Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 36 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2013 | ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

கஞ்சத்தனம் கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். அவன் விழும் போது அவனது செல்வம் அவனைக் காக்காது. (அல்குர்ஆன்:  92:8 -11)

தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 64: 16)

'அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதம் செய்வது, மறுமை நாளின் இருள்களாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக கஞ்சத்தனம், உங்களுக்கு முன் இருந்தோரை அழித்து விட்டது. அவர்கள் (கொலை மூலம்) தங்களின்  ரத்தத்தை ஓட்டிக் கொள்ளவும், தங்களுக்குத் தடை செய்யப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை அது தூண்டி விட்டது'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 563)

அர்ப்பணம் செய்தல், துயர் போக்குதல்:

அல்லாஹ் கூறுகிறான்:

தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 59:9)

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். (அல்குர்ஆன்: 76:8)

'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் பசியாக உள்ளேன் என்று' கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியரில் ஒருவரிடம் ஆள் அனுப்பினார்கள். ''உங்களை சத்தியம் மூலம் அனுப்பியவன் மீது சத்தியமாக, என்னிடம் தண்ணீர் தவிர வேறு இல்லை' என்று அவர்களின் மனைவி கூறினார். பின்பு மற்றொரு மனைவியிடம் அனுப்பினார்கள். அதுபோலவே அவர்களும் கூறினார்கள். ''சத்தியத்தின் மூலம் உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக, தண்ணீர் தவிர என்னிடம் எதுவும் இல்லை' என்றே (அவர்கள் மனைவியர்) அனைவரும் கூறினர். ''இன்றைய இரவு (இவரை) விருந்தாளியாக்கிக் கொள்பவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அன்சாரிகளில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! நான் (ஏற்கிறேன்)'' என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியிடம், 'நபி(ஸல்) அவர்களின் விருந்தாளியை நீ கண்ணியப்படுத்துவாயாக!' என்று கூறினார்.

மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:

அவர் தன் மனைவியிடம், ''உன்னிடம் எதுவும் உள்ளதா?'' என்று கேட்டார்.

''என் குழந்தைகளுக்குரிய உணவைத்தவிர வேறு இல்லை'' என்று அவர் மனைவி கூறினார். ஏதேனும் அவர்களுக்கு தந்திரம் செய்து அவர்கள் இரவு உணவைக் கேட்டால், அவர்களை தூங்கச் செய்வாயாக! நம் விருந்தாளி வந்ததும், விளக்கை நீ அணைத்து விடு! நாம் சாப்பிடுவது போல் அவரிடம் காட்டிக் கொள்வோம் என்று கூறினார். (அவர் வந்ததும்) அவர்கள் உட்கார்ந்தார்கள். விருந்தாளி சாப்பிட்டார். இருவரும் பசியாகவே இரவைக் கழித்தார்கள். காலை நேரம் வந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். அவரிடம், ''இரவு உங்கள் விருந்து மூலம் உங்களிருவரின் விருந்தாளியிடம் நடந்து கொண்டது குறித்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைந்துவிட்டான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 564)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ' இருவரின் உணவு, மூன்று பேருக்குப் போதும், மூன்று பேர் உணவு, நான்கு பேருக்குப் போதும்.'' என்று நபி (ஸல்)கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒருவரின் உணவு, இரண்டு பேருக்கு போதும், இரண்டு பேர் உணவு, நான்கு பேருக்குப் போதும். நான்கு பேர் உணவு எட்டுப்பேருக்கு போதும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஜாபிர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 565)

'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்த போது, தனக்குரிய வாகனத்தில் ஒருவர் வந்தார். அவர் தன் பார்வையை வலப்புறமும், இடப்புறமும் திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''ஒருவரிடம் வாகனத்தின் முதுகில் மேல் மிச்சமாக இடம் இருந்தால், வாகனமில்லாத ஒருவனுக்கு  அதை அவர் கொடுக்கட்டும்! பயண உணவில் மேல் மிச்சமாக ஒருவரிடம் இருந்தால், பயண உணவு இல்லாதவருக்கு அதைக் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.  இவ்வாறு பல பொருட்களையும் வகையிட்டுக் கூறினார்கள். ''மேல் மிச்சம் எதுவும் எங்களில் எவரிடமும் இருக்க அனுமதி இல்லை'' என நாங்கள் எண்ணும் அளவுக்குக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 566)

சரியான வழியில் சம்பாதித்து, சரியான வழியில் செலவு செய்கின்ற நன்றியுள்ள பணக்காரரின் சிறப்பு:

யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்கு  வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 92:5-7)

இறையச்சமுடையவர் (நரகிலிருந்து) அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது. அவர் திருப்தியடைவார். (அல்குர்ஆன்: 92:17-21) 

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது.  உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)

நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன்: 3:92)

இரண்டு பேர்கள் விஷயத்தில் தவிர பொறாமை என்பதில்லை. (1) அல்லாஹ் ஒரு மனிதருக்கு செல்வத்தை வழங்கி உள்ளான். அதை அவர் சத்திய வழியில் செலவு செய்கிறார். (2) அல்லாஹ் ஒருவருக்கு அறிவை வழங்கி உள்ளான். அவர் அதன் மூலம் தீர்ப்பும் வழங்கி, (பிறருக்கு) கற்றும் கொடுக்கிறார். (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்) என நபி (ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 571)

இருவரின் விஷயத்திலே தவிர பொறாமை என்பதில்லை. (1) ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனை (ப்பற்றிய அறிவை) தந்துள்ளான். அவர் அதை இரவிலும் பகலிலும் ஓதுகிறார். (2) ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி உள்ளான். அவர் அதை இரவிலும், பகலிலும் செலவு செய்கிறார் (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 572)

முஹாஜிர்களில் உள்ள ஏழைகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ''பணக்காரர்கள், உயர்ந்த தகுதிகளையும், நிலையான சொர்க்கத்தையும் பெற்றுக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். ‘'ஏன் அப்படி?’’ என நபி(ஸல்) கேட்டார்கள். ‘’நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு வைக்கிறார்கள். அவர்கள் தர்மம் செய்கிறார்கள். நாங்கள் தர்மம் வழங்குவதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கிறார்கள். நாங்கள் விடுதலை செய்வதில்லை’’ என்று வந்த ஏழைகள் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘’உங்களுக்கு முந்தி விட்டவர்களை நீங்கள் அடைந்து கொள்கின்ற, உங்களுக்குப் பின் வருவோரை நீங்கள் முந்துகின்ற ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?  நீங்கள் செய்வது போல் ஒருவர் செய்தாலே தவிர எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது’’ என்று கூறினார்கள். உடனே அவர்கள் ‘’இறைத்தூதர் அவர்களே! சரி’’ என்றார்கள். ‘’நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்  கூறுங்கள்’’ என்று நபி(ஸல்) கூறினார்கள். முஹாஜிர்களில் உள்ள ஏழைகள், நபி(ஸல்) அவர்களிடம் மீண்டும் வந்து, ‘’எங்களின் (பணக்கார) சகோதரர்கள் எங்களின் செயல்களை கேள்விப்பட்டு அது போன்றே அவர்களும் செய்கிறார்கள்’’ என்று கூறினார்கள். ‘’அது அல்லாஹ் தான் விரும்பியோருக்குத் தருகின்ற அருட்கொடையாகும்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 573)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

7 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வெள்ளி விருந்து!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
பிரதானமாய் இறை வழிபாடுகளுடன் மகிழ்வான வெள்ளியாகட்டும்.

Unknown said...

ஒரு அழகிய தெளிந்த நீரோடைபோல
குரானின் வசனங்களும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளும் , கஞ்சத்தனத்தின் தீமையையும், தர்மத்தின் மேன்மையையும் எடுத்து இயம்புகின்றன.

அல்லாஹ் நம்மை கஞ்சத்தனத்தின் தீமையிலிருந்து
பாதுகாத்து,, தர்மத்தின் மேன்மையை அறிந்தவர்களாகவும், கஞ்சத்தனத்துக்கும், சிக்கனத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தவர்களாகவும் ஆக்கி , இறுதி மூச்சு வரை இறை வழியில் வாழும் மேன் மக்களாக
ஆக்குவானாக!

ஆமீன்.

அபு asif

Unknown said...

ஒரு அழகிய தெளிந்த நீரோடைபோல
குரானின் வசனங்களும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளும் , கஞ்சத்தனத்தின் தீமையையும், தர்மத்தின் மேன்மையையும் எடுத்து இயம்புகின்றன.

அல்லாஹ் நம்மை கஞ்சத்தனத்தின் தீமையிலிருந்து
பாதுகாத்து,, தர்மத்தின் மேன்மையை அறிந்தவர்களாகவும், கஞ்சத்தனத்துக்கும், சிக்கனத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தவர்களாகவும் ஆக்கி , இறுதி மூச்சு வரை இறை வழியில் வாழும் மேன் மக்களாக
ஆக்குவானாக!

ஆமீன்.

அபு asif

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

Adirai pasanga😎 said...

//இரண்டு பேர்கள் விஷயத்தில் தவிர பொறாமை என்பதில்லை. (1) அல்லாஹ் ஒரு மனிதருக்கு செல்வத்தை வழங்கி உள்ளான். அதை அவர் சத்திய வழியில் செலவு செய்கிறார். (2) அல்லாஹ் ஒருவருக்கு அறிவை வழங்கி உள்ளான். அவர் அதன் மூலம் தீர்ப்பும் வழங்கி, (பிறருக்கு) கற்றும் கொடுக்கிறார். (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்) என நபி (ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 571)

இருவரின் விஷயத்திலே தவிர பொறாமை என்பதில்லை. (1) ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனை (ப்பற்றிய அறிவை) தந்துள்ளான். அவர் அதை இரவிலும் பகலிலும் ஓதுகிறார். (2) ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி உள்ளான். அவர் அதை இரவிலும், பகலிலும் செலவு செய்கிறார் (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 572)///

அல்லாஹ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் இஸ்லாமிய மார்க்கத்தில் பொறாமை படக்கூட வழி சொல்லப்பட்ட்டிருக்கிறது. முழுமையான மார்க்கம் முழுமையாகப் பின்பற்றப்பட்டால் முழு மனித சமுதாயமும் ஏற்றமடையலாம்.

ஜஜாகல்லாஹு கைரன்.

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு