நமதூரில் குறிப்பாக வயதான ஆண்/பெண்களால் இன்றும் தெரிந்தும் தெரியாமலும், மறைந்தும் மறையாமலும் பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்கள் இயன்றளவு ஆங்கில மொழிபெயர்ப்புடன் கீழே தரப்பட்டுள்ளன (ஏதோ நம்மனாலெ ஏன்டது). இது போல் இன்னும் நிறைய சொற்கள் மக்களின் புழக்கத்தில் இருந்தும் இங்கு வரிசையில் விடுபட்டிருக்கலாம். அப்படி தங்களுக்கு தெரிந்த சொற்களை தாராளமாக பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம்.
ஊரில் கடைத்தெருவின் உள்நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் இரண்டு ஆச்சிகளிடம் நல்ல தேர்ன நார்த்தங்காயும், சோளக்கருவும், அவுச்சக்கடலையும், ப்லாச்சொழையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு ப்ளாஸ்டிக் பையில் (ப்ளாஸ்டிக் மேட்டரை வெளியெ சொல்லிறாதிய) வாங்கிக்கொண்டு செக்கடிபள்ளியின் கீழே உள்ள வழியாக சென்று கொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருந்த சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னா மு.செ.மு. இதைப்போயி வாங்கிக்கிட்டு போரியளே? என்றார்கள். நானும் சொன்னேன் சவுதி சென்றதும் அடிக்கடி நினைவில் கொடுவாப்பிஸுக்கும், வவ்வாமீனும் வருவதில்லை. இது போன்ற கோடை கால சீசன் விலை/விளைபொருட்கள் தான் அடிக்கடி நாக்கு ஊற வைத்து விடுகிறது. எனவே இதை வாங்கி உண்ண நாம் என்றும் தயங்கியதோ, வெட்கப்பட்டதோ இல்லை என்றேன்.
ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு நல்ல தேர்ன நார்தங்காயை வாங்கி அதை முறையே புழிஞ்சி தேவையான அளவு சீனி போட்டு கலக்கி ஐஸ்பொட்டியில் கொஞ்ச நேரம் வைத்து குளிரூட்டி நல்லா உச்சிஉரும நேரத்துல குடிச்சி பாருங்க.....அப்பொறம் சொல்லுவிய....ம்மடி கலப்பு அடங்குன மாதிரி ஈக்கிதும்மாண்டு......சுபஹானல்லாஹ்...இறைவன் பருவ கால காய்,கனிகள் மூலம் மானுடத்திற்கு எவ்வளவு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்தருளியுள்ளான் என நினைத்துப்பார்ப்பீர்கள். இந்த தடவை மாம்பழம், நொங்கு கொஞ்சம் மிஸ்ஸாயிடிச்சி.....
அதையான் கேக்குறிய....திருச்சி ஏர்ப்போர்ட்டுக்கு பயணம் புறப்பட கிழம்பும் பொழுது கூட வீட்டில் தீடீர்ண்டு ஒரு பையில் தண்ணி பாட்டிலும் இன்னொரு பார்சலில் அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டு ஒரு பொட்டலமும் தந்தார்கள். அது என்னாண்டு கேட்டா, கொஞ்சம் கொத்து மாங்கா பொடி போட்டு மடிச்சிருக்கு வழியில சாப்ட்டுக்கிடுங்க என்ற அது ஒரு பாசப்பரிமாற்றம் கொத்துமாங்காயாய் பொட்டலத்துக்குள் பதுங்கி இருந்தது. அது சரி கீழே உள்ளதை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட மறந்துடாதிய.....
அவுருவொம் | - Very Rare |
எசவு பண்ணுதல் | - Repairing |
ஆத்தாக்கொலெ | - Time Being |
சீந்தாப்பு/மப்பு மந்தரம் | - Cloudy Weather |
ஏசுவாஹ | - Scolding, Blaming |
ஏந்துக்கிட்டு | - Supporting favourly |
பொசுக்குண்டு | - Suddenly Reduced |
குட்டான் | - Basket Thatched in Palm tree's leaves |
ரோதை | - Wheel |
ஒசக்கெ | - In the height |
ஈசாக்காட்டுதல் | - Talking negatively to irritate |
வசை சொல்லுதல் | - Talking openly the timely help |
கண்மாசியா | - Entirely Disappeared |
பொட்டக்கரை | - Entirely Empty |
பொவ்மானம் | - Brashness |
பொத்தல் | - Hole |
ஆகாசம் | - Sky |
மோந்து | - To smell |
சல்லிசு | - Very Cheap |
திடுக்கிண்டு | - Sudden Shock |
என்னண்டோ | - Nothing to explain |
வல்லாணாலையிலெ | - Unnecessarily |
எசலுதல்/சலுவுதல் | - Calling quarrel deliberately |
கசங்கொண்டு | - In Ugly |
எதித்தாப்ல | - Opposite |
அலிமாலு | - Almirah/Cup-board |
ஏன்சு | - Room |
லேஞ்சி | - Towel |
லேடுபடியான | - Weakness |
யாபோம் | - Remember |
ஜெமிலாட்டு மூடி | - The cap of the bottled soda |
ஊதாங்கொலெ | - Blowing Pipe in the kitchen |
பலவாக்கட்டெ | - Wooden Plate for sitting |
மனுசரு | - A man |
இந்தாவுளெ | - Hi Lady |
இந்தாங்கங்க | - Hi Gentleman |
ம்மடி | - Way of Exclamation |
இருட்டு கசம் / மைக்கசம் | - Too Dark |
கச்சிக்கசம் | - Too Bitter |
அழுக்கு கசம் | - Too Ugly |
ப்லாகொண்ட | - Very Ugly and offensive smelling |
தெகரடி/செரவடி | - Way of mental distress |
சடப்பு | - Getting laziness |
ஓங்காரம் | - Vomiting |
மசக்கம் | - Giddiness |
அங்குரு | - See there |
இங்குரு | - See Here |
அவ்வொ | - That man |
இவ்வொ | - This man |
பத்தாக்கொறெ | - Scarcity/lack of shortage |
எக்கச்சக்கம்/வழுப்பம் | - Plenty/Huge |
வெரசன/சுருக்கன/வெள்ளனமே | - To be quick/fast/early |
மாக்கு கொடுத்தல் | - Trying without tired |
ஒழப்பி போடுதல் | - indecent behavior in eating |
எசகெட்ட | - Not in proper way |
திடீர்ண்டு/திடுதூரா | - Suddenly |
தவக்கலெ | - Frog |
வேக்கூரு | - Prickly Heat |
வட்டி | - Bowl |
தட்டுப்புளா | - Basket Plate |
சப்பாத்து | - Foot wear |
விறுக்குவிறுக்குண்டு | - Lonely with fear |
ஒத்தியா | - Lonely/Single |
உச்சிஉரும நேரம் | - Noon Time |
மாலமதி நேரம் | - Time of sunset |
மெத்தை | - Upstairs |
தொலை | - Too far |
செரட்டை | - Shell of the coconut |
பூக்கமளெ | - Spathe of coconut tree |
ஆப்பை | - Wooden spoon |
ஒஹப்பு | - Desired Heartily |
கோவந்தாவம் | - Getting Angry very often |
சும்சுகை | - Trunk of the elephant |
அக்கச்சியா | - Sister |
வாப்ச்சா | - Mother of the father |
சர்சராக்குழி | - Hole of the house to eject cleaning water |
ஏலலெ | - Inability/Sick |
சதுர வாழ்வு | - Healthy Life |
லெக்கு தெரியாமல் | - Hard to identify |
பெரிய மனுச | - Aged man/woman |
ஒதவாது | - Can't be suited |
ஊர் முச்சூடும் | - Entire Town |
மொட்டையன் | - Young man |
அரிக்களாம்பு | - Lamp with covered glass chimney |
எரணபரக்கத்து | - Prosperities from the Almighty |
அனத்துது | - Too humidity |
மாடாக்குழி | - Shelf in the wall |
உப்புசப்பு/சூடப்பு | - Nothing to highlight |
சஞ்ஞீவு/தர்த்திரிப்பு | - In Proper arrangement |
ஆகாது | - Prohibited in Islam |
நாக்களாம்பூச்சி | - Earthworm |
பாச்சே | - Cockroach |
கொரங்குமட்டை | - Back bone of the coconut tree leaves |
பெரிம்சாகி | - Recently Matured Girl |
பொல்லாப்பு | - Bad Name with remarks |
குடுப்பினை/கொடப்பொசுப்பு | - Fortune/Good Luck |
ஒமட்டல்/கொமட்டல் | - Symptom of vomiting |
ஒரமோரு | - Milk fermented by added bacteria |
வலந்து/ஏனம் | - Bowl/vessel (home appliance) |
தேத்தனி | - Tea |
தடுக்கு | - Mat |
புள்ளைக்கு ஒரம் வுழுந்துடுச்சி | - Sudden shock to a child by unexpected incident |
கண்ணூறு | - Look with jealous |
செய்த்தான்கொணம் | - Attitude of evils/saitan |
செமியாக்கொணம் | - Symptom of undigested |
பக்கிரிச்சி | - Poor woman (miser attitude) |
திட்டி அருவாக்கிபுட்டா | - Adamant lady with blaming others |
மொடையா ஈக்கிது | - Empty situation |
ஊட்டுக்காரவொ | - Husband/House owner |
ஏப்பு காட்டுதல்/வலிப்பு காட்டுதல் | - Cheating to irritate |
மொடை | - Lack/Tightness of money |
நேந்துக்கிட்டு | - Offering |
வதுவாப்பேரு | - Curse |
அரீர்ப்பு | - Impropriety/Ugliness |
ஏப்பசாப்பெ | - Without any interest & care |
கம்சுகை சட்டை | - Full hand shirt |
குந்தமரி | - Doing something with happy mood |
சர்வ சட்டி | - Big vessel for heating water |
பூச்சிவட்டெ | - Insects |
சுக்குருசான் | - Chinaware |
பதூசா | - Calmly/Silently |
அன்னாத்து | - Fallen down by unbalanced |
ஊர்ப்பட்ட | - Huge amount / Plenty |
கொதப்பை | - Cheek |
பூசை | - Beat / Hit |
வீதல்ரோடு | - A Piece of broken glass |
மு.செ.மு. நெய்னா முஹம்மது
66 Responses So Far:
இப்புடி அவுருவொமா உள்ள நம்ம பாசையெ இங்லீசுலே எழுவி நெட்டுலே போட்டால் மத்த ஊருக்காரங்க காப்பி அடித்து அப்பரம் அப்பா ஏசப்போராஹ
வல்லாநெலெயிலே ம்மடி இதெல்லாம் நெய்னாவால் மட்டுமே ஏலும்.
ஹயாத்துகெடக்க மாசா அல்லாஹ் மச்சான்!
--------------------------------------------------
ஜமாத்துல் ஆகிர் பொறெ 4
அன்புத் தம்பி நெய்னா!
அரிக்கலாம்பு சரி முட்டேலாம்பு?
வலந்து, ஏனம் , ஏத்தனம், தேத்தனி, தடுக்கு, புள்ளைக்கு ஒரம் வுழுந்துடுச்சி, கண்ணூறு, செய்த்தான்கொணம், செமியாக்கொணம், பக்கிரிச்சி, திட்டி அருவாக்கிபுட்டா, மொடையா ஈக்கிது= இவைகளுக்கெல்லாம் யார் மொழிபெயர்ப்பு செய்வது?
அன்புத் தம்பி அபூ இப்ராஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி நெய்னா அவர்கள் தந்துள்ள பட்டியலில் உள்ள வார்த்தைகளை வைத்து ஒரு வரி வாசகம் அமைத்து எழுதும்படி நமது வாசகர்களுக்குப் போட்டி ஒன்று வையுங்களேன். தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று வாசகங்களுக்கு பரிசு அறிவியுங்களேன். முதல் பரிசு நான் தருகிறேன். ( முதல் பரிசு குட்டான் - இரண்டாம் பரிசு தடுப்புளா- மூன்றாம் பரிசு அரிக்கலாம்பு )
As advised by Ebrahim Ansari kaka, some more missing words to be added in the above article by Editor soon In sha Allah. If you find or remember more words of our hometown, please let them be posted here to view every one visiting here.
thanks a lot
ஹாஹா காக்கா போனதும் அதிரையின் கை வண்ணத்த ஆரம்பிச்சா வாழ்த்துக்கள் .....
தங்களின் பயணம் இனிதாக அமைந்தது என்று நினைக்கிறன்
எம்.எஸ்.எம் (நெ) = Excellent !
தெரிந்தவரின் அதிரை மொழிக்கு எனக்குத் தெரிந்த ஆங்கில மொழி பெயர்ப்பு !
எனக்கு நிறைய வார்த்தைகள் வந்தது. பின்னூட்டலாம் என்று பார்த்தால் அவற்றையும் நீர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கிறீர், நெய்னா.
என்ன செய்றதுனு வெளங்காம ஒரே மாஹையா வருது போங்க.
//Ebrahim Ansari சொன்னது…
அன்புத் தம்பி அபூ இப்ராஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி நெய்னா அவர்கள் தந்துள்ள பட்டியலில் உள்ள வார்த்தைகளை வைத்து ஒரு வரி வாசகம் அமைத்து எழுதும்படி நமது வாசகர்களுக்குப் போட்டி ஒன்று வையுங்களேன். //
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் காக்கா...
ஓ ! தாரளமாஅக செய்யலாம்தான் !
அதுக்கு எம்.எஸ்.எம்.(n) யுனிவெர்சிட்டியில படிச்சிருக்கனும்னு கண்டிஷன் வேற போடனுமா காக்கா !?
சகோ.நெய்னாவின் ஞாபகமூட்டலில் பெருமைமிக்க நம்மூர் தமிழ் என்றுமே வாழும்....எப்படியெல்லாம் யோசிக்கராங்கப்பா....
இன்னும் சில வார்த்தைகளை எடுத்துவிட “ஹமீது காக்கா” எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும். வழக்கம்போல் நைனாவின் மண்மணக்கும் கலக்கல்! அவர் இதிலே மன்னாதி மன்னன். இப்பத்தான் பார்த்தேன் சிரித்து அடக்க முடியாமல் தொடருகிறேன்.குட்டான்(இது கொழும்பு தமிழ் இஸ்லாமியர்களிடமிருந்து இறக்குமதியானது).
Ebrahim Ansari சொன்னது…
அன்புத் தம்பி அபூ இப்ராஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி நெய்னா அவர்கள் தந்துள்ள பட்டியலில் உள்ள வார்த்தைகளை வைத்து ஒரு வரி வாசகம் அமைத்து எழுதும்படி நமது வாசகர்களுக்குப் போட்டி ஒன்று வையுங்களேன். தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று வாசகங்களுக்கு பரிசு அறிவியுங்களேன். முதல் பரிசு நான் தருகிறேன். ( முதல் பரிசு குட்டான் - இரண்டாம் பரிசு தடுப்புளா- மூன்றாம் பரிசு அரிக்கலாம்பு )
--------------------------------
'ப்லாகொண்ட' கம்பன் ரயிலை மீண்டும் வரவழைக்க "ஊர் முச்சூடும்" "சடப்பு"பாக்காம முயற்சித்தும் 'ஏப்பு காட்டுதல்'தொடருவதால் இனி நமக்கு கம்பன் வரும் ,கொடுப்பினை" இல்லை இத நெனச்சாத்தான் 'சடப்பாவருது!
ஹாஜாமீன் வாப்பாவுக்கு,
இவிடஞ் ஜொகம்.
அவிடஞ் ஜொகத்துக்கு தாக்கல்.
உங்க
அவுருவத் தம்பி மொவன் பண்ற
அலுச்சாட்டியம் சொல்லி மாலாது.
உச்சிஉரும நேரத்ல
ஊரு முச்சூடும் சுத்துறான்
ஏன்டு கேக்கப்போனா
ஏப்புக் காட்டி இளிக்கிறான்
வெட்டிக்கொளத்து மோட்லேர்ந்து
குட்டிக்கரணம் போட்றான்
முக்குளித்தாரா மாரீல்ல
தண்ணிக்குள்ள முங்குறான்
அம்மட சூ…
மணிக்கணக்கா ஊறுரான்
அவ்வோ இவ்வோ அடிச்சாவோன்டு
அழுவிக்கிட்டு நிக்கிறான்
பள்ளியொடம் போவாம
கசங்கொண்டு திரியிறான்
கருவங்காட்டு கூட்டத்தோடு
காசுவச்சி தோக்குறான்
கண்டிச்சி வைக்கச் சொல்லி
கருஷா மாமி கத்துறோ
ஒங்கள்ட்ட சொல்ல வாணான்டு
ஒத்தக்கால்ல நிக்கிறான்
இத்துணூண்டு சோறு உண்டாலும் - எனக்கு
மூசாப்பாவுது வவுறு
திட்டுமுட்டி தெகறடில
வேத்து வேத்துக் கொட்டுது.
ஆஸ்பத்திருக்குப் போவலான்டா
மொடையாவுல்ல ஈக்கிது
அடுத்த மாசம் அனுப்பும்போது
இதுக்கும் சேத்து அனுப்புங்க.
ஊட்டுக்காரவொளுக்கு செமியாக்குணமா ஒரே ஒமட்டலும் குமட்டலுமா ஈப்பதாலே ஒரு வலந்துலெ தேத்தண்ணி மட்டும் குடிச்சாஹ.
அவொளுக்கு கண்ணூரு சைத்தான்குனம் போயி இந்த ஆத்தா கொலெ மனுசனுக்கு சதுரவாழ்வா இருந்து எரனபரக்கத்தோடு இருக்க நேந்து கிடுங்கொ.
இ.அ காக்கா ஏப்பு காட்டாம மொத பரிசு குட்டான் தரனும். அதுக்கெலாம் குடுப்பினை வேனும் நு க்ரவ்ன் சொல்ற மாதிரி இருக்கனும். இதுனாலே பொல்லாப்பு வராமெ பாத்துக்கிடுங்க காக்கா.
ஹாய் நைனா,
இன்று வெளிநாட்டிலிருந்து அதிராம்பட்டினத்தில், இறங்கியது போன்ற
உணர்வை ஏற்ப்படுத்தி இருக்கின்றீர்கள்.
அபு ஆசிப்
ரியாத் சவுதி அரேபியா.
நெசமா சொல்றேங்க இந்த தடவ ஊர்ல என்னால ஒரு சுட்டுக்குருவியக்கூட பாக்க முடியல (கண்மாசியாக்காணோம்). நம்மூரு கடலுக்கு (ஏரிப்புறக்கரை வழியாக அல்ல) நானும் என் தோழப்புள்ளயும் மோட்டாரு சைக்கிள்ல போனோம். அங்கேர்ந்து நம்ம ஊர பாத்தா ரொம்ப அழகாத்தான் இரிந்திச்சி. ஊர் முச்சூடும் தென்னமரங்கள் நடுவுல தக்வாப்பள்ளியாச மனோராவும், புதுசா கட்டிக்கிட்டு ஈக்கிற கடக்கரத்தெரு பள்ளியாச மனோராவும், மேலத்தெரு பெரிய ஹொத்வா பள்ளி மனோராவும் தெரிஞ்சிச்சி. அதோட ஊர்ல நெறையா செல்போன் டவரும் அங்கங்கே நெடுப்பமா தெரிஞ்சிச்சி.
அதன் சக்தி வாய்ந்த அலைக்கதிர் வீச்சால் ஊரில் இந்த சுட்டுக்குருவி இனமும் கொஞ்சம், கொஞ்சமாக அழிஞ்சி அதோட நம்ம ஊர் ஜனங்களுக்கும் புற்றுநோய் பரவ இது ஒரு காரணமாக ஈக்கிமோண்டு நெனச்சிக்கிட்டேன்.
அறிவியல், விஞ்ஞான வளர்ச்சிகள் இன்று அவசியமாகிப்போனாலும் அதோட புதிய, புதிய நோய்நொடிகளால் மக்கள்களின் வாழ்நாட்களும் சுருக்கப்பட்டு உயிரிழப்புகளின் வளர்ச்சி வீதமும் அதிகரித்துக்கொண்டு வருவதாகவே கருதுகிறேன்.
இதில் ஊர்ல ஜும்மா மேடைகளிலெல்லாம் சமுதாயத்தில் நிலவும் பெரும் பிரச்சினைகளை பற்றி பேசப்படுவதாக கூறி அசிங்க அரசியல்கள் அரங்கேர துவங்கியுள்ளன. இந்த போக்கால் விரைவில் அல்லாஹ்வுடைய அதாபுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊரில் வந்திறங்கிவிடுமோ என அவ்வொ, இவ்வொ என்றில்லாமல் எல்லோரும் அஞ்ச வேண்டியுள்ளது.
ஒரு காலத்தில் அட்டூழியம் புரிந்த இஸ்லாமியர்கள் அல்லாஹ்வின் துணையுடன் இஸ்லாம் அல்லாதவர்கள் (காஃபிர்கள்) மூலம் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் நினைவில் கொள்ளப்பட வேண்டிய தருணம் இதுவாகவே இருக்க முடியும்.
இது யாரும் யாருக்கும் அறிவுரை, உபதேசம் சொல்லக்கூடிய காலமல்ல. அவரவர் வீட்டை அவரவர் மார்க்க வரம்பு மீறாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டாலே அல்லாஹ்வின் பேரருளும், உதவியும் நம்மை அவ்வப்பொழுது தழுவிச்செல்லும் இன்ஷா அல்லாஹ்.
ஊரிலிருந்து புறப்படும் ஓரிரு நாட்களுக்கு முன் ஊரில் பல வருடங்கள் இருந்து வரும் மூத்த சகோதரர் ஒருவர் என்னிடம் கூறியது "நெய்னா ஊருக்கு லீவுல வந்தமா வாப்பா,உம்மா, பொண்டாட்டி,புள்ளய சந்தோசமா வச்சி பாத்தோம்மா, போனோம்மாண்டு இரிங்க. தயவு செய்து ஊர் விவகாரங்கள் எதையும் கண்டுகொள்ளாதீர்கள்/தலையிடாதீர்கள்." என்பதே. அந்தளவுக்கு மோசமான சூழ்நிலை நிலவுவதாக அவர் சொல்லி கேட்டுக்கொண்டார்.
ஏதோ நம்ம, நம்ம வாழ்க்கை அங்கிருந்தாலும், இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும் அல்லாடஹாவல்ல மட்டுமே ஓடிக்கிட்டு இருக்குது...........
வஸ்ஸலாம்.
Editorakka,
If possible, please correct the below word with right meaning & add the new words.
செமியாக்கொணம் - Symptom of undigested
மொடை - Lack/Tightness of money
நேந்துக்கிட்டு - Offering
Dear MSM(n):
Updated !
இம்புட்டுக்கோண்டு பதிவுன்னு நெனச்சேன். இப்புடி எல்லாருக்கும் வாளையமாப் போச்சா?
சவூதி போன உடனே இப்படி பரவாச்சிலே வந்து எங்களை மக்கசக்கசரக்கரத்திலே மாட்டிவிட்டு செரவடி அடிக்கவிட்டுட்டியே வாப்பா. இப்படி ஒரு மோசக்கருத்தான புள்ளேன்னு தெரியாமப் போச்சே. இப்புடி ஒரு இம்முசு எப்புடித்தான் ஊருலே பசுவரியா இருந்தியலோ?
பதூசா - silently/Calmly
வல்லானாலேயிலே ஒனக்கு இவ்வளவு பொசுப்புள்ள நாபக சக்தி அல்லஹ் தந்திருக்கான்.. மாஷா அல்லாஹ்...
சுக்குருசான், தட்டை யில் தேத்தன்னி குடிச்ச மாதிரி ஈக்கிது.
ஒரே கொந்தமதியாவுல கெடக்கு.
பொம்புளைக்கி இம்புட்டுப் பவுமானம் கூடாது.
வதுவாப் பேரும் வாங்கப்புடாது.
Assalamu Alaikkum
Dear brother Mr. M.S.M. Naina Muhammad,
Thanks a lot for sharing list of Adirampattinam tamil slangs.
I guess you had interviewed recently an old lady either from your family or your relatives to grasp and refresh these slangs, and translated well in English.
Before forgotten by coming generations you have made good effort to collect and produce a "Adirampattinam Slang Thesaurus".
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
Dear brother Mr. Sabeer.Abushahruk,
MashaAllah, good sense and feelings of our local dialect of Adirampattinam through poetic lines letter.
Simply amazing!!!.
Thanks and best regards,.
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும், நெய்னா முஹம்மது.
உம்மாடி................. என்று பெரும்முச்சு விட்ட வைக்கிறது இந்த பட்டியல்...
இதெல்லாம் ஈக்காடும் ஒங்க முதுவு வலி எப்படி ஈக்குது?
Kavikka it is Simply amazing!!! as Bro.Ameen said
ஆங்... நைனா...
இன்னா இது.....
ஊரு போனப்பிறகு ஊர் சாடை அடிக்குதோ...
ஆனாலும் இந்த லிஸ்ட் உண்மையிலேயே ஒரு ஆராய்ச்சி செய்து பி. எச். டி
வாங்க வேண்டிய லிஸ்ட்.
உண்மையான அதிராம்பட்டினம் குடிமகனே வாழ்க !
அபு ஆசிப், (மு. செ. மு.)
ரியாத், சவுதி
சவுதி அரேபியா.
நெய்னா ஊருக்கு போய் நல்ல ருசியாய் சாப்பிட்டார் போல தெறுகிறது. பழைய நினைவுகளை கொண்டுவந்துள்ளார் நண்பர் நெய்னா
ந்நியாயம்மார்களே,
குட்டான் யாருக்கு?
வெறுங்குட்டான்டா எனக்கு வாணா. உள்ளே வண்டப்பமும் தொட்டுக்கறியும்ன்டா... எனக்குத்தான்)
நம் ஊர் தமிழ், திரைப்படங்களிலும், சீரியல்களிலும் இடம்பெற்று பெரிய ரீச் இல்லை. இருந்திருந்தால் இன்னும் அதிகமாக பேசப்படும். [ திருநெல்வேலி / கோயம்புத்தூர் / மதுரைத்தமிழ் போல்
சபீரும் எம் எஸ் எம்மும் உண்மையிலே அசத்தியிருக்காப்லெ
Yasir சொன்னது…
//சகோ.நெய்னாவின் ஞாபகமூட்டலில் பெருமைமிக்க நம்மூர் தமிழ் என்றுமே வாழும்....எப்படியெல்லாம் யோசிக்கராங்கப்பா....
இன்னும் சில வார்த்தைகளை எடுத்துவிட “ஹமீது காக்கா” எங்கிருந்தாலும் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்//
ஊரில் இருந்து வந்ததில் இருந்து ஒரே செமியாகுணமா இருக்கு
சபீர்...நீ பினாங்குக்கு தவால் எழுதிக்கொடுத்த ப்ராக்டிஸ் இப்போ இந்த கவிதை எழுத உதவியாய் இருக்கு. !!
நம்மூரு அகராதியில புடிக்காத வார்த்தை ஈந்தாலும் அகராதியின் முழுமைக்காக இங்கு எழுத வேண்டியுள்ளது. எத்தனை குடும்பங்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பெற்ற பின்னரும் இந்த ப்லாயில் சிக்கிக்கொண்டு வாப்பா வேறொரு கலியாணம், உம்மா இன்னொரு கலியாணம் என்று அவரவர் துணைகளுடன் இணைந்து கொண்டு இன்று குழந்தைகளுடன் சீரழிந்து வருவதை காண மனம் வேதனையாகவே இருக்கிறது. ஊரில் எங்கோ, எப்பொழுதோ, யாருக்கோ நடந்த இந்த வெறுக்கத்தக்க செயல் இன்று தெருதோறும், மெல்ல, மெல்ல வீடுதோறும் சிறுசிறு காரணங்களால் வந்து எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது ஒரு வேதனையான விடயமேயன்றி வேறன்ன சொல்ல முடியும்?
வார்த்தை சொல்லுதல் - Divorce / Separation (for unnecessary, small & silly reasons)
எடிட்டர் தம்பி!
பரிசு பெறுவோரை அறிவியுங்கள். குட்டான், தட்டுப்புளா, அரிக்கலாம்புக்கு ஆர்டர் கொடுக்கணும்.
//ஊரில் கடைத்தெருவின் உள்நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் இரண்டு ஆச்சிகளிடம் நல்ல தேர்ன நார்த்தங்காயும், சோளக்கருவும், அவுச்சக்கடலையும், ப்லாச்சொழையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு//
அந்த நேரத்தில் நானும் இருந்தேனே!! நெனெப்பு இருக்கா மச்சான்?
//எடிட்டர் தம்பி!
பரிசு பெறுவோரை அறிவியுங்கள். குட்டான், தட்டுப்புளா, அரிக்கலாம்புக்கு ஆர்டர் கொடுக்கணும்.//
காக்கா, முதல் மூன்று பரிசுகளையும் அழகான, அற்புதமான, கவிதை வாசித்த ! கவிக் காக்காவுக்கு கொடுத்துட்டு நடைய கட்டிடுவோம் என்னா அதிரை மொழியில் அர்ச்சனைகள் செய்ய ஒரு கூட்டமே நம்மைச் சுற்றி இருக்குன்னு ஃப்ரூஃப் பன்ன சகோதரர்கள் கச்சல் கட்டிடுவாங்க ! :)
என்னால ஏன்டமட்டும் நெனச்சி பாத்தேன், நீங்கதான் எல்லாத்தயும் எழுதிபுட்டியலே, ஒன்னும் நெனவுக்கு வரலெ
ஹூம்..இருந்தாலும் ஏதோ என்னாலெ ஏன்டது
தாப்பத்துக்கு - to depth of the tank
கரையேறு - to get ready from bath
ப்ராஞ்சப்பம் - a food made with prawn
மினாங்கண்டேன் - dreamt
குத்தவை - sit
கிட்டனசு - nearly
ஒஸ்தார் - arabic teacher
ஒதட்டு பாலீஸ் - lipstick
பலிங்கி பீங்கான் - a plate made with glass
கோப்பெ - cup
அமுக்கு - press
கோள்சொல்லி ரேடியோ = tape recorder
சூட்டுக்கிளாசு= Thermos flask
இன்னும் நினைவில் வரும் பதங்களை எல்லாம் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிடலாமே!
\\ஒரு பாசப்பரிமாற்றம் கொத்துமாங்காயாய் பொட்டலத்துக்குள் பதுங்கி இருந்தது.\\
கவிதை!
அரிக்கலாம்ப ஏத்தி, பாய போட்டு தடுக்க விரிச்சு தட்டுப்புலாவுல குட்டான வச்சு அதுல வண்டப்பம், ப்ராஞ்சப்பம் எல்லாம் ரெடி.., கோப்பெயில ராக்குருமாவும் மொலவுதன்னியும் ஈக்கிது அப்பரம் தேத்தனிய ஊத்தி குடிச்சுப்புட்டு வெரசனமா போய்டுங்க இல்லாட்டி பொற வூரு காரவோ வந்துடுவாஹ அப்புறம் பத்தாம போய்ட்டா நல்லா ஈய்க்காது...
கவிவேந்தர்- ஆஸ்தான கவி- கவிநிலவு- நிஜ கவி ராஜா, சபீர் அவர்கள் எம்மொழியிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர் என்பதற்கு முன்பு எழுதிய ஆங்கிலம், மலையாளம் தொடர்ந்து இப்பொழுது எழுதியுள்ள அதிரைத் தமிழ் மேலும் ஒரு சான்று! அவர் சொல்வது போல், கவிதை எழுதவில்லை; கவிதை அவரை எழுத வைக்கின்றது; அவர் கவிதையாகவே வாழ்கின்றார்; மாஷா அல்லாஹ்! இப்படிப்பட்ட அற்புதமான கவிவேந்தரின் நட்பு எமக்குக் கிடைக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
திண்ணையிலும், சத்யமார்க்கத்திலும், அதிரை நிருபரிலும் மட்டும் முடங்கிக் கிடக்காமல் எட்டுத் திசைகளிலும் எட்ட வேண்டும் அவரின் பேரும் புகழும், இதுவே என் உளம்நிறைவான அவாவும் துஆவும்!
இங்கு தங்களது கருத்துக்களை கவிதையாகவும், விடுபட்ட வார்த்தைகளை பின்னூட்டமாகவும் நெரப்பமா தந்த எல்லா 'இந்தங்கங்க/யாங்கங்க'களுக்கும் ரொம்ப தேங்க்ஸ். ஊரை கிட்டன்சுல ஈந்து பாத்தா அதப்பத்தி ஒமட்டலும், கொமட்டலும் தான் வரும். ரொம்ப தொலைலேர்ந்து பாத்தா சுகமான அனுபவமாக உள்ளம் முச்சூடும் சுத்தி திரியும்.............
மலரும் நினைவுகள் (Reniassence) Very Nice . லேட்டா கமெண்ட் அடிச்சதுக்கு கோவுச்சிக்க கூடாது
Abdul Razik
Dubai
மலரும் நினைவுகள் (Reniassence) Very Nice . லேட்டா கமெண்ட் அடிச்சதுக்கு கோவுச்சிக்க கூடாது
Abdul Razik
Dubai
Assalamu Alaikkum,
Dear brother Mr. Abdul Razik,
There is a typo. "Renaissance"
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com
நெய்னா நல்லாயிருப்பே வாப்பா இதுக்கு மட்டும் மீனிங் சொல்லு
- வெறு(ரு)வாக்கெட்டவன்
//நெய்னா நல்லாயிருப்பே வாப்பா இதுக்கு மட்டும் மீனிங் சொல்லு
- வெறு(ரு)வாக்கெட்டவன்///
ஹாஹாஹ்ஹா.....குட் ஒன்....அடிக்கடி நம்மூர்ல பயன்படுத்துகின்ற வார்த்தை....May be "useless fellow" or "person with no moral value"
//நெய்னா நல்லாயிருப்பே வாப்பா இதுக்கு மட்டும் மீனிங் சொல்லு
- வெறு(ரு)வாக்கெட்டவன்//
வெறும் வாயால் கெட்டவன் - Getting bad name murmuring with useless things and malicious talk.
அப்பண்டா "போக்கணங்கெட்டவன்" என்றால் என்ன? யாராச்சும் சும்மா லைட்டா எடுத்து உடுங்களேன்...
போய் சேர்ந்த இனம் சரியல்ல என்பதுதான் பேச்சுவாக்கில் மருவி போக்கனங்கெட்டவன் என்று வந்தீக்கிமோ...
அது சரிவாப்பா பொட்டிய ராவிடுவேன்டா என்னான்டு சொல்லுங்க பாப்போம்
Dear Ameen
When I was attempting to type swiftly the epistle changed instead of “ai” thank u to found it.
"படுவா"ன்டா எந்த ஊர் பாஷங்கங்க....
"படுவா"ன்டு கூப்புட்ற வயசான அப்பாமார்களை ஊர்ல காணோம். இன்று பேரன், பேத்தியெடுத்த சிறுவயசு அப்பாமார்கள் ஊரில் நிறைய பேர் இருந்தாலும் கம்பு ஊண்டி அதட்டி,மிரட்டி எடக்குமடக்கு செய்து பச்சப்புள்ளைகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்து 'கிலி' கொள்ள வைத்து திரியும் அந்தக்கால அப்பாமார்கள் போல் இன்று பார்க்க இயலவில்லை.
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
அப்பண்டா "போக்கணங்கெட்டவன்" என்றால் என்ன? யாராச்சும் சும்மா லைட்டா எடுத்து உடுங்களேன்...
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். மேற்கண்ட சொல்லின் மூலம் வட மொழிச்சொல்லான போஜனம்(சாப்பாடு)கெட்டவன்(பெற இயலாதவன்)உழைக்கா சோம்பேறி ஒருவாய் சோற்றுக்குகூட லாயக்கில்லாதவன்.
"போக்கனங்கெட்டவன்”= போய்த் தங்கி ஓர் உருப்படியான வேலை செய்யத் தெரியாதவன்.
அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
"போக்கனங்கெட்டவன்”= போய்த் தங்கி ஓர் உருப்படியான வேலை செய்யத் தெரியாதவன்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். போக்கிடம் கெட்டவன்=போய்த் தங்கி ஓர் உருப்படியான வேலை செய்யத் தெரியாதவன். அல்லவா?கவியன்பன் காக்கா?விளக்கவும் இந்த சிறியனுக்கு.
போக்கிடம் கேட்டவன் என்பதே போக்கனங்கெட்டவனாக பொருந்தி வருவதாக தோன்றுகிறது.
தீங்களி என்றால் என்ன?
எங்க குடும்பத்தாரைப் பாத்தாலே யாம்மா இந்த கொடப்பெரட்டு?
தம்பி அபூ இப்ராஹீம். நீங்கள் சொன்னபடியே நமது கவியரசருக்கே கொடுத்துவிடலாம். ( அப்பத்தான் கொடுக்காட்டியும் தப்பிக்கலாம் - மத்தவங்க மடியைப் புடிச்சி வாங்கிடுவாங்க)
//தம்பி அபூ இப்ராஹீம். நீங்கள் சொன்னபடியே நமது கவியரசருக்கே கொடுத்துவிடலாம். ( அப்பத்தான் கொடுக்காட்டியும் தப்பிக்கலாம் - மத்தவங்க மடியைப் புடிச்சி வாங்கிடுவாங்க)//
ஆமாம் காக்கா ! அதான் சொன்னேனே :)
அதுசரி, கொடப் பெரட்டும், திட்டுமுட்டா, செரவடியா வந்துடுச்சு காக்கா... ஈரானில் அதிர்ந்தது அமீரகத்திலும் அசைவு உணர்ந்ததை நினைத்தால் சற்றே பதற்றமே (அனுபவித்ததால்) !!
அன்புத் தம்பி அபூ இப்ராஹீம்.
அனைவரையும் அல்லாஹ் காப்பானாக! அல்லாட காவல்.
ibn abdulwahid பொட்டிய ராவிடுவேன்டா என்னான்டு சொல்லுங்க பாப்போம்//
பிடறி தெரிக்க அடிப்பேன் என்பதாக இருக்குமோ... நெய்னா இதுக்கு பதில் வெச்சிருப்பியே..
//அனைவரையும் அல்லாஹ் காப்பானாக! அல்லாட காவல்.//
நம்மூர் பெண்கள் இதையும் சேர்த்துக்குவாங்க அல்லாட காவல், மையனாண்ட காவல்.....
அப்துல்மாலிக் சொன்னது…
//நம்மூர் பெண்கள் இதையும் சேர்த்துக்குவாங்க அல்லாட காவல், "மையனாண்ட காவல்".....//
அட மாலிக்கு, மையனாண்ட காவல் (தூய தமிழில் சிர்க்கான ஒரு வார்த்தை முகைதீன் ஆண்டவர் காவல்) ஜாக்கரதையா எழுதுடா....அப்புறம் உனக்கு இங்கு கொடிர்ஹாலம் போய் சந்தனக்கூடு எடுக்க ஊர்ப்பட்ட பேரு காத்துக்கிட்டு இருக்கிறார்கள் ஆமாம்......
அது இணைவைப்பதுதான், இன்னும் வயசான பொம்பளைங்க அதை பயன்படுத்துவதுதான் வேதனையா இருக்கு. இப்படி ஒரு வார்த்தை இருக்கு என்று மட்டுமே சொல்ல வந்தேன்..
//அப்புறம் உனக்கு இங்கு கொடிர்ஹாலம் போய் சந்தனக்கூடு எடுக்க ஊர்ப்பட்ட பேரு காத்துக்கிட்டு இருக்கிறார்கள் ஆமாம்...... // சந்தனம் பூச ஆளு வருமா?????
வாப்பாமாரா
இங்கிருங்க
இப்பத்தான்
யாபவம்
வந்திச்சு
இம்பூட்டும்
உட்டுப்போச்சு
கொல உடுங்க
ஒய்ய கூறு
ஒய்யடோ
போறுமா
ரொம்பத்தான்
வல்லளவு
ம்மாடியோவ்
களைச்சிப்போச்சும்மா
பேசாம
குட்டான்
தட்டுப்புலா
அரிக்கலாம்பு
அம்புட்டையும்
எனக்கே
தந்துருங்கோ
நல்லா ஈப்பிய
சகோ.ibn abdulwahid ஒரு அரிக்கலாம்பு-வாது கொடுத்திடுங்க...ரொம்ப்பப் கஷ்டப்பட்டு களச்சி போய் இம்புட்டு வார்த்தையை அள்ளிட்டு வந்திருக்காக
//சந்தனம் பூச ஆளு வருமா?????//
வரும்.....ஆனா....வராது!
Post a Comment