ஆம்..! அதில் சந்தேகமே இல்லை! இக்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. விஞ்ஞானம் என்றால் மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அமைதல் வேண்டும் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.
விஞ்ஞானம் வளர்வதால் மனிதன் என்னவாகிறான்?
இக்கால விஞ்ஞான உலகம் மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றது, அதனை நாம் யாரும் மறுக்க இயலாது!. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அந்த நஞ்சைப் போல் தான் இவ்வுலகம் மாறிக் கொண்டு இருக்கிறது.
வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவுகள், இதனால் நீர்நிலைகள் மாசுபடுவது, ப்ளாஸ்டிக்ஸ் போன்று அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக்ஸ். சாதரணமாக நாம் பரோட்டா வாங்கச் சென்றாலும் சூடான பரோட்டாவை ப்ளாஸ்டிக் பேப்பரில் (நம் ஊரில் பட்டர் கீஸ் என்கிறார்கள்) வைத்து தருகிறார்கள், சால்னாவை எதில் ஊற்றுகிறார்கள்? ப்ளாஸ்டிக் கீஸ்ஸில் தான், சில இடங்களில் பார்க்க முடிகிறது, தேனீர் பார்சல் வாங்குவதற்கு ப்ளாஸ்டிக் பையை பயண்படுத்துகிறார்கள். சும்மாவே ப்ளாஸ்டிக் பயன்படுத்துவது அபாயம் என்கிறார்கள், இதில் சூடானவற்றை அதில் ஊற்றினால்?? இப்படி எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் நம்மைச் சூழ்ந்திருக்க புதிது புதிதாக கேன்சர் போன்ற நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அழிவுக்கானவற்றை எல்லாம் மனிதனே உருவாக்க படைத்தவனை பழிச் சொல்வோர் ஏராளம். சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்துவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதாவது
“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தைச் சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதைச் சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)”
இக்காலத்தில் ஆடையணிதல்:
நியூ ஃபேஷன் என்ற பெயரில் ஆடையணிதலின் நோக்கமே மாறிவிட்டது.மேலை நாடுகளில் பிற மதத்தவர்கள் (ஆண்களும் பெண்களும்) நியூ பேஷன் என்ற பெயரில் உள்ளாடைகள் தெரியுமளவுக்கு உடையணிகிறார்கள். அடுத்தவர்கள் (மேலை நாட்டினர்) என்னச் செய்தாலும் அதனையே பின்பற்றும் உலகமாகவல்லவா மாறிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம். LowHip Pant, Short Shirt என்று சீரழிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஃபேஷன்!!
நமது உயிரிலும் மேலான நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளமாக ஆடையணிவது பற்றியும் எச்சரித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளத்தில் ஒன்றாக கூறியதாவது”பெண்கள் நிர்வாணமாக ஆடையணிந்திருப்பார்கள்”.இது பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை, தற்போதைய நடைமுறையில் இருந்து வருகின்றது
மது:
மதுவைப் பற்றி இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது.ஆனால், இப்போது நடைமுறையில் இருப்பது என்ன தெரியுமா? இஸ்லாமியர்,இஸ்லாமல்லாதவர் என பாகுபாடின்றி மது அருந்தும் பழக்கம் அரங்கேறி வருகிறது.
என்னுடன் பழகியவர்களில் பல இஸ்லாமியர்கள் என்னிடம் கேட்டதுண்டு..
"பாய்!! தண்ணி அடிப்பீங்களா?"
அதற்கு நான் “இல்லை”…
பிறகு "பீராச்சும்(BEER) அடிப்பீங்களா?"
அதற்கும் "இல்லை.."
திருப்பி நாம் கேட்டோமானால் வரும் பதில் என்ன தெரியுமா? "தண்ணி அடிக்க மாட்டேன், பீர் மட்டும் எப்பயாச்சும்..."
இந்த கேடுகெட்ட பழக்கம் பெருமளவில் கல்லூரி மாணவர்களிடம் பெருகிக் கொண்டு வரும் மோசமான பழக்கமாக இருக்கிறது.
“மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்”. இன்றைய காலத்தில் இன்னுமொரு பழக்கம் இருந்துவருகிறது,மது அருந்தாதவர் மது அருந்தும் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் வாங்கி வைக்கும் சைட் டிஷ் ஐ சாப்பிடுவதற்காக அவர்களுடன் அந்த சபையில் உட்கார்ந்திருப்பது.நாம் மது அருந்தாவிட்டாலும் அவர்களுடன் உட்க்கார்ந்திருந்தால் அவர்கள் மீது இறங்கும் சாபம் நம் மீது இறங்காதா?
நபி (ஸல்) அவர்கள்:
எனது சமூகத்தில் வேறு பெயர்களை வைத்து மது அருந்துவார்கள், அவர்களது முன்னிலையில் இசைக்கருவிகள் இசைக்கப்படும், பாடல்கள் பாடப்படும். இவர்களை அல்லாஹ் பூமிக்குள் செருகி விடுவான் என்றார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)
மேலும் அல்லாஹ் திருமறையில்,
“நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபாணத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடம் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்துவிடத்தான் எனவே அவற்றை விட்டும் நிங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர் ஆன் 5:90,91)
ஏன் இந்த புர்கா?
இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது.இந்த புர்காவை சில இஸ்லாமியப் பெண்கள் எப்படி அணிகிறார்கள் என தெரியுமா? என் கண் முன்னே சில பெண்கள் புர்கா அணிந்த முறையைப் பார்த்திருக்கிறேன்.தங்களின் உடலை ஒட்டியபடி அமையப்பட்டிருக்கும் நிலையில் இருந்தது.
நபி(ஸல்) அவர்களுடன் ஆயிஷா(ரழி) இருக்கும் போது, அஸ்மா(ரழி) வருகிறார்கள். அப்போது அவர்களது ஆடை மிக மெல்லியதாக (உடல் தெரியும் நிலையில்) இருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் யா அஸ்மா ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய இந்த, இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல என்று கூறும் போது அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - ஆயிஸா(ரழி) வாயிலாக, காலித் இப்னு தரீக், அபூதாவூது, அபூஹாத்தம்
இன்னும் சிலர் இருக்கின்றனர் தங்களை இஸ்லாமியப் பெண்கள் என்று காட்டிக் கொள்வதற்காக… புர்கா அணிந்திருப்பார்கள் முக்காடில்லாமல். இன்னும் சிலர் இருக்கின்றனர், அவர்களைப் பார்த்தால் இஸ்லாமியப் பெண் என்றே தெரியாது அவர்களாக சொல்லும் வரை. இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும் போது,
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முன்றானைகளைத் தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும் மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்." - (அல்குர் ஆன்: 33:59)
சாட்டிங்(Chatting):
Social Networking என்ற பெயரில் நேரத்தை வீணே கழிக்கும் சூழல் உருவாகிவிட்டது. முன்பின் தெரியாத யாரோ யாருக்கோ (Friend Request) அனுப்புகிறார்கள், Friend Requestம் Accept செய்யப்படுகிறது.. இதில் ஆண்/பெண் பாகுபாடே கிடையாது. தங்களது அலுவலகப் பணியை ஒழுங்காகச் செய்கிறார்களோ இல்லையோ பெரும்பாலானோர் தங்களது Online Friendsகளுடன் தவறாது Chat பன்னுகிறார்கள்.
என் வேலை, என் குடும்பம், என் சமூகம் என்ற ஒரு காலம் இருந்தது.. அப்போதெல்லாம் தங்களது நெருங்கிய நண்பர்களைக் கூட என்றாவது ஒரு நாள் பார்த்தோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளும் காலம்.இன்றையக் காலத்தில் முன்/பின் தெரியாதவர்களுடன் தேவையில்லாத பேச்சுகள், அரட்டைகள்,ஒருவரை ஒருவர் வர்ணித்துக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் நடந்து வரும் அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதில் மூழ்கி, தங்களது கடமைகளைச் செய்ய தவறிவிடுகின்றனர். அது இம்மைக்கான கடமையாகட்டும் மறுமைக்கான கடமையாகட்டும். மறுமையின் அடையாளமாக நபி(ஸல்) கூறுவது மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும். காலம் சுருங்கி விட்டதையும் சுருங்கிக் கொண்டே போவதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.
இசை நம்மைச் சூழ்ந்த நிலை:
தற்போதைய கால கட்டத்தில் இசை நம்மைச் சூழ்ந்திருப்பதனை நாம் உணரலாம்.நம்மில் பெரும்பாலானோர் இசையைச் சுவைப்பவர்களாகவே இருக்கின்றனர்.இசையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
என் சமூகத்தாரில் சில கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசை போன்றவற்றை அனுமதிக்கப்பட்டவையாக கருதுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஹதீஸில் காண முடிகிறது.
மேற்கூறப்பட்ட நான்கில் விபச்சாரம் மட்டும் தான் இப்போது மீதமுள்ளதென நினைக்கின்றேன்.
இன்னும் சிலர் நம்மில் இசையை விட்டு விளகியவர்களாக இருக்கின்றனர். ஆனால் நாம் பேருந்தில் பயணிக்கும்போது எப்படியாவது இசை நம் காதுகளை வந்தடைந்துவிடுகின்றது.
முடிவுக்கு வருவோமா?
சுகாதாரமின்மை, அனாச்சாரங்கள்,மற்றும் இஸ்லாம் தடுத்துள்ளவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இவற்றால் நமக்குக் கேடுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.
'காலத்தின் மீது சத்தியமான மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்' (103:1,2)
அப்துர் ரஹீம் ஜமீல்
19 Responses So Far:
அன்றாடம் சந்திக்கும் அழிவுலக நடைமுறைகள் பற்றிய நல்லதொரு இஸ்லாமிய விழிப்புணர்வாக்கம்!
வாழ்த்துக்கள்.
Good article. The way it is explained is relevant to present generation. Hope everybody will benefit out of it.
Well done அப்துர் ரஹீம் ஜமீல்
பதிவுக்கு நன்றி.
முழுக்க படித்துப் பார்த்தேன், உலகம் திருந்தும், ஆனால் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.
//ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.//
சொல்வது விளங்கியோர் கடமை, எடுத்துக்கொள்வது விளங்காதோர் கடமை. முடிவு இறைவன் கையில்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலகம் அழியும்முன்.நம் நற்ச்செயல்களை புறம்,மற்றும் முனாஃபிக் செயல்கள் மூலம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.
//சுகாதாரமின்மை, அனாச்சாரங்கள்,மற்றும் இஸ்லாம் தடுத்துள்ளவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இவற்றால் நமக்குக் கேடுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.//
தக்வா பள்ளியில் இந்த நல்ல விசயங்களை சொல்லக் கூடிய ஆலிமுக்கு தடை போட்டு மறுமையை விட்டு விட்டு இம்மையை வலுப்படுத்த துடிக்கிறார்கள் சண்டாளர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உலகம் அழியும்முன்.நம் நற்ச்செயல்களை புறம்,மற்றும் முனாஃபிக் செயல்கள் மூலம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.
//சுகாதாரமின்மை, அனாச்சாரங்கள்,மற்றும் இஸ்லாம் தடுத்துள்ளவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இவற்றால் நமக்குக் கேடுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.//
தக்வா பள்ளியில் இந்த நல்ல விசயங்களை சொல்லக் கூடிய ஆலிமுக்கு தடை போட்டு மறுமையை விட்டு விட்டு இம்மையை வலுப்படுத்த துடிக்கிறார்கள் சண்டாளர்கள்.
அறிவியல் வளர்ச்சியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தவறிய மனிதன் உலகை அழிவை நோக்கித்தான் இட்டுச் செல்கின்றான். மத நம்பிக்கை ஒன்றே அழிவின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது.
எனினும், இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மதம் மட்டுமே மனிதனை மிருகங்களிலிருந்து பிரித்துக்காட்டும் பகுத்தறிவின் அடையாளம் ஆகும்.
வாழ்த்துகள்
மார்க்கத்துக்கு விரோதமான நிகழ்கால நடைமுறைகளை ஒழிக்கும் நோக்கத்துடன் குர் ஆன் ஹதீஸ் ஒளியில் விழிப்புணர்வு ஆக்கத்தை பதிந்துள்ளார் தம்பி அப்துர் ரஹீம் ஜமீல். "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற பழம் மொழிக்கொப்ப புதியவராயினும் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் போல அழகாக வாசகங்களை அமைத்துள்ளார். அதிரை நிருபருக்கு புதிய இளம் பதிவாளர் கிடைத்து விட்டார்.
மேலும் பல சிறந்த ஆக்கங்களை பதிவதற்கு எல்லாம் வல்லவனிடம் துஆ செய்கிறேன்.
அன்புடன்
முகி அபுபக்கர்
”சமுக அக்கறையாளர்” தம்பி அப்துர் ரஹீம் ஜமீல் அவர்களிடமிருந்து மெச்சதக்க ஆக்கம்.....ஆமாம் !!! நடக்கும் சம்பவங்களை பார்த்தால் உலகம் அழிவை நோக்கிதான் போய்க்கொண்டிருப்பதாக தெரிகின்றது....கட்டுரையின் கோர்வையும் கருவும் அழகு...வாழ்த்துக்கள் தம்பி
விழிப்புணர்வு கட்டுரை சகோ...
மயிர் கூச்சரிய வைக்கும் தாயின் வார்த்தைகள் அல்லாஹூ அக்பர்
http://edition.cnn.com/video/?hpt=hp_c1#/video/bestoftv/2013/04/23/pkg-dagestan-mother-speaks-walsh-cnn.cnn
Assalamu Alaikkum
Dear brother AbdurRaheem Jameel,
Your article reflects your genuine concern about society's diversion towards indulging life without code of ethics and morals.
Deviating from straight path (which is acceptable as per God Almighty's guidance,) will sure lead to destructions similar to when we show our finger at fire will sure burn out as per the natures of fire and finger.
Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
Assalamu Alaikkum
Dear brothers and sisters,
A recent observations show that reasons for media highlighted rape cases. Watching obscene and nudity through movies and pornography are one of the key reasons for such widespread violence in immorality and sexual behaviour in India.
I request all of you(brothers and sisters) to share your ideas and insights in this regard by commenting here.
Should India ban pornography in internet similar to UAE
and make laws and regulations against it?
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
Thanks Bro Ameen for bring this URGENTLY needed topic into discussion
If possible I am requesting AN to make discussion form for this important matter .
Yes without nano % doubt ,India should follow UAE censorship system as role model to prevent these kind of incidents in the future
I agree, may be some crooks can break any censorship system, but at least we can stop these pornographic movies reach to the common man
Government should tighten their censorship on obscene movies which shows women as sex object
I am afraid, none of the political party will support if any draft law brought in the parliament to punish these kind gruesome persons as they need support from them while in elections
We should not spare those animals who raped innocent 5 years old girl Delhi, law must be amended in order to punish these heartless animals severely.
ஆம்..! அதில் சந்தேகமே இல்லை!
Assalamu Alaikkum
In the world of smartphones and tablet computers which are more private, personal and intimate in using them, how much muslim individuals are safe from these satan inflicting and moral destroying pornographic and obscene movies.?
How about porno-addicts if there are any in our communities?
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல அருமையான சிந்தனை தூண்டும் பதிவு தம்பி அப்துர்ரஹீம்.
நேரம் கிடைத்தால் இந்த பதிவை பார்வையிடுங்கள் http://adirainirubar.blogspot.in/2012/07/blog-post.html
அப்துர்ரஹீம்...
மு.கி.(காக்கா) அவர்கள் சொன்னதையும் நானும் சொல்கிறேன் !
***என் சமூகத்தாரில் சில கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசை போன்றவற்றை அனுமதிக்கப்பட்டவையாக கருதுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஹதீஸில் காண முடிகிறது.***
கண்கூடாக நடக்கும் அவலம்..அல்லாஹ் தான் காபாத்தனும்
Va alaikumussalaam! Thanks for your comments my dear brothers! @tajudeen kaaka! Insha allah i will look at the link which u gave me....thank you all!
Post a Comment