அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
உழைத்து உண்ணுதல், யாசகம் கேட்காதிருத்தல்:
தொழுகை
முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! (அல்குர்ஆன்:
62:10)
''உங்களில்; ஒருவர் தன் கயிற்றை எடுத்துக் கொண்டு, மலைக்கு அவர் வந்து, தன் முதுகில் ஒரு கட்டு விறகைச்
சுமந்து, அதை விற்று, அதன் மூலம் தன் கண்ணியத்தைக் காப்பாற்றிக்
கொள்வது என்பது, அவர் மக்களிடம்
யாசகம் கேட்டு, அவர்கள்
தருவது அல்லது மறுத்து விடுவது என்பதை விடச் சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லா என்ற
சுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 539)
''தன் முதுகில் ஒரு கட்டு விறகை உங்களில் ஒருவர் சுமப்பது, ஒருவரிடம் யாசகம் கேட்டும் அவர்
கொடுத்தோ அல்லது மறுத்தோ விடுவதை விடச் சிறந்தது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 540)
''நபி தாவூத் (அலை) அவர்கள் தன் கரத்தின் உழைப்பின் மூலமே தவிர சாப்பிட்டதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 541)
''நபி ஸக்கரியா (அலை) அவர்கள் மரவேலை செய்யும் தச்சராக இருந்தார்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள்.(முஸ்லிம்)
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 542)
''தன் கையால் உழைத்து ஒருவர் உண்பதை விட, வேறு சிறந்த உணவை எவரும் சாப்பிடமாட்டார்.
நிச்சயமாக அல்லாஹ்வின் நபி தாவூத் (அலை) அவர்கள்
தன் கையால் உழைத்து உண்பவர்களாக இருந்தார்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: மிக்தாத் இப்னு மஹ்தீ
கர்ப் (ரலி) அவர்கள்(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 543)
கொடையளித்தல், அல்லாஹ்வை பயந்து நல்ல வழிகளில் செலவு செய்தல்:
நீங்கள்
எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். (அல்குர்ஆன்: 34:39)
நல்லவற்றில்
நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக
வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:272)
நீங்கள்
எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:273)
''இரண்டு பேர்கள் விஷயத்தில் தவிர பொறாமை என்பது கூடாது.
1) அல்லாஹ்
ஒரு மனிதருக்கு சொத்தை வழங்கி உள்ளான். அதை அவர் சத்திய வழியில் செலவு செய்கிறார்.
2) அல்லாஹ்
ஒருவருக்கு அறிவை வழங்கி உள்ளான். அவர் அதன் மூலம் தீர்ப்பும் வழங்கி, (பிறருக்கு) கற்றும் கொடுக்கிறார்.
(இந்த இருவர் மீது பொறாமை கொள்ளலாம்)''
என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 544)
''உங்களில் எவருக்கு தன் சொத்தை விட தன் வாரிசின் சொத்து
மிக விருப்பமானதாக இருக்கும்?'' என்று நபி(ஸல்)
கேட்டார்கள். ''இறைத்தூதர்
அவர்களே! தன் பொருளைத் தவிர (வேறு எதையும்) எங்களில் எவரும் தனக்கு விருப்பமானதாக ஆக்கிக்
கொள்வதில்லை'' என நபித்தோழர்கள்
கூறினார்கள். அப்போது, ''ஒருவனின்
சொத்து என்பது, அவன் முன்பு
செய்திட்டவைகளாகும். அவன் வாரிசின் சொத்து என்பது, அவன் பிந்தி சேர்த்தவைகளாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 545)
''பாதி பேரீத்தம் பழத்தை (தர்மம் செய்தே)னும் நரக நெருப்பை
அஞ்சிக் கொள்ளுங்கள் '' என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 546)
''நபி (ஸல்) அவர்களிடம் எதைக் கேட்டாலும், ''இல்லை'' என அவர்கள் கூறியதில்லை (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 547)
'அடியார்கள் ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் இரண்டு
வானவர்கள் இறங்காமல் இருப்பதில்லை. அவ்விருவரில் ஒருவர், இறைவா! (உன் வழியில்) செலவு செய்யும் ஒருவருக்கு
பொருளை வழங்குவாயாக!' என்று கூறுவார்.
மற்றொருவர், 'இறைவா!
செலவழிக்காமல் இருக்கும் நபருக்கு நீ அழிவை வழங்குவாயாக' என்று கூறுவார்' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 548)
'ஆதமின் மகனே! (நல்வழியில்) நீ செலவு செய்வாயாக! அப்போது, உனக்கு (என் மூலம்) செலவு செய்யப்படும்' என, அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 549)
''இஸ்லாத்தில் சிறந்தது
எது? என ஒருவர்
நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். '(பசித்தோருக்கு)
நீ உணவளிப்பதும், நீ அறிந்த, அறிந்திடாத அனைவருக்கும் ஸலாம்
கூறுவதுமாகும்' என்று நபி(ஸல்)
பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு
இப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 550)
''ஆதமின் மகனே! மிச்சமானவற்றை செலவு செய்வதுதான், உமக்குச் சிறந்ததாகும். செலவு
செய்யாமலிருப்பது, உமக்கு
தீமையாகும். போதுமானவற்றை வைத்துக் கொள்வது மீது குறை காணப்படமாட்டாய். உம் பொறுப்பில்
உள்ளவர்(களுக்கு செலவு செய்வது) மூலம் நீ ஆரம்பிப்பாயாக! (கொடுக்கிற) மேலே உள்ள கை, (வாங்குகிற) கீழுள்ள கையை விடச்
சிறந்ததாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற சுதய் இப்னு அஜ்லான் (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 552)
'தர்மம் செய்வது, சொத்தில் எதையும் குறைத்து விடாது. அல்லாஹ் ஓர் அடியானை
மன்னிப்பதன் மூலம், தகுதியை
உயர்த்தாமல் இருப்பதில்லை. மேலும் அல்லாஹ்வுக்கு ஒரு அடியான் பணிந்தால், அவனுக்கு பதவியை அல்லாஹ் உயர்த்தாமல்
இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 556)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
11 Responses So Far:
ஆஹா! என்ன அழகான அற்ப்புதமான திருக்குர்ஆன் வசனங்கள் :
உழைப்பின் மேன்மையை உணர்த்தும் வசனங்கள், சோம்பேறிகள் கூட எழுந்து உழைப்பின் உயர்வை உணர்ந்து உழைக்கச் சொல்லும் வசனங்கள்.
தர்மத்தின் உயர்வை இவ்வளவு அழகாக எந்த மதமோ அல்லது வேத நூல்களோ சொல்லி இருக்க முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வருவரின் நெஞ்சில் செதுக்கி வைத்துக்கொள்ளக்கூடிய , நெஞ்சில் நிலை நிறுத்தியே ஆகவேண்டிய வசனங்கள்.
முத்தாய்ப்பாக ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னது,
யாசிக்க நினைப்பவரைகூட யோசிக்க வைக்கும், கிரீடம் போன்ற சொல்
அதாவது,
(கொடுக்கிற) மேலே உள்ள கை, (வாங்குகிற) கீழுள்ள கையை விடச் சிறந்ததாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற சுதய் இப்னு அஜ்லான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 552)
உழைப்பின் மேன்மையையும் தர்மத்தின் உயர்வையையும் உணர்ந்த எவனும்,யாசகம் கேட்கமாட்டான் என்பதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் மிக தெளிவாக இந்த வசனங்கள் மூலம்
கற்றுத்தருகின்றார்கள்.
உழைப்பின் மேன்மையை உண்டர்ந்த நன் மக்களாக
தர்மத்தின் பிரதி பலனை உணர்ந்தவர்களாக,
ஈகை குணம் உள்ளவர்களாக
என்னையும் உங்களையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!
யாரப்பல் ஆலமீன்!
அபு ஆசிப்
ரியாத், சவுதி அரேபியா.
நல்ல ஹதீஸ் தொகுப்பு, ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
-----------------------------------------------------------------------------------------------------
ஜமாத்துல் ஆகிர் பிறை 1
ரமலானுக்கு மூன்று மாதங்கள்
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா....
இதனை தொடர்ந்து எங்களுக்கு வழங்கிவரும் உங்களுக்கு 'இறையருள்' என்றும் நிலைத்திருக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !
//தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! (அல்குர்ஆன்: 62:10)//
//தர்மம் செய்வது, சொத்தில் எதையும் குறைத்து விடாது. அல்லாஹ் ஓர் அடியானை மன்னிப்பதன் மூலம், தகுதியை உயர்த்தாமல் இருப்பதில்லை. மேலும் அல்லாஹ்வுக்கு ஒரு அடியான் பணிந்தால், அவனுக்கு பதவியை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 556)//
அல்லாஹ்வின் அருளைத் தேடுவதற்கும் அதனை அவனுக்குப் பொருத்தமான வழியில் செலவிடுவதற்கும் நம்மை இதன் மூலம் அல்லாஹ்விடம் நெருங்குவதற்குமான இறைவசனமும், நபிமொழியும் மிகவும் அருமை. அல்லாஹ் அதன்படி நடக்க நமக்கு நல்லருள் புரிவானாகவும்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காக்கா
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா....
இதனை தொடர்ந்து எங்களுக்கு வழங்கிவரும் உங்களுக்கு 'இறையருள்' என்றும் நிலைத்திருக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !
அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் எழுதி வரும் தொடருக்கு ஏற்ற சிந்தனைகளை இந்த அருமருந்து எனக்குத் தருகிறது. ஜசக் அல்லாஹ்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காக்கா..
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா..
வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment