Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 3 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2013 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், இதற்கு முந்தைய பதிவில் சகோதரர் இப்னு அப்துல் வாஹித் அவர்கள் பதிந்த கருத்தை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

“இது மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் என்றாலும் அது மிகையே”.

நிச்சயமாக அன்றைய நிகழ்வுகளோடு இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகளையும் ஒப்பீடு செய்வது இயலாத ஒன்று என்றாலும், நாம் அனைவரும் படிப்பினை பெருவதற்கு மட்டுமே இத்தொடரில் முடிந்தவரை நன்கு அறியப்பட்ட சம்பவங்களை ஹதீஸ்களிலிருந்து தொகுத்தளிக்க முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
இரண்டு வரலாற்று சம்பவங்களை ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து படிக்கும்போதும், மார்க்க சொற்பொழிவுகளில் கேட்கும் போதும் நிச்சயம் நம்முடைய உள்ளமும் உருகும். இதோ அந்த சம்பவங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ‘நம்மை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்’ என்று கூறினார்கள். அவ்வாரே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாம் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும் ‘ஏன் அழுகின்றீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாயிற்றே’ என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ‘ அல்லாஹ்விடம் இருப்பதே அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹி) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகின்றேன்)’ என்று கூறி அவர்கள் இருவரையும் அழச் செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்., நூல் : (முஸ்லிம் – 4839)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மறைந்தவுடன் அவர்கள் மூலம் இறங்கி வந்த வேத வசனங்களும் முடிவுக்கு வந்துவிட்டனவே என்று வருந்தியிருக்கிறார்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்கள். குர்ஆனின் வசனங்கள் அவர்களுக்கு இறைவனுடனான உரையாடலாகவே இருந்திருக்கிறது. இதைக் கேட்டதும் அபூபக்ரும்(ரலி) உமரும்(ரலி) விம்மி அழ ஆரம்பித்து விட்டார்கள். குர்ஆனுடன் அந்த அளவிற்குப் பின்னிப் பிணைந்து இருந்த இதயங்கள் அவை.

உலக மக்களுக்கு முன்மாதிரி என்று அல்லாஹ் தன் இறைமறையில் கூறிய நம் உயிriனும் மேலான நபி (ஸல்) அவர்களை வளர்த்த தாய் உம்மு அய்மன்(ரலி) அவர்கள், வஹி இறங்குவது நின்று விட்டதே என்று அழுதுள்ளார்கள். அந்த மக்களுக்கும் இறைவசனத்திற்கும் இருந்த உயிரோட்டமான தொடர்பையும், ஆர்வத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். என்றைக்காவது ஏதாவது ஒரு இறைவசனத்தை நினைத்து ஒரு துளி கண்ணிர் வடித்து அழுதிருக்கிறோமா? வாரம் ஒரு முறை அல்லது என்றாவது ஒரு முறை வீட்டில் யாசீன் சூராவை மாத்திரம் ஓதி, குர்ஆனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனக் கருதும் பெண்களுக்கு அகிலத்தின் அருட்கொடையான அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாய் உம்மு அய்மன் (ரலி) அவர்களின் இந்த அழுகையில் மிகப் பெரும் படிப்பினையிருக்கின்றது.

வஹி நின்று விட்டதே என்று அழுத நபி தோழர் ஒருவர் உள்ளார், அவர் தான் அமீருல் முஃமினீன் அன்போடு முதன் முதலில் மக்களால் அழைக்கப்பட்டவர், அல்லாஹ் இவரின் நாவிலிருந்து பேசுகிறான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களால் பாராட்டி சீராட்டி சொல்லப்பட்ட தோழர் உமர் (ரலி) அவர்கள். இதோ அந்த வரலாற்று சம்பவம்.

அரஃபா தினத்தில் நபி (ஸல்) அவர்கள் சத்திய சஹாப்பாக்களுக்கு மத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க இறுதி பேருரை நிகழ்த்தினார்கள். அவர்களின் உரையில் பின் வரும் இறைவசனத்தைச் சுட்டிக்காtடினார்கள்.

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்" (குர் ஆன் 5:3)

இந்த வசனத்தைக் கேட்ட அனைத்து சஹாப்பாக்களும் கட்டி அனைத்து சந்தோசத்தில் ஒருவருக்கு ஒருவர் தங்களின் சந்தோசங்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் உமர் (ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்கள். உடன் இருந்த சில சஹாபாக்கள் உமர் (ரலி) அவர்களிடம் இஸ்லாத்தை அல்லாஹ் பரிபூரணமாக்கிவிட்டான் என்ற சந்தோசமான இந்த தருணத்தில் ஏன் உமரே அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு. அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா? இன்று முதல் இஸ்லாத்தை பரிபூரணமாக்கி விட்டேன் என்று சொல்லுகிறான், இஸ்லாம் பரிபூரணமாகி விட்டதால் இனி வஹி வருமா? அதை நினைத்து அழுகிறேன் என்று சொல்லியவாறே உத்தம நபியின் உன்னத தோழர்  உமர் (ரலி) அழுதார்கள் என்று ஹதீஸ் தொகுப்புகளில் காண முடிகிறது.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் அமீருல் முஃமீனான அவர்கள் முன்னால் கேள்வி கேட்கக் கூட மக்கள் பயப்படுவார்கள், அந்த அளவுக்கு கடினமானவர்கள் உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் அந்த வசனத்தைச் செவியுற்று அழுதிருக்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்து நம்மால் அறியமுடிகிறது., திருக்குர்ஆன் வசனங்கள் எவ்வளவு கடின உள்ளமுடையவர்களையும் உருகச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அல்லாஹ்வுடனான தங்களுடைய தொடர்பை இவ்விரு சம்பவங்களின் மூலம் அந்த தோழர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதை நாம் அறியலாம்.

பிற்காலத்தில் நபி  (ஸல்)  அவர்களின் வளர்ப்புத் தாய், தாயிக்கு பின் தாய் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் உமர் (ரலி) கொல்லப்பட்ட செய்தி அறிந்து அழுதிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்க, “இன்று இஸ்லாம் பலவீனம் அடைந்துவிட்டது,” என்றார்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் என்பதையும் ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது.

அல்லாஹ்வின் வஹியான திருக்குர்ஆனை நாள் கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் ஓதாமல் ஏன் திருக்குர்ஆனை ஓதத்தெரியாமலே இருக்கிறோமே என்று எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

திருக்குர்ஆன் ஓதத் தெரியவில்லை என்றால் நம்முடைய தொழுகையை நிறைவான தொழுகையாகுமா?

சத்திய சஹாப்பாக்களின் கண்ணீர் வஹீ வருவது நின்று விட்டதே என்ற கவலையில் இருந்தது, ஆனால் இன்று நம்முடைய கண்ணீர்? படிப்பினை பெருவோம், சிந்திப்போம்..

இன்றைய உறுதி மொழி:

நாம் குர்ஆனின் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
M தாஜுதீன்

11 Responses So Far:

Unknown said...

கண்ணீர் தருனச்சம்பவங்களை கணிசமாகத்தருவீர்கள் என்று எதிர் பார்த்தால் இப்படி பொசுக்கென்று சுருக்குமாகத்தந்திருக்கின்றீர்கள் எனும்போது, அடுத்த வாரமாகிலும் கொஞ்சம் கூடுதலான சம்பவங்களோடு இந்த தொடரை எதிர் பார்க்கின்றேன் என் எதிர் பார்ப்பை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்.

கண்ணீர்;(இம்மைக்காக)

இது இஸ்லாத்தில் ஒரு உண்மையான மு'மின் அல்லாஹ் பொருந்திக்கொண்ட விஷயங்களுக்கும், நமக்கு அனுமதி அளிக்கப்பட விஷயங்களுக்கும் மட்டுமே கண்ணீர் வடிக்கவேனும் . ஆனால் நம்மையும் மீறி சில அசம்பாவிதங்கள் மற்றும் துயரச்செய்திகள் கேள்வியுறும்போது நம்மையும் மீறி அழுகை என்பது வரத்தான் செய்யும். நம்மோடு வாழ்நாள் முழுதும் இருந்தவர்கள் நம்மை விட்டுப்பிரியும்போது பாசம் மேலோங்கி அழுகை வரத்தான் செய்யும். ஆனால் அது கட்டுக்குள் இருக்கவேணும். அது ஒப்பாரியாகவோ சுற்றி உள்ளவர்கள் கேட்குபடியாகவோ இருக்கக்கூடாது.

கண்ணீர் (மறுமைக்காக)

மறுமையை நினைத்தாலே எந்த ஒரு உண்மையான மு'மினுக்கும் கண்ணீர் வந்தே ஆகணும். ஒவ்வரு ஆன்மாவும் உயிர் கொடுக்கப்பட்டதிளிருந்து 5 வகையான வாழ்வை சந்தித்தே ஆகிறது. ஒன்று : தாயின் கருவறை, இரண்டு: இவ்வுலக வாழ்வு, மூன்று: மண்ணறை வாழ்க்கை, நான்கு : நன்மை தீமை என்னும் நீதித்தீர்ப்பு வழங்கப்படும் கியாமத்து என்னும் அதி பயங்கர சூழல் நிறைந்த தருணம், ஐந்தாவது : நீதித்தீர்ப்புக்குப்பின் , சுவனமோ (இதையே நமக்கு அல்லாஹ் தந்தருள்வானாக!) அல்லது நரகமோ, என்ற வாழ்க்கை.

இதை உண்மையான ஈமான் கொண்டால், ஒவ்வரு இறை நம்பிக்கையாளனின் கண்களும் 24 மணி நேரமும் கண்ணீர் சொரிந்தவையாகத்தான் இருக்கும்.
ஏனனில் அல்லாஹ் பாசம் காட்டுவதில் எப்படி எழுபது தாய்க்கு சமமாணவனோ , அதுபோல் தண்டனை தருவதிலும் மிகக்கடுமையானவன் என்று நினைக்கும்பொழுது, ஒரு உண்மையான இறை நம்பிக்கையாளனுக்கு கண்ணீர் வராமல் இருக்க முடியுமா?

நாளை மஹ்ஷரில் தீர்ப்புக்கு முன் ,மனிதர்கள் எல்லாம் நம் நிலை என்ன என்று அறியாதவர்களாய் ,அங்குமிங்கும் அலைக்கழிந்து கொண்டு இருக்கும் நிலையில் அதன் தன்மையைப்பற்றி , ஆயிஷா (ரலி ) அவர்களிடம் ரசூல் (ஸல்) குரானின் ஆயத்தை சுட்டிக்காட்டி விளக்கினார்கள் ; குரானில் அல்லாஹ் கூறுகிறான் :

"அந்த நாளில், ஒவ்வரு தாயும் தன குழந்தைக்கு பால் ஊட்டுவதை மறந்துவிடுவாள். ஒவ்வரு கெர்ப்பினிப்பென்னும் தன் கர்ப்பத்தை சிதைத்து விடுவாள். அனைவரும் போதை வயப்பட்டவர்களாக இருப்பார்கள். அது குடித்ததனால் ஏற்ப்பட்ட போதை அல்ல . அல்லாஹ்வின் தண்டனை எப்படி இருக்குமோ, நமது நிலை சொர்க்கமா அல்லது, நரகமா ? நம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா? என்ற அச்சத்தினால் ஏற்ப்பட்ட போதையில் அப்படி கண்கள் ஏரச்சொருக இருப்பார்கள். " என்று ஆயிஷா நாயகிக்கு விளக்கிக்கூரினார்கள்.

இந்த நூற்றுக்கு நூறு நடக்கப்போகும் சம்பவங்களை நினைத்தால் ஒரு உண்மையான மு'மினுக்கு அழுகை வராமல் இருக்க முடியுமா ?

அதலால், குரானிலும் சரி, ரசூல் (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களும் சரி, மறுமையை நினைத்து அழ , எய்த்தனையோ விஷயங்கள் காணக்கிடைக்கின்றன, இன்ஷா அல்லாஹ் இவைகள் அனைத்தும் இத்தொடர்மூலம், காண வாய்க்கப்பெற்று, அல்லாஹ்வுக்காகவே கண்ணீர் விடும் அவன் தூய இஸ்லாத்திர்க்காகவே கண்ணீர் விடும், நல்லோர்கள் கூட்டத்தில் நம்மை அல்லாஹ் சேர்த்து

ஈருலகப்பயனை அடைந்த , முத்தக்கீன்கள், ஷுகதாக்கள்,சாலிஹீன்கள், மற்றும் சஹாபாக்கள் வரிசையில் நம்மையும் அல்லாஹ் சேர்த்து அருள்வானாக ஆமீன் !

யாரப்பல் ஆலமீன் !

அபு ஆசிப்.




கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்.
அருமையான தொடர்.
தொடர் தொடர பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். உள்ளத்தை உருகவைக்கும் தொடர். மாஷா அல்லாஹ்.

மொழியின் அறிவு இல்லாமல் - என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று தெரியாமல் காதால் மட்டும் கேட்டு மனப்பாடம் செய்து பாடம் கொடுக்கும் பழக்கமே நம்மில் நிறைந்து இருக்கிறது.

அர்த்தத்துடன் பதவுரையுடன் அருஞ்சொல் விளக்கத்துடன் மொழி படிக்கும் நம்மால், நம்மை வழி நடத்தும் மொழியை அவ்விதம் படிக்க இயலவில்லை/ஆர்வமில்லை/ வசதி இல்லை/ என்பவை பெரும் குறை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கண்ணீர் தருனச்சம்பவங்களை கணிசமாகத்தருவீர்கள் என்று எதிர் பார்த்தால் இப்படி பொசுக்கென்று சுருக்குமாகத்தந்திருக்கின்றீர்கள் எனும்போது, அடுத்த வாரமாகிலும் கொஞ்சம் கூடுதலான சம்பவங்களோடு இந்த தொடரை எதிர் பார்க்கின்றேன் என் எதிர் பார்ப்பை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ். //

அப்துல் காதிர் காக்கா:

பதிவின் நோக்கம் வாசிக்க கொஞ்ச நேரம் சிந்நிக்க நீண்ட நேரம் என்ற அடிப்படையில்தான் இவ்வாறு.

நம்முடைய சிந்தனையின் வெளிப்பாடு கருத்தாடல்களில் வெளிப்படுவது இயற்கை, அதைத்தான் நாமும் செய்து வருகிறோம்...

//அர்த்தத்துடன் பதவுரையுடன் அருஞ்சொல் விளக்கத்துடன் மொழி படிக்கும் நம்மால், நம்மை வழி நடத்தும் மொழியை அவ்விதம் படிக்க இயலவில்லை/ஆர்வமில்லை/ வசதி இல்லை/ என்பவை பெரும் குறை.//

இ.அ. காக்கா:

நீங்கள் சொல்வது மிகச் சரியே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவர்கள் பற்றிய உருக்கமான நற்தொகுப்பு!
நாம் குர்ஆனின் பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கண்ணீர் சிந்த வைத்த நல்ல சம்பவங்கள்.

புனித மக்காவிலோ அல்லது மதீனமாநகரிலோ தொழும் சமயம் ஏதேனும் ஒரு வக்தில் இமாம் திடீரென சூரா ஓதுவதை நிறுத்தி விட்டு விம்மி, விம்மி அழும் பொழுது அவர்கள் (இம்மை, மறுமை வேதனைகள், கபுருடைய அதாப்கள், நரக நெருப்பின் உஷ்ணம் என) அர்த்தம் விளங்கி அழுகின்றனர். நாமோ பெரும்பாலும் அவர்களுடன் சேர்ந்து தொழுகையில் அர்த்தம் விளங்காமல் அவர்கள் போல் அழுது விடுகிறோம்.

உண்மையில் திருக்குர்'ஆன், ஹதீஸ் விளங்கிய மார்க்க உலமாக்கள், அறிஞர்கள் பெரும் பேறு பெற்றவர்களே இம்மையிலும், மறுமையிலும். யா அல்லாஹ்! பரிபூரண மார்க்க ஞானமும், அறிவும் இல்லாமல் எங்களை இம்மண்ணை விட்டு மடியச்செய்து விடாதே நாயனே!!!

அலாவுதீன்.S. said...

/// நாம் குர்ஆனின் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக. ///
****************************************************************************

இன்ஷா அல்லாஹ்!.

Adirai pasanga😎 said...

அவர்களின் கண்ணீர் -
அது அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை, அச்சத்தின் காரணமாக அவர்கள் சிந்தியது - அல்லாஹ்வே அறிவான் அதனைப்பற்றி
அல்லாஹ்வை அவர்கள் தனது இரட்சகனாக முழுமையாக ஏற்று அவனது தன்மைகளை முற்றிலும் நம்பி அவனது திருவசனத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அவனது தூதரின் வழிகாட்டுதல்கள் மூலமே அவனது மார்க்கம் பேணப்பட வேண்டும் என முழுமையாக விளங்கியிருந்தார்கள். இதன் காரணமாகவே அவர்களின் செயல்கள் உளத்தூய்மையோடு இருந்தது. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சதின் காரணமாக அவர்களின் அக புற வாழ்வு இறைவனின் பொருத்ததோடு இருந்தாலும் அவர்கள் தங்களின் மரண வேளை வரை அழுதுகொண்டுதான் இருந்தார்கள்,

நமது கண்ணீரையும் அல்லாஹ் அறிவான். நாம் அவர்களின் வாழ்வுதனை படிப்பினையாக்கி நம்மை சீர்செய்து கொள்ளவில்லையெனில்...அல்லாஹ்தான் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

///இன்றைய உறுதி மொழி:

நாம் குர்ஆனின் ஒரு பக்கமாவது பொருளுணர்ந்து படித்து, அவைகளை விளங்கி அல்லாஹ்வின் சக்தி, ஆற்றல், எச்சரிக்கை, கருணை இவைகளை எண்ணி ஒவ்வொரு நாளும் அவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழும் நன்மக்களாக நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும் இன்ஷா அல்லாஹ். இதற்கு அல்லாஹ் நம் எல்லோருக்கும் உதவி புரிவானாக.///

sabeer.abushahruk said...

கேள்விகள் துளைக்கின்றன என்பதும் நினைவூட்டல்கள் அச்சமேற்படுத்துகின்றன என்பதுவும் உண்மை.

அழுது கேட்ட பொழுதுகள் குறைவெனினும் உள்ளூற கதறிக்கதறிக் கேட்டதுண்டு.

தாஜுதீன்,

அச்சமூட்டி எச்சரிக்கின்றீர்.

நன்றி.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இவ்வளவு கணமான ஆக்கம் எழுத வந்ததே பெரும் விசயம். நல்ல ஞானம் உள்ள சகோ.தாஜிதீனை நினைத்து பெருமை அடைகிறேன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே! கண்ணீரை காரணம் கொண்டு வரவழைக்கும் ஆக்கம்.அதுவும் விடும் கண்ணீரிலேயே மனதில் இருக்கும் சில அழுக்குகள் நீங்க செய்ய இத்தொடர் அருமையான நீரோட்டமாய் இருந்து , கொஞ்சம், கொஞ்சமாய் மன அழுக்கு நீக்கும் கருவியாக இருப்பதே இதன் சிறப்பு! இது சகோ.எழுத்தில் மகுடம்.கருத்து நிறைந்த "மா"குடம்.அல்ஹம்துலில்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆலோசனைகள் மற்றும் ஊக்கமளித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி..

ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு