங்குலமே இறக்கமுடைய குட்டைப் பாவாடையை அணிந்துகொன்டு ஒரு பெண் பேருந்தில் எதிர் இருக்கையில் அமர்ந்து ஆண்கள் அனைவரையும் சங்கடத்திற்குள்ளாக்கினாள். இது போன்ற வெட்கங்கெட்ட ஆடைகளின் மூலம் என்ன எதிர்பார்க்கிறதோ இந்தப் பெண்ணினம். பாலியல் குற்றங்களுக் கெதிராக கடும் சட்டம் வேண்டி கோஷம் போடுவோரும், ஆய்வு செய்து அறிக்கை தர குழு அமைப்போரும், ஆண்களைக் கற்பிழக்கத் தூண்டும் அரை நிர்வானப் பெண்களின் கலாச்சாரத் தீவிரவாதத்திற் கெதிராக என்ன சட்டம் கொன்டுவரப் போகிறார்கள்? குற்றம் செய்யத் தூண்டுவது, குற்றம் செய்வதைவிடவும் பெருங்குற்றமல்லவா?

பகுத்தறிவுக்கு பட்டா பத்திரம் வைத்திருப்பவர்கள் கூட அரைகுறை ஆடையை பெண்களின் சுதந்திரமாகவும், முன்னேற்றமாகவும் அடையாளம் காண்பது வேதனையே. எதை எதையோ மேலை நாட்டுக்கலாச்சாரமென்றும், பரங்கியர்களிடம் மீண்டும் அடிமைப்பட்டு விட்டதாகவும் உருவகப்படுத்தும் பகுத்தறிவுப் பகலவர்கள் ஆடை விசயத்தில் மட்டும் அந்தர் பல்டி அடித்து “ஆணாதிக்கம்”, “பெண்ணடிமைத்தனம்” என்று போர் பரனி பாடுவதற்கான அடிப்படைக் காரணத்தை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

மேலும் ஆண்களின் கல்லூரி வாசலில் எந்தப் பெண்ணும் நிற்காத போது, பெண்களின் கல்லூரி வாசலில் மட்டும் ஏன் போய் நிற்கிறீர்கள்? என்று உணர்சி பொங்கும் பகுத்தரிவுக் கேள்விகளையும் கேட்டுவைக்கின்றனர். இறைவனின் படைப்பையும் இயற்கை என்று சொல்லும் பகுத்தறிவுக்கு ஆணினத்திற்கு பெண்ணினத்தின் மீதான ஈர்ப்பு மனித இனம் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள இயற்கை பண்பு என்பது புறியாமல் போன மாயம் என்னவோ.

அரைகுறை ஆடைகளை பருவப் பெண்களுக்கு அணிவித்து தங்களின் தாகத்தை தீர்த்துக்கொண்ட (அ)நாகரீகம் தன் கவனத்தை மெல்லக் குழந்தைகள் பக்கம் திருப்பி, பருவப் பெண்களின் அங்க அவையங்களை வெளிக்காட்டி ஆண்களை ஈர்க்கப் பயன்படும் அதே வடிவமைப்பில் குழந்தைகளின் ஆடைகளையும் வடிவமைத்து  அதை குழந்தைகளும் அணியும் கொடூரம், வக்கிர எண்ணம் கொண்டவர்களின் பிடியில் குழந்தைகளும் சிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் எந்தக் கடைகளிலும் கை வைத்த மேலாடை கிடைப்பதில்லை. எல்லாமே ஸ்லீவ் லெஸ். அப்படியே கைகளிருந்தாலும் தைக்கப்படாமல் தனியாக, அதுவும் தோள்பட்டையை மாத்திரமே மூடும் அளவிற்கு சிறியதாகவே இருக்கிறது

பேருந்து நிறுத்தத்தில் கண்ட பெண்கள் கூட்டம் சிறியவர் பெரியவர் என்று ஏற்றத்தாழ்வில்லாமல் அனைவரும் அரைக்கால் (1/8) அளவு கீழாடையும் T- சர்டும், 9, 10 வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளைகள் முன்டா பனியனும் அணிந்திருந்தனர். வலைத்தளத்தில் செய்தி வாசிக்கச் சென்றால் கூட முகம் சுழிக்க வைக்கும் ஆபாசக் காட்சிகளைக் காட்டும் கட்டுப்பாடற்ற ஊடகங்களால் காமவயப்பட்டவர்களின் கவனம் இவர்களின்பால் திரும்புவதற்கு இது போன்ற ஆடைகள் காரணமாகிவிடுகின்றன.

ஒட்டுத்துணியில் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் முன்னேற்றம் கண்டான், ஆடைகளை நெய்து போர்த்திக் கொண்டான். மீண்டும் ஒட்டுத்துணிக்கு திரும்புவது எப்படி முன்னேற்றம் என்பதே விடை தெரியாத வினா!

மேலும் ஒரு விசயத்தை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவர விழைகிறேன். இன்று புர்கா வண்ணக்கற்கள் பதித்தும், பொட்டுக்கள் கோர்த்தும் நிறைய வேலைப்பாடுகளோடு கடைகளில் விற்கப்படுகின்றன. இதை நமது சகோதரர்களும் வாங்கி அனுப்புகின்றனர். முன்பு கைகளின் ஒரங்களில் என்று தொடங்கி மெல்ல மெல்ல கழுத்து, மார்பு, இடுப்பு என்று எல்லாப் பகுதிகளுக்கும் இவ்வேலைப்பாடுகள் பறவி இருக்கின்றன. அலங்காரங்களை மறைத்துக் கொள்வதற்காக அணியும் புர்கா அலங்காரமாக இருப்பது அதன் நோக்கத்தைப் பாழ்படுத்திவிடும் என்பதை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இதுபோன்ற வேலைப்பாடுகள் பிறர் கவனத்தை ஈர்க்கவல்லது. கற்களும் பொட்டும் வெளிச்சத்தில் ஒளி எழுப்பும் என்பதையும் அதன் பிரதிபளிப்பு பிறரை இடையூறு செய்து கவனத்தைத் திருப்பும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் உடலின் கனபரிமானங்களை வெளிக்காட்டாததாகவும், முன் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை முழுமையாகவும் மூடும் ஆடைகளே வெளியில் உடுத்திச் செல்வதற்கும், மகரமல்லாதவர்கள் (திருமணத்திற்கு ஆகுமானவர்கள்) முன் தோன்றுவதற்கும் தகுதியானதாகும். ஆனால் இன்றைய புர்கா இருக்கமானதாகவும் உடல் அமைப்புகளை வெளிக்காட்டுவதாகவும் இருக்கிறது. சிலர் கழுத்து பகுதி வெளித் தெறியும் அளவு ரிப்பன் போன்ற சிறிய முக்காடணிவதும் தவிர்க்கப்பட வேண்டும். இறை நம்பிக்கை கொண்ட பெண்களே “உங்களுடைய முந்தானைகளை நீட்டி மார்பகங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் மனித குலத்திற்கான தனது இறை வேதத்தில் பிறப்பித்திருக்கும் கட்டளை இங்கே நினைவு கூறத்தக்கது.

இவைகளையும் எவரேனும் ஆணாதிக்கமென்றும், பெண்ணடிமைத் தனமென்றும் பிதற்றலாம். ஏனென்றால் முற்போக்கு வாதிகளாகவும், பெண்ணிண் முன்னேற்றத்திற்கு போராடுபவர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் தங்களை வெளியுலகில் அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் பெண்களின் முன்னேற்றம் பற்றி கவலை(?) கொள்ளும்போது இஸ்லாமியப் பெண்களின்பால் காட்டுகின்ற கரிசனம் கண்டு மெய் சிலிர்க்காமல் இருக்கமுடியாது. ஒரு பெண் சமீபத்தில் முஸ்லிம் பெண்கள் தானிய மூட்டைகளைப்போல போர்த்தி வைக்கப்படுகிறார்கள் என்பதை மாதர் தினச் சிந்தனையாக(?) பதிந்திருந்தார். இது போன்ற சிந்தனை(?) வாதிகளின் எண்ணங்களும் எதிர்பார்ப்பும் கீழ்கானும் வகையிலேயே இருக்கிறது.

இரும்புப் பெட்டிக்குள்
இருட்டுச் சிறை!
நாங்களோ..
வெட்ட வெளியில் சுதந்திரமாய்!
வசைபாடுது குப்பைகள்!
வைரங்களுக்கு சுதந்திரமில்லை!

எல்லாவற்றுக்கும் சமத்துவம் பேசும் பெண்ணிணவாதம் ஆடையில் மட்டும் ஏன் மிகவும் பின்தங்கியிருக்க ஆசைப்படுகிறதோ!?

மேலும் ஆடைகளில் புதுமையின் பெயரால் ஏராளமான வசனங்கள் எழுதப்படுகிறது. சில  ஆடைகளைப் பார்க்கும்போது செய்தித் தாளை சுற்றியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றும். காரணம் அதில் உள்ள டிசைன் அவ்வாறிருக்கும். சில ஆடைகளில் யூத, நசராக்களுடை பெயர்கள் பெரிதாக எழுதப்பட்டிருக்கும். இதுபோன்று எழுத்து மற்றும் படங்களுள்ள ஆடைகளை வாங்கும்போது மிகுந்த கவனம் தேவை. படங்களில் ஒளிந்துள்ள விசமங்கள் பெரும்பாலும் தெறிந்துவிடும். ஆனால் எழுத்துக்களில் செய்யப்படும் சேட்டைகள் எல்லோருக்கும் தெரிவதில்லை. காரணம் அவை அன்னிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதால். ஒருநாள் வீதியில் சென்று கொன்டிருந்த பொழுது சாலையோரக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த T-சர்டில் “நேசமில்லா உறவு வெறும் உடற்பயிற்சியே” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது என்னை சற்று வியப்பில் ஆழ்த்தியது. இதே போல் ஒரு திரைக் காட்சியில் “துனிவிருந்தால் தொடு” என்று T-சர்டில் முன் பகுதியில் எழுதியிருந்தைக் காண முடிந்தது. எனவே ஆடைகளை வாங்கும் போது கவனித்து வாங்கவும்.

மேலும் ஆடை வடிவமைப்பில் ஈடுபடும் வணிகர்கள் நல்லெண்ணங்களையும், நற்சிந்தனைகளையும் வளர்க்கும் விதமான எழுத்துருக்களையும் அச்சடிக்கலாம். அதில்...

“படைத்தவனை வணங்கு படைப்பிணங்களை வணங்காதே”

“அன்போடும் மனைவிக்கு ஊட்டுவது தர்மம்”

“புன்னகையோடு பிறரை நோக்குவது தர்மம்”

“நீ வெறுப்பதை பிறருக்கு ஈயாதே” என்பது போன்ற வாக்கியங்களை நபி மொழி என்று அடிக்குறிப்பிட்டு இடம்பிறச் செய்தால் அதை வடிவமைத்தவருக்கும், அணிந்து செல்பவருக்கும் இறை மார்க்கத்தை, இறைத் தூதரின் போதனைகளை, இஸ்லாத்தின் இனிய பண்புகளை எத்தி வைத்த நன்மை உண்டு என்பதைக் கருதில் கொள்ள வேண்டும். இதை வாசிப்பவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் நாடினால் இஸ்லாத்தின் மீதான தவறான புரிதல் நீங்கி இறை மார்க்கம் இதயத்தில் குடிகொள்ளவும் வழிவகை செய்யும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா

9 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரைகுறை ஆடை முதல் அலங்கரித்த புர்கா வரை சொன்ன செய்திகள் அத்தனையும் மிகச்சரியானவை.
சிந்திக்க வேண்டும் அரைகுறைகளும், அலங்கரித்த புர்காவும்!

sabeer.abushahruk said...

ஆடைகளைப்பற்றி நன்றாக அலசி, கிழிகிழியென்று கிழித்துள்ளீர்கள். அக்கரைச்சீமையின் நாகரிகம் இக்கரையின் ஆடைகளில் கறையாய்ப் படிந்துவிட்டது மட்டுமல்லாமல், துரைமார்களின் மனைவியர்கூட முழு கவுனை உடுத்த காப்பியடிக்கும் நம்மவனோ குட்டை கவுனில் உடுத்தச் சொல்கிறான்.

மின்னும் புர்காக்கள் மற்றுமொரு வழிகேட்டின் துவக்கம்.

வாழ்த்துகள் காதர்.

نتائج الاعداية بسوريا said...

"பாலியலுக்கு பலியாகாதே "

இன்றைய நம் சமுதாய பெண்களை பாதுகாக்கத்துடிக்கும்
ஒரு அற்ப்புத ஆக்கம்.

அப்துல் காதர் (அபு ஆசிப்)
ரியாத் , சவுதி அரேபியா.

Abu Easa said...

//ஆடைகளைப்பற்றி நன்றாக அலசி, கிழிகிழியென்று கிழித்துள்ளீர்கள்//

காக்கா கிழிந்தது அலசியதாலல்ல, புதுசே இப்பவல்லம் கிழிஞ்சுதான் வருது!

Abdul Razik said...

இஸ்லாம் மார்க்கத்தின் ஆடை முறைகளே சரியானது என்பது அனைத்து தரப்பு ம்க்களாலும் சிறிது சிறிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும்

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.

பெண்களும், ‘நாங்கள் நவநாகரீக மங்கைகள்’ எனக் கூறிக் கொண்டு ஆணாதிக்க வர்க்கங்களின் வக்கிர புத்திக்கு இரையாகின்றனர். நாகரிகம் என்பது நாம் உடுத்துகின்ற ஆடையைக் குறைப்பதில் இல்லை என்பதை ஏனோ பெண்கள் உணர்ந்துக் கொள்வதில்லை! இன்றைய சமூக சீர் கேட்டிற்கும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் உள்ளாவதற்கும் மூலகாரணமாக விளங்குவது நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் தங்களின் ஆடை குறைப்பில் ஈடுபட்டது என்றால் அது மிகையாகாது.

இஸ்லாம் பெண்களைக் கண்ணியமானவர்களாகக் கருதுவதால் இத்தகைய சீர்கேட்டை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. இறுக்கமான அல்லது உள்ளே உள்ளவைகளை வெளியே காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் மெல்லிய ஆடைகளை அணிபவர்களை, ‘ஆடை அணிந்தும் அணியாதது’ போன்றவர்களாவார்கள் என்று கூறி இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’

Abdul Razik
Dubai

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பாலாடை நீக்கி
ருசிக்கிறான் !

பெண்ணாடை நோக்கி
ரசிக்கிறான் !

நிறையபேரு நண்டு மார்க் கைலி விளம்பரம் பார்த்திருப்பீங்களே ! அங்கே எதுக்கும் பாஸ் பனியனும் சிறுவாவும் போட்ட பொம்புள !?

டவுட்டுதான் கேட்டேன் !

Unknown said...

//நிறையபேரு நண்டு மார்க் கைலி விளம்பரம் பார்த்திருப்பீங்களே ! அங்கே எதுக்கு பாஸ் பனியனும் சிறுவாவும் போட்ட பொம்புள !?//

காக்கா, நாய் பிஸ்கட் விளம்பரமானாலும் அங்கே பெண்கள் இருப்பார்கள். ஏனென்றால் பெண்கள் இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது என்கிற அளவிற்கு விளம்பரத் துறையில் பெண்கள் முன்னேற்றமைடைந்திருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு 99.99% இட ஒதுக்கிடு அளிக்கப்பட்டிருக்கிறது பெண்ணினத்தின் முன்னேற்றம் கருதி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல க்ளு கிடைச்சிருக்கு... ஆனா சஸ்பென்ஸ் !

Unknown said...

//நல்ல க்ளு கிடைச்சிருக்கு... ஆனா சஸ்பென்ஸ் !//

காக்கா சஸ்பென்ஸ் ரொம்ப நேரம் இருந்தா ஒதவாது. அதுனால கொஞ்சம் கிளியர் பன்னிடுங்களேன்! (நம்ம இப்புடியெல்லாம் லோகல் பாசையில எழுவுனா M.S.M. Naina கோவச்சுக்கிடுவாரோ?)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு