Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சொல்மந்திரம்...! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | April 20, 2013 | , , ,

சொல் - இது உள்ளத்தில் பிறக்கும் உணர்வின் ஒலி வடிவம்.

’ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’.

இது தமிழகத்தில் அதிகமாய் அறியப்படும் ஒரு சொல்லாடல்.

வள்ளுவர்கூட,

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.

ஒரு சொல்லினால் பிறர்க்குத் துன்பம் தருவதிலிருந்து நீங்கி இனிய சொல்லாக, இன்பம் தரும் சொல்லாக, மனதிற்கு தெம்பூட்டும் சொல்லாக மாறும் போது அச்சொல் வழங்குவோனுக்கும், வழங்கப்பெறுவோனுக்கும் இக்காலத்திற்கும் மறுமைக்கும் இன்பம் தரும் என்கிறார்.

’சரி.. சரி.. சொல்ல வந்ததை சொல்ல வேண்டியதுதானே...’ ங்றது கேட்குது...

1994ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் பனிச்சறுக்கல் போட்டியில் அதிவேக பனிச்சறுக்கு வீரர் டான் ஜான்ஸேன் தங்கம் வென்றார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பது எது தெரியுமா?

ஒரு ’சொல்’ அந்த ஒரு ’சொல்’ தாங்க...

டான் 12 வயது சிறுவனாய் இருந்த போது ஒரு நகரில் நடந்த சறுக்குப் போட்டியில் கலந்து கொண்டார். அவருக்கு முதலிடம் எட்டாக்கனியானது.

போட்டி முடிந்து கவலைதோய்ந்த முகத்துடன் தந்தையுடன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் மனதை, ’தம்மை தந்தை என்ன ‘சொல்’லப் போகிறாரோ??’ என்ற கவலை மட்டுமே ஆட்கொண்டிருந்தது.

தந்தையோ ஒன்றுமே ‘சொல்’லாமல் வீடு வந்து சேர்ந்தார்.

படுக்கையில் உறக்கமில்லாமல் தவித்த டானுக்கு அப்பா வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ஒரு ’சொல்’ ....... “ வாழ்க்கை என்பது பனிச்சறுக்கு வட்டத்திற்கும் மேலானது”  என்பது மட்டுமே.

அந்த ஒரு ‘சொல்’  அவரின் தன்னம்பிக்கையினை விரிவாக்கி ஒலிம்பிக்கில் தங்கம் பெற மந்திரச்சாவியாய் மாறியது.

டானின் தந்தையைப் போலவே, நம்மிடமிருந்து ‘சொல்’லப்படும் ஒரு ‘சொல்’ 
அது நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ,  ஆக அதன் வலிமை எத்தகையது என்று மட்டும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

அதிலும் குறிப்பாக நமது பிள்ளைகளிடம் ‘சொல்’லக்கூடிய ‘சொல்’லில் தான் பொருட்டு இருக்கிறது. அச்’சொல்’லே அவர்கள் யார் என்றும் தீர்மானிக்கின்றது.

சொல்வோமா?

புதுசுரபி

18 Responses So Far:

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Pudhusurabi Rafeeq,

Thanks a lot for sharing article.

The beauty of your article is its short. So, people will be eager to read from top to bottom in a single breath.

//சொல் - இது உள்ளத்தில் பிறக்கும் உணர்வின் ஒலி வடிவம்.//

Since the thoughts arises from the mind, the attitudes of mind and intentions should be pure and good, from there pure thoughts and words arises.

Sure the words expressed are having vibrations which affects other minds either postive or negative ways.

I have observed and believe that even the words which might not be expressed out (only internal dialogue) reach other minds and convey exactly whatever the internal thoughts (as internal dialogue) , hence affecting either positively or negatively.targeted person(s).

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

//I have observed and believe that even the words which might not be expressed out (only internal dialogue) reach other minds and convey exactly whatever the internal thoughts (as internal dialogue) , hence affecting either positively or negatively.targeted person(s).//

isn't it called as "telepathy"?

sabeer.abushahruk said...

புதுசுரபியிலிருந்து அமுத சுரபியென வந்துகொண்டிருக்கும் உற்சாகமூட்டும் பதிவுகளுக்கு நன்றியும் துஆவும்.

அஹ்மது அமீன் சொன்னதுபோல பதிவு "நச்"சென்று இருக்கிறது. படிப்பதற்கு நச்சென்று இருப்பவை இனிமையானவை, வாழ்க்கைக்கோ இச்.

அங்கே தொடர்ந்து வாசித்ததுபோல்
இங்கே தொடர்ந்து வசியுங்கள், புதுசுரபி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அங்கே தொடர்ந்து வாசித்ததுபோல்
இங்கே தொடர்ந்து வசியுங்கள், புதுசுரபி. //

பார்த்தியலா கவிக் காக்கா, மேலே இருந்த காலை எடுத்ததும் நம்மோடு இருக்கவே சொல்கிறது !

அதைத்தான் நானும் சொல்கிறேன். :)

KALAM SHAICK ABDUL KADER said...

சொல்லின் பலனைச் சொல்லிய விதமே
சொல்லின் செல்வர் என்று
சொல்லாமல் சொல்லிற்று

"நச்” என்று சொல்லியாச்சுப்பா!
ந்டையைக் கட்டிடலாம்பா
அச்சமில்லைஇனிமேலப்பா
அமைதி பெறட்டும் ஆளுமையும்பா.

sabeer.abushahruk said...

//"நச்” என்று சொல்லியாச்சுப்பா!
ந்டையைக் கட்டிடலாம்பா
அச்சமில்லைஇனிமேலப்பா
அமைதி பெறட்டும் ஆளுமையும்பா.//

கவியன்பன் ஸார்,

என்ன கிண்டலா? இதோ சபை. எல்லோரும் இருக்கிறோம், மறைப்பு எதற்கு மங்கையரைப்போல்?

சொல்லவந்ததைத் தெளிவாக தமிழிலோ ஆங்கிலத்திலோ மலையாளத்திலோ உருது மொழியிலோ அரபியிலோ ஹிந்தியிலோ சொல்லுங்கள், உங்கள் மொழியைத் தவிர மற்றவை விளங்கும் அமைதியின் ஆளுமைக்கு!

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

சொல்மந்திரம் என்ற தலைப்பில் இந்த வடிவத்தை கொடுத்து பலபேர்களை சொல்ல வைத்த புதுசுரபி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இன்று எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உண்மையாக இருக்கின்றார்கள்? எத்தனை பிள்ளைகள் பெற்றோர்களுக்கு உண்மையாக இருக்கின்றார்கள்?

அன்று ஒருத்தருக்கொருத்தர் உண்மையாக இருந்த படியினால் எல்லா வகையிலும் வெற்றி கண்டார்கள்.

பெற்றோர் பிள்ளை, கணவன் மனைவி, குடும்ப வட்டாரம், நட்பு வட்டாரம், தொழில் வட்டாரம், பங்காளிகள் வட்டாரம், கல்வி வட்டாரம், விளையாட்டு வட்டாரம், இன்னும் பல வட்டாரங்களில் ஒருத்தொருக்கொருத்தர் உண்மைநிலை குறைவினால் தோல்வியிலேயே இருக்கின்றனர்.

எங்களை சிந்திக்க வைத்ததற்கு பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

இந்தக்குரளுக்கு நேர் எதிரிடையாக வாழ்ந்து காட்டியவர்கள் ரசூல் (ஸல்)
சொல்லிலும் செயலிலும் நேராக வாழ்ந்து காட்டிச்சென்றவர்கள்


"ஓர் அழகிய முன்மாதிரி " என்ற எடுத்துக்காட்டாக வாழ்ந்து `சென்றவர்கள்,

ஒரு சொல்லை சொல்லுமுன் அந்த சொல் நமக்கு அடிமை.
சொல்லிவிட்டால் அந்த சொல்லுக்கு நாம் அடிமை.

THINK BEFORE INK என்பார்கள். ஆதலால், வாயோ, அல்லது `எழுதுகோலோ
வார்த்தை புறப்படுமுன் யோசி,
புறப்பட்டு விட்டால், அதை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும், `இல்லை.

பேசுமுன் யோசிப்போம்.
அதுவும் நல்லதையே யோசிப்போம்.

`நல்லதையே பேசுவோம்
`அதையே அறுவடை செய்யோம்.

`அபு ஆசிப்.

அதிரை.மெய்சா said...

ஒற்றைச்சொல்லை உதாரணமாய்ச்சொன்னாலும் உறைக்கும்படி சொல்லியிருந்தீர்கள் அருமை.

கல்லால் அடித்து காயப்படுத்துவதை விட சொல்லால் அடித்து சோர வைப்பது மேல்.

Ebrahim Ansari said...

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

சகோதரர் புதுசுரபி! சொன்னாலும் சொன்னீர்கள். நன்றாகவே சொன்னீர்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. புதுசுரபியின் ஊக்கம் தரும் அழகிய ஆக்கம் இது.

முகப்புத்தகத்தில் படித்ததில் பிடித்தது இதோ:

"இதயம் என்ன தான் சொல்லால் காயப்பட்டாலும்
அது தனக்கு பிடித்தவரை ஒருபோதும் மறக்காது.
காரணம் அதற்கு நடிக்கத்தெரியாது; துடிக்க மட்டுமே
தெரியும்".

Anonymous said...

//அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
அமைதி பெறட்டும் ஆளுமையும்பா. //

கவியன்பன் கலாம் அவர்களே !

என்ன சொல்ல வருகிறீர்கள் ?

அப்துல்மாலிக் said...

சொல் மிக்க மந்திரம் இல்லைனு சொல்லுவாங்க...

அந்த சொல்லை பற்றி சொன்ன விதம் அருமை

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahruk,

//isn't it called as "telepathy"?//

Technically can be called as telepathy. I have read recently about these ideas with proof that all minds are connected in the universal level. So conveying and projecting thoughts regardless of distance is possible phenomenon.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

புதுசுரபி said...

இன்’சொல்’லால் கருத்து ‘சொல்’லிய அனைத்து ‘சொல்’வந்தர்களுக்கும்
’சொல்’லிக்கொள்கிறேன் நன்றி!

Yasir said...

சொல் - உள் மனசுவரை பாயும் என்பதற்க்கு தங்களின் சொல்லாக்கம் நற்ச்சான்று..வாழ்த்துக்கள் சகோ.தொடர்ந்து எழுதுங்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

//சொல்லின் பலனைச் சொல்லிய விதமே
சொல்லின் செல்வர் என்று
சொல்லாமல் சொல்லிற்று//

நச் என்று இருந்தால் தான் நாலுபேர்க்கு விருப்பம் உண்டாகும் என்பதை உணர்ந்த என்றன் மனமே!இப்பொழுது அவ்வண்ணமே நாலுவரியில் “நச்”என்று எழுதியதால் நடையைக் கட்டு; இனி மேல் என்றன் மனமே உன்னுள் அமைதி என்னும் ஆளுமை உண்டாகும்; என்பதே அடியேன் சொல்ல வந்த் கருத்து. ஏனெனில், இவ்வாக்கம் ஏற்கனவே முகநூலில் புதுசுரபி அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்கள்; அங்கு இட்ட இந்த நாலுவரிக்கு அவர்களும் “விருப்பம்” தெரிவித்து விட்டதால் அவ்வரிகளையே மீண்டும் (அவர்களின் பதிவு மீள்பதிவாக் இங்கு இருந்த போதிலும்) என் அதே கருத்துரையை நகலெடுத்துப் பதிந்து விட்டதில் என் மனத்தினில் அமைதியின் ஆளுமை உண்டானது என்பதே கீழே எழுதிய அந்த நாலுவரிகட்கும் பொருள்.

கிண்டலாகி விட்டது என்று எண்ணும் பொழுது இதற்குத் தான் ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்றனரோ என்பதையும் உணர்கிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு